Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

180 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

180 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனுக்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

எனினும்,  இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது

இதேவேளை, அமெரிக்காவிற்கும், ஈரானிற்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவும் இருக்கலாம் என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://athavannews.com/ukrainian-airliner-crashes-near-tehran/

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது

உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்ததுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்

உக்ரைன் சர்வதேச விமானசேவையை சேர்ந்த இந்த விமானம், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்ற உடனே இந்த விபத்து நடந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகரான கீவ்-விற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பெரிதாகியுள்ள இரான் - அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

விமானம் நொறுங்கி விழுந்த இடத்திற்கு மீட்புப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

''விமானம் எரிந்துகொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் மீட்பு குழுவினரை அனுப்பியிருக்கிறோம். எங்கள் குழு   சில பயணிகளின் உயிரை காப்பாற்றக்கூடும்''  என இரான் அவசரகால சேவைப்  பிரிவு தலைவர் ஃபிர்ஹொசைன் கொலிவாண்ட் கூறியுள்ளதாக, இரான் அரசு தொலைகாட்சி தெரிவித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. 

https://www.bbc.com/tamil/global-51030131

 

விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் இறந்துவிட்டனர்

https://www.aljazeera.com/news/2020/01/ukrainian-airliner-crashes-tehran-iranian-media-200108032720868.html

 

 

3 hours ago, தமிழ் சிறி said:

மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஈரானோ இல்லை அமெரிக்காவோ சம்மந்தப்பட சாத்தியமில்லை 😶

2 hours ago, ஏராளன் said:

உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்

ஏற்கனவே போட்டிங் 737 மாக்ஸ் இனால் பிரச்சனை இந்த நிறுவனத்திற்கு. இது மேலும் ஒரு அடி !

ஈரானில் விழுந்தது விமானம் 

  • 63 கனேடியர்கள் ;
  • 03 ஜெர்மானியர்கள் 
  • 03 பிரித்தானியர்கள் 
  • 10 சுவீடன் 
  • 82 ஈரானியர்கள் 
  • 04 ஆப்கானிஸ்தானியார்கள் 
  • 11 உக்ரேனியர்கள் 

உட்பட 176 பேர் மரணம்.

கொல்லப்பட்ட கனேடியர்களில் பலர் மாணவர்கள். விடுமுறைக் காலம் முடிந்த பின் கனடா நோக்கி பயணமாணவர்கள் என பிபிசி சொல்கின்றது. இந்த வழியினூடான ரொரண்டோவுக்கான பயணம் செலவு குறைந்தது என்பதால் தான் கனேடியர்கள் பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கொல்லப்பட்ட கனேடியர்களில் பலர் மாணவர்கள். விடுமுறைக் காலம் முடிந்த பின் கனடா நோக்கி பயணமாணவர்கள் என பிபிசி சொல்கின்றது. இந்த வழியினூடான ரொரண்டோவுக்கான பயணம் செலவு குறைந்தது என்பதால் தான் கனேடியர்கள் பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

நன்றி தகவலுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 

18 hours ago, பெருமாள் said:

நன்றி தகவலுக்கு .

176 பயணிகளில் 138 பேர் கனடா நோக்கி பயணித்தவர்கள். அனேகமானோர் உக்ரைன் நாட்டில் இருந்து படிக்க கனடா வந்த மாணவர்கள். உக்ரைனில் இருந்து ரொரண்டோ வருவதற்கான Transit ஆக தெஹ்ரான் இருப்பதால் பலர் அதனூடாக பயணித்துள்ளார்கள். இதில் 63 பேர் கனடா குடியுரிமை பெற்றவர்களாகவும் மிகுதிப் பேர் தற்காலிக வதிவிட வீசா பெற்றவர்களாகவும் (மாணவர் வீசா மற்றும் நிரந்தரக் குடியுரிமை) உள்ளனர். கொல்லப்பட்ட கனடாவைச் சேர்ந்தவர்களில் 1 வயதுக் குழந்தையும் அடங்கும். தாயும் தகப்பனும் குழந்தையின் 1 வயது பிறந்த தினத்தை டிசம்பர் 2 இல் அவர்களது பெற்றோருடன் கொண்டாடி விட்டு திரும்புகையில் பலியாகியுள்ளனர். நான் வசிக்கும் நகரிற்கு அண்மையில் இருக்கும் Ajax நகரை சேர்ந்தவர்கள்

இந்த விமான விபத்து ஏவுகணையால் அல்லது anti missile system இனால் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என இப்ப சந்தேகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பயணிகள் விமானம் ஈரானின் தலைநகரிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ஈரானின் ரஷ்ஷியத் தயாரிப்பு தோர் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 

தாம் அமெரிக்கத் துருப்புக்களின்மேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியவேளை அமெரிக்க விமானங்கள் தம்மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் சாத்தியமிருப்பதால், தமது தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஆக்டிவாக ஈரான் வைத்திருக்கிறது. பயணிகள் விமானம் எது, போர்விமானம் எது என்று கண்டறியும் தொழிநுட்பம் ரஷ்ஷிய தோர் ஏவுகணைக்கு இருப்பினும்கூட, நேற்று அதனை இயக்கிய ராணுவ வல்லுனரின் அசட்டையினால் தமது தலைநகரிலிருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தை தானே சுட்டு வீழ்த்தியிருக்கிறது ஈரான்.

விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சில மணிநேரத்தில், அதனது தகவல் அடக்க கறுப்புப் பெட்டியை அமெரிக்காவிடமோ அல்லது விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கிடமோ கொடுக்கப்போவதில்லை என்று ஈரான் தடாலடியாக அறிவித்தபோதே இதில் தவறு நடந்திருக்கிறதென்று தெளிவாகியிருந்தது. அவ்வாறே, தனது செய்திச் சேவையில் இயந்திரக் கோளாறினால் விமானம் வீழ்ந்ததாக முதலில் தலைப்பிட்ட உக்ரேனின் அரசு, பின்னர் அத்தலைப்பினை திருத்தி சந்தேகமான முறையில் விமானம் வீழ்ந்திருக்கிறதென்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கேற்றாற்போல், பத்திரிகையாளரின் கேள்வியொன்றிற்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இது சந்தேகத்திற்கிடமான நிகழ்வு, விமானம் இயந்திரக் கோளாறினால் வீழ்ந்ததென்பதை நாம் நம்பவில்லை என்று விமானம் வீழ்ந்த சிலமணி நேரங்களிலேயே கூறியிருந்தார்.

ஆக, ஈரான் தனது ராணுவ வீரப் பிரதாபங்களைக் காட்டுவதாக நினைத்து வெற்று ஏவுகணைகளை ஈராக் முழுதும் வீசியிருப்பதுடன், ஒரு பயணிகள் விமானத்தையும் சுட்டு வீழ்த்தி அப்பாவிகள் 176 பேரையும் கொன்றிருக்கிறது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே தெரியாத காரணங்களுக்காக கனடா என்னைக் கவர்ந்து வைத்திருக்கிறது. ஆகவே, அங்கே எதுநடந்தாலும் அது என்னைப் பாதிக்கிறது. அப்பாவிகள் அநியாயமாகக் கொல்லப்பட்டமைக்காக எனது அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய அரசு கனேடிய விசாரணையாளர்களை விமான விபத்து பற்றி விசாரிக்க அழைத்துள்ளது. இவ்விபத்தில் 63 கனேடியர்கள் கொல்லப்பட்டது அறிந்ததே.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இரான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது' - அமெரிக்கா

இரானில் விமான விபத்து: நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்படத்தின் காப்புரிமைGEOFF ROBINS / GETTY IMAGES Image captionஉயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். டொரோண்டோவில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் அரசினரால், ஒரு வேளை தவறுதலாக, சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் அந்த விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை என்று இரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?

தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.

'உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது'

அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'தோர் எம்-1' ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.

நிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 63 பேர் கனடிய குடிமக்கள். கனடிய குடிமக்கள் மட்டுமல்லாது டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற அந்த விமானத்தில் இருந்து, வேறு இணைப்பு விமானம் மூலம் கனடா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் பலரும் இறந்தவர்களில் அடக்கம்.

கருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் தர முடியாது என்று இரான் கூறியுள்ளதுபடத்தின் காப்புரிமைAFP Image captionகருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் தர முடியாது என்று இரான் கூறியுள்ளது

விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பும் சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும் பென்டகன் அதிகாரபூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

இரான் கூறுவது என்ன?

விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அல்லது விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்துக்கு தர முடியாது என்று கூறியுள்ளது இரான் அரசு. எனினும் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பான விசாரணையில் போயிங் பங்கேற்கலாம் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பி மேற்கு நோக்கிச் சென்ற அந்த விமானம், கிளம்பிய சற்று நேரத்தில் வலப்பக்கம் திரும்பி மீண்டும் விமான நிலையம் வர முற்பட்டதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி ஆபேத்சாடே கூறியுள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் அதில் தீ பற்றியிருந்ததை சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். திரும்பும் முன்னர் அலி காமேனி விமான நிலையத்துக்கு அபாய உதவிகள் கோரி விமானி எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் 'தோர்' ஏவுகணைகள் இரானிடம் உள்ளதாக அறியப்படுகிறதுபடத்தின் காப்புரிமைAFP / GETTY Image captionரஷ்யாவின் 'தோர்' ஏவுகணைகள் இரானிடம் உள்ளதாக அறியப்படுகிறது

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறுவது அறிவியல்பூர்வ தர்க்கமற்றது என்றும் அவர் மறுத்துள்ளார்.

'இரானுக்கு சங்கடமான சூழல்'

இரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளே தவறுதலாக விமானத்தை வீழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சற்று முன்புதான் கிளம்பிய அந்த விமானத்தை பயணிகள் விமானம் என்று எளிதில் அடையாளம் கண்டிருக்க முடியும் என்று பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்கஸ் கூறுகிறார்.

ஒருவேளை இரான் தரப்பில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டிருந்தால், சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட ரஷ்யாவின் 'தோர்' ஏவுகணையை ஏவியவர்கள் எதைப்பார்த்து தாக்கும் முடிவுக்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை என்கிறார் ஜொனாதன் மார்கஸ்.

ஒருவேளை இரான் இந்த விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியிருந்தால் இது அந்நாட்டுக்கு சங்கடமான சூழலை உருவாக்குவதுடன், அந்தப் பிராந்தியத்தின் அரசியலையும் மோசமாக்கும்.

https://www.bbc.com/tamil/global-51058287

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

iran-1225360-720x450.jpg

விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம் குறித்து ஈரான் புதிய தகவல்!

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம், கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னரே, அதில் தீப்பிடித்ததாக ஈரான் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானில் இருந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், மீண்டும் அந்த நிலையத்துக்கு விமானத்தைக் கொண்டு வர விமானிகள் முயன்றதாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போதே, குறித்த விமானம் விபத்துக்குள்ளானதால், இது ஈரானாலேயே வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

அத்தோடு, அத்தோடு விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதுவே தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலால் விமானம் வீழ்த்தப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த முகக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 176 பேர் பயணித்த உக்ரேன் இன்ரர்நஷனல் ஏயார்லைன்ஸின் பி.எஸ்.752 விமானம், நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், உக்ரேன்;; விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற காணொளியை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

http://athavannews.com/விபத்துக்குள்ளான-உக்ரேன/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ee.jpg

உக்ரேனிய விமானத்தினை ஈரானே சுட்டு வீழ்த்தியது – அதிரடி தகவலினை வெளியிட்டது அமெரிக்கா!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே கடந்த புதன்கிழமை 180 பேருடன் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வழித் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவத் தளபதியான காசிம் சோலெய்மனி கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் நிலைகொண்டுள்ள தளங்களில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று முந்தினம் முன்னெடுத்திருந்தது.

இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாக உக்ரைன் மற்றும் ஈரான் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த விமானத்தினை ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் நொறுங்கியதாக அமெரிக்க அதிகாரிகளும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை தாக்குதலில் விமானம் விழுந்ததாக பல்வேறு உளவுப்பிரிவுகள் தகவல் தெரிவித்துள்ளதாக கனேடிய பிரதமரும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் உக்ரைன் விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற காணொளியினை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

http://athavannews.com/உக்ரேனிய-விமானத்தினை-ஈரா/

  • கருத்துக்கள உறவுகள்

“உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்” - இரான் ராணுவம் ஒப்புதல்

இரான்

உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரான்படத்தின் காப்புரிமைAFP

இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில்தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான் தற்போது முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று இரான் உறுதியளித்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலுள்ள குப்பைகள் இயந்திரத்தை கொண்டு அகற்றப்படுவது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானது.

இதன் மூலமாக, விமான விபத்து குறித்த முக்கிய ஆதாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. 

விழுந்து நொறுங்கிய விமானம்

உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஜனவரி 8ஆம் தேதி டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனீ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே விபத்துக்கு உள்ளானது.

விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பெரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது.

உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள் ஆவர்.

பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரிட்டானியர்கள் மற்றும் மூன்று ஜெர்மானியர்களும் இறந்தவர்களில் அடக்கம்.

https://www.bbc.com/tamil/global-51074214

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கேவலமான உலகம். நீயா நானா போட்டியில் ஒன்றுமே அப்பாவிகள் கொல்லப்படுகின்றார்கள்.  


இதே போல் உக்ரரைனும் சில வருடங்களுக்கு முன் ஒரு மலேசிய ஏர்லைன் பயணிகள் விமனத்தி சுட்டு வீழ்த்தியது. அநியாயமாக அத்கில் உள்ளவர்கள் இறந்து எல்லோரும் இறந்து போனார்கள்.

உறவை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாய் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....!   

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி இந்த விமானம் ஈரான் நாட்டு படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டது என்பதை ஈரான் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vanangaamudi said:

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி இந்த விமானம் ஈரான் நாட்டு படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டது என்பதை ஈரான் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது.

மேற்குலகில் ஈரான் மீதிருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
 
Flight 752 | பிந்திய செய்தி : எதிரியின் ஏவுகணை என நினைத்து ஈரானிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது!

 

இராணுவத்தின் தொடர்பு கருவி ‘ஜாம்’ (jam) செய்யப்பட்டிருந்ததனால் ஏற்பட்ட குழப்பமே காரணம்
Screen-Shot-2020-01-11-at-10.39.40-AM-35

ஈரானைத் தாக்க ஏவுகணையொன்று வந்துகொண்டிருக்கிறது என நினைத்து ஈரானின் ஏவுகணை இயக்கும் இராணுவத்தினர் ஒருவர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இராணுவமான இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனெரல் அமிர் அலி ஹாஜிசாடெ தெரிவித்திருக்கிறார்.

 

அவர் தொடர்புகொள்ளும் ரேடியோ சாதனம் ‘ஜாம்’ செய்யப்படிருந்தபடியால் கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் ஏவுகணை இயக்குனர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டிய சூழலில் அவர் அப்படிச் செய்திருக்கிறார் எனவும் 10 செக்கண்டுகளில் அவர் அந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது எனவும் ஹாஜிசாடே தெரிவித்தார்.

விமானம் திரும்பி வந்ததா?

அதே வேளை, விமான நிலையத்துக்கு அருகேயுள்ள பராண்ட் நகருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் அதை ஒரு ஏவுகணை தாக்கியது எனவும் ஆனால் விமானம் அப்போது வெடித்துச் சிதறவில்லை எனவும் அது தொடர்ந்து சில நிமிடங்கள் பறந்துவிட்டுப் பின்னர் விமான நிலையத்தை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்த வேளையில் எரிந்து பின்னர் வெடித்துச் சிதறியது எனவும் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வேளையில் விமானத்துக்கும் நிலக்கட்டுப்பாட்டுக்குமிடையில் ரேடியோ தொடர்புகள் ‘ஜாம்’ பண்ணுப்பட்டிருந்ததால் விமானிகளால் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிய வருகிறது.

 

கறுப்புப் பெட்டி

தற்போது கறுப்புப் பெட்டி யூக்கிரெயின் வசம் இருப்பதால் விரைவில் விமானிகளின் உரையாடல்களின் பதிவுகள் மூலம் மேலும் சில உண்மைகளை அறியக்கூடியதாகவிருக்கும்.

‘ஜாமிங்’ (Jamming) என்றால் என்ன?

‘ஜாமிங்’ (jamming) என்பது போர்க்களங்கள், படைத் தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில் இராணுவத்தினர் பாவிக்கும் சமிக்ஞைத் தடை (signal blocking). இது இரண்டு வகைப்படும். ஒன்று ‘எலெக்ட்றோனிக் ஜாமிங்க்’ (electronic jamming). இதன்போது இராணுவத்தினர் பிரத்தியேகமாகவும் இரகசியமாகவும் பேசிக்கொள்ளும் ரேடியோ அலைவரிசையில் எதிரிகள் வேண்டுமென்றே ‘இரைச்சலை’ (noise) அனுப்பிக் குழப்பும் (electronic jamming) நடைமுறை. இரண்டாவது, ரேடார் இயக்குனரின் சமிக்ஞைகளை வேண்டுமென்றே திருப்பி அனுப்புவதன் மூலம் (mechanical jamming) அவரைக் குழப்புவதும் இன்னுமொரு நடைமுறை. றேடார் என்பது அனுப்பப்படும் சமிக்ஞை (signal) ஒரு பொருளில் பட்டுத் தெறிப்பதைக் கொண்டு அப் பொருளின் நிலையை அல்லது நடமாட்டத்தை அறியும் முறை.

https://marumoli.com/flight-752-பிந்திய-செய்தி-எதிரியி/?fbclid=IwAR033aO0yEMHhnb4awZhnvXyokP5lanhECcsaW82NQCH1ilUxOxzpVEKcNQ

  • கருத்துக்கள உறவுகள்

இரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; தொடங்கியது கைது நடவடிக்கை

இரானில் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; பலர் கைதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிமான விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலனோர் இரான் மற்றும் கனடாவின் குடிமக்கள் ஆவர்.

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக இரான் நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது நடந்துவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதித் துறை செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். எனினும் அவர் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடக்கும் என்று இரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இந்த சோகமான சம்பவத்துக்கு ஏவுகணையை ஏவுவதற்கான பொத்தானை அழுத்திய ஒரு நபர் மீது மட்டும் குற்றம் சாட்டக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

"தங்கள் தவறை இரான் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது ஒரு நல்ல முதற்படி. இது போன்ற தவறுகள் மேற்கொண்டு நடக்காது," என்று ருஹானி உறுதியளித்துள்ளார்.

Iran plane downingபடத்தின் காப்புரிமைAFP Image captionவிபத்து நடந்த முதல் மூன்று நாட்களுக்கு தங்களுக்கும் விமான விபத்துக்கும் தொடர்பு இல்லை என்று இரான் அதிகாரிகள் கூறி வந்தனர்.

விமான விபத்தின் பின்னணி

ஜனவரி 8ஆம் தேதி, இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இரானில் சுடப்பட்ட உக்ரைன் விமானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிமானத்தை சுட்டு வீழ்த்திய இரான் படையினர் மீது நடவைடிக்கை கோரி இரானில் பெரும் போராட்டங்கள் நடந்தன.

தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.

மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது இரான்; இந்நிலையில் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டது.

https://www.bbc.com/tamil/global-51105753

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.