Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5  ஆம் திகதி நடைபெற உள்ளது 
அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு 
அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன் 

Edited by Mohan

  • Replies 252
  • Views 52.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே🤔

6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை... நடத்த முன் வந்த, அபராஜிதனுக்கு... நன்றி.
மூன்றாவது, நான்காவது, ஏழாவது கேள்விகளுக்கு... பல தெரிவுகளை போட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன்..

இந்த வாக்கெடுப்பிற்கான இறுதிநாள் எது?.

  • தொடங்கியவர்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி அபராஜிதன்..

இந்த வாக்கெடுப்பிற்கான இறுதிநாள் எது?.

ஆகஸ்ட் 04 நள்ளிரவு 12 -00  இலங்கை நேரம் 

  • தொடங்கியவர்
1 hour ago, தமிழ் சிறி said:

போட்டியை... நடத்த முன் வந்த, அபராஜிதனுக்கு... நன்றி.
மூன்றாவது, நான்காவது, ஏழாவது கேள்விகளுக்கு... பல தெரிவுகளை போட்டிருக்கலாம்.

ஆம் ஸ்ரீ அண்ணா இணைத்த பிறகு  நானும் கவனித்தேன், மேலும் சிலரை இணைத்திருக்கலாம்  

2 hours ago, கிருபன் said:

இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே🤔

6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!

ஆம் மற்றவர்களும் பார்க்கலாம் உங்களின் தெரிவுகளை 

  • கருத்துக்கள உறவுகள்

You do not have permission to vote in this poll, or see the poll results.

why???????

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

You do not have permission to vote in this poll, or see the poll results.

why???????

புலவரும் வாக்களித்துள்ளதாகக் காட்டுகின்றதே🤔

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அபராஜிதன் said:

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5  ஆம் திகதி நடைபெற உள்ளது 
அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு 
அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன் 

இதை போட்டி திரியில் போட்டால் நல்லது.

4 hours ago, புலவர் said:

You do not have permission to vote in this poll, or see the poll results.

why???????

வருடத்துக்கொரு முறை வந்தால் பிரச்சனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கச்சேரிக்கு, சம்பந்தன் ஐயா.. வரமாட்டார் என்று,  26 வீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வோட் பண்ணுவம் எண்டு பாத்தால் பொட்டியை காணேல்லை.
இல்லாட்டி குமாரசாமி எண்ட பேரிலை ஆரும் குத்திட்டினமோ தெரியேல்லை
அல்லது எனக்கு தடையா?உங்களையெல்லாம் நம்பேலாதப்பா...செய்யக்கூடிய ஆக்கள்::

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வோட் பண்ணுவம் எண்டு பாத்தால் பொட்டியை காணேல்லை.
இல்லாட்டி குமாரசாமி எண்ட பேரிலை ஆரும் குத்திட்டினமோ தெரியேல்லை
அல்லது எனக்கு தடையா?உங்களையெல்லாம் நம்பேலாதப்பா...செய்யக்கூடிய ஆக்கள்::

புதிய பிரவுசரில் வந்து பார்க்கவும் அல்லது தற்போதைய பிரவுசரை தேவையில்லாத சுமைகளை அழித்துவிடவும்  HISTORY  பைல்  கூடினாலும் காட்டாது .

நீங்கள்  வோட் போடவில்லை இந்த நிமிடம்வரை .

ஆறாவது கேள்விக்கு என் மனதின் விடை பத்து பத்துக்கு  மேல் வரணும் ஆனால் இவை கீழே விழுந்து எழும்பினால்த்தான்  அடுத்தமுறை சரியாக காலடி எடுத்துவைப்பினம் .

அடடா ...வினா 6 இற்கு 10 இற்கு கூட என்று வாக்களிக்க வெளிக்கிட்டு தவறுதலாக பத்துக்கும் குறைவான ஆசனங்களுக்கு வாக்களித்து விட்டேன். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 ற்கும் அதிகமாக கண்டிப்பாக ஆசங்களை பெறும் என நம்புகின்றேன். 

சஜித்தும் ரணிலும் பிரிந்து நிற்பதால் இருவரது கட்சிகளும் 10 இற்கு குறைவான ஆசங்களை பெறும் வாய்ப்பு அதிகம். அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோத்தா / மகிந்த பெறுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வாக்களிக்க முடியவில்லை......! 

26 minutes ago, suvy said:

எனக்கும் வாக்களிக்க முடியவில்லை......! 

சுவி அண்ணா, இன்னொரு பிரவுசரில் முயன்று பாருங்கள். வாக்களிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

2 hours ago, suvy said:

எனக்கும் வாக்களிக்க முடியவில்லை......! 

9 hours ago, குமாரசாமி said:

வோட் பண்ணுவம் எண்டு பாத்தால் பொட்டியை காணேல்லை.
இல்லாட்டி குமாரசாமி எண்ட பேரிலை ஆரும் குத்திட்டினமோ தெரியேல்லை
அல்லது எனக்கு தடையா?உங்களையெல்லாம் நம்பேலாதப்பா...செய்யக்கூடிய ஆக்கள்::

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மோகன் said:

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

ஓம் நான் முதலே முடிவுகளைப் பார்த்து விட்டேன் ......  பக்கத்தில இருக்கும் அத்தானும் பார்த்திருப்பார் என்றுதான் நினைக்கிறன்......இப்பதான் நிம்மதி......நன்றி மோகன் &  நிழலி ......!   🌹 

  • கருத்துக்கள உறவுகள்

2)இந்த முறை எதிர் கட்சி ரணிலும் ,சஜீத்தும் இணைந்ததாய் இருக்கும் 
3)விக்கியை தெரிவு செய்தவர்களை நினைக்க பரிதாபமாய் உள்ளது. டக்ளசும் ,அங்கயனும் [கட்டாயம்] போவினம் என்று நினைக்கிறேன் .
4) கருணா ,பிள்ளையானோடு முக்கியமாய் வந்திருக்க வேண்டிய பேர் சாணக்கியன் ...ரூபனுக்கு வோட் போட்டு இருப்பவவைக்கு அவர் யாரெண்டாவது தெரியுமோ?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

 ஒளிந்திருந்து பார்த்தடிக்கக்கூடாது என்று ஐயாமாருக்கு முதலில் சொலியிருக்கலாமே.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

 ஒளிந்திருந்து பார்த்தடிக்கக்கூடாது என்று ஐயாமாருக்கு முதலில் சொலியிருக்கலாமே.
 
நாங்கள் ஒன்றும் ஒளிந்திருந்து பார்க்கேல்லை......எப்போதும் விடையைப் பார்த்துவிட்டு பின் அதுக்கு கதை விடுவதுதான் படிக்கிற காலத்தில் இருந்தே பழக்கம்.........!  😴

Test Copying GIF by Much - Find & Share on GIPHY

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, மோகன் said:

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

கோதாரிவிழ இதை முந்தியே சொல்லியெல்லோ இருக்கோணும்... 😁
எண்டாலும் இருக்கவே இருக்கு நம்ம ஆயுதம்     டோன்ட் வொரி 😎

  • கருத்துக்கள உறவுகள்

3 வது கேள்வியில் பல தெரிவுகள் இல்லை.

இம்முறை தமிழ் தேசிய முன்னணியினருக்கு 2 ஆசனங்கள் கிடைக்கலாம், அதிலும் மணிவண்ணன் வெல்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம்.

வன்னி சிக்கல் மிக்கதாக இருக்கும் என நினைக்கிறன். இரண்டு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக வாய்ப்புண்டு. மஸ்த்தானுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு, இவர் வன்னியின் பரம்பரை அரசியல் வாதி இவரது பாட்டன் கூட செல்வாக்கனவராக இருந்தவர் என கேள்வி. ஆனால் ரிஷாடுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்ளா? 2010 இல் தமிழ் மக்கள் வாக்கில் தெரிவாகி மன்னார் மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றினார்;2015 இல் குடியேறிய முஸ்லிம் மக்களின் செல்வாக்குடன் வென்றார் தமிழர் உதவியில்லமல். ஆனால் இந்த முறை இவரது வண்டவாளங்கள் எல்லாம் தெரிந்ததாலும் கடந்த ஏப்பிரல் 21க்கு பிறகு இவரது செல்வாக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. எனவே தமிழ் மக்கள்ளின் வாக்கு மீண்டும் தேவைப்படும் தமிழ் மக்கள் கவனமாக வாக்களித்தால் இவரை வெல்லா விடாமல் தடுக்க சந்தர்ப்பம் உண்டு.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

எனது குத்துமதிப்பு ஊகம் எல்லார் ஊகங்களுடன் ஒத்து செல்கின்றது. சுமந்திரன் தேர்தல் சின்னம் நல்லதாய் (High Quality Image) யாரும் இணைக்க (தர) முடியுமா? I like to ENDORSE him.

18 hours ago, Dash said:

வன்னி சிக்கல் மிக்கதாக இருக்கும் என நினைக்கிறன். இரண்டு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக வாய்ப்புண்டு. மஸ்த்தானுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு, இவர் வன்னியின் பரம்பரை அரசியல் வாதி இவரது பாட்டன் கூட செல்வாக்கனவராக இருந்தவர் என கேள்வி. ஆனால் ரிஷாடுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்ளா? 2010 இல் தமிழ் மக்கள் வாக்கில் தெரிவாகி மன்னார் மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றினார்;2015 இல் குடியேறிய முஸ்லிம் மக்களின் செல்வாக்குடன் வென்றார் தமிழர் உதவியில்லமல். ஆனால் இந்த முறை இவரது வண்டவாளங்கள் எல்லாம் தெரிந்ததாலும் கடந்த ஏப்பிரல் 21க்கு பிறகு இவரது செல்வாக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. எனவே தமிழ் மக்கள்ளின் வாக்கு மீண்டும் தேவைப்படும் தமிழ் மக்கள் கவனமாக வாக்களித்தால் இவரை வெல்லா விடாமல் தடுக்க சந்தர்ப்பம் உண்டு.

மஸ்தானுக்கு வவுனியாவில் செல்வாக்கு இருக்கலாம். மற்றய மாவட்ட்ங்களைப் பொறுத்த வரையில்  
சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் ரிஷர்டுக்கு மூன்று மாவட்ட்ங்களிலும் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகம். அத்துடன் எலும்புத்துண்டு நக்கும் தமிழர்களின் வாக்கும் கிடைக்கும். இம்முறை அரசாங்கம் தன்னை வதைப்பதாக தெரிவித்து அனுதாப வாக்குகளையும் பெற முயட்சிக்கிறார். இருந்தாலும் வன்னியில் இம்முறை இரண்டு முஸ்லிம்களும் , ஒரு சிங்களவரும் வர வாய்ப்புண்டு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.