Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தாண்டி முருகன் ஆலயத்தின் தேங்காய் உடைக்கும் கல்லினை உரிமை கோரும் சிங்கள பெளத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள - பெளத்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துவரும் சிங்கள தொல்பொருள் திணைக்களம் கடந்த மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நகரின் வடக்காக 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவ்வாறு விஜயம் செய்த சிங்கள - பெளத்த அணி, அவ்வாலயத்தின் முன்றலில் தேங்காய் உக்கவும், கற்பூரம் கொழுத்தவும், இன்னும் இதர வழிபாட்டுத் தேவைகளுக்காக தமிழர்களால் பல்லாண்டுகளாக பாவிக்கப்பட்டுவரும் செவ்வக வடிவக் கல் உட்பட்ட இதர கற்சின்னங்களை  பலகோணங்களிலும் படமெடுத்தனர். அங்கு மக்களுக்கு அவர்கள் வழங்கிய அறிவுருத்தலில், இக்கற்கள் புராதன பெளத்த கற்சின்னங்களை ஒத்து உள்ளதால், அதனை தாம் கொழும்பிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக பரமரிக்கப்போவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு மறுத்துரைத்த ஆலய பூசகர் சிவசிறி வசந்தராஜா குருக்கள், கற்கள் பல சகாப்த்தங்களாக அங்கே தமிழர்களால் பாவிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாலயத்தில் இருக்கும் ஏனைய கற்கள் 2010 ஆம் ஆண்டில் ஆலயம் மீளமைக்கப்பட்டபோது வவுனியாவில் தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டவை என்றும் கூறினார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரிலிருந்து இங்கு வந்த பொலீஸ் குழுவொன்று சிங்கள - பெளத்த தொல்பொருள் திணைக்களத்துடன் முரண்பட்டதற்காக ஆலயக் குருக்களை எச்சரித்துவிட்டுச் சென்றது.

Chiththaandi_Murukan_temple_01.jpg

ஆனால், தனது முடிவில் ஆணித்தரமாக இருந்த குருக்கள், சிங்களம் உரிமை கோருவதுபோல தமிழர்கள் பாவித்துவரும் இக்கல் பெளத்தர்களினது என்று கூறுவதற்கு எந்த நம்பந்தகுந்த ஆதாரங்களையும் சிங்கள - பெளத்த தொல்பொருள் திணைக்களக் குழு கொண்டிருக்கவில்லையென்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

Chiththaandi_Murukan_temple_02.jpg

சிங்கள - பெளத்த புராதன சின்னங்களான  இக்கற்களில் இருந்த தமது கலாசார அடையாளங்களை தமிழர்கள் வேண்டுமென்றே அழித்துவிட்டு, தமது மத வழிபாட்டிற்காக பாவிப்பதாகக் குற்றம்சாட்டிய இந்த குழு, பொலீஸாரைக் கொண்டு குருக்களை தமது வழிக்கு வரப்பண்ணுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தன்மீது செலுத்தப்படும் அழுத்தத்தினால், ஆலய பரிபாலன சபைக்கு குருக்கள் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த ஆலயமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிழக்கினை ஆண்ட வன்னியர் தலைவர்களினால் இவ்வாலயம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்ததாகக் கூறுகின்றனர். குறைந்த ஒன்பது சந்ததிகளாக இவ்வாலயம் வன்னியர் சமூகத்தினாலேயே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். 

Chiththaandi_Murukan_temple_05.jpg

ஆனால், இவை எவற்றையுமே ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும், போர்க்குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டின் தொல்பொருள் திணைக்களம், மிகவும் திட்டமிட்ட ரீதியில் தமிழ் முஸ்லீம் இனங்களின் கலாசாரத் தொன்மையினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது நிதர்சனம்.

Chiththaandi_Murukan_temple_08.jpg

சித்தாண்டியிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் மட்டுமே இருக்கும் கிரான் தான் கிழக்கின் விடிவெள்ளியும், வீரதீரருமான உலகப்புகழ் துரோகியொருவரின் ஊரென்பது உண்மை. திகாமடுல்லையில் அவர் எசமானர்களுக்கு வாக்குச் சேர்த்துக்கொண்டிருக்க, எசமானர்கள் அவரது ஊரிலேயே தமிழரின் கலாசாரத்தினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் இவர் தமிழர்களைக் காப்பார் என்று ஒரு கூட்டம் பின்னால்த் திரியுது.

நன்றி தமிழ்நெட்

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39895

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

சித்தாண்டியிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் மட்டுமே இருக்கும் கிரான் தான் கிழக்கின் விடிவெள்ளியும், வீரதீரருமான உலகப்புகழ் துரோகியொருவரின் ஊரென்பது உண்மை. திகாமடுல்லையில் அவர் எசமானர்களுக்கு வாக்குச் சேர்த்துக்கொண்டிருக்க, எசமானர்கள் அவரது ஊரிலேயே தமிழரின் கலாசாரத்தினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் இவர் தமிழர்களைக் காப்பார் என்று ஒரு கூட்டம் பின்னால்த் திரியுது.

சரி ...பின்னால் திரியவில்லை ,
வேறு யார் காப்பாற்றி தருவார்கள் என்றாவது சொல்ல முடியுமா, தீபாவளி புஸ்வாணம் சம்மா...? 
இல்ல இனச்சுத்திகரிப்பு சும்மா...? இல்லை  வேட்டியும் சால்வையும் போட்டுகொண்டு இல்ல விழையாட்டு போட்டிகளில் மரதன் ஓடும் சீனியா...?, இல்ல இவர்களின் எசமான் இந்துத்துவ ஹிந்தியாவா...?  
 யாரவது சச்சியை கூப்பிடுங்கப்பா கிறிஸ்தவன் என்றால் மட்டும் தான் கொடிபிடிக்க நெஞ்சில மாஞ்சா இருக்கு போல  

  • கருத்துக்கள உறவுகள்

கோவணத்தையும் உருவாமல் விடமாட்டான்கள் போல🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, உடையார் said:

கோவணத்தையும் உருவாமல் விடமாட்டான்கள் போல🤔

உடையார்! தொடர்ந்து சிங்களத்தை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

உடையார்! தொடர்ந்து சிங்களத்தை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.😎

என்னண்னை... திடீரென்று, சிங்களப் பாசம் பீறிட்டு பாயுது. 😁

பொடி மெனிக்கா.... வசியம் வைத்துப் போட்டாவோ.... 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

என்னண்னை... திடீரென்று, சிங்களப் பாசம் பீறிட்டு பாயுது. 😁

பொடி மெனிக்கா.... வசியம் வைத்துப் போட்டாவோ.... 😂

சிறித்தம்பி! எங்கடை செலுட்டு அரசியல்வாதிகளாலை எல்லாம் வந்தது.அதுகள் வாயை மூடிக்கொண்டிருக்கிறதாலை தானே அவங்களும் அளவுக்கு மிஞ்சி நடப்பு காட்டுறதும் சண்டித்தனம் காட்டுறதும்.....

 அந்த ஒருகாலத்திலை இப்படியான சேட்டையள் ஏதும் இருந்ததா நடந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிலையிலும் தமிழர்கள் அமைதியை தவிர  வேறொன்றையும் விரும்புவதில்லை

கையிலெடுப்பதில்லை

ஆனால் சிங்களம் விடாது துரத்தி துரத்தி.......??????

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள நாடென எப்போதே அறிவித்துவிட்டார்கள் இப்ப திருகோணமலையும் அவங்கது ஏன் நாளைக்கு நல்லூரும் அவங்கது என்பார்கள் இது ஒரு புறம் இருக்க அங்கால முபாறக் அப்துல் மஜித் ராவணனன் முஸ்லீமாம் என்ற பிரச்சினையும் ஓடுது 

இந்த நாட்டில பிரச்சினை பிரச்சினையாவே எழுப்புறானுகள் 

7 hours ago, ரஞ்சித் said:

சித்தாண்டியிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் மட்டுமே இருக்கும் கிரான் தான் கிழக்கின் விடிவெள்ளியும், வீரதீரருமான உலகப்புகழ் துரோகியொருவரின் ஊரென்பது உண்மை. திகாமடுல்லையில் அவர் எசமானர்களுக்கு வாக்குச் சேர்த்துக்கொண்டிருக்க, எசமானர்கள் அவரது ஊரிலேயே தமிழரின் கலாசாரத்தினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் இவர் தமிழர்களைக் காப்பார் என்று ஒரு கூட்டம் பின்னால்த் திரியுது.

வடக்கு கிழக்கில் இதேதான் பிரச்சினை யாரும் கண்டுகொள்ளாத போது அம்மானுக்கும் மட்டும் வேண்டுதலா என்ன  அம்பாறையில் இனவிகிதாசாரத்தை கூட்டவே நிலப்பரப்பை அம்பாறைக்குள் அரசு எடுத்துவிட்டது ஆக அப்படிப்பட்ட அரசு தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி அது இது என ஆரம்பித்துள்ளது நாளை இன்னும் பல இடங்கள் கூட பறி போகலாம்  நாம கருத்து எழுதிக்கொண்டே இருப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

சரி ...பின்னால் திரியவில்லை ,
வேறு யார் காப்பாற்றி தருவார்கள் என்றாவது சொல்ல முடியுமா, தீபாவளி புஸ்வாணம் சம்மா...? 
இல்ல இனச்சுத்திகரிப்பு சும்மா...? இல்லை  வேட்டியும் சால்வையும் போட்டுகொண்டு இல்ல விழையாட்டு போட்டிகளில் மரதன் ஓடும் சீனியா...?, இல்ல இவர்களின் எசமான் இந்துத்துவ ஹிந்தியாவா...?  
 யாரவது சச்சியை கூப்பிடுங்கப்பா கிறிஸ்தவன் என்றால் மட்டும் தான் கொடிபிடிக்க நெஞ்சில மாஞ்சா இருக்கு போல  

  1. நீராவியடி பிள்ளையார் கோவிலில் இது போன்ற பிரச்சினை வந்த போது வழக்கறிஞர் ஒருவர் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுத்தார்.
  2. திருகேதீஸ்வரம் வளைவு பிரச்சினையிலும் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை  அதே வழக்கறிஞர் பெற்று கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கறிஞர் சைவர் இல்லை. யார் இவர், சொல்லுங்கள் பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த இடைவெளியில் சையிக்கிள் ஓடி சாகசம் காட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:
  1. நீராவியடி பிள்ளையார் கோவிலில் இது போன்ற பிரச்சினை வந்த போது வழக்கறிஞர் ஒருவர் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுத்தார்.
  2. திருகேதீஸ்வரம் வளைவு பிரச்சினையிலும் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை  அதே வழக்கறிஞர் பெற்று கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கறிஞர் சைவர் இல்லை. யார் இவர், சொல்லுங்கள் பார்க்கலாம்?

அவர் வக்கீலாகவே இருந்திருக்கலாமே என்னத்திற்கு அரசியலுக்கு வந்தார் 😀
 
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

அவர் வக்கீலாகவே இருந்திருக்கலாமே என்னத்திற்கு அரசியலுக்கு வந்தார் 😀
 
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமோ 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கற்பகதரு said:
  1. நீராவியடி பிள்ளையார் கோவிலில் இது போன்ற பிரச்சினை வந்த போது வழக்கறிஞர் ஒருவர் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுத்தார்.
  2. திருகேதீஸ்வரம் வளைவு பிரச்சினையிலும் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை  அதே வழக்கறிஞர் பெற்று கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கறிஞர் சைவர் இல்லை. யார் இவர், சொல்லுங்கள் பார்க்கலாம்?

அப்படியே அந்த ஆனந்த சுதாகரன் சகோதரனையும் விடுதலை செய்ய ஏதாவது முயற்சியும் எடுக்கச்சொல்லுங்கள் 

அப்படியே தனக்கு முன்னாள் போராளிகளால் ஆபத்து என்று ஒரு பேரையும் உள்ள வைக்க சொன்னவராம் அதையும்கொஞ்சம் கிளியர் பண்ண சொல்லுங்க யூட்

6 hours ago, Kapithan said:

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமோ 😂😂

மேடைதான் கொஞ்சம் சறுக்கல் போல😉

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:
  1. நீராவியடி பிள்ளையார் கோவிலில் இது போன்ற பிரச்சினை வந்த போது வழக்கறிஞர் ஒருவர் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுத்தார்.
  2. திருகேதீஸ்வரம் வளைவு பிரச்சினையிலும் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை  அதே வழக்கறிஞர் பெற்று கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கறிஞர் சைவர் இல்லை. யார் இவர், சொல்லுங்கள் பார்க்கலாம்?

9 hours ago, ரதி said:

அவர் வக்கீலாகவே இருந்திருக்கலாமே என்னத்திற்கு அரசியலுக்கு வந்தார் 😀
 
சட்டத்தை கற்று அறிந்தவரை நாம் வக்கீல், வழக்கறிஞர், சட்டத்தரணி என்றெல்லாம் அழைப்போம்.

சட்டத்தை ஆக்குபவர்கள் யார்? இவர்கள் தான் அரசியல்வாதிகள்.

எங்கே இவர்கள் சட்டத்தை உருவாக்குகிறார்கள்? பாராளுமன்றத்திலே சட்டத்தை உருவாக்குகிறார்கள்.

ஆகவே, புதிய சட்டத்தை உருவாக்கி, அல்லது இருக்கும் சட்டத்தை திருத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால், சட்டத்தரணி, வக்கீல், வழக்கறிஞர் எங்கே போக வேண்டும்? பாராளுமன்றம் போக வேண்டும்.

அந்த சட்டத்தரணி எப்படி பாராளுமன்றம் போனால் சட்டத்தை மாற்ற முடியும்? பாராளுமன்ற அங்கத்தவராக போனால்தான் சட்டத்தை மாற்ற முடியும்.

எப்படி பாராளுமன்ற அங்கத்தவராவது? அரசியல்வாதியாகி, மக்களின் வாக்குகளை பெற்றே பாராளுமன்ற அங்கத்தவராக முடியும்.

அது சரி இதுவரை சுமந்திரன் மாற்றிய சட்டத்தை காட்டும் பார்ப்பம்? என்னத்தை கிழித்தார் என்று கேட்க விரும்புபவர்களுக்கு: பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கைகள் இணையத்தில் இருக்கின்றன. படித்து பாருங்கள்.

ஐயோ, இதெல்லாம் எங்களுக்கு புரியவில்லையே என்று மன உழைச்சல் கொள்பவர்களுக்கு: உங்களுக்கு புரியும் சங்கதிகளோடு நீங்கள் திருப்தி அடைந்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் செய்யும் பாதகம் குறைவாக இருக்கும். இவற்றை நான் ரதிக்கு எழுதவில்லை. ரதிக்கு இவை எல்லாம் புரியும் அளவுக்கு அறிவும், சாணக்கியமும், புத்திக்கூர்மையும் உண்டு என்பதை அவ எழுதியவற்றில் இருந்து நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சம்பந்தன் சட்டத்தரணி என்று எழுபது வருடமாய் புலுடா விட்டிருக்கிறார் பாருங்கோ! அதுதான் சுமந்திரனை கமக்கட்டுக்குள்ள கொண்டு திரியுறார் என்று தெரியாமல்ப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

சட்டத்தை கற்று அறிந்தவரை நாம் வக்கீல், வழக்கறிஞர், சட்டத்தரணி என்றெல்லாம் அழைப்போம்.

சட்டத்தை ஆக்குபவர்கள் யார்? இவர்கள் தான் அரசியல்வாதிகள்.

எங்கே இவர்கள் சட்டத்தை உருவாக்குகிறார்கள்? பாராளுமன்றத்திலே சட்டத்தை உருவாக்குகிறார்கள்.

ஆகவே, புதிய சட்டத்தை உருவாக்கி, அல்லது இருக்கும் சட்டத்தை திருத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால், சட்டத்தரணி, வக்கீல், வழக்கறிஞர் எங்கே போக வேண்டும்? பாராளுமன்றம் போக வேண்டும்.

அந்த சட்டத்தரணி எப்படி பாராளுமன்றம் போனால் சட்டத்தை மாற்ற முடியும்? பாராளுமன்ற அங்கத்தவராக போனால்தான் சட்டத்தை மாற்ற முடியும்.

எப்படி பாராளுமன்ற அங்கத்தவராவது? அரசியல்வாதியாகி, மக்களின் வாக்குகளை பெற்றே பாராளுமன்ற அங்கத்தவராக முடியும்.

அது சரி இதுவரை சுமந்திரன் மாற்றிய சட்டத்தை காட்டும் பார்ப்பம்? என்னத்தை கிழித்தார் என்று கேட்க விரும்புபவர்களுக்கு: பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கைகள் இணையத்தில் இருக்கின்றன. படித்து பாருங்கள்.

1 hour ago, satan said:

அப்போ சம்பந்தன் சட்டத்தரணி என்று எழுபது வருடமாய் புலுடா விட்டிருக்கிறார் பாருங்கோ! அதுதான் சுமந்திரனை கமக்கட்டுக்குள்ள கொண்டு திரியுறார் என்று தெரியாமல்ப் போச்சு.

7 hours ago, கற்பகதரு said:

ஐயோ, இதெல்லாம் எங்களுக்கு புரியவில்லையே என்று மன உழைச்சல் கொள்பவர்களுக்கு: உங்களுக்கு புரியும் சங்கதிகளோடு நீங்கள் திருப்தி அடைந்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் செய்யும் பாதகம் குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 09:55, கற்பகதரு said:
  1. நீராவியடி பிள்ளையார் கோவிலில் இது போன்ற பிரச்சினை வந்த போது வழக்கறிஞர் ஒருவர் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுத்தார்.
  2. திருகேதீஸ்வரம் வளைவு பிரச்சினையிலும் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை  அதே வழக்கறிஞர் பெற்று கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கறிஞர் சைவர் இல்லை. யார் இவர், சொல்லுங்கள் பார்க்கலாம்?

சூப்பரப்பு...அது  அவர் வாக்கு கேட்டு நிற்கும் மாகாணம் 
இப்படியேதாவது செய்துதான் செல்வாக்கை தூக்கி நிறுத்தவேனும் 

அப்படியே உங்கள் வக்கீலை கிழக்கு மாகாணத்தையும் கொஞ்சம் பார்க்க சொல்லுங்களப்பா,
யார் குற்றியாவது அரிசியாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 18:55, கற்பகதரு said:
  1. நீராவியடி பிள்ளையார் கோவிலில் இது போன்ற பிரச்சினை வந்த போது வழக்கறிஞர் ஒருவர் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுத்தார்.
  2. திருகேதீஸ்வரம் வளைவு பிரச்சினையிலும் சைவ தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பை  அதே வழக்கறிஞர் பெற்று கொடுத்தார்.

ஆனால் இந்த வழக்கறிஞர் சைவர் இல்லை. யார் இவர், சொல்லுங்கள் பார்க்கலாம்?

15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சூப்பரப்பு...அது  அவர் வாக்கு கேட்டு நிற்கும் மாகாணம் 
இப்படியேதாவது செய்துதான் செல்வாக்கை தூக்கி நிறுத்தவேனும் 

அப்படியே உங்கள் வக்கீலை கிழக்கு மாகாணத்தையும் கொஞ்சம் பார்க்க சொல்லுங்களப்பா,
யார் குற்றியாவது அரிசியாகட்டும்

இப்படி ஏளனமாக கேட்டால் கடைசிவரைக்கும் கிடைக்காது, வேண்டவே வேண்டாம் என்றுதானே கேட்கிறீர்கள்? பிள்ளையான், கருணா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி. வி. விக்னேஸ்வரன் இப்படி பலர் இருக்க, வேண்டாதவரிடம் இப்படி கேட்கலாமா? ம் .. ஹூம் ....  கிடைக்கவே கிடைக்காது. உங்களுக்கு பிடித்தமானவர்களிடமே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

இப்படி ஏளனமாக கேட்டால் கடைசிவரைக்கும் கிடைக்காது, வேண்டவே வேண்டாம் என்றுதானே கேட்கிறீர்கள்? பிள்ளையான், கருணா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி. வி. விக்னேஸ்வரன் இப்படி பலர் இருக்க, வேண்டாதவரிடம் இப்படி கேட்கலாமா? ம் .. ஹூம் ....  கிடைக்கவே கிடைக்காது. உங்களுக்கு பிடித்தமானவர்களிடமே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்

அதைதான் எவன் மூலம் கிடைக்குமோ அவன் மூலம் பார்த்துக்கொள்கிறோம் என்று நாங்கள் சொல்கிறோம் 
ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை ஓட்டியது நீங்கள் ... வக்கீல் இருக்கார் வச்சி செய்வார் என்று எண்டு டயலாக் விட்டுவிட்டு , இப்ப அவரிடம் கேக்கலாமா இவரிடம் கேக்கலாமா என்று கதையடிக்கிறீர்கள்,

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றம் தெரியுமா ...? கேபினட் அமைச்சராக இருந்த ஹாரிஸுக்கு இந்தவிடயத்தில்  காட்சட்டையில் மூச்சா போக வைத்தது யார் என்று தெரியுமா....?
யார் செய்து தனது பலத்தை காட்டினானோ அவனையே அந்த பிராந்திய மக்கள் தெரிவுசெய்வினம் 

எங்கேயோ இருந்த வக்கீலை கொண்டுவந்து ஏலம் போட்டுவிட்டு இப்போ அவனிடம் கேளு இவனிடம் கேளு எண்டு பம்முறீர்கள் ...காமடி பீசையா நீங்கள்  

On 24/7/2020 at 15:03, உடையார் said:

கோவணத்தையும் உருவாமல் விடமாட்டான்கள் போல🤔

ஐயா இப்போதுதான் அவர்கள் கிழக்கில் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடியும் வரையும் நகர்வுகள் மெதுவாகத்தான் இருக்கும். தேர்தல் முடிந்த பின்னர்தான் முழு வேகம் எடுக்கும். எந்தெந்த இடங்கள், எப்படியான இடங்கள் என்றெல்லாம் திடடம் போடடாகிவிட்ட்து. இது ஆரம்பம் மட்டுமே. பின்னர் வடக்கிலும் இது தொடங்கும் . திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அருகிலும் பெரிய புத்தர் சிலையுடன் பானசாலையையும் அமைத்துவிடடார்கள். இனி அங்கெல்லாம் தோண்டும்போது புத்தர் சிலைகள் வெளி வரும். பிறகென்ன அங்கு வாழ்ந்தவர்கள்  சிங்கள பவுத்தர்களா , தமிழ் பவுத்தர்களா என்று ஆராய்ச்சி நடக்கும். முடிவு சிங்கள பவுத்தர்களாகத்தான் இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.