Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்

Featured Replies

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, tulpen said:

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 

ஈழத் தமிழர்களிடம் பண்பாடு இருப்பதாக நீங்களாக கற்பனை செய்துகொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

CAEEB493-CE74-4-C61-BF85-875-DDCBEF7-C2.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

நீங்கள் அடைய  விரும்பும் ஒரு விடையத்திற்கு / பொருளுக்கு  எப்போது தகுதியடைகிறீர்களோ அப்போது அது உங்களை வந்தடையும்  என்பதுதான் உளவியலின் அடிப்படை.

எங்களின் அழிவிற்கான அடிப்படை உளவியல் - நாம் விடுதலை  அடைவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்பதே.

இதுவே உண்மையும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 

கொஞ்ச நாட்களுக்கு முன் பாராளுமன்றில் நடந்ததை விட இது பரவாயில்லை.

பெரிய சபைக்கு பெரிய சண்டை.

சிறிய சபைக்கு சிறிய சண்டை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 
சந்தையில் உரக்க சத்தமிட்டு கதைப்பார்கள். சண்டை பிடிப்பதில்லையே. இவர்களோ குடித்துவிட்டு நிறைவெறியில் நிதானமின்றி நடப்பவர்கள் போலல்லவா நடந்துகொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 
அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

யாழ்கள நியானியெல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ...:cool:
யாழ்கள நிழலிதான் உவையளுக்கு சரிப்பட்டு வருவார்...🤔
நிழலி மட்டுறுத்தினால்  மாநகரசபை  மெம்பர்மார் அந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டினம் கண்டியளோ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, Kapithan said:

சந்தையில் உரக்க சத்தமிட்டு கதைப்பார்கள். சண்டை பிடிப்பதில்லையே. இவர்களோ குடித்துவிட்டு நிறைவெறியில் நிதானமின்றி நடப்பவர்கள் போலல்லவா நடந்துகொள்கிறார்கள்.

அவருக்கு நிறைவெறி போல தான் கிடக்கு...

49 minutes ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம்மவர் எந்த வித்ததில் திருந்தவில்லை என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அவருக்கு நிறைவெறி போல தான் கிடக்கு...

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம்மவர் எந்த வித்ததில் திருந்தவில்லை என நினைக்கின்றீர்கள்?

எந்த விடயங்களில் நாகரீகமடைந்திருக்கிறார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள் ?

இங்கிருந்து போனவர்களிடையே எவ்வித  மாற்றமும் ஏற்படவில்லை என்பது எனது துணிபு. இங்கிருந்து கொண்டுசென்ற முடை நாற்ரமடிக்கும் குப்பைகளை இன்னமும் காவித்திரிகிறார்கள் என்கிறேன்.

10 minutes ago, மாங்குயில் said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

உரிமைக்கும் நாகரீகம் அடைதல் இரண்டிற்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kapithan said:

உரிமைக்கும் நாகரீகம் அடைதல் இரண்டிற்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.

உண்மைதான்.

உரிமை வேறு, நாகரிகம் வேறு.

நாகரிகம் வளர்ச்சியடையும்போது,  மனிதனது உரிமைகள் அதிகரிக்கும்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, ரவுடித்தனம் மனிதனிடம் இருக்கிறது.

ரவுடித்தனம், சரியா, பிழையா என்பது வேறு விடயம்.

ஆனால், நம்மவர்களுக்கு ரவுடித்தனம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது என்பது யாழ் கள பதிவாளர்கள் எதிர்பார்ப்பு.

இவ்வாறான நிகழ்வுகளில் வாக்குவாதங்கள் சாதராணமானது ஆனால்  இந்த வாக்குவாதம் ஏன் என்று புரியவில்லை.

முகநூல் பற்றி ஏதோ பேசுகின்றார்கள்,  ராவணனின தோற்றம் என்கிறர் ஒருவர். கஞ:சா வக்கீல் காவாலி வக்கீல் என்கின்றார்கள். குலம் என்றால் சாதி என்கின்றார்கள். வெளியவா படிப்பிக்கிறன் என்கிறார்கள். எந்த பிரச்சனை குறித்து இந்த வாக்குவாதம் நடக்கின்றது ?

கிழக்கு பிரதேசசபை வடக்கை விட முன்னேறியுள்ளது. 

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

👍

1 hour ago, Kapithan said:

 இங்கிருந்து போனவர்களிடையே எவ்வித  மாற்றமும் ஏற்படவில்லை என்பது எனது துணிபு. இங்கிருந்து கொண்டுசென்ற முடை நாற்ரமடிக்கும் குப்பைகளை இன்னமும் காவித்திரிகிறார்கள் என்கிறேன்.

👍

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் முரண்பட்டுக் கொண்டனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் காலை சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரான ப.தர்சானந்த் தனது முகநூலில் சபை உறுப்பினர்கள் தொடர்பாக விமர்சித்து எழுதியமை குறித்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு சபையில் அது விவாதமாக மாறியது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான சொற்பிரயோகங்களை பயன்படுத்தினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்த் ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என கூறிய போது சபையில் கடும் வார்த்தை பிரயோகங்கள் நடைபெற்று குழப்பங்கள் ஏற்பட்டன.

‘நான் எனது முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக சபையில் கேள்வி கேட்க முடியாது. அந்த பதிவில் நான் யாருடைய பெயரையோ சாதியையோ குறிப்பிடவில்லை’ என கூறி தர்சானந்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. ரெமிடியஸ் தர்சானந்தின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பாருங்கள் அவர் பிறந்தது 1988, 89 களாக தான் இருக்க வேண்டும்.

அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தின் குர்காஸ் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்த கால பகுதி. நான் இராவண தோற்றமுடையவன். அவரிடம் திராவிட தோற்றமுண்டா? குர்காஸ் தோற்றமுடையவர்.’ என கூறினார். அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் என பல உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் கடும் கோபமுற்ற தர்சானந்த் வெளியே வாயா உனக்கு படிப்பிக்கிறேன். என ஒருமையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ரெமிடியஸினை விளித்து, இதான் நான் சொன்ன ‘குலத்தளவாம் குணம்’, ‘இவரொரு முட்டாள்.

இதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல்’ என கடுமையாக சட்டத்தரணி ரெமிடியஸினை நோக்கி தர்சானந்த் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட போது, ரெமிடியஸ், தர்சானந்த்தை நோக்கி தண்ணீர் போத்தலை வீச முற்பட்டார்.

இதனை அடுத்து ‘சபையின் மாண்பை நீங்கள் குறைத்து கொள்கின்றீர்கள். தயவு செய்து எல்லோரும் உட்காருங்கள்.’ என கூறி முதல்வர் ஆர்னோல்ட் ஒலிவாங்கியை நிறுத்தி வைத்தார்.

இதன் பின்னரும் உறுப்பினர்கள் வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டனர். ‘அமைதியாக இருக்காவிடின் எனது உத்தியோகஸ்தர்களை அழைத்து உங்களை சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன்’ என தர்க்கத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை முதல்வர் எச்சரித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சபை அமைதியானது.

https://www.ibctamil.com/srilanka/80/134848

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு  இழப்புகளின் பின்பும்....
இவர்கள் திருந்தவில்லை என்றால்... என்ன செய்வது?
அதில் ஒருவர் சட்டத்தரணியாம். வெட்கம் கெட்டவர்கள். 

எந்தக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்கள் என்று, யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி கொள்கைகளை மீறி மாநகர சபையில் செயற்பட்ட தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - கட்சி தலைவர் அறிவிப்பு

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.

mc_thar.PNG

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒற்றான புளொட் அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் மாநகர சபை உறுப்பினராக இருக்கின்ற தர்சானந் சபை அமர்வின் போது எமது கட்சியின் கோட்பாடுகள் கொள்ளைகளை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்.

ஆகையினால் இவருடைய அறிக்கைகள், பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் இவை அச் செயற்பாடுகள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொள்ளைகள் கோட்பாடுகளை மீறுகின்ற வகையிலான இத்தகைய செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.  அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சபையில் யாரேனும் எப்படியான ஆத்திரமூட்டும் சொல்லாடல்களைப் பாவித்திருந்தாலும் அதற்கு எதிராக எங்கள் கட்சிக் கொள்கைகளை மீறுகின்ற வகையில் செயற்படுவது அநாகரீகமானது என்பதுடன் எங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முரண்பட்ட விடயமாகவே பார்க்கிறோம்.

ஆகவே இவை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க இருக்கின்றோம். மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்சிக் கோட்பாடுகளை மீறுகின்ற கட்சிக் கொள்கைகளுக்கு முரணான சொல்லாடல்களைப் பாவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கட்சியில் இருக்கின்ற எவருமே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. ஆகையினால் தான  ;இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/73004

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மாங்குயில் said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

large.D40E7F12-6141-4521-AB5A-60DFAC1CE1BB.jpeg.0c218d3cb6a782267a4edcf5caf0c1c2.jpeg

யாழில் ஒரு திரி விடயத்தை இன்னொரு திரிக்கு காவக்கூடாதாம். பார்த்து சூதானமா நடங்க குருஜி😂

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎10‎/‎2020 at 4:20 AM, தமிழ் சிறி said:

இவ்வளவு  இழப்புகளின் பின்பும்....
இவர்கள் திருந்தவில்லை என்றால்... என்ன செய்வது?
அதில் ஒருவர் சட்டத்தரணியாம். வெட்கம் கெட்டவர்கள். 

எந்தக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்கள் என்று, யாருக்காவது தெரியுமா?

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 

இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

“ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன்”

January 11, 2020

Tharshananth.png?resize=800%2C386

ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன். அதனை யாரேனும் தவறாக பொருள்கோடல் செய்து மனம் வருத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானாந்த் தெரிவித்தார்.

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற போது , சாதி தொடர்பில் சபையில் பேசி முரண்பட்டுக்கொண்டார்கள் எனும் குற்றசாட்டு தொடர்பில் விளக்கமளிக்குமுகமாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனது முகநூலில் எனது தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்தேன். அதுவும் ஔவையாரின் மூதுரையையே பகிர்ந்தேன். அதில் சாதி , இனம் , மதம் என எதனையும் குறிப்பிட்டவில்லை. நான் பகிர்ந்த ஔவையாரின் மூதுரையை யாரேனும் தவறாக பொருள் கோடல் செய்து மனம் வருந்தி இருந்தாலோ அல்லது அதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

சபை அமர்வுகளில் தனிப்பட்ட விடயங்களோ அல்லது முகநூலில் எழும் விமர்சனங்கள் , முகநூல் பதிவுகள் தொடர்பில் பேச வேண்டாம் என யாழ்.மாநகர சபை முதல்வர் கடந்த அமர்வுகளிலையே பல தடவைகள் அறிவுறுத்தி இருந்தார். அதனையும் மீறி அன்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் முகநூல் பதிவு தொடர்பில் பிரஸ்தாபித்தனர். அதே பின்னர் கருத்து முரண்பாடாக மாறியது.

கருத்து முரண்பாட்டை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் என் மீது தண்ணீர் போத்தலால் தாக்க முற்பட்டார். அது சபை மாண்மை அவமதிக்கும் செயலாகும். குறித்த உறுப்பினர் கடந்த ஆட்சி காலத்தின் போதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அ. பரம்சோதி மீதும் இவ்வாறு அநாகரிகமாக தண்ணீர் போத்தலை வீசி உள்ளார்.

சபையில் குறித்த உறுப்பினர் சபை மாண்பை கெடுக்கும் முகமாக நடந்து கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் முதல்வரிடம் கோரியுள்ளேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன்.

இதேவேளை அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மாநகர சபையால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளக்கமும் கோரப்படவில்லை.

ஆனாலும் எனது கட்சியான புளெட்டின் தலைமை ஊடாக சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை எனது கட்சி தலைமையிடம் மிக விரைவில் கையளிப்பேன். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2020/136092/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 

இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

எங்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் அல்ல ஒன்பது முள்ளிவாய்க்கால் தேவை. அப்போதாவது நாங்கள் திருந்துவோமா தெரியாது.

கொள்ளையர் கும்பல்களும் தங்கள் சட்டவிரோத செயல்களை மறைக்க சாதியத்தை இழுப்பதை வழமையாகக் கொண்டுள்ளன.

அதைப் போலவே அரைவேக்காட்டு முற்போக்குவாதிகளும் அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் சாதியத்தை ஊதிப் பெருப்பித்து குளிர்காய்வது ஒன்றும் புதுமையில்லை.

இந்தக் கூத்துகளில் உண்மையான பிரச்சினை மறைக்கப்பட்டுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - தர்சானந்தன் 

நான் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு வார்த்தையையும் பதிவிடவில்லை ஒளவையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன். அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்மீது அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.சபையில் உள்ள ஒரு உறுப்பினர் திட்டமிட்ட வகையில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.தண்ணீர் போத்தலினால் தாக்குவது போன்ற செயலில் சபை மரபுகளை மீறி செயற்பட்டு வருகின்றார்.அவர் கடந்த சபை ஆட்சியிலும் இவ்வாறே செயற்படடார். என்பது மக்களுக்கு தெரியும்.எனவே யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் விளக்கமளித்த நினைக்கின்றேன்

எனது முகநூலில் எந்த ஒரு மதத்தையோ இனத்தையோ சாதியையோ தொடர்புபடுத்தி எவ்விதமான பதிவுகளையும் நான் போடவில்லை எனினும் மாநகர சபையில் உள்ள ஒரு உறுப்பினர் அதனை தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து என் மீது திட்டமிட்ட வகையில் பொய் கூறி வருகின்றார்.

நான் எனது முகநூலில்  ஔவையாரின் மூதுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டுமே பதிவிட்டு இருந்தேன் ஆனால் யாழ்ப்பாண மாநகர சபையின் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் மட்டும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டு இருந்தார்.கடந்த சில அமர்வுகளில் அந்த குறிப்பிட்ட சபை உறுப்பினர் சபை மரபுகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார்.அவரின் இவ்வாறான செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை விட அவரின் இந்த முட்டாள்த்தனமான செயற்பாடுகளுக்கு ஔவையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலை உதாரணம் காட்டி பொதுவான பதிவை முகநூலில் போட்டிருந்தேன்.

அதனை தனக்கு ஏற்ற போல் மாற்றி நான் சபையில் குறிப்பிடாத விடயத்தையோ அல்லது முகநூலில் குறிப்பிடாத விடயத்தை நான் கூறியதாக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.மக்களிடம் தங்களின் செல்வாக்கு எடுபடாத நிலையில் மதம்,சாதி போன்றவற்றை பிரச்சனையாக கிளப்பி மக்கள் மத்தியில் வங்குரோத்து அரசியல் செய்வதனூடாக தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன் அந்த உறுப்பினர் செயற்பட்டு வருகின்றார்

நான் எனது முகநூலில் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு பதிவையும் நான் பதிவிடவில்லை எனவே ஔவையாரின் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன் அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான்  மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கூறுவது போல நான் அவ்வாறான ஒரு ஜாதி பிரச்சினையோ அல்லது இனப்பிரச்சினையும் ஏற்படுத்தவில்லை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்ற வாக்குவாதம் வார்த்தை பிரயோகம் தொடர்பில் எனது கட்சியின் தலைமைப்பீடம் என்னிடம் விளக்கம் கோரியுள்ளது நான் அதற்கான விளக்கத்தை கட்சிக்கு நேர்மையாக உண்மையாக வழங்குவேன் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் எனது தரப்பு நியாயத்தையும் நான் எடுத்துக் கூறுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக் கொள்கின்றேன்.என்றார்.

https://www.virakesari.lk/article/73043

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.