Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

IMG-20200612-WA0016-960x720.jpg?189db0&189db0

இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனுக்கு... நினைவு அஞ்சலிகள். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் சிலைக்கு நரி ஏன் போனது. 🤥

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துகேயப் பேய்களுடன் தமிழரின் இராச்சியத்தை பாதுகாக்க போராடி, பிரபாகரன் போல துரோகத்துடன்   வீழ்த்தப்பட்ட சங்கிலியனுக்கும், போர்த்துக்கேய பேய்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல்  எதிராக 6 முறை  கிளர்ந்து எதிர்த்த மக்களுக்கும் நினைவு ஏந்தல்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Kadancha said:

போர்த்துகேயப் பேய்களுடன் தமிழரின் இராச்சியத்தை பாதுகாக்க போராடி, பிரபாகரன் போல துரோகத்துடன்   வீழ்த்தப்பட்ட சங்கிலியனுக்கும், போர்த்துக்கேய பேய்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல்  எதிராக 6 முறை  கிளர்ந்து எதிர்த்த மக்களுக்கும் நினைவு ஏந்தல்கள்.  

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

வீழ்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்.

13 hours ago, Kapithan said:

சங்கிலியன் சிலைக்கு நரி ஏன் போனது. 🤥

ஆஆஆ
குறுநில மன்னர்களைப் பார்த்து கேட்கிற கேள்வியா?
யாரங்கே எடு .................

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

1 hour ago, ஈழப்பிரியன் said:

வீழ்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்........

Hyena

நச்சென்று ஒரு வரியில்... அழகிய பதில். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

Hyena

நச்சென்று ஒரு வரியில்... அழகிய பதில். :)

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

Hyena

நச்சென்று ஒரு வரியில்... அழகிய பதில். :)

அய்யோ சிறித்தம்பி பாக்கவே வயித்தை பிரட்டுது....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

sanklyan-1.jpg

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார், கீரி கடற்கரையில்  குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது சங்கிலிய மன்னனுடைய நிழல் படத்திற்கு மாலை அணிவித்து, விசேட பூஜை வழிபாடுகள் எழுத்தூர் அம்மன் கோயில் பிரதம குரு விஜயபாகுவினால் நடாத்தப்பட்டு, சிரார்த்த சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கிரிகை பொருட்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த கிரிகை நிகழ்வில் தேசிய சைவ மக்கள் கட்சியின் உறுப்பினர்கள், இந்து இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

sanklyan-2.jpg

sanklyan-3.jpg

http://athavannews.com/சங்கிலியனின்-401-ஆவது-நினைவ/

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

திட்டமிட்டு மன்னாரில் சமயப் பிரச்சனையை உண்டுபண்ணப் பார்க்கிறார்கள். மன்னார் கிறீத்துவர்கள், மன்னன் சங்கிலியனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சீண்டும் விதமாக இந்த சிரார்த்த தினத்தை மன்னாரில் நடாத்தியுள்ளனர். 🤥

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 🤥

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் சங்கிலிய மன்னனுக்கான பிதிர்கடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதுடன், சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலய வளாகதத்தில் அவருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, சங்கிலிய மன்னனின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

மேலும், மரநடுகை நிகழ்வு இடம்பெற்றாத் தொடர்ந்து அவரது நினைவாக 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் வவுனியா முக்கியஸ்தர் மாதவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் செயலாளர் திருக்கேதீஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர் செல்வநாயகம் சுரேஸ், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-3-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-6-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-5-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-4-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-1-scaled.jpg

http://athavannews.com/சங்கிலிய-மன்னனின்-நினைவு/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2020 at 03:45, தமிழ் சிறி said:

சங்கிலிய மன்னனுக்கு... நினைவு அஞ்சலிகள். 🙏🏽

20 hours ago, Kadancha said:

போர்த்துகேயப் பேய்களுடன் தமிழரின் இராச்சியத்தை பாதுகாக்க போராடி, பிரபாகரன் போல துரோகத்துடன்   வீழ்த்தப்பட்ட சங்கிலியனுக்கும், போர்த்துக்கேய பேய்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல்  எதிராக 6 முறை  கிளர்ந்து எதிர்த்த மக்களுக்கும் நினைவு ஏந்தல்கள்.  

8 hours ago, தமிழ் சிறி said:

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

7 hours ago, தமிழ் சிறி said:

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது.

விடுதலைப்புலிகளின் ஆட்சியில்  தமிழீழம்  இருந்த போது இவ்வாறு சங்கிலிய மன்னனின் நினைவு தினங்களும் சமய சடங்குகளும் இடம்பெற்றதாக செய்திகள் வரவில்லையே? இந்த சங்கிலிய மன்னனின் ஆரிய சக்கரவர்த்திகள் பரம்பரை மலையாள தளபதி ஒருவரின் வாரிசுகள் என்று படித்த நினைவு. இவர்களின் இன்றைய பரம்பரை கத்தோலிக்கராக இருக்கிறார்கள். 

யாழ்ப்பாண ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் இணைத்தளம் இங்கே:

https://www.jaffnaroyalfamily.org/biography.html

ஒல்லாந்தர் இவரது நாட்டை (யாழ்ப்பாணத்தை) கைப்பற்றி இவரை அகதி ஆக்கியதற்காக இவருக்கு நட்டயீடும் மாதாந்த அரசமானியமும் கொடுக்கிறார்கள் போலும். அவர்கள் நாட்டில் தான் அரசர் இருக்கிறார்.

Edited by கற்பகதரு

9 hours ago, Kapithan said:

திட்டமிட்டு மன்னாரில் சமயப் பிரச்சனையை உண்டுபண்ணப் பார்க்கிறார்கள். மன்னார் கிறீத்துவர்கள், மன்னன் சங்கிலியனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சீண்டும் விதமாக இந்த சிரார்த்த தினத்தை மன்னாரில் நடாத்தியுள்ளனர். 🤥

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 🤥

எமது மண்ணின்  இறுதி மன்ன‍னான சங்கிலியனை நினைவு கூரும் போது சங்கிலியனுடன் தொடர்பான  வரலாற்று  ஆதாரங்களை தேடி அவற்றை காட்சிபடுத்தி புதிய சந்த‍திக்கு எமது வரலாற்றை கூறும் நிகழ்வே இஙு்கு முக்கியம். இதை  ஒரு சமய நிகழ்வு  போல் திவசம் செய்வது  வெறும் கேலி கூத்து மட்டுமல்ல நீங்கள் கூறியது போல் சமய பிரச்சனையை உண்டு பண்ணும் சதி நிகழ்வாகவே  இருப்பதாகவே தெரிகிறது.

சங்கிலியன் எமது வரலாற்று அடையாளம். அதற்காக அவரது ஆட்சியில்  நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை  எல்லாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால் நிச்சயம் சங்கிலியனின் வரலாற்று ஆதாரங்கள் தேடி எடுக்கபட்டு நினைவு சின்னமாக பராமரிக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

மன்னார் கத்தோலிக்கரிடையே "மரித்த விசுவாசிகள்" என்ற பதம் இன்றும் புழங்கும் ஒன்று. சங்கிலிய மன்னன் ஒரு தமிழ் அரசனாக நினைவுகூரப்படுவது பொருத்தமானது. ஆனால் மதம்மாறிய தமிழ் மக்களை கொன்ற வரலாற்றை மறைக்க முடியாதபடி அது பதியப் பட்டிருக்கிறது. இந்த தரவை மட்டும் ஒரு judgement உம் இன்றி ஒரு தடவை நான் குறிப்பிட்ட போது களத்தில் வந்த எதிர்ப்பு பலமாக இருந்தது! இது போன்ற புராதன நவீன கால வரலாற்று மறுப்பே எங்களைப் பிரித்து வைத்திருக்கப் போகிறது என்று அஞ்சுகிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2020 at 22:54, குமாரசாமி said:

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

கொரோனாவாலேயே வீழ்த்த முடியல்ல.. நீங்க என்னடான்னா.. ! 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னர் மட்டுமல்ல அவரது குதிரையின் வீரம் தெறிக்கும் தோற்றம்கொண்ட அன்றைய சிலையும், இன்றைய புதிய சிலையும்.

jaffnaking.jpg

  • கருத்துக்கள உறவுகள்

DSC_8595-1-630x420-1.jpgயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில், சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அரும்பொருள் காட்சியகம். அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 02:57, Paanch said:

சங்கிலிய மன்னர் மட்டுமல்ல அவரது குதிரையின் வீரம் தெறிக்கும் தோற்றம்கொண்ட அன்றைய சிலையும், இன்றைய புதிய சிலையும்.

jaffnaking.jpg

இது குதிரை அல்ல கோவேறு கழுதை (😏). பஞ்சத்தால் கழுதை(😂) இழைத்துவிட்டதோ. 😡

சிலையைச் செய்த சிற்பிக்கு அரசனின் குதிரை (King Horse / Stallion) என்றால் என்னவென்றே தெரியாது போல் இருக்கிறது. ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.