Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் திரண்ட மக்கள்!

Featured Replies

Curfew-Released-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-20.04.2020-7-720x450.jpg

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர்.

இந்நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைச் வாங்கிச் சென்றிருந்தனர். அதேபோல வங்கிகள், மருந்தகங்களிலும் நீண்ட வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்களிலும் பெருமளவானோர் நீண்ட வரிசைகளில் காத்துநின்று மதுபானங்களை வாங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Curfew-Released-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-20.04.2020-5.jpgCurfew-Released-Time-Jaffna-Situation-Co

Curfew-Released-Time-Jaffna-Situation-Co

பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்!

இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

யாழ் குடாவிலும், அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் பிரதேசத்திலும் உள்ள சாராயக் கடைகளின் முன்னால் வரிசையாக மக்கள் நிற்கும் காட்சி கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட உடனேயே மக்கள் முன்னடித்துக்கொண்டு சாராயக் கடைகளின் முன்பு நிற்கின்ற காட்சி, அந்த மக்கள் பற்றி புலம்பெயர் மக்களுக்கு இருக்கின்ற அக்கறை, கவலை அத்தனையையும் சுக்குநூறாக உடைக்கும்படியாகவே இருக்கின்றது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்கும் முடக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வந்ததும், வடக்கிலும், கிழக்கிலும் எத்தனையோ இளைஞர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்தபடி, வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமது உறவுகளைப் போசிக்கவேண்டும் என்று களம் இறங்கி இரவு பகலாக பணிசெய்து தமது பச்சாத்தாபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அதேபோன்று வடக்கு கிழக்கில் பட்டினிச் சாவில் எமது உறவுகள் மரணிக்கப்போகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, புல்பெயர் உறவுகள் துடித்தார்கள்.

பனியிலும், குளிரிலும் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணங்களை அங்குள்ள உறவுகளுக்காக அள்ளிக் கொட்டினார்கள். பல அமைப்புக்கள் புலம்பெயர் தேசங்களில் வீடு வீடாக ஏறி இறங்கி திட்டுவாங்கி பணம் சேர்த்து உறவுகளுக்கென்று அனுப்பி வைத்தன.

ஆனால் அந்த உறவுகள், அனைவரும் அக்கறைப்பட்ட அந்த தமிழ் உறவுகள், இன்று சாராயக் கடைகளின் முன்பு வரிசையாக நிற்கும் காட்சியானது – மனங்களை கனக்கச் செய்யும்படியாகவே இருக்கின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/141596?ref=imp-news

Edited by போல்

10 minutes ago, போல் said:

யாழ் குடாவிலும், அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் பிரதேசத்திலும் உள்ள சாராயக் கடைகளின் முன்னால் வரிசையாக மக்கள் நிற்கும் காட்சி கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

கோபப்பட்டு பிரயோசம் இல்லை. 

மதுபான கடைகளை அத்திவாசிய தேவைக்கானது என பிரகடனம் செய்து நாளும் திறந்து வைத்திருக்கவனேடும்.   

Curfew-Released-Time-Jaffna-Situation-Co

இங்கு மக்கள் முன்மாதிரியாக இடைவெளி விட்டு பயணிக்கிறார்கள். 

  • தொடங்கியவர்

யாழ். மதுபான நிலையங்களில் குவிந்த குடிமகன்கள்!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்ட நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் குடிமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நிண்ட வரிசைகளில் நின்று பொருட்களைச் வாங்கிச் சென்றிருந்தனர். அதே போல வங்கிகள் மருந்தகங்களிலும் வரிசை வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்களிலும் பெருமளவிலானொ நீண்ட வரிசைகளில் காத்து நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/141586?ref=home-imp-parsely

18 minutes ago, போல் said:
Curfew-Released-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-20.04.2020-7-720x450.jpg

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர்.

இந்நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைச் வாங்கிச் சென்றிருந்தனர். அதேபோல வங்கிகள், மருந்தகங்களிலும் நீண்ட வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்களிலும் பெருமளவானோர் நீண்ட வரிசைகளில் காத்துநின்று மதுபானங்களை வாங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Curfew-Released-Time-Jaffna-Situation-Coronavirus-Alert-Situation-20.04.2020-5.jpgCurfew-Released-Time-Jaffna-Situation-Co

Curfew-Released-Time-Jaffna-Situation-Co

Curfew-Released-Time-Jaffna-Situation-Co

Curfew-Released-Time-Jaffna-Situation-Co

பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட உடனேயே மக்கள் முன்னடித்துக்கொண்டு சாராயக் கடைகளின் முன்பு நிற்கின்ற காட்சி, அந்த மக்கள் பற்றி புலம்பெயர் மக்களுக்கு இருக்கின்ற அக்கறை, கவலை அத்தனையையும் சுக்குநூறாக உடைக்கும்படியாகவே இருக்கின்றது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்கும் முடக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வந்ததும், வடக்கிலும், கிழக்கிலும் எத்தனையோ இளைஞர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்தபடி, வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமது உறவுகளைப் போசிக்கவேண்டும் என்று களம் இறங்கி இரவு பகலாக பணிசெய்து தமது பச்சாத்தாபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அதேபோன்று வடக்கு கிழக்கில் பட்டினிச் சாவில் எமது உறவுகள் மரணிக்கப்போகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, புல்பெயர் உறவுகள் துடித்தார்கள்.

பனியிலும், குளிரிலும் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணங்களை அங்குள்ள உறவுகளுக்காக அள்ளிக் கொட்டினார்கள். பல அமைப்புக்கள் புலம்பெயர் தேசங்களில் வீடு வீடாக ஏறி இறங்கி திட்டுவாங்கி பணம் சேர்த்து உறவுகளுக்கென்று அனுப்பி வைத்தன.

https://www.ibctamil.com/srilanka/80/141596?ref=imp-news

பொறுப்பற்ற விமர்சனம் இது. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் பணத்தை அனுப்புவதால் தாம் பெரிய அண்ணன் தோரணையில் தாயக மக்களை நோக்கும் பார்வையின் தொடர்ச்சிதான் இப்படியான தலைப்புகளையும் செய்திகளையும் ஐபிசி போன்ற ஊடகங்களை போட வைக்கின்றன.

எனக்கு தெரிந்து கனடா உற்பட, அனேகமான புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 காரணமாக மதுக்கடைகள் பூட்டப்படவில்லை. ஓரளவுக்கேனும் மதுவை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. இங்கு மதுக்கடை வரிசையிம் எம்மவர்களை நான் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

நாங்கள் காசு அனுப்புகின்றபடியால நாங்கள் நினைக்கின்ற மாதிரி மட்டும் தான் நீங்கள் நடக்க வேண்டும் என புலம்பெயர் தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ளோருக்கு கட்டளையிடுகின்ற மாதிரி இருக்கு ஐபிசி யின் செய்தி.

எப்படா இந்த கோவிட்டார் மறைந்து போவார் என்ற அங்கலாய்ப்பு எங்கும் அதிகரித்து வருகிறது. அதற்கு தாயக மக்கள் மட்டுமல்ல முழு உலகமும் அப்படியே எதிர்பார்த்து உள்ளது. 

வீட்டுக்குள் முடங்கியது போதும் விடுங்கடா வெளியே என உள்ளிருந்து ஒரு அசரீதி உங்களை உலுப்புகிறது.

ஆனால் கோவிட்டார் தாக்கம் எந்தளவிற்கு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்? 

இன்னும் பல இடங்களில் அதன் தாக்கம் கண்டறியப்படாமலே விசுவரூபம் பெறுகிறது. 

ஆகவே, மக்கள் முடிந்தளவு வீட்டில் இருப்பதே எமது இனத்தை அழிவில் இருந்து காக்கும். 

  • தொடங்கியவர்
15 minutes ago, நிழலி said:

நாங்கள் காசு அனுப்புகின்றபடியால நாங்கள் நினைக்கின்ற மாதிரி மட்டும் தான் நீங்கள் நடக்க வேண்டும் என புலம்பெயர் தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ளோருக்கு கட்டளையிடுகின்ற மாதிரி இருக்கு ஐபிசி யின் செய்தி.

இது போன்ற அனாவசிய தலைப்புக்களை தற்போது பல்வேறு ஊடகங்களில் காணலாம். இது நல்லதொரு போக்கில்லை. இது போன்ற ஊடகங்களை பகிரங்கமாக விமர்சிக்காத வரையில் அவர்கள் திருந்தப் போவதில்லை.

ஆனால் இன்னொரு செய்தி எனது மனதை நெருடியது. பொருளாதார நெருக்கடியில் உள்ள மலையக "குடி"மக்கள் பெருமளவு மதுபானங்களை வாங்கினார்கள் என்பது அது.

மதியத்திற்குள் முற்றாக விற்பனையான மதுபானங்கள்

ஊரடங்குச் சட்டம் காரணமாக சுமார் ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்த மலையக பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து இன்று திறக்கப்பட்டன.

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து மதுபானங்களும் இன்று மதியத்திற்குள் முழுமையாக விற்பனை செய்யப்படடு விட்டதாக மதுபான விற்பனை நிலையங்களில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் உள்ள பல மதுபான விற்பனை நிலையங்களில் உள்நாட்டு மதுபானங்கள் அனைத்தும் முற்பகலுடன் முற்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏனைய மதுபான விற்பனை நிலையங்களில் மதியத்துடன் மதுபானங்கள் முற்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

https://www.tamilwin.com/community/01/243991

20 minutes ago, ampanai said:

ஆகவே, மக்கள் முடிந்தளவு வீட்டில் இருப்பதே எமது இனத்தை அழிவில் இருந்து காக்கும்

அது ஒன்றே தற்போது சிந்தனைகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் விடயமாக மாறியுள்ளது.

  • தொடங்கியவர்

வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சகல வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வங்கி நடவடிக்கைகளும் அரச திணைக்களங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் வழமைபோன்று தமது கருமங்களை நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி சேவைச் சந்தை உள்ளிட்ட நெருக்கமான பகுதிகளில் முறையான சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதுடன், மக்கள் முகக்கவசம் அணிந்தவாறு பாதுகாப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Curfew-Released-Time-Ampara-Situation-Co

http://athavannews.com/வழமைக்குத்-திரும்பியது-க/

மலையகத்தில் படிப்படியாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-20.04.2020.jpg

ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, கடந்த நாட்களை விடவும் சற்று குறைவான மக்களே நகர்ப் பகுதிகளுக்கு வந்திருந்தனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தன.

அரச மற்றும் தனியார் துறையினர் பணிகளை ஆரம்பிக்கும்போது சமூக இடைவெளி, நிறுவனங்களுக்கான விதிமுறை உட்பட பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை பின்பற்றப்படுவதைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளாட்சி மன்றங்களில் ஒத்துழைப்புடன் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது. பேருந்து தரிப்பிடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் தட்டுப்பாடாக உள்ள பொருட்கள் இன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

நகர்ப் பகுதிகளுக்கு வந்த மக்களுள் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினாலும் சிலர், முகக்கவசம்கூட அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தையும் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்.

வழமைபோல் இன்றைய தினமும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அரச மற்றும் தனியார் துறை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. முச்சக்கர வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. ஒரு சில பேருந்துகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Curfew-Released-Time-Upcountry-Situation

மன்னார் மாவட்டத்திலும் இயல்புநிலை ஏற்பட்டது!

மன்னார் மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் இருந்து விடுபட்டு படிப்படியாக இயல்பு நிலையை நோக்கித் திரும்பிவருகின்றனர்.

ஊரடங்கு்ச சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில் அரச போக்குவரத்துச் சேவைகள் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையில் இடம்பெற்று வருகின்றன. தனியார் சேவைகள் முழுமையாக இடம்பெறவில்லை. அதேநேரத்தில், நீதிமன்ற செயற்பாடுகளும் இன்று இடம்பெறத் தொடங்கியுள்ளது.

அத்துடன், கடந்த ஊரடங்குத் தளர்வு காலங்களைவிட இம்முறை மிகவும் குறைந்த அளவிலான மக்களே பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

அதிகளவான, வர்த்தக நிலையங்கள் இயங்கிய நிலையிலும் சன நெரிசல் குறைவாகக் காணப்பட்டதுடன் மக்கள் பொது இடங்களிலும் பேருந்துகளிலும் தங்களுடைய சமூக இடைவெளியைப் பின்பற்றினர்.

அத்துடன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று மதுபானசாலைகள் திறக்கப்பட்டமையினால் அதிகமான மதுப் பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானத்தை வாங்கிச் சென்றமையை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Curfew-Released-Time-Mannar-Situation-Co

http://athavannews.com/மன்னார்-மாவட்டத்திலும்-இ/

1 hour ago, போல் said:

யாழ். மதுபான நிலையங்களில் குவிந்த குடிமகன்கள்!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்ட நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் குடிமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நிண்ட வரிசைகளில் நின்று பொருட்களைச் வாங்கிச் சென்றிருந்தனர். அதே போல வங்கிகள் மருந்தகங்களிலும் வரிசை வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்களிலும் பெருமளவிலானொ நீண்ட வரிசைகளில் காத்து நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/141586?ref=home-imp-parsely

இவர்களுக்கு நிம்மதியாக  உட்கார்ந்து குடித்து  மகிழ அழகான  பார் கட்டி கொடுத்திருந்தால்  இப்படி வெயிலில் கியூவில் நின்று வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது தானே. 😀😀😀

1 hour ago, போல் said:

மலையகத்தில் உள்ள பல மதுபான விற்பனை நிலையங்களில் உள்நாட்டு மதுபானங்கள் அனைத்தும் முற்பகலுடன் முற்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குடி குடியைக் கெடுக்கும் எனச் சொல்வார்கள். 
பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் எனவும் சொலவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பொறுப்பற்ற விமர்சனம் இது. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் பணத்தை அனுப்புவதால் தாம் பெரிய அண்ணன் தோரணையில் தாயக மக்களை நோக்கும் பார்வையின் தொடர்ச்சிதான் இப்படியான தலைப்புகளையும் செய்திகளையும் ஐபிசி போன்ற ஊடகங்களை போட வைக்கின்றன.

எனக்கு தெரிந்து கனடா உற்பட, அனேகமான புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 காரணமாக மதுக்கடைகள் பூட்டப்படவில்லை. ஓரளவுக்கேனும் மதுவை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. இங்கு மதுக்கடை வரிசையிம் எம்மவர்களை நான் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

நாங்கள் காசு அனுப்புகின்றபடியால நாங்கள் நினைக்கின்ற மாதிரி மட்டும் தான் நீங்கள் நடக்க வேண்டும் என புலம்பெயர் தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ளோருக்கு கட்டளையிடுகின்ற மாதிரி இருக்கு ஐபிசி யின் செய்தி.

நீங்கள் உட்பட எல்லோரும் முன்னேறத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் 
பணம் அனுப்புவதால் அவர்கள் அனுப்பவர்கள் சொல்லபடி நடக்க வேண்டும் என்று இல்லை 
பணம் அனுப்பாது இருந்தாலும் ஒரு முன்னேற்ற பாதை என்பதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியானது 

இதில் வீதாசாரமும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும் 
5 லட்ஷம் பேருக்கு இரண்டு மதுக்கடைகள் இருப்பின் 
ஒரு 200 பேர் திரண்டாலே பெரிய வரிசை போலவும் நெரிசல் போலவும் இருக்கும் 

அதே நேரம் இரண்டு வாரம் வீடுகளுக்குள் அடைபட்டு கிடந்த 
200 பேர்கள் வெளியில் வந்து அதி முக்கிய விடயமாக எதை செய்கிறார்கள்?
என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் 

தமிழ்நாடு அரச மது விற்பனையாலேயே தள்ளாடி கிடக்கிறது 
என்ற உண்மையையும் நாம் மறக்கலாகாது. 

கனடாவில் கஞ்சா விற்பனை சட்டரீதியாக விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு நுகர்வோர் பொருள் மட்டுமல்ல, அத்தியாவசிய பொருளும் ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

பொறுப்பற்ற விமர்சனம் இது.

வீட்டுக்குள்ள குந்தி இருந்து கொண்டு முழுசிக் கொண்டிருக்கிற எங்களை பனியிலும், குளிருளுமாம்....

இவர்களது செய்திகளுக்கு ஒரு காமன் சென்ஸ் கிடையாது....🙄

மீண்டும் மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-மதுபான-நிலையங்களுக்கு-பூட்டு/175-249002

  • கருத்துக்கள உறவுகள்

மறு அறிவத்தல் வரும் வரை சகல மதுபாண சபலைகளும் முடச்சொல்லி அறிவித்தல் வந்துள்ளது.இப்ப சந்தோசம் தானே.

12 minutes ago, சுவைப்பிரியன் said:

மறு அறிவத்தல் வரும் வரை சகல மதுபாண சபலைகளும் முடச்சொல்லி அறிவித்தல் வந்துள்ளது.இப்ப சந்தோசம் தானே.

நிச்சயமாக சந்தோசம் இல்லை சுவைப்பிரியன். Schade. 

35 minutes ago, ampanai said:

மீண்டும் மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-மதுபான-நிலையங்களுக்கு-பூட்டு/175-249002

கள்ள சாராயம், ஆபத்தான குடிவகைகள்  - இவற்றின் பாவனை அதிகரிக்கும். அதில் ஆபத்தும் உள்ளது. 

13 hours ago, போல் said:

இது போன்ற அனாவசிய தலைப்புக்களை தற்போது பல்வேறு ஊடகங்களில் காணலாம். இது நல்லதொரு போக்கில்லை. இது போன்ற ஊடகங்களை பகிரங்கமாக விமர்சிக்காத வரையில் அவர்கள் திருந்தப் போவதில்லை.

ஆனால் இன்னொரு செய்தி எனது மனதை நெருடியது. பொருளாதார நெருக்கடியில் உள்ள மலையக "குடி"மக்கள் பெருமளவு மதுபானங்களை வாங்கினார்கள் என்பது அது.

மதியத்திற்குள் முற்றாக விற்பனையான மதுபானங்கள்

ஊரடங்குச் சட்டம் காரணமாக சுமார் ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்த மலையக பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து இன்று திறக்கப்பட்டன.

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து மதுபானங்களும் இன்று மதியத்திற்குள் முழுமையாக விற்பனை செய்யப்படடு விட்டதாக மதுபான விற்பனை நிலையங்களில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் உள்ள பல மதுபான விற்பனை நிலையங்களில் உள்நாட்டு மதுபானங்கள் அனைத்தும் முற்பகலுடன் முற்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏனைய மதுபான விற்பனை நிலையங்களில் மதியத்துடன் மதுபானங்கள் முற்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

https://www.tamilwin.com/community/01/243991

அது ஒன்றே தற்போது சிந்தனைகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் விடயமாக மாறியுள்ளது.

எங்கள் ஊர் பாடசாலை அதிபரிடம் இன்று கதைத்தேன்.  எங்கள் ஊர் தண்ணி கடை வரிசை கோவிலை சுற்றி நிற்பதாக சொன்னார்.

அதில் எண்பது விகிதமானவர்கள் வெளிநாட்டு உள்நாட்டு உதவி பொருட்கள் பெற்றவர்கள்.  வீட்டுக்கு கொண்டுபோகாமல் அரை விலைக்கு விற்று குடிக்கிறார்கள்.

9 hours ago, விவசாயி விக் said:

உங்கள் ஊர் பாடசாலை அதிபர் பேய்க்காய் போல இருக்கு. அதிபருக்குரிய பொறுப்புகளுக்கும் மேலாக ஊரில எவரெவர் வெளினாட்டு காசிலும் உதவிப் பொருட்களிலும் வாழ்கினம், அதில் எவரெவர் தண்ணி வரிசையில் நிற்கினம், எவரெவர் வீட்டுக்கும் கொண்டு போகாமல் அரைவாசி விலைக்கு விற்கினம் என்று  தேவையில்லாத விடுப்புகளையும் பார்க்கும் அளவுக்கு பேய்க்காய் போல. ஒரு வேளை அவரும் அதிபர் சமபளம் காணாது என்று வெளினாட்டு உதவிகளை பெற்று சீவிக்கிறாரோ தெரியவில்லை....பாவம்

9 hours ago, விவசாயி விக் said:

எங்கள் ஊர் தண்ணி கடை வரிசை கோவிலை சுற்றி நிற்பதாக சொன்னார்.

வடக்கில தொப்பியும் போட்டு முகத்தை இறுக்கி மூடிகட்டிக்கொண்டு வரிசைல நிக்கிற பலர் இன்னமும் வேலைக்கு போகாத இளைஞர்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

உங்கள் ஊர் பாடசாலை அதிபர் பேய்க்காய் போல இருக்கு. அதிபருக்குரிய பொறுப்புகளுக்கும் மேலாக ஊரில எவரெவர் வெளினாட்டு காசிலும் உதவிப் பொருட்களிலும் வாழ்கினம், அதில் எவரெவர் தண்ணி வரிசையில் நிற்கினம், எவரெவர் வீட்டுக்கும் கொண்டு போகாமல் அரைவாசி விலைக்கு விற்கினம் என்று  தேவையில்லாத விடுப்புகளையும் பார்க்கும் அளவுக்கு பேய்க்காய் போல. ஒரு வேளை அவரும் அதிபர் சமபளம் காணாது என்று வெளினாட்டு உதவிகளை பெற்று சீவிக்கிறாரோ தெரியவில்லை....பாவம்

ஊரில் உழைக்கும் காசு அத்தியாவசிய தேவைகளையே நிறைவுசெய்யவே காணாதிருக்கும்போது  மதுக்கடைகளில் வரிசையில் நிற்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்களை  என்ன சொல்லி நோவது. இவர்களெல்லாம் யாழ் கள மட்டுறுத்தினார்களாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வெளி நாட்டில் இருப்பவர்கள் அரிசி பருப்பு வாங்கும் அதே கடையில் 2 போத்தலை வாங்கிக் கொண்டு போய் அடித்தால் ஒரு காக்காவுக்கும் தெரியாது.ஊரில் உள்ளவை அதுக்கென்டு ஓதுக்கப்பட்ட இடத்தில்தான் வாங்க வேண்டியிருக்கு.அதைப்போய்படம் பிடித்து செய்தி போடுற ஆக்களை என்ன செய்ய.

23 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன வெளி நாட்டில் இருப்பவர்கள் அரிசி பருப்பு வாங்கும் அதே கடையில் 2 போத்தலை வாங்கிக் கொண்டு போய் அடித்தால் ஒரு காக்காவுக்கும் தெரியாது.

சுப்பர்மார்க்கெட் வழிய கிடைக்கும்

23 hours ago, Maruthankerny said:

அதே நேரம் இரண்டு வாரம் வீடுகளுக்குள் அடைபட்டு கிடந்த 
200 பேர்கள் வெளியில் வந்து அதி முக்கிய விடயமாக எதை செய்கிறார்கள்?
என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் 

நிறைய பேர் அதிவிசேஷம் தேடி தலைதெறிக்க ஓடின இடம் வைன் ஸ்டோர்ஸ்க்கு தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சாராய பார்களை அரசு திறக்க வேண்டும் இல்லாட்டால் பலர் காய்ச்சுற கசிப்பு என்று சொல்கிறார்கள் அதை குடித்து இடையிலே இறந்து போய்விடுவார்கள் போல் இருக்கு இங்கு நிலமை 

சிலரை பார்க்கும் போது சாராயம் இல்லாமலே செத்திடும் நிலமைக்கு வந்த நிலையில்  அடிமை என்ற ஆன பிறகு சாணென்ன முளமென்ன பூட் சிட்டியில் பணக்காரன் வாங்கிப்போகிறான் மற்றவன் லைனில் நின்று வாங்குறான் 

அரசாங்கம் கடை திறக்கிறது ஆனால் யாரை இழுத்துக்கொண்டு நீங்கள் வாங்கியே ஆகவேண்டுமென்று சொல்லவில்லை அரசுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் 

2 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன வெளி நாட்டில் இருப்பவர்கள் அரிசி பருப்பு வாங்கும் அதே கடையில் 2 போத்தலை வாங்கிக் கொண்டு போய் அடித்தால் ஒரு காக்காவுக்கும் தெரியாது.ஊரில் உள்ளவை அதுக்கென்டு ஓதுக்கப்பட்ட இடத்தில்தான் வாங்க வேண்டியிருக்கு.அதைப்போய்படம் பிடித்து செய்தி போடுற ஆக்களை என்ன செய்ய.

அரிசி , பருப்பு வாங்கும் கடையில்  போத்தல் சகஜமாக வாங்க கூடிய நிலையும், சாதாரண தேனீர்ச்சாலையில், அல்லது  மதிய உணவு எடுக்கும் றெஸ்ர்ராண்டில் பக்கத்தில் குடும்பதோடு ஒருவர் மதிய உணவை எடுத்துக்கொண்டிருக்கும் போது பியரோ, சாராயமோ குடிக்க கூடிய நிலையும் இருக்குமானால் அந்த நாட்டில் நல்ல மனித பண்பாடு,கலாசாரம் நிலவுவதாக அர்த்தம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.