Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்

Featured Replies

விடுதலைப்புலிகள் புத்துயிர்  பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர்  மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர்  அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

kamal.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள கமால்குணரட்ண  இந்த பயங்கரவாத தாக்குதல்களிற்கு யார் காரணம் என்பதை கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பௌத்த நாடு, மக்களிற்கு தமதுசொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது,அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுபடையினரின்கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/70999

2 hours ago, ampanai said:

இது பௌத்த நாடு,

இன்னும் கொஞ்ச காலத்தில இது இசுலாமிய நாடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைக்கனம் தான்.. சொறீலங்காவை எல்லா பட்டியலிலும் உலகில் கடைசிக்கு கிட்ட வைத்துள்ளது. உலகில் சிங்கள பெளத்த நாடு ஒரு மூன்றாம் உலக ஏழை நாடு என்பது இந்த மடையர்களுக்கு விளங்கவில்லை.

வல்லரசுகளின் கடனில்.. விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு என்பது புரியவில்லை.

என்ன இந்த முட்டாள்களின் இனவாத வெறியால்.. தமிழர் தேசமும் கடனாளியாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இந்த தலைக்கனம் தான்.. சொறீலங்காவை எல்லா பட்டியலிலும் உலகில் கடைசிக்கு கிட்ட வைத்துள்ளது. உலகில் சிங்கள பெளத்த நாடு ஒரு மூன்றாம் உலக ஏழை நாடு என்பது இந்த மடையர்களுக்கு விளங்கவில்லை.

வல்லரசுகளின் கடனில்.. விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு என்பது புரியவில்லை.

என்ன இந்த முட்டாள்களின் இனவாத வெறியால்.. தமிழர் தேசமும் கடனாளியாகிறது. 

நாங்க கழுதைக்கு வாக்கப்பட்ட நிலை என்ன செய்வது உதையை தாங்கத்தன் வேண்டு ம்

3 hours ago, nedukkalapoovan said:

இந்த தலைக்கனம் தான்.. சொறீலங்காவை எல்லா பட்டியலிலும் உலகில் கடைசிக்கு கிட்ட வைத்துள்ளது. உலகில் சிங்கள பெளத்த நாடு ஒரு மூன்றாம் உலக ஏழை நாடு என்பது இந்த மடையர்களுக்கு விளங்கவில்லை.

இது மிகவும் தவறான பார்வை; உலகில் உள்ள எத்தனையோ நாடுகளை விட இலங்கை எவ்வளவோ மேல்; ஏன் இந்தியாவை விட, பல கிழக்கு ஜரோப்பிய நாடுகளை விட இலங்கை மேல்.பொருளாதார வளர்ச்சி வீதத்தில் இலங்கை பின்னுக்கு நிக்கலாம், ஆனால்ன்பொருளாதார அபிவிருத்தி ஒப்பீட்டளவில் நல்லம். இலங்கை ஒரு வருமான ரீதியில் பார்க்கும் போது high middle income country.

நீங்கள் வேண்டுமானால் முதலாம் ஆண்டு முதல் வைத்தியர்/பொறியில/முகாமைத்துவம் என்று கட்டணம் கட்டாமல் இலவசமாக மட்டுமல்ல படிக்கவென்றே மகா பொல போன்ற பண உதவி செய்யும் திட்டங்களையும் உள்ள நாடு.

  • தொடங்கியவர்

இலங்கை பெளத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை - விக்னேஸ்வரன்

இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைக் கதைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாராந்தம் ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட் டுள்ளார்.

மேலும், இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம். பாளி மொழி மூலம் புனைக்கதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை, வரலாறு என போலியான புனைக்கதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் வடக்குகிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை.
இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்விகம் அல்ல. இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20136&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

இந்த தலைக்கனம் தான்.. சொறீலங்காவை எல்லா பட்டியலிலும் உலகில் கடைசிக்கு கிட்ட வைத்துள்ளது. உலகில் சிங்கள பெளத்த நாடு ஒரு மூன்றாம் உலக ஏழை நாடு என்பது இந்த மடையர்களுக்கு விளங்கவில்லை.

15 hours ago, Dash said:

இது மிகவும் தவறான பார்வை;

👍

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2019 at 8:40 AM, nedukkalapoovan said:

இந்த தலைக்கனம் தான்.. சொறீலங்காவை எல்லா பட்டியலிலும் உலகில் கடைசிக்கு கிட்ட வைத்துள்ளது. உலகில் சிங்கள பெளத்த நாடு ஒரு மூன்றாம் உலக ஏழை நாடு என்பது இந்த மடையர்களுக்கு விளங்கவில்லை.

வல்லரசுகளின் கடனில்.. விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு என்பது புரியவில்லை.

என்ன இந்த முட்டாள்களின் இனவாத வெறியால்.. தமிழர் தேசமும் கடனாளியாகிறது. 

இதென்ன புதுக்கதை? தமிழ் நாடு இந்தியாவிலேயே பணக்கார மாநிலங்களில் ஒன்று. அது எப்போது கடனாளியாகியது?

On 12/14/2019 at 8:47 AM, தனிக்காட்டு ராஜா said:

நாங்க கழுதைக்கு வாக்கப்பட்ட நிலை என்ன செய்வது உதையை தாங்கத்தன் வேண்டு ம்

"வாக்கப்பட்ட" என்றால் என்ன? இது தமிழா? அல்லது தமிழ் கொலையா?

  • தொடங்கியவர்

Fitch and S&P cut their ratings to B from B+ following the third major rating agency, Moody's, which downgraded the island nation on Nov. 20. Both firms cited risks that Sri Lanka could struggle to refinance its debt. The country has a “heavy” external debt repayment schedule between 2019 and 2022, Fitch said.Dec 4, 2018

https://www.reuters.com/article/us-sri-lanka-ratings-s-p/rating-agencies-downgrade-sri-lanka-amid-political-crisis-idUSKBN1O30YU

  • தொடங்கியவர்

நேற்று (செய்தி)  சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர் தமிழர்கள் வீடுகளை கட்ட இல்லை மீளப்பை செய்ய - பொருளாதாரம் இன்னும் வளரலாம் 🙂  கோத்தா வென்றதால் புலம்பெயர் தமிழர்களின் பயணங்கள் குறையலாம் ( பொருளதார தேய்வு ) 😞 

( ஆனால், சீமெந்தை யாரம் குறைத்து மணலை போட்டு ( இங்கு தான் மணல் மாபியாக்களுக்கு நாமும் உதவுகிறோம்) ஏமாற்றமாட்டார்கள் 😯)  

  • தொடங்கியவர்
On 12/14/2019 at 11:40 AM, nedukkalapoovan said:

என்ன இந்த முட்டாள்களின் இனவாத வெறியால்.. தமிழர் தேசமும் கடனாளியாகிறது

குறிப்பாக மலையக மக்கள். நாட்டின் முதுகெலும்பாக உள்ள தேயிலை மற்றும் ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் இவர்கள், பரம்பரையாக வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். 

நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சம்பள உயர்வு, 50 ரூபாய்/ நாள் , பேசப்பட்டது. 

வழமை போல், மறக்கப்பட்டு விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கற்பகதரு said:

"வாக்கப்பட்ட" என்றால் என்ன? இது தமிழா? அல்லது தமிழ் கொலையா?

வாக்கப்பட்ட என்றால் சேர்ந்தாச்சு அல்லது இணைஞ்சாச்சு என்று சொல்லலாம் இது தமிழ் கொலை அல்ல

  • தொடங்கியவர்
On 12/14/2019 at 11:40 AM, nedukkalapoovan said:

வல்லரசுகளின் கடனில்.. விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு என்பது புரியவில்லை.

மேற்குலக மற்றும் சீன நாடுகள், 'எதை உறிஞ்சலாம்' என பார்க்கிறார்கள். இலங்கையில் உள்ள வெளியாக தேசியவாதம் கக்கி உள்ளாக ' சம்திங் '  வாங்கும் அரசியல் வாதிகள். 

இறுதியில், ' கிட்னியை' விற்று வாழும் சாதாரண மக்கள்.  

விக்கி ஐயா இதட்கு பதில்  வழங்கி உள்ளார். இப்போது அவருக்கு எதிராக சிங்கள அமைப்புக்கள் போலீசில் முறைப்பாடு செய்திருக்கிறார்கள் அவரை கைது செய்யும்படியாக. அத்துடன் நேரடி விவாதத்துக்கு அழைத்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

இதென்ன புதுக்கதை? தமிழ் நாடு இந்தியாவிலேயே பணக்கார மாநிலங்களில் ஒன்று. அது எப்போது கடனாளியாகியது?

தமிழ்நாட்டிற்கு கோடிகளில் கடன் இருப்பதாக வாசித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழ்நாட்டிற்கு கோடிகளில் கடன் இருப்பதாக வாசித்த நினைவு.

அமெரிக்க அரசுக்கும் ரில்லியன்களில் கடன் இருக்கிறது. பெருமளவிலான கடனை சீனா கொடுத்திருக்கிறது. 

மைக்றோ சொவ்ற் நிறுவனத்துக்கு நானே கடன் கொடுத்து வட்டியுடன் திரும்ப பெற்றிருக்கிறேன். கடன் வாங்காமல் இயங்கும் அரசுகளும், நிறுவனங்களும் வளர்ச்சி அடைவதில்லை. இந்த அரசுகளினதும், நிறுவனங்களினதும் நிகர மதிப்பை (net worth) வைத்தே அவற்றின் செல்வந்த நிலையை தீர்மானிக்க வேண்டும். இந்த அரசுகளும், நிறுவனங்களும் பணம் தேவைப்படும் போது சொத்துக்களை விற்றோ அல்லது முதலீடுகளை திரும்பப் பெற்றோ பணத்தை திரட்டுவதில்லை. மாறாக, கடன்படுகின்றன. 

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாக்கப்பட்ட என்றால் சேர்ந்தாச்சு அல்லது இணைஞ்சாச்சு என்று சொல்லலாம் இது தமிழ் கொலை அல்ல

நீங்கள் உருவாக்கிய தமிழா ‘வாக்கப்பட்ட’? அல்லது ‘வாழ்க்கைப்பட்ட’ என்ற தமிழ் வசனத்தை குதறி, கோரமாக ‘வாக்கப்பட்ட’ ஆனதா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

நீங்கள் உருவாக்கிய தமிழா ‘வாக்கப்பட்ட’? அல்லது ‘வாழ்க்கைப்பட்ட’ என்ற தமிழ் வசனத்தை குதறி, கோரமாக ‘வாக்கப்பட்ட’ ஆனதா?

இப்படியும் வந்திருக்கலாம் 

  • தொடங்கியவர்

இலங்கை சிவபூமி என்பதற்கு வரலாற்று ஆதாரம் உண்டு

இலங்கையை சிவபூமி என்று அழைத்தவர் திருமூலநாயனார். திருமூலநாயனார் வாழ்ந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் இலங்கை சிவபூமியாக இருந்தது என்பது நிரூபணமாகும்.
தவிர, தேவார முதலிகளின் பாடல் பெற்ற தலங்களாக திருக்கோணேச்சரமும் திருக் கேதீச்சரமும் விளங்குகின்றன.

இதற்கு மேலாக, கதிர்காமத்தில் உறையும் முருகப்பெருமான் மீது அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ்பாடிப் பணிந்துள்ளார்.
 
இவைதவிர, யுகம் கடந்து இலங்கை வேந்தனாக இராவணேஸ்வரன் ஆட்சி செய்தார் என்ற வரலாற்றை இதிகாசங்கள் எமக்கு எடுத்துரைக்கின்றன. இலங்கை வேந்தன் இராவணன் மிகச் சிறந்த சிவபக்தன். திருநீறும் உருத்திராட்சமும்  அவனின் அணிகலன்கள். பஞ்சாட்சரம் அவனின் உச்சாடன மொழி.

இதுவே வரலாறாக இருக்கையில், இலங்கை பெளத்த நாடு என்று ஆட்சி அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சிலர் கூறி வருகின்றனர்.
 
இவ்வாறு இலங்கை பெளத்த நாடு என்று அடிக்கடி கூறுவதுகூட, பெளத்த நாடாக ஆக்கு கின்ற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும்.
 
உண்மையில் இலங்கையை சிவபூமி என்று சைவ மக்கள் கூறிக்கொள்வது கிடையாது.
ஏனெனில் அது அதுவாகவே இருக்க முடியும். இலங்கை சைவத்தின் விளைநிலம். சிவனின் இருப்பிடம்.

இங்கு வாழும் தமிழ் மக்கள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை சதா உச்சரிக்கின்ற சால்பு கொண்டவர்கள்.
 
ஆக, வரலாற்றுச் சான்றுகளும் ஆதாரங்களும் அடிப்படையாக இருக்கும்போது, இலங்கை பெளத்த நாடு என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் கூறுவதானது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
 
இலங்கை பெளத்த நாடு என்று பிரகடனம் செய்கின்ற செயற்கை முறையானது,

இயற்கையான வரலாற்றை அழிக்கவல்லது.
 
அதாவது இலங்கை பெளத்த நாடு என்று பிரகடனம் செய்ய முற்படும்போது, இந்த நாட்டில் இருக்கக்கூடிய சைவ சமயத்தின் தொல்லியல் சான்றுகளை அழிக்கின்ற அல்லது அதனைத் தமக்குரியதென உரிமை கோருகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
 
இத்தகையை பின்னணியிலேயே திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றை தங் களுடையதென பெளத்த தரப்புகள் உரிமை கோருகின்றன.

இதேபோல திருப்புகழ் பாடப்பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் இன்று பெளத்த மயமாக மாற்றப்படுகிறது.

இந்த வரிசையில் முல்லைத்தீவு செம்மலை விவகாரமும் சைவ சமயத்தின் தொன்மையை - இலங்கை சிவபூமி என்ற வரலாற்றை வதம்  செய்கின்ற நடவடிக்கையாக அமைவதால், இது விடயத்தில் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா அதிகூடிய கருசனை கொள்வது கட்டாயமானதாகும். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20141&ctype=news
 
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ampanai said:

தக்கன பிளை/ழைக்கும் என்பது இதுதானோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.