Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!

mahinda-rajapaksa-280719-seithy.jpg

அமைதியாக நடவுங்கள் .. ஆளுங்கட்சியினருக்கு பிரதமர் அறிவுரை..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இன்று தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள்.

மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்பட்டார்கள், தற்போதும் செயற்படுகின்றார்கள்.

அவர்களை எப்போதும் திருத்தவே முடியாது. நல்லாட்சி அரசின் காலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்து சபையில் கலாட்டா பண்ணினார்கள். தற்போது அவர்கள் இருவருக்கும் சபையில் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்கள் பாணியில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் செயற்படத் தொடங்கிவிட்டார்கள்.

wick-and-kajan-384x217.jpg

சுயநிர்ணய உரிமை விடயத்தையும் போர்க்குற்ற விசாரணை விவகாரத்தையும் முன்னிலைப்படுத்தி இவர்கள் உரையாற்றுகின்றார்கள். சர்வதேசப் பொறிமுறைக்குள் எம்மைச் சிக்க வைப்பதுதான் இவர்களின் பிரதான நோக்கம்.

புலம்பெயர் புலி அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதற்கு விரைவில் ஒரு முடிவு காணப்படும்.எனவே, சபையில் எமது அணி உறுப்பினர்கள் அனைவரும் சபை விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியாக இருக்க வேண்டும்.

கட்சியின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். அனைவருக்கும் சபையில் உரையாற்ற படிப்படியாகச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.

https://jaffnazone.com/news/20049

  • Replies 108
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுயநிர்ணய உரிமை விடயம், போர்க்குற்ற விசாரணை.

இரண்டுமே சிங்களம் கேட்க விரும்பாத சொற்கள்.

இதற்கு சட்டபூர்வமான தடைபோட முடியாது. காரணம் அப்படியான தடை பாராளுமன்றத்துக்கு வெளியே தான் செல்லுபடியாகும். உள்ளே பேச, தடை இல்லை.

விக்கியர், சுயநிர்ணய உரிமை குறித்து அதிகம் பேசுவதால், மாகாண சபை தேர்தல் நடாத்தாமல், முன்னால் முதல்வராக வைத்திருந்தார்கள்.

அந்தாள், புரமோசனோட, உள்ள வந்து பேசுறார். பத்தாததுக்கு கஜன். சும்மா இருந்தால், கதை கந்தல் என்று மற்றவர்களும் வாயை திறப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதற்கு விரைவில் ஒரு முடிவு காணப்படும்

சுமந்திரன், சம்பந்தனுக்கு கொடுத்து வாயை  கட்டினது போல், இவர்களையும் மடக்கி, முடித்து விடலாம் என்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை பாராளுமன்றத்துகுச் சென்ற கூத்தமைப்பு.... அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த மாதிரி,

இந்த முறை சென்ற கஜனும், விக்கி ஐயாவும்... இருப்பார்கள் என்று, ஶ்ரீலங்கா அரசாங்கம் நினைத்து விட்டது போலுள்ளது.

கஜனையும், விக்கி ஐயாவையும்...   பார்த்து... சிங்களவன் அலறுகிறான். இன்னும் நிறைய இருக்கு. நல்லாய்.... அலறட்டும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

சுமந்திரன், சம்பந்தனுக்கு கொடுத்து வாயை  கட்டினது போல், இவர்களையும் மடக்கி, முடித்து விடலாம் என்கிறார். 

6 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற முறை பாராளுமன்றத்துகுச் சென்ற கூத்தமைப்பு.... அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த மாதிரி,

இந்த முறை சென்ற கஜனும், விக்கி ஐயாவும்... இருப்பார்கள் என்று, ஶ்ரீலங்கா அரசாங்கம் நினைத்து விட்டது போலுள்ளது.

கஜனையும், விக்கி ஐயாவையும்...   பார்த்து... சிங்களவன் அலறுகிறான். இன்னும் நிறைய இருக்கு. நல்லாய்.... அலறட்டும். 😁

காலம்தான் பதில் சொல்ல வேண்டும் , பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற முறை பாராளுமன்றத்துகுச் சென்ற கூத்தமைப்பு.... அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த மாதிரி,

இந்த முறை சென்ற கஜனும், விக்கி ஐயாவும்... இருப்பார்கள் என்று, ஶ்ரீலங்கா அரசாங்கம் நினைத்து விட்டது போலுள்ளது.

கஜனையும், விக்கி ஐயாவையும்...   பார்த்து... சிங்களவன் அலறுகிறான். இன்னும் நிறைய இருக்கு. நல்லாய்.... அலறட்டும். 😁

இது கொஞ்சம் ஓவர் 😀

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி, கஜன் ஆகியோர் பராளுமன்றம் சென்றதன்மூலம் எமக்குக் கிடைத்த ஒரே நண்மை என்னவென்றால், எமக்கான குரல்களாக அவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருப்பார்கள். பாராளுமன்றத்தில் இவர்களால் பேசப்படும் விடயங்கள் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் சாத்தியம் உள்ளது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் எமது அவலங்களை சர்வதேசத்தின் கவனத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வல்லமை இவர்களின் பேச்சுக்கு இருக்கின்றது. இவர்கள் தொடர்ந்து பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.

இதைவிட இப்போதைக்கு எம்மால் வேறு எதுவும் தாயகத்தில் செய்ய முடியாது. சுமந்திரனும், அவர் தலைமையிலான கூத்தமைப்பும் ஏதாவது பேசுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது அவர்களுக்குத் தேவையற்ற வேலையாகப் போயிருக்கலாம். உள்வீட்டில் யார் பேச்சாளர், யார் தலைவர் என்கிற இழுபறியில் இன்னொரு 5 வருடத்தினை அவர்கள் ஒட்டிவிடுவார்கள்.

கிழக்கில் சோரம்போனவர்களும், வடக்கில் மகிந்தவின் ஏஜெண்டுகளும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் தமது பைகள் நிரம்ப்பியவை போக, மீதமுள்ளவற்றில் சில வேலைகளையும், சில வேலைவாய்ப்புகளையும் வழங்கலாம். அதைமீறி ஒரு வசனம் பேசுவதென்றாலும் எஜமானர்களின் அனுமதிபெறவேண்டியிருக்கும். ஆகவே பாராளுமன்றத்தில் இனக்கொலையாளிகளின் தீர்மானங்களுக்கு முன்னால் நின்று கையை உயர்த்திவிட்டு வந்துவிடுவார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாளர்கள் கவனத்துக்கு:

1. இலங்கை அரசியலமைப்பு தனி நாடு கோருவதைதான் தடை செய்கிறது. தனி நாடு கோரும் அரசியலை பாராளுமன்றுக்கு உள்ளேயோ வெளியேயோ பேச முடியாது. பேசினால், பிரஜா உரிமை, சொத்துகள் பறிபோகும். ஆனால் போர்குற்றம், சுயநிர்ணயம் பற்றி உள்ளேயும் வெளியேயும் பேசலாம். ஒரு தடையும் இல்லை -விக்கியும் கஜனும் 2009இல் இருந்து பேசினதுதானே? அப்போ வெளியால் பேசியதை இப்போ உள்ளே பேசுகிறார்கள்.

2. விக்கி கஜனின் பேச்சால் அரசு அதிர்கிறது, சிங்களம் சினம் கொண்டது என்பதெல்லாம் -நகைச்சுவை ததும்பும் கற்பனை. ராஜபக்சேக்கள் இதை உள்ளூர வரவேற்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இதனால் இரட்டை லாபம்- இவர்கள் இப்படி பேசும் வரை

அ. இதை காட்டி சிங்கள மக்களை தம் அணியில் வைத்திருக்கலாம்.

ஆ. இன்னும் 5 வருடத்துக்கு இவர்களை இப்படியே பேச விட்டு - அதனால் ஒன்றும் ஆகவில்லை என்பதை காட்டி- மேலும் தமிழர்களை, தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை இழக்க செய்யலாம்.

3. விக்கியருக்கு கிடைத்துள்ளது ப்ரொமோசன் அல்ல டிமோசன். Protocol படி ஒரு மாகாண முதல்வர் அந்த மாகாணத்தில், ஒரு கபினெட் அமைச்சருக்கு நிகரானவர். அவருக்கு அடுத்துத்தான் ஆளும் கட்சி எம்பி, அதற்கு கீழே எதிர் கட்சி எம்பி. ஒரு மாகாண முதல்வராய் இருந்து விக்கியர் சொன்னவற்றை பொருட்டில் எடுக்காத உலக நாடுகள் ஒரு உதிரி கட்சியின் ஒரே எம்பியாக அவர் சொல்வதை கேட்கும் என்பது இன்னொரு மிகை கற்பனையே. ஈபிடிபிக்கு வன்னியிலும், யாழிலும் இரு தேர்ந்தெடுக்க எம்பிகள் உளர். முண்ணணிகளுக்கு யாழில் தலா ஒன்று. தர்க ரீதியில் இவர்களை விட மக்களின் பிரதிநிதிகள் ஈபிடிபி 🤣 

இந்தியா கூட்டமைப்பை கூப்பிட்டு டீ, பிஸ்கெட் ஆவது கொடுதாத்கர்கள். இவர்களை சீந்துவாரே இல்லை.

இவர்களால் வரும் ஒரே நன்மை - இவர்களை காட்டி, மீளவும் அதிதீவிர தமிழ் தேசியம் தலை தூக்க பார்கிறது -எனவே 13ஐ அமல் படுத்துங்கள் என கூட்டமைப்பு இந்தியாவை அழுத்தலாம். ஆனா இப்படி எல்லாம் யோசிக்க கூட்டமைப்பில் ஆட்கள் இல்லை என்பதும் உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதுக்கு தான் சொல்லுறது... தல வருணும் எண்டு...

பிட்டு... பிட்டு வச்சாரு பார்த்தியலே...

தல.... பின்னிடீங்க தல....

ஆனா தல... ராஜபக்சே விசயத்தில் இந்த முறை.... அறக்கூர் (2/3 பலம்) முழுமொட்டை ஆகும் சாத்தியம் நிறைய உள்ளது. 

இலங்கையின் வரலாற்றினை எடுத்து பார்த்தால், பதவிக்காக தகப்பனையும், சகோதரர்களையும் கொலை செய்த கதைகள், காசியப்பன் முதல்  விஜயபாகுவாரை உண்டு.

எனது கணிப்பில், 19ஏ நீக்கி, மகிந்தா ஜனாதிபதியாக, தம்பியை ராஜினாமா செய்ய சொல்லி, பிரதமர் ஜனாதிபதியாக, தம்பி பிரதமராக்க முயல்வார்..... நெருப்பு பத்திக்கும்...

23 minutes ago, ரஞ்சித் said:

விக்கி, கஜன் ஆகியோர் பராளுமன்றம் சென்றதன்மூலம் எமக்குக் கிடைத்த ஒரே நண்மை என்னவென்றால், எமக்கான குரல்களாக அவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருப்பார்கள். பாராளுமன்றத்தில் இவர்களால் பேசப்படும் விடயங்கள் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் சாத்தியம் உள்ளது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் எமது அவலங்களை சர்வதேசத்தின் கவனத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வல்லமை இவர்களின் பேச்சுக்கு இருக்கின்றது. இவர்கள் தொடர்ந்து பேச வேண்டும், பேசிக்கொண்டே 

இவர்கள் இருவரது பேச்சும் வெளிநாடுகளுக்கு கேக்குதோ இல்லையோ உள்நாட்டில் இருக்கும் அடுத்த சந்ததியினருக்கு நிச்சயம் சென்றடையும்; சென்றடைய வேணும். தமிழ் தேசியம் பற்றி உணராத ஒரு சமுதாயம் அமைவதை அது தடுக்கும். 

உலக அரசியல் நிலவரங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக்கொடே இருக்கும் சிங்களவனின் வெற்றியானது ஒரு சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுன் வெற்றி. ஆனால் மாறிவரும் சர்வதேச பலப்பரீட்சையிக் யாருக்காவது தமிழ் தேசியம் தேவைப்ப்டலாம், அது சுயாட்சியையும் தாண்டு தனி நாடாக கூட இருக்கலாம்.இது நடக்க இன்னமும் 20 வருடங்கள் தேவைப்படாது ஏன் அடுத்த 2 வருடங்களில் கூட நடக்கலாம். இது ராஜபக்‌ஷக்களுக்கும் தெரியும் அதனால் தான் உதாரணமாக தமிழ் தேசியத்தின் மீது அவரது முகவர்கள் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளும் விமர்சனங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

கருத்தாளர்கள் கவனத்துக்கு:

1. இலங்கை அரசியலமைப்பு தனி நாடு கோருவதைதான் தடை செய்கிறது. தனி நாடு கோரும் அரசியலை பாராளுமன்றுக்கு உள்ளேயோ வெளியேயோ பேச முடியாது. பேசினால், பிரஜா உரிமை, சொத்துகள் பறிபோகும். ஆனால் போர்குற்றம், சுயநிர்ணயம் பற்றி உள்ளேயும் வெளியேயும் பேசலாம். ஒரு தடையும் இல்லை -விக்கியும் கஜனும் 2009இல் இருந்து பேசினதுதானே? அப்போ வெளியால் பேசியதை இப்போ உள்ளே பேசுகிறார்கள்.

2. விக்கி கஜனின் பேச்சால் அரசு அதிர்கிறது, சிங்களம் சினம் கொண்டது என்பதெல்லாம் -நகைச்சுவை ததும்பும் கற்பனை. ராஜபக்சேக்கள் இதை உள்ளூர வரவேற்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இதனால் இரட்டை லாபம்- இவர்கள் இப்படி பேசும் வரை

அ. இதை காட்டி சிங்கள மக்களை தம் அணியில் வைத்திருக்கலாம்.

ஆ. இன்னும் 5 வருடத்துக்கு இவர்களை இப்படியே பேச விட்டு - அதனால் ஒன்றும் ஆகவில்லை என்பதை காட்டி- மேலும் தமிழர்களை, தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை இழக்க செய்யலாம்.

3. விக்கியருக்கு கிடைத்துள்ளது ப்ரொமோசன் அல்ல டிமோசன். Protocol படி ஒரு மாகாண முதல்வர் அந்த மாகாணத்தில், ஒரு கபினெட் அமைச்சருக்கு நிகரானவர். அவருக்கு அடுத்துத்தான் ஆளும் கட்சி எம்பி, அதற்கு கீழே எதிர் கட்சி எம்பி. ஒரு மாகாண முதல்வராய் இருந்து விக்கியர் சொன்னவற்றை பொருட்டில் எடுக்காத உலக நாடுகள் ஒரு உதிரி கட்சியின் ஒரே எம்பியாக அவர் சொல்வதை கேட்கும் என்பது இன்னொரு மிகை கற்பனையே. ஈபிடிபிக்கு வன்னியிலும், யாழிலும் இரு தேர்ந்தெடுக்க எம்பிகள் உளர். முண்ணணிகளுக்கு யாழில் தலா ஒன்று. தர்க ரீதியில் இவர்களை விட மக்களின் பிரதிநிதிகள் ஈபிடிபி 🤣 

இந்தியா கூட்டமைப்பை கூப்பிட்டு டீ, பிஸ்கெட் ஆவது கொடுதாத்கர்கள். இவர்களை சீந்துவாரே இல்லை.

இவர்களால் வரும் ஒரே நன்மை - இவர்களை காட்டி, மீளவும் அதிதீவிர தமிழ் தேசியம் தலை தூக்க பார்கிறது -எனவே 13ஐ அமல் படுத்துங்கள் என கூட்டமைப்பு இந்தியாவை அழுத்தலாம். ஆனா இப்படி எல்லாம் யோசிக்க கூட்டமைப்பில் ஆட்கள் இல்லை என்பதும் உண்மையே.

சரி, இதெல்லாம் வேண்டாம். நீங்கள் சொல்லுங்கள். உங்கள் பார்வையில் இப்போது நடப்பதும், இனிமேல் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதும் என்ன? தேசியம் தேசியம் என்று பலரும் எதிர்த்து விவாதம் செய்வதால், நான் அதுபற்றி உங்களிடம் இனிமேல் கேட்கப்போவதில்லை, அது ஒருபுறம் இருக்கட்டும், இப்போதைக்காவது. ஆனால், எங்களிடம் இன்னும் மீதமிருக்கும் நிலத்தையாவது காக்கும் செயற்பாடுகளில் இன்று தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எவராவது இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

நாம் எங்கு பேசியும் எவரும் கேட்கப்போவதில்லை, ஒரு சில மதகுகளையும், அரச சேவையில் ஒரு சில வேலைவாய்ப்புகளையும் விட அரசுடன் கூடிநிற்கும் சிலரால் வேறு எதையுமே செய்ய முடியாது, கூத்தமைப்பு அரசியல் செய்வதை விட்டு காலமாகிற்று என்றால், இனி நாம் இலங்கையில் செய்யவிருக்கும் அரசியல் என்ன? இந்த லட்சணத்தில் புலத்திலுள்ளவர்களை வாயை மூடிக்கொண்டிருங்கள் என்று கேட்பதால்மட்டும் என்ன வித்தியாசமாக நடந்துவிடப்போகிறது? உள்ளூரிலும் செய்வதற்கு அரசியல் இல்லை, வெளியில் இருப்பவனும் பேசக்கூடாதென்றால், சிங்களவன் செய்வதைப் பார்த்துக்கொண்டிருங்கள் என்பதுதானே அதன் பொருள்? 

உங்களின் அறிவுக்கு எட்டிய வகையில் நாம் இனிமேல் செய்யக்கூடியது அல்லது செய்யவேண்டியது என்ன? இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை, ஆகவே வாய்களை மூடிக்கொண்டு இருங்கள் என்கிற நிலைக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், எவர் என்ன செய்தாலும் எதுவுமே நடக்காது, யாருமே எதுவும் செய்யமாட்டார்கள், எதையுமே கேட்கமாட்டார்கள், நடக்கப்போவதெல்லாம் சிங்களவர்கள் இன்னும் இன்னும் பலமடைவதுதான் என்று எழுதுகிறீர்களே ஒழிய, தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி எதுவுமே சொல்கிறீர்கள் இல்லையே? 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இதுக்கு தான் சொல்லுறது... தல வருணும் எண்டு...

பிட்டு... பிட்டு வச்சாரு பார்த்தியலே...

தல.... பின்னிடீங்க தல....

ஆனா தல... ராஜபக்சே விசயத்தில் இந்த முறை.... அறக்கூர் (2/3 பலம்) முழுமொட்டை ஆகும் சாத்தியம் நிறைய உள்ளது. 

இலங்கையின் வரலாற்றினை எடுத்து பார்த்தால், பதவிக்காக தகப்பனையும், சகோதரர்களையும் கொலை செய்த கதைகள், காசியப்பன் முதல்  விஜயபாகுவாரை உண்டு.

எனது கணிப்பில், 19ஏ நீக்கி, மகிந்தா ஜனாதிபதியாக, தம்பியை ராஜினாமா செய்ய சொல்லி, பிரதமர் ஜனாதிபதியாக, தம்பி பிரதமராக்க முயல்வார்..... நெருப்பு பத்திக்கும்...

🤣 நீங்கள் சொல்ற வரலாறு சரிதான் பாஸ்.

ஆனா ராஜபக்சேக்கள் வித்யாசமானவர்கள். வரலாற்றில் இருந்து பாடம் படிப்பவர்கள்.

பிரபா-கருணா பிழவை பயன்படுத்தினார்கள் 

மனோ-பிரபாவை பிரித்தர்கள்

கருணா -பிள்ளையானை பிரித்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் ராஜபக்சே சகோதர்கள் பிரிவார்கள் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆனா ராஜபக்சேக்கள் வித்யாசமானவர்கள். வரலாற்றில் இருந்து பாடம் படிப்பவர்கள்.

பிரபா-கருணா பிழவை பயன்படுத்தினார்கள் 

மனோ-பிரபாவை பிரித்தர்கள்

கருணா -பிள்ளையானை பிரித்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் ராஜபக்சே சகோதர்கள் பிரிவார்கள் என நான் நினைக்கவில்லை.

ராஜபக்ஷேக்கள் கெட்டிக்காரர்கள் என்று நீங்கள் கிலாகிப்பது புரிகிறது. ஆனால், பாதிக்கப்படப்போவது நாங்கள்தான் என்பது உங்களுக்குப் புரியாததல்லவே? அப்படியானால், தமிழர் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

சரி, இதெல்லாம் வேண்டாம். நீங்கள் சொல்லுங்கள். உங்கள் பார்வையில் இப்போது நடப்பதும், இனிமேல் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதும் என்ன? தேசியம் தேசியம் என்று பலரும் எதிர்த்து விவாதம் செய்வதால், நான் அதுபற்றி உங்களிடம் இனிமேல் கேட்கப்போவதில்லை, அது ஒருபுறம் இருக்கட்டும், இப்போதைக்காவது. ஆனால், எங்களிடம் இன்னும் மீதமிருக்கும் நிலத்தையாவது காக்கும் செயற்பாடுகளில் இன்று தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எவராவது இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

நாம் எங்கு பேசியும் எவரும் கேட்கப்போவதில்லை, ஒரு சில மதகுகளையும், அரச் சேவையில் ஒரு சில வேலைவாய்ப்புகளையும் விட அரசுடன் கூடிநிற்கும் சிலரால் வேறு எதையுமே செய்ய முடியாது, கூத்தமைப்பு அரசியல் செய்வதை விட்டு காலமாகிற்று என்றால், இனி நாம் இலங்கையில் செய்யவிருக்கும் அரசியல் என்ன? இந்த லட்சணத்தில் புலத்திலுள்ளவர்களை வாயைம் மூடிக்கொண்டிருங்கள் என்று கேட்பதால்மட்டும் என்ன வித்தியாசமாக நடந்துவிடப்போகிறது? உள்ளூரிலும் செய்வதற்கு அரசியல் இல்லை, வெளியில் இருப்பவனும் பேசக்கூடாதென்றால், சிங்களவன் செய்வதைப் பார்த்துக்கொண்டிருங்கள் என்பதுதானே அதன் பொருள்? 

உங்களின் அறிவுக்கு எட்டிய வகையில் நாம் இனிமேல் செய்யக்கூடியது அல்லது செய்யவேண்டியது என்ன? இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை, ஆகவே வாய்களை மூடிக்கொண்டு இருங்கள் என்கிற நிலைக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், எவர் என்ன செய்தாலும் எதுவுமே நடக்காது, யாருமே எதுவும் செய்யமாட்டார்கள், எதையுமே கெட்கமாட்டார்கள், நடக்காப்பொவதெல்லாம் சிங்களவர்கள் இன்னும் இன்னும் பலமடைகிறார்கள் என்று எழுதுகிறீர்களே ஒழிய, தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி எதுவுமே சொல்கிறீர்கள் இல்லையே? 

உங்களுக்கான என்பதிலை தேசியம் தொடர்பான உங்கள் திரியிலேயே எழுதினேன்.

டாஷ் என்னை ராஜபக்சே முகவர் என்ற ஒரு அரிய நகைசுவையை எழுதினாலும், அவர் சொல்லிய மற்றைய விடயங்கள் சரியானதே.

இலங்கையில் தமிழர் மனோநிலை இப்போ இருவகை

1. தொடர்ந்தும் தமிழ் தேசியத்தை பற்றுபவர்கள்

2. சலுகை அரசியலுக்கு தயாராகி விட்டவர்கள் 

என்னை பொறுத்தவரை இது இப்பொ 50:50.

எனவே விக்கி கஜனின் பேச்சுகள் இந்த 50 வீதத்தை இன்னும் இறங்காமல் காக்க உதவலாம். ஆனால் இது counter productive ஆகி, மக்களை மேலும் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை இழக்க செய்ய- ராஜபட்சேக்கள் இவர்களை வெறும் வாய் சொல் வீரர் என்பதை நிறுவ எல்லாம் செய்வார்கள்.

நான் முன்பே சொன்னது போல் - 3 காரணிகளால் தமிழ் தேசியம் புத்தாக்கம் பெற புறச்சூழல் அமையலாம். அமையாமலும் போகலாம் அதுவரை தமிழ் தேசியத்தை அடைகாப்பதே நிலத்திலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ் தேசிய ஆர்வலர்கள் செய்ய கூடிய ஒரே விடயம்.

10 minutes ago, ரஞ்சித் said:

ராஜபக்ஷேக்கள் கெட்டிக்காரர்கள் என்று நீங்கள் கிலாகிப்பது புரிகிறது. ஆனால், பாதிக்கப்படப்போவது நாங்கள்தான் என்பது உங்களுக்குப் புரியாததல்லவே? அப்படியானால், தமிழர் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

ராஜபக்சேக்கள் கெட்டிகாரர்கள் என நான் புளங்காகிதம் கொள்ளவில்லை. அவர்களை இன்னொருமுறை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நான் முன்பே சொன்னது போல் - 3 காரணிகளால் தமிழ் தேசியம் புத்தாக்கம் பெற புறச்சூழல் அமையலாம். அமையாமலும் போகலாம் அதுவரை தமிழ் தேசியத்தை அடைகாப்பதே நிலத்திலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ் தேசிய ஆர்வலர்கள் செய்ய கூடிய ஒரே விடயம்.

அருமையான கருத்து.

7 minutes ago, goshan_che said:

ராஜபக்சேக்கள் கெட்டிகாரர்கள் என நான் புளங்காகிதம் கொள்ளவில்லை. அவர்களை இன்னொருமுறை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்கிறேன்.

2009 இற்கும் பிறகுமா அவர்களை குறைத்து மதிப்பிடப்போகிறோம்? ஆனால், இவர்களை இவர்கள் செய்த மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்காக நீதியின் முன் கொண்டுவருதல் அவசியம், அதனூடே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். 

தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க சீமான் செய்யும் அரசியல் உதவும் என்று நினைக்கிறீர்களா? ஈழத்தமிழரும், தமிழகத் தமிழரும் ஒருங்கே செய்யும் தேசியம் தொடர்பான அரசியல் பற்றி உங்களின் கருத்தென்ன? இதன்மூலம் எமக்கான தீர்வொன்று சாத்தியம் என்று நம்புகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

எனது கணிப்பில், 19ஏ நீக்கி, மகிந்தா ஜனாதிபதியாக, தம்பியை ராஜினாமா செய்ய சொல்லி, பிரதமர் ஜனாதிபதியாக, தம்பி பிரதமராக்க முயல்வார்..... நெருப்பு பத்திக்கும்...

19 ஐ முற்றாக நீக்குவதில்லையாம். ஒருவர் 2 முறைக்கு மேல் ஜனாதிபதியாக வரமுடியாது, ஜனாதிபதிக்காலம் 5 வருடம் என்பவை அப்படியே இருக்கும். 

சுயாதீன ஆணைகுழுக்களை எப்படி உருவாக்குவது, ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் அதிகாரம், இரெட்டை குடியுரிமை உள்ளவர் எம்பி ஆகலாம் (பசிலுகாக) இப்படியானவையே மாறப்போகிறன.

அமைச்சரவை பதவி ஏற்பில் ஜனாதிபதி கோத்த அபய, பிரதமர் மகிந்த முன் முதுகு வளைந்து வணங்கியதை கண்டீர்கள்தானே?

இதுதான் ராஜபக்ச ஒற்றுமை.

இன்னும் ஒரு தடவை கோத்த அபய - அதன் பின் மகிந்த/கோத்த ஓய்வு பெற நாமல் தலைமை ஏற்பார். அதற்காகத்தான் இப்போதே அந்த தலைமுறையின் ஒரே கபினெட் பதவி நாமலுக்கு. கோத்தவின் குடும்பம் அரசியலிலே இல்லை. ஆனால் நாஜபக்சே சகோதரியின் மகன் நிபுண ரணவக்கவை மாத்தறையில் இறக்கி உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

அருமையான கருத்து.

2009 இற்கும் பிறகுமா அவர்களை குறைத்து மதிப்பிடப்போகிறோம்? ஆனால், இவர்களை இவர்கள் செய்த மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்காக நீதியின் முன் கொண்டுவருதல் அவசியம், அதனூடே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். 

தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க சீமான் செய்யும் அரசியல் உதவும் என்று நினைக்கிறீர்களா? ஈழத்தமிழரும், தமிழகத் தமிழரும் ஒருங்கே செய்யும் தேசியம் தொடர்பான அரசியல் பற்றி உங்களின் கருத்தென்ன? இதன்மூலம் எமக்கான தீர்வொன்று சாத்தியம் என்று நம்புகிறீர்களா? 

1. தமிழக்கதில் உண்மையான, நெடுமாறன் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் - இலங்கையில் தமிழ் தேசியத்துக்கு அது ஒரு பெரும் புத்துணர்வை, சொல்லப் போனால் புது சுவாசத்தை வழங்கும்.

2. நீங்கள் முன்பே கவனித்திருக்கலாம். சீமானை விமர்சித்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு வைரசில் அதற்க்கான எதிர்ப்பை உருவாக்கி கடத்துவது போல, சீமானின் மூலம் தமிழ் தேசியம் தமிழ் நாட்டில் ஊன்றபடுவது நன்மையே என்றும் தொடர்சியாக எழுதியுள்ளேன்.

3. தனிப்பட்டு சீமானை நான் இன்னொரு கருணாநிதியாகவே பார்கிறேன். தமிழகத்தில், பெரியாரை அகற்றி அந்த இடைவெளியை காவி கொண்டு நிரப்பும் திட்டத்தில் “பெரியார் அகற்றும் பணி”. எனும் முதல் படியை செய்வதே அவரின் வேலை என்பதே என் கருத்து. ஏனென்றால் பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக கட்டமைக்க வேண்டிய தேவை சங்கிகளை தவிர வேறு யாருக்கும் இல்லவே இல்லை. அண்ணாவிற்கு பின்னான “திருட்டு திக, திருட்டு திமுக, திருட்டு அதிமுக” வை விமர்சித்தபடி தமிழ் தேசிய அரசியலை அவர் முன்னெடுத்து இருக்கலாம். சென்னை மாகாணமாக இருந்த போது எல்லோருக்கும் பொதுவாக இருந்த திராவிட கொள்கை, மொழிவாரி பிரிப்பின் பின் தேவையற்று போனது என்ற உண்மையை சொல்லி அரசியல் செய்திருக்கலாம்.  இல்லாமல் “திருட்டு திராவிடம்” என பெரியாரை விமர்சிப்பது, சங்கிகளுக்கான மறைமுக அரசியல் என்பதே என் துணிபு.

4. ஆனால், சீமானின் பின் நிற்பவர்கள் உண்மையான் தமிழ் தேசியவாதிகள். ஒரு கட்டத்தில் இந்த பிராவகம் சீமானையும், அவர் அவரின் சதிகளையும் மீறி தமிழ் தேசியத்தை தமிழகத்தில் நிறுவினால் (நிறுவுமா என்பதே பெரிய கேள்வி) அது எமக்கு பெரும் உந்து சக்தியாக அமையும். ஆகவே தமிழ் தேசியவாதிகள் சீமானோடு சேர்ந்து பயணிப்பது நன்மையே. ஆனால் சீமான் புலம்பெயர் தேசியவாதிகளிடம், முழு நிதி நிர்வாகத்தையும் தன்னிடம் கணக்கு காட்டும்படி கேட்பதால் இது முடியவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஆனால் சீமான் புலம்பெயர் தேசியவாதிகளிடம், முழு நிதி நிர்வாகத்தையும் தன்னிடம் கணக்கு காட்டும்படி கேட்பதால் இது முடியவில்லை

உண்மையாகவா? இது எப்போது நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

உண்மையாகவா? இது எப்போது நடந்தது?

கிட்டதட்ட 5 வருடங்கள் முன்பு. இங்கே எழுதும் சிலருக்கு என்னை விட இதன் விபரங்கள் அதிகம் தெரியும் என நினைக்கிறேன். 

புலம்பெயர் அமைப்புகள் சீமானை அணுகி ஒன்றாக பயணிக்க முயற்சித்தால். அவர் வைக்கும் நிபந்தனைகள்.

1. பிரபாகரன் காலத்தில் சேர்ந்த நிதி எவ்வளவு - அதை இனி என் வசம் ஒப்படையுங்கள்.

2. மேலதிகமாக நிதியை திரட்டி நாம் தமிழருக்கு தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

புலம்பெயர் நாட்டில் ஆங்காங்கே தனியார் வசமாக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் போராடடத்திற்கு வழங்கிய பணம் பற்றி சீமான் கணக்குக் கேட்பது சரியாகப் பட்டாலும், அப்பணத்தினை தனக்குத் தரும்படி அவர் ஏன் கேட்கவேண்டும்? அது தமிழரின் தாயக மீட்பிற்காகச் சேர்க்கப்பட்ட பணமல்லவா? 

இப்பணத்தினைச் சீமானிடம் கொடுப்பதால் ஈழத்தமிழருக்குக் கிடைக்கவிருக்கும் நண்மை என்ன? 

இப்பணத்தினைக்கொண்டு அவர் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியுமா? அல்லது நாம் தமிழர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க உத்தேசிக்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

பின்லாந்தில் போன கிழமை ஒரு சம்பவம் நடந்தது

பின்லாந்தில் தேசிய செயற்பாடுகளில் தொடர்புபட்டவர்களைத் தவிர்த்து ஒருசில  நாங்களும்தான் என செயற்படுபவர்கள் நிகழ்சி ஒன்றை நடாத்தத் திட்டமிட்டு அந்நிகழ்சியில் பட்டமன்றத்தில் வாதாட  நாம்தமிழர் பின்லாந்துக்கிளைத் தலைவரை அணுக, அவரும் அதற்கு இணங்க அடுத்தநாளே அவரது தலைமைப்பதவி பறிக்கப்பட்டுவிட்டது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் மற்றும் நிகழ்சிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எல்லாம் ஆர்வக்கோளாறுதான் காரணம்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் தேவையில்லாமல் ஈழத்தமிழரை முன்வைத்துப் புலம்பெயர்தேசங்களில் அமைப்புகளை ஏற்படுத்தி மூகுடைபடுகிறார்.

காரணம் புலம்பெயர் தேசங்களில் நாம் தமிழருக்கு அமைப்பு ரீதியாகச் செயற்படுபவர்களில் அனேகர் புலிகள் முள்ளிவாய்காலுக்கு முன்பு பலமாக இருக்கும்போதே ஏதோ ஒரு காரணத்துக்காக புலிகளை விமர்சித்தவர்கள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களை விமர்சித்தவர்களாவார்.

தவிர சீமான் நாம் தமிழர் கட்சியின் வெளிநாட்டுக்கிளைகளுக்கு இலங்கைத்தமிழர்களைப் பொறுப்பாளர்களாக நியமிப்பது வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டுச் சகோதரர்களது ஆதரவை இழக்க ஏதுவாகவிருக்கும்.

காரணம் பொதுவாகவே இலங்கைத் தமிழனைக் கண்டால் புலம்பெயர்தேசங்களில் வாழும் தமிழ்நாட்டுச் சகோதரர்கள் கால்தெறிக்க ஓடுவதுதான் இப்போது வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

புலம்பெயர் நாட்டில் ஆங்காங்கே தனியார் வசமாக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் போராடடத்திற்கு வழங்கிய பணம் பற்றி சீமான் கணக்குக் கேட்பது சரியாகப் பட்டாலும், அப்பணத்தினை தனக்குத் தரும்படி அவர் ஏன் கேட்கவேண்டும்? அது தமிழரின் தாயக மீட்பிற்காகச் சேர்க்கப்பட்ட பணமல்லவா? 

இப்பணத்தினைச் சீமானிடம் கொடுப்பதால் ஈழத்தமிழருக்குக் கிடைக்கவிருக்கும் நண்மை என்ன? 

இப்பணத்தினைக்கொண்டு அவர் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியுமா? அல்லது நாம் தமிழர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க உத்தேசிக்கிறார்களா? 

உங்கள் கேள்விகளுக்கும், நாதத்தாற்ற சிரிப்புகளுக்குக்குமான விடையின் ஒரு பகுதி மேலே எழுஞாயிரால் எழுதப்பட்டுள்ளது.

புலம் பெயர் தேசத்தில் தங்கியுள்ள புலிகளின் பணம் எப்படி கையாளப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கள் இருக்கலாம். அதை சிலர் ஆட்டையை போடுமிறார்கள் என்பதிலும் பொய் இல்லை, ஆனால் அதை ஏன் சீமானுக்கு கணக்கு காட்ட, கொடுக்க வேண்டும்?

சீமானின் மீது சந்தேகம் எழ இன்னுமொரு காரணம் இது. பல மிக தீவிர, புலி அபிமானிகளிடம், சீமானுடனான அவர்களின் அனுபவம் பற்றி கேட்டறிந்தே நான் எழுதுகிறேன்.

பையன்26 போல் அடிமட்ட தம்பிகளை வைத்தோ அல்லது நாதம், இசை போல முகபுத்த நடவடிக்கைகளை வைத்தோ நான் சீமானை அவதானிக்கவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அதை ஏன் சீமானுக்கு கணக்கு காட்ட, கொடுக்க வேண்டும்?

சீமானின் மீது சந்தேகம் எழ இன்னுமொரு காரணம் இது. பல மிக தீவிர, புலி அபிமானிகளிடம், சீமானுடனான அவர்களின் அனுபவம் பற்றி கேட்டறிந்தே நான் எழுதுகிறேன்.

இப்படியொரு பக்கம் இருப்பது எனக்குத் தெரியாது.

ஈழத்தமிழர்கள் விரும்பிக் கொடுப்பதற்கும், புலிகள் இருக்கும்போது சேர்த்ததுபோல எனக்கும் சேர்த்துத் தாருங்கள் என்று கேட்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. 

புலிகளுக்குக் கொடுத்த பணம் எமது தாயகத்தினை விடுவிப்பதற்கானது. அதற்காவே அப்பணம் பயன்படுத்தப்பட்டது.  ஆனால், சீமானுக்குக் கொடுக்கும் பணம் நேரடியாக எமக்கு எந்தவிதத்தில் பயன்படப்போகிறது? இப்பணத்தினைக் கொண்டு சீமான் செய்ய நினைப்பது என்ன? தனது அரசியலுக்காக பணம் தாருங்கள் என்று கேட்கிறாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பத்த வைச்சிட்டியே பறட்டை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இப்படியொரு பக்கம் இருப்பது எனக்குத் தெரியாது.

ஈழத்தமிழர்கள் விரும்பிக் கொடுப்பதற்கும், புலிகள் இருக்கும்போது சேர்த்ததுபோல எனக்கும் சேர்த்துத் தாருங்கள் என்று கேட்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. 

புலிகளுக்குக் கொடுத்த பணம் எமது தாயகத்தினை விடுவிப்பதற்கானது. அதற்காவே அப்பணம் பயன்படுத்தப்பட்டது.  ஆனால், சீமானுக்குக் கொடுக்கும் பணம் நேரடியாக எமக்கு எந்தவிதத்தில் பயன்படப்போகிறது? இப்பணத்தினைக் கொண்டு சீமான் செய்ய நினைப்பது என்ன? தனது அரசியலுக்காக பணம் தாருங்கள் என்று கேட்கிறாரா? 

நான் அறிந்த வரையில் தாந்தான் புலிகளின் இயற்கையான தொடர்சி எனவே அதே கேள்வியற்ற பங்களிப்பை தர முடிந்தால் தாருங்கள் இல்லாவிடின் கிளப்ம்புங்கள் என்பதே அவரின் நிலைப்பாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.