Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்! | Athavan News

நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்த அறிப்பினை வெளியிட்டுள்ளார்.

நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நிலவுக்கு-விண்கலம்-அனுப்/

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே எண்ணை இருக்கிறதா என்று பார்ப்பதற்காக இருக்குமோ 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Kapithan said:

அங்கே எண்ணை இருக்கிறதா என்று பார்ப்பதற்காக இருக்குமோ 😀

அங்கையும் எத்தினை கலியாணம் கட்டலாம் எண்டு பார்க்கவாய் இருக்கும். 😎

  • கருத்துக்கள உறவுகள்

நோன்புக்கு பிறை பார்க்கிறதை... இல்லாமல் செய்து புது வழியில்.. நிலாப் பார்ப்பாய்ப்பாங்க போல.

எல்லாரும் போறாய்ங்க.. அல்கா குறூப் நாங்க போகாட்டி....?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கையும் எத்தினை கலியாணம் கட்டலாம் எண்டு பார்க்கவாய் இருக்கும். 😎

இந்த வயசிலயும் இந்தக் குசும்பு .. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அங்கே எண்ணை இருக்கிறதா என்று பார்ப்பதற்காக இருக்குமோ 😀

இவர்களின் காசை எப்படி புடுங்குவது என்று அமெரிக்க யூத முதலாளிகள் 
புது புது ஐடியாக்களுடன் செல்கிறார்கள் ... இந்த மதனமுத்தன்களும் சலிக்காமல் 
செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் 

7 hours ago, ராசவன்னியன் said:

மதனமுத்தன்..? ஏதும் காரணப் பெயரா..?

“பரமார்ததகுருவும் அவரது சிஷயர்களும்” என்ற கதை  போல மாதனமுத்தா என்ற  ஊர்த்தலைவரை வைத்து சிங்கள நாட்டுப்புற கதைத்தொகுதி உண்டு. அதையே மருதங்கேணி குறிப்பிட்டார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

இவர்களின் காசை எப்படி புடுங்குவது என்று அமெரிக்க யூத முதலாளிகள் 
புது புது ஐடியாக்களுடன் செல்கிறார்கள் ... இந்த மதனமுத்தன்களும் சலிக்காமல் 
செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் 

லண்டன் வெள்ளையல் படித்த முடித்தவுடன், இவர்களில்தான் பழக வருக்கின்றாவர்கள்😂

லண்டனில் Foreman இங்கு Project Manager🤣; தோலும் கதையும் செய்யும் வேலை

Swimming Pool உடன் தனி வீடு😁

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ஐயா. ஒன்றுமே தெரியாத எகிப்தியன் இங்கு எந்திரிமார் ஆக இருப்பான்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

உண்மை ஐயா. ஒன்றுமே தெரியாத எகிப்தியன் இங்கு எந்திரிமார் ஆக இருப்பான்

இதைவிட பல உதாரணங்கள் சொல்லாம். வேலை செய்யும் போது Qatar இன் அரசாங்கத்தில் வேலைக்கு எடுக்கும் ஆட்கள் ஒருவரை சந்திக்க நேர்ந்தது, அவர் ஒரு பலஸ்தீனியன் அவர் சொன்னது வேலைக்கு ஆசியர் கூட்டத்தில் எடுப்பது;

கதைப்பதற்கு வெள்ளையல் அவர்களின் படிப்பைபற்றி கவலை இல்லை, Passport மட்டும்தான் முக்கியம், சம்பளமும் Passport க்கு ஏற்ற மாதிரிதான் 😎

இப்ப என் Passport க்கு நல்ல சம்பளம்😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

முந்தி நிறய பிரிடிஷ் இருந்தார்கள். இப்ப சவுத் ஆபிரிக்க வெள்ளைகள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருகின்றார்கள். ஆனால் இவர்கள் துவெசமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 23:41, தமிழ் சிறி said:

நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்! | Athavan News

நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்த அறிப்பினை வெளியிட்டுள்ளார்.

நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நிலவுக்கு-விண்கலம்-அனுப்/

இலங்கயில் புத்தகம் முதல்குடி நாம் என புத்தகம் வெளியிட்டது போல...நிலவிலும் நாம்தான் முதல் குடி...அங்குகட்டும் பள்ளியின் கோபுரத்தை பூமியில் இருந்தே பார்க்கலாம்.. ஹ ..ஹா.ஹா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

நோன்புக்கு பிறை பார்க்கிறதை... இல்லாமல் செய்து புது வழியில்.. நிலாப் பார்ப்பாய்ப்பாங்க போல.

எல்லாரும் போறாய்ங்க.. அல்கா குறூப் நாங்க போகாட்டி....?!

Flag Waving On The Moon ......... APOLLO 17 NASA GIF | Gfycat

அப்பலோ 11´ல் நிலவுக்குப் போய்.. ஆம்ஸ்ரோங் கால் வைத்த போது,
உலகில் சில இஸ்லாமியர்கள்,  நாங்கள்  வணங்கும் நிலவில்,
வெள்ளைக்காரன்.... கால் வைத்து விட்டானே என்ற அதிர்ச்சியில்..
சில முஸ்லீம்கள் மாரடைப்பு வந்து இறந்ததாக... 
அப்போதைய பத்திரிகைகளில்  செய்தி வந்தது.

2 minutes ago, தமிழ் சிறி said:

சிவனின் தலையில் நிலவு இருப்பதாக கூறியது பக்கா ஏமாற்று  என்ற விடயம்   நன்கு தெரிந்ததால்  எமது சைவ தமிழர்கள் அப்படி செய்யவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

சிவனின் தலையில் நிலவு இருப்பதாக கூறியது பக்கா ஏமாற்று  என்ற விடயம்   நன்கு தெரிந்ததால்  எமது சைவ தமிழர்கள் அப்படி செய்யவில்லை. 

Amazon.com: Blessing Lord Shiva/ Hindu God Poster with Glitter-reprint on  paper (Unframed : Size 12"X16" Inches): Posters & Prints

சிவனின் தலையில் இருப்பது... பிறை, அது முழு நிலவு அல்ல. 😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

உண்மை ஐயா. ஒன்றுமே தெரியாத எகிப்தியன் இங்கு எந்திரிமார் ஆக இருப்பான்

வச்சிருக்கிற காசுக்கு என்ன செய்யும் அமீரகம் வாழ்த்துக்கள் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்களும் 

இந்த மிசிறிகள் அதேதான் காக்கை பிடிப்பதில் உலகமகா வல்லவர்கள் 

12 minutes ago, தமிழ் சிறி said:

சிவனின் தலையில் இருப்பது... பிறை, அது முழு நிலவு அல்ல. 😜

பிறையும் முழு நிலவும் வேறு  துணைக்கிரகங்களா? எனக்கு ராத்திரி அடித்த‍து இறங்கவில்லையா? அல்லது உங்களுக்கா? அல்லது இருவருக்குமா? 🤣

இந்தியா நிலவுக்கு அனுப்பிய கதையை கேளுங்கள். நம்ம வாத்தியார் எம்ஜியார் கூறுகிறார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Flag Waving On The Moon ......... APOLLO 17 NASA GIF | Gfycat

அப்பலோ 11´ல் நிலவுக்குப் போய்.. ஆம்ஸ்ரோங் கால் வைத்த போது,
உலகில் சில இஸ்லாமியர்கள்,  நாங்கள்  வணங்கும் நிலவில்,
வெள்ளைக்காரன்.... கால் வைத்து விட்டானே என்ற அதிர்ச்சியில்..
சில முஸ்லீம்கள் மாரடைப்பு வந்து இறந்ததாக... 
அப்போதைய பத்திரிகைகளில்  செய்தி வந்தது.

இதில் கொடி காற்றில் ஆடுவதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

இதில் கொடி காற்றில் ஆடுவதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?? 

பக்கத்தில் நிற்கிற... விண்கல எஞ்சினிலிருந்து, காத்து வந்திருக்கலாம். :grin:

2 hours ago, Maruthankerny said:

இதில் கொடி காற்றில் ஆடுவதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?? 

இது பின்பு Grafik செய்யப்பட்ட அனிமேசன் படம் என்று நினைக்கிறேன். காற்று இல்லாததால்  அமெரிக்க கொடியை பறக்கும் angle ல் கட்டி வைத்திருக்கிறார்கள். இப்போதைய Grafik தொழில்நுட்பத்தில் உண்மையில் கொடி பறப்பதை போல செய்ய முடியும்.   

1 hour ago, தமிழ் சிறி said:

பக்கத்தில் நிற்கிற... விண்கல எஞ்சினிலிருந்து, காத்து வந்திருக்கலாம். :grin:

தமிழ்சிறி பொதுவாக நகைச்சுவையை விரும்பும்  நீங்கள் நம்ம வாத்தியார் எம். ஜி.ஆர் இன் நகைச்சுவை கதாட்சேபத்தை மெளனமாக கடந்து  சென்று விட்டீர்கள். 😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

 தமிழ்சிறி பொதுவாக நகைச்சுவையை விரும்பும்  நீங்கள் நம்ம வாத்தியார் எம். ஜி.ஆர் இன் நகைச்சுவை கதாட்சேபத்தை மெளனமாக கடந்து  சென்று விட்டீர்கள். 😂 

ருல்பன்... அந்த நகைச்சுவை காணொளியை, நேற்று முழுமையாக பார்த்து ரசித்தேன்.
அதில் சாத்திர சம்பந்தமான, உள்குத்து இருந்த படியால்...  
நைசாக... கடந்து சென்று விட்டேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

tulpen எங்கே இருந்து இதை தேடி எடுத்தீர்கள் ... அருமை 😀

1 hour ago, தமிழ் சிறி said:

ருல்பன்... அந்த நகைச்சுவை காணொளியை, நேற்று முழுமையாக பார்த்து ரசித்தேன்.
அதில் சாத்திர சம்பந்தமான, உள்குத்து இருந்த படியால்...  
நைசாக... கடந்து சென்று விட்டேன்.  :grin:

அது தானே பார்த்தன் தமிழ்சிறி.  நான் நினைத்தேன் நம்ம வாத்தியாரை உங்களுக்கு பிடிக்காதோ என்று. 😂

55 minutes ago, Sasi_varnam said:

tulpen எங்கே இருந்து இதை தேடி எடுத்தீர்கள் ... அருமை 😀

எல்லாம் யூரியுப் தேடல் தான் சசிவர்ணம். 😀 எங்கள் தங்கம் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி. 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.