Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.!

murali.jpg

கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகள் இணையத் தயாரில்லை என கூறப்பட்ட நிலையில் தாம் இணைந்து செயற்பட தயராக இருப்பதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது. இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பால் பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் வட மாகாண சபையினால் மறைக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து மாசடைந்த உண்மைகளை அம்பலப் படுத்தியவன் என்பதையும் அப்போது இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அமைச்சர் நன்றாக அறிவார்.

மேலும் நான் கிழக்கை சாராதவனாக இருப்பதானால் நல முரண்பாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் நடுநிலையாக சிந்திக்க முடியும். நான் தொடர்ச்சியாக மருத்துவத்துக்கும் அப்பாலும் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் கிழக்கில் கூட கடந்த காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு துறைசார் நிபுணராக கல்குடாவில் மதுபானசாலை இயங்குவதற்கு போதுமான நீர்வளம் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்து இருந்ததையும் அனைவரும் அறிவர். இந்தப் பின்புலத்தில் அமைச்சரின் சாதகமான முடிவையும் நியமனக் கடிதத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் .

 நன்றி.

Dr முரளி வல்லிபுரநாதன்
MBBS (Jaffna), PGD (Population Studies), MSc (Community Medicine), MD (Community Medicine), FCCP (Sri Lanka), FRSPH (UK)
சான்றளிக்கப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர்
வருகை நிலை விரிவுரையாளர், யாழ் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/83034/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.!

முரளி இந்த வேலையை செவ்வன செய்யக்கூடியவர். நியமிப்பார்களா? 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முரளி. இதுக்கு என் கிழக்கில் இருந்து இன்னும் ஒருவர் கூட வரவில்லை என்று பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.

உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, யாழ் பல்கலைக்கழகழகத்தில் இருந்து  நிச்சயம் உதவுவார்கள்.

முதலில், இங்கு கிழக்கு பாடும் பதிவாளர்கள் பதில் சொல்லுங்கள். 

இங்கே கிழக்கு, கிழக்கு என்றும், தமது சொந்த நலனுக்கு கிழக்கு போராளிகளை பலியாடு ஆகியும் உள்ளவராகின் உறவு என்று சொல்பர்களுக்கு கிழக்கை பற்றி கதைப்பதத்திற்கு   அருகதை இனி இல்லை.

ஏன் கிழக்கின் தமிழர்களில் படித்தவர்கள் அமரும் புத்தி ஜீவிகள் என்போருக்கும் அருகதை இல்லை.

அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட அபகரிப்பு அங்கிருக்கும் தமிழ் மக்களின் நிலத்தின் இருப்புக்கு வருகிறது, கிழக்கு என்று கூவுவோர் கம் என்று அமசடக்கி கொண்டு இருக்கிறார்கள்.

அல்லது இந்த அபகரிப்பில், வெளி பயிரை மேய்ந்தது போல, அவர்களின் அனுபவத்தில் (கிழக்கு போராளிகளையும் மக்களையும் பாலிடாது ஆக்கியது) முன்பு போல காசு, பதவி  பார்க்க காத்திருக்கிறார்கள் போலும், இதில் கிழக்கு துறை சார் படித்தவர்கள், புத்தி ஜீவிகளும்  அடக்கம்.  

முஸ்லிம்களுக்கு பூர்விகம் இல்லை, மற்றும் பற்றும் இல்லை, ஏனெனில் அவர்கள் அகதிகளாக வந்த பொது தமிழ் மன்னர்கள், அவர்களின் நிலையை கண்டு அபாயம் அளித்தும், நன்றி இல்லை. மேலேயும் நிலம் அவர்களை பொறுத்தவரை பணப் பெறுமதியுடன் முடிந்து விடுகிறது.  
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nilmini said:

முரளி இந்த வேலையை செவ்வன செய்யக்கூடியவர். நியமிப்பார்களா? 

உங்களுக்கு இவரை தெரியுமா நில்மினி....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நன்றி முரளி. இதுக்கு என் கிழக்கில் இருந்து இன்னும் ஒருவர் கூட வரவில்லை என்று பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.

உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, யாழ் பல்கலைக்கழகழகத்தில் இருந்து  நிச்சயம் உதவுவார்கள்.

முதலில், இங்கு கிழக்கு பாடும் பதிவாளர்கள் பதில் சொல்லுங்கள். 

இங்கே கிழக்கு, கிழக்கு என்றும், தமது சொந்த நலனுக்கு கிழக்கு போராளிகளை பலியாடு ஆகியும் உள்ளவராகின் உறவு என்று சொல்பர்களுக்கு கிழக்கை பற்றி கதைப்பதத்திற்கு   அருகதை இனி இல்லை.

ஏன் கிழக்கின் தமிழர்களில் படித்தவர்கள் அமரும் புத்தி ஜீவிகள் என்போருக்கும் அருகதை இல்லை.

அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட அபகரிப்பு அங்கிருக்கும் தமிழ் மக்களின் நிலத்தின் இருப்புக்கு வருகிறது, கிழக்கு என்று கூவுவோர் கம் என்று அமசடக்கி கொண்டு இருக்கிறார்கள்.

அல்லது இந்த அபகரிப்பில், வெளி பயிரை மேய்ந்தது போல, அவர்களின் அனுபவத்தில் (கிழக்கு போராளிகளையும் மக்களையும் பாலிடாது ஆக்கியது) முன்பு போல காசு, பதவி  பார்க்க காத்திருக்கிறார்கள் போலும், இதில் கிழக்கு துறை சார் படித்தவர்கள், புத்தி ஜீவிகளும்  அடக்கம்.  

முஸ்லிம்களுக்கு பூர்விகம் இல்லை, மற்றும் பற்றும் இல்லை, ஏனெனில் அவர்கள் அகதிகளாக வந்த பொது தமிழ் மன்னர்கள், அவர்களின் நிலையை கண்டு அபாயம் அளித்தும், நன்றி இல்லை. மேலேயும் நிலம் அவர்களை பொறுத்தவரை பணப் பெறுமதியுடன் முடிந்து விடுகிறது.  

கிழக்கில் இருக்கிறார்கள் ஆனால் கலந்துகொள்ள பயப்படுவார்கள் சில நேரம்  பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் கூட இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு இவரை தெரியுமா நில்மினி....

நல்லாவே பழக்கம் குமாரசாமி அண்ணா. எனது brother in law வின் பள்ளிக்கால நண்பன். அமெரிக்கா வரும்போதெல்லாம் தங்கை வீட்டில்தான் தங்குவார். எமது வீட்டுக்கும் வந்துள்ளார்.  WhatsApp இல் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு. நல்ல மனிதர். 

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது செய்து துளையட்டும் என்று விடும் காலமல்ல.

முரளியின் முயல்வுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் இருக்கிறார்கள் ஆனால் கலந்துகொள்ள பயப்படுவார்கள் சில நேரம்  பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் கூட இருக்கலாம். 

முதலாவது, வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல் துறைகளில் துறைசார் நிபுணத்துவம் கிழக்கில் இருந்தால் அது அரும்பி, துளிர்க்கும்  நிலையிலேயே இருக்கிறது என்பதும், இதனால் பொதுவான மட்டத்தில் இந்த துறைகள் பற்றிய அக்கறை மற்றும் அவைகளின் வீச்சுகள், தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக இல்லை.

வடக்கில் இருக்கும் வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல் துறை நிபுணத்துவத்துவமே  போதுமான அளவு  நிறுவனமயப்படுத்தப்பட்டதாக இல்லை. இதை சிங்களம் வேண்டுமென்றே அழுத்தி  வைத்து இருந்தாலும், வடக்கில் பல ஆபத்தான இடைவெளிகள் ஊடாக வளர்க்கப்படுகிறது. 

சிறு உதாரணம், இந்த யாழ் களத்தில் எத்தனை வரலாறு, தொன்மை பற்றிய வாதங்களில், தாம் கிழக்கு என்று அடையாள படுத்துவோர் பங்கேற்றப்பதில்லை, அல்லது அப்படி ஏற்றால் அது மிகவும் குறைவு. வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல், எனது துறையும் அல்ல, அநேகமாக பங்கேற்றப்பவர்களின் துறையும் அல்ல. 

இது யதார்த்தம், கூட்டி குறைத்தோ, யாரவது பிரதேசவாதம் என்று அடையாளப்படுத்துவதற்கோ இங்கு இடமில்லை.

அப்படி இருந்தாலும், கிழக்கை பூர்விகமாக உள்ளவர்கள் தாமாக இதற்கு முன்வந்து இருக்க வேண்டும். வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல் துறை சார் நிபுணத்துவம் வடக்கில் இருந்து தானாகவே (அனாமதேயமாக) வந்திருக்கும். 

சிங்களம் செய்வது,  இந்த நில அபகரிப்புக்கு நியாயாதிக்க (legitimacy) முகப்பை காட்டுவதற்காக என்பது வெளிப்படை.  ஆனல், அதை கேள்விக்கு உள்ளாக கூடிய வாய்ப்பை இது வழங்குகிறது.

அதை தவிர, இப்பொது இவை பற்றி பாராளுமன்றத்தில், தமிழரின் மரபுரிமை என்ற அடிப்படையில்,  வாதிப்பதற்கு  விபரம் அறிந்த, பயமற்ற குரல்களும் இருக்கிறது. 

இத்தகைய சந்தர்ப்பத்திலும், கிழக்கை பூர்விமாக கொண்டோர் எவராவது ஒருவருமே இதற்கு முன்வராததில், வேறு எதாவது சொந்த நலன்கள், அல்லது பக்சக்களின் கிழக்கு தமிழ் முகவர்களும் தடுக்கிறார்களா என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

திரு முரளி அவர்கள் கிழக்குக்கான தொல்லியல் துறையின் செயலணியில் இணைவாராக இருந்தால் அது தமிழ்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நியமனத்தை கிழக்குக்குக் கொடுத்ததைவிடச் சிறப்பானதாகும். 

நில்மினி நீங்களும் அவருக்கு உக்கமளியுங்கள். நல்லது நடக்கட்டும்.

இன்னுமொரு விடையம் சிங்களம் இந்தவிடையத்தில் ஏற்கனவே சில முடிவுகளை எடுத்துவிட்டே அதாவது கிழக்குடன் வடக்கின் சிலபாகங்களையும் தம் கைவசப்படுத்தும் திட்டத்துக்கான காய் நகர்த்தலே தொல்பொருள் ஆய்வும் அதற்கான செயலணியும். ஆகவே நாம் யாராக இருந்தாலும் சிலவேளை இவ்விடையத்தில் தோற்றுப்பொக இடமுண்டு எனினும் முயன்று தோற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பல்கலைக்கழகம் இருக்கிறதே, அதில் உள்ள விரிவுரையாளர்களும் முன் வரவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

சிங்களம் இந்தவிடையத்தில் ஏற்கனவே சில முடிவுகளை எடுத்துவிட்டே அதாவது கிழக்குடன் வடக்கின் சிலபாகங்களையும் தம் கைவசப்படுத்தும் திட்டத்துக்கான காய் நகர்த்தலே தொல்பொருள் ஆய்வும் அதற்கான செயலணியும். ஆகவே நாம் யாராக இருந்தாலும் சிலவேளை இவ்விடையத்தில் தோற்றுப்பொக இடமுண்டு எனினும் முயன்று தோற்போம்.

உண்மை. தொல் பொருளாராய்ச்சியின் குறிக்கோளே, தமிழன் இந்தப் பூமிக்கு சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதே. அது நடக்கும். விக்கினேஸ்வரன் ஐயாவின் பேச்சும், முரளியோடு சேர்ந்து அவருக்கு உதவியாக யாழ், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்கள், தமிழ் அறிவாளர், இங்கு வரலாறு கதைக்கும் விரிவுரையாளர்கள் செயற்பட்டால்; சிங்களவரின் திட்டத்தை முறியடிக்கலாம். யார் மூத்த குடிகள், எது பழமையான மொழி என்பதை அவர்கள் வாயாலேயே வேறு வழி இன்றி ஏற்றுக்கொள்ள வைக்கலாம். இல்லையாயின் தமிழ் தே. கூட்டமைப்பு போல நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று வாயைப்பொத்தி, கண்ணை மூடிக்கொண்டு பாழுங்கிணற்றில் விழுவோம். எழுந்திருக்க முயன்று பாத்து விழுவதில் அவமானம் ஒன்றும் இல்லை. 

முரளியின் துணிச்சலுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். முரளி துணிவோடு இயங்க வேண்டுமானால், அவர் கையோடு பல கைகள் இணைய வேண்டும். இல்லையாயின் அவர் கை முடக்கப்படும் சாத்தியமுமுண்டு. டக்கியர் அதிகாரம் எவ்வளவு   என்பதும் தெரியும். வாழ்க்கை என்பது போராட்டம் போராடித்தான் பாப்போமே! 

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் முரளி உண்மையிலேயே அரசியல் சாராமல் இயங்குவாராயின் பாராட்டுக்கள் 

10 hours ago, putthan said:

கிழக்கில் பல்கலைக்கழகம் இருக்கிறதே, அதில் உள்ள விரிவுரையாளர்களும் முன் வரவில்லையா

 இணைத்துக் கொள்ள பட்டாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு கிடைக்காது என்று நினைக்கிறார்கள் 
 
இன்று அவர் டக்லஸை சந்தித்து பேசியதை முக புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

16 hours ago, nilmini said:

நல்லாவே பழக்கம் குமாரசாமி அண்ணா. எனது brother in law வின் பள்ளிக்கால நண்பன். அமெரிக்கா வரும்போதெல்லாம் தங்கை வீட்டில்தான் தங்குவார். எமது வீட்டுக்கும் வந்துள்ளார்.  WhatsApp இல் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு. நல்ல மனிதர். 

நானும் இவரை சந்தித்துள்ளேன் மிகவும் பணிவான மனிதர். அருமையான மனிதர், புகைபடங்கள் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த தொல்பொருள் செயலணியினால் கிழக்கில் மட்டும் குறைந்தது 650 தமிழரின் பூர்வீக மத, கலாசார இடங்களும் வணக்கஸ்த்தலங்களும் சிங்கள பெளத்தர்களுடையவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்நெட்டில் வெளிவந்த ஆக்கம் ஒன்றினை நான் இங்கே இணைத்தபோது கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காகவே சிங்களவர்களுடன் சேர்கிறோம் என்று நியாயம் கற்பித்த எவருமே அதுபற்றிக் கரிசணை காட்டவில்லை. ஆனால், அப்படி நடப்பதை நியாயப்படுத்தி, பெளத்த நாடு, ஆகவே எதுவும் செய்யமுடியாது. சம்மந்தனும் சுமந்திரனும் செய்ய முடியாததை கருணாவோ பிள்ளையானொ செய்யப்போவதில்லை என்று எழுதினார்கள். அவர்களைப்பொறுத்தவரை இது முடிந்த விடயம் என்பதுதான். தாமும் முயல்வதுபற்றிச் சிந்திக்கவில்லை, மற்றையவர்களும் முயற்சிப்பதைத் தடுக்க முனைந்தார்கள். இதுபற்றிய அவர்களின் சில கருத்துக்கள் கீழே. 

1. "அப்போ அவர்களை அடிச்சு விரட்டலாம் என நினைக்கிறீர்களா இலங்கை பெளத்த தேசமெனவும் பெளத்தத்திற்கே முன்னுரிமை எனவும் அதற்கு அமைச்சும் நிறுவி மகிந்த  இருக்கிறார்  இப்படி காவிகள் சூழந்துள்ள இலங்கையை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது பதிலுக்கு நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்கள் ஆதரித்த பிள்ளையான் ,கர்ணாவால் கேட்க முடியாதா? என 

பழம் பெரும் அரசியல் வாதி சம்பந்தர் ஏன் சுமந்திரன் ஐயாவால் கூட கேட்கமுடியாது  மிகவிரைவில் வடக்கில் கிளிநொச்சியிலும் சின்ன விகாரை ஒன்று கண்டேன் , நைனாதீவு , யாழ்ப்பாணம்  திருகோணமலை இப்படி இடங்களிலும் அவர்கள் குடி கொள்ள தொடங்கி விட்டார்கள்."

2. "வேறு யார் காப்பாற்றி தருவார்கள் என்றாவது சொல்ல முடியுமா, தீபாவளி புஸ்வாணம் சம்மா...? 
இல்ல இனச்சுத்திகரிப்பு சும்மா...? இல்லை  வேட்டியும் சால்வையும் போட்டுகொண்டு இல்ல விழையாட்டு போட்டிகளில் மரதன் ஓடும் சீனியா...?, இல்ல இவர்களின் எசமான் இந்துத்துவ ஹிந்தியாவா...?  
 யாரவது சச்சியை கூப்பிடுங்கப்பா கிறிஸ்தவன் என்றால் மட்டும் தான் கொடிபிடிக்க நெஞ்சில மாஞ்சா இருக்கு போல ?" 

3. "இது சிங்கள நாடென எப்போதே அறிவித்துவிட்டார்கள் இப்ப திருகோணமலையும் அவங்கது ஏன் நாளைக்கு நல்லூரும் அவங்கது என்பார்கள் இது ஒரு புறம் இருக்க அங்கால முபாறக் அப்துல் மஜித் ராவணனன் முஸ்லீமாம் என்ற பிரச்சினையும் ஓடுது 

இந்த நாட்டில பிரச்சினை பிரச்சினையாவே எழுப்புறானுகள் . வடக்கு கிழக்கில் இதேதான் பிரச்சினை யாரும் கண்டுகொள்ளாத போது அம்மானுக்கும் மட்டும் வேண்டுதலா என்ன  அம்பாறையில் இனவிகிதாசாரத்தை கூட்டவே நிலப்பரப்பை அம்பாறைக்குள் அரசு எடுத்துவிட்டது ஆக அப்படிப்பட்ட அரசு தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி அது இது என ஆரம்பித்துள்ளது நாளை இன்னும் பல இடங்கள் கூட பறி போகலாம்  நாம கருத்து எழுதிக்கொண்டே இருப்போம் "

4. "அதைதான் எவன் மூலம் கிடைக்குமோ அவன் மூலம் பார்த்துக்கொள்கிறோம் என்று நாங்கள் சொல்கிறோம் 
ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை ஓட்டியது நீங்கள் ... வக்கீல் இருக்கார் வச்சி செய்வார் என்று எண்டு டயலாக் விட்டுவிட்டு , இப்ப அவரிடம் கேக்கலாமா இவரிடம் கேக்கலாமா என்று கதையடிக்கிறீர்கள்,

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றம் தெரியுமா ...? கேபினட் அமைச்சராக இருந்த ஹாரிஸுக்கு இந்தவிடயத்தில்  காட்சட்டையில் மூச்சா போக வைத்தது யார் என்று தெரியுமா....?
யார் செய்து தனது பலத்தை காட்டினானோ அவனையே அந்த பிராந்திய மக்கள் தெரிவுசெய்வினம்" 

கருணா பிரிந்துசென்றபோது கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளர்கள் அச்சுருத்தப்பட்டார்கள் என்று ஒரு செய்திவந்தது. அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்தவரும் கிழக்குமாகாண விரிவுரையாளர் ஒருவரால் கருணாமூலம் பிரதியிடப்பட்டார். இப்படி வடக்கின் கல்விசார் நிபுணர்களை அகற்றிய கிழக்கு மாகாண புத்திஜீவிகள் தமது மாகாணத்தில் கலாசார பாரம்பரியம் மிக்க பொக்கிஷங்கள் சிங்களத்தால் காவுகொள்ளப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு வாளாவிருப்பது வேதனை. 

கிழக்கும் எமது தாயகமே. சிங்களவர்கள் எம்மைத் தமிழன் என்றுதான் பார்க்கிறானே ஒழிய வடக்கான் கிழக்கான் என்று பார்ப்பதில்லை. எமது கலாசார பொக்கிஷங்கள் எங்கிருப்பினும் அவை பாதுகாக்கப்படவேண்டும். அது கிழக்காக இருந்தாலென்ன, வடக்காக இருந்தாலென்ன.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

இன்று இந்த தொல்பொருள் செயலணியினால் கிழக்கில் மட்டும் குறைந்தது 650 தமிழரின் பூர்வீக மத, கலாசார இடங்களும் வணக்கஸ்த்தலங்களும் சிங்கள பெளத்தர்களுடையவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்நெட்டில் வெளிவந்த ஆக்கம் ஒன்றினை நான் இங்கே இணைத்தபோது கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காகவே சிங்களவர்களுடன் சேர்கிறோம் என்று நியாயம் கற்பித்த எவருமே அதுபற்றிக் கரிசணை காட்டவில்லை. ஆனால், அப்படி நடப்பதை நியாயப்படுத்தி, பெளத்த நாடு, ஆகவே எதுவும் செய்யமுடியாது. சம்மந்தனும் சுமந்திரனும் செய்ய முடியாததை கருணாவோ பிள்ளையானொ செய்யப்போவதில்லை என்று எழுதினார்கள். அவர்களைப்பொறுத்தவரை இது முடிந்த விடயம் என்பதுதான். தாமும் முயல்வதுபற்றிச் சிந்திக்கவில்லை, மற்றையவர்களும் முயற்சிப்பதைத் தடுக்க முனைந்தார்கள். இதுபற்றிய அவர்களின் சில கருத்துக்கள் கீழே. 

1. "அப்போ அவர்களை அடிச்சு விரட்டலாம் என நினைக்கிறீர்களா இலங்கை பெளத்த தேசமெனவும் பெளத்தத்திற்கே முன்னுரிமை எனவும் அதற்கு அமைச்சும் நிறுவி மகிந்த  இருக்கிறார்  இப்படி காவிகள் சூழந்துள்ள இலங்கையை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது பதிலுக்கு நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்கள் ஆதரித்த பிள்ளையான் ,கர்ணாவால் கேட்க முடியாதா? என 

பழம் பெரும் அரசியல் வாதி சம்பந்தர் ஏன் சுமந்திரன் ஐயாவால் கூட கேட்கமுடியாது  மிகவிரைவில் வடக்கில் கிளிநொச்சியிலும் சின்ன விகாரை ஒன்று கண்டேன் , நைனாதீவு , யாழ்ப்பாணம்  திருகோணமலை இப்படி இடங்களிலும் அவர்கள் குடி கொள்ள தொடங்கி விட்டார்கள்."

2. "வேறு யார் காப்பாற்றி தருவார்கள் என்றாவது சொல்ல முடியுமா, தீபாவளி புஸ்வாணம் சம்மா...? 
இல்ல இனச்சுத்திகரிப்பு சும்மா...? இல்லை  வேட்டியும் சால்வையும் போட்டுகொண்டு இல்ல விழையாட்டு போட்டிகளில் மரதன் ஓடும் சீனியா...?, இல்ல இவர்களின் எசமான் இந்துத்துவ ஹிந்தியாவா...?  
 யாரவது சச்சியை கூப்பிடுங்கப்பா கிறிஸ்தவன் என்றால் மட்டும் தான் கொடிபிடிக்க நெஞ்சில மாஞ்சா இருக்கு போல ?" 

3. "இது சிங்கள நாடென எப்போதே அறிவித்துவிட்டார்கள் இப்ப திருகோணமலையும் அவங்கது ஏன் நாளைக்கு நல்லூரும் அவங்கது என்பார்கள் இது ஒரு புறம் இருக்க அங்கால முபாறக் அப்துல் மஜித் ராவணனன் முஸ்லீமாம் என்ற பிரச்சினையும் ஓடுது 

இந்த நாட்டில பிரச்சினை பிரச்சினையாவே எழுப்புறானுகள் . வடக்கு கிழக்கில் இதேதான் பிரச்சினை யாரும் கண்டுகொள்ளாத போது அம்மானுக்கும் மட்டும் வேண்டுதலா என்ன  அம்பாறையில் இனவிகிதாசாரத்தை கூட்டவே நிலப்பரப்பை அம்பாறைக்குள் அரசு எடுத்துவிட்டது ஆக அப்படிப்பட்ட அரசு தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி அது இது என ஆரம்பித்துள்ளது நாளை இன்னும் பல இடங்கள் கூட பறி போகலாம்  நாம கருத்து எழுதிக்கொண்டே இருப்போம் "

4. "அதைதான் எவன் மூலம் கிடைக்குமோ அவன் மூலம் பார்த்துக்கொள்கிறோம் என்று நாங்கள் சொல்கிறோம் 
ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை ஓட்டியது நீங்கள் ... வக்கீல் இருக்கார் வச்சி செய்வார் என்று எண்டு டயலாக் விட்டுவிட்டு , இப்ப அவரிடம் கேக்கலாமா இவரிடம் கேக்கலாமா என்று கதையடிக்கிறீர்கள்,

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றம் தெரியுமா ...? கேபினட் அமைச்சராக இருந்த ஹாரிஸுக்கு இந்தவிடயத்தில்  காட்சட்டையில் மூச்சா போக வைத்தது யார் என்று தெரியுமா....?
யார் செய்து தனது பலத்தை காட்டினானோ அவனையே அந்த பிராந்திய மக்கள் தெரிவுசெய்வினம்" 

தென் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கூறுவதை மிகப் பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன்.

தென் தமிழீழம் தொடர்பாக எதனைக் கதைத்தாலும் பிரதேசவாதம் என்ற கண்ணாடிக்குள்ளாலேயே பார்க்கிறார்கள். 

இறுதியில் மனக் கசப்பு மட்டுமே ஏற்படும் என்கின்ற பயம்.

☹️😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.