Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை

கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட  வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

01__1_.jpg

மேலும் சம்பவ இடம்பெற்ற வீட்டில் வாடகைக்கு இருந்த கணவன், மனைவியும் வடக்கில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் வாடகைக்கு குடியமர்ந்திருந்தனர். அவர்களுடைய வீட்டுக்கு தினமும் ஆண், பெண் புதுப்புது முகங்கள் வருகை தந்த வந்தமே இருந்தனர்.

சந்தேகம் கொண்ட ஊரவர்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் தொடர்பில் கண்காணித்து வந்தனர்.

01__2_.jpg

இந்த நிலையில் நேற்று  ஊரவர்கள் ஒன்றுகூடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு இருந்த இரண்டு ஆண்கள் மட்டும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர். எனினும் பெண்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இராநாதன் ஐங்கரன் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற இருவரும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

01__3_.jpg

எனினும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க பின்னடித்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கும் தகவல் வழங்கினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார், அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்தோரை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுழிபுரம், சங்கானையைச் சேர்ந்த இருவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

01__4_.jpg

அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்த சுமார் 40 -45 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் ஏற்கனே அச்சுவேலிப் பொலிஸ் பிரிவில் வசித்து விபச்சார நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்ற ஊர் மக்களின் குற்றச்சாட்டால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அந்தக் குடும்பத்துக்கும் கிளிநொச்சி, வவுனியாவில் இயங்கும் விபச்சார விடுதிகளுக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/70644

  • கருத்துக்கள உறவுகள்

01__3_.jpg

மதிலின், உயரம் காணாது என்று.... 
உயரமான  தகர வேலியும், போட்டுத்தான்...வியாபாரம்  நடந்திருக்கு. :)

அப்படியிருந்தும்.... உள்ளுக்கு என்ன நடக்குது என்று, கண்டு பிடிப்பதில்...  
நம்ம சனம்,   கெட்டிக்காரர் தான். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனினும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க பின்னடித்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர்

மக்களை பாதுகாக்க வேண்டியர்களே பணத்துக்காக இப்படி நடந்து கொள்வதை கண்டிக்க வேண்டும்.முதலில் அவர்களில் இருந்து நடவடிக்கை தொடங்க வேண்டும்.

2 hours ago, தமிழ் சிறி said:

மதிலின், உயரம் காணாது என்று.... 
உயரமான  தகர வேலியும், போட்டுத்தான்...வியாபாரம்  நடந்திருக்கு. :)

அப்படியிருந்தும்.... உள்ளுக்கு என்ன நடக்குது என்று, கண்டு பிடிப்பதில்...  
நம்ம சனம்,   கெட்டிக்காரர் தான். :grin:

சொந்த வீட்டில்  நடப்பதை விட்டுவிட்டு  அடுத்த வீட்டு வேலிக்குள் நடப்பதை அணுவளவாக  ஆராய்வதில்  நம்மவர்கள் வல்லமை படைத்தவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லைப் போலும். 😂😂 

  • கருத்துக்கள உறவுகள்
அருகில்  தெருவோரம் தெரிவது பாடசாலையா?
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்ததும், அத்தனை பேரும் ஒரே நேரத்தில் போவது என்ன நியாயம் என்று யோசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, vanangaamudi said:
அருகில்  தெருவோரம் தெரிவது பாடசாலையா?

விலாவாரியாக விபரம் அறியமுயல்வதன் நோக்கம்..... 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

விலாவாரியாக விபரம் அறியமுயல்வதன் நோக்கம்..... 😂🤣

பாடசாலையும் பள்ளிதான். படுக்கையும் பள்ளிதான். ஆகா ! என்ன பொருத்தம் என்று வணங்காமுடி அவர்கள் யோசித்திருக்கலாம். அல்லது வழி கேட்பவர்களுக்கு சரியாகச் சொல்லலாமே என்ற அவரது மக்கள் நல சிந்தனையும் காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

பாடசாலையும் பள்ளிதான். படுக்கையும் பள்ளிதான். ஆகா ! என்ன பொருத்தம் என்று வணங்காமுடி அவர்கள் யோசித்திருக்கலாம். அல்லது வழி கேட்பவர்களுக்கு சரியாகச் சொல்லலாமே என்ற அவரது மக்கள் நல சிந்தனையும் காரணமாக இருக்கலாம்.

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது??😝

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

சொந்த வீட்டில்  நடப்பதை விட்டுவிட்டு  அடுத்த வீட்டு வேலிக்குள் நடப்பதை அணுவளவாக  ஆராய்வதில்  நம்மவர்கள் வல்லமை படைத்தவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லைப் போலும். 😂😂 

முன்னர் ஒரு காலத்தில் பிற்பகல் வேளைகளில் வேலிகளில் நின்று கதைப்பதால் பெரிய பெரிய வெட்டுப்பாடே வரும்.

இப்போ இருந்த இடத்தில் இருந்து தொலைபேசிக்குள்ளால் அதே அலுவல் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

01__3_.jpg

மதிலின், உயரம் காணாது என்று.... 
உயரமான  தகர வேலியும், போட்டுத்தான்...வியாபாரம்  நடந்திருக்கு. :)

அப்படியிருந்தும்.... உள்ளுக்கு என்ன நடக்குது என்று, கண்டு பிடிப்பதில்...  
நம்ம சனம்,   கெட்டிக்காரர் தான். :grin:

5 hours ago, tulpen said:

சொந்த வீட்டில்  நடப்பதை விட்டுவிட்டு  அடுத்த வீட்டு வேலிக்குள் நடப்பதை அணுவளவாக  ஆராய்வதில்  நம்மவர்கள் வல்லமை படைத்தவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லைப் போலும். 😂😂 

இப்படி இலவசமாக துப்பறிந்து நடவடிக்கை எடுத்த நிபுணர்களின் தொடர்பை பெற்று தர முடியுமா? ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அங்கே உருவாக்கி உலகளாவிய வணிக ரீதியான சேவையை வழங்க சிறப்பான ஆற்றலுள்ளவர்களை இங்கே பெற முடியும் போல தெரிகிறது. தமிழ் மொழியில், சிங்கபூர், சிறி லங்கா, தமிழ் நாடு, தென் ஆப்ரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில், அரசுகளுக்கு விபச்சார விடுதிகளை கண்டு பிடிக்கும் சேவைகளையும், தனியாருக்கு மனைவி, கணவன், மகள் ஆகியோரின் கள்ள காதலையும் (காமத்தையும்) கண்டுபிடிக்கும் சேவைகளையும் நியாயமான விலைக்கு வழங்கலாம் என்று திட்டமிடுகிறேன். இந்த நிபுணர்கள் இலவச சேவையையே தற்போது வழங்குவதால், பெருமளவு சம்பளம் எதிர்பார்க்க மாட்டார்கள். சர்வதேச அளவில் சேவையாற்றும் சந்தர்ப்பமே அவர்களுக்கு நிறைவை தரும். இந்த புலனாய்வு நிறுவனத்தின்பங்குதார்களாக  விரும்புபவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்.🤑

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

யூட்,

இந்த துப்பறியும் வேலைக்கு லண்டனில் இருந்தும் ஆள் எடுத்தா அறியத்தரவும்.

———

பிடிபட்ட சந்தேக நபருக்கு 45  வயதாம். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை😂

இப்படியான இடங்கள் இருப்பதால்- சில சமயம் சின்ன பிள்ளையளை விட்டுவிட்டு இங்கினக்க போய்வரக்கூடும் அல்லவா?

பிகு: I am only thinking aloud. இதுக்காகா தமிழ் சேனாக்கள், கலாச்சார காவலர்கள் என்னை படையெடுத்து வந்து முற்றுக்கை இட வேண்டாம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

இந்த நிலையில் நேற்று  ஊரவர்கள் ஒன்றுகூடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு இருந்த இரண்டு ஆண்கள் மட்டும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர். எனினும் பெண்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர்.

இத்தனை பொதுமக்கள், சுற்றிவளைத்தும்.....
ஆண்கள்... பிடிபட்ட நிலையில், 
பெண்கள்  தப்பியதை... நினைக்க, பயங்கர கில்லாடிகள் போல இருக்கு.  :grin:

7 hours ago, Jude said:

இப்படி இலவசமாக துப்பறிந்து நடவடிக்கை எடுத்த நிபுணர்களின் தொடர்பை பெற்று தர முடியுமா? ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அங்கே உருவாக்கி உலகளாவிய வணிக ரீதியான சேவையை வழங்க சிறப்பான ஆற்றலுள்ளவர்களை இங்கே பெற முடியும் போல தெரிகிறது. தமிழ் மொழியில், சிங்கபூர், சிறி லங்கா, தமிழ் நாடு, தென் ஆப்ரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில், அரசுகளுக்கு விபச்சார விடுதிகளை கண்டு பிடிக்கும் சேவைகளையும், தனியாருக்கு மனைவி, கணவன், மகள் ஆகியோரின் கள்ள காதலையும் (காமத்தையும்) கண்டுபிடிக்கும் சேவைகளையும் நியாயமான விலைக்கு வழங்கலாம் என்று திட்டமிடுகிறேன். இந்த நிபுணர்கள் இலவச சேவையையே தற்போது வழங்குவதால், பெருமளவு சம்பளம் எதிர்பார்க்க மாட்டார்கள். சர்வதேச அளவில் சேவையாற்றும் சந்தர்ப்பமே அவர்களுக்கு நிறைவை தரும். இந்த புலனாய்வு நிறுவனத்தின்பங்குதார்களாக  விரும்புபவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்.🤑

ஜூட்.... உங்கள் புலனாய்வு துறைக்கு, 😎
பெண்களை  தப்பி  ஓட  விட்டவர்களை நம்பி,  எப்படி வேலை கொடுப்பீர்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தலைப்பைப் பார்த்ததும், அத்தனை பேரும் ஒரே நேரத்தில் போவது என்ன நியாயம் என்று யோசித்தேன்.

சுப.சோமசுந்தரம் அவர்களே.... 
இங்கு அயலில் உள்ள ஒரு ஊர்  பெண்களையும் காணவில்லை.
இதுவே... வட  இந்தியாவாக இருந்தால்... இந்த விடயத்தை பெண்கள் தான்...
முன்னுக்கு நின்று, கண்டித்த காணொளிகள்  பலவற்றை பார்த்துள்ளேன்.

ஏன்... இந்த வித்தியாசம் என்று, எனக்கு புரியவில்லை. :rolleyes:
உங்களுக்காவது தெரியுமா?  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுப.சோமசுந்தரம் அவர்களே.... 
இங்கு அயலில் உள்ள ஒரு ஊர்  பெண்களையும் காணவில்லை.
இதுவே... வட  இந்தியாவாக இருந்தால்... இந்த விடயத்தை பெண்கள் தான்...
முன்னுக்கு நின்று, கண்டித்த காணொளிகள்  பலவற்றை பார்த்துள்ளேன்.

ஏன்... இந்த வித்தியாசம் என்று, எனக்கு புரியவில்லை. :rolleyes:
உங்களுக்காவது தெரியுமா?  :grin:

தமிழ்ச் சமூகம் ஆரியப் படுத்தப்பட்ட பின் உள்ள சூழலைச் சொல்வதானால், மேற்கத்தியம் (ஆடை முதல்) நம்மை விட விரைவாக வடக்கிந்தியரிடம் பரவி விடுவதாய் உணர்கிறேன். இதில் நல்லவை, அல்லவை இரண்டும் உண்டு.  அதன் விளைவாகவே தமிழ்ப் பெண்களை ( குறிப்பாக தென் தமிழகம் மற்றும் இலங்கை) விட  வட இந்தியப் பெண்கள் தயக்கம் களைந்து பொது வெளியில் அதிகம் வந்து விட்டார்கள் போலும். 

       மற்றபடி தேவை ஏற்படின் தமிழச்சி அரசவையிலோ மக்கள் மன்றத்திலோ போர்க்களத்திலோ வந்து நிற்பது இலக்கியங்களில் காணலாம். சமூகம் ஏற்றுக் கொண்டதுதான் பெரும்பாலும் பாடு பொருளாகும்.

19 hours ago, ஈழப்பிரியன் said:

மக்களை பாதுகாக்க வேண்டியர்களே பணத்துக்காக இப்படி நடந்து கொள்வதை கண்டிக்க வேண்டும்.முதலில் அவர்களில் இருந்து நடவடிக்கை தொடங்க வேண்டும்.

நம்ம ஊர் பெண்களாக இருக்க முடியாது. நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாம் தெடகிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால்தான் போலீசார்  நடவடிக்கை எடுக்க தயங்கினவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது??😝

நன்றி திரு.Nunavilan அவர்களே ! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொல்லியல் அறிஞர் தொ.பரமசிவனிடமும் சொல்லியல் அறிஞர் தேவநேயப் பாவாணரின் புத்தகத்திலும் 'பள்ளி' என்ற சொல்லுருவாக்கம் (etymology) பற்றி நான் அறிந்ததை உங்களைப் போன்ற யாழ் சொந்தங்களிடம் பகிரலாம் என நினைக்கிறேன் (சிலர் ஏற்கெனவே அறிந்திருக்கலாம்). தமிழில் முறைசார் கல்வி என்பது சமணர்கள் காலத்தில் ஏற்பட்ட ஒன்று. சமணர்கள் குன்றேறி வாழ்ந்தவர்கள். துறவுக்கான அமைதியும், மானிட சேவைக்கான மனிதச் சூழலும் அமையப் பெற்றவை குன்றுகளேயாம். அங்கு அவர்கள் தங்களுக்கு அமைத்திருந்த சமணப் படுக்கைகள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன (இன்று தமிழகம் முழுவதும் அச்சமணப் பள்ளிகள் தொல்லியல் துறையின் ஆளுமையில் உள்ளன). அப்படுக்கைகளில் சமணர்கள் எழுந்தமர்ந்து மக்களுக்குப் போதிக்கலாயினர். மக்கள் இவ்வாறு முதன்முதலில் முறைசார் கல்வியை அவ்வப்போது'பள்ளி'சென்று பெற்றனர். பின்னர் ஆங்கிலேயர் தந்த முறைசார் கல்வியும் 'பள்ளி'க்கல்வியானது. கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆனது. 

    போயும் போயும் ஒரு 'அபச்சார' செய்தியின் கீழ், கல்வி எனும் மேன்மையான பொருள் பற்றி இவ்வளவு நீளமாகப் பேச வேண்டுமா எனத் தோன்றுகிறதா? கல்வி பெருமையுடைத்து, கலவி சிறுமையுடைத்து என்று சொன்னார் யாரே !

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

நம்ம ஊர் பெண்களாக இருக்க முடியாது. நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாம் தெடகிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால்தான் போலீசார்  நடவடிக்கை எடுக்க தயங்கினவர்கள். 

நம்ம எங்க ஏற்றுக்கொள்ள போகிறோம்  கொழும்பில் பல லொச்சுக்களில் நம்ம பெட்டைகள் என்று சொல்லுவானுகள் சிங்கள பொடியன்கள் அவனுகள் நம்மள பொட்டைகளை சொல்லுவானுகள் நாம அவனுகளை சொல்லுவம் அங்கால காக்காமார் விஸ்நஸ் என்று சொல்லி வெளிநாட்டை கொழும்புக்கு இறக்கி ஏத்தி விட்டு விஸ்நஸை முடிச்சி விடுறானுகள் இதுதான் உள்குத்தான நாட்டு நிலமை 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம எங்க ஏற்றுக்கொள்ள போகிறோம்  கொழும்பில் பல லொச்சுக்களில் நம்ம பெட்டைகள் என்று சொல்லுவானுகள் சிங்கள பொடியன்கள் அவனுகள் நம்மள பொட்டைகளை சொல்லுவானுகள் நாம அவனுகளை சொல்லுவம் அங்கால காக்காமார் விஸ்நஸ் என்று சொல்லி வெளிநாட்டை கொழும்புக்கு இறக்கி ஏத்தி விட்டு விஸ்நஸை முடிச்சி விடுறானுகள் இதுதான் உள்குத்தான நாட்டு நிலமை 

எந்த ஆதாரமும் இல்லாமல் இதை எல்லாம் எப்படி நம்புறது?
கொழும்பு லொட்ச்சுக்கு என்ன பெயர்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

எந்த ஆதாரமும் இல்லாமல் இதை எல்லாம் எப்படி நம்புறது?
கொழும்பு லொட்ச்சுக்கு என்ன பெயர்? 

பெயர் வேண்டாம் கொழும்பில சில லோக்கல் லொட்சுக்களில்  ஆனால் சிலர் வெளியிலிருந்தே கொண்டுவருகிரார்கள் வெளிநாடு அல்ல ( வேற ஊர்களில்)

அண்மையில் ஓர் இளைஞன் மரணமானார்  வடக்கை சேர்ந்தவர்  மாத்திரை ஏதோ பாவிச்சிருந்ததாக செய்திகள் சொல்லியது  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பெயர் வேண்டாம் கொழும்பில சில லோக்கல் லொட்சுக்களில்  ஆனால் சிலர் வெளியிலிருந்தே கொண்டுவருகிரார்கள் வெளிநாடு அல்ல ( வேற ஊர்களில்)

அண்மையில் ஓர் இளைஞன் மரணமானார்  வடக்கை சேர்ந்தவர்  மாத்திரை ஏதோ பாவிச்சிருந்ததாக செய்திகள் சொல்லியது  

என்ன ஐயா திரும்ப திரும்ப எந்த ஆதரமும் இல்லமால் பொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஓரளவுக்கு எந்த எரிய ? எந்த லொட்ஜ்?  கொண்டுவருபவர்களை எப்படி அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்?
என்றாவது எழுத வேண்டும். .....அதை விடுத்து திரும்ப திரும்ப .... லொட்ஜ் லொட்ஜ் என்றே எழுதுகிறீர்கள்.

நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன். 

ஹாஹா பெயர் சொல்லக்கூடாது  கல்கிசை , தெகிவளையில் பல வெளிநாட்டு பெண்களே கைதானார்கள்

ஆதாரமெல்லாம்  கொடுக்க முடியாது மருதர் நாட்டுக்கு வரும் போது கொழும்பில் ஓர் பத்திரிகை வாங்கி படித்தால் நாட்டு நிலவரம் தெரியும்   (கைதுகளும் வன்புணர்வு பற்றிய செய்திகளும்)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பெயர் வேண்டாம் கொழும்பில சில லோக்கல் லொட்சுக்களில்  ஆனால் சிலர் வெளியிலிருந்தே கொண்டுவருகிரார்கள் வெளிநாடு அல்ல ( வேற ஊர்களில்)

அண்மையில் ஓர் இளைஞன் மரணமானார்  வடக்கை சேர்ந்தவர்  மாத்திரை ஏதோ பாவிச்சிருந்ததாக செய்திகள் சொல்லியது  

Bildergebnis für viagra Ähnliches Foto

மருதர்  அந்தப் பக்கம் போனால்..... கண்ட  குளிசைகளை பாவிக்காமல், போக சொல்லுங்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für viagra Ähnliches Foto

மருதர்  அந்தப் பக்கம் போனால்..... கண்ட  குளிசைகளை பாவிக்காமல், போக சொல்லுங்கள். :grin:

பாவம் மனுசன் பயமுறுத்தாதீர்கள்  போய் வரட்டும் இது நின்னு பேசுமா ?? சிறியர் வெட்டு வாங்களோ நம்ம கருத்த

6 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für viagra Ähnliches Foto

மருதர்  அந்தப் பக்கம் போனால்..... கண்ட  குளிசைகளை பாவிக்காமல், போக சொல்லுங்கள். :grin:

தமிழ் சிறீ உங்கள் அறிவுரை  25 mg  மேலே பாவிக்க வேண்டாம் என்பது தானே. அவ்வாறே நான் விளங்கி கொண்டேன். 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.