Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும் தனிமைப்படுத்தலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும் தனிமைப்படுத்தலில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

spacer.png

இது குறித்து ட்ரம்ப் வியாழக்கிழமை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

ஒரு சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொவிட்- 19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார்.

தற்போது முதல் பெண்மணியும் (மெலினா ட்ரம்ப்) நானும் எங்கள் கொவிட்-19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்துள்ளோம். இதற்கிடையில் நாங்கள் எங்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் செயல்முறையை ஆரம்பிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

spacer.png

ட்ரம்பின் தனிமைப்படுத்தலானது ஒக்டோபர் 15 ஆம் திகதி புளோரிடாவின் மியாமியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாத் தெரியவில்லை.

ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் ஜனாதிபதியுடன் கடந்த நாட்களில் மிக நெருக்கமான உறவுகளை பேணியுள்ளார். அவர் செவ்வாயன்று ஓஹியோவில் நடந்த விவாதமொன்றுக்காக ட்ரம்புடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அது மாத்திரமன்றி புதன்கிழமை இரவு தேர்தல் பிரச்சார பேரணிக்காகவும் விமானம் மூலம் மினசோட்டோவுக்கு சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் 7.2 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களை பாதித்துள்ளதுடன், அவர்களில் 200,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
 

 

https://www.virakesari.lk/article/91153

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்... நெருங்கும் நேரம், இது வேறையா...  😮

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யானதையடுத்து இவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

https://newuthayan.com/அமெரிக்க-ஜனாதிபதிக்கு-கொ/

shutterstock_editorial_10434333bm-960x640.jpg?189db0&189db0

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தேர்தல்... நெருங்கும் நேரம், இது வேறையா...

😄  அது தானே

நீங்களும் டுபாய் விஜயம் பற்றி யோசியுங்கோ அங்கே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😄  அது தானே

நீங்களும் டுபாய் விஜயம் பற்றி யோசியுங்கோ அங்கே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம்.

கோசானை.... ஒருக்கால், நேரில் பாத்து கதைப்பம் எண்டால்,   😁

கொரோனா விடமாட்டுது போலை கிடக்குது. 🤷🏻 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா, லண்டன், ரஸ்யா என்று பத்தடுக்கு பாதுகாப்பில் இருக்கும் அதிபர்களுக்கு எல்லாம் கொரோனா தாக்குது என்றால் வெளியில் இருந்து யாரும் இவர்கள் அருகில் நெருங்கவும் முடியாது.ஆனால் இவர்கள் எல்லோரும் இத்தனை பாதுகாப்பையும் சுழிச்சுக்கொண்டு நகர்வலம் வருகிறார்கள் போல ......!  🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

தேர்தல்... நெருங்கும் நேரம், இது வேறையா...  😮

சிறித்தம்பி இதெல்லாம் அரசியல் சித்துவிளையாட்டுக்களிலை ஒண்டு 😂

  • கருத்துக்கள உறவுகள்

செத்தாண்டா கொரொனா.

இனி தெரியும் கொரோனாவுக்கு - வைரசை வெண்ட வைரஸ் வையகத்தில் உண்டு 🤣

ஆனால் மெலேனியாவை நினைக்க பாவமா கிடக்கு. 

உந்த லூசனோட தனிமையில் 2 கிழமை. பாவம்.

31 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி இதெல்லாம் அரசியல் சித்துவிளையாட்டுக்களிலை ஒண்டு 😂

அனுதாப வாக்கை அள்ளுற ஐடியாவோ?

1 hour ago, தமிழ் சிறி said:

கோசானை.... ஒருக்கால், நேரில் பாத்து கதைப்பம் எண்டால்,   😁

கொரோனா விடமாட்டுது போலை கிடக்குது. 🤷🏻🤣

வேணுமெண்டால் ஒரு காலை பார்க்கலாம், முகம் - மெல்ல திறந்த கதவு அமலா போலத்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டுவர விரும்புகிறேன்- மோடி

    by : Litharsan

http://athavannews.com/wp-content/uploads/2020/10/Trump-and-Modi.jpg

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டுமென மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள மோடி, “எனது நண்பன் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாரியார் மெலனியா ட்ரம்ப் இருவரும் விரைவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுவரவும் சிறந்த ஆரோக்கியம் பெறவும் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்ஸ்-இற்கு (Hope Hicks) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ட்ரம்ப், மெலனியா ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/எனது-நண்பன்-கொரோனாவில்-இ/

  • கருத்துக்கள உறவுகள்

கரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார்?: பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

trump-joins-growing-list-of-virus-infected-world-leaders அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியா ட்ரம்ப் : கோப்புப்படம்
 

ஜோகன்னஸ்பர்க்


உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சேர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தது தனிமைப்படுத்திக்கொண்ட ட்ரம்ப் அவரின் மனைவியும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் வேளையில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக 2-வது முறையாகப் போட்டியிடும் அதிபர் ட்ரம்ப் கரோனாவில்பாதிக்கப்பட்டு இருப்பது அவரின் வெற்றியை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் பல தலைவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரிசையில் 74 வயது ட்ரம்பும் சேர்ந்துள்ளார்.

1601635298756.jpg

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய ஏப்ரல் மே மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் கரோனாவில் பாதிக்கப்பட்டார். உலகளவில் மிகப்பெரிய தலைவர் கரோனாவில் பாதிக்கப்பட்டதும் பிரிட்டனில்தான்.

வீட்டில் தனிமையில் சில நாட்கள் இருந்த போரிஸ் ஜான்ஸன் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கைமுறையில் ஆக்ஸிஜன் சப்ளை வழங்கப்பட்டது. தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின்னர் ஜான்ஸன் குணமடைந்தார்.

1601635311756.jpg

பிரேசில் அதிப்ர ஜேர் போல்ஸனாரோ

தான் மட்டுமல்ல, மக்களையும் முகக்கவசம் அணியாதீர்கள் என்று முரட்டுத்தனமாகப் பிரச்சாரம் செய்து வியக்கவைத்தவர் பிரேசில் அதிபர் போல்ஸனாரோ. மக்களை அதிகமாகக் கூட்டிவைத்து சமூக இடைவெளியின்றி பிரச்சாரம் செய்து மருத்துவர்களால் போல்ஸனாரோ விமர்சிக்கப்பட்டார்.

கரோனாவிலிருந்து காக்கும் என்று மருத்துவரீதியாக நிருபிக்கப்படாத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அதிகமாகப் புகழந்து அதை மக்களுக்கு போல்ஸனாரோ பரிந்துரை செய்தார். இறுதியில் போல்ஸனாரோவையும் கரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. ஜூலை மாதம் கரோனாவில் பாதிக்கப்பட்ட போல்ஸனாரோ தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து முகக்கவசம் அணியத் தொடங்கினார்.

1601635323756.jpg ஹோண்டுராஸ் நாட்டு அதிபர் ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ்,

ஹோண்டுராஸ் அதிபர்

ஹோண்டுராஸ் நாட்டு அதிபர் ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ், அவரின் மனைவியும் கடந்த ஜூன் மாதம் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். அதிபருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அதிகாரிகள் சிலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

ஆனால் அதிபர் ஓர்லாண்டோவோ, எம்ஏஐஇசட் சிகிச்சையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதாவது, மைக்ரோடாக்கின், அசித்ரோமைசின், இன்வர்மெக்டின், ஜிங்க் ஆகிய மாத்திரைகளின் கலவையான MAIZ மாத்திரைகளை ஹோண்டுராஸ் அரசு மக்களுக்குப் பரிந்துரை செய்தது. இருப்பினும் பலன் அளிக்கவில்லை. அதிபர் ஓர்லாண்டோவும் 15 நாட்கள் சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

1601635400756.jpg வுதமாலா நாட்டின் அதிபர் அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி

கவுதமாலா அதிபருக்கு கரோனா

கவுதமாலா நாட்டின் அதிபர் அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டிக்கு கடந்த மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், கரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால், வீட்டில் இருந்தவாறே அரசுப்பணிகளைக் கவனித்து சில நாட்களி்ல குணமடைந்தார்.

1601635430756.jpg அதிபர் ஜீன்னி அனிஸ்

பொலிவியா அதிபர்

பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபர் ஜீன்னி அனிஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.

டோமினிக் குடியரசு அதிபர்

டோமினிக் குடியரசின் புதிய அதிபர் லூயிஸ் அபிநடர் கரோனா வைரஸால் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதிக்கப்பட்டார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த அதிபர் லூயிஸ் ஜூலை மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

1601635524756.jpg டோமினிக் குடியரசின் புதியஅதிபர் லூயிஸ் அபிநடர்

ஈரான் தலைவர்கள்
மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நாடான ஈரானில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மூத்த துணை அதிபர் ஈஷாக் ஜஹாங்கிரி, துணை அதிபர் மசூமெக் எப்திகர், கேபினட் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டனர்.

https://www.hindutamil.in/news/world/586196-trump-joins-growing-list-of-virus-infected-world-leaders-5.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம்கள்.. நல்லா இலங்கை பணிஸ் மாதிரி முகம்.. ஆர் கண் பட்டுச்சோ..😢

  • கருத்துக்கள உறவுகள்

டிறம்பின் நிலை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஆபத்தானது – பிரதம அதிகாரி

கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பின் நிலை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் என அவரின் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து டிறம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனிடையே, அமெரிக்க அதிபரின் தேர்தல் பரப்புரைகளில் அவருடன் பணியாற்றிவர்களில் பலர் கொரோனோ வைரசின் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

அதிபரின் மனைவியும், முதல் பெண்மணியுமான மெலனியா டிறம்ப்

தேர்தல் பரப்புரை ஆலோசகரும் நியூஜேர்சி மாநில முன்னாள் ஆளுநருமான கிறிஸ் கிறிஸ்ரே

நெருக்கிய உதவியாளர் கோப் கிக்ஸ்

தேர்தல் பரப்புரை முகாமையாளர் பில் ஸ்ரிபெய்ன்

வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரி கெலியனோ கொன்வே

றிப்பப்ளிக்கன் செனற்ரர் மைக் லீ

றிப்பப்ளிக்கன் செனற்ரர் தொம் திலிஸ்

றிப்பப்ளிக்கன் தேசிய சபையின் தலைவர் றோனா மக்டானியல்

பட உதவி: பி.பி.சி

http://www.ilakku.org/டிறம்பின்-நிலை-அடுத்த-48-மண/

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 05:28, suvy said:

அமேரிக்கா, லண்டன், ரஸ்யா என்று பத்தடுக்கு பாதுகாப்பில் இருக்கும் அதிபர்களுக்கு எல்லாம் கொரோனா தாக்குது என்றால் வெளியில் இருந்து யாரும் இவர்கள் அருகில் நெருங்கவும் முடியாது.ஆனால் இவர்கள் எல்லோரும் இத்தனை பாதுகாப்பையும் சுழிச்சுக்கொண்டு நகர்வலம் வருகிறார்கள் போல ......!  🤔

ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் ஜனாதிபதியுடன் கடந்த நாட்களில் மிக நெருக்கமான உறவுகளை பேணியுள்ளார். அவர் செவ்வாயன்று ஓஹியோவில் நடந்த விவாதமொன்றுக்காக ட்ரம்புடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்ப விளங்குதோ....

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing, text that says "This is Donald. Donald didn't wear a mask. Now, Donald is in the hospital. Don't be like Donald. Be like the Girl Scout. Wear a mask."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, alvayan said:

ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் ஜனாதிபதியுடன் கடந்த நாட்களில் மிக நெருக்கமான உறவுகளை பேணியுள்ளார். அவர் செவ்வாயன்று ஓஹியோவில் நடந்த விவாதமொன்றுக்காக ட்ரம்புடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்ப விளங்குதோ....

இப்ப வாற நியூஸ்களை பாக்க எல்லாம் ஏதோ ஒரு நாடகம் போலைதான் கிடக்கு....😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.