Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

444.jpg

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்  நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-9/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். கிழக்கு மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வார்களானால் நிலைத்து நிற்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கூட்டமைப்பிற்குப் பாடம் புக்கட்டவென கிழக்கு மக்கள் கருணாவுக்கு பின்னால் போனார்களோ, இறுதியில் அதே கிழக்கு மக்களுக்கென்று ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரை அதே கூட்டமைப்புத் தந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

எந்தக் கூட்டமைப்பிற்குப் பாடம் புக்கட்டவென கிழக்கு மக்கள் கருணாவுக்கு பின்னால் போனார்களோ, இறுதியில் அதே கிழக்கு மக்களுக்கென்று ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரை அதே கூட்டமைப்புத் தந்திருக்கிறது.

தோல்வி கற்றுத்தந்த பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

தோல்வி கற்றுத்தந்த பாடம்.

 

1 hour ago, ரஞ்சித் said:

எந்தக் கூட்டமைப்பிற்குப் பாடம் புக்கட்டவென கிழக்கு மக்கள் கருணாவுக்கு பின்னால் போனார்களோ, இறுதியில் அதே கிழக்கு மக்களுக்கென்று ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரை அதே கூட்டமைப்புத் தந்திருக்கிறது.

அம்பாரை மாவட்டத்தின் தென்பகுதியான அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையான கரையோரப் புகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கூட்டமைப்பினால் வழங்கபபடவில்லை..  ஆங்கு ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் இருந்தார்.   இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தும் அவர் தெரிவாகவில்லை.   அம்பாரைத் தமிழர்களின் ஒற்றுமையின்மையால் இருந்ததையும் இழந்துபோனார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலையரசனை தேசியப் பட்டியில் நியமித்தது ஏன்? துரைராஜசிங்கம் விளக்கம்

August 9, 2020

000-8.png

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியல் பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்படடு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசு கட்சி காரிலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் இவ் அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

 

இடம்பெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடைவைக் கண்டுள்ளது அதேவேளை எமது கட்சி தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். இதற்கான பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன எது எப்படியிருந்தபோதும் எமது தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

 

குறிப்பாக ஒரு உறுப்பினர் தலைமைப் பெறுப்பை ஏற்பதற்கு தயார் என தெரிவித்திருக்கும் அந்த கூற்றினை முற்றாக நிராகரிக்கின்றேன். ஏந்த விதத்திலும் இவ்வாறான அறிக்கைகள் விடுவது கட்சியின் கட்டுக்கோப்பிற்கும் விசுவாசத்திற்கும் எதிரானது

கட்சியினுடைய தலைமையிலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது அந்தவகையில் நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்போம். இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் ஜனநாயக அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைவர் சம்மந்தன் ஜயாவை சந்தித்து மக்கள் எனக்கு ஆணை வழங்கவில்லை என்ற அடிப்படையிலே பொதுச் செயலாளர் பதவியை நான் துறக்க அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டேன்

 

இதற்கு அவர் உடனடியாக பல தேர்தல் கடமைகள்பொதுச் செயலாளருக்கு இருப்பதாகவும் இது தொடர்பாக எமது பொதுச் சபை தான் முடிவு எடுக்கவேண்டும் என்பதால் நீங்கள் பதவியை துறக்ககூடாது என கட்டளையிட்டதன் அடிப்படையில் நான் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது இதனை யாருக்கு வழங்குவது என பல்வேறு கருத்துப்பரிமாற்றப்பட்டது. இருந்தபோதும் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய பட்டியல் தயாரிக்கும் போது சிலருக்கு கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தது.

 

இருந்தபோதும் இப்போது இருக்கின்ற நிலமையிலே ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளுக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது. ஆகவே இதில் சம்மந்தப்ப ட்டவர்களை அழைத்து இந்த விடயங்களை தெரிவித் தோம் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கமைய நேற்று சனிக்கிழமை சம்மந்தன் ஜயா வீட்டில் சந்திப்பு இடம்பெற்றது இதன்போது தலைவருக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இதற்கமைய தேசிய பட்டியலை அம்பாறையிலுள்ள அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பதற்கமைய முடிவின் பிரகாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை நான் அம்பாறை மாவட்ட த்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபையைச் உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான தவராசா கலையரசன் பெயரை பரிந்துரை செய்து தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளேன்” என அறிவித்தார்.

 

http://thinakkural.lk/article/61205

 

நல்லவிடயம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். ஆனால் சம் சும் & co வின் அருவருடியாக இல்லாது சுதந்திரமாக செயற்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். கூட்டமைப்பு ஒரு படி மேலே போய் விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை, தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

எந்தக் கூட்டமைப்பிற்குப் பாடம் புக்கட்டவென கிழக்கு மக்கள் கருணாவுக்கு பின்னால் போனார்களோ, இறுதியில் அதே கிழக்கு மக்களுக்கென்று ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரை அதே கூட்டமைப்புத் தந்திருக்கிறது.

அப்படியெல்லாம் அவசரப்படக்கூடாது அமைச்சரே 
கூத்தாடிகள் எப்பவுமே கூத்தாடிகள் தான் ...கொஞ்சம் பொறுங்கோ கூத்தாட்டம் இன்னும் முடியவில்லை 
the decision has been temporarily suspended

அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியால் அவரால் அங்கு ஏதும் செய்ய முடியுமோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்த்தை அடைக்கலம் எதிர்ப்பதாக அறிகிறேன். டெலோவுக்கு மூன்று ஆசனம் போதவில்லையாம். எனவே இன்னொரு போனஸ் ஆசனத்தையும் கேட்டு போர்தொடுப்பதாக அறிகிறேன். வாழ்க உங்கள் தமிழ் தேசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.pagetamil.com/139408/?fbclid=IwAR1gEiEpUZJKSQ2xt6wwQq78wyJUAAKNKrV9_yHWR_wMDp6yY2yv7rxn974

என்னால் செய்தியை முழுமையாக இணைக்க முடியவில்லை ...நிர்வாகம் மன்னிக்கவும்  

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து திருப்பம்: கலையரசனிற்கான தேசியப்பட்டியல் தற்காலிகமாக நிறுத்தம்!

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை, தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் முடிவை தற்காலிகமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.


http://www.pagetamil.com/139408/?fbclid=IwAR1gEiEpUZJKSQ2xt6wwQq78wyJUAAKNKrV9_yHWR_wMDp6yY2yv7rxn974

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ITAK-Jaffna-Office.jpg

தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.

குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடினர்.

இக்கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://athavannews.com/தேசியப்-பட்டியலை-மாவைக்க/

தோத்தவனுக்கு எதுக்கு பதவி? அதுவும் படுதோல்வி அடைந்தவனுக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tharmalingam-Siththarthan.jpg

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக்கட்சிகளாக புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயெ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இன்று காலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த முடிவு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு இல்லையெனவும் தமக்கு அறிவிக்கப்படாமல் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமைக்கு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதே சிறப்பானது எனவும், இதுகுறித்து பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தேசியப்-பட்டியல்-ஆசன-தெர/

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை எதைத் தான் பங்காளிகளிடம் கேட்டு செய்திருக்கிறார்கள்?

அம்பாறையில் உள்ளவருக்கு கொடுப்பது தான் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது

தோற்ற கஜேந்திரன் போகலாம் என்றால் தோற்ற மாவையும் போகலாம்!

ஐந்து வருடம் கிடைக்கும் பதவியில் எவ்வளவோ செய்யலாம் (குடும்பத்திற்கும், கட்சிக்கு கொசுறாகவும்)

  • கருத்துக்கள உறவுகள்

மகனை ஒரு அரசியல்வாதியாக்குமட்டுமாவது மாவை அரசியலில் இருக்கவேண்டாமா.??😝

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Selvam-Adaikkalanathan-1.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: டெலோவும் கடும் எதிர்ப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கருத்தையும் கேட்டு தேசியப் பட்டியல் குறித்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னிச்சையாக தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

அடக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிலும் கலந்தாலோசிக்க வேண்டிய நிலையுள்ளது.

இரா.சம்பந்தன் அவர்கள் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறிய விடயத்திலே இவ்வாறு நடந்துகொண்டால் எதிர்கால நடைபெறப்போகும் நிலைமை குறித்தே எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே, எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளன. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சோனதிராஜா அவர்களிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா என்று தெரியவில்லை. குறித்த தேசியப் பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்பந்தன் ஒரு வயது முதிர்ந்தவர். அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும். எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்-24/

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

எந்தக் கூட்டமைப்பிற்குப் பாடம் புக்கட்டவென கிழக்கு மக்கள் கருணாவுக்கு பின்னால் போனார்களோ, இறுதியில் அதே கிழக்கு மக்களுக்கென்று ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரை அதே கூட்டமைப்புத் தந்திருக்கிறது.

இதுவரைக்கும் அதாவது 1994 -99 இந்த காலத்தில்  யாரும் இல்லை அதன் முன்பு இருந்தார்கள்  அதன் பிறகு வந்தவர்கள் அப்படி ஒன்றையும் செய்ததாக நான் அறியவில்லை மக்கள் அதே நிலையில் இங்கு வந்து பார்க்கலாம்  முஸ்லீம்கள் பகுதிகளையும் தமிழ் மக்கள் பகுதிகளையும் 

பழைய ஆண்டுகள் யுத்த ஆண்டுகள் என நீங்கள் சொல்லலாம் அந்த ஆண்டுகளில் இருந்த போலவே அம்பாறை மாவட்டம் இப்பவும் இருக்கு மகிந்த ஆட்சிக்கு வந்ததால் நல்ல காப்பற வீதிகள் மட்டும் இருக்கு 

கூட்டமைப்பு எம்பி வந்து கோயிலுக்கு நிதி மட்டும் அளித்துள்ளார்கள் விபரம் தேவையாயின் அனைத்து பிரதேச செயபல்ங்களையும் விசாரிக்கலாம் மக்களுக்கு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்திருக்கிரார்களா என்றால் ??

பொத்துவில் கனகர் கிராமம் திருக்கோவில் மேச்சல் தரை பிரச்சினை ,கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சவளக்கடை கொலனி போன்ற எல்லைக்கிராமங்களில் நடக்கு நில ஆக்கிரமிப்பு எல்லாம் அந்த இடத்தில் அப்படியே இருக்கிறது  பிரச்சினைக்கை தீர்க்க அல்ல பெயருக்கு மட்டும் எம்பியாக இருக்கலாம் அம்பாறையில் 

 எம்பி கொடுத்து இருக்கலாம் ஏனென்றால் அடுத்த எலக்சனிலையும் கூட்டமைப்பு இங்கு நிற்கணும் பந்தயக்குதிரைகள் எல்லாம் வெயிட்டிங்ல் இருக்கிறது  ரஞ்சித். 

முடிந்த வரை விரட்டிக்கொண்டே இருப்போம் இவர்களை அடுத்த எலக்சன் அதாவது மாகாண சபை எலக்சனுக்கு பிள்ளையான் கட்சியையும் இறக்க இருக்கிறோம் அம்பாறையில் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில்.. விரைவில், கூட்டமைப்பிலிருந்து...
ரெலோ, புளொட், தமிழரசு கட்சியிலிருந்து  சிலரும்.. 
பிரிந்து சென்று விடுவார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

போகிற போக்கில்.. விரைவில், கூட்டமைப்பிலிருந்து...
ரெலோ, புளொட், தமிழரசு கட்சியிலிருந்து  சிலரும்.. 
பிரிந்து சென்று விடுவார்கள் போலுள்ளது.

அந்த பிரச்சினைதான் அடுத்து 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.