Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Featured Replies

17 minutes ago, ampanai said:

நன்றி. இருந்தாலும், சுவிசுடன் இலங்கையை ஒப்பிடுவதும், தன்னார்வ உதவியாளர்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் மூலம், நீங்கள் ஆலயங்கள் மக்களுக்கு உதவுவதை முழு மனத்துடன் ஏற்கவில்லை என்பதை காட்டுகின்றது. அதில் பிழையும் இல்லை. 

ஆலயங்கள் வைத்திருக்கும் பணம்  மக்களிடம் அவை ஈட்டிய பணம். ஆகவே மக்களுக்கு அத்த பணத்தால் உதவி செய்யவேண்டிய கடப்பாடு  உண்டு என்பதையே இங்கு பல ஆலய நிர்வாகிகளிடம் பல முறை  வாதாடிய விடயம். இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உணவுகொடுக்க  அந்த மக்களின்   பணத்தை செலவிட்ட ஆலய நிர்வாகிகள் பாராட்டுக்கு உரியவர்கள் என்பதைத் தெளிவாக கூறி இருந்தேன். அப்படி இருந்தும் உங்கள் மனத்தில  தோன்றிய கற்பனையை என் மீதான குற்றச்சாட்டாக கூறி உள்ளீர்கள். 

தன்னார்வமாக மக்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் உயர்வானவர்கள் என்பதால் அவர்களையும்  குறிப்பிட்டேன். தன் மக்களுக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தாது உலகில்  எவர் பாதிக்கப்பட்டாலும் உதவும் நிறுவனங்களும் உலகில்  உயர்வானவை என்பதால் அவற்றையும் குறிபிட்டிருந்தேன்.  

  • Replies 130
  • Views 9.6k
  • Created
  • Last Reply
27 minutes ago, tulpen said:

ஆலயங்கள் வைத்திருக்கும் பணம்  மக்களிடம் அவை ஈட்டிய பணம். ஆகவே மக்களுக்கு அத்த பணத்தால் உதவி செய்யவேண்டிய கடப்பாடு  உண்டு என்பதையே இங்கு பல ஆலய நிர்வாகிகளிடம் பல முறை  வாதாடிய விடயம். இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உணவுகொடுக்க  அந்த மக்களின்   பணத்தை செலவிட்ட ஆலய நிர்வாகிகள் பாராட்டுக்கு உரியவர்கள் என்பதைத் தெளிவாக கூறி இருந்தேன். அப்படி இருந்தும் உங்கள் மனத்தில  தோன்றிய கற்பனையை என் மீதான குற்றச்சாட்டாக கூறி உள்ளீர்கள். 

தன்னார்வமாக மக்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் உயர்வானவர்கள் என்பதால் அவர்களையும்  குறிப்பிட்டேன். தன் மக்களுக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தாது உலகில்  எவர் பாதிக்கப்பட்டாலும் உதவும் நிறுவனங்களும் உலகில்  உயர்வானவை என்பதால் அவற்றையும் குறிபிட்டிருந்தேன்.  

ஒரு வினாவிற்கு ஆம் இல்லை என்ற பதிலை கூட ஒருவரால் தரலாம். அவ்வாறான ஒரு கேள்விக்கு மனிதர், சுவிஸ், தன்னார்வலர்கள் என பலரையும் இணைத்து பதில் சொல்வது என்பதை பலரும் இந்த கருத்துக்களத்தில் செய்வது. 

அதனால் தான் என்னவோ, ஒரு நூறு பார்வையார்கள் உள்ள தளத்தில் ஒரு சிலபேர் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். அதனால், பல நல்ல கருத்துக்களை இழந்துவிடுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெளியான விளம்பரத்தை பார்த்து கோபமடைந்த பிரதமர்

Report us Sujitha Sri 5 hours ago

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோபமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கட்சி தலைவர்கள் கூட்டமானது நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த விளம்பரம் தொடர்பில் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கிறிஸ்தவ மதபோதனை ஒன்று தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று விளம்பரம் செய்துள்ளது.

கொரோனா உங்களை நெருங்காது என்ற அந்த விளம்பரத்தில் இலக்கம் - 14 ராசாவத்தை, சுதுமலை வீதி, மானிப்பாய் பகுதியில் இடம்பெறும் ஜெபக்கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் கூறுகையில்,

நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனது கைகளில் இந்த விளம்பரம் கிடைத்தது.

ஜெபக்கூட்டம் ஒன்றுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது. வடக்கில் பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம்.

குறிப்பாக உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். பத்திரிகை உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது, நீங்கள் அவருக்கு ஆலோசனை வழங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/242589?ref=home-imp-parsely

4 minutes ago, பெருமாள் said:

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோபமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

போர்குற்றவாளிகள் கோஷ்டியை சேர்ந்த மகிந்த ராஜபக்சவின் தமிழின விரோத முகம் இங்க நல்லாவே வெளிப்பட்டிருக்கு.

கூட்டத்துக்கு அனுமதி குடுத்த சொறிலங்காட சிங்கள போலீஸ் மீது கோபப்பட வேண்டிய பெருச்சாளி வேறெங்கோ பாய்ஞ்சு நல்ல பிள்ளை மாதிரி முதலைக்கண்ணீர் வடிக்குது.

இதைவிட கொடுமை இந்த கூட்டத்துல கலந்துகொண்ட சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டி கூட்டத்துக்கு சிங்கள போலீஸ் குடுத்த அனுமதி பற்றி வாய் திறக்காம மவுனமா இருந்து தலையாட்டிபோட்டு வந்திருக்கீனம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Rajesh said:

ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது மாநகர சபை ...இதில் மகிந்தா எங்கே வந்தார் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

நானும் எனக்கு புண்ணிருந்தால் நானிருக்கும் நாட்டின் மருத்துவரிடம் சென்று மருந்தெடுக்கிறேன் ஆனால் அவர் ஒரு நாளும் என்னை அவரது மதத்துக்கு மாறச்சொல்லவில்லையே. ஏனென்றால் நான் அவரது சேவைக்கு பணம் கொடுக்கிறேன்

சோற்றுக்கே வழியில்லாதவர்கள் புண்ணுக்கு மருந்து போட பணத்துக்கு எங்கே போவார்கள்? அதனாற்தான்தமக்கு உதவக்கூடிய  வைத்தியர்களை நாடுகிறார்கள். பயன் இல்லையாயின் வெளியேறி, தம் வலியை நீக்க கூடிய வேறொரு வைத்தியரை நாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. பணத்தை விட்டு எறிபவனுக்கு, மருந்து தேடுபவனின் வலியும் வேதனையும் புரியாது.

16 hours ago, Eppothum Thamizhan said:

ஓம் ஓம் அதுதான் உங்கள் நாட்டின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அறிவியலையும் கொரோன விடயத்தில் நானென்ன உலகமே பார்த்து மெச்சிக்கொண்டிருக்கிறதே !

நீங்கள் உங்கள் வீட்டு சாக்கடையை மட்டும் கழுவுங்கள். அதுபோதும். மறவர்களுக்கு அவரவர் சாக்கடைகளை சுத்தம் செய்ய சுய அறிவு உள்ளது. அதை அவர்களே செய்துகொள்வார்கள்.

எப்போதும் தமிழனால் அடுத்தவனை எள்ளி நகையாட மட்டும் தான் முடியும். தமிழர்களில் போலியோ இல்லாத குழந்தைகள் பிறப்பதற்கு போலியோ சொட்டு மருந்தைக் கண்டு பிடித்தவர் ஜோனஸ் சால்க் அமெரிக்கர். இதற்காக இம்மருந்துக்கு காப்புரிமைகூட அவர் வாங்கவில்லை. 

அமெரிக்காவின் சுற்றாடல் சுத்தத்தை எள்ளி நகையாடும் எப்போதும் தமிழனால் தமிழர் தாயகத்தில் சுத்தமான பொதுக்கழிப்பறையைக் காட்ட முடியாது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

37 minutes ago, tulpen said:

அமெரிக்காவின் சுற்றாடல் சுத்தத்தை எள்ளி நகையாடும் எப்போதும் தமிழனால் தமிழர் தாயகத்தில் சுத்தமான பொதுக்கழிப்பறையைக் காட்ட முடியாது. 

அப்படி காட்டத்தக்கதாக ஏதாவது இருந்தால் ஏன் இப்படி எள்ளிநகையாடுவதில் கவனம் செலுத்துகிறார்? ஒன்றும் இல்லாத ஆற்றாமையில் தனக்கு முடிந்ததை செய்கிறார் - பாவம், விட்டுவிடுங்கள், ஏதோ ஒரு சந்தோசமாவது கிடைக்கட்டும்.

Edited by கற்பகதரு

16 hours ago, ரதி said:

ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது மாநகர சபை ...இதில் மகிந்தா எங்கே வந்தார் 

சொறிலங்கால போலீசின் அனுமதி தான் முக்கியம்! அதுக்கு பிறகுதான் மிச்சம் எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ampanai said:

ஒரு வினாவிற்கு ஆம் இல்லை என்ற பதிலை கூட ஒருவரால் தரலாம். அவ்வாறான ஒரு கேள்விக்கு மனிதர், சுவிஸ், தன்னார்வலர்கள் என பலரையும் இணைத்து பதில் சொல்வது என்பதை பலரும் இந்த கருத்துக்களத்தில் செய்வது. 

அதனால் தான் என்னவோ, ஒரு நூறு பார்வையார்கள் உள்ள தளத்தில் ஒரு சிலபேர் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். அதனால், பல நல்ல கருத்துக்களை இழந்துவிடுகிறோம். 

சாதி, மதம், பிரதேசம் என வரும்போது கருத்துச் சொல்ல எல்லோரும் முன்வருவதில்லை. காரணம்  எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  தாங்கள் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்பது அதில் முக்கியமானது. 🙂

அதையும் மீறி கருத்துரைப்போரின் துணிவு பாராட்டத்தக்கது 👍

ஆனால் இந்த செய்தி ஆரம்பத்தில் வெளியாகியதும் தாவடியில் கொரோனாவால் பாதிப்படைந்தவரால்தான் பாதருக்கே பரவியது என்று விட்டாங்களே ஒரு பீலா அடேய்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

சோற்றுக்கே வழியில்லாதவர்கள் புண்ணுக்கு மருந்து போட பணத்துக்கு எங்கே போவார்கள்? அதனாற்தான்தமக்கு உதவக்கூடிய  வைத்தியர்களை நாடுகிறார்கள். பயன் இல்லையாயின் வெளியேறி, தம் வலியை நீக்க கூடிய வேறொரு வைத்தியரை நாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. பணத்தை விட்டு எறிபவனுக்கு, மருந்து தேடுபவனின் வலியும் வேதனையும் புரியாது.

அப்போ சோற்றுக்கு வழியில்லாதவர்களிடம் பிரச்சனையில்லை! ஒழிக்கப்பட வேண்டியவர்கள் அயோக்கிய மருத்துவர்களே!! அப்போதுதான் மதம் மாறுபவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைத்தால்தான் சோறு கிடைக்கும் என்ற புத்தி வரும். எல்லோருக்கும் நோகாமல் நொங்கெடுக்கதான் விருப்பமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

அமெரிக்காவின் சுற்றாடல் சுத்தத்தை எள்ளி நகையாடும் எப்போதும் தமிழனால் தமிழர் தாயகத்தில் சுத்தமான பொதுக்கழிப்பறையைக் காட்ட முடியாது. 

நான் சொன்னது அமெரிக்கர்களின் நடவடிக்கைகளை, Social distancing, self cleanness பற்றி.

ஒழுங்கான பொது கழிப்பறைகள் இல்லாவிட்டாலும் இப்படி கொத்து கொத்தா யாருக்கும் கொரோன பரவவில்லையே ?? 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 9:52 AM, tulpen said:

 ரதி  நீங்கள் கூறுவது உண்மையானால் செய்யக்கூடாத‍த்தை செய்த பலர்  இந்த இரண்டு இதிகாசங்களிலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடுவது ஏன்.  அவர்கள் உயர் சாதி என்பதை தவிர வேறு என்ன உண்டு?  அதன் மூலம் அந்த இதிகாசங்கள் மக்களுக்கு கூறவரும் செய்தி என்ன?

உதாரணமாக துரோணாச்சாரியார் மகாபாரத‍த்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடும் ஒரு கதாபாத்திரம். இன்றும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாச்சாரியார் விருது கொடுக்கப்படுகிறது. இத்த‍னைக்கும் துரோணாச்சாரியார் செய்த‍து என்ன?  கீழ் சாதி என தன்னால் துர‍த்தபட்ட ஏகலைவன் சிறந்த வில்வித்தையாளனாகியதை பொறுக்க மாட்டாமல் அவனது கட்டை விரலை கேட்டு அவனது திறமையை மழுங்கடித்த‍த்துதான். இவ்வானான கீழ்தரமான செயலை செய்த துரோணாசாரியார் என்ற கதாபாதிரத்திற்கு மகாபாரத‍த்தில் உயர்ந்த மரியாதையான இடம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் சொல்ல வந்த செய்தி எம்மால் தாழ்த்த‍ப்பட்ட எவரும் படிக்க‍கூடாது. அவ்வாறு படிப்பது தர்ம‍ம் அல்ல என்பதே. 

உண்மையில் சிறந்த பயிற்சியாளர் என்றால் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் துரோணாச்சாரியார் போன்ற கீழ்தரமானவர்களின் பெயரில் சிறந்த பயிசியாளர் விருது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட அவாள்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை. மகாபாரதம் காட்டிய தர்ம்ம் இது தான். 

இந்தியாவில் எப்போதும் பார்ப்பனர்களுக்கு முதலிடம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லையே!  அந்த வகையில்தான் துரோணாச்சாரியார் விருதும்.

பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோர் இறக்குமுன் கிருஷ்ணனுடன் நடக்கும் உரையாடல்களை கேளுங்கள். அதில் அவர்கள் ஏன் கொல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் வந்தார்கள் என்பதற்கான விளக்கம் கிடைக்கும். 

அதற்காக நான் இந்த இதிகாசங்களை நம்புபவன் என்று நினைத்துவிடவேண்டாம். அவை பொழுது போவதற்காக வாசிக்கும் கதைகள் மட்டுமே!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ சோற்றுக்கு வழியில்லாதவர்களிடம் பிரச்சனையில்லை! ஒழிக்கப்பட வேண்டியவர்கள் அயோக்கிய மருத்துவர்களே!! அப்போதுதான் மதம் மாறுபவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைத்தால்தான் சோறு கிடைக்கும் என்ற புத்தி வரும். எல்லோருக்கும் நோகாமல் நொங்கெடுக்கதான் விருப்பமாக இருக்கிறது.

ஐயா! கனவானே, மருந்து தேடி அலைவோர் யார்? நம் சமுதாயத்திலிருந்து, நம்மால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டவர்கள். நாம் மட்டும் அவர்களை அணைத்து, ஆறுதல் கொடுத்திருந்தால் அவர்கள் வேறிடம் நாடிப்போவார்களா? அல்லது வேறொருவர் அவர்களை தேடி வந்திருப்பார்களா?  அவர்கள் தேவையை கண்டு உதவ முடியாத நாம், அவர்களை கேள்வி கேட்கவும், சட்டம் போடவும் முண்டியடிக்கிறோம். அவர்களே உழைத்து சோறு உண்ணட்டும் என்று கடமையை தட்டிக்கழிக்கும் நமக்கு, அவர்களை கேள்வி கேட்கும் உரிமையுமில்லை.  இப்போ நாம் சரி. மதம் மாற்றுவோர் தவறு என்று வாதாடுவதால் இந்தத் திரி அதிரலாம், மாற்றம் வராது. வெளிநாடு என்கிற ஒரு கதவு திறக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்களின் நிலைமை உங்களில் பலபேருக்கு புரிந்திருக்கும்.  நடுக்கடலில் தத்தளிப்பவன் ஒரு துரும்பு கையில் கிடைத்தாலும் அதை பற்றிக்கொண்டு கரையேறவே முயற்சிப்பான். மதம் மாற்றுவோர் சோறு மட்டுந்தான் போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் எண்ணத்தை மாற்றவும் முடியாது. அடுத்தவன் வீட்டுச் சட்டியில் என்ன அவியுது என்று பாராமல், எங்கள் வீட்டுச் சட்டியில் உள்ளதை எரியாமற் பாதுகாப்போம். நன்றி.  வணக்கம்.

16 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ சோற்றுக்கு வழியில்லாதவர்களிடம் பிரச்சனையில்லை! ஒழிக்கப்பட வேண்டியவர்கள் அயோக்கிய மருத்துவர்களே!! அப்போதுதான் மதம் மாறுபவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைத்தால்தான் சோறு கிடைக்கும் என்ற புத்தி வரும். எல்லோருக்கும் நோகாமல் நொங்கெடுக்கதான் விருப்பமாக இருக்கிறது.

உங்கள் கருத்து சரியானது. கஷ்ரப்பட்டு உழைத்தால் தான் சோறு கிடைக்கும் என்ற கருத்தை அடுத்த தலைமுறைக்காவது  சொல்லிக்கொடுப்போம். சரியாக பேச கூட தொடங்காத குழந்தையை கோவிலுக்கு கூட்டி போய் அப்பு சாமி கண்ணை குத்திடுவார் அவரை கும்பிடு என்று பயங்காட்டுவதுடன் பிள்ளைக்கு படிப்பு தரச்சொல்லி அப்பு சாமியிடம் கேள் என்று சோம்பேறித்தனத்தை வளர்த்தால் நீங்கள் சொன்னபடி வளர்ந்த பின்னரும் அதைத் தான் செய்வார்கள். ஆகவே இவ்வாறான பைத்திதயகார தனங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுது மதம் மாற்றும்  பேர்வளிகளுக்கு அத்திவாரத்தை போட்டு கொடுக்காமல் சிறுவயதில் இருந்தே தன்னம்பிகையும் சுய அறிவையும் வளர்க்க ஊக்கத்தை கொடுப்பதன் மூலம் இவ்வாறான மதம் மாற்றுபவர்களிடம் சிக்காமல் எமது எதிர்கால சந்த‍தியை காப்பாற்றலாம். 

2 hours ago, tulpen said:

சரியாக பேச கூட தொடங்காத குழந்தையை கோவிலுக்கு கூட்டி போய் அப்பு சாமி கண்ணை குத்திடுவார் அவரை கும்பிடு என்று பயங்காட்டுவதுடன் பிள்ளைக்கு படிப்பு தரச்சொல்லி அப்பு சாமியிடம் கேள் 

அதுக்கு தான் சரஸ்வதி வழிபாடு சைவ மக்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியாதோ....வீரத்துக்கு துர்கை செல்வத்துக்கு லக்‌ஷ்மி என நவராத்திரியும் அனுஸ்டிக்கப்படுவது அதற்காக தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

உங்கள் கருத்து சரியானது. கஷ்ரப்பட்டு உழைத்தால் தான் சோறு கிடைக்கும் என்ற கருத்தை அடுத்த தலைமுறைக்காவது  சொல்லிக்கொடுப்போம். சரியாக பேச கூட தொடங்காத குழந்தையை கோவிலுக்கு கூட்டி போய் அப்பு சாமி கண்ணை குத்திடுவார் அவரை கும்பிடு என்று பயங்காட்டுவதுடன் பிள்ளைக்கு படிப்பு தரச்சொல்லி அப்பு சாமியிடம் கேள் என்று சோம்பேறித்தனத்தை வளர்த்தால் நீங்கள் சொன்னபடி வளர்ந்த பின்னரும் அதைத் தான் செய்வார்கள். ஆகவே இவ்வாறான பைத்திதயகார தனங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுது மதம் மாற்றும்  பேர்வளிகளுக்கு அத்திவாரத்தை போட்டு கொடுக்காமல் சிறுவயதில் இருந்தே தன்னம்பிகையும் சுய அறிவையும் வளர்க்க ஊக்கத்தை கொடுப்பதன் மூலம் இவ்வாறான மதம் மாற்றுபவர்களிடம் சிக்காமல் எமது எதிர்கால சந்த‍தியை காப்பாற்றலாம். 

இது நியாயமான கருத்து .
 
14 minutes ago, Dash said:

அதுக்கு தான் சரஸ்வதி வழிபாடு சைவ மக்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியாதோ....வீரத்துக்கு துர்கை செல்வத்துக்கு லக்‌ஷ்மி என நவராத்திரியும் அனுஸ்டிக்கப்படுவது அதற்காக தான். 

 ஓம் எனக்குத் தெரியும். படிக்காமல் சரஸ்வதியை கும்பிட்டாலோ, உழைக்காமல் லக்‌ஷ்மியை கும்பிட்டாலோ கல்வியும் கிடைக்காது  செல்வமும் கிடைக்காது அவலும், சுண்டலும், வடையும் மட்டும் தான்  கிடைக்கும் என்பது தெரியும்.  

1 hour ago, tulpen said:

 ஓம் எனக்குத் தெரியும். படிக்காமல் சரஸ்வதியை கும்பிட்டாலோ, உழைக்காமல் லக்‌ஷ்மியை கும்பிட்டாலோ கல்வியும் கிடைக்காது  செல்வமும் கிடைக்காது அவலும், சுண்டலும், வடையும் மட்டும் தான்  கிடைக்கும் என்பது தெரியும்.  

படிக்காமல். சரஸ்வதியை வணங்குமாறு எங்கு குறிபாபிடப்பட்டுள்ளது.

சும்மா இங்கு வந்து ஏதோ நியாயம் கதைப்பது போல் வேடம் போட வேண்டாம். சும்மா சாட்டுக்கு ஏதோ எல்லா மதத்தையும் கண்டிப்பது போல் நடிக்க வேண்டாம். உங்களுடைய. இலக்கு சைவமும் தமிழும் மட்டுமே.

20 minutes ago, Dash said:

படிக்காமல். சரஸ்வதியை வணங்குமாறு எங்கு குறிபாபிடப்பட்டுள்ளது.

சும்மா இங்கு வந்து ஏதோ நியாயம் கதைப்பது போல் வேடம் போட வேண்டாம். சும்மா சாட்டுக்கு ஏதோ எல்லா மதத்தையும் கண்டிப்பது போல் நடிக்க வேண்டாம். உங்களுடைய. இலக்கு சைவமும் தமிழும் மட்டுமே.

2 hours ago, Dash said:

அதுக்கு தான் சரஸ்வதி வழிபாடு சைவ மக்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியாதோ....வீரத்துக்கு துர்கை செல்வத்துக்கு லக்‌ஷ்மி என நவராத்திரியும் அனுஸ்டிக்கப்படுவது அதற்காக தான். 

உங்கள் கேள்விக்கு நீங்களே பதில்.

Edited by tulpen

41 minutes ago, tulpen said:

உங்கள் கேள்விக்கு நீங்களே பதில்.

மீண்டும் சரஸ்வதியை வணங்கினால் படிப்பு வரும் என்று குறிப்பிடவில்லை;  சரஸ்வதி துணை நிற்பாள் என்பது தான் நம்பிக்கை. ஆனால் எந்தவிடத்திலும் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடவில்லை.

மீண்டும் உங்கள் சைவ மத/ தமிழ் இன விரோதத்தை இங்கு வந்து வாந்தியெடுக்க வேண்டாம்.

நீங்கள் எவ்வளவு நடித்தாலும் உங்களது மண்டைய் மேல் இருக்கும் கொண்டையை மறைக்க முடியாது.

1 hour ago, Dash said:

சும்மா இங்கு வந்து ஏதோ நியாயம் கதைப்பது போல் வேடம் போட வேண்டாம். சும்மா சாட்டுக்கு ஏதோ எல்லா மதத்தையும் கண்டிப்பது போல் நடிக்க வேண்டாம். உங்களுடைய. இலக்கு சைவமும் தமிழும் மட்டுமே.

உங்களுடைய  சுயரூபம் இது தான் ; 

3 minutes ago, Dash said:

மீண்டும் சரஸ்வதியை வணங்கினால் படிப்பு வரும் என்று குறிப்பிடவில்லை;  சரஸ்வதி துணை நிற்பாள் என்பது தான் நம்பிக்கை. ஆனால் எந்தவிடத்திலும் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடவில்லை.

சரஸ்வதியை வணங்கா விட்டாலும் படித்தால் கல்வி வரும். அது நம்பிக்கை இல்லை உண்மை.

ஆனால் சரஸ்வதியை வணங்கி படிக்காமல் விட்டால் படிப்பு  அறவே வராது. அதோ கதி தான். நீங்ககள் இப்போது எழுதிக்கொண்டு இருப்பது சரஸ்வதியை வணங்காதவன் கண்டு பிடித்த அறிவியல் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அல்லேலூயா கூட்டங்களுக்கு வால்  பிடிக்கின்றவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கவும் ...சுமத்திரன் போன்றவர்கள் தமது வருமானத்திற்காய் ,சுயநலத்திற்காய் மக்கள் எக்கேடும் கெட்டாலும்  பரவாயில்லை என்று கண்டும் காணாமல் இருக்கின்றனர்...மக்கள் இனிமேலாவது விழிப்புணர்வு அடைய வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஆனால் சரஸ்வதியை வணங்கி படிக்காமல் விட்டால் படிப்பு  அறவே வராது. அதோ கதி தான். நீங்ககள் இப்போது எழுதிக்கொண்டு இருப்பது சரஸ்வதியை வணங்காதவன் கண்டு பிடித்த அறிவியல் தான். 

சரஸ்வதியை வணங்கிவிட்டு படிக்காமல் இரு அறிவு தானாக வரும் என்று கூறி யாரும் பிள்ளைகளை வளர்பதில்லையே!! கடவுளை வணங்குவது மனதை ஒருநிலைப்படுத்த என்பதை எனது கணிப்பு.

ஆனால் சரஸ்வதியை வணங்கும்/வணங்கிய  ஒருவன்தான் அதற்கு CEO !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.