Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

மற்றைய மாநிலங்களில் நடப்பதை கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.
 
ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான கட்சி ஆட்சிக்கு வருகின்றது. தமிழ்நாட்டிலும் அப்படித்தான்.

ஆளும் கட்சியும், முதலமைச்சரும் மக்களால்தான் தெரிவு செய்யப்படுகின்றார்கள். தமிழன் நல்ல தலைவனாக இருந்தால் தெரிவு செய்வார்கள்தானே. ஆனால் வந்தேறி என்று கூச்சல்போட்டு பிரிவினையை வளர்ப்பவர்கள் ஜனநாயகவாதிகள் இல்லை. சீமானின் கட்சி வளர்கின்றதோ இல்லையோ, தமிழ்நாட்டில் இந்துத்துவா பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு வர தேவையான வேலைத்திட்டங்களை மத்தியின் ஆசியுடன் செய்கின்றது. 

  • Replies 222
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Robinson cruso said:

எதோ எலும்புத்துண்டன்று பிச்சையாக மாவடட சபை, மாகாண சபை எண்டு எதையோ ஒரு சிறிய துண்டை  போடடான். அதையே கையாளத்தெரியாதவனுக்கு எதுக்கு அதிகாரம்?

தலைவர் இருக்கேக்க நாடும் அதிகாரமும் உரிமையும் வேணும் என்றுகேட்டது தலைவர் இருக்கிறார் அதை முறையாக கையாளுவார் என்ற நம்பிக்கையிலே.

இப்போ சத்தியமா வேண்டாம், சுமந்திரனும், மாவையும், விக்கியரும் எங்களை ஆளுறது தான் உரிமை என்றால் சத்தியமா அந்த உரிமை வேண்டவே வேண்டாம்.

முதல்ல உரிமை கிடைக்க தகுதி உள்ள இனமாக மாறுவோம். பிறகு உரிமைக்காக போராடுவோம். அது அடுத்து வாற 10 வருசத்திலே சாத்தியமே இல்லை. 😁😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

எழுபது வருடமாக என்ன இசைந்த கொடுத்தோம்? போராடித்தான் பார்த்தோம். இப்ப மட்டும் என்ன ஆட்சியா செய்கிறோம். எதோ எலும்புத்துண்டன்று பிச்சையாக மாவடட சபை, மாகாண சபை எண்டு எதையோ ஒரு சிறிய துண்டை  போடடான். அதையே கையாளத்தெரியாதவனுக்கு எதுக்கு அதிகாரம்? இப்பவே அடுபிடி. அதிகாரம் கிடைத்தால், குரங்கின்  கையில் பூமாலை கொடுத்தமாதிரிதான்.

பிரபாகரன் என்ற ஒற்றை அதுவும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத ஆளுமையின் கீழ் சிறிய மக்கள் தொகையின் கீழ் மட்டுமே தமிழும் தமிழர்களும் சுதந்திரமாக பயணித்தது... 

2009 க்கு பிறகே உலக தமிழர்கள் தங்கள் நிலையை உணரத் துடங்கியுள்ளனர்... 

இந்த நேரத்தில் வெளங்காத மாதிரியே பேசிக்கொண்டு இருந்தால் எல்லாம் வெளங்காம தான் போகும்...

இது தமிழர்களின் கடைசி நிலை... இந்த சமயம் தன் உரிமைக்கான குரலை எந்த நிலையிலும் ஒற்றுமை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்...

தமிழினத்தலைவர் என்றும் தமிழ் தமிழ் என்றும் தமிழகத்தை ஏமாற்றி துரோகம் இழைத்ததும் தமிழர்களின் இன்றைய இழி நிலைக்கு மூல காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

உடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.

நீங்கள் புத்தக படிப்பில் மன்னன் என்று எல்லோருக்கும் தெரியும் கிருபன். ஜெயமோகன், ஷோபா சக்திகளின் போதனைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். சீமானின் வெறுப்பு வந்தேறிகளிடம் இல்லை, வந்தேறி அரசியல்வாதிகள் தமிழரையும் அவர்சார்ந்த நலன்களையும் அழிப்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

ஆளும் கட்சியும், முதலமைச்சரும் மக்களால்தான் தெரிவு செய்யப்படுகின்றார்கள். தமிழன் நல்ல தலைவனாக இருந்தால் தெரிவு செய்வார்கள்தானே. ஆனால் வந்தேறி என்று கூச்சல்போட்டு பிரிவினையை வளர்ப்பவர்கள் ஜனநாயகவாதிகள் இல்லை. சீமானின் கட்சி வளர்கின்றதோ இல்லையோ, தமிழ்நாட்டில் இந்துத்துவா பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு வர தேவையான வேலைத்திட்டங்களை மத்தியின் ஆசியுடன் செய்கின்றது. 

சரி உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் சீமான் சொல்லுவதோடு மட்டும் நிற்கிறார்.

மற்றைய மாநிலங்களில் காலத்துக்கு காலம் மனிதநேயமே இல்லாமல் வெளுத்து வாங்குகிறார்களே?

இதுக்கு என்ன செய்யலாம்?

இன்றும் தமிழ்நாட்டிலுள்ள மற்றைய இனங்கள் திமிராகவும் ஏன் சண்டித்தனமாகவும் பேச முடிகிறது.
இதையே மற்றைய மாநிலங்களில் தமிழன் போய் நின்று அப்படி பேச முடியுமா?

எல்லாவற்றையும் விட எந்த இனமானாலும் எம்முடன் சேர்ந்து பாராளுமன்றம் போகலாம்.ஆனால் முதலமைச்சராகும் தகுதி தமிழனுக்கே இருக்க வேண்டுமென்று தானே சொல்கிறார்.
இங்கே பிரிவினை வளர்ப்பது சீமான் அல்ல .
 
44 minutes ago, கிருபன் said:

சீமானின் கட்சி வளர்கின்றதோ இல்லையோ, தமிழ்நாட்டில் இந்துத்துவா பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு வர தேவையான வேலைத்திட்டங்களை மத்தியின் ஆசியுடன் செய்கின்றது. 

கிருபன்
பாஜக வளர்வதற்கு காரணம் அதிமுக,திமுக செய்த ஊழல்களே காரணமே தவிர சீமான் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபன்
பாஜக வளர்வதற்கு காரணம் அதிமுக,திமுக செய்த ஊழல்களே காரணமே தவிர சீமான் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் சீமான் சொல்லுவதோடு மட்டும் நிற்கிறார்.

மற்றைய மாநிலங்களில் காலத்துக்கு காலம் மனிதநேயமே இல்லாமல் வெளுத்து வாங்குகிறார்களே?

இதுக்கு என்ன செய்யலாம்?

இன்றும் தமிழ்நாட்டிலுள்ள மற்றைய இனங்கள் திமிராகவும் ஏன் சண்டித்தனமாகவும் பேச முடிகிறது.
இதையே மற்றைய மாநிலங்களில் தமிழன் போய் நின்று அப்படி பேச முடியுமா?

எல்லாவற்றையும் விட எந்த இனமானாலும் எம்முடன் சேர்ந்து பாராளுமன்றம் போகலாம்.ஆனால் முதலமைச்சராகும் தகுதி தமிழனுக்கே இருக்க வேண்டுமென்று தானே சொல்கிறார்.
இங்கே பிரிவினை வளர்ப்பது சீமான் அல்ல .
 
கிருபன்
பாஜக வளர்வதற்கு காரணம் அதிமுக,திமுக செய்த ஊழல்களே காரணமே தவிர சீமான் அல்ல.

பச்சை முடிந்துவிட்டது ஈழப்பிரியன்! இந்த போதனைகளெல்லாம் புத்தகப்பூச்சிகளுக்கு ஏறாது!!👏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நான் தொடங்க தேவையில்லை அண்ணா ...எழுதி வைத்து கொள்ளுங்கள் இங்கு யாழில் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் புகழ் பாடும் அனைவரும் இன்னும் ஐந்து வருடத்துக்குள் அவர்களை துரோகி என்று சொல்லாட்டில் 🙂

வணக்கம் ரதி
நாங்கள் ஒரு காலத்தில் கூட்டணியை ஆதரித்தோம்.பிழையான வழியில் போகும் போது எதிர்க்கிறோம்.

கருணா,பிள்ளையானை புகழ் பாடினோம்.காட்டிக் கொடுத்தார்கள் வெறுக்கிறோம்.

கஜேந்திரகுமாரை ஆதரிக்கிறோம்.நாளைக்கு பிழை விட்டால் அவர்களையும் எதிர்ப்போம்.ஆதரித்தோம் என்பதற்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டோம்.

இதில் ஏதாவது தவறு இருப்பின் சொல்லுங்கள்.

நாளைக்கே கூட்டணியோ,கருணாவோ,பிள்ளையானோ தமிழர்களுக்கு நல்லது செய்தால் பாராட்ட பின்னடிக்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இந்த போதனைகளெல்லாம் புத்தகப்பூச்சிகளுக்கு ஏறாது!

நல்லது. எத்தனை தங்க முட்டைகளை ஒவ்வொரு தேர்தலில் இட்டாலும் ஏன் என்று புரியாமல் பணத்திற்கும், பிரியாணிக்கும், சரக்குக்கும் மக்கள் விலைபோகின்றனர் என்று மக்களை மந்தைகளாக நினைக்கும் அறிவார்ந்த சிந்தனை என்னிடம் இல்லை😀

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பணத்திற்காகவும் குவாட்டருக்காகவும் பிரியாணிக்காகவும் ஓட்டுப்போடும் மோட்டுக் கூட்டத்தை கொஞ்சமாவது திருத்தலாம் என்ற நப்பாசைதான். இல்லை அவர்கள் திருந்தவே கூடாது அடிமைகளாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தால் அப்படியே இருங்கள். மற்றவர்களுக்கு பாடம் எடுக்காமல்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

நல்லது. எத்தனை தங்க முட்டைகளை ஒவ்வொரு தேர்தலில் இட்டாலும் ஏன் என்று புரியாமல் பணத்திற்கும், பிரியாணிக்கும், சரக்குக்கும் மக்கள் விலைபோகின்றனர் என்று மக்களை மந்தைகளாக நினைக்கும் அறிவார்ந்த சிந்தனை என்னிடம் இல்லை😀

நான் அந்த புத்தகம் படிச்சன்....இந்த புத்தகம் படிச்சன். அந்த அங்காடியிலை புத்தகம் வாங்கினன்....அந்த எழுத்தாளர்........பெரிய எழுத்தாளர் எண்டு பந்தாக்களே தவிர...
நியாயமான கண்ணோட்டமும்  புத்தகங்களை படித்த சிந்தனைகளும் ஒழுங்கானவைகளாக தெரியவேயில்லை.:cool:
ஒரு வேளை படிக்கும் புஸ்தகங்களின்  பக்கவிளைவுகளாகவும் இருக்கலாம். :grin:

9 hours ago, மியாவ் said:

பிரபாகரன் என்ற ஒற்றை அதுவும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத ஆளுமையின் கீழ் சிறிய மக்கள் தொகையின் கீழ் மட்டுமே தமிழும் தமிழர்களும் சுதந்திரமாக பயணித்தது... 

2009 க்கு பிறகே உலக தமிழர்கள் தங்கள் நிலையை உணரத் துடங்கியுள்ளனர்... 

இந்த நேரத்தில் வெளங்காத மாதிரியே பேசிக்கொண்டு இருந்தால் எல்லாம் வெளங்காம தான் போகும்...

இது தமிழர்களின் கடைசி நிலை... இந்த சமயம் தன் உரிமைக்கான குரலை எந்த நிலையிலும் ஒற்றுமை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்...

தமிழினத்தலைவர் என்றும் தமிழ் தமிழ் என்றும் தமிழகத்தை ஏமாற்றி துரோகம் இழைத்ததும் தமிழர்களின் இன்றைய இழி நிலைக்கு மூல காரணம்...

தமிழ் தேசியம் பேசுபவர்கள் விளங்காத மாதிரி நடந்துகொண்டால் , மற்றவர்கள் விளங்காத மாதிரித்தான் பேசுவார்கள், எழுதுவார்கள். தலைகள் சரியில்லாமல் இருக்கும் பொது மற்றவைகள் எப்படி சரியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

நான் தொடங்க தேவையில்லை அண்ணா ...எழுதி வைத்து கொள்ளுங்கள் இங்கு யாழில் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் புகழ் பாடும் அனைவரும் இன்னும் ஐந்து வருடத்துக்குள் அவர்களை துரோகி என்று சொல்லாட்டில் 🙂

துரோகம் என்பதை நீங்கள் நாங்கள் என்றில்லாமல் தமிழராய் எல்லோரும் நிறையவே கண்டுவந்திருக்கிறோம், இன்னமும் அனுபவதித்துவருகிறோம் ரதி.

கடந்த முறை கிழக்கு மக்கள், கருணாவை நம்பாமல் கூட்டமைப்பை நம்பி ஏமாந்து போனார்கள். ஆனால் இந்தமுறை சரியான(?) முடிவை எடுத்திருக்கிறார்கள் என நம்புகிறோம், ஆனால் திருகோணமலை மக்கள் ஏன் இன்னமும் நம்பிக்கை வைத்து சம்பந்தன் ஐயாவை தேர்தெடுத்தார்களோ தெரியவில்லை.. தேசியபட்டியல் வாய்ப்பை அம்பாறை பிரதிநிதிக்கு கொடுத்து தங்களது பிழைகளை உணர்ந்து அதற்கான திட்டங்களை வகுப்பாளர்களா தெரியவில்லை. 

வடக்கு மக்கள் இன்னமும் கொஞ்ச நம்பிக்கை இருப்பதால் கூட்டமைப்பிற்கும் ஆசனங்களை கொடுத்திருக்கிறார்கள்.. விசயம் தெரிந்தவர்கள், சர்வதேச அரங்கில் கதைத்த அனுபவமிக்கவர்கள் என இன்னமும் நம்புவதால் இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள்.. ஒற்றுமையில்லாமல் நடப்பார்களாயின் மீண்டும் தோல்வியை சந்திப்பார்கள்..

அதே போல கஜேந்திரகுமார், கஜன் போன்ற இளையவர்களையும் நம்புகிறோம்.. அனுபவமிக்க தமிழ் அரசியல்வாதிகள் பல வருடங்கள் அரசியலில் இருந்து கொண்டு சாதிக்காதவற்றை இவர்கள் வரும் 4/5 வருடங்களில் சாதிக்கமுடியுமா? இல்லை ஆனாலும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.. பிழையாகும் பட்சத்தில் இவர்களும் நிராகரிக்கப்படுவார்கள்

ஆனால் இந்த அரசியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்கள் இவர்களுடைய பிழைகளால் லாபம் அடைய்போவது.. எங்களது எதிரிகள் மட்டுமே.. பல அறிவுஜீவிகளையும் ஆளுமைமிக்கவர்களையும் கொண்ட எங்களது சமூகம் ஒற்றுமையின்மையால் சீரழிந்து போகிறது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் இந்த அரசியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்கள் இவர்களுடைய பிழைகளால் லாபம் அடைய்போவது.. எங்களது எதிரிகள் மட்டுமே.. பல அறிவுஜீவிகளையும் ஆளுமைமிக்கவர்களையும் கொண்ட எங்களது சமூகம் ஒற்றுமையின்மையால் சீரழிந்து போகிறது.. 

நூறு வீதம், சரியான  கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரதி
நாங்கள் ஒரு காலத்தில் கூட்டணியை ஆதரித்தோம்.பிழையான வழியில் போகும் போது எதிர்க்கிறோம்.

கருணா,பிள்ளையானை புகழ் பாடினோம்.காட்டிக் கொடுத்தார்கள் வெறுக்கிறோம்.

கஜேந்திரகுமாரை ஆதரிக்கிறோம்.நாளைக்கு பிழை விட்டால் அவர்களையும் எதிர்ப்போம்.ஆதரித்தோம் என்பதற்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டோம்.

இதில் ஏதாவது தவறு இருப்பின் சொல்லுங்கள்.

நாளைக்கே கூட்டணியோ,கருணாவோ,பிள்ளையானோ தமிழர்களுக்கு நல்லது செய்தால் பாராட்ட பின்னடிக்க மாட்டோம்.

நன்றி அண்ணா  ...நீங்கள் எழுதிய கடைசி வரியை எப்பவும் நினைவில் வைத்திருங்கள் 

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

துரோகம் என்பதை நீங்கள் நாங்கள் என்றில்லாமல் தமிழராய் எல்லோரும் நிறையவே கண்டுவந்திருக்கிறோம், இன்னமும் அனுபவதித்துவருகிறோம் ரதி.

கடந்த முறை கிழக்கு மக்கள், கருணாவை நம்பாமல் கூட்டமைப்பை நம்பி ஏமாந்து போனார்கள். ஆனால் இந்தமுறை சரியான(?) முடிவை எடுத்திருக்கிறார்கள் என நம்புகிறோம், ஆனால் திருகோணமலை மக்கள் ஏன் இன்னமும் நம்பிக்கை வைத்து சம்பந்தன் ஐயாவை தேர்தெடுத்தார்களோ தெரியவில்லை.. தேசியபட்டியல் வாய்ப்பை அம்பாறை பிரதிநிதிக்கு கொடுத்து தங்களது பிழைகளை உணர்ந்து அதற்கான திட்டங்களை வகுப்பாளர்களா தெரியவில்லை. 

வடக்கு மக்கள் இன்னமும் கொஞ்ச நம்பிக்கை இருப்பதால் கூட்டமைப்பிற்கும் ஆசனங்களை கொடுத்திருக்கிறார்கள்.. விசயம் தெரிந்தவர்கள், சர்வதேச அரங்கில் கதைத்த அனுபவமிக்கவர்கள் என இன்னமும் நம்புவதால் இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள்.. ஒற்றுமையில்லாமல் நடப்பார்களாயின் மீண்டும் தோல்வியை சந்திப்பார்கள்..

அதே போல கஜேந்திரகுமார், கஜன் போன்ற இளையவர்களையும் நம்புகிறோம்.. அனுபவமிக்க தமிழ் அரசியல்வாதிகள் பல வருடங்கள் அரசியலில் இருந்து கொண்டு சாதிக்காதவற்றை இவர்கள் வரும் 4/5 வருடங்களில் சாதிக்கமுடியுமா? இல்லை ஆனாலும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.. பிழையாகும் பட்சத்தில் இவர்களும் நிராகரிக்கப்படுவார்கள்

ஆனால் இந்த அரசியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்கள் இவர்களுடைய பிழைகளால் லாபம் அடைய்போவது.. எங்களது எதிரிகள் மட்டுமே.. பல அறிவுஜீவிகளையும் ஆளுமைமிக்கவர்களையும் கொண்ட எங்களது சமூகம் ஒற்றுமையின்மையால் சீரழிந்து போகிறது.. 

என்னை பொறுத்த வரை கஜேந்திரகுமாருக்கும் ,கஜனுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில் தப்பில்லை ...ஐந்து வருடத்திற்குள் அவர்களால் ஒரேடியாய் நிறைய செய்ய முடியாது ...ஆனால் கொஞ்சம் ,கொஞ்சமாய செய்ய தொடங்கலாம் ...அவர்களும் உணர வேண்டும் ...உணருவார்கள் என நம்புவோம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2020 at 12:16, கிருபன் said:

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

ஒவ்வொரு நாடும் அந்த அந்த நிலத்தை சொந்தமாக கொண்ட இனத்தாலேயே ஆளப்படுகிறது ஆளப்படணும் இதில் குடிவந்தவர்கள் அதற்கேற்ப தான் தமது வாழ்க்கை ஒழுங்கு படுத்தணும். இதில் போட்டி என்று வருகின்றபோது குடியேறிகளால் இலகுவாக பரப்பப்பட்டும் குற்றச்சாட்டு தான் இது 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கஜேந்திரகுமார், கஜன் போன்ற இளையவர்களையும் நம்புகிறோம்.. அனுபவமிக்க தமிழ் அரசியல்வாதிகள் பல வருடங்கள் அரசியலில் இருந்து கொண்டு சாதிக்காதவற்றை இவர்கள் வரும் 4/5 வருடங்களில் சாதிக்கமுடியுமா? இல்லை ஆனாலும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது..

கஜேந்திரகுமார் தனது பாட்டனாரின் காலாவதியான சைக்கிளை இன்னும் தமிழர்களிடம் ஓடவைக்க வேண்டும் என்பதிற்காக கவர்ச்சியான பெயின்ட் அடித்து கொண்டுவந்திருக்கிறார் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்தால் அவர் என்ன செய்வார்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கஜேந்திரகுமார் தனது பாட்டனாரின் காலாவதியான சைக்கிளை இன்னும் தமிழர்களிடம் ஓடவைக்க வேண்டும் என்பதிற்காக கவர்ச்சியான பெயின்ட் அடித்து கொண்டுவந்திருக்கிறார் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்தால் அவர் என்ன செய்வார்

அவர் பழைய சைக்கிள் ஓட்டுவதில் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஒவ்வொரு நாடும் அந்த அந்த நிலத்தை சொந்தமாக கொண்ட இனத்தாலேயே ஆளப்படுகிறது ஆளப்படணும் இதில் குடிவந்தவர்கள் அதற்கேற்ப தான் தமது வாழ்க்கை ஒழுங்கு படுத்தணும். இதில் போட்டி என்று வருகின்றபோது குடியேறிகளால் இலகுவாக பரப்பப்பட்டும் குற்றச்சாட்டு தான் இது 

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னமெரிக்க நாடுகள் எல்லாம் குடியேறியவர்களால் ஆளப்படுகின்றது. அவர்கள் ஒரு முந்நூறு- நானூறு வருஷம் முன்னர் குடியேறினார்கள்.

தமிழன் என்று உணர்வாலும், தாய்மொழியாலும் வாழ்பவர்களை தமிழன் இல்லை என்று சொன்னால், அவர்கள் தெலுங்கு தேசம் போய் வாழமுடியுமா? தெலுங்கர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இன்னும், குடியேறிய மேற்குநாடுகளில் தமிழர்கள் அரசியலில், அதிகாரத்தில் வரும்போது ஏன் புளகாங்கிதம் அடைகின்றோம்? அந்த அந்த நாட்டு சுதேசிகளின் பதவிகளை தட்டிப்பறிப்பது சரியா?

உங்கள் வாதப்படி பார்த்தால், புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழ்வது சரிதான் என்ற மாதிரி உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் சந்ததி இப்படியெல்லாம் தாழ்வுமனப்பான்மையுடன் வாழமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

உங்கள் வாதப்படி பார்த்தால், புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழ்வது சரிதான் என்ற மாதிரி உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் சந்ததி இப்படியெல்லாம் தாழ்வுமனப்பான்மையுடன் வாழமாட்டார்கள்.

உங்களை இரண்டாம்தர பிரஜைகளாக இருக்கச்சொல்லவில்லை. அங்கிருப்பவர்களை ஆள நினைக்கவேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

உங்களை இரண்டாம்தர பிரஜைகளாக இருக்கச்சொல்லவில்லை. அங்கிருப்பவர்களை ஆள நினைக்கவேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!

இதை ஒபாமாவுக்குச் சொன்னவர்களும், இப்போதும் சொல்பவர்களும் வலதுசாரி இனவாதிகள். அவர்களும் தங்களை இனவாதிகள் என்று ஒத்துக்கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இதை ஒபாமாவுக்குச் சொன்னவர்களும், இப்போதும் சொல்பவர்களும் வலதுசாரி இனவாதிகள். அவர்களும் தங்களை இனவாதிகள் என்று ஒத்துக்கொள்வதில்லை.

ஒபாமாவை கருணாநிதி குடும்பத்துடன் ஒப்பிடுகிறீர்கள்!!😬

  • கருத்துக்கள உறவுகள்

எமது உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.. உண்ண வேண்டும். அடுத்தவன் அதனை தீர்மானிக்க முடியாது. ஆனால்.. உண்ணும் உணவை நேச சக்திகளோடு சேர்ந்து உண்டு மகிழ்வது கூடுதல் பலம். 

அதேபோல் தான் எமது உரிமையை நாம் தான் வென்றெடுக்க வேண்டும். பிறர் அல்ல. ஆனால் எமது உரிமையை வென்றெடுப்பதில் நேச சக்திகளை உலகம் பூராவும் எமக்கு அருகில் வைத்துக் கொள்வதும்.. அவர்கள் மூலம் எமது போராட்ட நியாயத்தை எல்லாம் அடிமட்ட மக்களுக்கும் விளங்கும் வகைக்கு உணர வைப்பதும்.. நாம் எமது உரிமையைப் பெற உறுதுணையாக இருக்கும்.

தமிழகத்தில் எமது உரிமைக்கான உறுதுணை சக்தி ஒன்று வளர்வது எமக்கு நன்மை தான். ஆனால் சீமான் வளரும் சக்தி.. தீர்மானிக்கும் சக்தியாக இன்னும் வரவில்லை. இருந்தாலும் அவர் எமக்கான நேச சக்தியாக இருப்பார் என்ற நம்பிக்கையோடு அரவணைத்துச் செல்வது தவறே அல்ல. இதுவே மற்றைய தமிழக.. ஹிந்திய நேச சக்திகளுக்கும் பொருந்தும். அது நெடுமாறன் ஐயா வாகட்டும்.. வைகோ.. திருமா உட்பட. 

34 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களை இரண்டாம்தர பிரஜைகளாக இருக்கச்சொல்லவில்லை. அங்கிருப்பவர்களை ஆள நினைக்கவேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!

தமிழ் நாட்டு பிரஜகளான கருணாநிதி குடும்பம்  மட்டுமல்ல  தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களில் யாராவது முதலமைச்சராக வருவது அவர்கள் உரிமை. அது தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனை. அதை அவர்கள் பார்த்துக்க்கொள்வார்கள். எங்கோ இலங்கையில் பிறந்த தமிழர் களுக்கு அது பற்றி தீர்மானிக்கவோ அவர்களை வந்தேறி என்று கூறவோ எந்த ஜோக்கிதையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னமெரிக்க நாடுகள் எல்லாம் குடியேறியவர்களால் ஆளப்படுகின்றது. அவர்கள் ஒரு முந்நூறு- நானூறு வருஷம் முன்னர் குடியேறினார்கள்.

தமிழன் என்று உணர்வாலும், தாய்மொழியாலும் வாழ்பவர்களை தமிழன் இல்லை என்று சொன்னால், அவர்கள் தெலுங்கு தேசம் போய் வாழமுடியுமா? தெலுங்கர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இன்னும், குடியேறிய மேற்குநாடுகளில் தமிழர்கள் அரசியலில், அதிகாரத்தில் வரும்போது ஏன் புளகாங்கிதம் அடைகின்றோம்? அந்த அந்த நாட்டு சுதேசிகளின் பதவிகளை தட்டிப்பறிப்பது சரியா?

உங்கள் வாதப்படி பார்த்தால், புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழ்வது சரிதான் என்ற மாதிரி உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் சந்ததி இப்படியெல்லாம் தாழ்வுமனப்பான்மையுடன் வாழமாட்டார்கள்.

தொடர்ந்து மக்கள் தொடர்பு அற்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள். தாயகம் அல்லது சொந்த மண் என்பதற்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் வித்தியாசம் தெரியாதோரோடு வாதிட்டு?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.