Jump to content

Recommended Posts

Posted
25 minutes ago, nilmini said:

😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க  சோறு  சாப்பிட முடியாது. 

நன்றி. இது கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது .

இல்லாவிட்டால், இந்த நிலைமைக்குத்தான்  அடியேன் போயிருக்கவேண்டும் 🙂 

Image result for manorama eating chicken

  • Haha 1
  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, nilmini said:

பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின்  இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு

உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது.

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் ஒரு நல்ல பதிவு நில்மினி.

உங்கள் சேவை யாழுக்குத் தேவை👍🏿 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

Posted
23 hours ago, nilmini said:

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

நன்றி தெளிவுபடுத்தியமைக்கு.

ஆனால், தேநீர் இல்லை கோப்பியுடன் (அடிக்கடி) குடித்தால் கெடுதியானதாக இருக்குமா? 

12 minutes ago, nilmini said:

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

,peanut பட்டர் - ஒப்பீட்டளவில் கனடாவில் மலிவாக கிடைக்ககூடியது.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   Agave nectar குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

Edited by nilmini
  • Thanks 1
Posted
11 minutes ago, nilmini said:

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

நன்றி சகோதரி. இவ்வளவு நாளும் எனது பார்வை இதற்கு மாறாக இருந்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

Posted
On 11 mars 2020 at 5:33 AM, தமிழ் சிறி said:

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, இணையவன் said:

தமிழ்சிறியின் பதிவு கண்ணில் பட்டதா அல்லது ரதியின் பதிவு கண்ணில் பட்டதா :39_angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நன்றாக சாப்பிடுங்கள்.
நேரம் போட்டு கயிறடியுங்கள்.

  • Like 1
  • Thanks 1
Posted
1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

சரி. இது உங்களுக்கன பதில்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் அவரது நடவடிக்கைகளையும் பொறுத்து ஒரு நாளைக்கு இத்தனை கலோரி சக்தி தேவைப்படும் என்ற நிர்ணயம் உண்டு. நிர்னயிக்கப்பட்ட கலோரியின் அளவை மட்டும் சாப்பாட்டின் மூலம் உடலுக்குக் கொடுத்தால் உடல் நிறை மாறாது. அதற்கு மேலான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமான கலோரிகளை உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக் கொள்ளும். அதாவது உடல் நிறை அதிகரிக்கும். தேவையான அளவுக்குக் குறைவான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமாகத் தேவைப்படும் சக்தியைப் பெறுவதற்காக உடல் தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும். உடல் நிறை குறையும். ஜிம்முக்குப் போகத் தேவையில்லை. 

இது மிகச் சாதாரணமான சமன்பாடு. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் பருமன் கூடுவது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதற்கான காரணங்கள் பல உண்டு.

உடற்பயிற்சி செய்தால் நாளாந்தம் தேவையான கலோரிகளின் அளவு அதிகரிக்கும். வழமையாகச் சாப்பிடுவதைக் குறைக்காமலே மெலியலாம்.

அதிகமாகச் சாப்பிடாமலே உடம்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களின் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பதை அறியாமலே ஏராளமான கலோரிகளை உட்கொள்கிறார்கள். கொழுப்பு மட்டும் உடல் பருமனைக் கூட்டுகிறது என்பது தவறான கருத்து. கொழுப்பு உடலுக்கு இன்றியமையாத ஒன்று. கொழுப்பு இல்லாமல் உடல் இயங்க முடியாது. இதனால்தால் உடலுக்குத் தேவையான 70 வீதமான கொலஸ்ரோலினை உடலே உருவாக்கிக் கொள்கிறது.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

Edited by nilmini
text
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, nilmini said:

ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தவறாது கடைப்படித்து எடையை விரும்பியளவு 2017 இல் குறைத்திருந்தேன். ஒரு நிகழ்வுக்குப் போனபோது வந்திருந்த அக்கா ஏதாவது வருத்தமா என்று கேட்டு கடுப்பேத்திவிட்டா😖

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல பதில்கள் நில்மினி நன்றி

என்னிடம் சில கேள்விகள் உள்ளன‌

நான் 2018 அக்டோபருக்கு பிறகு சடுதியாட மிக மெலிந்து கொண்டு எடை குறைந்து போனேன்.
6 மாதத்திற்கு இடையில் 8 கிலோ அளவில், அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் கேள்வி கேட்பார்கள்? எங்கும் போகமுடியவில்லலை ஒரே மன அழுத்தமாக இருந்தது. நான் நினத்தேன் எனக்கு எதேனும் சீரியசான நோய் உள்ளது என்று. பின்பு நான் வைத்தியசாலைக்கு சென்றபோது எனப்படும் IV contrast ஒரு மருந்தை கை நரம்பில் செலுத்தி  உடலை scan செய்து பார்த்தார்கள் எந்தவித tumar ம் இல்லை. பின்பு நானே அமர்ந்து யோசித்தபோது ஒரு உண்மை புலப்பட்டது.

இரத்த அழுத்தத்திற்கு எனக்கு ஒரு வித மருந்தை குடிக்க தந்த போது அத்துடன் புதிதாக diuretics (water pills) கொடுத்திருந்தார்கள் 9 மாதங்கள் நானிதை குடித்துள்ளேன் இது உடலிலுள்ள நீரை உறிந்து வெளியேற்றியுள்ளது இதனால் உடலில் உள்ள எல்லா வித கனியுப்ப்க்களும் உறிஞப்பட்டு உடல் பலவீனமடந்துள்ளது. இந்த மருந்து உண்மையில் இரத்த அழுத்தத்தை விட உடலில் உள்ள மேலதிக நீரை உறிஞ்சவே இதை கொடுப்பார்கள். (water retention)
 
இதை நிறுத்தி 8 மாதங்களகி விட்டது. ஆனல் மறுபடி எடையை கூட்ட முடியவில்லை. 

 என்னுடயே கேள்விகள் 

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 
2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?
3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.
4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்ப‌டுமா?  
5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?
7. உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 

2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?

Water pills உடலில் அநாவசியமாக தேங்கி நிற்கும் நீரை அகற்றி உயர் குருதி அழுத்தத்தை குறைக்கும்.எமக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது மிகவும் உப்பு கூட பாவித்தால் அநாவசிய நீர் தேங்கும். அல்லது அது சிறுநீர், வியர்வை , சுவாசம் மற்றும் தோலினூடாக வெளியேறி விடும். அதனால் மருத்துவர் சொன்னாலே ஒழிய நாங்களாக water pills எடுக்க கூடாது. நீர் உடலை விட்டு நீக்கப்படும் போது பல எலெக்ட்ரோலைட்  கள் (முக்கியமாக நரம்புக்கும் தசைக்கும் இயக்கத்துக்கு தேவையான சோடியம்  மற்றும் பொட்டாசியம், கல்சியம்) என்பனவும்  அகற்றப்படுவதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்.

எமது உடல் 60% நீரால் ஆனது. அந்த நீர் எமது கலங்களுக்குள் , குருதியில் மற்றும் கலங்களுக்கு இடையில் ஒரு விகித அடிப்படியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விகித அளவு மாறினால் நோய் ஏற்படும். அதனால் water tablets மருந்தாக மட்டுமே பாவிக்க வேண்டும். அதனால் ஏற்படும் நிறை குறைவு தற்காலிகமானது . அத்துடன் ஆபத்தானது . மெலிவதற்கு இந்த மருந்தை பரிந்துரைக்கும் வைத்தியர்களை என்ன சொல்வது?

உங்கள் கேள்விகளுக்கு ஒன்றொன்றாக பதில் எழுதுகிறேன்

Edited by nilmini
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.

கன்னங்களில் சின்ன சின்ன தசைகள் அவற்றின் வேலையை செய்வதுக்கு இருக்கிறது ( முக பாவனை, உணவு உண்ணல் , சிரிப்பு, கோபம், அதிருப்தி போன்றவை) கன்னங்கள் உப்பி உள்ளவர்களுக்கு கொழுப்பு சேகரிப்பு அதிகம். முழங்கை பின்னால் கொழுப்பு சேர்வது குறைவு (மிகபருமனான ஆட்களுக்கு இருக்கும்). மெலிவது என்றால் இந்த சேகரித்த கொழுப்புகளை அகற்றுவது தான். கொழுப்பு தசைகளையும், உடல் உறுப்புகளையும் முக்கியமாக வயிற்று பகுதிகளில் நிறைய சேரும். வயிறு வைப்பதற்கு காரணம் Omantum எனப்படும் ஒரு தலையணை போன்ற ஒரு கவசம். அதை குறைப்பதற்கு வயிற்று தசைகளை வேலை செய்ய வேண்டும் (நடை பயிற்சி, push-ups போன்றவை). மற்றப்படி எமது தசைகளில் இருக்கும் புரதம் உடல்  பயிற்சியால்  அல்லது கடும் gym பயிற்சியால் கூடுமே தவிர குறையாது. நீரிழிவு நோய்  உள்ளவர்களுக்கு இது கொஞ்சம் கரையும். அது நல்லதல்ல. இன்சுலினை உழுங்காக எடுத்து மாச்சத்து /சீனி சத்தை பாவிக்கவேணுமே அன்றி தசைகளில் உள்ள புரதத்தை உடைக்கக்கூடாது. நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். 

உடல் பருமன் கூடிய குறைந்த Omantum  ( சிறு பெருங்குடலை போர்த்தி இருக்கும் )

fat.pngslim.jpg

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

எனவே உங்கள் மெலிவுக்கு வேறு காரணம் ஏதும் இருக்கலாம்.  நல்ல protein, fat  நிறைந்த உணவுகளை காய் கறி , பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.பசுப்பாலை தவிர்க்கவும். ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடாமல் பல்வகையான உணவுகளை சாப்பிடவும். அதையும் மீறி மெலிந்தால் ஏதாவது வைரஸ் , parasite infection இருக்கா என்று பார்க்கவேண்டும். அதிகம் கவலை பட்டாலும் உடல் மெலியும். Hyper Thyrodism , உணவுக்குழாய் அழற்சி போன்றவையம் காரணமாக இருக்கலாம்.

Hyper Thyrodism போன்ற காரணங்களால் metabolism அதிகரித்து உடல் மெலியும் 

Edited by nilmini
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடல் பருமன் கூடியவருக்கும் குறைந்தவர்க்கும் Omantum அளவு மாறுபடும். எஞ்சிய கொழுப்பு எல்லாம் இதில் தான்  அதிகமாக சேமிக்கப்படும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, nilmini said:

சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

சர்க்கரை நோய்க்கு சொத்தை பற்களுக்கும் தொடர்பு உண்டா.? வரிசை வரிசையாக வந்து கொண்டே இருப்பதால் கேட்கிறேன்.. அடிக்கடி சிறு நீர் கழிக்க நினைப்பதற்கும் தொடர்பு உண்டா.? 😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎3‎/‎14‎/‎2020 at 1:08 AM, nilmini said:

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

முதல் முதல் பாண் சாப்பிடுறது நல்லது என்று சொன்ன ஆள் நீங்கள் தான் ...நான் இங்கே வந்ததில் இருந்து பேக்கரி பாண் சாப்பிடுறது[அது தான் ஓரளவுக்கு சாப்பிட கூடியதாய் இருக்கும்]...சிலர் பாண் சாப்பிடுவது கூடாது என்பதால்  நிப்பாட்டி இருந்தேன் ..நான் ஊரிலேயே பசுப்பால் குடிப்பதில்லை...இங்கே பால்மா டின் தான் பாவிப்பது ஆனால் காலமை ஒரு நேரம் கோப்பி மட்டும் மா கலந்து குடிப்பது ...பின்னேரம் பிளேன் ரீ  மற்றும் இடையில் கிறீன் ரீ குடிக்கிறது ...எப்பாலும் இருந்திட்டு தான் சோறு சாப்பிடுவது ...பெரும்பாலும் தானியங்களில் தான் சோறு சமைப்பது ..கறி தான் தட்டில் கூடவாய் இருக்கும் 
இந்த வருசம் இன்னும் நடக்க தொடங்கவில்லை ...ஆனால் 4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை [ சில நேரம் விரைவாய் நடக்கவில்லையோ தெரியவில்லை ]...என்ட பிரண்ஸ் எல்லோரும் நக்கலடிக்கினம் நடந்தும் உடம்பு குறையவில்லை என்றுtw_cry: ...பரம்பரை காரணமாய் இருக்குமோ?

குளிர்பானங்கள் குடிப்பதில்லை ஆனால் சொக்கிலேட்டுகள்,கேக்குகள் ....விருப்பம் ,கிரிப்ஸ் போன்ற ஜங் பூட் தான் விரும்பி சாப்பிடுறது ...இப்ப கொஞ்சம்,கொஞ்சமாய் இவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு வாறன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/15/2020 at 2:50 PM, nilmini said:

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

கட்டுப்படுத்தாத diabetes இருந்தும் உடல் மெலிவு ஏற்படாமைக்கு ஏதும் காரணம் இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரதி said:

4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை

Yikes Smile GIF - Yikes Smile Sarcastic GIFs

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி எடுக்கும்போது உடல் கலங்கள் நிறைய குளுக்கோஸை உறிஞ்சி எடை அதிகரிக்கும். பிறகு ஒழுங்காக மருந்து எடுக்காட்டி  நிச்சயம் மெலிவர். மாச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டாம். வேளைக்கு சாப்பிடவும். விரதம் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் டயபடீஸ் க்கு  கூடாது 

Edited by nilmini
text
  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.