Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, theeya said:

அப்படி ஒரு அதிசயமும் இல்லை. சில மாகாணங்கள் தபால் மூல வாக்குகளை கடைசியாத் தான் எண்ணுவார்கள். அப்படி பட்ட மாகாணங்கள் தான் Wisconsin, Michigan. அநேகமான தபால் மூல வாக்காளர்கள் Biden ஆதரவாளர்கள். 

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, zuma said:

அப்படி ஒரு அதிசயமும் இல்லை. சில மாகாணங்கள் தபால் மூல வாக்குகளை கடைசியாத் தான் எண்ணுவார்கள். அப்படி பட்ட மாகாணங்கள் தான் Wisconsin, Michigan. அநேகமான தபால் மூல வாக்காளர்கள் Biden ஆதரவாளர்கள். 

image.png

நான் ஏன் அதிசயம் எண்டு சொன்னனான் என்றால். எஞ்சி இருக்கும் இடங்கள்  காலங்காலமாக குடியரசுக் கட்சி வெல்லும் இடங்கள் .

Wisconsin பெய்டன் வெற்றி 248 இன்னும் 22 தேவை 

Edited by theeya

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

அப்படி ஒரு அதிசயமும் இல்லை. சில மாகாணங்கள் தபால் மூல வாக்குகளை கடைசியாத் தான் எண்ணுவார்கள். அப்படி பட்ட மாகாணங்கள் தான் Wisconsin, Michigan. அநேகமான தபால் மூல வாக்காளர்கள் Biden ஆதரவாளர்கள். 

ஆம், சரியான தகவல்: 

1. பைடன் ஆதரவாளர்கள் (நான் உட்பட) தபால் மூலம் தான் அதிகம் வாக்களித்தனர். எனவே அவை எண்ணப் படும் போது பைடனின் நிலை முன்னேறும். இந்த வாக்குகளே இப்போது அதிகம் எண்ணப் பட இருக்கின்றன.

 (இதனால் தான் அந்த தபால் வாக்குகளை நிராகரிக்க ட்ரம்ப் குழு வழக்குகள் மூலம் கடும் முயற்சிகள் எடுத்தது. மினசோட்டாவைத் தவிர வேறு இடங்களில் இது பலிக்கவில்லை!)

2. மிச்சிகனில் பைடன் ஆதரவு கவுன்ரியில் இருந்து வந்த வாக்குகளே எண்ண மிச்சமிருப்பதால், ட்ரம்ப் குழு தங்கள் பிரநிதிகளைப் பார்க்க அனுமதித்தது காணாதென்று வழக்குப் போடப் போகிறார்களாம்.இது மிச்சிகன் நீலமாகும் என்பதற்கான அறிகுறி😁)

3. விஸ்கொன்சினில் மீள எண்ணைக்கைக்கு ட்ரம்ப் குழு கோரவிருக்கிறது (ஏனெனில் பைடன் வெற்றி எதிர்வு கூரப் படுகிறது). ஆனால், முடிவை அறிவித்து விட்டு நவம்பர் 10 இன் பின்னர் தான் மீள் எண்ணிக்கை மனுவை அனுமதிப்பர், எனவே இது முடிவைப் பாதிக்காது இப்போதைக்கு. 

4. நெவாடா , நாளை காலை 9 மணிக்கே முழு முடிவையும் வெளியிடும். ஆனால், பைடன் ஆதரவு கூடிய, சனத்தொகையும் கூடிய லாஸ் வேகாஸ் கவுன்ரி தான் 75% ஆன இனி வரும் எண்ணிக்கையாக இருக்கும். 

5. பென்சில்வேனியா: வெள்ளிக் கிழமை வரை தபால் வாக்குகள் தொடர்ந்து பெறப்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது 8% முன்னணியில் நிற்கும் ட்ரம்பை பைடன் வெல்வாரா என்பது அடுத்த திங்கள் வரை தெரியவராது!

எனவே, பொறுத்தார் பூமியாள்வார் என்று இருக்க வேண்டியான்! 😇

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் முன்னிலைக்கு காரணம்.... இனவாத நிலைப்பாடு தான்...

ஒரு முன்னனி நாடான அமெரிக்காவின் இந்த இனவாத அரசியலுக்கு கண்டனம் தெரிவிக்க வர மாட்டார்கள்.... ஆனால், மூன்றாம் நாடொன்றில் இனவாத அரசியல் குறித்து பக்கம், பக்கமாக எழுதுவார்கள்.  🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

Hair Reaction GIF by moodman - Find & Share on GIPHY

மயிர் இழையில்... வெற்றி பெற்ற, ட்ரம்ப்.. என்று,
நாளைய.. தமிழ் செய்திகளில், தலைப்பு வரும்.
அதற்கு...  நாம், பொறுப்பாளிகள் அல்ல. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் ஆதரவுத் தளம் பெரிதாக ஆட்டம் காணவில்லை. எனவே பைடன்  வெல்லுவது கடினம் என்றே நினைக்கின்றேன். அப்படி வென்றாலும் பிளவுபட்ட நாட்டை ஒன்றாக்குவது கடினம்.

அமெரிக்கா முதல் என்று சொல்வதும், சீனாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுப்பதும்,  தைரியமான ஆண் என்று காட்டுவதும் ட்ரம்பின் ஆதரவுத்தளம் அப்படியே இருக்கின்றது என்று சொல்கின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலிம்  ஊடகங்களில் சிறு சிறு கலவரங்களாக இருந்தாலும் கறுப்பினத்தவர்களை  கள்ளர் காடையர்களாக பெரிதுபடுத்தி காட்டிவிடுவார்கள். அது மட்டுமல்லாமல்  அமெரிக்க கறுப்பர் என்றே கூறுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வெள்ளை இனவாதமாக இருந்தாலும் சரி, அயல் நாட்டு இனத்தூய்மை வாதமாக இருந்தாலும் சரி, ஒன்றைக் கண்டித்தவர்கள் மற்றதைக் கண்டிக்காமல் விட்டதாக நான் காணவில்லை! 

ஆனால் இது நடந்திருக்கிறது: வெள்ளைக் காரன் நாட்டில் நம் மண்ணிறத் தோலுக்கு சம அந்தஸ்து வேணுமென்று முழங்கும் ஆட்கள், ஒரே நாட்டில் பக்கத்து மாநிலத்தவன் மீது இனவாதம் சரியான வழியே என்று வாதிட்டு அதற்கு "அங்க வேற நிலை, இங்க வேற நிலை" எண்டு பின்பக்கமாக வளைந்து சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்கள்!

1 hour ago, கிருபன் said:

ட்ரம்பின் ஆதரவுத் தளம் பெரிதாக ஆட்டம் காணவில்லை. எனவே பைடன்  வெல்லுவது கடினம் என்றே நினைக்கின்றேன். அப்படி வென்றாலும் பிளவுபட்ட நாட்டை ஒன்றாக்குவது கடினம்.

அமெரிக்கா முதல் என்று சொல்வதும், சீனாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுப்பதும்,  தைரியமான ஆண் என்று காட்டுவதும் ட்ரம்பின் ஆதரவுத்தளம் அப்படியே இருக்கின்றது என்று சொல்கின்றது. 

இது ஏமாற்றமான உண்மை!

இன்னொரு பக்கம் பார்த்தால் , 2016 இல் குடியேறிகள் தான் தங்களுடைய துன்பத்திற்கெல்லாம் காரணம் (தாங்கள் வழியிருந்தும் கல்லூரி போய் படிக்காமல் உடனடியாக வருமானம் தரும் வேலைக்குப் போய் உடலை வருத்திக் கொண்டது காரணமேயில்லை!) என்று நம்பிய ஆட்கள் இங்கே தான் இருக்கிறார்கள்! எனவே அவர்கள் வாக்குப் போடுவார்கள் தான் ட்ரம்புக்கு! 

ஆனால், அந்த 1%, 2% வெற்றியை சகல குழுக்களையும் சார்ந்த இளம் வயதினர் பைடன் பக்கம் திருப்பியது நடந்திருக்கிறது! இதை வைத்துக் கொண்டு தான் மேலே செல்ல வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

TTV Dhinakaran på Twitter: "அம்மா ஆலமரமாக வளர்த்த கழகத்தை கட்டி காப்போம்  என்று இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்."

சும்மா... தமாசு...  

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் மயிரிழையில் வெல்லும் அல்லது தோற்கும் நிலைக்கு 45 வீதமான மக்கள் ட்ரம்ப் சார்பான   ரீவியை (Rupert Murdoch இன்) மட்டும் பார்ப்பதும் ஒரு காரணம் என்று ஒருவர் சொன்னதை பிபிசி ரேடியோவில் கேட்டேன். இப்படி மக்களை மூளைசலவை செய்தால் ட்ரம்ப் போன்றவர்களை இலகுவாக ஜனாதிபதியாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Profile image of Biden
253
BIDEN
270 to Win
 
213
Profile image of Trump
TRUMP
 
50.3%70,166,649
 
What is this?
48.1%67,018,071
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பைடன் மயிரிழையில் வெல்லும் அல்லது தோற்கும் நிலைக்கு 45 வீதமான மக்கள் ட்ரம்ப் சார்பான   ரீவியை (Rupert Murdoch இன்) மட்டும் பார்ப்பதும் ஒரு காரணம் என்று ஒருவர் சொன்னதை பிபிசி ரேடியோவில் கேட்டேன். இப்படி மக்களை மூளைசலவை செய்தால் ட்ரம்ப் போன்றவர்களை இலகுவாக ஜனாதிபதியாக்கலாம்.

நீங்கள் Fox news ஐக் குறிப்பிடுகிறீர்கள். இருக்கலாம். அமெரிக்காவில் அதிகம் பேர் பார்க்கும் கேபிள் அலைவரிசை அது. ஆனால், அதை ஜோர்ஜ் புஷ் இருந்த போதும் ஒபாமா வருவதற்கு முன்னரும் பார்த்தார்களே?

தனித் தனியாக மக்கள் பிரிவினரைக் குறிவைத்து இணையம் சமூக வலை மீடியாக்கள் மூலம் தான் அதிக மூளைச்சலவை நடந்தது என்கிறார்கள். இதைத் தான் என் அமெரிக்க தேர்தல் பற்றிய கட்டுரையில்  எழுத இருக்கிறேன்.

கொடுமை என்னவென்றால் இப்படி குறி வைத்த பிரச்சாரம் (targeted/precision propaganda) அனேகமாக எடிற் செய்யப் பட்ட போலிக் கணொளிகளால் தான் பெரும்பாலும் தயாரிக்கப் பட்டவை. இப்ப புரிகிறதா ஏன் நான் யாழில் fake news இனை திட்டுகிறேன் என்று?😊

  • கருத்துக்கள உறவுகள்

99 வீதம் பைடனே வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதிலிம்  ஊடகங்களில் சிறு சிறு கலவரங்களாக இருந்தாலும் கறுப்பினத்தவர்களை  கள்ளர் காடையர்களாக பெரிதுபடுத்தி காட்டிவிடுவார்கள். அது மட்டுமல்லாமல்  அமெரிக்க கறுப்பர் என்றே கூறுவர்.

இங்கு பெரும் கடைகள் எல்லாம் கலவரம் வந்தாலும் என்று கடை முன்பகுதிகளை பலகைகள் வைத்து ஆணியடித்து பூட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

99 வீதம் பைடனே வருவார்.

என்னப்பா பெரிய வெடிகுண்டை தூக்கி போடுறியள்? வந்தால்  ஜேர்மனிக்கு பெரிய சந்தோசம்..😁

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

99 வீதம் பைடனே வருவார்.

அரிசோனா,நிவாடாவில் யோ பைடன் முன்னிலையில் நிற்பதால் 11+6 எலெசக்ரோரல் வாக்குகள் கிடைக்கும். ஜோ 270 ஐ இன்றிரவே நெருங்கி விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அரிசோனா,நிவாடாவில் யோ பைடன் முன்னிலையில் நிற்பதால் 11+6 எலெசக்ரோரல் வாக்குகள் கிடைக்கும். ஜோ 270 ஐ இன்றிரவே நெருங்கி விடுவார்.

அரிசோனா, நெவாடா பக்கம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், பென்சில்வேனியா தபால் வாக்குகளை நிராகரிக்க வைக்க ட்ரம்ப் குழு முயல்கிறது. அங்கே ட்ரம்ப் இப்போது 5% முன்னணியில். என்ன திட்டமோ தெரியவில்லை!🤔

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா பெரிய வெடிகுண்டை தூக்கி போடுறியள்? வந்தால்  ஜேர்மனிக்கு பெரிய சந்தோசம்..😁

பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nunavilan said:

அரிசோனா,நிவாடாவில் யோ பைடன் முன்னிலையில் நிற்பதால் 11+6 எலெசக்ரோரல் வாக்குகள் கிடைக்கும். ஜோ 270 ஐ இன்றிரவே நெருங்கி விடுவார்.

பொன்ராசாவை வெள்ளைமாளிகையை விட்டு கலைப்பது சவாலாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

பொன்ராசாவை வெள்ளைமாளிகையை விட்டு கலைப்பது சவாலாகவே இருக்கும்.

3 மில்லியனுக்கு  மேல் தபால் வாக்குகள் எண்ணாமல் உள்ளன. அது அநேகமாக ஜோவின் வாக்குகள் என்பதால் அதனை என்ண விடாமல் சட்டம் மூலம் தடைகளை கொண்டு வர முயல்கிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிவிட்டார்கள்.

 கடையளுக்கு பலகை அடிச்சதிலை பிரயோசனம் இருக்கு எண்டுறியள்? 😁

2 minutes ago, nunavilan said:

3 மில்லியனுக்கு  மேல் தபால் வாக்குகள் எண்ணாமல் உள்ளன. அது அநேகமாக ஜோவின் வாக்குகள் என்பதால் அதனை என்ண விடாமல் சட்டம் மூலம் தடைகளை கொண்டு வர முயல்கிறார். 

அமெரிக்கா எண்டாலும் இந்தியா இலங்கையை விட சுத்துமாத்துக்கள் எக்கச்சக்கம் போல....🤣

  • கருத்துக்கள உறவுகள்

நிவாடாவில் வாக்குப் பெட்டிகளை மாத்துறம் திரும்பவும் வெல்றம்✌️😂

  • கருத்துக்கள உறவுகள்

image.png

எல்லாரும் களைச்சுப்போயிருப்பியள் எண்டு நினைக்குறேன் இப்பிடியே போய் ஒரு காப்பித்தண்ணி/ தேத்தண்ணி குடிச்சிட்டு வாங்கோ அதுக்குள்ளே நிவாடாவில் முடிவை அறிவிச்சு பெய்டனின் வெற்றியை அறிவித்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாலி said:

நிவாடாவில் வாக்குப் பெட்டிகளை மாத்துறம் திரும்பவும் வெல்றம்✌️😂

வாலி இனி போத்து மூடிக்கொண்டு படுக்க வேண்டியது தான்.
சொறி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.