Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்.!

xborder-security-05-1515116051-159030370

லடாக்: இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அங்கு இப்படி நடந்தது இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வலுக்க தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.கடந்த 4 மாதங்களில் மட்டும் லடாக் எல்லையில் சீனா 140 முறை அத்துமீறி உள்ளது. முக்கியமாக அங்கு இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது.

படைகள் குவிப்பு

இந்த நிலையில் இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அங்கு இப்படி நடந்தது இல்லை என்று கூறுகிறார்கள். பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீனா வீரர்கள் தங்கும் டெண்ட்களை அமைத்துள்ளது. 100+ டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்துள்ளது.

மோசமான சிக்னல்

சீனா போருக்கு தயார் ஆவதற்கான அறிகுறி இது என்று கூறுகிறார்கள். சீனாவின் இந்த செயல் மேலும் பிரச்சனை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதோடு பாங்காங் டிசோ பகுதியில் சீனா தற்போது பங்கர்கள் எனப்படும் பதுங்கு குழிகளை அமைத்து வருகிறது. 100க்கும் அதிகமான பதுங்கு குழிகளை சீனா அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

4 இடங்களில் படைகள்

அதேபோல் இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது.

லடாக் மீது குறி

சீனா தொடர்ந்து லடாக் மீதுதான் குறி வைத்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய படைகள் குவிப்பு

லடாக் பகுதியில் இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமாலும் பிரச்சனை வெடிக்கலாம் என்கிறார்கள்.

ஏற்கனவே சண்டை

கடந்த வாரம் 10ம் திகதி இரண்டு நாடுகளுக்கும் இடையில்  சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா என்ற இடத்தில் சண்டை வந்துள்ளது. அதேபோல் கடந்த 5ம் தேதி இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் ஹெலிகாப்டர்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறி உள்ளது குறிப்பிட தக்கது.

https://tamil.oneindia.com/news/india/china-made-100-tents-in-ladakh-border-constructs-bunkers-386402.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... தன்னிடம் உள்ள, நவீன ஆயுதங்களை...👨‍🌾 பரீட்சித்துப் பார்க்க நல்ல சந்தர்ப்பம். 😎
வலிய வந்த சண்டையை... விடக் கூடாது.  இந்தியா உடனே போரை ஆரம்பிக்க வேண்டும்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியா... தன்னிடம் உள்ள, நவீன ஆயுதங்களை...👨‍🌾 பரீட்சித்துப் பார்க்க நல்ல சந்தர்ப்பம். 😎
வலிய வந்த சண்டையை... விடக் கூடாது.  இந்தியா உடனே போரை ஆரம்பிக்க வேண்டும்.:)

roflphotos-dot-com-photo-comments-201711

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியா... தன்னிடம் உள்ள, நவீன ஆயுதங்களை...👨‍🌾 பரீட்சித்துப் பார்க்க நல்ல சந்தர்ப்பம். 😎
வலிய வந்த சண்டையை... விடக் கூடாது.  இந்தியா உடனே போரை ஆரம்பிக்க வேண்டும்.:)

பங்காளதேசம் விடுவிப்புப் போருக்குப் பின் ஹிந்தியா எந்தப் போரிலும் வெல்லவில்லை.

கார்கில் போரிலும் கிளிங்கடனின் புண்ணியத்தில் வென்றதாகக் காட்டிக் கொண்டது தான். அதிலும் பாகிஸ்தான் ஹிந்திய போர் விமானங்களை எல்லாம் தாறுமாறாக சுட்டு வீழ்த்தியது. ராஜீவ் போர்வஸ் பீரங்கிகளும்.. ஒரு கட்டத்துக்கு மேல்.. உதவ முடியாமல் போக.. பாகிஸ்தான் இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. கடைசியில் கிளிங்டன் பேசி.. பின் வாங்க வைச்சது தான்.

புல்வாமா தாக்குதலின் பின் சென்ற ஆண்டும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில்.. ஹிந்தியா தரப்பில் தான் இழப்பு மிக அதிகம். போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. விமானிகளை சிறைபிடித்தது. சிறைபிடித்த விமானியை விடுவிக்கச் சொல்லி ஹிந்தியா கெஞ்சி மன்றாடியது தான் அதன் வீரம்.

இந்த சுண்டக்காய் பாகிஸ்தானையே ஒன்னும் பண்ண முடியல்ல.. இதில.. சீனா.

சீனாவுடன் ஒரு முழுமையான யுத்தம் ஏற்பட்டால்  சீனப்படைகள்..ஹிந்தியாவுக்குள்ளால் வந்து.. ஒரு 3 மாதத்தில் சிறீலங்காப் படைகளோடு கைகுலுக்கும். 

ஹிந்தியா.. யுத்தம் செய்ய தகுதியற்ற ஒரு நாடு.. அதுவும் இன்றைய நவீன இராணுவ ஆயுதங்கள் பெருகி உள்ள உலகில். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

சீனாவுக்கு... இந்த முறை, இந்தியா... "பயங்கர அடி"  கொடுப்பதற்காவே,
அதி நவீன ஆயுதங்களை... இரகசியமாக தயாரித்து வைத்துள்ளார்களாம். 

இந்த முறை... சண்டை வந்தால், சீனாவின் எல்லைக்குள் 500 கிலோ மீற்றர் வரை ஊடுருவி,
சீனாவின் பகுதிகளை... பிடிக்கும்... "பக்கா" பிளான்  ஒன்றும், இந்தியாவிடம் உள்ளதாம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியா... தன்னிடம் உள்ள, நவீன ஆயுதங்களை...👨‍🌾 பரீட்சித்துப் பார்க்க நல்ல சந்தர்ப்பம். 😎
வலிய வந்த சண்டையை... விடக் கூடாது.  இந்தியா உடனே போரை ஆரம்பிக்க வேண்டும்.:)

குவைச்சன் குண்டுமணி அக்கா கேட்கிறா....

சீனா- இந்தியா சண்டை ஒண்டு வந்திட்டுது எண்டால் இந்துசமுத்திரத்தின்ரை முத்து சிறிலங்கா ஆருக்கு தேத்தண்ணி ஆத்திக்குடுக்கும்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்பிடித்து விளையாடுறங்க😀

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

குவைச்சன் குண்டுமணி அக்கா கேட்கிறா....

சீனா- இந்தியா சண்டை ஒண்டு வந்திட்டுது எண்டால் இந்துசமுத்திரத்தின்ரை முத்து சிறிலங்கா ஆருக்கு தேத்தண்ணி ஆத்திக்குடுக்கும்? 😎

கடைசி வரை ஆத்திக் கொன்டே இருப்பினம் ஆனால்ஒருத்தருக்கும் கொடுக்க மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

குவைச்சன் குண்டுமணி அக்கா கேட்கிறா....

சீனா- இந்தியா சண்டை ஒண்டு வந்திட்டுது எண்டால் இந்துசமுத்திரத்தின்ரை முத்து சிறிலங்கா ஆருக்கு தேத்தண்ணி ஆத்திக்குடுக்கும்? 😎

சீனாவுக்கு பிரதமரும் இந்தியாவுக்கு ஜனாதிபதியும் போய் நின்று கொண்டு டிராகனுக்கு வாலையும் சிங்கத்துக்கு தலையையும் காட்டிக்கொண்டு சமயத்துக்கு தக்கவாறு பணம் கறந்து கொண்டிருப்பார்கள்.......!   🤔 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

hqdefault.jpg

சண்டைய கூட பொறுத்துக்கலாம்ட.. ஆனா இந்த பிளாஷ் நியூஸ்க்கு கண்டன்ட் எழுதறவனோட அலப்ஸ்  பொறுக்க முடியலடா..

அத்துமீறும் சீனா.!

அதிரடி காட்டும் கிந்தியா..!

அடங்கி போகும் சீனா .. !

பரிக்கோட்டில் பதற்றம் ஏன்.?

சீனா பீதி..!

இவயளை தூக்கி முன்னரங்கில் விட்டா காணும் யாருக்கு வாந்தி வருது.. பேதி ஆகுது .. என்டு.👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

hqdefault.jpg

சண்டைய கூட பொறுத்துக்கலாம்ட.. ஆனா இந்த பிளாஷ் நியூஸ்க்கு கண்டன்ட் எழுதறவனோட அலப்ஸ்  பொறுக்க முடியலடா..

அத்துமீறும் சீனா.!

அதிரடி காட்டும் கிந்தியா..!

அடங்கி போகும் சீனா .. !

பரிக்கோட்டில் பதற்றம் ஏன்.?

சீனா பீதி..!

இவயளை தூக்கி முன்னரங்கில் விட்டா காணும் யாருக்கு வாந்தி வருது.. பேதி ஆகுது .. என்டு.👌

இப்படி உசுப்பேத்தியும் இந்திய இரணுவத்தை சண்டை பிடிக்க வைக்க முடியலையே, இனி மானமிருக்கா ரோஷமிருக்கா என்று உசுப்பேத்தனும்😀,

வல்லரசு என்றதை சீனாவுடன் மோதி நிருபிக்கட்டும். 

பாக்கியை கூட ஒன்னும் செய்யமுடியலை, அதுகுள்ள சீனவுடன் சீண்டல், நேபள வேற சீண்டிப்பார்க்குது, இலங்கை தமிழக மீனவர்களுடன் விளையாடுகின்றது....இந்தியா பேச்சளவில் மட்டும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை

எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை

கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பதிவு: மே 26,  2020 04:15 AM
புதுடெல்லி, 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள்.

இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது.

இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை.

சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 03:40, தமிழ் சிறி said:

இந்தியா... தன்னிடம் உள்ள, நவீன ஆயுதங்களை...👨‍🌾 பரீட்சித்துப் பார்க்க நல்ல சந்தர்ப்பம். 😎
வலிய வந்த சண்டையை... விடக் கூடாது.  இந்தியா உடனே போரை ஆரம்பிக்க வேண்டும்.:)

அப்படிப் போடு அரிவாளை. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

வல்லரசு என்றதை சீனாவுடன் மோதி நிருபிக்கட்டும். 

இதைப் பார்த்த பின் அந்த நம்பிக்கை வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்திய பிரதமர் மோடி
 
இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5-ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.
 
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
 
தற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு

இராணுவத்தை  தயார் நிலையில் இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள  எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இது போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

லடாக் மற்றும் சிக்கிமில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில்  சீன இராணுவம் சாதாரண ரோந்துக்கு இடையூறு விளைவிப்பதாக இந்தியா கூறியுள்ளதுடன், இரு படைகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சீனப் பக்கம் முழுவதும் இந்தியப் படைகளை அத்துமீறுவதன் மூலம் தூண்டப்படுகிறது என்ற சீனாவின்  கருத்தை கடுமையாக மறுத்து உள்ளது.

எல்லை நிர்வகிப்பதில் இந்தியா எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்று அனைத்து இந்திய நடவடிக்கைகளும் எல்லையின் ஓரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மையையும் பாதுகாப்பையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக கூறி உள்ளது.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ உராய்வு அதிகரித்து வருகிறது. வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா தொற்று நோயால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும் சீனா மே 22 அன்று, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய இராணுவ செலவினமான சீனா தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை 6.6 சதவீதம் அதிகரித்து 179 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது, இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

இந்த நிலையில் சீன அதிபர்  ஜி ஜின்பிங் தனது இராணுவத்தை  தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். மேலும்  நாட்டின் இறையாண்மையை உறுதியாக பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துக்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பதற்றத்தை குறிப்பதாக உள்ளது. 

66 வயதாகும் ஜி ஜின்பிங் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) பொதுச் செயலாளராகவும் உள்ளார். வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பைக் கொண்ட 20 லடசத்துக்கும்   அதிகமான இராணுவ வீரர்களின் தலைவராகவும் உள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மற்றும் மக்கள் ஆயுதமேந்திய காவல்துறையின் தூதுக்குழுவின் முழுமையான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது 

மோசமான சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்கவும், பயிற்சி மற்றும் போர் தயார்நிலையை சரிபார்க்கவும் அனைத்து வகையான சிக்கலான சூழ்நிலைகளையும் உடனடியாகவும் திறம்படவும் கையாளவும், தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியுடன் பாதுகாக்கவும் இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/27091834/Prepare-For-WorstCase-Scenarios-Xi-Jinping-To-Chinese.vpf

  • கருத்துக்கள உறவுகள்

சீனா போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

சீனா போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

சீனா போருக்கு தயாராகும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பதிவு: மே 27,  2020 13:44 PM
புதுடெல்லி
 
கொரோனா நெருக்கடியில் உலகம் சிக்கி தவிக்கும் போது சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீனாவின் இராணுவ விமான தளம் விரிவு படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
 
202005271344557702_chinaimage002._L_styvpf.gif
 
முன்னதாக கடந்த மே 5, மற்றும் மே 6 தேதிகளில் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த புகைப்படங்கள் முதலில் ஏப்ரல் 6 2020ல் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை காட்டுகிறது. இரண்டாவது மே 21ல் ஏதோ விரிவுபடுத்தும் கட்டுமான பணிகள் நடப்பதை காணமுடிகிறது.
202005271344557702_chinaimage003._L_styv
 
மூன்றாவது படத்தில், இராணுவ விமானங்கள் மற்றும், ஆயுதங்கள் ஏற்றும் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. முன்னதாக இந்தியா சீனாவிடையே 1999ல் ஏற்பட்ட கார்கில் போரில் பல வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
Idea by Maurice Castillo on lord krishna | Lord krishna images ...

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இந்தியாவை தாக்கும் சாத்தியங்கள் அதிகம். கொரோணாவால் ஏற்பட்ட பதிப்பை இதனால் ஈடு செய்யலாம். இப்ப இந்திய படைகளுக்கு உதற தொடங்கியிக்கும்😀

 ஆண்டவா கிந்திய படைகளுக்கு பாக்கி, நேபாளி, சீனா, காஷ்மீர் தீவிரவாதிகள் என்று எல்லோரும் ஒரே நேரத்தில்  சங்கு ஊத வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
 
ஆர்வக் கோளாறு

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, சுவைப்பிரியன் said:

ஆர்வக் கோளாறு

இல்லை, கிந்திய இராணுவத்தால் ஏற்பட்ட கோளாறு 😡

என் பள்ளி நண்பன் பத்தாம் வகுப்பு, பிடித்துக்கொண்டுபோய், உடம்பில் றில் இயந்திரத்தால் பல இடங்களில் துளைபோட்டு, சடலாமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றார்கள், இப்படி பல பல அனுபவங்கள்..... அனுபவித்தவர்கள் நாங்கள், கிந்திய ஆமியை கண்டால் காறி துப்பனும் போலிருக்கும். இந்த கிந்திய ஆமி வந்தபின் தான் சொறிலங்கா இரணுவமும் இன்னும் மேம்படுத்தப்பட்டது. சொறிலாங்கா இரணுவத்திற்கு முழு உதவி செய்த இந்த கிந்திய இரணுவம் அவமானப்பட்டு தலை குனியனும் விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

முன்னதாக இந்தியா சீனாவிடையே 1999ல் ஏற்பட்ட கார்கில் போரில் பல வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உடையார் 
சுவைபிரியன் அண்ணை கூறியதை தப்பாக விளங்கிவிட்டீர்கள் போலும் 
கார்கில் போர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் நடந்தது , சீனாவுடன் மட்டும் நடந்திருக்க வேண்டும் அஞ்சு மணித்தியாலத்தில் அடித்து காலி பண்ணியிருப்பானுவ  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இல்லை, கிந்திய இராணுவத்தால் ஏற்பட்ட கோளாறு 😡

என் பள்ளி நண்பன் பத்தாம் வகுப்பு, பிடித்துக்கொண்டுபோய், உடம்பில் றில் இயந்திரத்தால் பல இடங்களில் துளைபோட்டு, சடலாமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றார்கள், இப்படி பல பல அனுபவங்கள்..... அனுபவித்தவர்கள் நாங்கள், கிந்திய ஆமியை கண்டால் காறி துப்பனும் போலிருக்கும். இந்த கிந்திய ஆமி வந்தபின் தான் சொறிலங்கா இரணுவமும் இன்னும் மேம்படுத்தப்பட்டது. சொறிலாங்கா இரணுவத்திற்கு முழு உதவி செய்த இந்த கிந்திய இரணுவம் அவமானப்பட்டு தலை குனியனும் விரைவில்

உடையார் இது உங்கள் பிழை இல்லை.அது அந்த செய்தி தளத்தின் பிழை.அக்கினி நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

சீனா போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

சீனா போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

சீனா போருக்கு தயாராகும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பதிவு: மே 27,  2020 13:44 PM
புதுடெல்லி
 
கொரோனா நெருக்கடியில் உலகம் சிக்கி தவிக்கும் போது சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீனாவின் இராணுவ விமான தளம் விரிவு படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
 
202005271344557702_chinaimage002._L_styvpf.gif
 
முன்னதாக கடந்த மே 5, மற்றும் மே 6 தேதிகளில் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த புகைப்படங்கள் முதலில் ஏப்ரல் 6 2020ல் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை காட்டுகிறது. இரண்டாவது மே 21ல் ஏதோ விரிவுபடுத்தும் கட்டுமான பணிகள் நடப்பதை காணமுடிகிறது.
202005271344557702_chinaimage003._L_styv
 
மூன்றாவது படத்தில், இராணுவ விமானங்கள் மற்றும், ஆயுதங்கள் ஏற்றும் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. முன்னதாக இந்தியா சீனாவிடையே 1999ல் ஏற்பட்ட கார்கில் போரில் பல வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
Idea by Maurice Castillo on lord krishna | Lord krishna images ...

கிருஸ்ணர் போருக்கு அறைகூவல் விடுக்கின்றாரா அல்லது இந்தியாவுக்கு சங்கூதுகிறாரா 😂😂

புரியவில்லை 😜😜😜😜

6 hours ago, உடையார் said:

சீனா இந்தியாவை தாக்கும் சாத்தியங்கள் அதிகம். கொரோணாவால் ஏற்பட்ட பதிப்பை இதனால் ஈடு செய்யலாம். இப்ப இந்திய படைகளுக்கு உதற தொடங்கியிக்கும்😀

 ஆண்டவா கிந்திய படைகளுக்கு பாக்கி, நேபாளி, சீனா, காஷ்மீர் தீவிரவாதிகள் என்று எல்லோரும் ஒரே நேரத்தில்  சங்கு ஊத வேண்டும்

நிம்மதியாக நித்திரை கொள்ளலாம் என்கின்ற  நம்பிக்கை வருகிறது 😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.