Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை! கொலைக் கும்பல் தலைமறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசுவதைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருவதாவது

பசு வதைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து சிலர் பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவில் உள்ள பல ஆலயங்களில் பூஜை செய்யும் இவர் பசு வதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், இது தொடர்பான பல தகவலை பொலிஸாருக்கும் வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தடவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/srilanka/01/257517?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான சம்பவம்..ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

கவலையான சம்பவம்..ஆழ்ந்த அனுதாபங்கள்.

புலத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைப்பது போல தற்போது இங்குள்ள தமிழர்கள் இல்லை ( ஒரு சிலரை தவிர) 

ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கூட இருந்தவர்களே  அடித்து கொலை  செய்து இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

கூட இருந்தவர்களே  அடித்து கொலை  செய்து இருப்பார்கள் 

அவரின்ற துணையாளரையும் கைது பண்ணி இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அவரின்ற துணையாளரையும் கைது பண்ணி இருக்கிறார்கள் 

எல்லாம் காசு படுத்தும் பாடு 

  • கருத்துக்கள உறவுகள்

பசு வதைக்கெதிராக குரல் கொடுத்ததற்காக கொலை செய்யப்பட்டதாக செய்தியின் சாரம் தொக்கு நிற்கிறது. 🤥

சில வருடங்களுக்கு முன்னர் கர்பிணிப் பெண் ஒருவரும் இதே மாடு வெட்டும் கும்பலால் கொலை செய்யப்பட்டது செய்திகளில் வந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Dash said:

சில வருடங்களுக்கு முன்னர் கர்பிணிப் பெண் ஒருவரும் இதே மாடு வெட்டும் கும்பலால் கொலை செய்யப்பட்டது செய்திகளில் வந்தது. 

அந்தப் பெண்ணும் பசுவதைக்கெதிராக குரல் கொடுத்தவரோ 🤔

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயம் மகிந்தரின் ஆசியோடு அலையும் டக்கி கும்பலின்.. செயலாகத்தான் இருக்க முடியும்.

புங்குடுதீவில் தமிழ் மக்களை கொலை செய்வதில் டக்கி கும்பலுக்கு பலத்த அனுபவம் உள்ளது.

தீவகத்தில் இருந்து டக்கி கும்பலை அடியோடு மக்கள் விரட்டி அடிக்காதவரை இது தொடரும். உள்ளூர் இளையோரின் விழிப்புக்குழுக்கள் இயங்கினால் மட்டுமே சிங்கள அரச.. இராணுவ ஆதரவு தமிழ் முஸ்லீம் கூலிகளின்.. இந்தப் பாதகச் செயல்களை குறைக்க முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சகர் ரூபன் படுகொலை – சைவ மகா சபை கடும் கண்டனம்

புங்குடுதீவு – பாணாவிடை சிவன் ஆலய பிரதம அர்ச்சகர் ரூபன் சர்மாவின் படுகொலையை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்புக்களை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்படி படுகொலை தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய் மதமாம் சைவ சமயத்தில் அளவுகடந்த பற்றுறுதி கொண்ட ரூபன் சர்மா, ஜீவகாருண்யத்திற்காக அதிகம் போராடியவர். சமூக விரோத செயல்களுக்கு எதிராக துணிந்து குரல்கொடுத்தவர். இந்த நிலையிலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த கொலையின் பின்னணி ஆராயப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வரப்படவேண்டும். கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதன் மூலம் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டும்.

மனிதத்துவத்திற்கும் ஜீவகாருண்யத்திற்கும் போராடி உயிர்துறந்த தாய் மதத்தில் அளவு கடந்த பற்றுறுதி உடைய வணக்கத்துக்கும் போற்றத்துக்குரிய ரூபன் சர்மாவிற்கு ஆத்மார்த்த அஞ்சலிகள். அவரது ஆம்மா இறை சிவனின் பாதார விந்தங்களில் சாந்திபெறும். அவரது நல்ல எண்ணங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.ilakku.org/அர்ச்சகர்-ரூபன்-படுகொலை/

11 hours ago, Kapithan said:

அந்தப் பெண்ணும் பசுவதைக்கெதிராக குரல் கொடுத்தவரோ 🤔

அதோடு சம்பம்தம் இருக்கு என நினைக்கிறன். பழைய செய்திகளை பார்த்தால் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கான எதிர்ப்புகள் பல. முகநூலில் கூட பலத்த கருத்து மோதல்கள் மற்றும் கண்டனங்களுக்கும் ஆளானவர். எனவே உண்மை தெரிய வரும் வரை அமைதி காப்பது நல்லது. மேலும் தலைவன் எப்படியோ மக்கள் அப்படி?? 30 வருட சிங்களத்தின் வளர்ப்பர்களின் ஆட்சியின் பெறுபேறுகள் இவை. இதைத்தான் எம் தேசத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விதைக்கிறார்கள். முடிவு. ??? என் ஊரே சாட்சி. இவ்வளவு லட்சம் பேர் எமது ஊரைக் காப்பாற்ற உழைத்த போதும் உழைக்க தயாராக இருந்த போதும் இந்த நிலை என்றால் மற்ற ஊர்கள்??!??

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு பூசகரை கம்பியால் தாக்கிக்கொன்று சிசிரிவில் பதிவான (Hard Disk) மறைத்தோம் - பின்னணித் தகவல் வெளியாகியது

“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். சம்பவம் சிசிரிவில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தால் அதன் சேமிப்பகத்தை (Hard Disk) எடுத்துச் சென்று மறைத்தோம்”

 

இவ்வாறு புங்குடுதீவு பூசகர் கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை பூசகரின் உடமையிலிருந்து எடுக்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது உதவியாளர் உள்பட மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அத்துடன், பெண் ஒருவரைக் காதலித்தமைக்காக பூசகர் தம்மைத் தாக்கினார் என்று உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து நேற்றிரவு மது அருந்திவிட்டு பூசகரை தாம் தாக்கியதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

தலையின் பின் பிடரியில் கம்பியால் தாக்கியதால் பூசகர் அந்த இடத்திலேயே சரிந்தார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து பூசகரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் சேமிப்பகத்தை புடுங்கிச் சென்று சந்தேக நபர்கள் மறைத்துள்ளனர்.

அந்த சேமிப்பகம் சந்தேக நபர்களின் தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், பூசகரின் உடமையிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த சந்தேக நபர்கள் அதனை யாழ்ப்பாணம் நகருக்குச் சென்று பொருள்கள் வாங்கி வரும்படி பெண்கள் இருவரிடம் வழங்கியுள்ளனர். அதனால் அந்த பணத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் நிறைவில் சந்தேக நபர்கள் 5 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பின்னணி

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் மற்றும் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

http://www.jaffnamuslim.com/2020/10/hard-disk.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, விசுகு said:

இவருக்கான எதிர்ப்புகள் பல. முகநூலில் கூட பலத்த கருத்து மோதல்கள் மற்றும் கண்டனங்களுக்கும் ஆளானவர். எனவே உண்மை தெரிய வரும் வரை அமைதி காப்பது நல்லது. மேலும் தலைவன் எப்படியோ மக்கள் அப்படி?? 30 வருட சிங்களத்தின் வளர்ப்பர்களின் ஆட்சியின் பெறுபேறுகள் இவை. இதைத்தான் எம் தேசத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விதைக்கிறார்கள். முடிவு. ??? என் ஊரே சாட்சி. இவ்வளவு லட்சம் பேர் எமது ஊரைக் காப்பாற்ற உழைத்த போதும் உழைக்க தயாராக இருந்த போதும் இந்த நிலை என்றால் மற்ற ஊர்கள்??!??

நேற்றிரவு இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் போது   நீங்கள் கருதும்  அந்த தலைவன் என் நினைவில் வந்து போனார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இவருக்கான எதிர்ப்புகள் பல. முகநூலில் கூட பலத்த கருத்து மோதல்கள் மற்றும் கண்டனங்களுக்கும் ஆளானவர். எனவே உண்மை தெரிய வரும் வரை அமைதி காப்பது நல்லது. மேலும் தலைவன் எப்படியோ மக்கள் அப்படி?? 30 வருட சிங்களத்தின் வளர்ப்பர்களின் ஆட்சியின் பெறுபேறுகள் இவை. இதைத்தான் எம் தேசத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விதைக்கிறார்கள். முடிவு. ??? என் ஊரே சாட்சி. இவ்வளவு லட்சம் பேர் எமது ஊரைக் காப்பாற்ற உழைத்த போதும் உழைக்க தயாராக இருந்த போதும் இந்த நிலை என்றால் மற்ற ஊர்கள்??!??

விசுகர் கொல்லுகிறன் எண்டு குறை நினைக்கவேண்டாம்

யாழ் குடாநாட்டின் அதிகமான குற்றச்செயல்களைச் சட்டத்தின்முன் கொண்டுவந்து குற்றவாளிகளைத் தண்டிப்பதிலிருந்து காப்பாற்றப்படுவதில் சிக்கலான விடையம் என்னவெனில் ஊர் ஒற்றுமையும் ஒரு காரணம் என இலஞ்செழியன் கூறியிருந்தார். அவருடன் கருந்த்துடன் முற்றாக உடன்படாதுவிட்டாலும், ஓரளவு உண்மையே.

அதேபோல்

நான் முன்பு ஒரு இடுகையில் கூறியதுபோல், ஊர் ஒற்றுமை என்பது ஒருவேளை இத்திரியில் இப்படி உங்களை எழுதவைக்கிறது என நினைக்கிறேன். (மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் குறை நினைக்கவேணாட்ம்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

விசுகர் கொல்லுகிறன் எண்டு குறை நினைக்கவேண்டாம்

யாழ் குடாநாட்டின் அதிகமான குற்றச்செயல்களைச் சட்டத்தின்முன் கொண்டுவந்து குற்றவாளிகளைத் தண்டிப்பதிலிருந்து காப்பாற்றப்படுவதில் சிக்கலான விடையம் என்னவெனில் ஊர் ஒற்றுமையும் ஒரு காரணம் என இலஞ்செழியன் கூறியிருந்தார். அவருடன் கருந்த்துடன் முற்றாக உடன்படாதுவிட்டாலும், ஓரளவு உண்மையே.

அதேபோல்

நான் முன்பு ஒரு இடுகையில் கூறியதுபோல், ஊர் ஒற்றுமை என்பது ஒருவேளை இத்திரியில் இப்படி உங்களை எழுதவைக்கிறது என நினைக்கிறேன். (மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் குறை நினைக்கவேணாட்ம்)

இல்லை சகோ எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. முழுப் பூசணிக்காயை எத்தனை நாள் மறைப்பு செய்ய முடியும்?? இறந்தவர் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அத்துடன் அவர் தலைமையில் கட்டப்படும் கோபுரம் 10 கோடியை தாண்டி விட்டதாக அறியமுடிகிறது. அதனால் கொலைக்கான உண்மை தெரியும் வரை பொறுப்போம் என்று நினைக்கிறேன். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபடுவதைத் தடுத்ததால் பூசகர் கொலை – உதவியாளர் உள்ளிட்ட மூவர் கைது

By
 Editor1
 - 
October 3, 2020
0
1451
 
 
 
 

புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முரண்பாடு ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்த நிலையில் நேற்று நள்ளிரவு பூசகர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் அச்சகரே கொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொலையில் ஈடுபட்டவர்கள் சிசிரிவி கமராக்களை புடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.

பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கான அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், பூசகரின் உதவியாளர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

https://pakalavan.com/?p=9803&fbclid=IwAR1GFmiU2MN2dGdh5uWEugz_NAB_OOrczO-KAzAIJ16cYTPcatUGWnWZNjk

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்துடன், பூசகரின் உதவியாளர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு வீட்டிற்குள்... வேறு ஆட்கள், நிரந்தரமாக இருப்பது ஆபத்தானது.
பிரான்ஸ் கொலையிலும்... இரண்டு குடும்பங்கள்.. ஒன்றாக வசித்து வந்ததை அறியமுடிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

France - புங்குடுதீவு மக்கள்  ஒன்றியம்   விடுக்கும்  கண்டன  அறிக்கையும்  கோரிக்கையும்

 

     05-10-2020

வணக்கம்

 

     எமது ஊரிலே நடக்கும்  கொலைகள் மற்றும்  நீதிக்குப்புறம்பான செயற்பாடுகள்  கண்டு மிகவும் கவலை  கொள்கின்றோம்அண்மையில் சைவ மத அர்ச்சகர்  ஒருவர் அதே சைவ மத அதுவும்  மது போதையில் இருந்த  அர்ச்சகர்கள்  சிலரால் அடித்து கொலை  செய்யப்பட்டிருப்பது  எமது ஊரின் புனிதத்தன்மைக்கும்  இதுவரை  எம் முன்னோரால் கட்டிக்காக்கப்பட்டு  வந்த பாரம்பரியங்களுக்கும் சாவு மணி  அடிப்பதாக  அமைந்திருப்பது  கண்டு எமது ஊரின்  எதிர்காலம் சார்ந்து மிகவும் வேதனையடைகின்றோம்.

 

     இது போன்று   எமது  கிராமத்திலுள்ள சில விசமிகளை  கைக்குள்  போட்டபடி வேறு இடங்களிலிருந்து எமது ஊருக்கு  வரும்  சிலரால்  எமது ஊரில் தொடர்ந்து  செய்யப்பட்டு  வரும்  கொலைகள் மற்றும்  சட்டத்துக்கு  புறம்பான  செயல்கள் தொடர்வதையும் எமது ஊரை தொடர்ந்து இவ்வகையான  அதர்ம பூமியாக்க சிலர்  தேர்ந்தெடுத்து செயற்பட முயல்வதையும் கடந்த 90 ம் ஆண்டு இடம்  பெயர்வின் பின்னர்  பார்க்கின்றோம்.  இதற்கு  எமது  ஊரை  பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும்   உடந்தையாக  இருப்பதும் எமது  ஊருக்கு  பிடித்த சாபக்கேடாகும்.

 

     இனியாவது எமது ஊரிலுள்ள  பெரியவர்கள் கல்விமான்கள் சமய பெரியார்கள் மற்றும்  மக்கள் பிரதிநிதிகள்  ஒன்றுகூடி இதை  தடுக்கும் வழிகள் சார்ந்தும் அதற்கான வேலைத்திட்டங்கள் சார்ந்தும் காட்டமான  செயற்பாடுகளை  முன்னெடுக்கவேண்டும்  என்றும் அதற்கான  அனைத்து முயற்சிகளுக்கும் France - புங்குடுதீவு மக்கள்  ஒன்றியம் உங்களுடன் தோளோடு தோள்  நின்று உங்கள் கரம் பற்றி  நிற்கும்  என்பதனையும் இத்தால்  அறியத்தருகின்றோம்.

 

நன்றி.

 

நிர்வாகம்

 

  France - புங்குடுதீவு மக்கள்  ஒன்றியம்                                                            

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.