Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவிற்கு பலி ஆகும் உலக தமிழர்கள்

Featured Replies

24/04

மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி!

லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24.04.2020) கொரோனா தாக்கி பலியானார்.  

மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

 

 

பிரான்ஸ்(24/04?)

கொரொனா பலிகள் இன்னும் ஓரிரு நாட்களில் உலகம் முழுவதுமாக 2 லட்சத்தை எட்டிவிடப் போகிறது. யாரோ எவரோ இறக்கும் போது அது வெறும் எண்ணிக்கையாகவே எமக்குப் படும். ஆனால் நன்கு அறிந்தவர்கள் இவ்வாறு பலிகொள்ளப்படும் போது நெஞ்சு கனக்கிறது. இந்த வாழ்வின் மீது பற்றற்றுப் போய்விடுகிறது. 

ஜெகன் அண்ணா...!

இந்த கொரொனா தனிமைப்படுத்தல் காலத்தில் மாரடைப்பால் எம்மைவிட்டு பிரிந்துள்ளார்.

லா சப்பல் பகுதியில் காணும் நேரமெல்லாம் புன்முறுவலுடன் தலையாட்டுவார். கடைக்கு வரும் போதெல்லாம் அளவாக பேசுவார், ஆனால் அதில் ஒரு நெருக்கம் இருக்கும். அவரின் அறிவுப் புலமையே இதன் காரணமாகவும் இருக்கலாம். நிறைகுடங்கள் அப்படியே..!!

லா சப்பல் நாணா கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் தோன்றும் இவருடன் நானும் நிறைய பேச பழக வேண்டுமென்று... ஆனால் இந்தப் பேரிடர் காலம் இவரையும் பறித்துக் கொண்டது பெரும் சோகம்.

அமைதியில் ஆறுதலடையுங்கள் அண்ணா. காலத்தால் எம் நினைவோடு இருப்பீர்கள். 

பிள்ளைகளதும் குடும்பத்தாரதும் கரங்களை பற்றி ஆறுதல் தெரிவிக்கின்றோம். 

போய்வாருங்கள்.

யேர்மனி24/04

 

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை கொடிய கொரோனா தொற்றினால் சாவடைந்துள்ளார்.
இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகி வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்துள்ளார்;.
எமது கண்ணீர் வணக்கம்.

  • தொடங்கியவர்

ஜெர்மனியில் செல்வி கரியற் கிரிஸ்ரினா பலி!

ஜெர்மனி நாட்டில் வசித்து வரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா [ வயது 22] என்ற இளம் பெண் தீடீர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்து,  கல்வியிலும் சிறந்து விளங்கி உயர் கல்வி கற்று வரும் நிலையில் பலியானார். இவரின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கனடா-வில் பொன்னம்பலம் உத்தமலிங்கம் கொரோனா-வுக்கு பலி!

கிழக்கு யாழ். கோண்டாவில் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தொற்றால் காலமானார்.  

மறைந்த பொன்னம்பலம் உத்தமலிங்கத்தின் வயதான மனைவியும் கொரோனா-வினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார் என்பது வருத்தமான செய்தியாக இருக்கிறது.

 

 

 

  • தொடங்கியவர்

கொரோனா தாக்கி புகழ் பெற்ற ஈழத் தமிழர் நாடக - திரைப்படக் கலைத்தந்தை பிரான்சில் பலி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையின் புகழ் பெற்ற நாடகக் கலைஞர் ஏ.ரகுநாதன்  22.04.2020 மதியம் 14:00 மணியளவில் கொரோனா தொற்றிற்கு பலியானார்.

இலங்கையின் திரைத்துறையில் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்ட புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ் பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் புகழ் பெற்றிருந்தார்..

இலங்கையில் 1960களின் இறுதிக்காலப் பகுதியில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலப் பகுதியில் ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டிருந்தார். அதனால் அவர் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற நாடகக் கலைஞர் கலையரசு சொர்ணலிங்கத்தின் வழிகாட்டலில் தன்னுடைய கலையுலகப் பயணத்தை தொடங்கிய அவர் திரைப்படத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இலங்கைத் தமிழ் திரைப்படங்களான நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று நடித்துள்ளார்.

கலைஞர் இரகுநாதன், வானொலி நாடகம், மேடை நாடகம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றவராக விளங்கியதுடன் திரைப்படத் துறையிலும் பல்வேறு ஆற்றல்களைக் கொண்டு விளங்கியிருக்கின்றார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியிருந்த நேர்காணலின் ஒரு பகுதியாக தன்னைப் பற்றித் தெரிவிக்கையில்,

சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்று எழுதியிருக்கின்றேன் ஆனால் நாடகத்தில் தான் என் முழு நாட்டமும் இருந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்த எஸ்.டி.அரசு, கொழும்பில் சுவைர் ஹமீட், லடீஸ் வீரமணி என்று அந்தக் காலத்தில் மிகச்சிறந்த நெறியாளர்கள் அத்தனை பேரின் நெறியாள்கையில் நான் நடித்திருக்கின்றேன். இப்பொழுது கூட இங்கே சுவிஸில் இருக்கும் அன்ரன் பொன்ராஜ், சுபாஷ் என்று பலருடைய நெறியாள்கையில் நடித்திருக்கின்றேன்.

பள்ளிக்கூட நாடகங்கள் பலவற்றுக்குப் பயிற்சி கொடுக்க சொர்ணலிங்கம் ஐயா என்னைத் தான் அனுப்புவார் என்பது எனக்குப் பெருமை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை இலங்கையில் வாழ்கின்ற நாடகத்துறை சார்ந்த மிக மூத்த கலைஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இராஜாக்களின் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஆற்றலும் அழகும் கம்பீரமும் கொண்ட அவர் மிகச் சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தவல்லவர்.

அதேபோல இராவேணசன் போன்ற இலங்கையின் புகழ்பெற்ற நாடக கதா பாத்திரங்கள் உருவாக்கம் பெற்ற காலங்களில் அவற்றினை மெருகேற்றுவதிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார் என்றும் அவருடைய இழப்பு இலங்கையின் பாரம்பரிய நாடகத் துறைக்கு பாரிய இழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவர்இ அங்கும் நாடகம்-திரைப்படம் என்பனவற்றில் ஈடுபட்டு வந்தார்.

2016ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐபிசி தமிழா நிகழ்ச்சியில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மாண்பேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#########################

 

 

 

 

பிரான்சில் அடுத்தடுத்து பலியாகும் தமிழர்கள்; COVID-19!!

பிரான்சில் கொரனாவின் வைரஸால் வேலணை அம்மன் கோவிலடி 3 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராசன் அவர்கள் 20.04.2020 இன்று பிரான்சில் காலமானார்.

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

Northwest London UK, குடும்பத்தில் கணவன், மனைவி, ஒரு பிள்ளையாக 14 வயது மகன். 

கணவனும், மனைவியும் கோரனாவால் வைத்தியசாலையில், நிலைமை ஒருவருக்கும் தெரியாது.

உறவினர்கள், நண்பர்கள் அந்த மகனை தம்முடைய வீடுகளில் சேர்த்து வைத்திருப்பதற்கு கொரோன பயம் காரணாமாக விருப்பமில்லை, அறவே மறுத்தும் விட்டார்கள் சிலர்.

சில உறவினர்கள், நண்பர்கள் சமைத்த உணவை வீடு வாசலில் வைத்து விட்டு, கதவை தட்டி தெருவோரம் நின்று மகன் வெளியில் வந்து எடுப்பதை பார்த்து விட்டு திரும்புகிறார்கள்.

அந்த மகனின் நிலையை என்னவென்று சொல்வது? 

24 minutes ago, Kadancha said:

Northwest London UK, குடும்பத்தில் கணவன், மனைவி, ஒரு பிள்ளையாக 14 வயது மகன். 

கணவனும், மனைவியும் கோரனாவால் வைத்தியசாலையில், நிலைமை ஒருவருக்கும் தெரியாது.

உறவினர்கள், நண்பர்கள் அந்த மகனை தம்முடைய வீடுகளில் சேர்த்து வைத்திருப்பதற்கு கொரோன பயம் காரணாமாக விருப்பமில்லை, அறவே மறுத்தும் விட்டார்கள் சிலர்.

சில உறவினர்கள், நண்பர்கள் சமைத்த உணவை வீடு வாசலில் வைத்து விட்டு, கதவை தட்டி தெருவோரம் நின்று மகன் வெளியில் வந்து எடுப்பதை பார்த்து விட்டு திரும்புகிறார்கள்.

அந்த மகனின் நிலையை என்னவென்று சொல்வது? 

கவலைக்குரிய நிலைமை. பெற்றோர் நலம் பெற வேண்டுவோம்.

மகன் 18 வயதிற்கு மேலானவர் என தெரிகின்றது. அப்படியானால், அவரை அவர் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

கவலைக்குரிய நிலைமை. பெற்றோர் நலம் பெற வேண்டுவோம்.

மகன் 18 வயதிற்கு மேலானவர் என தெரிகின்றது. அப்படியானால், அவரை அவர் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். 

பிள்ளையாக 14 வயது மகன்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kadancha said:

Northwest London UK, குடும்பத்தில் கணவன், மனைவி, ஒரு பிள்ளையாக 14 வயது மகன். 

கணவனும், மனைவியும் கோரனாவால் வைத்தியசாலையில், நிலைமை ஒருவருக்கும் தெரியாது.

உறவினர்கள், நண்பர்கள் அந்த மகனை தம்முடைய வீடுகளில் சேர்த்து வைத்திருப்பதற்கு கொரோன பயம் காரணாமாக விருப்பமில்லை, அறவே மறுத்தும் விட்டார்கள் சிலர்.

சில உறவினர்கள், நண்பர்கள் சமைத்த உணவை வீடு வாசலில் வைத்து விட்டு, கதவை தட்டி தெருவோரம் நின்று மகன் வெளியில் வந்து எடுப்பதை பார்த்து விட்டு திரும்புகிறார்கள்.

அந்த மகனின் நிலையை என்னவென்று சொல்வது? 

கொடுமை.
 

2 hours ago, Nathamuni said:

பிள்ளையாக 14 வயது மகன்??

தவறு என்னுடையது, கவனிக்கவில்லை. 

14 வயது என்றால் minor, அரசு தான் பொறுப்பு எடுக்கவேண்டும் என எண்ணுகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

தவறு என்னுடையது, கவனிக்கவில்லை. 

14 வயது என்றால் minor, அரசு தான் பொறுப்பு எடுக்கவேண்டும் என எண்ணுகின்றேன் 

சொந்தக்காரர்கள் அரசு அதிகாரிகளுக்கு சொல்லி, அவருக்கு டெஸ்ட் பண்ணி, வைரசு இல்லை என்றால், தமது வீட்டுக்கு அழைத்துக் கொள்ளலாம். அதுவே வழி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

Northwest London UK, குடும்பத்தில் கணவன், மனைவி, ஒரு பிள்ளையாக 14 வயது மகன். 

கணவனும், மனைவியும் கோரனாவால் வைத்தியசாலையில், நிலைமை ஒருவருக்கும் தெரியாது.

உறவினர்கள், நண்பர்கள் அந்த மகனை தம்முடைய வீடுகளில் சேர்த்து வைத்திருப்பதற்கு கொரோன பயம் காரணாமாக விருப்பமில்லை, அறவே மறுத்தும் விட்டார்கள் சிலர்.

சில உறவினர்கள், நண்பர்கள் சமைத்த உணவை வீடு வாசலில் வைத்து விட்டு, கதவை தட்டி தெருவோரம் நின்று மகன் வெளியில் வந்து எடுப்பதை பார்த்து விட்டு திரும்புகிறார்கள்.

அந்த மகனின் நிலையை என்னவென்று சொல்வது? 

 

ஊரிலென்றால் எத்தனை பேர் பார்ப்பார்கள் வீட்டில் வைத்து, அந்த சிறுவனின் மனநிலை தனிமையில் இருக்கும் போது எப்படியிருக்கும், கொரொணாவல் எத்தனை அவலங்கள்

  • தொடங்கியவர்


பாரிஸ் (France ) கலைக்குழுமங்களில் செயலாற்றியவரும் 
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் பாரீஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மொறிஸ் கிறிஸ்ரி றெஜி இம்மானுவேல் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று கொரோனா நோயின் பிடியில் சிக்கி இறைவனடி சேர்ந்தார். 
 .

******************************

 

ஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்.

தமது  முத்து எயில்மெண்ட் என்கிற சிறிய அங்காடி நடத்தி பல ஈழ புலம் பெயர்ந்த சொந்தங்களுக்கும் கொரானாவில் பாதிக்கப்பட்வருக்கும் உதவி செய்தவர் அதே கொரானாவுக்கு பலி ஆனார்.

அவருக்கு பதிமூன்று வயதில் மகள் ஒருவர் மற்றும் அம்மா உள்ளார்..

  • தொடங்கியவர்

 

############£££££###££££££££

லண்டனின் பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனாவிற்கு பலி!

லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

 

 

###################

லண்டனில்  ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!

யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனில் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு. தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020 செவ்வாய்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

####££££########£££££

கொரோனா தொற்றினால் கனடாவின் ஜவஹர்லால் நேரு தம்பதிகள் பலி!

தமிழர்களால் நேரு ஜயா என அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு குமாரசாமி அவர்கள் சென்ற செவ்வாய் கிழமை (14-04-2020) கொரோனாத் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் மரணமானார்.  அவர் இறந்த அடுத்த தினமே துணைவியார் ராஜேஸ்வரி புதன் கிழமை (15-4-2020) மரணமடைந்தார்.

 

 

##############££££##£££££

கொரோனா தாக்கி பிரான்ஸில் மேலும் ஒரு தமிழர் மரணம்!

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸில் உள்ள வில்னெவ் சென் ஜோர்ஜ் என்னுமிடத்தை வாழ்விடமாக கொண்ட திரு. தெய்வேந்திரன் நவரத்தினம் இன்று மாலை (15.04.2020)  கொரோனா தாக்கி மரணமடைந்தார்.  இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • தொடங்கியவர்

##########£££££££££######

மனைவி இறந்த மறுநாளே கணவரும் கொரோனா தாக்கி மரணம்!

நேற்று 13-ம் தேதி கனடா, டொரன்டோ நகரில் 56 வயதான திருமதி. புஸ்பராணி கொரோனா தாக்கி மரணமடைந்தார் திருமதி புஸ்பராணியின் கணவர் திரு. நாகராஜா அவர்கள் கொரோனா தொற்றால் மாண்டு போனார் என்ற செய்தி மேலும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

பிரித்தானியாவில்... மேலும் ஒரு தமிழ்  பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

இதுவரை 28 மேற்பட்ட தமிழர்கள் இலண்டனில் மட்டும், 
கொரோனாவினால் காவு வாங்கப்பட்ட நிலையில், 
இன்று (26-04-2020) மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
திருமதி. அகஸ்ரின் தங்கராணி என்பவர் குடும்பத்தோடு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தார். 
அவர் இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாக கொண்டவர். 
அவர் கொரோனா தொற்று அண்மையில் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
சிகிச்சை பயனளிக்காமல், இன்று அவர் உயிரிழந்தார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

  • தொடங்கியவர்

சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தீவகம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்பு யோகநாதன் (வயது-62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

Fb 

  • தொடங்கியவர்


நீண்ட காலத் தமிழ்த் தேசியப் பற்றாளரும், செயற்பாட்டாளருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனா கொல்லுயிரியால் எம்மிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டார்.#FB

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தாக்கத்தில் மற்றொரு ஈழத் தமிழர் பிரித்தானியாவில் மரணம்

98-2.jpegகொரோனா தாக்கத்தினால் மேலுமொரு ஈழத் தமிழர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

லோகசிங்கம் பிரதாபன் என்பவரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

http://thinakkural.lk/article/40109

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் பிரதாபன் காலமானார்

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் பிரதாபன் காலமானார்

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளரும் பலவகைகளில் முன்னின்று உழைத்தவருமான திரு லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் தனது 52வது வயதில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் காலமானார். ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் போராடி மீண்டு வந்து விடுவார் என நம்பியிருந்த நிலையில் இன்று மே 2ஆம் நாள் காலையில் சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மிகவும் உற்சாகமான, தான் பங்கெடுக்கின்ற அனைத்து விடயங்களலும் முன்னின்றும் உழைக்கும் ஒருவர். தாயகம் சார்ந்த பணிகளில் தன் பங்களிப்பை தன்னால் முடிந்தவரையில் காத்திரமாகச் செய்து வந்தவர்.

விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட பிரதாபன் அவர்கள், எங்களது மக்களுக்கான பிரித்தானிய தழுவிய இல்ல மெய்வல்லுநர் போட்டியை ஒழுங்குபடுத்தி அதனை திறம்பட நடாத்தியவர்களுள் முதன்மையானவர். பிரித்தானியாவில் நடாத்தப்படுகின்ற பல விளையாட்டுத்துறையின் நிர்வாகிகளில் ஒருவர்.இயல்பாகவும் மிகவும் எளிமையாகவும் பழகும் இவர் அலாதியான நிர்வாகத் திறமை கொண்டவர்.

லண்டனில் Stonebridge Parkல் Bridge Park Hotelஐ நடாத்தி வந்த பிரதாபன் தொழில்முறையிலும் சிறந்து விளங்கியவர். தமிழ் தேசிய பணிகள் நிமித்தம் தாயகம் மற்றும் ஏனைய இடங்களில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் செயற்பாட்டளர்கள் பலர் இவரது விடுதியில் பல நாட்கள் இலவசமாக தங்கி செல்வது வழமை.

 

http://www.samakalam.com/செய்திகள்/நீண்டகால-தமிழ்த்-தேசியப்/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து  கொள்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரணங்களை பார்க்கும்போது மனம் கணக்கிறது. அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்

யாழ்-குருநகரை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட ( Eric Walter )நரேந்திரா நேற்று (02-05-2020 கொரோனாவின் கொடிய தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக பலியாகிய அனைத்து எம் தமிழ் உறவுகளுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.

உதயன் 😔

கோவிட்-19: புலம்பெயர் தமிழரில் அதிக உயிரிழப்பிற்கு என்ன காரணம்

ஈழத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஈழத்தமிழர்கள் எவரும் மரணித்ததாக தகவல் இல்லை.

அதேவேளை தமிழகத்தில் இதுவரை 31 பேர் மரணித்ததாக தகவல். அதிலும் சிலர் தமிழரல்லாது இருக்கும் வாய்ப்பு உண்டு.

ஆனால் புலம் பெயர் தமிழரிடையே மட்டும் 40தை மரணம் கடந்திருக்கிறது. அதற்கு மேல் எவ்வளவு எண்ணிக்கை என்ற வாதப்பிரதிவாதங்கள் உண்டு.

இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியன அதிக இறப்புக்களை பதிவு செய்துள்ளன. எண்ணிக்கையில் ஈழத்திலும் விட 3 மடக்கு குறைவான, அதேவேளை தமிழகத்தை விட 80 மடங்கு குறைவான,

புலம்பெயர் தமிழரிடையே எவ்வாறு இவ்வாறான அதிகரித்த கோவிட்-19 இறப்புக்கள் சாத்தியமாயின?

உணவுமுறை, வாழ்க்கைமுறை, ஆரோக்கியம் பேணலில் குறைபாடு, நோய்த் தாக்கங்கள், சுவாத்தியமற்ற வாழ்வு?

குடும்ப பொருளாதார நெருக்கடியால் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலத்தில் கவனக்குறைவாக இருந்தமை? 

எங்களை இது ஒன்றும் செய்யாது என இருந்த கவனக்குறைமை ?

வரும் இழப்புக்களை தவிர்ப்போம்.

கவனமாக யாவரும் இருந்திடுவோம். 

உயிர்களை காப்போம் 

 

 

  • தொடங்கியவர்


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் அங்கத்தவரும், அதன் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்தவருமான ஈஸ்வரபாதம் கிருபாகரன் (கிருபா) அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கனடாவில் ஏப்ரல் 24, 2020 அன்று இயற்கையெய்தினார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.