Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் நினைவுதினம் அனுஸ்டிக்க அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தியாகத்தின் புனிதம் காப்போம்; தியாகி திலீபனின் நினைவு தினம் | Virakesari.lk

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்விடயம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.https://www.virakesari.lk/article/89570

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. மகிந்த கோத்தா கும்பலிடம் போய் மனித உரிமைகள் பற்றிப் பேசுவது போல் மடமை ஏதும் இல்லை. 

என்ன இந்தக் கும்பலால்.. சிங்களவர்கள்.. பஞ்சப் பரதேசி ஆகும் வரை.. அவர்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டுள்ள.. சிங்கள பெளத்த பேரின வெறி அடங்கிப் போகும் வரை..  இந்தக் கும்பலை அவ்வளவு இலகுவாக அரசியல் களத்தில் இருந்து அகற்ற முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சர்வதேசம் இவர்களையெல்லாம் நம்பி பயனில்லை. பேசாமல் சிங்களவரோடு  சேர்ந்து வாழ்வதே ஒரே வழி என கொள்கை முழக்கம் செய்யும் “நவீன தமிழ் தேசியவாதிகள்” கவனத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இந்தியா, சர்வதேசம் இவர்களையெல்லாம் நம்பி பயனில்லை. பேசாமல் சிங்களவரோடு  சேர்ந்து வாழ்வதே ஒரே வழி என கொள்கை முழக்கம் செய்யும் “நவீன தமிழ் தேசியவாதிகள்” கவனத்துக்கு.

இதெல்லாம் கொஞ்சம் பழையதாகவும் போராடிகிறதாகவும் இருக்கு 
தயவு செய்து இவற்றை வேறு அடைமொழி கொண்டு மாற்ற முடியாதா?

டிஜிட்டல் தமிழ் தேசியவாதிகள் 
 
அப்படி ஏதும் மாற்றி தூற்றினால் எமக்கும் கொஞ்சம் 
புதுமையாய் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விருப்படி மாற்றுங்கள். ஆனால் கருத்தை மறுதலிக்க முடியவில்லையே?

ஆமா / இது உங்க சைஸ் தொப்பி இல்லையே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

இந்தியா, சர்வதேசம் இவர்களையெல்லாம் நம்பி பயனில்லை. பேசாமல் சிங்களவரோடு  சேர்ந்து வாழ்வதே ஒரே வழி என கொள்கை முழக்கம் செய்யும் “நவீன தமிழ் தேசியவாதிகள்” கவனத்துக்கு.

ஆமாம் நீங்கள் எப்போதில் இருந்து தேசியவாதி ஆனீர்கள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

“நவீன தமிழ் தேசியவாதிகள்”

யாரைச் சொல்கிறீர்கள்? விக்கியையும், கஜேந்திரனையுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

ஆமாம் நீங்கள் எப்போதில் இருந்து தேசியவாதி ஆனீர்கள் :unsure:

நான் எப்போதும் தமிழ் தேசியவாதிதான்.

1. பிறப்பு-2009 - சில விடயங்களில் புலிகள் பிழைவிட்டாலும், அவர்களின் தேசியத்தின் மீதான பற்றுருதி, அவர்களை விட செயல்திறன் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் - அப்போ என் நிலை “மூடிட்டு” இருந்த சைலன்ட் தேசியவாதி. ஆனால் யுத்த நிறுத்தம் கோரிய லண்டன் போராட்ங்களில் ஒரு சகதமிழானாக பங்கெடுத்தேன். அப்போதும் புலி ஆதரவாளனாய் அல்ல. தமிழ் தேசிய வாதியாய்.

2. 2009-2013 குழப்பம் மிஞ்சிய காலம். 

3. 2013- விக்கியின் வருகை. சம்-சும்-விக்கி தேசியத்தை முன்னெடுப்பார்கள் என்ற நப்பாசை துளிர்விட. அவர்களை ஆதரித்த தமிழ் தேசியாவாதி. அப்போதும் தனி மனித அரசியலால் ஈர்க்கப்ட்டல்ல. அந்த நிலையில் அவர்கள்தான் சரியான தெரிவாக தென்பட்டனர். இலக்கு எப்போதும் போல தமிழ் தேசியம்தான்.

4. 2015 பின்- சுமந்திரன் அந்த விசயத்துகு சரிப்படார் என புரிந்தது. விக்கி செயல் முடங்கி நின்றார். மீண்டும் குழப்ப நிலை. ஆனாலும் கொள்கை தமிழ் தேசியம்தான்.

5. நான் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் தமிழ்தேசியத்தை முந்தள்ளுவார்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் பின்னால் நிற்கிறேன்.

6. இதுவரைக்கும் டக்லஸ், கருணா, பிள்ளையான், அங்கயன், இதர அரசியல்வாதிகள் எவரையும் ஆதரித்து எழுதியதுமில்லை, மிக கடுமையாக விமர்சித்துள்ளேன்.

இப்போ சொல்லுங்கள் நான் தேசியவாதியா இல்லையா?

20 minutes ago, ரஞ்சித் said:

யாரைச் சொல்கிறீர்கள்? விக்கியையும், கஜேந்திரனையுமா? 

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இல்லை ...நானும் தான் 2009 யில் பாராளுமன்றத்தில் முன்னால் போய் போராட்டங்களில் பங்குபற்றினேன் ...நான் என்ன தேசியவாதியா?
தற்போதும் புலிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கிறேன்...தற்போது உள்ள நிலையில் மக்களை யார் தூக்கி விடுகிறார்களோ அவர்களை நான் ஆதரிக்கிறேன் ...அது டக்கியாய் இருந்தாலும் சரி ,கருணாவாய்  இருந்தாலும் சரி.
முதலில் தேசியம் என்றால் என்ன?
உங்கள் 6வது பதிலில் சொன்னவர்களை விமர்சிப்பதை விடுத்து நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்களோ அவர்களை விமர்சித்து இருக்கலாம் ...செய்ய மாட்டீர்கள்....ஏன் அவர்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு சரி ....அவர்கள் தேசியம் கதைக்கிறார்கள் ...வாய் மூலம் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் இல்லையா கோசான்?
 இவர்கள் துரோகிகள் என்றால் இவர்களை விமர்சிப்பதன் மூலம் என்னத்தை கண்டீர்கள்?
இவ்வளவு அழிவுக்கு பின்னும் யார் இன்னும் உசுப்பேத்துவான் , மக்களை வைத்து உணர்ச்சி அரசியல் செய்வான் என்று பார்த்து தான் நீங்களே ஆதரிக்கிறீர்கள்....கவலையான விசயம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

அப்பன், அப்போ யார்தான் நீங்கள் குறிப்பிடும் " நவீன தமிழ்த் தேசியவாதிகள்"? இவர்களை ஆதரிக்கும் எம்போன்றவர்களைச் சொல்கிறீர்களோ? நான் எப்போதுமே தேசியத்தை ஆதரித்துத்தானே வருகிறேன், இதில் நவீனம் ஏதுமில்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

ஓம் விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி தான் ...அரசியல் செய்யும் போது மட்டும் தமிழ் கதைப்பார் ...அவற்ற வீட்டை போனால் பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளோட சிங்களத்தில கூடிக் குலாவுவார் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இல்லை ...நானும் தான் 2009 யில் பாராளுமன்றத்தில் முன்னால் போய் போராட்டங்களில் பங்குபற்றினேன் ...நான் என்ன தேசியவாதியா?
தற்போதும் புலிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கிறேன்...தற்போது உள்ள நிலையில் மக்களை யார் தூக்கி விடுகிறார்களோ அவர்களை நான் ஆதரிக்கிறேன் ...அது டக்கியாய் இருந்தாலும் சரி ,கருணாவாய்  இருந்தாலும் சரி.
முதலில் தேசியம் என்றால் என்ன?
உங்கள் 6வது பதிலில் சொன்னவர்களை விமர்சிப்பதை விடுத்து நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்களோ அவர்களை விமர்சித்து இருக்கலாம் ...செய்ய மாட்டீர்கள்....ஏன் அவர்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு சரி ....அவர்கள் தேசியம் கதைக்கிறார்கள் ...வாய் மூலம் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் இல்லையா கோசான்?
 இவர்கள் துரோகிகள் என்றால் இவர்களை விமர்சிப்பதன் மூலம் என்னத்தை கண்டீர்கள்?
இவ்வளவு அழிவுக்கு பின்னும் யார் இன்னும் உசுப்பேத்துவான் , மக்களை வைத்து உணர்ச்சி அரசியல் செய்வான் என்று பார்த்து தான் நீங்களே ஆதரிக்கிறீர்கள்....கவலையான விசயம் 
 
1. மேலே எழுதியதை தயவு செய்து வாசியுங்கள். 2015 க்கு பின் நான் யாரையும் ஆதரிப்பதில்லை. விக்கியின் அணுகுமுறையை நான் இப்போ ஆதரிக்கவில்லை. 2013 இல் விக்கி,சம்,சும் 3 பேரிடமும் நான் சிலதை எதிர்பார்தேன். நடக்கவில்லை. ஆனால் இந்த மூவரில் விக்கி தமிழ் தேசிய கொள்கைக்கு நேர்மையாக இருப்பது தெரிகிறது. மற்றைய இருவரும் அதை பாவித்து அரசியல் மட்டுமே செய்கிறார்கள்.

2. நான் தமிழ் ஈழம் கோரியவனும் இல்லை. தமிழ் ஈழம் ஒரு போதும் சாத்தியபடாது என்பது எனக்கு  ஒரு 16 வயதிலேயே புரிந்து விட்டது. அப்பவே கோராதவன் இப்பவா கோருவேன்? நான் யாரையும் உசுபேத்தவும் இல்லை. 

3. அப்போ நான் இப்போ எதிர்பார்க்கும் தமிழ் தேசிய அரசியல்தான் என்ன? 3 தமிழ் தேசிய கட்சிகளும் இணந்து 13 ஐயாவது தக்கவைக்க வேண்டும்.

4. கருணா/அங்கயன் அரசியலை நான் பின்பற்ற முடியாது? ஏன் ஏனென்றால் இண்டைகு கிழக்கு செயளணிக்கு நடந்தது நாளைக்கே எங்கு நடக்கும். இவர்களால் சித்தாண்டி கோவில் தேங்காய் உடைக்கும் கல்லை கூட காப்பாற்ற முடியாது. ஆகவே இந்த அரசியலை நான் விமர்சிப்பேன். ஆனால் இதை துரோக அரசியல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அபிவிருத்தி அரசியல். செய்யுங்கள். மக்கள் ஏற்றால் சரி. ஆனா இதை தமிழ் தேசிய அரசியல் என்று சொல்ல வேண்டாம். நீங்களும் சொல்வதில்கைதான்.

6 minutes ago, ரதி said:

ஓம் விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி தான் ...அரசியல் செய்யும் போது மட்டும் தமிழ் கதைப்பார் ...அவற்ற வீட்டை போனால் பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளோட சிங்களத்தில கூடிக் குலாவுவார் .

நான் 2013 எழுதியபோதே இதை பலர் எழுதி நான் விளக்கமும் கொடுத்துவிட்டேன்.

தமிழ் தேசியாவாதி சிங்கள பெண்ணை கட்டமாட்டான், பிள்ளைகளை சிங்கள வீட்டில் கொடுக்க மாட்டான் என்பதெல்லாம் இல்லை.

தமிழ் தேசியம் என்பது எமது இனத்தின் அரசியல் உரிமை பற்றியது. ஒவ்வொரு தமிழனதும் தனி வாழ்வு பற்றியது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவிட வேலிக்கு வண்ணப்பூச்சு!

received_355646352238723-960x443.jpeg?189db0&189db0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திலீபனின் நினைவிடத்தை அழகுபடுத்தும் ஆரம்ப கட்ட வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திலீபனின் நினைவு தூபியை சுற்றியுள்ள கம்பி வேலி இன்று (09) இரவு வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டுள்ளது.

https://newuthayan.com/தியாக-தீபம்-திலீபனின்-நி/

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

அப்பன், அப்போ யார்தான் நீங்கள் குறிப்பிடும் " நவீன தமிழ்த் தேசியவாதிகள்"? இவர்களை ஆதரிக்கும் எம்போன்றவர்களைச் சொல்கிறீர்களோ? நான் எப்போதுமே தேசியத்தை ஆதரித்துத்தானே வருகிறேன், இதில் நவீனம் ஏதுமில்லையே? 

நாம் தமிழர் திரியில் மீதி கதையை காண்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாம் தமிழர் திரியில் மீதி கதையை காண்க🤣

உங்களுக்கு வேற வேலையில்லை.

2 hours ago, goshan_che said:

கருணா/அங்கயன் அரசியலை நான் பின்பற்ற முடியாது? ஏன் ஏனென்றால் இண்டைகு கிழக்கு செயளணிக்கு நடந்தது நாளைக்கே எங்கு நடக்கும். இவர்களால் சித்தாண்டி கோவில் தேங்காய் உடைக்கும் கல்லை கூட காப்பாற்ற முடியாது. ஆகவே இந்த அரசியலை நான் விமர்சிப்பேன். ஆனால் இதை துரோக அரசியல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அபிவிருத்தி அரசியல். செய்யுங்கள். மக்கள் ஏற்றால் சரி. ஆனா இதை தமிழ் தேசிய அரசியல் என்று சொல்ல வேண்டாம். நீங்களும் சொல்வதில்கைதான்.

இதை எங்கேயோ கேட்டமாதிரிக் கிடக்கே?!

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு தினப் பேரணியை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரை பேரணியயான்றினை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்டவேளை அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன், இது தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளார் எனவும் தெரிவித்தார்.

http://www.ilakku.org/திலீபனின்-நினைவு-தினப்-ப/

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாயில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்ய ஏற்பாடு!

thiliban-2.jpg?189db0&189db0

கோப்பாயில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இடத்தில், நினைவேந்தல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி வி.ணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு துறை பொறுப்பாளர் வீரா ஆகியோர் நேற்று மாலை ஊர் மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது அங்கு இந்த முறை நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு எற்படுகளை செய்து தருமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஊர் மக்களுடன் இணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.

https://newuthayan.com/கோப்பாயில்-தியாக-தீபம்/

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக 20 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவ்வழக்கு இன்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நானும், சக சட்டத்தரணி சுகாசும் மன்றில் முன்னிலையாகியிருந்தோம். பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று சமர்ப்பணத்தை நாங்கள் மன்றில் செய்திருந்தோம்.

https://www.ibctamil.com/srilanka/80/150564

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தலைமைகள் ஆழ ஊடுருவி வேலை செய்கிறது. காலங்காலமாய்த் தமிழனைக் கொண்டே தமிழனுக்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் கச்சிதமாக ஒன்று கூடிச் செயற்படுகிறார்கள். இந்தத் தீர்ப்பு ஒன்றை வைத்தே வருங்காலத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுக்கும் தடை வைக்கப் போகிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 23:05, goshan_che said:

நான் எப்போதும் தமிழ் தேசியவாதிதான்.

1. பிறப்பு-2009 - சில விடயங்களில் புலிகள் பிழைவிட்டாலும், அவர்களின் தேசியத்தின் மீதான பற்றுருதி, அவர்களை விட செயல்திறன் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் - அப்போ என் நிலை “மூடிட்டு” இருந்த சைலன்ட் தேசியவாதி. ஆனால் யுத்த நிறுத்தம் கோரிய லண்டன் போராட்ங்களில் ஒரு சகதமிழானாக பங்கெடுத்தேன். அப்போதும் புலி ஆதரவாளனாய் அல்ல. தமிழ் தேசிய வாதியாய்.

2. 2009-2013 குழப்பம் மிஞ்சிய காலம். 

3. 2013- விக்கியின் வருகை. சம்-சும்-விக்கி தேசியத்தை முன்னெடுப்பார்கள் என்ற நப்பாசை துளிர்விட. அவர்களை ஆதரித்த தமிழ் தேசியாவாதி. அப்போதும் தனி மனித அரசியலால் ஈர்க்கப்ட்டல்ல. அந்த நிலையில் அவர்கள்தான் சரியான தெரிவாக தென்பட்டனர். இலக்கு எப்போதும் போல தமிழ் தேசியம்தான்.

4. 2015 பின்- சுமந்திரன் அந்த விசயத்துகு சரிப்படார் என புரிந்தது. விக்கி செயல் முடங்கி நின்றார். மீண்டும் குழப்ப நிலை. ஆனாலும் கொள்கை தமிழ் தேசியம்தான்.

5. நான் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் தமிழ்தேசியத்தை முந்தள்ளுவார்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் பின்னால் நிற்கிறேன்.

6. இதுவரைக்கும் டக்லஸ், கருணா, பிள்ளையான், அங்கயன், இதர அரசியல்வாதிகள் எவரையும் ஆதரித்து எழுதியதுமில்லை, மிக கடுமையாக விமர்சித்துள்ளேன்.

இப்போ சொல்லுங்கள் நான் தேசியவாதியா இல்லையா?

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

அர்ச்சனை வேலை செய்ய தொடங்கிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

தடைவிதிக்கப்பட்டமை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை – கூட்டமைப்பு முடிவு

தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பேச தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த கலந்துரையாடலில், தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை இம்முறை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்று தடை விதித்துள்ளமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தமிழ் கட்சிகள் எவ்வகையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து, விரைவாக கூடி கலந்துரையாடி ஒரு முடிவு எடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

அதற்கு தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை குறித்த கலந்துலையாடலை நடாத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர்

மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களாட எஸ். சிறீதரன், த.சித்தார்த்தன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாதகரசபை பிரதி மேஜர் து.ஈசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், க.விந்தன், ஜனநாய போராளிகள் கட்சி உறுப்பினர் க.வேந்தன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

http://www.ilakku.org/தடைவிதிக்கப்பட்டமை-தொடர/

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் தடைகளைத் தாண்டி மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’

உலகின் ஜனநாயக விழுமியங்களை மதித்து தனது மக்களின் அடிப்படை அரசியல் மற்றும் ஜனநயக உரிமைகளை முன்வைத்து நீர் ஆகாரமின்றி உண்ணா நோன்பிருந்து தனது மக்களுக்காக மரணித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இனவாத சிங்கள அரசு தடை விதித்துள்ளது.

விடுதலைக்காகப் போராடும் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும் என்றால், அவர்களின் மனங்களில் இருந்து அவர்களுக்காகப் பேராடியத் தலைவர்களின் நினைவுகளை அழித்துவிடுவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரிடம் கடத்தப்படும் விடுதலை உணர்வகளை அழித்துவிடலாம் என எண்ணுகின்றது சிறீலங்கா அரசு. எனவேதான, தனது நீதி அதிகாரம், படைபலம் கொண்டு தமிழ் மக்கள் மீது இந்த வன்முறைகளை சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

thileepan last wish: மாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்! - thileepan death anniversary september 26 | Samayam Tamil

ஆனால் சிறீலங்கா அரசின் இந்த அடக்குழுறைகளுக்கு நாம் அஞ்சிவிடாது அதனை உடைக்கும் வழிகளைத் தேடவேண்டும். எமது மக்களின் விடுதலை உணர்வைத் தக்கவைப்பதன் மூலம், இனத்தின் விடுதலைக்கானப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

எனவே சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும். தமிழ் பல்கலைக்கழக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பன இதற்கானப் பங்களிப்புக்களை உடனடியாக வழங்க வேண்டும்.

கிராமம் கிராமமாக மக்கள் தீயாக தீபத்துக்கான நினைவேந்தல் நிகழ்வைத் தொடர் உண்ணாவிரத போராட்டமாக ஆரம்பித்து நடத்த வேண்டும். ஒவ்வொருக் கிராமத்திலும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு பாடசாலைகளிலும், ஒவ்வொரு சனசமூகநிலையங்களிலும், ஒவ்வொரு ஆலயங்களிலும் அதற்கான ஏற்பாடுகளை மக்களாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்குரிய உதவிகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும், மாணவர் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும், புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ் புத்திஜீவிகளும், தேசியச் செயற்பாட்டாளர்களும் வழங்க வேண்டும்.

தியாக தீபம் திலீபன் – நினைவலைகள் – ஈழம் செய்திகள்

தாயகத்து தமிழ் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு  தமிழக மக்களும் தமது ஆதரவுகளை வழங்கி, சிறீலங்கா அரசின் வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும்.

தீயாக தீபத்தின் பல இலட்சம் பதாதைகளை அச்சிடுவோம் அதனை மக்களிடம் வழங்கி, நினைவு எழுச்சியை மக்களிடம் இருந்து ஆரம்பிப்போம். சிங்கள அரசின் படைகள் எத்தனை மக்களை சிறையில் அடைக்க முடியும் என்பதை நாமும் பார்த்துவிடுவோம்.

செப் 17, 1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் மூன்றாம் நாள் – தமிழ் வலை

ஜனநாயக வழிகளில் நடக்கும் மக்கள் மீது, சிங்கள அரசு அடக்கு முறைகளை மேற்கொண்டால் அதனை அனைத்துலகத்தினதும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களினதும் கவனத்திற்கு கொண்டுவரும் பணிகளைத் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் முன்னின்று செய்ய வேண்டும்.

திலீபன் வேண்டி நின்ற மக்கள் புரட்சி  இன்றே வெடிக்கட்டும் அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணையவேண்டும் என இலக்கு ஊடகம் தமிழ் மக்களை பணிவுடன் வேண்டி நிற்கின்றது.

http://www.ilakku.org/let-the-peoples-revolution-explode-beyond-the-barriers-of-sri-lanka/

தடை உத்தரவிலும் திலீபனின் நினைவேந்தல் இளைஞர்களினால் முன்னெடுப்பு

தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் பாதுகாப்பு படைகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் உணர்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு கிழக்கில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற பொலிஸ் தலைமையகத்தின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்க ஏற்பாடாகியிருந்த பகுதிகளில், நேற்று பொலிஸார் குவிக்கப்பட்டு காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் அனைத்தும் இரவோடிரவாக அகற்றப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே தடைகளைத் தாண்டி மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இன்று காலை யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில்  தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது. சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு முடிவடைந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற கட்டளையைக் காணப்பித்து சிவாஜிலிங்கத்தை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பின்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை சுற்றி சிரமாதானப் பணியை முன்னெடுப்பதற்கு இளைஞர் குழுக்கள் அவ்விடத்தில் திடீரென ஒன்று கூடியிருந்தனர். அதை அவதானித்த பொலிஸார் அங்கிருந்த இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

குறித்த பகுதியில் சிரமதானப்பணியை நிறைவு செய்த இளைஞர்கள் நல்லுார் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு சூழலியல் மேம்பாட்டு அமையத்தின் செயலாளர் கருநாகரன் நாவலன் தலைமைதாங்கியிருந்தார். இதில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம்பெற்றிருந்தன.

http://www.ilakku.org/தடை-உத்தரவிலும்-திலீபனின/

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவேந்தல் தடை; அடுத்த நடவடிக்கை குறித்து ஆராய தமிழக் கட்சிகளுக்கு மாவை அழைப்பு

தியாகி திலீபனின் நினைவேந்தலைத் தடுக்கும் அரசின் நடவடிக்கையை குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ்க் கட்சிகள் கூடி ஆராயவுள்ளன. இதற்கான ஏற்பாட்டை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே மேற்கொண்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அவரே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தியாகி திலீபனின் நினைவேந்தலை தாயகமெங்கும் மக்கள் வழக்கமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இம்முறை தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்து நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராயவேண்டும்.

அரசின் கொள்கை முடிவென்றா லும், பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கை யென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றியும் நாம்ஆராயவுள்ளோம்.

அது தவிர, யாழ். மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடை செய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக இன்று மதியத்தின் பின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அநேகமான கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்து கொள்வார்கள்” என்றார்.

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உள்ளிட்ட தரப்புக்கள் கலந்து கொள்ளவுள்ளன எனத் தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவு கூர்வதற்கு மீண்டும் தடைவிதித்தது யாழ் நீதிமன்றம்!

jaffna-court-560x373-1.jpg?189db0&189db0

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுவை யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் இன்று(15) நிராகரித்துள்ளார்.

கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று திருத்த மனுவை பரிசோதனை செய்த யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமைவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என தெரிவித்துள்ளார்.

குறித்த மன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகிமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/திலீபனை-நினைவு-கூர்வதற்க/

2018 இல் அனுமதி கொடுத்த அந்தி நீதிபதி,  இப்ப ஏன் இந்த நீதிபதி கொடுக்க முடியாது😡
நீதி நீதிபதிக்கு நீதிபதி வேறு வேறா; இவர் வேற்று உலகில் இருந்து வந்த நீதிபதியா???
 
  • கருத்துக்கள உறவுகள்

அடங்கா தமிழ் காளை சிவாஜியால் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு.

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.