Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது…

May 2, 2020

Sithadthan-MP.jpg

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு்ளதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என,  யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாகவும், மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரா.சம்பந்தனுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
 

http://globaltamilnews.net/2020/142066/

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கு  கொரனோ  பிடிக்கிதில்லை தமிழ்ச்சனத்துக்கு  அப்படியாவது ஒரு விடிவு வரும் என்று யோசிக்க வேண்டி உள்ளது .

4 hours ago, கிருபன் said:

மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாகவும்,

என்னமா நடிக்கிறாங்க.

உருப்படாத 3 தலைவர்கள் + அதுக்கேத்த உருப்படவே தெரியாத சம்பந்தன், நீங்க அவங்க பின்னால அலைஞ்சு அலைஞ்சு அரசியல் செய்ற கோஷ்டி தானே.

ராஜபக்ச கோஷ்டியை சந்திக்கும்போது சிவராமின் கொலைகாரர்களை கைது செய்து தண்டனை வழங்க வேணும் என்டும் கேளுங்கோ.

இதுக்கு பின்னால சதிகார சுமந்திரன் இருக்கிற எல்லாருக்கும் விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இதுகளுக்கு  கொரனோ  பிடிக்கிதில்லை தமிழ்ச்சனத்துக்கு  அப்படியாவது ஒரு விடிவு வரும் என்று யோசிக்க வேண்டி உள்ளது .

அரச விசுவாசிகள் கலந்து கொள்ளாமல் அரசாங்கம் ஏது பெருமாள் 

 

60.jpg

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லும் கூட்டமைப்பு!

In இலங்கை     May 3, 2020 5:32 am GMT     0 Comments     1094     by : Litharsan

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவுள்ளது.

இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக செல்வம் அடைக்கலநாதனிடம் இன்று வினவியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ஆராயப்படவுள்ளது. மேலும் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தலுக்கான முப்படையினருடைய முகாம்கள் எங்களுடைய பிரதேசத்திலே மக்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் காணப்படுகின்ற நிலை உள்ளது. இது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

குறிப்பாக எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினை, மீனவ சமூகத்தின் பிரச்சினை, சிகையலங்கார தொழிலாளர்களின் பிரச்சினை, அன்றாட கூலி வேலை செய்கின்ற மக்களின் பிரச்சினை, விவசாயிகள், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளது.

அத்துடன், மாணவர்களின் தற்போதைய கல்வி செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் விவாதிக்க இருக்கின்றோம். முக்கியமான இலங்கை அரசாங்கம் எங்களுடைய மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்திற் கொள்ளாது இருப்பது தொடர்பாகவும் நாங்கள் சுட்டிக்காட்ட இருக்கின்றோம்.

http://athavannews.com/தமிழ்-மக்களின்-முக்கிய-ப/

1 minute ago, Rajesh said:

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ஆராயப்படவுள்ளது. மேலும் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இதையெல்லாம் பேசி இறுதில தன்ர மகனுக்கு ஒரு உயர் அரச பதவியை பெற்றுவிடுவார் செல்வம் அடைக்கலநாதன்.

‘பிரதமரின் அழைப்புக்கு செல்லமாட்டோம்’

அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அந்த பேஸ்புக் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளாது என்று தான் எண்ணுவதாகவும் அவர்களது நிலைப்பாடுகளை அந்தந்தக் கட்சிகளே கூறவேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் செயலாளர் கூறியிருந்தாலும் அக்கட்சியின் நிலைப்பாடு மாற இடமுண்டு என்றும் எது எப்படியாயினும் மிகப் பெரும்பான்மை எம்.பிக்களே தங்கள் வசமே உள்ளனர் என்றும் அவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாம் கோருவது, சபாநாயகர் தலைமையில், நாடாளுமன்றக் கூட்டம். இங்கே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம், பிரதமர் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம். இதற்கு எந்தவித உத்தியோகப்பூர்வ அந்தஸ்தும் கிடையாது.

“பிரதமர் வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். அல்லது அவரது ஆளும் கட்சி எம்.பிக்களை கூட்டி பேசலாம். இவை எப்போதும் நடக்கின்ற கூட்டங்கள் ஆகும்.

“ஆனால், சபாநாயகர் தலைமையில் நடைபெறும், கூட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட, உத்தியோகப்பூர்வ அந்தஸ்து கொண்ட, நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசும் விடயங்களை, பிரதமர் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தில் பேசி எதுவும் ஆக போவதில்லை.

“பிரதமரின் அழைப்பை ஏற்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு தெரிவித்த யோசனைகள் எதுவும் இதுவரை அரசாங்கத்தால் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டுதான் நாம் எமது இந்த நிலைபாட்டை எடுத்துள்ளோம்.

“தேசிய இடர் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, மக்கள் மத்தியில் ஏற்புடைமை பெற்று வருவதை கண்ட அரசாங்கம் பதட்டமடைந்து, அதை சமாளிக்க செய்யும் தந்திரமாகவே இதை நாம் பார்க்கிறோம். இதில் நாம் அகப்பட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள அரசாங்கத்திடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன என்று கூறியுள்ள அவர், கொரோனா நிவாரணத்துக்கு எவ்வளவு வெளிநாட்டு நிதி வந்தது, எவ்வளவு உள்நாட்டு நிதி வந்தது, அவற்றை என்ன செய்தீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நாட்டில் உண்மையில் எத்தனை கொரொனா நோயாளர் உள்ளனர் என்றும்  எத்தனை முதற்தொற்றாளர் உள்ளனர் என்றும் ஒரு நாளைக்கு எத்தனை பேரை பரிசோதனை செய்கிறீர்கள் என்றும் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் இந்நாட்டில் எத்தனை உள்ளன என்றும் எத்தனை இன்னமும் தேவை போன்ற பல கேள்விகளை அந்தப் பதவில் அவர் வினவியுள்ளார்.

இந்த அனைத்துக் கேள்விகளையும் நாடாளமன்றத்தில் கேட்டால் பதில் கிடைக்கும் என்றும் எனவே, இந்தக் கேள்விகள் அனைத்தையும் விவாதம் செய்து, வெளிப்படையாக பேச, நாடாளுமன்றம் கூடுவேண்டும் என்று தாங்கள் கோருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பிரதமரின்-அழைப்புக்கு-செல்லமாட்டோம்/150-249608

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இடம் பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக த.தே.கூ விவாதிக்க உள்ளது-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை திங்கட்கிழமை(4) இடம் பெறவுள்ள விசேட சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொள்ள உள்ளது.
குறித்த கலந்துடையாடலின் போது முக்கிய விடையங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள விசேட சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக அவரிடம் இன்று (3) வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ஆராயப்படவுள்ளது. மேலும் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தலில் முப்படையினருடைய முகாம்கள் எங்களுடைய பிரதேசத்திலே மக்கள் செரிந்து வாழுகின்ற இடங்களில் காணப்படுகின்ற நிலை உள்ளது.

 

குறித்த விடையம் தொடர்பாகவும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினை, மீனவ சமூகத்தின் பிரச்சினை, சிகையலங்கார தொழிலாளர்களின் பிரச்சினை, அன்றாட கூலி வேலை செய்கின்ற மக்களின் பிரச்சினை, தற்போதைய பொருட்களின் விலை வாசி காரணமாக அரச உத்தியோகத்தர்களும் கஸ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் அவர்களின் பிரச்சினை, விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை உரிய விலைக்கு விற்க முடியாமை தொடர்பில் உள்ள பிரச்சினை,மீனவர்கள் தமது கடல் உணவு பொருட்களை சத்தைபடுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

ஆவர்களின் பிரச்சினை, மாணவர்களின் தற்போதைய கல்வி செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் விவாதிக்க இருக்கின்றோம்.

முக்கியமான விடையங்களை மக்கள் படுகின்ற துன்பங்களையும், கொரோனா தொடர்பில் முக்கியமாக தமது கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை அரசாங்கம் எங்களுடைய மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது இருப்பது தொடர்பாகவும் நாங்கள் சுட்டிக்காட்ட இருக்கின்றோம்.

அந்த வகையில் பிரதமரின் அழைப்பை ஏற்று நாளை திங்கட்கிழமை(4) குறித்த விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொண்டு முக்கியமான விடையங்களை விவாதிக்க இருக்கின்றோம்.என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் மேலும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/81271

  • கருத்துக்கள உறவுகள்

நாம வந்தால் நல்ல மினிஸ்டர் போஸ்டு கிடைக்குமான்னு கேட்டு வையுங்க..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

 

அந்த வகையில் பிரதமரின் அழைப்பை ஏற்று நாளை திங்கட்கிழமை(4) குறித்த விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொண்டு முக்கியமான விடையங்களை விவாதிக்க இருக்கின்றோம்.என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் மேலும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/81271

பேச்சாளர் மாற்றப்பட்டு விட்டார். முன்னாள் பேச்சாளர் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்.

பிரதமருடனான சந்திப்பை புறக்கணிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

mahinda-rajapaksa-vs-ranil-wickremesinghe.jpg

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பிரதமர் அழைத்த கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் 8 வது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கு இந்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையையும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு நிகரான நடவடிக்கையாக குறித்த கலந்துரையாடல் அமையாதபோதும் ஐக்கிய தேசியக் கட்சி அதில் பங்கெடுக்க தீர்மானித்தது. எனவே நாட்டில் சுகாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாடுகள் புறந்தள்ளப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையான கூட்டத்தில் எந்த அர்த்தமுள்ள உரையாடலும் நடத்த முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நேரத்தில் ஒற்றுமையாக செயற்படும் வேளையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்டு வருகின்றது.

இருப்பினும் கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு செய்ய, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

http://athavannews.com/பிரதமருடனான-சந்திப்பை-பு/

51 minutes ago, கற்பகதரு said:

பேச்சாளர் மாற்றப்பட்டு விட்டார். முன்னாள் பேச்சாளர் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்.

ஒதுங்க ஆரம்பித்து விட்டார் ? இல்லை ஓரம் கட்டப்பட்டாரா? தெரியவில்லை. கட்சியின் தலைவரோ இல்லை செயல்குழுவோ தெளிவுப்படுத்தவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

அவர் டிரம்ப் .. இவரு புடின் ..

poutine-trump-160718.jpeg

அட போங்கப்பா.. வீட்டில புள்ள குட்டியல படிக்க வையுங்கப்பா..👌

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

‘பிரதமரின் அழைப்புக்கு செல்லமாட்டோம்’

நாம் கோருவது, சபாநாயகர் தலைமையில், நாடாளுமன்றக் கூட்டம். இங்கே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம், பிரதமர் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம். இதற்கு எந்தவித உத்தியோகப்பூர்வ அந்தஸ்தும் கிடையாது.

“பிரதமர் வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். அல்லது அவரது ஆளும் கட்சி எம்.பிக்களை கூட்டி பேசலாம். இவை எப்போதும் நடக்கின்ற கூட்டங்கள் ஆகும்.

“ஆனால், சபாநாயகர் தலைமையில் நடைபெறும், கூட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட, உத்தியோகப்பூர்வ அந்தஸ்து கொண்ட, நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசும் விடயங்களை, பிரதமர் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தில் பேசி எதுவும் ஆக போவதில்லை.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பிரதமரின்-அழைப்புக்கு-செல்லமாட்டோம்/150-249608

இவருக்குள்ள நாடாளுமன்ற அனுபவத்தைவிட பன்மடங்கு அனுபவ சாணக்கியர்(?) ஏன் போகிறார். ஏதும் கைமாற்றம்  நாடியா?

பிரதமர் மஹிந்த தலைமையிலான கூட்டத்தை ஐ.தே.க. இறுதி நேரத்தில் புறக்கணித்தமைக்கான காரணம் இது தான் !

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலால் நாடு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் தலைமைத்துவத்திற்கு தேசிய ஐக்கியம் தேவைப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கட்சி அரசியலிலேயே ராஜபக்ச அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி,நாளை திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பங்குபற்றாமலிருப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைநாளைய தினம் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தை உத்தியோகபூர்வமாக கூட்டுவதற்கு பதிலாக மாற்று வழியாக இந்த கூட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு அதிகரித்து வருகின்ற கொவிட் 19 பரவலில் அரசியலைப் புறந்தள்ளி செயற்பட வேண்டும் என்பதும் கட்சியின் ஸ்திரமான நிலைப்பாடாகும்.

மீண்டும் ஒரு முறை இதனைத் தெரியப்படுத்தவே பிரதமரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கலந்து கொள்வதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த கூட்டத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு கலந்துரையாடல் அர்த்தமுடையதொன்றாக அமையாது என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும். இதில் ராஜபக்ச ஆட்சி அவதானம் செலுத்தியுள்ளதென்னவென்றால், தலைமைத்துவத்திற்கு தேசிய ஐக்கியம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் கட்சி அரசியல் செய்வதாகும். இதன் காரணமாக தற்போது ஐக்கிய தேசிய கட்சி இந்த கூட்டத்தில் பங்குபற்றாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

எனினும் கொவிட் 19 தொற்றினால் எமது நாடு ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ள இந்நிலையில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளது. எனினும் அவற்றை பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய எடுக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்துகின்றது.

 

https://www.virakesari.lk/article/81294

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

பேச்சாளர் மாற்றப்பட்டு விட்டார். முன்னாள் பேச்சாளர் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்.

 

6 hours ago, ampanai said:

ஒதுங்க ஆரம்பித்து விட்டார் ? இல்லை ஓரம் கட்டப்பட்டாரா? தெரியவில்லை. கட்சியின் தலைவரோ இல்லை செயல்குழுவோ தெளிவுப்படுத்தவேண்டும்.  

அரசியலுக்கு வெளியிலும் எதிர்காலம் உள்ளவர்கள் தோற்றுப்போகும் அரசியலைவிட்டு தாமாகவே ஒதுங்கிக் கொண்டு அரசியலுக்கு வெளியேயான எதிர்காலத்தை பலப்படுத்த முயற்சி செய்வர். அரசியலுக்கு வெளியில் எதிர்காலம் இல்லாதவருக்கு போக்கிடம் இருக்காதல்லவா?

தேர்தல் காலம் என்கிறதால கூட்டமைப்பு ஒற்றுமையா இருக்குது என்டு காட்ட சம்பந்தன்-சுமந்திரன்  திட்டமிட்டு செய்த சகுனி முயற்சியில் மானம் ரோஷமற்ற செல்வம் அடைக்கலநாதனும் சித்தார்தனும் கூட்டமைப்பின் பேச்சாளர்களா கருத்துக்களை கூறி ஒரு அற்ப சந்தோசத்தை அனுபவிக்கினம். தேர்தல் முடிஞ்ச பிறகு சுத்துமாத்து சுமந்திரன் இந்த இரண்டு மானம் ரோஷமற்ற அற்றதுகளை கழட்டிவிட்டுட்டு தான் நுழைச்ச மனித உரிமை வியாபார பெண்டிர்களோடு தனது வழமையை தமிழின அழிப்பை தொடரலாம் என நெச்சுக் கொண்டிருக்கிறார்.

மஹிந்தவின் கூட்டத்தை 113 உறுப்பினர்கள் புறக்கணிப்பு; அரச தரப்புடன் கூட்டமைப்பினர் மட்டும் பங்கேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் புறக்கணிப்பர் எனத் தெரியவருகின்றது. ஆளும் கட்சியுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கலைக்கப்பட்ட பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில், நாளை காலை 10.00 மணிக்கு கலைக்கப்பட்ட பழைய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றை நடத்துவதற்கான அழைப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 127 உறுப்பினர்களில் 94 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழுள்ள 87 உறுப்பினர்கள், ஜே.வி.பியின் 6 உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அங்கம் வகித்த சிவசக்தி ஆனந்தன் ஆகியோரே இதில் பங்கேற்க மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அக்கட்சியின் உறுப்பினர்கள 19 பேரும் பங்கேற்பதில்லை என்ற முடிவை இன்று எடுத்திருக்கின்றார்கள்.

ஆளும் கட்சியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்14 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் எனத்தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடக்கு, கிழக்கிலிருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் இன்று கொழும்பை வந்தடைந்தனர்.

http://thinakkural.lk/article/40195

52 minutes ago, கற்பகதரு said:

அரசியலுக்கு வெளியிலும் எதிர்காலம் உள்ளவர்கள் தோற்றுப்போகும் அரசியலைவிட்டு தாமாகவே ஒதுங்கிக் கொண்டு அரசியலுக்கு வெளியேயான எதிர்காலத்தை பலப்படுத்த முயற்சி செய்வர். அரசியலுக்கு வெளியில் எதிர்காலம் இல்லாதவருக்கு போக்கிடம் இருக்காதல்லவா?

தோற்றுப்போகும் அரசியல் என்று ஒன்றில்லை. காரணம், மக்கள் உள்ளவரை, அம்மக்களை நேசிப்பவர்கள் அரசியல் செய்ய அவசியம் இருக்கும்.  

தம்மால் மக்களுக்கு நேர்மையாக இதயசுத்தியுடன் உதவும்வரை அரசியலில் இருக்கலாம். மக்கள் இருக்கவும் வைப்பார்கள்.  அது, அவரகளின் அரசியல் வாதிகளின் எதிர்காலம் பார்த்து மக்களால் எடுக்கப்படும் முடிவு இல்லை.

பகுதிநேர அரசியல்வாதிகள் ஏற்கனவே எதிர்காலம் இல்லாத தோற்றுப்போன அரசியல்வாதிகள். ஏன், ஏமாற்றுவாதிகளும் கூட. 

On 2/5/2020 at 22:08, தனிக்காட்டு ராஜா said:

அரச விசுவாசிகள் கலந்து கொள்ளாமல் அரசாங்கம் ஏது பெருமாள் 

ஊரோடு ஒத்து ஓடு என்று ஒரு பழமொழி உண்டு। இவர்கள் அரசோடு ஒத்து ஓடுகிறார்கள்। வருகிறது சந்தர்ப்பம் , மக்கள் தீர்மானிக்கட்டும்। நீங்கள் இம்முறை வாக்களிக்காததால் அவர்கள் பற்றி பின்னர் கருத்துதெரிவிப்பதில் சரியாக இருக்காது। 

2 hours ago, கற்பகதரு said:

 

அரசியலுக்கு வெளியிலும் எதிர்காலம் உள்ளவர்கள் தோற்றுப்போகும் அரசியலைவிட்டு தாமாகவே ஒதுங்கிக் கொண்டு அரசியலுக்கு வெளியேயான எதிர்காலத்தை பலப்படுத்த முயற்சி செய்வர். அரசியலுக்கு வெளியில் எதிர்காலம் இல்லாதவருக்கு போக்கிடம் இருக்காதல்லவா?

சரியாக சொன்னீர்கள்। உண்மை கசக்கத்தான் செய்யும்। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தோற்றுப்போகும் அரசியல் என்று ஒன்றில்லை. காரணம், மக்கள் உள்ளவரை, அம்மக்களை நேசிப்பவர்கள் அரசியல் செய்ய அவசியம் இருக்கும்.  

அரசியல் செய்ய வேண்டிய அவசியம், மக்களுக்கு உதவுதல் ஆகியவை வேறு, வெற்றி பெறத்தக்க அரசியல் வேறு. தமிழீழ கோரிக்கையை முன்வைத்து செய்யப்பட்ட அரசியல் தோற்றுப்போன அரசியலுக்கு ஒரு உதாரணம். 

Edited by கற்பகதரு

7 minutes ago, கற்பகதரு said:

அரசியல் செய்ய வேண்டிய அவசியம், மக்களுக்கு உதவுதல் ஆகியவை வேறு, வெற்றி பெறத்தக்க அரசியல் வேறு. தமிழீழ கோரிக்கையை முன்வைத்து செய்யப்பட்ட அரசியல் தோற்றுப்போன அரசியலுக்கு ஒரு உதாரணம். 

கூட்டமைப்பினர் தனிநாடு கேட்டு அரசியல் செய்யவில்லை. மக்களும் அவர்களை தனிநாடு கேட்டு அரசியல் செய்ய கேட்கவில்லை. 

முன்னைய சிங்கள தலைவர்கள் ஒப்புக்கொண்ட அதிகார பரவவலையே கேட்கிறார்கள். 

தீர்வை தராமல் தமிழர் தரப்பை ஏமாற்றி, இறுதியில் சிங்களம் சீனாவிடம்/உலகிடம்  ஏமாந்தது இல்லை சிங்களவர்களை ஏமாற்றியது மிகவும் கேவலமான தோற்றுப்போன அரசியல். 

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மாளிகை கூட்டத்துக்கு முன்னர் சம்பந்தனுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மந்திராலோசனை

tna-300x188.jpgபிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பை வந்தடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதற்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் ஒன்றுகூடி மந்திராலோசனையை நடத்தவிப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.

காலை 8.30 மணியளவில் சம்பந்தனின் இல்லத்தில் அவர்கள் ஒன்றுகூடுவார்கள் எனத் தெரிகின்றது. இன்றைய கூட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து இதன்போது அவர்களுக்கு விளக்கப்படும். எம்.பி.க்களின் சந்தேகங்களுக்கும் இதன்போது விளக்கமளிக்கப்படும்.

பின்னர் அலரிமாளிகையில் இடம்பெறும் கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் உள்ளடங்கிய விசேட மகஜர் ஒன்றையும் இதன்போது கூட்டமைப்பின் தலைவர் பிரதமரிடம் கையளிப்பாரென அறியமுடிந்தது.

http://thinakkural.lk/article/40241

2 hours ago, உடையார் said:

இன்றைய கூட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து இதன்போது அவர்களுக்கு விளக்கப்படும். எம்.பி.க்களின் சந்தேகங்களுக்கும் இதன்போது விளக்கமளிக்கப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரியணை ஏறியிருக்கும் போர்குற்றவாளிகள் வீசுபவற்றை பவ்வியமாக பெற்றுக்கொண்டு வழமைபோல தமிழின அழிப்புக்கு உதவ ரெடி என்று ரணிலின் ஆசீர்வதத்தவுடன் சுமந்திரன் ஒற்றைக்காலில் நின்றும் அதுசரி வரவில்லை. டக்ளஸ் கருணா கோஷ்டியே போதும் என்று போர்குற்றவாளிகள் நினைத்திருந்தனர்.

இம்முறை பலர் புறக்கணிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் குள்ளநரி ரணிலும் போர்குற்றவாளிகள் வீசுபவற்றை பவ்வியமாக பெற்றுக்கொள்ள திட்டம் போட்டிருந்த கூத்தமைப்பும் நினைத்திருந்த நிலையில் ரணில் கடைசி நேரத்தில் பின்னடித்துள்ளார்.

வேறுயாரும் அற்ற சூழலில் போர்குற்றவாளிகள் ராஜபக்ச கும்பலிடம் அவர்கள் பலவீனங்களை சொல்லி இனவழிப்பை கச்சிதமா செய்ய உதவ சம்பந்தன்-சுமந்திரன் உறுதியா உள்ளனர்.

மகிந்தவின் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

In இலங்கை     May 4, 2020 4:31 am GMT     0 Comments     1130     by : Benitlas

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்தன.

இதனைக் கூட்ட முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாகவே பதிலளித்துவிட்டார்கள். இந்த நிலையில் அலரி மாளிகையில் பிரதமர் அழைத்திருக்கும் கூட்டத்துக்கு கூட்டமைப்பு செல்லப் போகின்றது.

இது போன்ற உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களால் எதனைச் சாதிக்க முடியும் என கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது போன்ற பலனற்ற கூட்டங்களுக்குச் செல்லலாம் என்றால் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டது எதற்காக.

இவ்வாறான சந்திப்பின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணமுடியுமென்றால், வெறுமனே ஒரு நேர ஒதுக்கீட்டைக் கேட்டுவிட்டு ஜனாதிபதியையோ பிரதமரையோ கூட்டமைப்பினர் சந்தித்திருக்க முடியும்.

அலரி மாளிகைச் சந்திப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் அதில் கலந்துகொள்வதன் மூலம் அரசாங்கத்துக்கான ஒரு சாதகமான சமிஞ்ஞையைக் காட்டுவதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுவதாகவே தெரிகின்றது.

இதன் மூலம் அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துக்கொள்வதற்கு அவர்கள் முற்படலாம். நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தவர்களுள் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முக்கியமானவர்.

இந்தக் கூட்டத்தின் மூலமாக எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கூட்டச் செய்வதற்கு நீதிமன்றம் மூலமாக மட்டுமே முடியும். இது போன்ற சந்திப்பு வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கும். இது சம்பந்தனுக்கும் தெரியும். சுமந்திரனுக்கும் தெரியும்.

அதனைத் தெரிந்துகொண்டும் அவர்கள் செல்வதற்குக் காரணம் அரசுடனான இடைவெளியைக் குறைப்பதும், அரசாங்கத்துக்கு சாதகமான சமிஞ்ஞை ஒன்றைக் கொடுப்பதுமாக மட்டுமே இருக்க முடியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மகிந்தவின்-கூட்டத்துக்க/

இறுதி நேரத்தில மாறிய ஐ.தே.கட்சி : கூட்டமைப்பின் முடிவுக்கு மஹிந்த வரவேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெற இருக்கும் சிறப்பு கூட்டத்தை சுமார் 112 பேர் புறக்கணித்துள்ளனர்.

ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி இறுதியில் தனது முடிவை மாற்றியுள்ளது. குறித்த கூட்டத்திற்கு தாம் வரப்போவதில்லை என நேற்று அறிக்கை விட்டுள்ளது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவில் உறுதியாக உள்ளது.

இன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்க உள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருவது சிறப்பு எனவும், கூட்டத்துக்கு வருபவர்களுடன் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142442

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.