Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன்

 In இலங்கை      November 18, 2019 3:29 am GMT      0 Comments      1016      by : Dhackshala

sumanthiran-gota.jpg

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது. இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அரசில்-இணைவது-குறித்து-க/

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பு அந்த மக்கள்.. இனி பெட்டி வராது....இப்பிடி உழைப்பம்..

 

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், கருணா  போன்றவர்களுக்கு அமைச்சு பதவி கிடைத்த பின்...
மிச்சம்  இருந்தால் தான்... சம்பந்தன், சுமந்திரன், மாவை எல்லோருக்கும் அமைச்சர்  பதவி கிடைக்கும். :grin:

கேட்பதற்கு கஷ்ரமான முடிவு என்றாலும் தமிழர் தரப்பை பொறுத்தவரை இதை தவிர வேறு வழி இல்லை என்பதே எனது எண்ணம். கூட்டமைப்பு தனது  கடந்த கால தவறுகளை சீராய்வு செய்து ஒரு தீர்ககமான முடிவை எடுக்காமல் விட்டால் இலங்கைத்தீவில் இரண்டாவது இனம் என்ற நிலையில் இருந்து முன்னேற்றமடையாத மூன்றாவது  பழங்குடி இனம் என்ற நிலையை அடையும் பேராபத்து உள்ளது. கூட்டமைப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியல்வாதிகளும்  தமக்குள் இதுவரை வைத்திருந்த  ஈகோவை மறந்து சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. எனவே தீர்வு வரும்வரை காத்திருக்காமல் தனது கல்வி, வர்த்தக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு அடைந்து  இலங்கைத்தீவில் மற்றய இனங்களின் முன்னால் கெளரவமான சமூக அந்தஸ்தை  தக்கவைத்துக்கொள்வதை உடனடி  அவசர priority action ஆக தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைச்சிட்டார் சுமந்திரன் ஐயா! வென்றால் தானே அமைச்சு பதவி கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடியல்.. வடக்கின் வசந்தம்.. எல்லாம்.. அமைச்சர்களாகி.. வடக்குக் கிழக்கை சிங்கப்பூர் ஆக்கிட்டார்கள்.. எனி இவர்... ஆகி.. அமெரிக்கா அளவிற்கு உயர்த்துவார். 

நம்புங்கள் மக்களே.. நம்புங்கள்.

என்னடா அவங்கள் அமைச்சர்களாகி பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிட்டாங்கள்.. நாங்கள் எதிர்கட்சியில் இருந்து சில கோடிகளை தானே கண்டம்.. என்ற ஆதங்கமே தவிர..

இனம்.. மண்..மொழி.. உரிமை மீது இந்த நாதாரிகளுக்கு ஒரு கருசணையும் கிடையாது. 

இதனால்.. தான் இதுகளை அப்பவே அரசியல் வெளிக்கு வெளியில் வைத்தவர் தேசிய தலைவர். 

சஜித்திற்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவு, 'பிளான் எ'. 


நிச்சயமாக அது நடக்கவிட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கும் ஒரு விடை இருந்திருக்கும். ஆனால், அதை வெளியேயே செல்லி இருக்க மாட்டார்கள்,  'பிளான் பி' "எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் இருந்த 'பிளான்' காற்றில் போய்விடுமா ?  "தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது." 

8 hours ago, alvayan said:

யாரப்பு அந்த மக்கள்.. இனி பெட்டி வராது....இப்பிடி உழைப்பம்..

அண்மையில் மனோ கணேசன் இது பற்றி கூறியிருந்தார். அவர் கூறும் போது சஜித் ஜனாதிபதியாக வருவார் என்ற நிலைப்பாட்டினூடு அதை கூறியிருந்தார்.

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெளியில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, அரசில் அனைத்து வரப்பிரசாங்கள், நன்மைகள், அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கல் அனைத்தையும் பெற தமிழர்களிற்கும் உரித்துள்ளது என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

https://www.pagetamil.com/85984/

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எனது அண்ணரும் தனது பேட்டியில் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெற்று அரசில் இணைந்து செயற்பட வேண்டும் என சொல்லி இருந்தார் 

19 hours ago, tulpen said:

கேட்பதற்கு கஷ்ரமான முடிவு என்றாலும் தமிழர் தரப்பை பொறுத்தவரை இதை தவிர வேறு வழி இல்லை என்பதே எனது எண்ணம். கூட்டமைப்பு தனது  கடந்த கால தவறுகளை சீராய்வு செய்து ஒரு தீர்ககமான முடிவை எடுக்காமல் விட்டால் இலங்கைத்தீவில் இரண்டாவது இனம் என்ற நிலையில் இருந்து முன்னேற்றமடையாத மூன்றாவது  பழங்குடி இனம் என்ற நிலையை அடையும் பேராபத்து உள்ளது. கூட்டமைப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியல்வாதிகளும்  தமக்குள் இதுவரை வைத்திருந்த  ஈகோவை மறந்து சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. எனவே தீர்வு வரும்வரை காத்திருக்காமல் தனது கல்வி, வர்த்தக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு அடைந்து  இலங்கைத்தீவில் மற்றய இனங்களின் முன்னால் கெளரவமான சமூக அந்தஸ்தை  தக்கவைத்துக்கொள்வதை உடனடி  அவசர priority action ஆக தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். 

இந்தப் பதிவு பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன்

இலங்கைத் தேர்தல் முடிவுகளினால் எழுந்த சிந்தனை இது.

அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோட்டபய, சஜீத் இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோட்டபய என்பதுதான் அவர்களது முடிவு

இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் வெற்றியை பாதிக்காது.
.
இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்?

அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation)

உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன.

இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது

இந்தியாவிலும் கூட தமிழர்களது அரசியல் கட்சிகள் நாடு முழுமையும் பரவிக் கிடக்கும் தேசியக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு உட்பட பலவித அனுசரித்தல் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்திருக்கின்றன. தேர்தல் களத்தில், முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி என்ற அணுகுமுறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், அதற்கு முன் பிரிவினை கோரிய அண்ணா அவர்கள் என்பது வரலாறு. அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் பின்பற்றினர். ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் அமைச்ச்ரவைப் பதவிகள், ஆகியவற்றைக் கட்சிக்ள் பெற்றன என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தொய்வுறாமல் பார்த்துக் கொண்டன

இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியும், இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளும், கிழக்கிலங்கையில் சில தலைவர்களும் இந்த அனுசரித்தல் போக்கை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும்
இன்று தீர்மானிக்க வேண்டியது அவர்களின் தேவை வளர்ச்சியா? உரிமையா? என்பது

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்

 

malan naarayanan 

47 minutes ago, அபராஜிதன் said:

இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது

ஒப்பிடுவதற்கு அடிப்படைத் தகுதிகள் இல்லாதவற்றுடன் ஒப்பிடுவது ஆபத்தானது!

இலங்கையிலுள்ள இனமதவெறிப் பேரினவாதமும் திட்டமிட்ட இனச்சுத்தீகரிப்பும் சிங்கப்பூரில் எக்காலத்திலும் இருக்கவில்லை. மேலும் திறமையுள்ள தமிழர்கள் அங்கு முக்கிய, உயர்பதவிகளை வகித்தனர். எந்தப் பாகுபாடும் பார்க்கப்படவில்லை. அங்கு அரச நிர்வாகத்திடம் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு நேர்மை, நியாயம் இருந்தது. அதனால் தமிழர் அங்கு அனுசரித்துப் போகவேண்டிய நிலை ஏற்படவில்லை. அங்கு தமிழர் ஒரு பங்குதாரர்களாலவே இன்றுவரை இருந்து வருகின்றனர்.

எனவே இதுபோன்ற ஒப்பீடுகள் கடைந்தெடுத்த முட்டாள்களால் மட்டுமே செய்யப்பட முடியும். இது ஈழத்து தமிழினத்துக்கு நன்மை பயக்கப்போவதில்லை. ஈழத்து தமிழினத்தை படுகுழியில் தள்ளக்கூடியது.  

மலேசியாவில் நிலைமை வேறு. இந்தியாவில் பிஜேபி அரசின் கீழ் நிலைமை வேறு. அங்கு தமிழர் இரண்டு அணுகுமுறைகளையும் (அனுசரித்தல், மோதல்) அவ்வப்போது கையாண்டு வருகின்றனர்.

மேலும் அனுசரித்தல் என்பது அரச நிர்வாகத்திடமும், பேரினவாதிகளிடம் இல்லாதவரை சிறுபான்மையரின் அனுசரித்தல் என்பது அடிமைத்தனத்திலும், அழிவிலும் தான் முடியும்.

இலங்கையில் நிலைமை முற்றிலும் வேறு. இனமதவெறிப் பேரினவாதமும் திட்டமிட்ட இனச்சுத்தீகரிப்பும் நடக்கும் சூழலில், தமிழ் மக்கள் அதற்கேற்ப தமக்கென ஒரு உறுதியான, தனித்துவமான  பாதையை வகுக்கவேண்டும். நாம் இதை புத்தகங்களில் தேடியும், ஏனைய இடங்களைப் பார்த்து பிரதிபண்ணியும், விக்கிப்பீடியாவை படித்தும் வகுக்க முடியாது. அவை வழிகாட்டிகளாக இருந்தாலும் சொந்த 100 வருட அனுபவத்தின் அடிப்படையிலேயே ஒரு உறுதியான, தனித்துவமான  பாதையை வகுக்கவேண்டும்.  

ஈழத் தமிழரில் உள்ள மாபெரும் குறைபாடு, அனைவரும் ஒரே கொள்கையை நோக்கிய பயணத்தை ஏற்றுக்கொண்டாலும், அதை நோக்கிய பயணத்தை ஒன்றுபட்டு, ஒற்றுமையாக, தம்முள் ஏற்படும் முரண்பாடுகளை அனுசரித்து மேற்கொள்வதில்லை. இந்த குறைபாட்டை களைந்தால் நிலைமை நிச்சயம் மாறும்.

வெறியுடன் வேட்டையாட வரும் ஓநாயுடன் அனுசரித்துப் போவது நிச்சயம் அழிவில்தான் முடியும். ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடினால் வெல்லும் சூழல் கிடைக்கலாம்.

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.