Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோரோனோ - நெருங்கும் பேராபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை 5.40  மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

எனது தனிப்பட்ட  நிறுவனத்தின் கணக்காளர்.  ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன்.

சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன்.

அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன்.

நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார்.

உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. 

இரண்டு கிழமையாக இங்கே இருக்கிறேன் என்றார். அபாயக்கட்டம் தாண்டி விட்டார், அதுதான் போன் பண்ணி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே, 'என்ன, இரண்டு கிழமையாகவா.... என்ன நடந்தது' என்றேன்.

அவரது அலுவலகத்தில் ஒரு உதவி கணக்காளராக ஒருவர் வேலை செய்கின்றார். அவர் வார இறுதி நாட்களில் யூபெர் டிரைவர் ஆக வேலை செய்கிறாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு திங்கள் காலை, அவர் மெல்லிய காச்சல், தடிமலுடன், முக்கியமான வேலை ஒன்றினை முடித்துக் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறார். காச்சல் என்றால் ஏன் வந்தீர் என்று அவரை அனுப்பிவிட்டு, இவர் வேலையில் மூழ்கி இருக்க,  சரியாக இரண்டு மணி நேரத்தில், இவருக்கு உடல் மாறுதல் தெரிய தொடங்கி இருக்கிறது.

65 வயதான, இதய bypass அறுவை சிகிச்சை செய்த, நீரிழிவு நோயும் கொண்டவராகையால், உடனடியாக வீடு சென்று இருக்கிறார். வீடு போனவுடன் நடுக்கம் தொடங்கி இருக்கிறது.

டாக்டர் மகன், கொரோனா பயத்தில், வீட்டில் இருந்து இருக்கிறார். தகப்பனை சோதித்த மகன், பிராணவாயு அளவு குறைவதை அவதானித்து, உடனே 999 அழைத்து இருக்கின்றார்.

அவர்கள் வந்து அவரை பரிசீலித்து, கோரோனோ வைரசு என சந்தேகிப்பதாக சொல்லி, அழைத்து சென்று விட்டனர். சரியாக இரு மணிநேரத்தில், அவரது மகனும், மனைவியும் அதே நடுக்கத்தில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவார தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் இருவரையும் வீடு திரும்பி விட்டனர். இவர் நேற்று வருவதாக இருந்து, மீண்டும் பிராணவாயு அளவு குறைந்ததால் மொனிட்டர் பண்ணுகிறார்கள். 

மூவரும், சரியான நேரத்தில் வைத்தியசாலை சென்றதால் தப்பி விட்டதாக கூறுகின்றார்.

அந்த  உதவி கணக்காளர் நிலை என்ன என்று கேட்டேன்... இங்கேதான் பக்கத்து கட்டிலில் படுத்திருக்கிறார் .... அவரும் தப்பி விட்டார் என்கிறார்.

அலுவலகத்தில் இருந்த இன்னுமொரு இளைஞருக்கு வரவில்லை. அவருக்கு immune system ஸ்ட்ரோங் போல உள்ளது என்று சொல்லி லேசாக சிரித்தார். அந்த  உதவி கணக்காளர் ஞாயிறு இரவு நோய் தொற்றுதலுக்கு ஆளாகி உள்ளார் போலுள்ளது. காலை வேலைக்கு போகும் மனைவியை தொந்தரவு செய்யக் கூடாது என வேறு அறையில் படுத்துள்ளார்.

காலையில் கிளம்பி மனைவி வேலைக்கு சென்றுவிடடார். இவர்  பின்னர் கிளம்பி, காச்சல் குணத்துடன் வேலைக்கு போய் கொடுத்து விட்டு வந்து விட்டார்.

ஆஸ்பத்திரியில் இருந்து, மனைவிக்கு, வீட்டுக்கு உடனே செல்லவேண்டாம் என்றும், குறித்த சில மணிநேரம் கழித்தே செல்லுமாறும் சொல்லப்பட்டுள்ளது.

ஆக, கோரோனோ கொலைவெறியுடன் திரிகிறது.... நெருங்கி வரும் பேராபத்தில் இருந்து முடிந்த வரைவிலகி கவனமாக இருப்போம்...

அதவேளை அவர் ஒன்றையும் சொன்னார். தான் இரண்டு வாரம் தாக்குப் பிடித்ததால், பயப்படவேண்டாம்... வந்தாலும் மனஉறுதியினை இழக்காமல் போராடவேண்டும் என்றார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

2 கிழமைக்கு முதல் என்றபடியால் முறையான மருத்துவம் கிடைத்திருக்கிறது.
   இதுவே இன்றைய நிலை என்றால் முழு மருத்துவம் பெறுவது மிகவும் கஸ்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

2 கிழமைக்கு முதல் என்றபடியால் முறையான மருத்துவம் கிடைத்திருக்கிறது.
   இதுவே இன்றைய நிலை என்றால் முழு மருத்துவம் பெறுவது மிகவும் கஸ்டம்.

நேற்று இரவு பக்கத்தில், இரு திசைகளில் இருக்கும் இரண்டு வைத்தியசாலைகளில் மட்டும் 24 இறப்புக்கள்.

முன்னாள் சுகாதார அமைச்சர் இன்று பேட்டியில் சொல்கிறார். இன்று முதல் வீட்டில் இருக்க சொல்லி அரசு கூறியது தாமதமாயினும், அவ்வாறு செய்யாவிடில், இது பரவும் வேகத்தில், அடுத்தவாரம் இதே வேளை, 10 லட்ச்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் என்கிறார்.

பீதியை கிளப்புறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனியர் இப்படி கிளப்பிறீர்கள்....

வெள்ளிக்கிழமையிலிருந்து வீட்டிலே முடக்கம்... இனி இருக்கேலாது வெளியால எட்டிப்பாக்கலாம் என்டால் .......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவரது அலுவலகத்தில் ஒரு உதவி கணக்காளராக ஒருவர் வேலை செய்கின்றார். அவர் வார இறுதி நாட்களில் யூபெர் டிரைவர் ஆக வேலை செய்கிறாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு திங்கள் காலை, அவர் மெல்லிய காச்சல், தடிமலுடன், முக்கியமான வேலை ஒன்றினை முடித்துக் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறார். காச்சல் என்றால் ஏன் வந்தீர் என்று அவரை அனுப்பிவிட்டு, இவர் வேலையில் மூழ்கி இருக்க,  சரியாக இரண்டு மணி நேரத்தில், இவருக்கு உடல் மாறுதல் தெரிய தொடங்கி இருக்கிறது.

அலுவலகத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவரை....
கொரோனா... தேடி வந்திருக்கு. 😲

எந்த வகையில் எல்லாம்.... இது நம்மை பாதிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்.
இவற்றை வாசிக்க, மனதில் பயம் ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாகாமுனி ஜ‌யா / கொரோனாவாள் ப‌ய‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் இல்லாம‌ இருக்கு ம‌ருந்து இருக்குது / 

கொரோனா என்றால் யாருக்கு தான் ப‌ய‌ம் ந‌டுக்க‌ம் வ‌ராம‌ல் இருக்கும் / 

இர‌ண்டு வைக்யான‌ குளுசை இருக்கு ப‌ய‌ம் இல்லாம‌ இருக்க‌ , அந்த‌ குளுசை க‌ஞ்சா என்ற‌ போதை பொருளில் தயாரிக்கின‌ம் / ம‌ருத்துவ‌ர் பாம‌சிக்கு ம‌ருந்து குடுக்க‌ சொல்லி எழுதி இருந்தா தான் ம‌ருந்து கிடைக்கும்  

5 hours ago, தமிழ் சிறி said:

அலுவலகத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவரை....
கொரோனா... தேடி வந்திருக்கு. 😲

எந்த வகையில் எல்லாம்.... இது நம்மை பாதிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்.
இவற்றை வாசிக்க, மனதில் பயம் ஏற்படுகின்றது.

த‌மிழ் சிறி அண்ணா இப்ப‌ தான் நாங்க‌ள் துணிவாய் இருக்கிற‌ நேர‌ம் , ப‌ய‌ப்பிட‌ பிடாது , கொரோனா வ‌ந்தா எதிர் நீச்ச‌ல் நாங்க‌ள் க‌ண்டிப்பாய் போட்டால் தான் அதில் இருந்து மீண்டு வ‌ர்லாம் , ப‌ய‌ப்பிட்டா இதைய‌ துடிப்பு கூடிடும் , க‌வ‌லைய‌ விடுங்கோ ந‌ல்ல‌தையே யோசிப்போம் 🤞

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் சிரிச்சு கதைச்சாலும்....
அடி மனதில் திக் என்ற பயம்சுழன்றுகொண்டேயிருக்கின்றது. கொரொனா தொற்றிக்கொண்டிருக்கும் வேகத்தை பார்த்தால் நித்திரையே வரமாட்டன் என்கிறது.
நாதமுனியில் தகவலை பார்த்தால் யாருக்கும் எப்போதும் எந்தநேரத்திலும் வரலாம்  என்ற அச்சம் பேயாய் சதிராடுது.
இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் கோரோனா ஒரு தலையிடி.
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

2 கிழமைக்கு முதல் என்றபடியால் முறையான மருத்துவம் கிடைத்திருக்கிறது.
   இதுவே இன்றைய நிலை என்றால் முழு மருத்துவம் பெறுவது மிகவும் கஸ்டம்.

நீஙகள் இப்போதும் கலிபோர்னியாவில்தான் நிற்கிறீர்களா?
அல்லது வீடு திரும்பி விடீர்களா?
நியூ யோர்கில் வேகமாக பரவுகிறது 
கூடுதல் கவனமாக இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரச்சனையே அதிகப்படியான நோயாளர்களை கவனிப்பதுதான் வரும் வாரம் மட்டும் ஓரளவுக்கு சமாளிப்பினம் முன்னுக்கு கொரனோ  தொற்றுபவர்கள் ஓரளவு குடுத்துவைத்தவர்கள் நாள் செல்ல தொற்று வீதம் அதிகமாகும்போதுதான் நிலவரம் கலவரமாகிவிடும் அந்த காலகட்டத்தில் இறப்பவர்கள் நிலை இன்னும் பரிதாபகரமானது எந்த சமய அனுட்டானமும் இன்றி நூறோடு ஒன்றாக போய் சேரவேண்டியதுதான் செத்த வீட்டு  சிலவு இல்லை எனவே கள  உறவுகள் குறைந்தது மூன்று கிழமை தன்னும் வீட்டில் இருப்பது நல்லது .

அந்த மூன்று கிழமையும் யாழில் மட்டுக்கள்  தங்கள் கத்திக்கு  ஓய்வு குடுத்தால்  நல்லது .😃

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கொலை வெறியோடு திரியுது.நானும் அவளும்  இப்ப ஒரு வாரமாய் வீட்டுக்குள்தான் இருக்கிறோம்.நினைக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.பிள்ளைகள் எல்லாம் தூரத்தூர இருக்கினம். யாழும் போனும்தான் ஆறுதல்......!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

பிள்ளைகள் எல்லாம் தூரத்தூர இருக்கினம்.

வெளியுலக தொடர்பு இல்லாத போது  ஏன் தள்ளி தள்ளி இருக்கினம் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

வெளியுலக தொடர்பு இல்லாத போது  ஏன் தள்ளி தள்ளி இருக்கினம் ?

எல்லோரும் வேலைகள், அவர்கள் தங்கள் தங்கள் அறைகளில் இருந்து செய்கின்றனர்......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, பெருமாள் said:

வெளியுலக தொடர்பு இல்லாத போது  ஏன் தள்ளி தள்ளி இருக்கினம் ?

Just now, suvy said:

எல்லோரும் வேலைகள், அவர்கள் தங்கள் தங்கள் அறைகளில் இருந்து செய்கின்றனர்......!

இருந்தாலும் பாருங்கோ வீட்டிலை இருந்து வேலை செய்யிறதாலை இப்பிடியான சோலியளும் வந்து போகும்.
வலுகவனமாய் இருக்க வேணும்.
இஞ்சாரும் உப்பு கணக்கோ  பாருமப்பா  எண்டு வாழ்க்கைப்பட்டவர் கறிச்சட்டியோடை லைவ்விலை வராதவரைக்கும் சந்தோசம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அந்த மூன்று கிழமையும் யாழில் மட்டுக்கள்  தங்கள் கத்திக்கு  ஓய்வு குடுத்தால்  நல்லது .😃

நீங்க வேற.... அவர்களுக்கும் பொழுது போகணுமே.......

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இன்று மாலை 5.40  மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

எனது தனிப்பட்ட  நிறுவனத்தின் கணக்காளர்.  ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன்.

சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன்.

அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன்.

நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார்.

உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. 

இரண்டு கிழமையாக இங்கே இருக்கிறேன் என்றார். அபாயக்கட்டம் தாண்டி விட்டார், அதுதான் போன் பண்ணி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே, 'என்ன, இரண்டு கிழமையாகவா.... என்ன நடந்தது' என்றேன்.

அவரது அலுவலகத்தில் ஒரு உதவி கணக்காளராக ஒருவர் வேலை செய்கின்றார். அவர் வார இறுதி நாட்களில் யூபெர் டிரைவர் ஆக வேலை செய்கிறாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு திங்கள் காலை, அவர் மெல்லிய காச்சல், தடிமலுடன், முக்கியமான வேலை ஒன்றினை முடித்துக் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறார். காச்சல் என்றால் ஏன் வந்தீர் என்று அவரை அனுப்பிவிட்டு, இவர் வேலையில் மூழ்கி இருக்க,  சரியாக இரண்டு மணி நேரத்தில், இவருக்கு உடல் மாறுதல் தெரிய தொடங்கி இருக்கிறது.

65 வயதான, இதய bypass அறுவை சிகிச்சை செய்த, நீரிழிவு நோயும் கொண்டவராகையால், உடனடியாக வீடு சென்று இருக்கிறார். வீடு போனவுடன் நடுக்கம் தொடங்கி இருக்கிறது.

டாக்டர் மகன், கொரோனா பயத்தில், வீட்டில் இருந்து இருக்கிறார். தகப்பனை சோதித்த மகன், பிராணவாயு அளவு குறைவதை அவதானித்து, உடனே 999 அழைத்து இருக்கின்றார்.

அவர்கள் வந்து அவரை பரிசீலித்து, கோரோனோ வைரசு என சந்தேகிப்பதாக சொல்லி, அழைத்து சென்று விட்டனர். சரியாக இரு மணிநேரத்தில், அவரது மகனும், மனைவியும் அதே நடுக்கத்தில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவார தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் இருவரையும் வீடு திரும்பி விட்டனர். இவர் நேற்று வருவதாக இருந்து, மீண்டும் பிராணவாயு அளவு குறைந்ததால் மொனிட்டர் பண்ணுகிறார்கள். 

மூவரும், சரியான நேரத்தில் வைத்தியசாலை சென்றதால் தப்பி விட்டதாக கூறுகின்றார்.

அந்த  உதவி கணக்காளர் நிலை என்ன என்று கேட்டேன்... இங்கேதான் பக்கத்து கட்டிலில் படுத்திருக்கிறார் .... அவரும் தப்பி விட்டார் என்கிறார்.

அலுவலகத்தில் இருந்த இன்னுமொரு இளைஞருக்கு வரவில்லை. அவருக்கு immune system ஸ்ட்ரோங் போல உள்ளது என்று சொல்லி லேசாக சிரித்தார். அந்த  உதவி கணக்காளர் ஞாயிறு இரவு நோய் தொற்றுதலுக்கு ஆளாகி உள்ளார் போலுள்ளது. காலை வேலைக்கு போகும் மனைவியை தொந்தரவு செய்யக் கூடாது என வேறு அறையில் படுத்துள்ளார்.

காலையில் கிளம்பி மனைவி வேலைக்கு சென்றுவிடடார். இவர்  பின்னர் கிளம்பி, காச்சல் குணத்துடன் வேலைக்கு போய் கொடுத்து விட்டு வந்து விட்டார்.

ஆஸ்பத்திரியில் இருந்து, மனைவிக்கு, வீட்டுக்கு உடனே செல்லவேண்டாம் என்றும், குறித்த சில மணிநேரம் கழித்தே செல்லுமாறும் சொல்லப்பட்டுள்ளது.

ஆக, கோரோனோ கொலைவெறியுடன் திரிகிறது.... நெருங்கி வரும் பேராபத்தில் இருந்து முடிந்த வரைவிலகி கவனமாக இருப்போம்...

அதவேளை அவர் ஒன்றையும் சொன்னார். தான் இரண்டு வாரம் தாக்குப் பிடித்ததால், பயப்படவேண்டாம்... வந்தாலும் மனஉறுதியினை இழக்காமல் போராடவேண்டும் என்றார்.

நாளைக்கு  எனக்கு என்ன வரும் என்று தெரியாது ...ஆனால் இவரது மகன் டொக்ரருக்கு படித்து என்ன புண்ணியம் ...அந்த வாய்ப்பை இன்னொருவருக்கு வழங்கி இருந்தால் ,இந்த அவசரமான நேரத்தில் சேவை செய்திருப்பார்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரி பத்து மணிக்கு நண்பர் ஒருவர் கன காலத்திற்குப் பின்னர் போனடித்தான். என்னடா நேரம்கெட்ட நேரத்தில் அடிக்கிறான் என்று போனை எடுத்தால் தனது லாப்ரொப் வேலை செய்யவில்லை. பார்க்கமுடியுமா என்று கேட்டான். என்ன மாதிரியான பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே கதையோடு கதையாக lockdown இல் வேலைக்கு போகிறாயா என்று கேட்டேன்.

தான் மூன்று கிழமை லீவில் நிற்பதாகச் சொன்னான். மகன் ஒரு வாரத்திற்கு முன்னர் காய்ச்சல், இருமலோடு அவதிப்பட்டு அது தனக்கும் தொத்திவிட்டது என்று சொன்னான். இப்ப இதுக்கெல்லாம் சுயதனிமைப்படுத்தலில் போகவேண்டுமல்லவா. அதனால் கொம்பனி மூன்று கிழமைக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தது. இன்னும் ஒரு வாரம் தாண்டவில்லை, ஆனால் லாப்ரொப் திருத்த வரப்போகின்றேன் என்றால் என்ன செய்யமுடியும்?

நான் கதையை மாத்தி இன்னும் மூன்று கிழமைக்கு பிறகு வா என்று சொல்லியுள்ளேன்😎 சும்மா எழுப்பம் காட்டி ஏன் கொரோனா சீதேவியை நெஞ்சில சுமக்கவேண்டும்!😬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாளைக்கு  எனக்கு என்ன வரும் என்று தெரியாது ...ஆனால் இவரது மகன் டொக்ரருக்கு படித்து என்ன புண்ணியம் ...அந்த வாய்ப்பை இன்னொருவருக்கு வழங்கி இருந்தால் ,இந்த அவசரமான நேரத்தில் சேவை செய்திருப்பார்கள் 
 
என்ன சொல்கிறீர்கள்?

அவரது 31 வயது மகன் Moorfields Eye Hospital கண் சிகிச்சை நிபுணர். இப்போது அவருக்கான தேவையில்லை என்பதால் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்.

அவர் சோதித்து, 999 கால் பண்ணி இராவிடில், இவர் மல்லி தண்ணி, பரிசிடமோல் என்று நேரத்தினை கடத்தி, ஆபத்தினுள் சிக்கி இருப்பார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

ஆனால் லாப்ரொப் திருத்த வரப்போகின்றேன் என்றால் என்ன செய்யமுடியும்?

இந்த நேரம் வரப்போறன் என்று அடம்பிடிப்பவர் சுய நலமி யாக இருக்கணும் அவருக்கு இங்கும் காய்ச்சல் இருமல் கொஞ்சம் பார்த்து வாங்க என்று மட்டும் சொல்லிவிடுங்க போன் கூட தேடி எடுக்கமாட்டார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Nathamuni said:

என்ன சொல்கிறீர்கள்?

அவரது 31 வயது மகன் Moorfields Eye Hospital கண் சிகிச்சை நிபுணர். இப்போது அவருக்கான தேவையில்லை என்பதால் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்.

நீங்கள் முதல்  மோன்காரன் கண் டாக்குத்தர் எண்டு ஒரு இடத்திலையும் சொல்லேல்லை.சும்மா தேவையில்லாமல் தங்கச்சியை குழப்பக்கூடாது 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் முதல்  மோன்காரன் கண் டாக்குத்தர் எண்டு ஒரு இடத்திலையும் சொல்லேல்லை.சும்மா தேவையில்லாமல் தங்கச்சியை குழப்பக்கூடாது 😎

😁

அதில்லை விசயம்....

போன மார்கழி மாதத்தில் இருந்து கோரோனோ எண்டு ஊர் முழுக்க கத்துக்கிணம்.

உந்த அக்கவுண்டன், ஒரு நிறுவனம் நடத்திறார்.... அங்க வேலை செய்யிற எல்லாரிண்டையும் பாதுகாப்பினை கவனத்தில் எடுத்து, யாருக்கேன், தடிமன், காச்சல், இருமல் இருந்தால் இந்தப்பக்கம் தலையும் வைச்சு படுக்காதீங்கோ, வந்தால் வேலை காலி.. எண்டெல்லோ சொல்லி இருக்க வேண்டும்.

தாரில பிழை எண்டதை அக்கா விளங்காமால், அந்த கண் டாக்குத்தரை பிழை சொல்லுறாவே.. 

எனக்கு அந்தாளிலில் தான் எரிச்சல்.... இப்ப இரண்டு பேரும் பக்கத்து கட்டிலில் படுத்திருந்து கொண்டு பிசினெஸ்ஸை எப்படி டெவெலப் பண்றது எண்டு பிளான் போடுவினம் எண்டு நினைக்கிறன். என்ன சொல்லுறியல்?

🤨

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இந்த நேரம் வரப்போறன் என்று அடம்பிடிப்பவர் சுய நலமி யாக இருக்கணும் அவருக்கு இங்கும் காய்ச்சல் இருமல் கொஞ்சம் பார்த்து வாங்க என்று மட்டும் சொல்லிவிடுங்க போன் கூட தேடி எடுக்கமாட்டார். 

அதை எல்லாம் சொல்லி எதுக்கு மினக்கெடுவான்.. போனிலையே ஒரு பத்துதரம் லொடுக்கு லொடுக்கு எண்டு இருமி இருந்தா நேரம் மிச்சம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் முதல்  மோன்காரன் கண் டாக்குத்தர் எண்டு ஒரு இடத்திலையும் சொல்லேல்லை.சும்மா தேவையில்லாமல் தங்கச்சியை குழப்பக்கூடாது 😎

இந்த பதிவை எழுதின குற்றத்துக்கு  நாதம்தான் சட்டைய கிழிச்சுட்டு ஓடனும்.. ஓவர்.. ஓவர்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த பதிவை எழுதின குற்றத்துக்கு  நாதம்தான் சட்டைய கிழிச்சுட்டு ஓடனும்.. ஓவர்.. ஓவர்..😂

அதிலும் பார்க்க கோரோனோவை கொண்டு காவடி ஆடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

நீஙகள் இப்போதும் கலிபோர்னியாவில்தான் நிற்கிறீர்களா?
அல்லது வீடு திரும்பி விடீர்களா?
நியூ யோர்கில் வேகமாக பரவுகிறது 
கூடுதல் கவனமாக இருங்கள். 

இல்லை மருது
சன்பிரான்ஸ்சிஸ்கோவில்த் தான் நிற்கிறேன்.அடுத்த ஆடி முடிவிலேயே நியூயோர்க் திரும்புவேன்.கொரொனா நிலமை இதே மாதிரி இருந்தால் நியூயோர்க் பயணமும் பிந்தலாம்.
நன்றி மருது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.