Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

  • Replies 101
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் பாடலை கேட்டவுடன்.... வீட்டிற்கு தெரியாமல், 
களவாய்  படம் பார்க்க போய்.... அம்பிட்டு, அடி  வாங்கின  நினைவு வரும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

7.15 இல் இருந்து 8 மணிவரை பொங்கும் பூம் புனல் நேரத்தில் நேயர் விருப்பம் எத்தனையும் முத்துக்கள்.தேநீர்கடைகளில் பெரிய சத்தத்துடன் போட்டிருப்பார்கள்.சில பாடல்கள் வரும் போது அந்த இடங்களில் மெதுவாக சைக்கிள் ஓட்டிய காலங்கள்.

6 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

பரிமளம் அண்ணிக்காக கேட்ட பாட்டுப் போல.

  • கருத்துக்கள உறவுகள்

mark.jpg

70 களில் கல்லூரியில் படிக்கும்பொழுது "ஸ்டெப் கட்" என தலை அலங்காரம் மிகப் பிரபலம்.. நானும் அப்பொழுது காதை பாதி மூடும்படி ஸ்டெப் கட் வைத்திருந்தேன். (இப்பொழுது பின்பக்கம் லேசா வழுக்கை விழுந்துவிட்டது என்பது எனக்கு கவலையான விசயம்..! vil-triste2.gif )

சலூனுக்கு சென்று இருக்கையில் உட்கார்ந்து முதன்முதலாக "ஸ்டெப் கட் வெட்டிவிடுங்கள்.." என சொல்லும்போது உள்ளே இந்தப்பாடல் மெல்லிதாக ஒலித்தது..!

அந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சிறு துளியாக இருக்கலாம், ஆனால் இன்னமும் மறக்க முடியாத வண்ண நினைவுகளில் ஒன்று.. vil-rainbow.gif

Edited by ராசவன்னியன்

 ஒவ்வொரு தடவையும் இந்த பாடலை கேட்கும் போது எனது அக்காவும் அத்தானும் என்னை முதன் முதலாக யாழில் இருக்கும் ஒரு திரையரங்குகிற்கு கூட்டிப்போன ஞாபகம் வரும். நாலோ ஐந்தோ வயதில் பார்த்திருந்தாலும் இன்னும் என் நினைவில் பசுமையாக நிறைந்திருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடல் மிக அழகான வரிகள் கொண்ட அருமையான பாடல். ஆனால் நான் இதை ஒருநாளும் கேட்க விரும்புவதும் இல்லை.கேட்பதும் இல்லை...... 1960 ல் வந்த படம் புதியபாதை.ஜெமினி  சாவித்திரி நடித்தது.மிக மிக சோகமான படம்.பழைய வின்ட்சர் (பின்பு அது லிடோ)தியேட்டரில் வந்தது....!

எனது சின்னம்மாவுக்கு திருமணம் நடந்து முதன்முதலாக இந்தப் படத்துக்குத்தான் என்னையும் கூட்டிக்கொண்டு  போனார்கள்.சரியாக இந்தப்பாட்டும் படமும் போலவே அவருடைய வாழ்க்கை அழிந்து போய் விட்டது.அப்போது நான் சிறுவன் என்றாலும் என்னால் இந்தப் படத்தையும் பாட்டையும் மறக்கவே முடியவில்லை.நினைத்தாலே கண்கலங்கும்.பின் அவ திருமணமும் செய்யவில்லை.அம்மாம்மாவுடன் இருந்து என்னைத்தான் வளர்த்து வந்தா.சென்ற ஆண்டு சென்று பார்த்து விட்டு வந்தேன்......!

இந்தப் பக்கத்தைப் பார்த்ததும் ஏனோ உடனே இதுதான் நினைவுக்கு வந்தது.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் பாடலை கேட்டவுடன்.... வீட்டிற்கு தெரியாமல், 
களவாய்  படம் பார்க்க போய்.... அம்பிட்டு, அடி  வாங்கின  நினைவு வரும்.  :grin:

உண்மைதான் சிறித்தம்பி.நானும் களவாய் படம் பாத்து அடிவாங்கினது கொஞ்சம் இல்லை.
ஒருக்கால் மாமியார் வீடு படம் பார்க்க வின்சர் தியேட்டருக்கு போனனான். அப்ப ஊர் பொடியன் என்னை கண்டுட்டான்.அப்பவும் நான் அவனிட்டை கெஞ்சி மண்டாடி வீட்டை சொல்லிப்போடாதை எண்டு சொல்லி தேத்தண்ணியும் கடலை வடையும் வாங்கிக்குடுத்தனான்.
 அப்பிடியிருந்தும் அவன் முதல் வேலையாய் செய்த வேலை வீட்டை போய் அண்ணரிட்டை மாமியர்வீட்டுக்கு நான் போனதை சொன்னது தான்.அதுக்கு பிறகு பூவரசம் கேட்டியாலை விழுந்த பூசை இருக்கே எழுத வார்த்தைகள் இல்லை.நான் குளறினது அஞ்சாறு வீடு தள்ளி கேட்டிருக்கும். இந்தபாட்டு இல்லாட்டி மாமியார்வீடு  எண்ட சொல்லை கேட்டால் அந்த நன்றி கெட்ட நாயின்ரை ஞாபகம் தான் வரும்.தேத்தண்ணியும் வடையும் வாங்கிக்குடுத்தும் நன்றி விசுவாசம் இல்லாத பன்னாடைய நினைச்சால்...🤬

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ்வில் சீட்டு பிடிப்பவர்களையும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் பார்க்கும் போதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல், பணத்தோட்டம் படத்தில் வரும்,

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்

வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்

மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்

மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நவரத்திரி பூசைக்கு நாங்கள் சிறு வயதில் நாடகம் எழுதி நடிப்பது வழக்கம். ஏதிர்பார்த்தேன் இளங்கிளியை என்னும் பாடலுக்கு நானும் எனது நண்பனும் (பொண் வேடம்) ஆட வேண்டும்.  ஒரு கட்டத்தில் அவனை தூக்கி ஆட வேண்டும், அவனோ என்னைவிட பாரம் கூட, இந்த பாட்டை கேட்கும் பொழுது , ஊர் கூடி சந்தோஷமாக கொண்டாடிய தினங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்கும் நடக்கடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே........

யாரை நம்பி நான் பிறேந்தேன் போங்கடா போங்க.....

இந்த இருபாடல்களை கேட்கும் பொழுது என் அப்பாவின் நினைவுகள் தான் வரும், நானும் இப்படால்களை அடிக்கடி வாயில் முணுமுணுப்பதுட்டு.

அப்பா தோட்ட வேலைகள் முடித்தபின் கள்ளடித்துவிட்டுதான் வருவார், அம்மா என்னைதான் அப்பாவுடன் வயல் கிணத்திற்கு அனுப்புவா குளிக்க, நான் கிணத்தில் அள்ளி கொடுக்க அப்பா வாங்கி குளிப்பார், அப்ப இந்த இருப்பாடல்களும் தான் அவர் அதிகம் பாடுவதுண்டு.. அப்பா இல்லாவிட்டலும் இப்பவும் அந்த நினைவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தி ஊரிலையெல்லாம் மினி தியேட்டர் எண்டு இருந்தது எல்லாருக்கும் தெரியுமெண்டு நினைக்கிறன்.மட்டக்களப்பிலை கொஞ்சம் வடிவாய் கொட்டில் போட்டு உறுப்பாய் வைச்சிருந்தவையள். ஆனால் என்ரை ஊரிலை சூடடிக்கிற படங்கை  மறைப்பாய் கட்டிப்போட்டு சினிமா காட்சியள் களைகட்டும். அதிலை ஒரு  ஒரு கிளுகிளுப்பை சொல்லுறன்.
சிவந்தமண் படம் பாக்க போனனான்.காசு எவ்வளவெண்டு ஞாபகமில்லை.ஒரு புல்லு முள்ளு காணிக்கை படங்கை சுத்தி கட்டிப்போட்டு( வின்சர் தியேட்டராம்) வெறும் நிலைத்திலை எல்லாரையும் இருத்திப்போட்டு படம் காட்ட வெளிக்கிட்டினம்.சனம் கும்பல்லா கோவிந்தாவாய் கலந்து கட்டி இருந்ததாலை எனக்கு படம் பாக்கிறதிலை பெரிசாய் ஈடுபாடு வரேல்லை. ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️
 
இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நினைவு மீட்டல் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஊரில் இருக்கும் போது சர்வசாரணமாகவே வாழ்ந்திருப்பார்கள். குறிப்பாக சொல்லப்போனால் மத வெறுப்புகள் ஏதுமின்றி அவரவர் மதம் சார்ந்து வாழ்ந்திருப்பார்கள். தமது மத பண்டிகைகளை வரவேற்று சந்தோசத்துடன் கொண்டாடியிருப்பார்கள். நான் ஊரில் இருந்த வரைக்கும் மத துவேசிகளை நான் காணவேயில்லை. 
அதே போல் இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 
இப்போதும் நாகூர் ஹனிபாவின் பாடல்களை கேட்கும் போது அந்த முஸ்லீம் நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

....ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️

இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2020 at 6:11 AM, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

ஏங்க இந்த மாதிரி..? பெரியவர், விட்டுவிடலாம்.. sgentil.gif

திரியை கொழுத்திப்போட்டுவிட்டு ஆள் ஓய்வெடுக்கப் போய்விட்டார்..fati1.gif

உடல்நிலை சரியில்லையோ, என்னவோ..!  dubitatif.gif

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்தபொழுது, தமிழகத்தில் உணர்வுபூர்வமாக ஈழத் தமிழர்களின் வரலாற்றையும், அவர்களின் துயரத்தையும் அறியத் தூண்டி, அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல்.

விருப்பமான பாடல்களில், இதுவும் ஒன்று..!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 11:05 PM, குமாரசாமி said:

இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 

இலங்கை  தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் காலையில் சமய நிகழ்சசியில் அடிக்கடி ஹனிபாவின் பாடலைக் கேட்கலாம். ‘ஈச்சை மரத்தின் இன்பச் சோலையிலே...’, ‘பாத்திமா வாழ்ந்த கதை உனக்குத் தெரியுமா’ என்ற பாடல்களும் அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடல்கள் 

அவரின் குரலில் எனக்கும் மயக்கம் உண்டு. ‘

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் என் குளப்படி ஊர்பிரசித்தம். அம்மாவிடம் வாங்கும் பூவரசம்தடியின் அடியிலிருந்து என்னைக் காப்பாற்றும் பெரியம்மாவின் மகள் தங்கமக்காவிடம் எனக்கு அத்தனை பாசம், அவருக்கும் எனமேல் கொள்ளை பிரியம். அன்று அவருக்குக் கல்யாணம், பொன்னுக்கிராம் பெட்டியில்தான் பாட்டு, என்னையும் பெட்டியில் தட்டுப்போடவிட்டதால் ஒரே கொண்டாட்டம், கொண்டாட்டத்திலும் ஒரு தட்டில் வந்தபாட்டு அந்த வயதிலும் என் மனதை உருக்கி உருகவைத்தது ஏன்னென்று தெரியவில்லை. அப்பாடலை இன்று நினைத்தாலும் பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தாத்தா /
ந‌ல்ல‌ திரி 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

இடையிடையே சோகம் கலந்து ஒலிக்கும் ஜிக்கியின் குரல். இப்படி ஒரு பாடல் இனி வர சந்தர்ப்பம் கிடையாது. ஜிக்கியம்மா உணர்ந்து உருகிப் பாடி இருப்பார். இந்தப் பாடல் எனது மூத்த சகோதரியின் காலத்தில் வந்தது. அவர் இந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்திலை தென்னிந்திய திரைப்பட பாட்டுக்களும் கிந்தி பாடல்களும் இலங்கை வானொலியை அடிமையாக்கி வைத்திருந்த காலத்தில் பொப்பிசை பாடல்கள் எல்லோரையும் மிரள வைத்தது.
எல்லா தேனீர்க்கடைகளிலும் எல்லா கொண்டாட்டங்களிலும் பொப்பிசை பாடல்கள் அதிகாரம் பண்ணியது.துரையப்பா விளையாட்டரங்கில் பொப்பிசை நிகழ்ச்சி பிரமாண்டம்மாக நடந்தது. ஏ.ஈ மனோகரன்,அமுதன் அண்ணாமலை  உட்பட பல பிரபல்யங்கள் பங்குபற்றினர்.அதை இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி......

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,

இப்படியே உருண்டு ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ...
ஒரு நயினாதீவு ஏஜெண்சி காரனை நம்பி கடன்பட்டு  கட்டிய காசையும் இழந்து 
மொழி உணவு உடை இன்றி மொஸ்கோவில் ஒரு ஒன்றரை வருடம் அகப்பட்டு கொண்டேன் 
அப்போது வயது பதின்பம் என்பதால் ஓடும் காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பெரிதாக 
மனம் அலட்டிக்கொள்வதில்லை ... இப்போதும் அப்படிதான் எதையாவது இழக்க நேர்ந்தால் அதை பற்றி 
பெரிதாக அலட்டி மனம் சுருள்வதில்லை இது ஒரு பலவீனமும் கூட இப்படியான இறுமாப்பும் பெரிதாக கூடாதுதான் ஆனால் தொட்டில் சுபாவமாக இது தொடர்கிறது. .......
எமக்கு வீடு தந்திருந்தவரின் மகள் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் ... ஒரு நாள் அவர் ஒரு இந்தியா படம்  ஓடுகிறது என்றும் தனக்கு இந்தியா படம் விருப்பம் என்றும் என்னை தன்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றார் .......... தியேட்ட்ர் சென்று போஸ்ட்ரை பார்த்தல் நம்ம கமல் நிற்கிறார் ....... எதோ சொந்தக்காரரை பார்த்ததுபோல மகிழ்ச்சி ....படம் தொடங்கும் வரை இப்படித்தான் படத்தின் கதையும் இருக்கும் என்று தெரியவில்லை........ எனக்கும் அந்த ரசிய பெண்ணுக்கும் இருந்த மொழி பிரச்னையை பாலசந்தர் படத்தில்  தத்துரூபமாக  காட்சி ஆக்கி இருப்பார் ....... எங்கள் இருவருக்குமே எதோ எம்மை திரையில் பார்ப்பது போல   இருந்தது...... 
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 
இந்த பாட்டை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் 
இந்த பாடல் கேட்க்கும்போதெல்லாம்  மொஸ்கோவின் வீதிகளும் கடைகளும் மெட்ரோ ரயில் பயணங்களும் 
நினைவில் வந்து வந்து போகும் 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

Edited by Eppothum Thamizhan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.