Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, plant, sky, shoes, grass, outdoor and nature

என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை  பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி.

காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும்.  நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி  இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.

எப்போதுமே மற்றவர்களுக்காக பலதையும் விட்டுக்கொடுக்காத என் மனம் இதற்கும் இசைவதில்லை. அதனால் காலை ஆறுமணிக்கே எழுந்து தனியாகச் சென்று நடக்கவாரம்பித்துவிடுவேன். அநேகமாக அந்த நேரம் ஒரு இரண்டு மூன்றுபேர் தான் தூரத்தில் நடந்துகொண்டிருப்பார்கள். அது மனதுக்கு ஒரு துணிவையும் கொடுக்கும். மழைக்காலங்களில் சோம்பலில் வழிந்தபடி படுத்துக்கிடப்பதையே பலரும் விரும்புவதால் நானும் சிலநேரம் கடமை தவறாது  எழுப்பும் மணிக்கூட்டை நிறுத்திவிட்டுப் படுத்தாலும் என்கணவர் எழும்பு என்று அரியண்டப்படுத்தியே எழுப்பிவிடுவார்.

அவர் ஒண்டும் என்னில உள்ள கரிசனையால் என்னை எழுப்புவதில்லை. நான் ஆறுக்கு எழும்பி அவருக்கு வேலைக்குச் சாப்பாடு கட்டிவைத்து, பாலைக் காய்ச்சி தண்ணி எதுவும் கலக்காமல் கோப்பி போட்டு வைத்துவிட்டு நடையைக் கட்டுவேன். முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.

கொரோனாக் காலத்தில ஆறு மணிக்கு எழும்பிப் போனால்த்தான் குறைவான ஆட்கள் நடந்துகொண்டிருப்பினம். ஒரு ஏழு மணிக்குப் போனால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று எக்கச்சக்கமான சனம். என்னடா இது என்று அடுத்தநாள் முகக் கவசம் அணிந்துகொண்டு போனால் என் வேக நடைக்கு முகக்கவசம் நனைந்து மூச்சும் அடைப்பதுபோல் இருக்க, அடுத்த நாளில் இருந்து ஆறுமணிக்கே எழுந்து நடப்பது. இல்லையென்றால் படுத்தே இருப்பது என்றாகிவிட மனிசனின் புறுபுறுப்பு அதைவிட அதிகமாகிப் போனது. வேலைவெட்டியும் இல்லை. உள்ள சாப்பாடெல்லாம் செய்து யூடியூப்பில் போடுறன் எண்டு சாப்பிட்டுத் தள்ளுறாய். உடம்பு வைக்கப் போகுது எழும்பு எழும்பு என்று ...... அந்தக் குத்தல் கதையைக் கேட்பதிலும் எழும்பி நடக்கிறதே மேல் என்று நடக்கப் போக புதிதாக எனக்கொரு பிரச்சனை அங்கேயும்.

கூடுதலாக அங்கே நடப்பவர்கள் இடதுபக்கமாகவே நடந்து போக ஒரு சிலர்தான் எதிர்ப்பக்கமாக வருவினம். நான் யாரும் இடப் பக்கமாகத் தூரத்தில் வருவது தெரிந்தால் வலப்பக்கமாக மாறி நடக்கத் தொடங்குவன். என் கண்கள் பார்க்கின் தூரத்தை மனதால் அளந்து அவர்கள் அதிக தூரம் என்றால் நான் மாறி நடப்பன். நான் அதிக தூரம் நடந்திருந்தால் அதே பக்கமாக எள்ளளவும் நகராமல் நடந்துகொண்டிருப்பன். வாறவை என்னை விலத்தி நடக்க வேண்டியதுதான். அவள் ஒருத்தி இப்ப புதிதாக நடக்கவாரம்பித்து நான் போகும் நேரத்துக்கு வருவதுமில்லாமல் நான் நடக்கும் இடப்பக்கமாகவே எதிர்ப்புறம் நடந்து வருகிறாள்.

ஒருநாள் இரு நாட்கள் புதியவள் என்பதனால் விட்டுக்கொடுத்து நான் விலகி நடந்தால் அவவுக்கு தான்பெரிய மகாராணி எண்ட நினைப்பு. தொடர்ந்து ஒரு வாரமா அந்தப் பக்கமிந்தப்பக்கம் போகாமல் அதே நடை.  நானும் எத்தனை நாள் தான் பொறுமையாய் நடப்பது ? இண்டைக்கு இவவை ஒருகை பார்ப்பதாக மனதில் எண்ணிக்கொண்டு குனிந்ததலை நிமிராமல் நடந்துகொண்டிருக்க, எனக்கு முன்னாள் அவள் வருவதை என் கண்கள் கண்டுகொண்டவுடன் அவள் என்னை இடித்துவிட்டுச் சென்ற இடியில் என் தேசம் குலுங்கிப் போக மனதில் கோபம் கோபுரம்கட்ட ஆரம்பிச்சிட்டுது.

இரண்டாவது சுற்று நடக்கும்போதும் பார்த்தால் நான் அதே பக்கமாக அதிக தூரம் நடந்திருக்க இடையில் இருந்த சிறிய நடை பாதையில் வந்து நான் நான் நடந்துவந்துகொண்டிருந்த பாதையில் ஏறியவளுக்கு நான் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததுதானே இருக்கவேணும். ஆனால் அவவோ எதுவும் தெரியாததுபோல் நடந்து வர, நானும் மற்றப்பக்கம் மாறி நடக்காமல் தொடர்ந்து நடக்க இன்னும் ஒரு மூன்று மீற்றர் தூரம்தான் இருக்கு அவளுக்கும் எனக்கும். என் மனம் இம்முறை விட்டுக்கொடுக்க முடியவே முடியாது எண்டு அடம்பிடிக்க, அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .

சுமே கில்லாடிதான் 😀 கால்தடம் போடத்தெரியுமா, அடுத்த முறை பாவியுங்கள் 🤣

"அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை " 🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

அதுதானே .. எங்கட யாழ்கள செல்லப்பிள்ளையுடன் என்ன சேட்டை😡

 எங்கே எம் யாழ்கள தடகள வீரர்கள், அடுத்தமுறை சுமே நடக்கும் போது மூன்று சுற்று பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

சுமே கில்லாடிதான் 😀 கால்தடம் போடத்தெரியுமா, அடுத்த முறை பாவியுங்கள் 🤣

"அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை " 🤔🤔🤔

கால்த்தடம் நல்லாய் போடுவன். ஆனா சட்டச்சிக்கல் ஏதும் வந்தாலும் எண்டுதான் ........

22 hours ago, suvy said:

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

அதுதான் எனக்கும் விளங்கேல்லை அண்ணா

பச்சைகள் தந்த சுபேஸ், சுவி அண்ணா, குமாரசாமி ஆகியோர்க்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வல்வை சகாறா said:

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேண்டும்......"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது".   😎

  • கருத்துக்கள உறவுகள்

கையில் உள்ள தண்ணீர் போத்தலில் இருந்து அபிஷேகம்   செய்துவிடுங்கோ   😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேண்டும்......"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது".   😎

அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

Vandu Murugan Vadivelu Politicians Comedy- Vakkil Vandu Murugan GIF | Gfycat

ஏன் .....நல்லாத்தானே போயிட்டிருக்கு.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி,

வீண் வம்பு ஏன்?

அவளுக்கு கொரோனா கிரோனா இருந்து உங்க மேல ஒரு இருமல் இருமிவிட்டால்!!!!

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேண்டும்......"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது".   😎

சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் உங்களைப்பற்றி அவவும் இப்போ இன்னொரு தளத்திலே கதை எழுதி இருப்பாவோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வல்வை சகாறா said:

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

design அப்பிடி  😉

  • கருத்துக்கள உறவுகள்

அது இரும்பு பெண்மணி தட்சரின் வாரிசாக தான் இருக்கும். பஞ்சு மூட்டைகளை கண்டு இரும்பு ஏன் விலத்தணும். (ஏதோ நம்மால முடிஞ்சது 😜)

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 10:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.

எனக்கு இதில அந்த இடிபாடு எல்லாம் பெரிசாப் படல்ல. அதெல்லாம் சர்வசாதாரணம். ஆனால்.. இவாட.. இந்த மனுசனின் நிலைமையை நினைச்சா தான்..

நாமளும் முந்தி நாங்களாவே விடிய எழும்பி.. ------- ரீ கப்பசீனோ.. எல்லாம் போட்டுக் குடிச்சு.. நூடில்ஸ் எல்லாம் போட்டு சாப்பிட்டு.. தான் யுனிக்கோ.. வேலைக்கோ கிளம்பிறது. இப்ப மனிசி இருக்குத்தானே (அம்மா சமைச்சு சாப்பாடு தருவாங்க தானே என்ற அந்தப் பழைய பள்ளிக்கால.. நினைப்பு வந்திட்டு) என்ற ஒரு துணிவில்.. கொஞ்சம் தாமதமாக எழும்பி.. குளிச்சுக் கிழிச்சு வெளிக்கிட.. சாப்பாடு.. ரீ எல்லாம் ரெடியாக இருக்கும். இப்ப அதுக்கு பழகிட்டு.

இவாட கதையைப் பார்த்தப்புறம்..நாங்களும்.. ஒரு காலத்தில்.. மீண்டும்.. அந்தப் பழைய நிலைமைக்குப் போகனுமா.. என்றப்போ.. கொஞ்சம்.. கலவரமாத்தான் இருக்கு. 

அதுசரி.. இவா ஏன் இதுகளை.. இதுக்க திணிக்கிறது.. எத்தின மனுசன்மார்ர மனுசிமாரும்.. யாழை வாசிப்பினம் தானே. ஓசில ஐடியாக் கொடுக்கிறது.. பதட்டப்படுறது மனுசன்மாராச்சே. எதுக்கும் உசாராத்தான் இருக்கனும். 😃😃

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2020 at 00:32, வல்வை சகாறா said:

சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

இப்படி கேட்கப்படாது 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 16:31, வல்வை சகாறா said:

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

அறையைப் பூட்டிப்போட்டும் இருந்து  யோசிச்சும் விளங்கவே இல்லை 😎

On 27/8/2020 at 16:41, நிலாமதி said:

கையில் உள்ள தண்ணீர் போத்தலில் இருந்து அபிஷேகம்   செய்துவிடுங்கோ   😄

நான் தண்ணீர் மட்டுமல்ல போனைக் கூடக் கொண்டு போவதில்லை நடக்கும்போது. அப்படியே நின்மதியா நடப்பன்.

On 27/8/2020 at 17:32, வல்வை சகாறா said:

சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

பெண்ணேதான் 😃

On 27/8/2020 at 16:42, சுவைப்பிரியன் said:

அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

 எனக்கும் அதுதான் சந்தேகம் ????😀

On 27/8/2020 at 17:36, முதல்வன் said:

அக்கோய் உங்களைப்பற்றி அவவும் இப்போ இன்னொரு தளத்திலே கதை எழுதி இருப்பாவோ 🤣

அட அதை யோசிக்காமல் அவசரப்பட்டிட்டனே 🤣

On 28/8/2020 at 15:52, Sabesh said:

design அப்பிடி  😉

😀😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

அது இரும்பு பெண்மணி தட்சரின் வாரிசாக தான் இருக்கும். பஞ்சு மூட்டைகளை கண்டு இரும்பு ஏன் விலத்தணும். (ஏதோ நம்மால முடிஞ்சது 😜)

இதுக்காகவே கண்டும் காணாமல் உங்களை இடிச்சிட்டுப் போகவேணும் 😀

11 hours ago, nedukkalapoovan said:

அதுசரி.. இவா ஏன் இதுகளை.. இதுக்க திணிக்கிறது.. எத்தின மனுசன்மார்ர மனுசிமாரும்.. யாழை வாசிப்பினம் தானே. ஓசில ஐடியாக் கொடுக்கிறது.. பதட்டப்படுறது மனுசன்மாராச்சே. எதுக்கும் உசாராத்தான் இருக்கனும். 😃😃

சிரிச்சு முடியேல்லை. சாகும் வரையும் பெண்களைக் கொண்டு வேலைவாங்கத்தான் உந்த ஆண்கள் கலியாணம் கட்டுறது.

On 27/8/2020 at 17:09, goshan_che said:

அன்ரி,

வீண் வம்பு ஏன்?

அவளுக்கு கொரோனா கிரோனா இருந்து உங்க மேல ஒரு இருமல் இருமிவிட்டால்!!!!

அதையும் ஒரு எருமை செய்ததுதான். ஓடிக்கொண்டு இருந்தவன் எனக்கு கிட்ட வந்து தும்மின தும்மில மடையா எண்டு திட்டியும் போட்டன். ஆனா நாலுநாள் வரைக்கும் நெஞ்சிடிதான்.  😀

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிரிச்சு முடியேல்லை. சாகும் வரையும் பெண்களைக் கொண்டு வேலைவாங்கத்தான் உந்த ஆண்கள் கலியாணம் கட்டுறது

சாகும் வரைக்கும் ஆண்களும் தானே வீட்டுக்கு மாடா உழைக்கினம். அவை ஏன் இப்படி சுயநலமாச் சிந்திக்கிறதில்லை.. அப்படின்னு பெண்கள் ஏன் சிந்திக்க மறுக்கினம். 

உயிரியல் ரீதியிலும் பெண் தான் குழந்தைக்கு.. உணவூட்ட வசதி படைக்கப்பட்டிருக்கு.. ஆணுக்கில்லையே. 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

சாகும் வரைக்கும் ஆண்களும் தானே வீட்டுக்கு மாடா உழைக்கினம். அவை ஏன் இப்படி சுயநலமாச் சிந்திக்கிறதில்லை.. அப்படின்னு பெண்கள் ஏன் சிந்திக்க மறுக்கினம். 

உயிரியல் ரீதியிலும் பெண் தான் குழந்தைக்கு.. உணவூட்ட வசதி படைக்கப்பட்டிருக்கு.. ஆணுக்கில்லையே. 😃

பிள்ளைக்கு உணவூட்டத்தானே. அதைவிட்டு பேரப்பிள்ளைகள் கண்டபின்னும் கணவன், பிள்ளைகளுக்கு ஆலவட்டம் பிடிக்கவேணுமோ???? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளைக்கு உணவூட்டத்தானே. அதைவிட்டு பேரப்பிள்ளைகள் கண்டபின்னும் கணவன், பிள்ளைகளுக்கு ஆலவட்டம் பிடிக்கவேணுமோ???? 

இப்படியே சும்மா வாயடிச்சிட்டு இருங்கோ. கடைசியில் பிள்ளையும் கவனிக்காது.. உங்கட புறுபுறுப்பு தாங்கேலாது கணவனும் தனிமையை தேடத்தொடங்கிடுவார்.. இல்ல நாய்க் குட்டிகள் வாங்கி விளையாடுவார்.. நீங்கள்.. தனிமையில் வெறுமையில் தவிக்க வேண்டியான்.

இதையே கணவனுக்கு ஒத்தாசையாக இருந்து.. அவரின் துணையோடு உலகம் சுற்றுவது பற்றி யோசிச்சுப் பாருங்கள்... எவ்வளவு அழகாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்க புது குடித்தனக்காரர் படுற பாடு என்றால் 😂
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2020 at 17:01, nedukkalapoovan said:

இப்படியே சும்மா வாயடிச்சிட்டு இருங்கோ. கடைசியில் பிள்ளையும் கவனிக்காது.. உங்கட புறுபுறுப்பு தாங்கேலாது கணவனும் தனிமையை தேடத்தொடங்கிடுவார்.. இல்ல நாய்க் குட்டிகள் வாங்கி விளையாடுவார்.. நீங்கள்.. தனிமையில் வெறுமையில் தவிக்க வேண்டியான்.

இதையே கணவனுக்கு ஒத்தாசையாக இருந்து.. அவரின் துணையோடு உலகம் சுற்றுவது பற்றி யோசிச்சுப் பாருங்கள்... எவ்வளவு அழகாக இருக்கும். 

 நண்பிகளுடன் கூட உலகம் சுற்றிப்பார்க்கலாம். 😃

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நண்பிகளுடன் கூட உலகம் சுற்றிப்பார்க்கலாம். 😃

இப்போ இப்படி ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கிறது.. இங்கும் சிலர்..ஒரு குழுவாக கரிபியன் போறது சிங்கப்பூர் மற்றும் யூறோப் ..ஆடு மாடு மாதிரி கட்டாக் காலிகள் மாதிரிதிரிய த் தொடங்கினால் வீடு வாசல் என்னத்துக்கு.

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.