Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Poorna Kaameshwari Sivaraj, 36, and her son Kailash Kuha Raj

A three-year-old boy and his parents have died at a flat in west London.

The bodies of Poorna Kaameshwari Sivaraj, 36, and son Kailash Kuha Raj were found at Golden Mile House on Clayponds Lane, Brentford.

Scotland Yard said it believed both had been dead for some time. They were last seen on 21 September.

It is thought Kuha Raj Sithamparanathan, Kalish's father and Ms Sivaraj's husband, fatally injured himself when officers forced entry.

The 42-year-old was found with stab injuries and pronounced dead by paramedics at the scene.

The family's deaths mean London has recorded 100 violent deaths this year.

https://www.bbc.co.uk/news/uk-england-london-54427223

மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.

தந்தையே தனது மனைவியையும் குழந்தையையும் குத்திக் கொன்று பின் தன்னைத் தானே குத்திக் கொன்றுள்ளார்.. என செய்திகள் கூறுகின்றன.

Edited by nedukkalapoovan

  • nedukkalapoovan changed the title to மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு லண்டனின் பிரெண்ட்போர்ட் பகுதியை சேர்ந்த தமிழ் பெற்றார் 3 வயது பிள்ளையையும் கொன்று தாமும் தற்கொலை செய்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

https://www.dailymail.co.uk/news/article-8810349/Boy-three-woman-30s-man-40s-die-incident-west-London-house.html 

இறந்தவர்கள் குகராஜ் சிதம்பரநாதன்(42), பூர்ணகாமேஸ்வரி (36), கைகாஷ் (3) எனவும் மலேசிய பிண்ணணியுடையோர் எனவும் தெரிகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எல்லாம் இப்படியான செய்திகளை காணும் போது மிகவும் மனதுக்கு கஸ்ரமாக இருக்கிறது..😢

  • கருத்துக்கள உறவுகள்

LONDON MURDERS 2020

LONDON MURDERS 2020

Where the 95 murders across the capital this year have happened

34053306-0-image-m-13_1601992325832.jpg

எதோ நகர பஸ் சேவை இலக்கங்கள் மாதிரி போட்டிருக்கு?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Maruthankerny said:

LONDON MURDERS 2020

LONDON MURDERS 2020

Where the 95 murders across the capital this year have happened

34053306-0-image-m-13_1601992325832.jpg

எதோ நகர பஸ் சேவை இலக்கங்கள் மாதிரி போட்டிருக்கு?
 
எல்லாம் ரெஞ்சன் வாழ்க்கை தரும் பரிசுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எண்கள் எத்தனையாவது கொலை சம்பவம் என்பதை குறிக்கிறது.

35 minutes ago, Maruthankerny said:

எதோ நகர பஸ் சேவை இலக்கங்கள் மாதிரி போட்டிருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் கடித்து குதறும் அளவுக்கு வாக்கு வாதப்பட்டுள்ளார்கள் என்று செய்தியில் இருக்கிறது.

மனைவி கணவனை ஏதோ  மருந்தை ஒழுங்காக எடுக்குமாறு வற்புறுத்தி   வாக்கு வாதப்பட்டுள்ளார்கள் என்றும் இருக்கிறது.

கணவன் ஒரு முறை மருந்தை  எறிந்து விட்டதை அயலவர் கண்டதாக சொல்கிறார்.

இந்த furlough (அரசு ஒரு பகுதி சம்பளத்தை கொடுப்பது) உம்  முடிகிறது, எதாவது வேலை இழப்பும் ஏற்கனவே இருந்த அழுத்தத்தை கூட் டி விட்டதாகவும் இருக்கலாம்.

இவர்களின் வீட்டை  பார்க்கும் போது, இந்த நேரத்தில் அது சுமையானதாகவும் மாறி இருக்கலாம். 

வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கக் கடினமான செய்திகளாக இருக்கின்றன. குடியேறிகளுக்கு விசேடமான மன அழுத்தப் பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. இப்படியான சோகங்களை இனியாவது தடுக்க ஒரே வழி, உதவக் காத்திருக்கும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ் தளங்களில் பிரபலப் படுத்துவது தான். கீழுள்ள இணைப்பில் UK இல் இருக்கும் பல்வேறு அமைப்புகளின் தொடர்புகள் இருக்கின்றன. 

எம்மக்களிடையே பரப்புங்கள் இயலுமான வழிகளில்:

https://www.nhs.uk/conditions/stress-anxiety-depression/mental-health-helplines/ 

சில சேவைகள் தமிழிலும் வழங்கப் படுகின்றன:

http://www.eachcounselling.org.uk/help-and-information/how-we-can-help-you/mental-health-trauma

Edited by Justin
கீழ் இணைப்பு சேர்க்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலும் லண்டனிலும் உள்ள இந்து கோவில்கள்  வரும் மக்களிடம்  காசு பறிப்பில் உள்ளன .ஆனால்  முஸ்லீம் மதவழிபாட்டு தளம்கள் வெறுமே வழிபடுதல் இன்றி இந்த நாடுகளில் எப்படி இனத்துவேசத்தை எதிர் கொள்வது அப்படி ஒரு துவேஷ தாக்குதல் நடந்தால் கவுன்சிலில் யாரை தொடர்பு கொள்வது என்பன போன்ற விளக்கங்களுடன் குடும்பத்தில் எழும் மன  சம்பந்தமான பிரச்னைகளை எப்படி தீர்ப்பது அதை தடுக்க என்ன வழிகள் சொல்லிக்கொடுக்கிறார்கள் .

ஆனால்  நம்ம கோவில்கள் கூடவே  கிறிஸ்தவ கூட்டு  வழிபாட்டு தினம்களில் என்ன செய்கின்றோம் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கின்றேன் .

குறைந்தபட்சம் யோகா பயிற்சி அதுவாவது சொல்லி கொடுக்கலாமே?

சும்மா வீணையும்  பரத  நாட்டியமும் பழகினா சரி என்று நினைக்கினமாக்கும் ?

அதுவும் பழகிறது  வேறை இடத்தில் அரங்கேறுவது கோவில் மண்டபத்தில் .

அநேக கோவில்கள் மதியம் ஒருமணி முதல் ஐந்து மணிவரை பூட்டி போட்டு மதிய நித்திரைக்கு போயிடுவினம் அந்த நேரம்களில் உருப்படியா ஏதாவது செய்யலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உண்மை பெருமாள். நான் வேலை செய்யும் இடத்துக்கு முன்பு ஒரு மசூதி.
அங்கு காலை 5 மணியிலிருந்து மாலை வரை...
ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் என்று, 
ஒவ்வொரு வயதினருக்கும்... ஏற்ற படி ஏதாவது நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். 
இந்தக் கொரோனா நேரத்திலும்... கணிசமான ஆட்கள் வந்து கொண்டு இருப்பார்கள்.
அது அவர்களுக்கு... ஒரு மன நிம்மதியை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......வேதனையான விடயம்........! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பெருமாள் said:

ஐரோப்பாவிலும் லண்டனிலும் உள்ள இந்து கோவில்கள்  வரும் மக்களிடம்  காசு பறிப்பில் உள்ளன .ஆனால்  முஸ்லீம் மதவழிபாட்டு தளம்கள் வெறுமே வழிபடுதல் இன்றி இந்த நாடுகளில் எப்படி இனத்துவேசத்தை எதிர் கொள்வது அப்படி ஒரு துவேஷ தாக்குதல் நடந்தால் கவுன்சிலில் யாரை தொடர்பு கொள்வது என்பன போன்ற விளக்கங்களுடன் குடும்பத்தில் எழும் மன  சம்பந்தமான பிரச்னைகளை எப்படி தீர்ப்பது அதை தடுக்க என்ன வழிகள் சொல்லிக்கொடுக்கிறார்கள் .

ஆனால்  நம்ம கோவில்கள் கூடவே  கிறிஸ்தவ கூட்டு  வழிபாட்டு தினம்களில் என்ன செய்கின்றோம் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கின்றேன் .

குறைந்தபட்சம் யோகா பயிற்சி அதுவாவது சொல்லி கொடுக்கலாமே?

சும்மா வீணையும்  பரத  நாட்டியமும் பழகினா சரி என்று நினைக்கினமாக்கும் ?

அதுவும் பழகிறது  வேறை இடத்தில் அரங்கேறுவது கோவில் மண்டபத்தில் .

அநேக கோவில்கள் மதியம் ஒருமணி முதல் ஐந்து மணிவரை பூட்டி போட்டு மதிய நித்திரைக்கு போயிடுவினம் அந்த நேரம்களில் உருப்படியா ஏதாவது செய்யலாம் .

7 hours ago, தமிழ் சிறி said:

உண்மை பெருமாள். நான் வேலை செய்யும் இடத்துக்கு முன்பு ஒரு மசூதி.
அங்கு காலை 5 மணியிலிருந்து மாலை வரை...
ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் என்று, 
ஒவ்வொரு வயதினருக்கும்... ஏற்ற படி ஏதாவது நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். 
இந்தக் கொரோனா நேரத்திலும்... கணிசமான ஆட்கள் வந்து கொண்டு இருப்பார்கள்.
அது அவர்களுக்கு... ஒரு மன நிம்மதியை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

இருப்பதை வைத்து திருப்திப்பட்டு.....போதுமென்ற மனதோடு வாழ்ந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்.

இந்த கொலை/தற்கொலை விசாரணயின் போது வெளிவந்த மேலதிக தகவல்:

கணவனானவர், மனைவி, பிள்ளை மற்றும் செல்ல நாய்குட்டியை சில நாட்களுக்கு (2 கிழமை?) முதலே கொலை செய்துவிட்டு, அதே வீட்டில் இருந்தத்தாயும், பொலிசார் கதை உடைத்து உள்ளே நுழைந்த போது கத்தியால் தன்னைதானே குத்தி கொண்டதாயும் தெரிகிறது.

https://www.dailymail.co.uk/news/article-8813953/Brentford-murder-suicide-Boy-3-mother-dead-two-weeks.html 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது பிரச்னை கோரோனோ, பணம் சம்மந்தப்பட்ட பிரச்னை போல தெரியவில்லை. நல்ல குடும்பத்தை சேர்ந்த பணப்பிரச்சனை இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். 
https://eddieleevideo.wordpress.com/2015/01/21/kuhan-kaamesh-wedding-montage/?fbclid=IwAR0QJOrAecmy7tpGCC4dmrVFE8MKS6jtQ4ZC9wH3YskyxK5MSw6boUvMPJs

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

பணம் ஒரு பிரச்சனை இல்லை என்றே எனக்கும் படுகிறது.

மாத்திரை எடுக்கும் படி வாக்குவாதம், நாட்கணக்கில் மரணித்த உடலங்களோடு வீட்டில் இருந்தமை என்பன உண்மையாயின் இது வேறு ஆழமான பிரச்சனை போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பணம் ஒரு பிரச்சனை இல்லை என்றே எனக்கும் படுகிறது.

மாத்திரை எடுக்கும் படி வாக்குவாதம், நாட்கணக்கில் மரணித்த உடலங்களோடு வீட்டில் இருந்தமை என்பன உண்மையாயின் இது வேறு ஆழமான பிரச்சனை போல் உள்ளது.

எனக்கென்னவோ அந்த பெடியன் மீதுதான் சந்தேகம். அடக்குமுறை கூடியவராக மட்டுமல்ல இந்த மாதிரியான ஒரு செயலை செய்யக்கூடிய அளவுக்கு வக்கிரம் உள்ளவராகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு போஸ்ட்டையும் சோசியல் மீடியாவில் கலியாணத்துக்கு முன்பு பகிர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டேன் spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அவர் டிப்பிரசனுக்கு மருந்து எடுத்து வந்து இருக்கிறார் ...இடையில் எடுக்காமல் விட்டு இருக்கிறார் ....திருமணத்திற்கு முந்தியே ஆள் வித்தியாசமாய் இருந்திருப்பார் ...பெண்ணின் உறவுகள் தெரிந்தோ/தெரியாமலோ கட்டி கொடுத்து விட்டார்கள் 😟அழகான பெண்ணும் குழந்தையும் ஆத்மா சாந்தியடையட்டும்...இப்ப கொஞ்ச நாளாய் எங்க பார்த்தாலும் கொலைகளாகவே இருக்குது ..கொரோனா கொண்டு போவதை விட இப்படி அழிந்து போகும் தமிழர் இப்ப அதிகமாய் இருக்கு 
 
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

உண்மைதான் அக்கா 
ஆசைக்குகளுக்கு அடிபணிந்து 
கோபம் 
பொய்மை பொறாமையால் 
சூழப்பட்டு 
கையில் இருப்பதின் அருமை பெருமை 
தெரியாது அலைந்து 
மன அழுத்தத்துக்கு ஆளாகி 
பிறர் மேல் வெறுப்பும் 
வெட்ப்பும் அடைந்துபோகிறார்கள் 
இன்று உலகில் மில்லியன் கணக்கானவர்கள் 
லண்டனில் வந்து வாழ வாய்ப்பு கிடைக்காத 
என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் 
இவர்களுக்கு அதற்கு மேலால் இருந்து அதை 
உணர தெரியவில்லை 
இது ஒரு இரவில் நிகழும் மற்றம் இல்லை 
மெது மெதுவாக நிகழ்கிறது 

ரதியாக்க இது உங்களுக்கு நாளை 
நிகழலாம் இந்த உலகை 
புரிவத்துக்கும் 
பொறாமைகள் நீங்கி வாழ்வதுக்கும் 

காஜலிசம் பழகுவீர் 

அங்கு போட்டி இல்லை 
பொறாமை இல்லை 
எதிர்பார்ப்புகள் இல்லை 
இந்த அழகிய பிரபஞ்சத்தை 
அவ்வாறே நன்றியுணர்வுடன் 
பற்றிக்கொள்ளும் ஒரு அழகியல் அது 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Maruthankerny said:

காஜலிசம் பழகுவீர் 

அங்கு போட்டி இல்லை 
பொறாமை இல்லை 
எதிர்பார்ப்புகள் இல்லை 
இந்த அழகிய பிரபஞ்சத்தை 
அவ்வாறே நன்றியுணர்வுடன் 
பற்றிக்கொள்ளும் ஒரு அழகியல் அது 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .... 

 எனக்கிருந்த டவுட் கிளியர் ஆகிட்டுது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

பணப்பிரச்சனை இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். 
https://eddieleevideo.wordpress.com/2015/01/21/kuhan-kaamesh-wedding-montage/?fbclid=IwAR0QJOrAecmy7tpGCC4dmrVFE8MKS6jtQ4ZC9wH3YskyxK5MSw6boUvMPJs

பணப்பிரச்சனை இல்லாத பெரும் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் நாங்கள் என்று காட்டுவதற்காக மிகவும் கஷ்டபட்டு ஆடம்பர செலவு செய்து திருமணம் நடத்தி காட்டுவது வெளிநாடுகளில் ஈழதமிழர்களிடம் அதிகமாகிவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

 எனக்கிருந்த டவுட் கிளியர் ஆகிட்டுது. :cool:

உங்களுக்கு மட்டுமல்ல 
பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது 

இன்று பார்த்தீர்களா ஒரு 
இளம்பெண்ணும் பாவம் அறியாத ஒரு 
பச்சிளம் குழந்தையும் அநியாயமாக 
கொலையுண்டு இருக்கிறார்கள் 
அந்த பெண்ணை பெற்றவர்கள் 
எத்தனை எததனை கனவுகளுடன் 
தமது வாழ்வையே அர்ப்பணித்து 
வளர்த்து இருப்பார்கள் 
எல்லோற்போலவும் அவர்கள் திருமணம் செய்து கொடுத்தார்கள் 
இன்று இந்த செய்தி அவர்கள் காதில்  எட்டும்போது 
எப்படி துடித்திருப்பார்கள்?

இந்த கணவனும் பெருத்த குற்றவாளி அல்ல 
இந்த நுகர்வுசந்தையின் பலி ஆடுகளில் ஒன்று 
இந்த உலகை வாழ்வை புரியாமல் இருப்பதால்தான் 
இந்த மாயைக்குள் சிக்குண்டு அழைக்கிறோம்.

அலைகிறோம்  (இப்போ திருத்தி உள்ளேன் )

உங்களுக்கு இப்போ கொஞ்சம் 
டவுட் கிளியராகிறது 
எல்லோருக்கும் இது நிகழ வேண்டும் 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இன்னும் ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மனம் சம்பந்தமான நோய்கள் சகலதுமே ஆடம்பர வாழ்வுக்கு ஏங்குவதாலும், அளவுக்கு மீறி ஆசைப்படுவதாலும் அதன் வழி வந்த விரக்தியாலும் மட்டுமே வருவதில்லை.

மிக தெளிவாக, யதார்த்தமாக, ஆடம்பர எதிர்பார்ப்பு, விரக்தி இல்லாமல் வாழ்ந்த பலரும் கூட மன நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Depression,  anxiety, stress disorders போன்றவை ஏற்பட இப்படி வாழ்கை பற்றிய மிகை எதிர்பார்ப்பு காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் schizophrenia, bipolar போன்ற வியாதிகளுக்கு வாழ்வு பற்றிய மிகையான எதிர்பார்பும், விரக்தியும் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாக எனக்குப் படவில்லை.

நான் ஒன்றும் மனோதத்துவம் படித்தவன் இல்லை. ஆனால் 

மனநோய்= லண்டன் கடுகதி வாழ்கை+  ஆடம்பரம்+மிகை எதிர்பார்பு+விரக்தி எனும் சமன்பாடு எல்லா இடங்களிலும் பொருந்தும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கோசான் சொல்வது போல்... மன வியாதிக்கு, 
வேறு பல காரணிகளும் இருக்கலாம்... என்பதே சரியென்று நினைக்கின்றேன். 
ஆனால்... அது, எது என்பதுதான் தெரியவில்லை.

##########   ##########   ##########   ##########

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!  | Athavan News

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின் தகவல்களைத் தொடர்ந்து அவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால், சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் எனவும் குழந்தை 3 வயது மதிக்கத்தக்கது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகல்கள் சில வெளியாகியுள்ளன.

அயலவர்களின் தகவலின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பொலிசார் 3 வயதான கைலாஷ் குகராஜ் மற்றும் அவரது தாயாரான 36 வயது பூர்ண காமேஷ் சிவராஜ் ஆகியோரின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதில் 42 வயதான குகராஜ் சிதம்பரநாதன் என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய தமிழர்களான இந்த தம்பதி, அயலவர்களுடன் மிக நெருக்கமாக பழகியதாகவும், சிறந்த குடும்பமாக விளங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவ்வப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பல நாள் நள்ளிரவு தாண்டியும் வாக்குவாதம் நீடித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த பூர்னாவின் உறவினர் ஒருவரே ஞாயிறன்று பொலிசாரின் உதவியை நாடி, கடந்த ஒரு மாத காலமாக பூர்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார், பூர்னாவின் குடியிருப்புக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், பொலிசார் வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூற முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ள பொலிசார், இவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் தகவல் அறிவிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/லண்டனில்-சடலமாக-கண்டெடுக/

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.