Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை!! அதிர்ச்சியில் புலம்பெயர் சமூகம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.

இதேவேளை, இந்த படுகொலை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

இலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை இந்தப் படுகொலை பற்றிய செய்தி தோற்றுவித்திருக்கின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

you may like this

https://www.ibctamil.com/canada/80/132052

Narahenpita இலும் ஒருவரது உடலை கண்டெடுத்துள்ளார்கள். தமிழரா சிங்களவரா தெரியவில்லை.

Body discovered from Park Street, Narahenpita

A body of a youth has been discovered from Park street, Narahenpita. News 1st Correspondent noted that the body was discovered following a tip-off received by the residents in the area.

The victim is believed to be a resident of an apartment in the same area. The Narahenpita police is conducting further investigations.

https://www.newsfirst.lk/2019/11/28/body-discovered-from-park-street-narahenpita/

இது பற்றி சிங்களத்தில் சற்று விரிவாக கூறப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டுள்ளார்.

භීෂණය ආරම්භ වෙයි.. මාධ්‍යට සම්බන්ධ තරුණයෙක් ඝාතනය කරයි..?

කොළඹ නාරාහේන්පිට  පාර්ක් රෝඩ් හී දී 32 හැවිරිදි තරුණයකු ඝාතනය කර ඇති බව වාර්තා වේ.මෙම තරුණයා මාධ්‍ය අංශ හෝ දැන්වීම් ප්‍රචාරක අයතනකට සම්බන්ධ කටයුතු කල තැනැත්තකු බවට දැනට තොරතුරු වාර්තා වේ.

මේ පිළිබඳව තොරතුරු ලබා ගැනීම සදහා පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක වරයා ඇමතුවත් ඔහුව සම්බන්ධ කර ගැනීමට නොහැකි වී තිබේ. වැඩි දුරටත් සදහන් වන්නේ පොලිස් මාධ්‍ය අංශය වසා දැමිමට නව ජනාධිපති ගොඨභය රාජපක්ෂ කටයුතු කර ඇති බවයි.

කෙසේ හෝ අප මාධ්‍ය නියෝජිතයකු මෙම සිදු වීම සිදුවූ ස්ථානයට ගොස් එම පොලිස් නිලධාරීන්ගෙන් විමසීකම් කල සිටියත් ඒ පිළිබඳව කිසිදු තොරතුරක් ලබා දීමට ඔවුන් ඉදිරිපත් වී නැත.

මිය ගිය 32 හැවිරිදි තරුණයාගේ මවගෙන් මේ පිළිබඳව විමසීමක් කලද ඇය මේ පිළිබඳව කිසිවක් ප්‍රකාශ කිරිමට බියෙන් පසුවන බවත්. මෙම තරුණයා ඝාතනය කල සාහසීකයන් විසින් මව බිය වද්දවා ඇති හෙයින් ඇය කිසිවක් ප්‍රකාශ කිරිමෙන් වැලකී සිටින බව අප වෙත වාර්තා වේ.

ඊයේ සවස ත්‍රීරෝද රථයක් නිවස ළඟ නතර කර ඇති බවත් ඊට මදක් එහාට වන්නට ඔහුව ඝාතනය කර දමා ගොස් ඇති බවත්, වද හිංසා කොට අද අළුයම ඔහුව ඝාතනය කොට දමා ගොස් ඇති බවටද සැක පල කරයි.

වෂීම් තාජුඩීන් ඝාතනය කල ස්ථානයට ආසන්නයේ මෙම ඝාතයනත් සිදු කර ඇති බව වැඩි දුරටත් සදහන් වේ.

http://badusure.lk/භීෂණය-ආරම්භ-වෙයි-මාධ්‍යට/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

கூகிளின் மொழிபெயர்ப்பில் இப்படி வருகிறது ....

பயங்கரவாதம் தொடங்குகிறது, ஊடகங்களுடன் இணைந்த ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான் கொழும்பின் நாரஹன்பிடாவின் பார்க் சாலையில் 32 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளரை தகவலுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. புதிய ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பொலிஸ் ஊடகப் பிரிவை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு ஊடக பிரதிநிதி சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரிடம் விசாரித்தார், ஆனால் அவர்கள் எந்த தகவலையும் கொண்டு வரவில்லை. 32 வயதான தாயார் தாயிடம் விசாரித்தாலும் அவர் எதுவும் சொல்ல அஞ்சுகிறார். அந்த இளைஞனைக் கொன்ற தாக்குதல்களால் தாய் மிரட்டப்பட்டதாகவும், அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததாகவும் அறியப்படுகிறது. நேற்று மாலை ஒரு முச்சக்கர வண்டி அவரது வீட்டில் நிறுத்தப்பட்டதாகவும், அவர் சற்று தொலைவில் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. வாஷிம் தாஜுதீன் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே இந்த கொலைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் ஊரில் யார் கொலை செய்தாலும்,கொள்ளை அடித்தாலும் அது கோத்தா தான் இல்லையா 🤔
 
3 hours ago, Lara said:

Narahenpita இலும் ஒருவரது உடலை கண்டெடுத்துள்ளார்கள். தமிழரா சிங்களவரா தெரியவில்லை.

சிங்களவர்.

வர்த்தக பிரசார நிறுவன முகாமையாளர் நாரஹேன்பிட்டியில் சடலமாக மீட்பு.

நாரஹேன்பிட்டி பார்க் வீதியிலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது.

அருகிலுள்ள மாடி வீடொன்றில் தங்கியிருந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் ஷாலிகா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள வீதியிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது.

இன்று காலை 6 மணியளவில் சடலமொன்று வடிகாணுக்குள் இருப்பதை அவதானித்த வியாபாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடி வீடு அமைந்துள்ளது.

சடலத்திற்கு அருகில் பணப்பை ஒன்றும், கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டதுடன் சடலத்தின் தலைக்கருகில் இரண்டு 100 ரூபா நோட்டுக்கள் வீழ்ந்திருந்தன.

சடலத்தின் தலைப்பகுதியில் காயமேற்பட்டிருந்ததுடன் இடுப்பு பகுதியிலும், கீறல் தடங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

புபுது பெரேரா எனும் இந்த இளைஞர் நேற்றிரவு கோட்டை பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு தமது நண்பருடன் வீடு திரும்பியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாடகை வாகனமொன்றில் தாம் தமது வீட்டிற்கு அருகில் இறங்கியதன் பின்னர் அதே வாகனத்தில் புபுது பெரேரா வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றதாக நண்பர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

சிறிய ரக கார் ஒன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்து சற்று நேரத்தில் திரும்பிச்செல்லும் காட்சி சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட புபுது பெரேரா என்ற இளைஞர் வர்த்தக பிரசார நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக செயற்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://www.newsfirst.lk/tamil/2019/11/28/வர்த்தக-பிரசார-நிறுவன-மு/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இனி மேல் ஊரில் யார் கொலை செய்தாலும்,கொள்ளை அடித்தாலும் அது கோத்தா தான் இல்லையா 🤔
 
இப்ப என்ன கோட்டாபய நல்லவர் என்று சொல்ல வருகிறீர்களா ? இல்லாவிட்டால் கோட்டாபய முன்னர்தான் கெட்டவர் இப்போ நல்லவர் என்றுசொல்ல வாரீங்களா   ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இனி மேல் ஊரில் யார் கொலை செய்தாலும்,கொள்ளை அடித்தாலும் அது கோத்தா தான் இல்லையா 🤔
 
1 hour ago, Maharajah said:

இப்ப என்ன கோட்டாபய நல்லவர் என்று சொல்ல வருகிறீர்களா ? இல்லாவிட்டால் கோட்டாபய முன்னர்தான் கெட்டவர் இப்போ நல்லவர் என்றுசொல்ல வாரீங்களா   ? 

மகாராஜா,

எனக்கு ரதியை, யாழ் களத்தில் எழுதும் கருணாவின் தங்கை என்று மட்டுமே தெரியும். ஆனால், அவவின், கருத்துக்களை பற்றி சிந்தித்து பார்க்கும்போது, ரதியின் நுண்ணறிவும், அவதானமும், இலங்கை அரசியல் பற்றிய எதிர்வுகூறும் ஆற்றலும், இக்களத்தில் எழுதும் மற்றவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத அளவு உயர்வான தரத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. எமது மக்களுக்கு ரதியின் கருத்துகள் புரிவது கடினமானதால் ரதியை எம்மக்கள் வேகமாக நிராகரித்து விடுவார்கள்.

இங்கு ரதி சொன்னதெல்லாம் “இனி மேல் ஊரில் யார் கொலை செய்தாலும்,கொள்ளை அடித்தாலும் அது கோத்தா தான்” என்று பலரும் இலகுவாக முடிவெடுத்து விடுவார்கள் என்பது மட்டுமே. நீங்கள் எழுதிய எவற்றையுமே ரதி நேரடியாவோ மறைமுகமாகவோ சொல்லவில்லை.

  1. கொலைகளை பாதாள உலக அமைப்புகளும் செய்யும் சாத்தியம் உள்ளதை நீங்கள் மறுக்கிறீர்களா?
  2. இந்தியாவின் றோ, புவிசார் அரசியல் தேவைக்காக கூலிப்படையை கொண்டு கொலை செய்யும் சாத்தியம் இல்லை என்கிறீர்களா?
  3. ஈஸ்ரர் குண்டுவெடிப்பை சீன அரசின் சர்வதேச சதி நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
  4. இறுதியாக, எனது நாட்டின் பிரபலமான சி.ஐ.ஏ. இலங்கையில் இல்லை என்கிறீர்களா? இன்றைய அமெரிக்க தூதுவர் சி.ஐ.ஏ. உயர் அதிகாரியாக இருந்தவர் என்பதை அறிவீர்களா?

ஆலால், தருமர், ராஜினி கொலைகளை புலிகளின் தலையில் போட்ட காலம்தான் நினைவுக்கு வருகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

Jude, 

நீங்கள் ஒன்றை அவதானிக்கவில்லை போல் படுகிறது.  இங்கே ரதி மட்டுமே கருத்திட்டு இருந்தார்.  வேறு ஒருவருமே கருத்திடவில்லை.  ஆனால் ரதி ஒரு எமோஜி போட்டிருந்தார் நீங்கள் கவனிக்கவில்லை போல.  எனது பதில் அதற்குத்தான்.  

நிற்க, 

நான் yarl களத்தை ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாக தொடர்பவன் மட்டுமல்ல,  yarl காளத்தினுடாக அதிக அளவில் உதவிபுரிந்து வந்தவன். அதுவும் முக்கியமாக எனதும் எனது நண்பர்களினதும் உதவிகளில் அதிக அளவில் கிழக்குமாகாணத்தின் எல்லைக்கிராமங்களிற்கே சென்றது.

ரதியின் கருத்துக்கள் தொடர்பில் எனக்கென்றொரு அபிப்பிராயம் உண்டு.  

மேலும், 

இலங்கையில் உலகின் முக்கியமான புலனாய்வு நிறுவனங்கள் அனைத்தும் கால பதித்து ஏறக்குறைய 30 வருடங்களாகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

காதிலே கேடட ஒரு செய்தி ...இவரது நெருங்கிய உறவினர் தேர்தலில் தோல்வியடைந்தவரின்   தந்தையின்  நெருங்கிய ஆலோசகராம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இங்கு ரதி சொன்னதெல்லாம் “இனி மேல் ஊரில் யார் கொலை செய்தாலும்,கொள்ளை அடித்தாலும் அது கோத்தா தான்” என்று பலரும் இலகுவாக முடிவெடுத்து விடுவார்கள் என்பது மட்டுமே.

✔️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

மகாராஜா,

எனக்கு ரதியை, யாழ் களத்தில் எழுதும் கருணாவின் தங்கை என்று மட்டுமே தெரியும். ஆனால், அவவின், கருத்துக்களை பற்றி சிந்தித்து பார்க்கும்போது, ரதியின் நுண்ணறிவும், அவதானமும், இலங்கை அரசியல் பற்றிய எதிர்வுகூறும் ஆற்றலும், இக்களத்தில் எழுதும் மற்றவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத அளவு உயர்வான தரத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. எமது மக்களுக்கு ரதியின் கருத்துகள் புரிவது கடினமானதால் ரதியை எம்மக்கள் வேகமாக நிராகரித்து விடுவார்கள்.

இங்கு ரதி சொன்னதெல்லாம் “இனி மேல் ஊரில் யார் கொலை செய்தாலும்,கொள்ளை அடித்தாலும் அது கோத்தா தான்” என்று பலரும் இலகுவாக முடிவெடுத்து விடுவார்கள் என்பது மட்டுமே. நீங்கள் எழுதிய எவற்றையுமே ரதி நேரடியாவோ மறைமுகமாகவோ சொல்லவில்லை.

  1. கொலைகளை பாதாள உலக அமைப்புகளும் செய்யும் சாத்தியம் உள்ளதை நீங்கள் மறுக்கிறீர்களா?
  2. இந்தியாவின் றோ, புவிசார் அரசியல் தேவைக்காக கூலிப்படையை கொண்டு கொலை செய்யும் சாத்தியம் இல்லை என்கிறீர்களா?
  3. ஈஸ்ரர் குண்டுவெடிப்பை சீன அரசின் சர்வதேச சதி நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
  4. இறுதியாக, எனது நாட்டின் பிரபலமான சி.ஐ.ஏ. இலங்கையில் இல்லை என்கிறீர்களா? இன்றைய அமெரிக்க தூதுவர் சி.ஐ.ஏ. உயர் அதிகாரியாக இருந்தவர் என்பதை அறிவீர்களா?

ஆலால், தருமர், ராஜினி கொலைகளை புலிகளின் தலையில் போட்ட காலம்தான் நினைவுக்கு வருகிறது.

ரதியின் அரசியல் எதிர்வுகூறல்களைப்பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை.

ஆனால், இங்கே ரதியின் கருத்தினை நான் விளங்கிக்கொண்டதன்படி, இனிமேல் இலங்கையில் நடக்கும் கொலைகள் எல்லாவற்றுக்கும் கோத்தாவைக் காரணமாகக் காட்டப்போகிறார்கள் என்ற ரதியின் கருத்திலிருந்து நான் புரிந்துகொண்டது இதைத்தான்.

அதாவது, ஜூட் மேலே சொன்னதுபோல பிறநாட்டு, உள்நாட்டு கிரிமினல்கள் தாம் செய்யும் கொலைகளை கோத்தாமீது போட்டுத் தப்பிவிடுவார்கள் என்பதை விட, தமிழர்கள் தேவையில்லாமல் கோத்தாவைக் குறை கூறப்போகிறார்களே என்கிற ஆதங்கம்தான் ரதியின் கருத்தில் தொனித்ததாக நான் நினைக்கிறேன். இது ரதிக்குத்தான் வெளிச்சம். 

கோத்தாவினை ஆதரிக்கும் முரளீதரனை (விநாயகமூர்த்தியின் மகனும், கிரானைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான ) ஆதரிக்கும் ரதிக்கு, சிலவேளை கோத்தா இக்கொலைகளைச் செய்யவில்லை என்கிற எண்ணம் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

✔️

எங்கள் சமூகத்திற்கு விளக்கம் எப்போதும் குறைவுதான்.  அந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கத்தினன். 

59 minutes ago, ரஞ்சித் said:

"""தமிழர்கள் தேவையில்லாமல் கோத்தாவைக் குறை கூறப்போகிறார்களே என்கிற ஆதங்கம்தான் ரதியின் கருத்தில் தொனித்ததாக நான் நினைக்கிறேன். """"

இதற்கு ரதியின் பதில் என்ன  ????? 

  • கருத்துக்கள உறவுகள்

19-DF637-B-75-E7-40-D2-9227-7-A05983-B04

Edited by Kavi arunasalam

இந்த வெளிநாட்டவர் தங்கியிருந்த வீட்டுக்காரரில்தான் சந்கேம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kavi arunasalam said:

19-DF637-B-75-E7-40-D2-9227-7-A05983-B04

என்னையா இந்த தடவை நிறம் மாத்தாமலா விடப்போறாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maharajah said:

எங்கள் சமூகத்திற்கு விளக்கம் எப்போதும் குறைவுதான்.  அந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கத்தினன். 

"""தமிழர்கள் தேவையில்லாமல் கோத்தாவைக் குறை கூறப்போகிறார்களே என்கிற ஆதங்கம்தான் ரதியின் கருத்தில் தொனித்ததாக நான் நினைக்கிறேன். """"

இதற்கு ரதியின் பதில் என்ன  ????? 

கோத்தா,  எனக்கு மாமாவா நான் அவர் மேல் பழி விழுந்திடும் என்று பயப்பிட...நான் சொன்னது புலத்தில் இருக்கும் தமிழர்கள் அவர் மேல் உள்ள ஆத்திரத்தில் ஊரில் ஏதாவது குடும்ப கொலை நடந்தால் கூட அதை அவர் மேல் தூக்கி போட்டு விடுவார்கள்...அதற்காக அவர் கொலை செய்ய மாட்டார் என்று சொல்லவில்லை...செய்வார் என்றே நினைக்கிறேன்...ஆனால் இப்போதைக்கு செய்ய மாட்டார்.

கோத்தா  அடிப்படையில் ஒரு இராணுவ வீரர் ...தங்களுக்கு எதிரிகளே இருக்க கூடாது...பிடிக்காட்டில் போட்டுத் தள்ளுவது என்பது அவர்களது பாணி ...அவர்களை எதித்து தேவையில்லாமல் அழிவதை விட  அரவணைத்து போய் சலுகைகளை பெற வேண்டும்...இங்கே இருந்து கொண்டு எதிர்த்து கொண்டு தான் இருப்பேன் என்றால் அங்கே அழிய போவது எமது மக்கள் தான் ...இவரது இந்த ஆட்சி அவ்வளவு மோசமாய் இருக்காது என்று நினைக்கிறேன் ...நாங்கள் மோத வெளிக் கிட்டால் அவர்களும் தொடங்குவார்கள் 

அதே நேரத்தில் இங்கு யாழில் பலர் அவர் எப்ப கொலை செய்வார் என்று காத்துக் கொண்டு இருப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியம் இல்லை...அப்படி பழகி விட்டார்கள் 😉

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இரயிலிருந்து  தவறி விழுந்து  இறந்ததாக ஒரு  நம்பகமான  செய்தி...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இவர் இரயிலிருந்து  தவறி விழுந்து  இறந்ததாக ஒரு  நம்பகமான  செய்தி...

சிலாபத்தில் சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு வரும் போது ரெயிலில் ஏதோ ஒரு ஸ்ரேசனில் தவறி விழுந்து தான் இவர் இறந்தார் என்று எங்கேயோ வாசிச்சன் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கோத்தா,  எனக்கு மாமாவா நான் அவர் மேல் பழி விழுந்திடும் என்று பயப்பிட...நான் சொன்னது புலத்தில் இருக்கும் தமிழர்கள் அவர் மேல் உள்ள ஆத்திரத்தில் ஊரில் ஏதாவது குடும்ப கொலை நடந்தால் கூட அதை அவர் மேல் தூக்கி போட்டு விடுவார்கள்...அதற்காக அவர் கொலை செய்ய மாட்டார் என்று சொல்லவில்லை...செய்வார் என்றே நினைக்கிறேன்...ஆனால் இப்போதைக்கு செய்ய மாட்டார்.

கோத்தா  அடிப்படையில் ஒரு இராணுவ வீரர் ...தங்களுக்கு எதிரிகளே இருக்க கூடாது...பிடிக்காட்டில் போட்டுத் தள்ளுவது என்பது அவர்களது பாணி ...அவர்களை எதித்து தேவையில்லாமல் அழிவதை விட  அரவணைத்து போய் சலுகைகளை பெற வேண்டும்...இங்கே இருந்து கொண்டு எதிர்த்து கொண்டு தான் இருப்பேன் என்றால் அங்கே அழிய போவது எமது மக்கள் தான் ...இவரது இந்த ஆட்சி அவ்வளவு மோசமாய் இருக்காது என்று நினைக்கிறேன் ...நாங்கள் மோத வெளிக் கிட்டால் அவர்களும் தொடங்குவார்கள் 

அதே நேரத்தில் இங்கு யாழில் பலர் அவர் எப்ப கொலை செய்வார் என்று காத்துக் கொண்டு இருப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியம் இல்லை...அப்படி பழகி விட்டார்கள் 😉

பதிலுக்கு நன்றி. 

"""அப்படி பழகி விட்டார்கள் """ என்பது சரியா அல்லது பழக்கிவிட்டார்கள் என்பது சரியா  ? 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

சிலாபத்தில் சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு வரும் போது ரெயிலில் ஏதோ ஒரு ஸ்ரேசனில் தவறி விழுந்து தான் இவர் இறந்தார் என்று எங்கேயோ வாசிச்சன் 

கனடாவில் இருந்து இங்கு வந்தவர்  கொழும்பில் கடத்தப்பட்டுக்கொலை என்ற செய்தியில் உண்மையில்லையாம் அவர் ரயிலிலில் இருந்து தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவே முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன . செய்திகளை பகிரமுதல் அதன் உண்மைத்தன்மையறியவும் மக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் அச்சுறுத்த பல ஊடகங்கள் முயலுகின்றன அவதானமாக இருக்கவும்

முகநூலில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

முழுமையான தகவல் இன்னமும் வெளிவரவில்லை எனத்  தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maharajah said:

முழுமையான தகவல் இன்னமும் வெளிவரவில்லை எனத்  தெரிகிறது. 

ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன ஆனாலும் முழு விசாரணை என்பது முற்று முழுதாக (அவனுக்கே வெளிச்சம்) இராது இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

கனடாவில் இருந்து இங்கு வந்தவர்  கொழும்பில் கடத்தப்பட்டுக்கொலை என்ற செய்தியில் உண்மையில்லையாம் அவர் ரயிலிலில் இருந்து தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவே முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன . செய்திகளை பகிரமுதல் அதன் உண்மைத்தன்மையறியவும் மக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் அச்சுறுத்த பல ஊடகங்கள் முயலுகின்றன அவதானமாக இருக்கவும்

👍

புலம்பெயர் தமிழர்களில் சிலரும் இப்படியான ஒரு பரபரப்பை திகிலை ஏற்படுத்தும் செய்திகள் கிடைக்காதா, ஆட்களுடன் கதைக்கும் போது சொன்னால் எவ்வளவு நல்லாக இருக்கும் என்ற நிலையிலேயே உள்ளனர்.அந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கத்தினன்.
அவர்களை தூண்டிவிட பல தமிழ் ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.