Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70/80 களில்  யாழ்ப்பாணத்தில் இருந்த  Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஓம்... ஈழப்பிரியன், அந்தக் கடையும் இப்ப தான், நினைவு வருகுது. :)

spacer.png

சிவன் வீதிக்கு எதிர் பக்கமாக பலாலி வீதியில் இருந்த cafe யை நினைவு இருக்கா  சிறி? நல்ல தோசை, வடை, ரொட்டி, போண்டா எல்லாம் வித்தார்கள். பல வருடங்களாக இருந்திச்சு ( Jaffna New என்று map இல் இருக்கும் இடத்தில )

நான் நினைக்கிறன் முருகன் கஃபே அல்லது முருகன் விலாஸ். ஒரு பழங்காலத்து ஆனால் நல்ல கட்டிடம் 

Edited by nilmini

  • Replies 56
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

கொழும்பான்....  
எனது... முதல் பதிவில், மூன்றாவதாக... "சிற்றி பேக்கறி" 
என, எழுதியுள்ளதை... கவனிக்க வில்லையா.  

அதற்கு... சிங்களவர் தான், உரிமையாளர்.
இருந்த இடம்... யாழ். ஆஸ்பத்திரி  வீதி.
யாழ்ப்பாணத்தின் பிரதான பேரூந்து நிலையத்திற்கு, முன்பாக இருந்த, 
பூபாலசிங்கம்   புத்தகக் கடைக்கு எதிர் பக்கமாகவும், 
"ஹற்றன் நஷனல்" வங்கி  இருக்கும் பக்கத்தில் இருந்தது தான்...
"சிற்றி  பேக்கரி"  அதிலிருந்து.... 200 மீற்றர் தூரத்தில் "சுபாஷ் கபே" இருந்தது. 🙂

70´ களில் நல்ல பாண் வாங்க வேண்டும் என்றால்,
கந்தர் மடத்திலிருந்து சைக்கிளில், சிற்றி பேக்கரிக்கு போக... 15 நிமிடம் எடுக்கும்.
அப்படியே... சிங்களவனின், பாணை வாங்கிக் கொண்டு, 
பூபால சிங்கம் கடையில்... அப்பாவுக்கு, சில ஆங்கில மாத சஞ்சிகளையும் வாங்கிக் கொண்டு வருவேன். 

பிற் குறிப்பு: உங்களது கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.:)
சந்தேகம் இருந்தால்... தாராளமாக கேளுங்கள். கொழும்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

வடையும் கொஞ்சமா தெரியுது புரட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

1970 1980 களில்...

யாழ்ப்பாணத்தில்... இருந்த,  Restaurant களின்

பெயர் விபரமும்விலைப் பட்டியலும்:grin:

*கோட்டை முனியப்பகோயில்

தேங்காய்ச் சொட்டு.

 *பரணி ஹோட்டல்*                       

அப்பம்.

 *சிற்ரி பேக்கறி*                               

 கால், றாத்தல்... பாணும், பருப்பும்....

 *சுபாஸ் கபே*                                 

 ஐஸ்கிரீம்.

*றிக்கோ கோப்பி பார்*                            

 றோல்ஸ்கோப்பி.

 *மலாயன் கபே*                               

 உளுந்து வடை  போளி.

 *தாமோதர விலாஸ்*                      

 நெய் தோசை.

*சந்திரா ஐஸ் கிறீம்*                      

ஐஸ் சொக்.

 *கொழும்பு றெஸ் ரோறன்ட்*          

  இறால்கறி, குளம்பு.

 *பிளவ்ஸ்*                                         

 Beef றோஸ்.

(5 சதம்)         

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

*முனீஸ்வரா கபே*                       

    புட்டு, இடியப்பம், புளிச்சொதி,  தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்).

(வெலிங்டன் சந்தி)

*லிங்கம் கூல்பார்*                             

 சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா..........

(வெலிங்டன் சந்தி)

*கபே பாரத்*                                            

 அப்பம், பிளேன் ரீ.

(ஆரிய குளம் சந்தி)                           

*ஒரியென்டல் பேக்கரி*                     

 சங்கிலிப் பாண்.

 *சொக்கன் கடை*                                   

கடலை வடை.

(3 - 5 சதம்பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

உங்களுக்கு தெரிந்தகடைகளின் பெயரை... கூறுங்களேன்😁 :grin:

சிறி,
எங்கள் காலத்தில் சந்திரா ஐஸ் கிரீம் காலம் முடிந்து விட்டது. சிறு வயதில் வீடு வீடாக வரும் சந்திரா ஐஸ் கிரீம் வானும் வழக்கொழிந்து விட்டது. லிங்கன் கூல் பார் உடன், கஸ்தூரியார் வீதியில் இருந்த கல்யாணி கிரீம் ஹவுஸ் என்பது மிக பிரபல்யமாகி விட்டது. 
நீங்கள் குறிப்பிட்ட கைலாச பிள்ளையார் கோவிலடியில் இருக்கும் சொக்கன் கடையை மறக்கமுடியாது. இவர்களது விலை எப்பவுமே விலை குறைவு. வெளியில் வடை 3 ரூபா வித்தால் இவர்கள் 1 ரூபாவுக்கு விற்பார்கள். வடை, மோதகம், கொழுக்கட்டை என்று சைவம்தான். பெரும் தீனிக்காரன் எவனையாவது சாப்பிட கூட்டிக்கொண்டு போறதென்றால் இங்குதான் கொண்டு போறது, எவ்வளவு சாப்பிட்டாலும் 20 ரூபாவுக்கு மேலே வராது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

புரட்சி.... இப்ப, நாதமுனியை... கூப்பிடாதீங்க.
அந்த  ஆளு .. ஒரு,  "பிலிம்" காட்டிக்கிட்டு,  "எஸ்கேப்பு"  பண்ணிக்கிட்டார். 😎

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் ! இந்த உணவகங்களில் சென்று உணவருந்தி உள்ளீர்களா..? ரெ ல் மீ ..☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புரட்சி.... இப்ப, நாதமுனியை... கூப்பிடாதீங்க.
அந்த  ஆளு .. ஒரு,  "பிலிம்" காட்டிக்கிட்டு,  "எஸ்கேப்பு"  பண்ணிக்கிட்டார். 😎

தமிழ் சிறி,

நீங்கள் நீலத்தில் பிலிம் என்னும் வார்த்தையை  அடையாளப்படுத்தியதால் ஏதெனும் சூதனமாக சொல்ல வருகின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

இவருக்கு ஓடை, குச்சொழுங்கையளுக்கை இருக்கிறதெல்லாம் அத்துப்படி 😎

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கங் கடை, ப்ளவுசில் (ஐந்து சந்தி) ரொட்டி றோஸ் உடன் தருவது "ஆனம்" அது முஸ்லிம்களின் பிரத்தியேகமான ஒரு அய்ட்டம்  அதை சொதி என்றும் ரசம் என்றும் சொல்வது தமன்னாவை குஸ்பு என்றும் மஞ்சுளா என்றும் (இன்றைய) சொல்லி அவமானப்படுத்துவதாகும்.....!

சந்திரா கபே .....!

மனோகரா தியேட்டர் சந்தியில்.

உழைப்பாளிகளின் உணவுக்கு உத்தரவாதமான உணவகம்.....!

முனீஸ்வரா கபே (வெலிங்டன் )போல.

நவஜீவன் கபே .......!

கே.கே.எஸ். வீதியில் சத்திரத்து சந்திக்கு அண்மையில்.

வித்தியாசமான பால் தேநீருக்கும் ரொட்டிக்கும் பேர் போனது....!

செம்மார் ஒழுங்கையில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. (செருப்புகள் தைத்து கொண்டு இருப்பார்கள்)......!

ரதி வாட்ஜ் கடைக்கு முன்னாள் துவங்கி மாலயன் கபேக்கு அருகாக வந்து ஏறும்.

அருமையான சாப்பாடு, எவ்வளவு சோறும் வாங்கலாம்.இரண்டாவது காறிக்கு காசு. வீடுகளுக்கு பார்சல் கட்ட  சிறந்த இடம்.இரண்டு பார்சலில் ஐந்து ஆறு பேர் தாராளமாய் சாப்பிடலாம்......!

(பத்மாகபே  கடை பற்றி பல இடங்களில் நிறைய எழுதி விட்டேன்.அது உள்வீட்டு கடை). 

😇  😇

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

அது "அழகு" கடை . விசேஷ விற்பனை சாராயம்.மூத்திரசந்துக்குள் இருக்கும். அங்கு கூலித் தொழிலாளர்கள்தான் அதிகம். நிண்ட நிலையில் ஒரு கிளாஸ் சாராயம் வாங்கி அடிச்சுட்டு ஓடுவார்கள்......கஸ்தூரியார் வீதியையும் கே.கே.எஸ். வீதியையும் இணைக்கும் சந்து.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

21 hours ago, நீர்வேலியான் said:

இது ஆஸ்பத்திரியில் இருந்து தள்ளியே இருந்தது, இப்பவும் அதே இடத்தில இருக்கிறது. கஸ்துரியார் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்தில இருந்தது, சுபாஷ் ஐஸ் கிரீம் கஃபே பக்கம்   

ஈழப்பிரியன் & நீர்வேலியான்.... நீங்கள் சொல்வது சரி.:)
நான் தான்.... தவறாக குறிப்பிட்டு விட்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nilmini said:

spacer.png

சிவன் வீதிக்கு எதிர் பக்கமாக பலாலி வீதியில் இருந்த cafe யை நினைவு இருக்கா  சிறி? நல்ல தோசை, வடை, ரொட்டி, போண்டா எல்லாம் வித்தார்கள். பல வருடங்களாக இருந்திச்சு ( Jaffna New என்று map இல் இருக்கும் இடத்தில )

நான் நினைக்கிறன் முருகன் கஃபே அல்லது முருகன் விலாஸ். ஒரு பழங்காலத்து ஆனால் நல்ல கட்டிடம் 

நில்மினி... நீங்கள் சொல்லும் கடையின் பெயர் "சரஸ்வதி விலாஸ்" என்ற ஒரு நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

மொக்கங் கடை, ப்ளவுசில் (ஐந்து சந்தி) ரொட்டி றோஸ் உடன் தருவது "ஆனம்" அது முஸ்லிம்களின் பிரத்தியேகமான ஒரு அய்ட்டம்  அதை சொதி என்றும் ரசம் என்றும் சொல்வது தமன்னாவை குஸ்பு என்றும் மஞ்சுளா என்றும் (இன்றைய) சொல்லி அவமானப்படுத்துவதாகும்.....!

சந்திரா கபே .....!

மனோகரா தியேட்டர் சந்தியில்.

உழைப்பாளிகளின் உணவுக்கு உத்தரவாதமான உணவகம்.....!

முனீஸ்வரா கபே (வெலிங்டன் )போல.

நவஜீவன் கபே .......!

கே.கே.எஸ். வீதியில் சத்திரத்து சந்திக்கு அண்மையில்.

வித்தியாசமான பால் தேநீருக்கும் ரொட்டிக்கும் பேர் போனது....!

செம்மார் ஒழுங்கையில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. (செருப்புகள் தைத்து கொண்டு இருப்பார்கள்)......!

ரதி வாட்ஜ் கடைக்கு முன்னாள் துவங்கி மாலயன் கபேக்கு அருகாக வந்து ஏறும்.

அருமையான சாப்பாடு, எவ்வளவு சோறும் வாங்கலாம்.இரண்டாவது காறிக்கு காசு. வீடுகளுக்கு பார்சல் கட்ட  சிறந்த இடம்.இரண்டு பார்சலில் ஐந்து ஆறு பேர் தாராளமாய் சாப்பிடலாம்......!

(பத்மாகபே  கடை பற்றி பல இடங்களில் நிறைய எழுதி விட்டேன்.அது உள்வீட்டு கடை). 

😇  😇

MEN'S RUN & Fly 60's 70's Vintage Retro Green Tartan Plaid Bell ...

சுவி... நீங்கள் குறிப்பிட்ட கடை தெரியும். மத்தியான நேரம்... சனம் அதிகமாக இருக்கும்.
ஜும்மா தெருவில் உள்ள... முஸ்லீம் தையல் காரரிடம் தான்....
நான் "பெல் பொட்டம்" கால் சட்டை, தைக்கக்  கொடுப்பேன்.
தையல் கூலி... 25 ரூபாய். :)

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு விசையங்கள் நடந்திருக்கா அந்தக்காலத்தில்.அப்ப நான் கைக்குழந்தை.அதால தான் எனக்கு ஒன்டும் தெரியல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு விசையங்கள் நடந்திருக்கா அந்தக்காலத்தில்.அப்ப நான் கைக்குழந்தை.அதால தான் எனக்கு ஒன்டும் தெரியல.

இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு.😎

மொக்கன் கடையில படுத்தே கிடந்தவயள், இப்ப... அப்படி சொல்லி தானே தப்புவினம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பரடைஸ் ஹோட்டலில் நூடில்ஸ்  கூடச் சுவையானது. றோள்ஸ்சும் சுவை. பெரும்பாலும் இணையர்கள் தனியே இருந்து உண்ணுவதற்கு வசதியானது. ஒரு35 ஆண்டுகளைப் பின்னோக்கி ஏதேதோ நினைவுகளை எடுத்துவரும் திரியாக... மலாயன் கபேக்கு ஐயாவோடு போய் தோசையும் சம்பலும் சாம்பாரும் சாப்பிட்டதை மறக்கமுடியாது.  அது கனாக்காலமாக் கலைந்து..... கலந்து இன்றும் என்றும்......  இன்று வேலைசெய்யும்போது மலாயன் கபே நினைவுக்கு வந்தது. பார்த்தால் இப்படியொரு எண்கண்ணில்.... நன்றி தமிழ்ச்சியவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
9 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு விசையங்கள் நடந்திருக்கா அந்தக்காலத்தில்.அப்ப நான் கைக்குழந்தை.அதால தான் எனக்கு ஒன்டும் தெரியல.

இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு.😎

தம்பியின் பைம்பசை ஒருக்கா மாற்றிவிடுங்கோ.நாறுது.

2 hours ago, nochchi said:

அது கனாக்காலமாக் கலைந்து..... கலந்து இன்றும் என்றும்......  இன்று வேலைசெய்யும்போது மலாயன் கபே நினைவுக்கு வந்தது. பார்த்தால் இப்படியொரு எண்கண்ணில்.... நன்றி தமிழ்ச்சியவர்களே.

நொச்சி அதுக்கேனப்பா தமிழச்சிக்கு நன்றி?
ஒன்றுமா விழங்கேல்ல.

ஓஓஓ
தமிழ்சிறி சிலிப்பாயிடுச்சா?

  • கருத்துக்கள உறவுகள்

Zsa.jpg

செல்வ சந்நிதி முருகன் கோவில் எதிரில் ,தொண்டைமனாறு.

மசால் தோசை அருமை.! 👌

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பியின் பைம்பசை ஒருக்கா மாற்றிவிடுங்கோ.நாறுது.

நொச்சி அதுக்கேனப்பா தமிழச்சிக்கு நன்றி?
ஒன்றுமா விழங்கேல்ல.

ஓஓஓ
தமிழ்சிறி சிலிப்பாயிடுச்சா?

ஆனைகளுக்கே சறுக்கேக்கை.....

மலாயன் கபே பெயர்ப்பலகையின் (சீமேந்தாலானது) இருமருங்கிலும் புலித்தலை பொறிக்கப்பட்டிருந்ததாக ஞாபகம்.  ஞாபகம் சரிதானா? நினைவிருப்பவர்கள் கூறுவீர்கள் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nochchi said:

ஆனைகளுக்கே சறுக்கேக்கை.....

மலாயன் கபே பெயர்ப்பலகையின் (சீமேந்தாலானது) இருமருங்கிலும் புலித்தலை பொறிக்கப்பட்டிருந்ததாக ஞாபகம்.  ஞாபகம் சரிதானா? நினைவிருப்பவர்கள் கூறுவீர்கள் என்று நம்புகின்றேன்.

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 
2019 இல்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுகுளி பள்ளி வழி.. பால் சாலை .👍

Zxa.jpg

பால் சர்பத்..👌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 
2019 இல்

சுடச் சுட மாட்டில் பால் கறந்து பால் தேனீர் கிடைக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 09:25, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 
2019 இல்

மீரா அவர்களுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/6/2020 at 09:25, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 
2019 இல்

வாசல்லை படுத்திருக்கிறவையின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.

அது சரி உதிலை ரெலிபோனை நோண்டிக்கொண்டு நிக்கிறது நீங்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.