Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்ற செயல்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்காக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்த நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு முன்னாள் நீதிபதிகளும் எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரனும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள "நீட்" நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அதில் அவர்,''கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

அவரது இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்" என்று முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கண்டிக்கும் வழக்கறிஞர்கள் சங்கம்

இந்த நிலையில், சூர்யாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் நீதித்துறை செயல்பாட்டை குறைத்து மதிப்பிடும் வகையிலும் உள்ளது என்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான செயல்பாடுகளை ஏற்கக் கூடாது என்றும் உரிய வகையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னெடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் எஸ். பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவர்களுக்காக புதிய காணொளி

இதற்கிடையே, ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம் என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று புதிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

”ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும்; கொரோனா நெருக்கடியில் மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றலாம்.” என அந்த காணொளியில் சூர்யா பின்குரல் வழங்கியிருக்கிறார்.

மேலும், அந்த காணொளி அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கொரோனா கால நிதி உதவிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் நீட் தேர்வு தொடர்பாக விமர்சித்து சூர்யா கடுமையாக பேசியிருந்தார். ”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது," என அவர் கூறியிருந்தார்.

மேலும், "கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

சூர்யா தனது அறிக்கையில் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார். எனவே அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கொரோனா காலத்தில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்காக புதிய காணொளியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.https://www.bbc.com/tamil/arts-and-culture-54146965

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அவரது இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்திய உயர்நீதிமன்றத்தை அவமதித்த எச்ச ராஜாவுக்கு மன்னிப்பு கொடுப்பார்கள் அடுத்த கோமாளி sv சேகருக்கு இந்திய கொடியை  அவமதித்ததுக்கும் ஆள் இல்லாமலே மன்னிப்பு குடுப்பினம் நீட் தேர்வுக்கு எதிரா குரல் கொடுத்தால் கேஸ் நம்ம இடத்தில் உதவிக்கு வந்த பணம் எங்கடா என்று கேட்டாலே கேஸ் தான் .

தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் மூளையை கழட்டிவைத்து விட்டுத்தான் திரியிறாங்கள் போல் உள்ளது இந்த கேஸ் போடுறவங்கள் .

யோகிபாபு ஹேர்ஸ்டைலில் சிங்கம் புலி. "முடியை கோதுறீங்க போ" - சதிஷ் வெளியிட்ட  ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ. - Cinemapettai

எங்கடா அந்த 20 கோடி ?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அடுத்த தேர்தல்களில் சூரியாவும் தேர்தலில் குதிப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
கோர்ட்டை அவமதித்து பேசியதாக நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
 
கோர்ட்டை அவமதித்து பேசியதாக நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
 
மதுரை, 

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் நேற்று காலை வக்கீல்கள் நீலமேகம், முகமதுரபீக், குமார், பிரியா, துஜா ஆகியோருடன் வந்து மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்காவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக கோர்ட்டுகளையும், நீதிபதிகளையும் அவமரியாதை செய்யும் வண்ணமும், சட்டத்தின் ஆட்சியினை கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு நடிகர், நடிகைகளிடையே விஷச்செடியாக வளர்ந்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் வரம்பு மீறியும், எல்லை மீறியும் தேச இறையாண்மைக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் பொய்யான போலியான கருத்து திணிப்புகளை புகுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.

நாடு முழுவதும் நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றார்கள். அந்த தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிவில் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு நீட் தேர்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக நடிகர் சூர்யா பேட்டி கொடுத்திருந்தார். அதில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த கருத்து கோர்ட்டின் கண்ணியத்தையும், அரசியல் அமைப்புச்சட்டத்தினை அவமரியாதை செய்யும் வகையில் இருந்தது. எனவே நீதியின் மாண்பை சீர்லைக்கும் வண்ணமும் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வண்ணமும் பேசி வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/State/2020/09/15023201/Prosecutors-have-lodged-a-complaint-with-the-Madurai.vpf

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யாவை பத்தி கேக்காதீங்க | நாங்களும் அடாவடி பண்ணுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யாவுக்கு வலிக்கிறது; விஷாலுக்கு ஏன் வலிக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி

பூந்தமல்லி, 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது வீட்டின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவிரி பிரச்சினைக்காக உயிர்நீத்த விக்னேசு உருவப்படத்துக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது கர்நாடக மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இவர்கள் அந்தந்த மாநில மக்களின் உணர்வுக்கு ஏற்ப அரசியல் செய்வார்கள். ஆனால் எங்களை இந்திய உணர்வோடு இருக்க சொல்வார்கள். இங்குதான் உள்ளது ஆபத்து.

நீட் தேர்வை எழுத மாட்டோம் என போராடி மாணவர்கள் வெளியே வர முடியாது. வேறு வழியில்லாமல் எழுதுகிறார்கள். இந்தியை இந்தியாவிலேயே எதிர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்.

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா கூறிய கருத்து ஏற்புடையது. சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது கருத்தை ஆதரித்த நீதிபதிகளுக்கு நன்றி. தமிழனுக்கு இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை வந்து விடக்கூடாது என்பதுபோல், நமது பிள்ளைகள் மருத்துவம் பார்க்கக்கூடாதா? ஆசை இருக்கக்கூடாதா?.

கடுமையான சட்டப்போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வாகும். நீட் தேர்வு தேவையில்லை. வலுவான ஆட்சி உருவானால் மட்டுமே இது சரியாகும். இன்னும் எத்தனை உயிர்கள் போனாலும் இவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

https://www.dailythanthi.com/News/State/2020/09/17034001/Actor-Suryas-opinion-on-Neet-is-acceptable-Says-seeman.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒட்டி நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்ன சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரம் நடந்த நீட் தேர்விற்கு முன்பாக, தேர்வு எழுதவிருந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, "கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத வேண்டுமென உத்தரவிடுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் "நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், "என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் நேர்மை மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதி அமைப்பை குறைமதிப்புக்குட்படுத்தியும், தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோரியிருந்தனர்.

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அதில், "சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளது போன்று எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்" என்று முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் கேட்டுக் கொண்டனர்.

சூர்யா

பட மூலாதாரம், FACEBOOK / SURIYA

இந்த நிலையில், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் எழுதிய கடிதம், தமிழக அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பப்பட்டு, அவரது கருத்து கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த அட்வகேட் ஜெனரல், இந்த விவகாரத்தில் நடவடிக்கை தேவையில்லையென தெரிவித்தார்.

இந்த விவகாரம் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான சாத்தியக்கூறு இல்லையென்றும் அது தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.

"தன்னளவில் சரியாக நடந்துகொள்வதாகக் கூறும் சூர்யா போன்றவர்கள் நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா, இல்லையா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-54202056

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யா எனும் ஆயுத எழுத்து

  • கருத்துக்கள உறவுகள்

நீட்  தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ?...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

நீட்  தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ?...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்?

அடிப்படை பாடத்திட்டம் வேறு 
நீட் தேர்வு வேறு 
வடக்கு மாநிலங்களில் சொந்த ஹிந்திமொழியே பெயில் ஆனவன் எல்லாம் 
நீட் பாசுகிறான்  தமிழ் நாட்டில் 100/100 கஷ்ட்டப்பட்டு படித்த மாணவர்களே 
பெயில் ஆகிறார்கள் ......காரணம் என்ன கேள்வி எந்த அடிப்படையில் இருக்கும் என்ற 
ஒரு வரையறை இல்லை. முதலில் அதற்கான பாட திட்டம் வகுத்து அதன் பிரகாரம் பரீடசை 
வைத்தால் அதில் ஒரு நிஜாஜம் உண்டு.

இதன் முக்கிய நோக்கே தமிழர்களை மருத்தவம் படிக்காது செய்வதுதான் 
காரணம் தமிழ் நாட்டிலேயே பல மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் பல தமிழர்கள் 
இதுவரையும் மருத்துவ துறையில் வெற்றி பெற முடிந்தது .. அதுக்கு எப்படி ஆப்பு வைப்பது 
என்று யோசித்து வடக்கு அறிவுக்குள் வந்ததுதான் நீட். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

நீட்  தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ?...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்?

தமிழகத்தில் "குலக்கல்வி முறை"யை ஒழித்தது திராவிடக் கழகம்தான்.

(மதுரை அருகே எங்கோ குக்கிராமத்தின் விவசாயியின் மகனான எனக்கு பொறியியல் துறையிலும், மருத்துவ துறையிலும் படிக்க வாய்ப்பு அமைந்ததும் இந்த திராவிட சிந்தையினால்தான். நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் நாட்டில் மொத்தமே 8 பொறியியல் கல்லூரிகளும் 5 மருத்துவக் கல்லூரிகளுமே இருந்தன.)

ஆண்டாண்டு காலமாய் தொழிற்நுட்ப கல்வி(பொறியியல், மருத்துவம், விவசாயம்) பயில ஒரு மாணவர் தமிழக பாடத்துறை (State Board Sylabus) மூலமாகவோ அல்லது மத்திய பாடக்கல்வி(CBSE) மூலமாகவோ பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டுமே தர வரிசைப்பட்டியல்(Merit List) தமிழக அரசால் வெளியிடப்படும். இவற்றில் சாதிகளின்படியும்(Reservation), மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் (Rural Students) இட ஒதுக்கீடும் உண்டு. பிற மாநில மாணவர்கள்(Other State students) அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குறைந்த அளவு இட ஒதுக்கீட்டில் தான் வர முடியும்.

தனியாக நுழைவுத் தேர்வு எதுவுமே இல்லை. ஆகவே பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில்(Merit List) தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துவிடும்.

ஆனால் இந்த நீட் வந்ததால், அனைவரும் மறுபடியும் பாடங்களை படிக்க வேண்டும், அதுவும் பெரும்பாலும் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டதில்தான்(CBSE) பெரும்பாலும் இருக்கும்.

ஒரு மாணவர், முதல் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு (State Sylabus) திடீரென ஒரே மாதத்தில் மத்திய பாடத்திட்டதில்(CBSE) நான் வைக்கும் நீட் தேர்வில் படித்து அதிக மதிப்பெண் வாங்கினால் தான் உனக்கு மருத்துவ சீட்டு என்பது அநீதி. இதில் இட ஒதுக்கீடும் இல்லை.

எங்கோ குக்கிராமத்தில் படிக்கும் ஏழை மாணவன், நகர்புறத்தில் சகல வசதிகளோடு படிக்கும் மாணவனோடு நீட் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய முடியும்..?

நீட் தேர்வு கோச்சிங் மையங்கள் கிராமங்களில் இருப்பது இல்லை,ஏழைகளுக்கு அவ்வளவு பண வசதியும் இல்லை

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவானவை.

ஒரு தொழிற் கல்விக்கு நுழைய எத்தனை முறை தேர்வுகள் வைப்பீர்கள்..?

இவற்றில் படிக்க, மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 சதவீதம் உரிமை இருக்க வேண்டும். எங்கோயிருந்து வரும் வட இந்தியர்களுக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

"குலக் கல்வி"த் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

தராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள், பாதி நாளை பள்ளியிலும், மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும், விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும், தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.

‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க.,  தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.

இதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை.:)

ஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.

ராஜாஜி, ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா..? என சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்?

அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பதை வைத்துத்தான் இது "குலக்கல்வித் திட்டம்" எனக் குறிப்பிடப்பட்டது.

வினவு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் "குலக்கல்வி முறை"யை ஒழித்தது திராவிடக் கழகம்தான்.

(மதுரை அருகே எங்கோ குக்கிராமத்தின் விவசாயியின் மகனான எனக்கு பொறியியல் துறையிலும், மருத்துவ துறையிலும் படிக்க வாய்ப்பு அமைந்ததும் இந்த திராவிட சிந்தையினால்தான். நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் நாட்டில் மொத்தமே 8 பொறியியல் கல்லூரிகளும் 5 மருத்துவக் கல்லூரிகளுமே இருந்தன.)

ஆண்டாண்டு காலமாய் தொழிற்நுட்ப கல்வி(பொறியியல், மருத்துவம், விவசாயம்) பயில ஒரு மாணவர் தமிழக பாடத்துறை (State Board Sylabus) மூலமாகவோ அல்லது மத்திய பாடக்கல்வி(CBSE) மூலமாகவோ பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டுமே தர வரிசைப்பட்டியல்(Merit List) தமிழக அரசால் வெளியிடப்படும். இவற்றில் சாதிகளின்படியும்(Reservation), மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் (Rural Students) இட ஒதுக்கீடும் உண்டு. பிற மாநில மாணவர்கள்(Other State students) அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குறைந்த அளவு இட ஒதுக்கீட்டில் தான் வர முடியும்.

தனியாக நுழைவுத் தேர்வு எதுவுமே இல்லை. ஆகவே பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில்(Merit List) தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துவிடும்.

ஆனால் இந்த நீட் வந்ததால், அனைவரும் மறுபடியும் பாடங்களை படிக்க வேண்டும், அதுவும் பெரும்பாலும் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டதில்தான்(CBSE) பெரும்பாலும் இருக்கும்.

ஒரு மாணவர், முதல் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு (State Sylabus) திடீரென ஒரே மாதத்தில் மத்திய பாடத்திட்டதில்(CBSE) நான் வைக்கும் நீட் தேர்வில் படித்து அதிக மதிப்பெண் வாங்கினால் தான் உனக்கு மருத்துவ சீட்டு என்பது அநீதி. இதில் இட ஒதுக்கீடும் இல்லை.

எங்கோ குக்கிராமத்தில் படிக்கும் ஏழை மாணவன், நகர்புறத்தில் சகல வசதிகளோடு படிக்கும் மாணவனோடு நீட் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய முடியும்..?

நீட் தேர்வு கோச்சிங் மையங்கள் கிராமங்களில் இருப்பது இல்லை,ஏழைகளுக்கு அவ்வளவு பண வசதியும் இல்லை

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவானவை.

ஒரு தொழிற் கல்விக்கு நுழைய எத்தனை முறை தேர்வுகள் வைப்பீர்கள்..?

இவற்றில் படிக்க, மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 சதவீதம் உரிமை இருக்க வேண்டும். எங்கோயிருந்து வரும் வட இந்தியர்களுக்கு அல்ல.

பதிலுக்கு நன்றி மருதர் ,வன்னியன் அண்ணா 
எனக்கு இன்னுமொரு சந்தேகம் எல்லா மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் அந்தந்த மாநில பாடத்திட்டத்திற்கு ஏற்ப தான் படித்து இருப்பார்கள் அல்லவா?....அப்படியாயின் அவர்களுக்கும் இந்த மத்திய அரசின் பாடத் திட்டம் புதுசு அல்லவா ?...அவர்களால் எப்படி இந்த தேர்வினை எதிர் கொள்ள முடிகிறது?
எல்லா மாநிலங்களிலும் கிராம புரங்களை சேர்ந்த வறிய மாணவர்கள் இருப்பார்கள் அல்லவா! அவர்கள் இந்த தேர்வினை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது தான் எனது முக்கிய கேள்வி?
அண்ணா உங்களது கருத்தை பார்த்தால் மற்றை மாநிலத்தை சேர்ந்த நகர் புறத்து வசதியான மாணவர்கள் படிப்பதற்காக தமிழ்நாட்டை பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்து கொள்கிறேன்.
மற்றைய மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு இடம் கொடுப்பதில்லையா?
தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பணம் கட்டித் தான் படிக்க வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 21:57, ரதி said:

நீட்  தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ?...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்?

நல்ல கேள்வி.
அது என்ன நீட் தேர்வு என்று நானும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.அப்போது தான் தெரிய வந்தது ஹிந்தி ஆட்கள் மட்டும் அல்ல மலையாளிகள் தெலுங்கர் கன்னடர் என்று எல்லோருமே நீட் தேர்வு எழுதுகிறர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே எதிர்ப்பும் தற்கொலையும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

பதிலுக்கு நன்றி மருதர் ,வன்னியன் அண்ணா 
எனக்கு இன்னுமொரு சந்தேகம் எல்லா மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் அந்தந்த மாநில பாடத்திட்டத்திற்கு ஏற்ப தான் படித்து இருப்பார்கள் அல்லவா?....அப்படியாயின் அவர்களுக்கும் இந்த மத்திய அரசின் பாடத் திட்டம் புதுசு அல்லவா ?...அவர்களால் எப்படி இந்த தேர்வினை எதிர் கொள்ள முடிகிறது?
எல்லா மாநிலங்களிலும் கிராம புரங்களை சேர்ந்த வறிய மாணவர்கள் இருப்பார்கள் அல்லவா! அவர்கள் இந்த தேர்வினை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது தான் எனது முக்கிய கேள்வி?
அண்ணா உங்களது கருத்தை பார்த்தால் மற்றை மாநிலத்தை சேர்ந்த நகர் புறத்து வசதியான மாணவர்கள் படிப்பதற்காக தமிழ்நாட்டை பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்து கொள்கிறேன்.
மற்றைய மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு இடம் கொடுப்பதில்லையா?
தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பணம் கட்டித் தான் படிக்க வேண்டும் அல்லவா?

ஒரு சின்ன விடயம் சொல்ல விழைகிறேன்..

சிலர் 'அடிமையாகவே இருக்கிறேன்' என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்ப்பார்பது தவறு. மற்றவனுக்கு சுரணை & திராணி இல்லை எனலாம்.
 
மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியை தேசிய மொழி(?) (அது அரசியல் சட்டப்படி இல்லையென்றாலும்) என உணர்வு மழுங்கி ஏற்றுக்கொண்டன, ஆனால் தமிழ் நாடு மட்டும் இந்தியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்..?

இந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு.

கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையென (State list) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கல்வியைப் பற்றி எதுவாகினும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் மோடி அரசு அந்த சட்டத்தை மாற்றி இப்பொழுது கல்வி என்பது பொது பட்டியலுக்கு (Concurrent list)சென்று விட்டது. இனி கல்வி பற்றி எந்த முடிவும் மத்திய அரசு தலையிடும், மாநில உரிமைகள் பறிபோய்விட்டன.

தமிழ்நாட்டில்தான் 69% வரை இட ஒதுக்கீடு உண்டு, மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இதை 50% ஆக குறைக்க வேண்டுமென மத்திய அரசு ஆதரிக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடே இல்லை.

தமிழ் நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இன்றுவரை இல்லை.

மற்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலக் கல்விக்கொள்கையின்படி மாறுபடும், ஏனெனில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் (State list) உரிமை.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் புவி சார்ந்த, பொருளாதார, சமூக மற்றும் கல்வி சூழல்கள் வேறுபடும், அதை ஒரு கொள்கை மூலம் சமன்படுத்திப் பார்க்க முயல்வது அநீதி.

+2 வில் 1100 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. ஏன்..? பாடத் திட்டத்தில் சமன் இல்லை.

சில உயர்சாதி மக்கள் தொன்றுதொட்டு ஆக்கிரமித்து வரும் கல்வி என்பதை, தமிழ்நாட்டின் பெரியாரின் சமூக நீதி பெரும்பாலும் ஒழித்துவிட்டது. அப்படி பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை(😜) மறுபடியும் ஆரியத்திடம் அடகு வைக்க, மற்ற மாநிலங்கள் விரும்பி வாளாவிருக்கலாம், தமிழ் நாடும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பது சரியன்று.

நன்றி மதுரையார்

நேரத்துக்கும் விளக்கத்துக்கும் சுரணைக்கும்...👍

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

பதிலுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றி அண்ணா ...உங்கள் பதில் எனக்கு உடன்பாடாக இல்லை. ஆனால் இது பற்றி மேலும் கதைத்து விரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 05:06, ராசவன்னியன் said:

இவற்றில் படிக்க, மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 சதவீதம் உரிமை இருக்க வேண்டும். எங்கோயிருந்து வரும் வட இந்தியர்களுக்கு அல்ல.

உங்கள் விளக்கத்திற்கு நன்றி வன்னியன்.
இதே மாதிரி வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிலில் உள்ளவர்களை விட கூடுதலான வேலை வாய்ப்பை பெறுகிறார்களே?எப்படி? ஏன்?இதையும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பதிலுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றி அண்ணா ...உங்கள் பதில் எனக்கு உடன்பாடாக இல்லை. ஆனால் இது பற்றி மேலும் கதைத்து விரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை ...

ரதி கதைத்தால் ஏன் விரிசல் வருமென எண்ணுகிறீர்கள்?
மேலே நீங்கள் கேட்ட கேள்வியால் நீங்கள் மட்டுமல்ல நான் உட்பட பலரும் விளக்கமடைந்திருப்பார்கள்.
எனவே கேள்விகளை கேளுங்கள்.

20 hours ago, ராசவன்னியன் said:

இந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு.

வன்னியர் 
ஏற்கனவே தமிழ் ஆங்கிலம் இருமொழி கொள்கை இருக்கும் போது 

இப்போ மூன்றாவது மொழியும் கட்டாயமாக்கப்படுகிறதே உங்கள் அபிப்பிராயம் என்ன?
உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.