Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சமீபத்தில் பல குடும்ப நிகழ்வுகளில் கலந்துள்ள நிலையில், இக்குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், அல்லது கலந்துகொண்டவர்களுடன் கடந்த வாரத்தில் நேரடியாக பழகியவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்துமாறும், பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜேர்மனிய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடுகள் ரீதியாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இப்படியான குடும்ப நிகழ்வுகளின் அத்தியாவசியத்தினை ஆராய்ந்து முழு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.tamilwin.com/germany/01/257110?ref=imp-news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலமையிலையும் சாமத்திய வீடு செய்திருக்கிறாங்கள்....😡
96 பேருக்கு கொரோனா.....வந்த மிச்ச பேரை தேடித்திரியுறாங்களாம்....அது பரீஸ்....கொலண்ட்....டென்மார்க் எண்டு தொடருதாம்.....இப்ப அந்த சிற்றியையே  இழுத்து மூடுறாங்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இந்த நிலமையிலையும் சாமத்திய வீடு செய்திருக்கிறாங்கள்....😡
96 பேருக்கு கொரோனா.....வந்த மிச்ச பேரை தேடித்திரியுறாங்களாம்....அது பரீஸ்....கொலண்ட்....டென்மார்க் எண்டு தொடருதாம்.....இப்ப அந்த சிற்றியையே  இழுத்து மூடுறாங்களாம்.

தெரிந்து கொண்டு ஏன் கூத்தடித்தவை ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பெருமாள் said:

தெரிந்து கொண்டு ஏன் கூத்தடித்தவை ?

நாங்கள் எத்தினை குண்டுகளை தாண்டி வந்தனாங்கள். கொரோனாவது மண்ணாங்கட்டியாவது....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எத்தினை குண்டுகளை தாண்டி வந்தனாங்கள். கொரோனாவது மண்ணாங்கட்டியாவது....:grin:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பெருமாள் said:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

கவனமாய் இருப்பது என்பதை விட விதி என்பது சரி போல் இருக்கின்றது...
பாடகர் பாலசுப்பிரமணியம் ஒரு பணக்காரர். அவர் அண்மைக்கால நிகழ்ச்சிகளில் முககவசம் கையுறை என்பனவற்றுடனேயே திரிந்தார். எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு புத்திமதியும் பிரார்த்தனையும் செய்தார்.
இறுதியில் நடந்தது என்ன?

தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் பெருமாள். பாதுகாப்பாக நடு வீட்டுக்குள் இருந்து சுவர் இடிந்து விழுந்தாலும் மரணம்தான்.
எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தினமும் ஊரில் நடக்கும் தற்கொலைகளை பார்த்தே நொந்து போறவன் விதி கிதி என்று சொல்லாமல் பாதுகாப்பாய்  இருங்கள் sb யின் வயதா உங்களது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வைத்தியரின் பதிலில் கொஞ்சம் குளப்ப மிரூக்கிறது.திகதிகளி தடுமாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

முக்கியமான விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள், வருடாந்திர கொண்டாட்டங்கள் என்று..
எதுவுமே நடத்தாமல்... எல்லோரும் சமூக பொறுப்புடன் இருக்கும் போது,

இப்ப சாமத்தியச் சடங்கை நடத்தியவர்களை... என்னவென்று சொல்வது.
இதனால் பாதிக்கப் படப் போவது, அவர்களின் நெருங்கிய உறவினர்களும், 
நண்பர்களும் என்பதை...   முன்பே சிறிது சிந்தித்திருந்தால்... இதனை தவிர்த்திருக்கலாமே...
அவர்களை நினைக்க... கோவம் தான் வருகின்றது.

நான் கோவிலுக்கோ, கடைகளுக்கோ அனாவசியமாக போகாமல் கட்டுப் பாட்டுடன்தான் உள்ளேன்.
ஆனாலும்... வேலை இடத்தில், தினமும்... கிழக்கு ஐரோப்பியர் உட்பட, 
தினமும் பலரை சந்திக்க வேண்டி இருப்பதால்... கொஞ்சம்  பயத்துடன் தான் இருக்க வேண்டி உள்ளது.
உங்கள் அக்கறைக்கு... நன்றி  பெருமாள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நான் கோவிலுக்கோ, கடைகளுக்கோ அனாவசியமாக போகாமல் கட்டுப் பாட்டுடன்தான் உள்ளேன்.

அவருடைய கட்டுப் பாட்டைக் கேட்டுச் சகிக்க முடியாமல் கொரோனாவும் காத தூரத்தில் காதைப் பொத்திக்கொண்டு நிற்கிறதாம். 

நல்லகாலம், ஓசியில் மருந்தடிக்காத மரக்கறி தருகிறேன், வீட்டுக்கு வாருங்கள் என்றேன் மறுத்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

அவருடைய கட்டுப் பாட்டைக் கேட்டுச் சகிக்க முடியாமல் கொரோனாவும் காத தூரத்தில் காதைப் பொத்திக்கொண்டு நிற்கிறதாம். 

நல்லகாலம், ஓசியில் மருந்தடிக்காத மரக்கறி தருகிறேன், வீட்டுக்கு வாருங்கள் என்றேன் மறுத்துவிட்டார்.

பாஞ்ச் அண்ணை...   இந்த மரக்கறி விசயத்தை மறந்திருப்பார் என்று பார்த்தால்... 😁

ஆள்...மறக்கிற மாதிரி தெரியவில்லை.  😀

நாம் எவ்எளவு பட்டாலும் மாறப்போவதில்லை. வேறு என்ன சொல்வது இவர்களை ...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

இந்த வைத்தியரின் பதிலில் கொஞ்சம் குளப்ப மிரூக்கிறது.திகதிகளி தடுமாற்றம்.

SPB முதல் நாளே இறந்து விட்டதாகவும், வைத்தியசாலை.... பணத்தினை வை என்று அடம் பிடித்து, ஆள் சீரியஸ் என்று கதை விட்டு கொண்டிருந்ததாகவும் கதைகள் வருகின்றன.

மகன் சரண், அரசு உதவி கோரி, சமரசம் பேசியே உடல் வழங்கப்படுள்ளதாக தெரிகிறது.

முதலில் மறுத்த சரண், அரசு உதவி கேட்டது உண்மை என்று இன்று சொல்லி உள்ளார்.

தான் பணத்துடன் போனதாகவும், வைத்தியசாலை சேர்மன் வாங்க மறுத்து விட்டதாகவும், பிறகு பார்க்கலாம் என்று சொன்னதாகவும் சொல்லி உள்ளார்.

ஆக.... அரசு அல்லது வேறு பிரபலங்கள் சேர்ந்து, பணம் கொடுத்திருக்கலாம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாம் ஒரு இறந்த ஆத்மாவை வைத்து விமர்சனம் பகிர்வது தவறு..ஆனாலும் அவரது மகன் உட்பட சிலரை நினைக்கும் போது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.இளையராஜா அவர்கள் மோட்ச விளக்கோடு நின்று விட்டார்..மற்றவர்கள் ஒவ்வொரு நாடு நாடாக இருந்து வெறும் அஞ்சலியோடு சரி.இனி பேச என்ன இருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.அது போக தமிழ்மக்களின் கொண்டாடங்களில் பரவுதல் நடக்கிறதாக அறியக் கூடியதாக இருக்கிறது..நிறைய விடையங்கள் வெளி வருவது மிகவும் குறைவு.நான் கடந்த சில தினங்ளுக்கு முன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றேன்..அங்கு இரண்டு நம் இனத்து பெண்கள் தங்களுக்கு தாங்களே ஏதோ பார்சல் பரிமாற்றத்தில் நின்றார்கள் அதுவும் பார்க்கிங்லொற் பக்கத்தில்..ஒரு பெண் மற்றைய பெண்ணுக்கு இதை கை காவலுக்கு வைச்சுக்கோ உறுதி செய்யப்பட்டால் பின் பார்ப்போம் என்று சொல்லியது நான் அவர்களை கடந்து செல்லும் போது காதில் விழுந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணை...   இந்த மரக்கறி விசயத்தை மறந்திருப்பார் என்று பார்த்தால்... 😁

ஆள்...மறக்கிற மாதிரி தெரியவில்லை.  😀

கவனம் சிறித்தம்பி! உது பிறகு கறளாய் மாறீடும். எதுக்கும் சும்மா சம்பிரதாயத்துக்காகவாவது இரண்டு தக்காளிக்காயை புடுங்கிக்கொண்டு ஓடியாங்கோ 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பாராட்டலாம் கட்டுப்படுத்தியுள்ளார்கள் ஆனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களால்தான் கொஞ்சம் சிக்கல் இருந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்கிறது 

ஜேர்மன் தமிழ் ஆட் கள் சொல் பேச்சி கேட் க மாட்டார்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வல்வை சகாறா said:

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Maruthankerny said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஜேர்மன் தமிழ் ஆட் கள் சொல் பேச்சி கேட் க மாட்டார்கள் போல

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் அதை போடுவதன் மூலம் உடலில் கொரோனா எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி நோய் வராமல் தப்பலாம்.ஆனால் பாடசாலைகள் திறப்பதன் மூலம் எப்படி எதிர்பாற்றலை வளர்க்க முடியும் அப்படி முடியுமாயின் அள்ளுபட்டு ஸ்பெயின் பிரான்ஸ் போவதும் கொரோனா எதிர்ப்பாற்றலை வளர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

என்ன இப்படி  சொல்லிக்கிறீர்கள் 
உங்களின் 80 வீதமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு 
சீமானின் கருத்துக்களில் கூட ஏனெனில் கண்ணைமூடிக்கொண்டு 
எமக்கு சாதகமாக பேசுகிறார் என்று ஆதரவு கொடுப்பது நல்ல எண்ணத்தில் இருக்கும் 
சீமானையும் மாற்றக்கூடியது 

இதுக்கு நல்ல உதாரணம் தற்போதைய அமெரிக்க லூசு ஜனாதிபதி 
அவரை இந்த அளவுக்கு லுஷன் ஆக்கியத்தில் பெரும்பங்கு அவரை கண்ணை மூடிக்கொண்டு 
ஆதரிக்கும் ஆதரவு கூட்டத்தை சேரும். 

தூற்றுதல் என்பதுதான் மறுக்கும் 20 வீதம் 
சீமான் தெலுங்கர்களுக்கு எதிராளி அல்ல 

என்னாவது செய்யுங்கள் 
என்னையும் குழந்தையையும் தமிழ் - தெலுங்கு என்று தயவு செய்து பிரித்து விடாதீர்கள்.
போங்கடா நீங்களும் உங்கள் தமிழும் என்று விட்டு போய்விடுவேன் 

Kajal Agarwal Hot HD Photos in Saree (1080p) - #135 #kajalagarwal #kajal  #kollywood #tollywood #m… | Kerala saree blouse designs, Kerala saree  blouse, Elegant saree

Whose navel is better, Kajal Agarwal or Tammanah Bhatia? - Quora

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அனுஸ்காவும் தமிழ் என்று அறிவிச்சா நானும் உங்கள் கட்சிதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.