Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசா அண்ணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சுந்தரி.... அதுவும் ஒரு பட்டப்பெயரே. 👌

பாண் பதுங்கீட்டார்.

இவரை எங்கடா பார்திருகிறமே எண்டு யோசிக்கிறனான்.

இப்ப விளங்கீற்றுது. எப்பவும் இரண்டுடொரு பேரோட வருவார். நல்லா நியாயம் பிளப்பார்.

சைற் அடிப்பார்... ஒரு சி பெட்டைக்கு சைட் அடித்ததா, நிணைவு.

கடைசியில எல்லோரும் ஒரே குட்டை ஒரே மட்டை 😂

  • Replies 101
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

நான் எனது வாழ்நாளில் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ராசா அண்ணைக்கு என்றும் ஓரிடம் இருக்கும். புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

உங்களுக்கு, உங்களது வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களின் தோழமையும் வழிகாட்டலும் கிடைத்திருக்கிறது. அவற்றை இங்கே பகிர்வதன் மூலம், மற்றையோருக்கும் ஒரு வகையில் உதவுகிறீர்கள். அதற்கு நன்றிகள்.

12 hours ago, ரஞ்சித் said:

"அவதானடா எங்கட அப்பாவின்ர முதல்த் தாரம், அவவுக்குப் பிள்ளைகள் ஒண்டும் பிறக்கவில்லையெண்டதற்காக அப்பாவின்ர ஆக்கள் வாரிசு வேண்டும் எண்டு அம்மாவைக் கலியாணம் செய்துவைச்சவையள், அவ எங்களோடதான் இருக்கிறா" என்று சொன்னான். தன் கண்முன்னேயே தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், திருமணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்வதைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டில் தானும் வாழ்ந்துவரும் அந்தப் பெரியம்மா மீது எனக்கு இனம்புரியாத இரக்கமும்,

இந்த கதையில் என்னை பாதித்தவர்களில் இன்னொருவர், அவரது பெரியம்மாவுமே..

நிழலி அண்ணா எழுதியபடி, சமூக பிரக்ஞையும், அக்கறையும், சக மனிதர்கள் மேல் அன்பும் ,நேர்மையும் கொண்ட மனிதர்களுக்கு பொதுவாக எம் சமூகத்தில் நல்ல மண வாழ்வு அமைவதில்லை, அதற்காக அவர்  சமூகத்துடன் சமரசம் செய்து தனது இயல்பை/தனித்துவத்தை இழக்காமல் இன்றும் பிறருக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்.. அதனால் தனித்துவமாக தெரிகிறார்..

ஆனால் அவரது பெரியம்மாவினால் அப்படி செயற்ப்படமுடிந்திருக்குமே தெரியாது..தனது உணர்வுகளுக்கான உண்மையான குரல் இல்லாமல் வாழ்ந்து(?) மரணித்துவிட்டார் என்றே நினைக்கத்தோன்றுகிறது... இந்த மாதிரி நடைமுறைகள் எங்களிடையே இப்பொழுது இல்லாவிட்டாலும்
எங்களது சமூகத்தில் இருந்த/இருக்கும் சில நடைமுறைகள்தான் இன்னமும் எங்களது முன்னேற்றத்திற்கான தடைகற்கள் என நினைப்பதுண்டு..
 
4 hours ago, Nathamuni said:

அட நம்ம 'பாணா' நீங்கள்?

இவ்வளவு நாளும் தெரியாமல் போட்டுதே?

சுந்தரி இப்ப எங்க எண்டு தெரியுமே? ஆஸ்திரேலியா எண்டார்கள்.... இல்லை வேற இடம் எண்டார்கள்.... விசயம் தெரியுமே?

1 hour ago, Nathamuni said:

சுந்தரி.... அதுவும் ஒரு பட்டப்பெயரே. 👌

பாண் பதுங்கீட்டார்.

இவரை எங்கடா பார்திருகிறமே எண்டு யோசிக்கிறனான்.

இப்ப விளங்கீற்றுது. எப்பவும் இரண்டுடொரு பேரோட வருவார். நல்லா நியாயம் பிளப்பார்.

சைற் அடிப்பார்... ஒரு சி பெட்டைக்கு சைட் அடித்ததா, நிணைவு.

பாண் பதுங்கவில்லை... வீட்டிற்கு வர்ணம் பூச தொடங்கியிருக்கின்றேன். வேலை முடிய அதில் பிசியாக நேரம் போகின்றது.

சுந்தரியை நினைவில் இல்லை. படிக்கும் காலத்தில் என்னுடன் படிக்கும் பெண்களை சைட் அடிக்க வேண்டி இருக்கவில்லை. காரணம் என் மச்சாள் ஒருத்தியை சின்சியராக 8 ஆம் வகுப்பில் இருந்து காதலித்துக் கொண்டு இருந்த காலப் பகுதி அது (அது பின்னர் சரிவரவில்லை என்பது வேறு கதை). 

ஒரு வேளை என்னையும் சர்வேந்திரா என்ற அங்கு படித்த இன்னொரு நண்பனையும் குழப்பிக் கொள்கின்றீர்களோ என நினைக்கின்றேன். ஏனெனில் அவன் தான் கூடப் படித்த பெண் பிள்ளைக்கு கடிதம் கொடுத்து அப் பெண் பிள்ளை அப்பா அம்மாவுக்கு கூட அதைக் காட்டாமல் பிரேம்நாத் சேர் இடம் காட்டி பெரிய பிரச்சனையை உண்டு பண்ணியவர் - கடிதம் கொடுக்க தூது போனது நான் தான்.

1 hour ago, ரஞ்சித் said:

உங்களை நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும். உங்களின் செல்லப்பெயர் பிரபலமானதொன்று. நீங்கள் அரியக்குட்டி, புஷ்பநாதன், அஜந்தன்  மற்றும் குன்ஸி ஆகியோருடன் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

அஜந்தனையும் குன்ஸியையும் நன்றாக நினைவில் இருக்குது. 

பிரேம்நாத் சேரால் தான் எனக்கு இரண்டு கணிதப் பாடத்திற்கும் A கிடைத்தது. அதற்கு முதல் ஜித்தேந்திரன் சேரிடம் படித்து இருந்தாலும் பெரியளவுக்கு மண்டைக்குள் ஏறாமையால் கிராண்ட்பாசில் இருந்து வெள்ளவத்தைக்கு பிரேம்நாத் சேரிடம் படிக்க  வாரத்துக்கு 3 அல்லது 4 நாட்கள் வந்து போய்க் கொண்டு இருந்தேன். யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் சில காரணங்களால் போகாமல் IT பக்கம் ஒதுங்கி விட்டேன்.

3 hours ago, Kapithan said:

St. Annes lane பக்கமா அல்லது வாகை மரம் இருக்கும் ஒழுங்கையா 😂😂

கிட்ட வந்துவிட்டேனோ 😀

ஓம்

பாண்டியந்தாழ்வு ஞானவைரவர் ஆலயத்தில் இருந்து பேக்கரி பக்கமாக இரண்டாம் வீடு. வீட்டுக்கு முன்னுக்கு பிரபலமான சைக்கிள் பழுதுபாக்கும் கடை.

2 hours ago, வாத்தியார் said:

எப்போதாவது ஒரு நாள் ஊரில்,,, பக்கத்து வீட்டில்... சந்திப்போம் 😀

உங்களுக்கு என்னை / என் குடும்பத்தை / யாழ்ப்பாண வீட்டை தெரியும் என்பது எனக்கும் தெரியுமே..😀 !  அனேகமாக 4 ஆண் பிள்ளைகள் கொண்ட அயல் வீடு ஒன்றிற்கு நீங்கள் நெருக்கமானவர் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இல்லை இருவரும் வேறு வேறானவர்கள்...

உங்களை பல்கலையில் சந்தித்து இருக்கலாம் மொறட்டுவவில் படித்திருந்தால்

நான் மொறட்டுவையில்த்தான் படித்தேன். அக்டோபர் 1995 முதல் ஆகஸ்ட் 2000 வரை. உங்களை நிச்சயம் பார்த்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

நான் மொறட்டுவையில்த்தான் படித்தேன். அக்டோபர் 1995 முதல் ஆகஸ்ட் 2000 வரை. உங்களை நிச்சயம் பார்த்திருப்பேன்.

சிறிய உலகம் 😁 1993- 1997, இன்னுமெருவருடம் கஜே; 

அன்ரி குறுப்பா? வெள்ளவத்தை அமுதனை தெரியுமா.உங்களுக்கு ஒரு வருடம் சீனியர் என நினைக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சிறிய உலகம் 😁 1993- 1997, இன்னுமெருவருடம் கஜே; 

அன்ரி குறுப்பா? வெள்ளவத்தை அமுதனை தெரியுமா.உங்களுக்கு ஒரு வருடம் சீனியர் என நினைக்கின்றேன்

ஓம், அன்ரி குறூப்தான். அமுதன் எனது நண்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

சிறிய உலகம் 😁 1993- 1997, இன்னுமெருவருடம் கஜே; 

அன்ரி குறுப்பா? வெள்ளவத்தை அமுதனை தெரியுமா.உங்களுக்கு ஒரு வருடம் சீனியர் என நினைக்கின்றேன்

நான் 1991 - 1995 வரை படித்தேன். நானும் anti -ragging குரூப்தான்.😀

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

பிரேம்நாத் சேரால் தான் எனக்கு இரண்டு கணிதப் பாடத்திற்கும் A கிடைத்தது. அதற்கு முதல் ஜித்தேந்திரன் சேரிடம் படித்து இருந்தாலும் பெரியளவுக்கு மண்டைக்குள் ஏறாமையால் கிராண்ட்பாசில் இருந்து வெள்ளவத்தைக்கு பிரேம்நாத் சேரிடம் படிக்க  வாரத்துக்கு 3 அல்லது 4 நாட்கள் வந்து போய்க் கொண்டு இருந்தேன். யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் சில காரணங்களால் போகாமல் IT பக்கம் ஒதுங்கி விட்டேன்.

ள் கொண்ட அயல் வீடு ஒன்றிற்கு நீங்கள் நெருக்கமானவர் என நினைக்கின்றேன்.

யாழ் களத்தின் பலரும் இந்த ஏரியாவில்  சுத்தியவர்கள்  போலும்?

நான்  ஆமர் வீதி - பம்பலபிட்டிய 

155

167

101

மறக்கமுடியாத பயணங்கள்

தோழ தோழியர்கள்..???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

நல்லதொரு எழுத்து நடையில் எழுயிருக்கின்றீர்கள் ரகு.

சமூக பிரக்ஞையும், அக்கறையும், சக மனிதர்கள் மேல் அன்பும் ,நேர்மையும் கொண்ட மனிதர்களுக்கு பொதுவாக எம் சமூகத்தில் நல்ல மண வாழ்வு வாய்ப்பதில்லை, சமூகமும் "பிழைக்க தெரியாத இழிச்ச வாயன்" என்று மட்டம் தட்டி ஒரு மூலையில் வீசி விட்டுவிடும். அப்படி வீசப்பட்ட ஒருவராக ராசா அண்ணை இருந்தாலும் அவர்  சமூகத்துடன் சமரசம் செய்து தன் இயல்பை விட்டுக் கொடுக்காமல்  இன்றும் பிறருக்கு உதவி செய்து கொண்டிருப்பதை காண அவர் மேல் மேலும் மரியாதை கூடுகின்றது.

நானும் 1993 இல் பிரேம்நாத் மாஸ்டரிடம் வெள்ளவத்தை இன்ரமொட்டில் கணிதம் படித்தவன் தான். சிலவேளை உங்களுடன் சேர்ந்து படித்து இருப்பன் என நினைக்கின்றேன். என்னை "பாண்" என்ற பட்டப் பெயர் வைத்து அழைப்பார் (சுண்டிக்குளி - பாண்டியந்தாழ்வு பேக்கரி என் பக்கத்து வீடுகளில் ஒன்று என்பதால் இந்தப் பட்டப் பெயர்)

என்னை பாதித்த மனிதர்களுக்குள் பிரேம்நாத் சேர் ரும் ஒருவர். அவரது பாதிப்பால் நான் பிரம்மகுமாரிகள் சபை / அமைப்பில் சேர்ந்து கொஞ்ச காலம் தியானம் பயின்றும் இருக்கின்றேன். கடவுள் பற்றிய தர்க்கம் ஒன்றில் ஈடுபட்டதால் பிரம்மகுமாரி ஆன்மிக சபையால் வெளியேற்றப்பட்டேன்.

நானும் படிச்சிருக்கிறேன். உலக இளங்கணிதவியலாளர் போட்டிக்காக  இலங்கை சார்பாக ஆர்ஜென்ரீனாவுக்கு செல்லும் குழுவில் இடம்பெற்றிருந்த காலத்தில் அவரிடம் கணித பயிற்சிக்கு சென்றிருந்தேன்.

ஆனாலும் என் ஆஸ்தான ஆசிரியர் உடுப்பிட்டி வெக்டர் மாஸ்ரர் தான். அவரிடம் அவர் வீட்டில் கல்விகற்றதை நினைச்சு இண்டைக்கும் பெருமைப்படுவேன்.

2 hours ago, Eppothum Thamizhan said:

நான் 1991 - 1995 வரை படித்தேன். நானும் anti -ragging குரூப்தான்.😀

அது சரி கலீல் நானாவைத்தெரியுமா .??

ரஞ்சித் அண்ணை ஒரு கதை எழுதி B ஹொஸ்ரல் கஜேகாரர்களை எல்லாம் ஒண்டாச்சேர்க்கிறீங்கள் போல 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

ஓம்

பாண்டியந்தாழ்வு ஞானவைரவர் ஆலயத்தில் இருந்து பேக்கரி பக்கமாக இரண்டாம் வீடு. வீட்டுக்கு முன்னுக்கு பிரபலமான சைக்கிள் பழுதுபாக்கும் கடை.

உங்கட வீட்ட குறிப்புப் பார்க்கிறவர் இருந்தவரோ ? ஏன் கேட்கிறேன் என்றால் அந்த வீட்டிற்கு நான் வந்து போயிருக்கிறேன் 😂

36 minutes ago, Kapithan said:

உங்கட வீட்ட குறிப்புப் பார்க்கிறவர் இருந்தவரோ ? ஏன் கேட்கிறேன் என்றால் அந்த வீட்டிற்கு நான் வந்து போயிருக்கிறேன் 😂

1984 இல் இருந்து 2002 வரைக்கும் அப்படி ஒருவரும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஓர் இடத்தில் "லயன் அறையில் படம் ஓடும்" என்று கிடக்கு உது என்ன படம்? பக்தி படமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரேம்நாத் மாஸ்டர், கீழே சொல்லப்பட்டு இருக்கும் நூல்களை பாவித்ததை யாரவது கண்டு இருக்கிறீர்களா? வேறு சில நூல்களை மறந்து விட்டேன்.

1) University Mathematics by  Blackey (இது ஓர் பச்சை சாயலான சாம்பல் நிற நிறத்தில், அந்த நூலுடன் வந்த  உறை இருந்திருக்கும். 2 இஞ்சி அளவு  தடிப்பு)

2) Coordinate Geometry by  Loney (இது இளம்பச்சை நிற மெல்லிய துணியாலான உறை, ஓரளவு கரைகளில் சிலும்பி இருந்திருக்கும்)

3) Trigonometry  by  Loney (இதன் உறை கடும் maroon நிறம், பிளாஸ்டிக் போன்ற தடித்த மட்டை உறை)

4) ஓர் Algebra நூல் (கருமையான சாம்பல் நிற உறையுடன், 2.5 இஞ்சிகள் தடிப்பு உள்ள புத்தகம்). நூலாசிரியர் பெயர் மறந்து விட்டது.

5) College Algebra (இதன் உறை கடும் maroon நிறம், பிளாஸ்டிக் போன்ற தடித்த மட்டை உறை, 1 இஞ்சி அளவு தடிப்பு). நூலாசிரியர் பெயர் மறந்து விட்டது.

6) தூய கணிதம். சி. நடராசர். (தடித்த மட்டையிலான உறை)  

7) Statics by Ramsey ( வெள்ளை நிற உறை என்று நினைவு  )

😎 Dynamics by  Ramsey (வெள்ளை நிறத்தில் நீல கோடுகள் ஆன உறை என்று நினைவு )  

9) Hydro Statics by Ramsey    (இதன் உறை பச்சை கலந்த நீல நிறமும் மற்றும் இள  நீல நிற தடித்த மேலிருந்து கீழான போக்கில் கோடுகள் (panels)  என்று நினைவு) 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 17:53, ரஞ்சித் said:

புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

ராசா அண்ணை போல இப்படி பலரும் இருக்கலாம். அவரைப் போல எதுவித நன்றிகளும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவுபவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

ராசா அண்ணை புத்தகம் படித்தார் என்பது அவர் உங்களுக்கு படிக்கத்தந்த புத்தகங்களில் இருந்து தெரிகின்றது🙂. ஆனால் பட்டம், பதவி, சுயதம்பட்சம் இல்லாத எளிமையான மனிதர். அதனால்தான் எதையும் இலேசாக எடுத்து தன்னுடைய வாழ்க்கையை எதுவித பதட்டங்கள் இன்றி நடாத்துகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 17:53, ரஞ்சித் said:

நான் எனது வாழ்நாளில் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ராசா அண்ணைக்கு என்றும் ஓரிடம் இருக்கும். புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

புத்தக படிப்பு மற்றும் துறை சார்ந்த படிப்பு என்பது (விஞ்ஞானம் கூட) ஓர் reference framework.

அந்த frame work எவரின் சிந்தனை ஓட்டத்தில் பதிந்து விட்டால், அதை மீறி அவர்கள் வருவது கடினம்.

இதனால் தானோ, தமிழ் தலைவர்களால்  சிங்களத்தை கையாள முடியவில்லை என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

இதனாலேயே, இங்கு விஞ்ஞானம் என்றால் நாம் (அந்த விஞ்ஞானம் சொல்லும்) வரலாற்றை ஏற்கிறோம் என்பவர்களின் வாதம் தவறு  என்கின்றேன். 

இதை உங்களின் தனிப்பட்ட அனுபத்தில்  எழுதுவதற்கு மன்னிக்கவும்.

விஞ்ஞானம் ஒரு பகுதியாக இருக்க முடியுமே தவிர, அது சொல்லும் தரவு மட்டும்  வைத்து வரலாறு சொல்லப்பட முடியாது.

இயேசு பௌத்த துறவி எனும் திரியில் புதிய பதிவை ஐடா இருக்கிறேன். 

அது இதுவரைக்கும் இருக்கும் வரலாற்றை புரட்டிப் போடும்.

மற்றது, இந்த விஞ்ஞான ஆய்வுகள், வரலாற்றாய் பொறுத்தவரையில், ஏற்கனனவே இருக்கும் frame  work உடன் முரண்படும் கருதுகோள் என்றால், நிதி மறுக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

நான் 1991 - 1995 வரை படித்தேன். நானும் anti -ragging குரூப்தான்.😀

உங்களையும் கண்டிருக்கின்றேன், நான் கஜே தொடங்கியது 1992 இல் இருந்து .....இளங்குமரன்... கணேக்ஸ் .... பெரியப்பா.... தயாளன்.......சாத்திரி...

11 hours ago, ரஞ்சித் said:

ஓம், அன்ரி குறூப்தான். அமுதன் எனது நண்பர்.

எல்லாரும் ஒன்றாகதான் இருந்திருக்கின்றோம் எவ்வளவு சிறிய உலகம், அமுதனும் என் நண்பர்.... அவரின் கூட்டமும்..... கலையரசன் (உயரமானவன்).... தர்ஷனி.... 😂

8 hours ago, முதல்வன் said:

நானும் படிச்சிருக்கிறேன்.

அது சரி கலீல் நானாவைத்தெரியுமா .??

ரஞ்சித் அண்ணை ஒரு கதை எழுதி B ஹொஸ்ரல் கஜேகாரர்களை எல்லாம் ஒண்டாச்சேர்க்கிறீங்கள் போல 🤣

அட B ஹொஸ்ரல் குறுப் தொடங்கலாம் போல இருக்கு😁

New Hostel எல்லா இடமும் கஜேதான்😂 

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித், பொதுவாக நான்... கதைகள் படிப்பது குறைவு.
நேற்று, சும்மா ஒருக்கால் எட்டிப் பார்ப்போம் என்றுவந்து.. 
முதல் பந்தியை, வாசிக்க தொடங்கிய பின், அதனை விட்டு நகர முடியாமல்...
முழுப் பகுதியையும்... ஒரே மூச்சில் வாசிக்க வைத்து விட்டது உங்கள் எழுத்து. 👍

ராசா அண்ணை... பணக்கார குடும்பத்தில் பிறந்து,
திருமணவாழ்வு வரை... எத்தனையோ துன்பங்களை அனுபவித்த பின்பும்,
இன்று அவர்... பத்துப் பேருக்கு தொழில் வழங்கக் கூடிய நிலையில் இருக்கும்..
அவரது மனத் தைரியத்தை பார்த்து,  வியந்து போனேன். 🙏

உங்கள் கதையின் மூலம்... யாழ். களத்தில் மீண்டும், 
பழைய  நண்பர்கள் அறிமாகியுள்ளது.. இன்னும் சிறப்பு.  :)

பதிவுக்கு நன்றி.

இறுதிப்போரும் தடைமுகாமும் துன்பங்களையும் கடந்து வாழ்வை தெடருவது ஒரு முன்னுதாரணம்தான். வாழ்க்கை குறித்த ஒரு புரிதலும் தேடலும் எப்போதும் ஒரு ஆரோக்கியத்தை எற்படுத்தும்

பணியிடத்தில் 35 வருடங்களாக வேலை செய்து இரண்டு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஒருவர்  நேற்று காலை மரணித்து விட்டார் என்று  குறுஞ் செய்தி வந்தது. உடற் பருமனோ ஆரோக்கியக் குறைவோ அவருக்கு இருந்ததாக நான் கருதவில்லை.  தற்போதைய தொற்று நோயும் தாக்கவில்லை. எனது புரிதலின்படி வேலை அவரும் இயக்கும் சக்தியாக இருந்திருக்கலாம் அது முடிவுக்கு வந்ததும் அவரை பாதித்திருக்கலாம்.  குறைந்தது என்னுமொரு பத்து வருடம் ஒய்வூதியத்தில் வாழ்ந்திருக்காலம் என்று யோசித்தேன். 

ஒருவரின் வாழ்க்கை முறையும் இயல்பும் நல்ல ஒரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கு பதிவதற்கு அதுவும் ஒரு காரணம். இங்கு பதிந்ததால் எமக்கும் ஒரு நல்ல உணர்வு அவரது அனுபவத்திலிருந்து கிடைக்கின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

நான் 1991 - 1995 வரை படித்தேன். நானும் anti -ragging குரூப்தான்.😀

உங்களைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்காதென்று நினைக்கிறேன். 1995 ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதத்தில்தான் பல்கலையில் சேர்ந்தேன். ராக்கிங் பிரச்சினையால் முதல் 3 மாதங்கள்வரை எனது சீனியர்கள் எவரிடமும் பேசும் சந்தர்ப்பம் இருக்கவில்லை, ஒரு சிலரைத்தவிர. நீங்கள் பல்கலை முடிந்தபின்னரும் தொடர்ந்தும் கஜை அடித்திருந்தால் சிலசமயம் உங்களைக் கண்டிருப்பேன்.

18 hours ago, Eppothum Thamizhan said:

நான் 1991 - 1995 வரை படித்தேன். நானும் anti -ragging குரூப்தான்.😀

உங்களின்பெயரைச் சொன்னால் நிச்சயம் தெரிந்திருக்கும். அவ்வருடத்தில் இறுதியாண்டில் பயின்ற ஒரு சில அண்ணாமார் என்னை ராக்கிங்கிலிருந்து வெளியே எடுத்துவிட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகக் கூட நீங்கள் இருக்கலாம்.

18 hours ago, விசுகு said:

யாழ் களத்தின் பலரும் இந்த ஏரியாவில்  சுத்தியவர்கள்  போலும்?

நான்  ஆமர் வீதி - பம்பலபிட்டிய 

155

167

101

மறக்கமுடியாத பயணங்கள்

தோழ தோழியர்கள்..???

ஓமண்ணை. 100, 101, 102, 155, 255 இப்பிடி எல்லா பஸ்களிலும் வலம் வந்தவர்கள் தான். சிலவேளை நீங்களும் நானும் ஒரே பஸ்ஸில் கூட பயணித்திருக்கலாம், எவரென்றே தெரியாமல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, முதல்வன் said:

நானும் படிச்சிருக்கிறேன். உலக இளங்கணிதவியலாளர் போட்டிக்காக  இலங்கை சார்பாக ஆர்ஜென்ரீனாவுக்கு செல்லும் குழுவில் இடம்பெற்றிருந்த காலத்தில் அவரிடம் கணித பயிற்சிக்கு சென்றிருந்தேன்.

ஆனாலும் என் ஆஸ்தான ஆசிரியர் உடுப்பிட்டி வெக்டர் மாஸ்ரர் தான். அவரிடம் அவர் வீட்டில் கல்விகற்றதை நினைச்சு இண்டைக்கும் பெருமைப்படுவேன்.

அது சரி கலீல் நானாவைத்தெரியுமா .??

ரஞ்சித் அண்ணை ஒரு கதை எழுதி B ஹொஸ்ரல் கஜேகாரர்களை எல்லாம் ஒண்டாச்சேர்க்கிறீங்கள் போல 🤣

பிரேம்நாத் மாஸ்ட்டர் கூட வெக்டர் வேலாயுதத்தின்ர சிஷ்யன் தான். அவர் அடிக்கடி கூறும் இன்னொரு பெயர் வலண்டைன்.  "காவிகள்" படிப்பிக்கும்போது இவர்பற்றி அடிக்கடி சொல்லுவார். சார்புவேகமும், ஆப்பும் பிரேம்நாத்தின்ர ஸ்பெஷல். அவர் ஒரு மேதை. 

நீங்கள் எழுதுவதைப் பார்க்கும்போது நீங்கள் கணிதத்தில் புலி என்று தெரிகிறது. 

நான் கூட நியூ ஹொஸ்டலில் கஜை அடித்தேன், முதலாம் வருடத்திலும் நான்காம் வருடத்திலும். ஹொஸ்டல் பி இற்கு நண்பர்களுடன் மெஸ்ஸில் வேலை செய்தேன், சில வாரங்கள் மட்டும். மற்றும்படி கிரிக்கெட் பார்க்க, நண்பர்களைத் தரிசிக்கவென்று அடிக்கடி போய்வரும் இடம்தான் பி ஹொஸ்டல். 

14 hours ago, colomban said:

கதையில் ஓர் இடத்தில் "லயன் அறையில் படம் ஓடும்" என்று கிடக்கு உது என்ன படம்? பக்தி படமா?

அண்ணோய், இவ்வளவு சனமும் வேறு விஷயம் கதைக்க, நீங்கள் மட்டும் பொயின்ரில நிக்கிறியள். அதேதான் விட்டுறாதேங்கோ, பக்திப்படம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

உங்களையும் கண்டிருக்கின்றேன், நான் கஜே தொடங்கியது 1992 இல் இருந்து .....இளங்குமரன்... கணேக்ஸ் .... பெரியப்பா.... தயாளன்.......சாத்திரி...

இவர்கள் எல்லோரையும் தெரியும். நான் சதீஸ், திருச்செல்வம், சுரேஷ், சுவேந்திரன் போன்றவர்களின் Batch mate. இதைவிட எழுதினால் பெயர்சொல்வதுபோலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

இவர்கள் எல்லோரையும் தெரியும். நான் சதீஸ், திருச்செல்வம், சுரேஷ், சுவேந்திரன் போன்றவர்களின் Batch mate. இதைவிட எழுதினால் பெயர்சொல்வதுபோலாகும்.

வேண்டாம் கட்டாயம் சந்தித்து இருப்போம்👍

சுவேந்திரனை கொண்டுதான் என் மனைவியின் மாமா வழக்கு போட்டவர் அரசுக்கு ஏதிராக, நல்ல வெற்றி அது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

) Coordinate Geometry by  Loney (இது இளம்பச்சை நிற மெல்லிய துணியாலான உறை, ஓரளவு கரைகளில் சிலும்பி இருந்திருக்கும்)

3) Trigonometry  by  Loney (இதன் உறை கடும் maroon நிறம், பிளாஸ்டிக் போன்ற தடித்த மட்டை உறை)

4) ஓர் Algebra நூல் (கருமையான சாம்பல் நிற உறையுடன், 2.5 இஞ்சிகள் தடிப்பு உள்ள புத்தகம்). நூலாசிரியர் பெயர் மறந்து விட்டது.

5) College Algebra (இதன் உறை கடும் maroon நிறம், பிளாஸ்டிக் போன்ற தடித்த மட்டை உறை, 1 இஞ்சி அளவு தடிப்பு). நூலாசிரியர் பெயர் மறந்து விட்டது.

இப்புத்தகங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.

14 hours ago, Kadancha said:

7) Statics by Ramsey ( வெள்ளை நிற உறை என்று நினைவு  )

😎 Dynamics by  Ramsey (வெள்ளை நிறத்தில் நீல கோடுகள் ஆன உறை என்று நினைவு )  

9) Hydro Statics by Ramsey    (இதன் உறை பச்சை கலந்த நீல நிறமும் மற்றும் இள  நீல நிற தடித்த மேலிருந்து கீழான போக்கில் கோடுகள் (panels)  என்று நினைவு) 
 
இந்தப்புத்தகம் பற்றியும் அடிக்கடி பேசுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரஞ்சித் said:

உங்களைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்காதென்று நினைக்கிறேன். 1995 ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதத்தில்தான் பல்கலையில் சேர்ந்தேன். ராக்கிங் பிரச்சினையால் முதல் 3 மாதங்கள்வரை எனது சீனியர்கள் எவரிடமும் பேசும் சந்தர்ப்பம் இருக்கவில்லை, ஒரு சிலரைத்தவிர. நீங்கள் பல்கலை முடிந்தபின்னரும் தொடர்ந்தும் கஜை அடித்திருந்தால் சிலசமயம் உங்களைக் கண்டிருப்பேன்.

நான் அப்போது Physics Lab இல் Instructor ஆக இருந்தேன். December 1995இல் வெளிநாடு வந்துவிட்டேன்.

7 minutes ago, உடையார் said:

வேண்டாம் கட்டாயம் சந்தித்து இருப்போம்👍

சுவேந்திரனை கொண்டுதான் என் மனைவியின் மாமா வழக்கு போட்டவர் அரசுக்கு ஏதிராக, நல்ல வெற்றி அது

UoM  தமிழ் குளோபல் குரூப்பில் இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

நான் அப்போது Physics Lab இல் Instructor ஆக இருந்தேன். December 1995இல் வெளிநாடு வந்துவிட்டேன்.

UoM  தமிழ் குளோபல் குரூப்பில் இருக்கிறீர்களா?

 இல்லை, தேடிப்பார்த்து இணைவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.