Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

தீவுகளை வைத்து தான் பிரச்சனையை உருவாக்கின்றனர் தற்பொழுது.... எல்லை கண்கானிப்பு என்று தொடங்கி எதாவது செய்வார்கள் ..இந்தியா.தாய்வானுக்கு குரல் கொடுக்கின்றது...சீனா  வியட்னாமுக்கும்,ஜப்பானுக்கும் சொந்தமான தீவுகளை தனதாக்க பல இராணுவ முயற்சிகளை செய்கின்றது ....எதுவும்  நடக்கலாம்

  • Replies 152
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பிறந்து ,அங்கேயே படித்து விட்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு அங்கத்தைய கடவுசீட்டு எடுத்த பிறகு  தேசியம் என்று  சொல்லிக் கொண்டு இருப்பது இலகு ...காரணம் இலங்கையரசை எந்த விதத்திலும் நாங்கள் எதிர்பாத்து காத்து இருக்கவில்லை.

அங்கே படித்து,அங்கேயே வேலை செய்ப்பவர்களது நிலைமை வேறு ...அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் ...அரசின் சட்ட ,திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகணும்.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாய் வாழ்வது என்பது சிங்களவர்களுக்கு அடிமையாய் வாழணும் என்று இல்லை ...தமிழர்கள் தங்கள் தகுதிகளை எல்லாத் துறைகளிலும் வளர்த்து கொண்டு ,எல்லாத்துக்குள்ளும் ஊடுருவ வேண்டும்...பல்கலையில் இருந்து பாராளுமன்றம் வரை ...அவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள் ,கதைக்கிறார்கள் பார்லிமென்டில் கூட .

ஈழம் கிடைத்தால் எல்லோருக்கும் தான் சந்தோசம் ...ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழம் ஈழம் என்று கத்தினால்    மட்டும் ஈழம் கிடைத்து விடாது ...இங்கேயிருந்து கொண்டு தேசியம் என்று கதைப்பவர்கள் எப்படி அங்கேயிருப்பவர்கள் செயற்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் ?

மக்களை திரட்டி  ஆயுதக் குழுக்களை அமைத்து போராட சொல்கிறார்களா அல்லது வேறு வழி ஏதும் வைத்து இருக்கிறார்களா ?....எழுதினால் எனக்கும் அறிந்து கொள்ள முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம்.

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்பது அப்பட்டமானமான ஏமாற்று.

1 hour ago, கிருபன் said:

தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

இந்த நியாயவாதிகளும் தமிழ் தேசியம் பேசுவோர்களும் எதிர் துருவங்கள்.
இலங்கையைவிட வெளிநாட்டிலும் புலி புகழ் தமிழ் தேசியம் மோட்டு சிங்களவன் என்று பேசிக்கொண்டு சிங்களவருடன் கூடிக்குலாவி திருமண சம்மந்தம் பார்ட்டி என்று திரியும் தமிழர்கள் அதிகம்.

16 minutes ago, ரதி said:

அங்கே படித்து,அங்கேயே வேலை செய்ப்பவர்களது நிலைமை வேறு ...அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் ...அரசின் சட்ட ,திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகணும்.

👍

வெளிநாட்டில்  உள்ள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவார்களாம்
இலங்கையில் உள்ள தமிழர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட கூடாதாம்

1 hour ago, ரஞ்சித் said:

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

நீங்கள் உங்கள் நாடடை பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் நாடடை பார்த்துக்கொள்ளுகிறோம். உங்களுக்கும் தமிழ் தேசியத்துக்கு இனி ஏதும் தொடர்பு இருக்குமோ தெரியவில்லை. நிச்சயமாக போலி தமிழ் தேசியத்துடன் வைத்திருப்பீர்கள். அப்படியே தொடருங்கள்.

18 minutes ago, ரதி said:

ஊரில் பிறந்து ,அங்கேயே படித்து விட்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு அங்கத்தைய கடவுசீட்டு எடுத்த பிறகு  தேசியம் என்று  சொல்லிக் கொண்டு இருப்பது இலகு ...காரணம் இலங்கையரசை எந்த விதத்திலும் நாங்கள் எதிர்பாத்து காத்து இருக்கவில்லை.

அங்கே படித்து,அங்கேயே வேலை செய்ப்பவர்களது நிலைமை வேறு ...அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் ...அரசின் சட்ட ,திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகணும்.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாய் வாழ்வது என்பது சிங்களவர்களுக்கு அடிமையாய் வாழணும் என்று இல்லை ...தமிழர்கள் தங்கள் தகுதிகளை எல்லாத் துறைகளிலும் வளர்த்து கொண்டு ,எல்லாத்துக்குள்ளும் ஊடுருவ வேண்டும்...பல்கலையில் இருந்து பாராளுமன்றம் வரை ...அவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள் ,கதைக்கிறார்கள் பார்லிமென்டில் கூட .

ஈழம் கிடைத்தால் எல்லோருக்கும் தான் சந்தோசம் ...ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழம் ஈழம் என்று கத்தினால்    மட்டும் ஈழம் கிடைத்து விடாது ...இங்கேயிருந்து கொண்டு தேசியம் என்று கதைப்பவர்கள் எப்படி அங்கேயிருப்பவர்கள் செயற்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் ?

மக்களை திரட்டி  ஆயுதக் குழுக்களை அமைத்து போராட சொல்கிறார்களா அல்லது வேறு வழி ஏதும் வைத்து இருக்கிறார்களா ?....எழுதினால் எனக்கும் அறிந்து கொள்ள முடியும் .

சரியாக சொன்னீர்கள் ரதி. இதுக்குமேலயும் விளங்காவிடடாள், அவர்கள் தூங்கவில்லை தூங்குவது போல நடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.

8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்பது அப்பட்டமானமான ஏமாற்று.

இந்த நியாயவாதிகளும் தமிழ் தேசியம் பேசுவோர்களும் எதிர் துருவங்கள்.
இலங்கையைவிட வெளிநாட்டிலும் புலி புகழ் தமிழ் தேசியம் மோட்டு சிங்களவன் என்று பேசிக்கொண்டு சிங்களவருடன் கூடிக்குலாவி திருமண சம்மந்தம் பார்ட்டி என்று திரியும் தமிழர்கள் அதிகம்.

👍

வெளிநாட்டில்  உள்ள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவார்களாம்
இலங்கையில் உள்ள தமிழர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட கூடாதாம்

நீங்கள் விளங்கி விளக்கமாக எழுதினாலும் இவர்கள் விளங்காத மாதிரி நடிக்கிறார்கள். தங்கள் ஊர் சடடப்படி தங்கள் நடப்பார்களாம். எங்களை மட்டும் சடடத்தை மீறி நடக்கடடாம். சரியான பதில்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

பெயர் மாற்றம் நடைபெற்றுவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார்,

ரஞ்சித்,

உங்களை நேர்மையானவர் என்று நினைத்திருந்தேன். அதை இப்படி எழுதி மறுவளமாக நிருபித்து விட்டீர்களே?

நான் எழுதியது, நிலமை இப்படியே தொடர்ந்தால் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாதது, என்று. அதை மாற்றி, “தவிர்க்க முடியாதது” என்ற பதத்துக்கு பதிலாக “அவசியம்” என்ற சொல்லை செருகி எனது கருத்தையே மாற்றி பிரச்சாரம் செய்கிறீர்களே? இதனால் எதை அடையப் போகிறீர்கள்?

3 hours ago, ரஞ்சித் said:

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம்.

உண்மையில்  தமிழ் தேசியம் என்றால் என்ன? தமிழர் ஒரு இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஆகவே அவர்கள் தொன்றுதொட்டு வாழும் நிலத்தை தமது சுதந்நிரமும் இறைமையும் உள்ள நாடாக பிரகடனப்படுத்தி வாழ அவர்களுக்கு உள்ள உரிமை தமிழ் தேசியம் இல்லையா?

தமிழ்நாட்டில் வாழும் தமிழருக்கும் இந்த உரிமை - தமிழ் தேசியம், உண்டல்லவா? தமிழ் நாடு தனிநாடாக வேண்டுமா? தமிழீழம் தனிநடாக வேண்டுமா? அல்லது இவை இரண்டும் இரண்டு தனியான நாடுகளாக வேண்டுமா? அல்லது இவை இணைந்து தனியான நாடாகி வேறு ஒரு பெயரை பெற வேண்டுமா?

தமிழர் இப்படி தனியான நாடான பின் மலையகத்தில் உள்ள பல இலட்சம் தமிழர்களினதும் கொழும்பு, மாத்தளை, புத்தளம் போன்ற இடங்களில் உள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையும்? அவர்களுக்கு மொழி உரிமை முற்றாக மறுக்கப்பட்டு, அவர்கள் சிங்களவர்களாக வேண்டுமா? கொழும்பில் உள்ள தமிழ் பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா? சி. வி. விக்னேஸ்வரனின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்கள் போன்றவர்களும் சிங்களவர்களாக வேண்டுமா? 

இவையா உங்கள் தீர்வுகள்? வேறு வழிகள் திட்டங்கள் இருந்தால் எழுதுங்கள். நாங்களும் இணைந்து கொள்ளலாம்.

Edited by கற்பகதரு

Just now, கற்பகதரு said:

ரஞ்சித்,

உங்களை நேர்மையானவர் என்று நினைத்திருந்தேன். அதை இப்படி எழுதி மறுவளமாக நிருபித்து விட்டீர்களே?

நான் எழுதியது, நிலமை இப்படியே தொடர்ந்தால் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாதது, என்று. அதை மாற்றி, “தவிர்க்க முடியாதது” என்ற பதத்துக்கு பதிலாக “அவசியம்” என்ற சொல்லை செருகி எனது கருத்தையே மாற்றி பிரச்சாரம் செய்கிறீர்களே? இதனால் எதை அடையப் போகிறீர்கள்?

உண்மையில் தேசியம் என்றால் என்ன? தமிழர் ஒரு இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஆகவே அவர்கள் தொன்றுதொட்டு வாழும் நிலத்தை தமது சுதந்நிரமும் இறைமையும் உள்ள நாடாக பிரகடனப்படுத்தி வாழ அவர்களுக்கு உள்ள உரிமை தமிழ் தேசியம் இல்லையா?

தமிழ்நாட்டில் வாழும் தமிழருக்கும் இந்த உரிமை - தமிழ் தேசியம், உண்டல்லவா? தமிழ் நாடு தனிநாடாக வேண்டுமா? தமிழீழம் தனிநடாக வேண்டுமா? அல்லது இவை இரண்டும் இரண்டு தனியான நாடுகளாக வேண்டுமா? அல்லது இவை இணைந்து தனியான நாடாகி வேறு ஒரு பெயரை பெற வேண்டுமா?

தமிழர் இப்படி தனியான நாடான பின் மலையகத்தில் உள்ள பல இலட்சம் தமிழர்களினதும் கொழும்பு, மாத்தளை, புத்தளம் போன்ற இடங்களில் உள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையும்? அவர்களுக்கு மொழி உரிமை முற்றாக மறுக்கப்பட்டு, அவர்கள் சிங்களவர்களாக வேண்டுமா? கொழும்பில் உள்ள தமிழ் பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா? சி. வி. விக்னேஸ்வரனின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்கள் போன்றவர்களும் சிங்களவர்களாக வேண்டுமா? 

இவையா உங்கள் தீர்வுகள்? வேறு வழிகள் திட்டங்கள் இருந்தால் எழுதுங்கள். நாங்களும் இணைந்து கொள்ளலாம்.

அவர் அவரது நாடடைபற்றி எழுதுகிறார். நீங்கள் என்னடாவென்றால் அவரிடம் போய் திட்ட்ங்களை கேட்க்கிறீர்கள். இப்போது தெரியும்தானே அவர் எந்த நாடு என்று? அவரிடம் ஸ்ரீலங்கா பாஸ் போர்ட் இல்லயாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியம் என்பது தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

கிருபன்,

இந்த வரைவிலக்கணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. என்னை ஒருவித மன உழைச்சலுக்கு இட்டுச் சென்றது. என்னை நான் இந்த வரையரைக்குள் வைத்துப்பார்த்தேன். நான் இதற்கு பொருத்தமானவனல்ல.

தமிழ் தேசியம் என்றால் என்ன? சத்தியமாக இதன் வரவிலக்கணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு இந்திய வம்சாவளி தமிழன். நாங்கள் 5 அல்லது 6  தலைமுறையாக கொழும்பில் வாழ்கின்றோம். நான் படித்தது தமிழ் மொழியில் எனக்கு அதில் ப‌‌ற்றுண்டு.

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்ணையில் நாதமுனி குறிப்பிட்டார். நீர் ஒன்றில் தமிழ் தேசியம் அல்லது சிங்கள தேசியம் என, எனக்கு உண்மையில் ஒரே குழப்பமாக போய்விட்டது.

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  

எனக்கு இதை குறித்து யாரவது தெளிவாக விளக்குவீர்களா?  

5 hours ago, ரதி said:

ஊரில் பிறந்து ,அங்கேயே படித்து விட்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு அங்கத்தைய கடவுசீட்டு எடுத்த பிறகு  தேசியம் என்று  சொல்லிக் கொண்டு இருப்பது இலகு ...காரணம் இலங்கையரசை எந்த விதத்திலும் நாங்கள் எதிர்பாத்து காத்து இருக்கவில்லை.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாய் வாழ்வது என்பது சிங்களவர்களுக்கு அடிமையாய் வாழணும் என்று இல்லை ...தமிழர்கள் தங்கள் தகுதிகளை எல்லாத் துறைகளிலும் வளர்த்து கொண்டு ,எல்லாத்துக்குள்ளும் ஊடுருவ வேண்டும்...பல்கலையில் இருந்து பாராளுமன்றம் வரை ...அவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள் ,கதைக்கிறார்கள் பார்லிமென்டில் கூட .

மக்களை திரட்டி  ஆயுதக் குழுக்களை அமைத்து போராட சொல்கிறார்களா அல்லது வேறு வழி ஏதும் வைத்து இருக்கிறார்களா ?....எழுதினால் எனக்கும் அறிந்து கொள்ள முடியும் .

நன்றி ரதி 
எனக்கு இது தான் எனக்கிருக்கும் கேள்வியும் கூட‌
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

நன்றி ரஞ்சித் உங்கள் தமிழ் தேசிய பற்றிற்கு

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

நான் வரைவிலக்கணம் எழுதவில்லை. ஒரு புரிதலுக்காக எழுதினேன்.

தெரிந்த மொழி என்பதை தெரிந்த தாய்மொழி என்று கொண்டால் தமிழ்மொழியை வைத்து இலகுவாக அரச அலுவலகங்களில் கருமங்களைப் பார்க்கமுடியுமா?

நீங்கள் மும்மொழியிலும் பாண்டித்தியம் உள்ளவராக இருப்பதால் இலகுவாக காரியங்களை/கருமங்களை செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் சிங்களம் மட்டுமே தெரிந்த ஒருவருக்கு உள்ள அனுகூலங்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவருக்கு இல்லை. தமிழன் சிங்களம் தெரிந்திருந்தால் பலவிடயங்களைச் செய்யலாம் என்பதே தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை பறைசாற்றுகின்றது.

தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை இலகுவாக வரைவிலக்கணம் கொடுக்கமுடியாது. அது தேசியம் என்ன என்றால் என்பதில் இருந்து ஆரம்பிக்கும். இதற்கே பல வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.

இதைப் பற்றிய விளக்கங்களை பின்னர் எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

கிருபன்,

இந்த வரைவிலக்கணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. என்னை ஒருவித மன உழைச்சலுக்கு இட்டுச் சென்றது. என்னை நான் இந்த வரையரைக்குள் வைத்துப்பார்த்தேன். நான் இதற்கு பொருத்தமானவனல்ல.

தமிழ் தேசியம் என்றால் என்ன? சத்தியமாக இதன் வரவிலக்கணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு இந்திய வம்சாவளி தமிழன். நாங்கள் 5 அல்லது 6  தலைமுறையாக கொழும்பில் வாழ்கின்றோம். நான் படித்தது தமிழ் மொழியில் எனக்கு அதில் ப‌‌ற்றுண்டு.

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்ணையில் நாதமுனி குறிப்பிட்டார். நீர் ஒன்றில் தமிழ் தேசியம் அல்லது சிங்கள தேசியம் என, எனக்கு உண்மையில் ஒரே குழப்பமாக போய்விட்டது.

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  

எனக்கு இதை குறித்து யாரவது தெளிவாக விளக்குவீர்களா?  
 
என்னைப் பொறுத்தவரை(சுருங்கக் கூறின்), தேசியம் என்பது எனது அடையாளம். 

தேசியம் என்பது எப்போது தூசு தட்டப்படுகிறதென்றால் எனது  அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது. 

எனது அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது அதே உணர்வுள்ள மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். 

ஏனென்றால் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். ஆனால் சமமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் ஒத்த உணர்வு அல்லது கூட்டுப்பிரக்ஞை. வெளியாரின் அச்சுறுத்தல்களின் போது தமது அடையாளத்தைப் பேண ஒரு மக்கள் திரளை உணர்வு ரீதியாக ஒன்றாக்குவது தேசியம்.

இது மதத்தின் வழியாக இருக்கலாம் (முஸ்லிம் தேசியம்), தொடர்ச்சியான நிலப்பரப்பின் மூலமாக இருக்கலாம் அல்லது மொழியின் மூலமாகவும் இருக்கலாம். இலங்கையில் சிங்களவர்கள் மொழி ரீதியாக தேசிய இனமாக இருக்கின்றார்கள், முஸ்லிம்கள் மதரீதியாக தேசிய இனமாக இருக்கின்றார்கள். மலையக/இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினாலும், இந்து/சைவ மதமாக இருந்தாலும் வடக்கு-கிழக்கில் இருக்கும் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தி ஒரே தேசிய இனமாக உணரவில்லை. ஆகவே மலையகத் தமிழர்கள் தனித்துவம் மிக்க தனி இனம்.

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களை தேசிய இனமாக ஒன்றாக்குவது, தமிழ்மொழி, நிலத்தொடர்ச்சி, மற்றும் சிங்கள, முஸ்லிம்களின் நெருக்குவாரங்கள். இந்த நெருக்குவாரங்கள்தான் உணர்வு ரீதியில் தமிழர்களை தமது அடையாளத்திற்காகப் போராடத் தூண்டியது. இந்த அடையாளத்தில் தமிழ் மொழிதான் முக்கியமான கூட்டுப் பிரக்ஞையை உருவாக்கியது. 

இந்தக் கூட்டுப் பிரக்ஞையை சிதறடிக்க, பிராந்திய, மத, சாதீய வேறுபாடுகளைத் தூண்டி தேசிய உணர்வை நலியச் செய்யும் யுக்தியை சிங்கள அரசு கச்சிதமகாச் செய்கின்றது.

தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்கவேண்டும். தேசிய உணர்வை இன ரீதியாக பெருமிதத்துடன் போற்றும் அதே வேளை பிற இனங்களும் அப்படியான தேசிய உணர்வுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இத்தகைய ஜனநாயகப் பண்புள்ள தேசியம் விரிந்து வளரும்.

தேசிய உணர்வு பிற தேசியங்களின் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 

தயவு செய்து இப்போது இருப்பது போல நேர்மையான தமிழனாகவே இருங்கள்.

ஏமாற்று தமிழ் தேசியவாதியாக மாற வேண்டாம்.

நீங்கள் இலங்கையில் கொழும்பில் சிங்கள மொழியயை சரளமாக பாவிப்பது போன்றே வெளிநாடுகளில் தமிழ் தேசியவாதிகள் அன்னிய மொழிகளை சரளமாக பாவிக்கின்றனர் ஆனால் இலங்கையில் சிங்கள பகுதிகளிலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கும்பல் ஒவ்வொரு தடவையும் பதவிக்கு வரும் போது புலிக்கு உயிர்கொடுப்பினம்.

பிறகு நாம் தான் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தம் என்றும் சொல்லுவினம்.

நான் பிடி நீ பிடின்னு அரசியல் கைதிகளின் பட்டியலைக் கொடுத்தாங்கப்பா.. தேர்தலும் முடிஞ்சு பார்லிமென்டும் கூடியாது.. அவர்களின் விவகாரம் தொடர்ப்பில் மூச்சும் இல்லை. 

மக்களா திருந்தாதவரை இப்படியான அரசியல் வியாதிகள் திருந்தப் போறதே இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 12:47, Robinson cruso said:

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

அப்போ  வடக்கு-கிழக்கு இணைப்பு, 13வது  திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தல் எல்லாம் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தானே!! அவற்றை ஸ்ரீலங்கா கிழித்தெறியும்போது கச்சதீவு  ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட முடியாத என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இலங்கையில் கொழும்பில் சிங்கள மொழியயை சரளமாக பாவிப்பது போன்றே வெளிநாடுகளில் தமிழ் தேசியவாதிகள் அன்னிய மொழிகளை சரளமாக பாவிக்கின்றனர் ஆனால் இலங்கையில் சிங்கள பகுதிகளிலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பார்கள்

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டு மொழிகளைக் கற்று கருமங்களை ஆற்றுவதையும் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே தமிழ் மொழியை வைத்து தமது வேலைகளைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கும் பலத்த வேறுபாடு உள்ளது.

வெளிநாடுகளில் கூட அத்தியாவசியமான தேவைகளுக்கு மொழிபெயர்ப்பு சேவையை ஜனநாயகப்பண்புள்ள அரசுகள் செய்து கொடுக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, தமிழ் மக்களை இலங்கையர் என்று உணரவைக்கவேண்டுமானால் சிங்களப் பகுதிகளில் தமிழில் கருமங்களை ஆற்ற உதவிகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் தமிழ்ப்பகுதிகளிலேயே, குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்குகூட இடர்பாடுகள் இருக்கின்றன.

தமிழ்ப்பகுதிகளிலேயே பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்கு இடர்பாடுகள் இருந்தால் அது ஏற்று கொள்ள முடியாத தவறு.   ஆனால் தான் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே மொழியாக சொந்த தமிழ் வைத்து கொண்டு சிங்கள பகுதிகளில் தமது வேலைகளைச் செய்யமுடியாமல் ஏன் தவிக்க வேண்டும்? அந்த நாட்டின் இன்னொரு மொழியான சிங்களத்தையும் படித்திருக்க வேண்டும் அல்லவா.வெளிநாடுகளில் தமது வேலைகளைச் செய்ய தமிழை தவிர வேறு மொழி படிக்கிறார்கள் தானே தங்களுக்கு ஒரு நியாயம்  இலங்கையில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயமா?  நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகள் எல்லாம் வெளிநாட்டில் புதிதாக வரும் அகதிகளுக்கு மட்டும் தான்.

எனக்கு நேரம் கிடைத்தால் வேறு மொழிகளும் படிக்க ஆசை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகள் எல்லாம் வெளிநாட்டில் புதிதாக வரும் அகதிகளுக்கு மட்டும் தான்

நாங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நடத்தப்படுகிறோம். எங்கள் கிராமங்களில் போலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதியவோ, அல்லது எடுத்துரைக்கவோ மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார். சிங்கள பிரதேசத்தில் அந்த மக்களுக்கு அந்த அவசியமில்லை. எனினும் சிங்களம் கருமமாற்றுவதற்கு இலகு, எனக்கு எந்த வேறுபாடும் காட்டப்படுவதில்லை, இழப்பில்லை, சந்தோசமாக இருக்கிறேன் என்பவருக்கு, கஸ்ரத்தை அனுபவிப்பவரின் தேவை வலி புரியாது. எங்களுக்கு வரும் அரச திணைக்கள கடிதங்கள் சிங்களத்தில் வருகின்றன. தமிழ்ப் பிரதேசம் என்று தெரிந்தும் ஏன் சிங்களம் மட்டும் பிரயோகிக்கப் படுகிறது? மும்மொழியையோ, இரு தேசிய மொழிகளைகளையோ பாவிக்காது ஒரு மொழி மட்டும் திணிக்கப்படுகிறது.  எங்களின் தொழில், மூலதனம் கொள்ளை அடிக்கப்படுகின்றன. எங்கள் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அங்கிருந்து விரட்டப்படுகின்றோம். உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இப்படி எத்தனையோ. உங்கள் வீட்டில் இப்படியான அக்கிரமம் நடந்தால் எப்படி உங்கள் நடவடிக்கை இருக்கும்? தலைநகரில் உள்ள விலைபோன தமிழர், ஒட்டுக்குழுக்களில் இருந்து தலைநகரில் சிங்களத்தின் புலனாய்வாளராக இயங்குபவர்கள், சிங்களக்குட்டிகளின் மயக்கத்தில் கிறங்கி இனி அதுவே வாழ்வு என்று ஆகியவர்கள் பல பரப்புரைகளை றோவைக் காட்டி செய்து வருகிறார்கள் சுய உணர்வில்லாதவர்கள் உண்மையை விட போலிகளையே  நம்புகிறார்கள். ஏனென்றால் போலிகளுக்கே கவர்ச்சி அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்ப்பகுதிகளிலேயே பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்கு இடர்பாடுகள் இருந்தால் அது ஏற்று கொள்ள முடியாத தவறு.   ஆனால் தான் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே மொழியாக சொந்த தமிழ் வைத்து கொண்டு சிங்கள பகுதிகளில் தமது வேலைகளைச் செய்யமுடியாமல் ஏன் தவிக்க வேண்டும்? அந்த நாட்டின் இன்னொரு மொழியான சிங்களத்தையும் படித்திருக்க வேண்டும் அல்லவா.வெளிநாடுகளில் தமது வேலைகளைச் செய்ய தமிழை தவிர வேறு மொழி படிக்கிறார்கள் தானே தங்களுக்கு ஒரு நியாயம்  இலங்கையில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயமா?  நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகள் எல்லாம் வெளிநாட்டில் புதிதாக வரும் அகதிகளுக்கு மட்டும் தான்.

எனக்கு நேரம் கிடைத்தால் வேறு மொழிகளும் படிக்க ஆசை உண்டு.

நீங்கள் இருவேறு விடயங்களைக் கதைக்கிறீர்கள்.

1) Rights

2) Choice

1) இலங்கையின் எப்பகுதியிலும் தமிழில் அரச கரும விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இது Privilege அல்ல Right. எந்த தனியார் நிறுவனங்களிலும் தமிழில் சேவை கிடைக்கவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய கருமங்களை ஆற்றிக்கொள்ள முடியவில்லை என எந்த ஒரு சிங்களவரும் முறைபாடு செய்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர் ...... 🤥

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀 இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

1) தயவு செய்து இப்போது இருப்பது போல நேர்மையான தமிழனாகவே இருங்கள்.

ஏமாற்று தமிழ் தேசியவாதியாக மாற வேண்டாம்.

2) நீங்கள் இலங்கையில் கொழும்பில் சிங்கள மொழியயை சரளமாக பாவிப்பது போன்றே வெளிநாடுகளில் தமிழ் தேசியவாதிகள் அன்னிய மொழிகளை சரளமாக பாவிக்கின்றனர் ஆனால் இலங்கையில் சிங்கள பகுதிகளிலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பார்கள்

😂

1) 😏(😂)

2) சிங்களப் பகுதிகளில் தமிழர் ஒருவரும் தமிழ் பேசுமாறு கேட்பதில்லை. சிங்களப் பகுதிகளில் அரச அலுவல்களை மேற்கொள்ள முனையும்போது தமிழில், அதாவது எனது சொந்த மொழியில் மேற்கொள்ள எனக்கு உரிமை இருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கை எனது நாடு. அங்கே நான் சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. உரிமைகளை கேட்கிறேன். 

குடியேற்ற நாடுகளில் எனக்கு வழங்கப்படுவது சலுகை. 

மற்றவர்களுக்கு advice மழை பொழிவதற்கு முன்னர் சலுகைக்கும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளுங்கள். ☹️

6 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ  வடக்கு-கிழக்கு இணைப்பு, 13வது  திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தல் எல்லாம் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தானே!! அவற்றை ஸ்ரீலங்கா கிழித்தெறியும்போது கச்சதீவு  ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட முடியாத என்ன??

13 வது திருத்தும் முழுமையாக நடைமுறை படுத்தப்படடாதா?  போலி தமிழ் தேசியவாதிகளே கூறுகிறார்கள் அதிலே ஒன்றுமே இல்லை என்று. அப்படி என்றால் அரசாங்கம் அதை நீக்குமா? நிச்சயமாக அதை நீக்கமாட்ட்டார்கள். இந்தியா தமிழர்களுக்கு எதையோ பெற்றுக்கொடுத்துவிட்ட்தாக காட்டுவதட்கு உருவாக்கப்படட திருத்தம் ஒழிய தமிழர்களுக்கு கொடுப்பதட்கு ஒன்றுமே இல்லை. ஒரு பியோனையே நியமிக்க முடியாதென்றால் அதனால் என்ன பிரயோசனம். அப்படியான 13 வது திருத்தத்தின் மூலமாக தமிழர்களுக்கு கொடுத்த அந்த மாபெரும் அதிகாரத்தை அவர்கள் இல்லாதொழிப்பார்களா? ஒரு நாளும் நடக்காது.

ஒப்பந்தம் கையொப்பமிடட கொழும்பு துறைமுகத்தில் இருந்தே இந்தியாவை துரத்தி விடடவனுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. இந்தியா என்ன கிழித்தா விடடார்கள்? இவர்களுக்கு தெரியும் என்னதான் செய்தாலும் கச்சத்தீவு ஒரு நாளும் இந்தியா பக்கம் போகாது எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

தான் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே மொழியாக சொந்த தமிழ் வைத்து கொண்டு சிங்கள பகுதிகளில் தமது வேலைகளைச் செய்யமுடியாமல் ஏன் தவிக்க வேண்டும்? அந்த நாட்டின் இன்னொரு மொழியான சிங்களத்தையும் படித்திருக்க வேண்டும் அல்லவா..

நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டதால்தான் நல்லதொரு விளக்கத்தை கபிதான் தந்துள்ளார். அதற்கு உங்களுக்கு நன்றி.

3 hours ago, Kapithan said:

நீங்கள் இருவேறு விடயங்களைக் கதைக்கிறீர்கள்.

1) Rights

2) Choice

1) இலங்கையின் எப்பகுதியிலும் தமிழில் அரச கரும விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இது Privilege அல்ல Right. எந்த தனியார் நிறுவனங்களிலும் தமிழில் சேவை கிடைக்கவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய கருமங்களை ஆற்றிக்கொள்ள முடியவில்லை என எந்த ஒரு சிங்களவரும் முறைபாடு செய்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர் ...... 🤥

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀 இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 👍

மிக்க நன்றி. 

14 hours ago, Kapithan said:

என்னைப் பொறுத்தவரை(சுருங்கக் கூறின்), தேசியம் என்பது எனது அடையாளம். 

தேசியம் என்பது எப்போது தூசு தட்டப்படுகிறதென்றால் எனது  அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது. 

எனது அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது அதே உணர்வுள்ள மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். 

ஏனென்றால் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். ஆனால் சமமானவர்கள்.

நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளுகிறேன். இருந்தாலும் எவ்வளவு காலத்துக்கு தூசு தடட வேண்டுமென்று சொன்னால் கொஞ்சம் விளக்கமாக இருக்கும்.

நான் அறிந்த வரைக்கும் 70 வருடங்களாக தூசு தட்டுவதாக அறிகிறேன்.

இப்போது போகிற போக்கில் இன்னும் 70 வருடங்களுக்கு தூசு தட்டுவார்கள், அல்லது இந்த அரசு 5 வருடத்துக்குள் முடித்து வைக்கும் என நம்புகிறேன்.

6 hours ago, Kapithan said:

நீங்கள் இருவேறு விடயங்களைக் கதைக்கிறீர்கள்.

1) Rights

2) Choice

1) இலங்கையின் எப்பகுதியிலும் தமிழில் அரச கரும விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இது Privilege அல்ல Right. எந்த தனியார் நிறுவனங்களிலும் தமிழில் சேவை கிடைக்கவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய கருமங்களை ஆற்றிக்கொள்ள முடியவில்லை என எந்த ஒரு சிங்களவரும் முறைபாடு செய்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர் ...... 🤥

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀

இங்குஇன்னொரு மொழியை கற்க வேணுமா இல்லை வேண்டாமா என்பதை யார் தீர்மானிப்பது? அரசியல் கட்சியா இல்லை தனி மனிதனா? அல்லது தேசியம் என்று சொல்லி வேறு மொழியை கட்காமல் இருக்க வேண்டுமா? இதட்கும் விளக்கம் தந்தாள் நல்லது.தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.