Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதில் முக்கியமானது அமைதி மதமான முஸ்லிம் மதத்தின் மீது பழி போடுவதற்காக அமெரிக்கா செப்ரெம்பர் 11 தேதி நியூயார்க்கில் தனது கட்டடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தி  3000 மேற்பட்ட தனது மக்களை கொன்றது.

அதிலும் அதிமுக்கியமானது உலகின் ஒரேயொரு அமைதி மதம் முஸ்லிம் மதம் என்று வரவேண்டும்.😎

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Quote

ரஷ்சியா.. சீனா.. ஈரான் போன்ற நாடுகள்.. 

மேற்குறிப்பிட்ட நாடுகள் உலக ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டாக  விளங்குகின்றன. அங்கே போய் வாழ, உலகெங்கும் இருந்து மக்கள் முனறியடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் 

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, zuma said:

மேற்குறிப்பிட்ட நாடுகள் உலக ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டாக  விளங்குகின்றன. அங்கே போய் வாழ, உலகெங்கும் இருந்து மக்கள் முனறியடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் 

சீனா, ரஷ்யாவில் அதிக வெளிநாட்டவர்கள் விரும்பி வாழ்கின்றார்கள். வேலை மற்றும் இதர விடயங்கள் சம்பந்தமாக....

 இன்றைய சமுதாயம் எதிர்கால நலன் கருதி சீன மொழியே படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

  சவூதி,துபாய் போல் ஈரானில் இலங்கையர்கள் வேலை செய்த ஒருகாலம் உண்டு.
அது உங்களுக்கு தெரிந்தால்.............? ஆச்சரியம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

மேற்குறிப்பிட்ட நாடுகள் உலக ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டாக  விளங்குகின்றன. அங்கே போய் வாழ, உலகெங்கும் இருந்து மக்கள் முனறியடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் 

😂

நமது யாழ் இணையதள சுதந்திர கருத்தாளர்களும் ரஷ்சியா சீனா ஈரான் போன்ற நாடுகளில் இருந்து தானே எழுதுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

நமது யாழ் இணையதள சுதந்திர கருத்தாளர்களும் ரஷ்சியா சீனா ஈரான் போன்ற நாடுகளில் இருந்து தானே எழுதுகிறார்கள்.

தங்கள் அறிவு அஃதே...

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகிறார்.

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதாலும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அதே நேரம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையின் முன்பு திரண்டுள்ள ஜோ பைடனின் ஆதரவாளர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோ பைடனின் வெற்றியை கொண்டாடும் விதமாக தெருக்களில் இசைக்கருவிகளைக் கொண்டு பாடல்கள் பாடியும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் வாஷிங்டன் நகர தெருக்களில் ஜோ பைடனின் ஆதரவாளர்கள் வெற்றி முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலம் நடத்தினர். ஜோ பைடனின் வெற்றி குறித்து பேசிய அவரது ஆதரவாளர் ஒருவர், இந்த வெற்றியின் மூலம் ஜனநாயகத்திற்காகவும், அகிம்சைக்காகவும் சிறுபான்மையினர் மீண்டும் குறள் எழுப்பியுள்ளதாகவும், இனவெறிக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜோ பைடனின் மற்றொரு ஆதரவாளர் பேசுகையில், “இது அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஒரு புதிய அத்தியாயம். ஜோ பைடனுக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவரை வெற்றி பெற வைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/08053024/Joe-Biden-supporters-celebrate-in-the-US-capital-Washington.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றியை வாணவேடிக்கை மூலம் அசத்திவிட்டார்கள். இப்படியான ஒரு நிகழ்வு அமெரிக்க அரசியல்வரலாற்றில் முதல் நிகழ்வு என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தேர்தல் வெற்றியை வாணவேடிக்கை மூலம் அசத்திவிட்டார்கள். இப்படியான ஒரு நிகழ்வு அமெரிக்க அரசியல்வரலாற்றில் முதல் நிகழ்வு என நினைக்கின்றேன்.

வழமையில் கோட்டல்களில் நடப்பதை கொரோனோவால் திறந்தவெளி அரங்கில் அவரவர் வாகனங்களில் இருந்தபடியே பார்த்து ரசிக்கக் கூடிய மாதிரி அமைத்திருந்தார்கள்.
இதனால் வாணவேடிக்கையும் பார்த்து ரசிக்கக் கூடிய மாதிரி இருந்தது.

மறுபக்கம் திங்கள் எப்படியெல்லாம் வழக்குகள் போட்டு இந்த வெற்றியை உடைக்கலாம் என்று திரைமறைவில் திட்டம் போடுகிறார்கள்.

இப்போதிருந்து தை 20 அரசு கைமாறுமட்டும் என்னென்னவெல்லாம் நடக்குதோ தெரியவில்லை.

நீண்ட 47 வருட அரசியல் வாழ்வின் பின் 46 ஆவது அமெரிக்க அதிபராகிறார் ஜோஸப் ரொபினெட் பைடென்!

  • கார்த்திகேசு குமாரதாஸன்

மெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியிருக்கும் ஜோஸப் ரொபினட் பைடெனின் (Joseph Robinette Biden) நீண்ட 47 வருட கால அரசியல் வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

நவம்பர் 20, 1942 இல் பென்சில்வேனியாவில் வசதியான குடும்பம் ஒன்றில் பிறந்தவர் பைடென். பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு வியட்நாம் யுத்த காலப்பகுதியில் அவர் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். ஆனால் அஸ்மா நோய் காரணமாக சேவையில் இருந்து பின்னர் விலக்கப்பட்டார்.

biden3-1-1024x614.jpgபலரதும் ஆச்சரியத்துக்கு மத்தியில் 1972 இல் தனது 30 ஆவது வயதில் Delaware மாநில செனட்டராகத் தெரிவாகினார். அடுத்த சில நாட்களில் – நத்தார் தினத்துக்கு முதல் நாள் – கார் விபத்து ஒன்றில் அவரது முதல் மனைவியும் கைக்குழந்தையான மகளும் உயிரிழக்க நேர்ந்தது. செனட்டராக பதவியேற்கும் நிகழ்வுக்கு அவர் மருத்துவமனையில் இருந்தே வரவேண்டி ஏற்பட்டது. அதேவிபத்தில் படுகாயமடைந்த மற்ற இரண்டு ஆண் பிள்ளைகளையும் வீட்டில் வைத்துப் பராமரிப்பதற்காகத் தனது செனட்டர் பதவியைத் துறக்க விரும்பினார். ஆனால் அன்றைய செனட் குழுத் தலைவரின் வற்புறுத்தலால் பின்னர் அந்த முடிவைக் கைவிட்டார்.

1970 களில் பெரும்பாலும் வெள்ளை இனப் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளுக்குக் கறுப்பினக் குழந்தைகளை அனுப்பிவைப்பதற்காக தனியான பஸ் போக்குவரத்தை(“busing”) அறிமுகம் செய்த அரசின் கொள்கையை பைடென் கடுமையாக எதிர்த்தார்.

அது கறுப்பினத்தவர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு வளரக் காரணமாகியது.

1987 இல் குடியரசுக்கட்சி வெள்ளை மாளிகைக்கான போட்டிக்குள் நுழைந்த போது அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்குத் தகுதியானோரில் ஒருவராக பைடெனும் இருந்தார். ஆனால் அடுத்தவரது கருத்துக்களைத் திருடி தனது பிரசார உரைகளுக்குப் பயன்படுத்தினார் என்று எழுந்த சர்ச்சை காரணமாக போட்டியிலிருந்து அவர் விலக நேர்ந்தது.பின்னாளில் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தலைவராக விளங்கிய நெய்ல் கின்னொக்கின் (Neil Kinnock) உரையையே ‘கொப்பி அடித்தார்’ என்பதை பைடென் பின்னர் ஒப்புக்கொண்டார்.

தனது அரசியல் பயணத்தில் 1991 இல் செனட் சபையின் சக்திவாய்ந்த நீதித்துறைக்குழுவின் தலைவரானார் பைடென்.

செனட்டின் வெளிவிவகாரக் குழுவின் தலைவராக இருந்த சமயம் 2002 ஆம் ஆண்டு ஈராக் போருக்கு அங்கீகாரமளிக்கும் தீர்மானத்தை ஆதரித்தார். அதிபர் சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்று திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரை ஆதரித்த பைடென், பின்னர் சதாமுக்கு எதிரான அந்த சாட்சியங்கள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்த போது “பின்னோக்கிய பார்வையில் அது ஒரு தவறு” என்று ஒப்புக்கொண்டார்.

“அமெரிக்க வரலாற்றில் ஒரு சிங்கம்” என்று பைடெனை புகழ்ந்துள்ள பராக் ஒபாமா, 2008 இல் அவரைத் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக்கிக் கொண்டார். 2009 இல் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த ஒபாமாவுக்கு கடைசிவரை அவரது வெற்றிகளுக்கான வலது கரமாகத் திகழ்ந்தவர் பைடென்.

வெளிவிவகாரம் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் பல்வேறு முக்கிய அரசியல் தீர்மானங்களுக்கு பைடெனின் அனுபவ ஆலோசனைகள் காரணமாகின.

ஒபாமாவின் இரண்டு தவணைக்கால ஆட்சிக்குப் பின்னர் 2016 இல் அதிபர் தேர்தலில் களமிறங்குவதற்கு பைடெனுக்கு வாய்ப்பிருந்தது. அமெரிக்க கறுப்பினத்தவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சமயம் அவருக்குப் பரந்தளவு செல்வாக்குக் காணப்பட்டது.ஆனால் தனது மூத்த புதல்வர் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழக்க நேர்ந்ததால் அச்சமயம் அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிடமுடியாமற்போனது.

கடைசியில் “தள்ளாடும் வயோதிபர்”, “தீவிரமான மையவாதி” எனப் பலவிதமான விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தவாறு இந்தமுறை 2020 தேர்தலில் – தனது 77 ஆவது வயதில்- வெள்ளைமாளிகைக்கான போட்டியில் களமிறங்கினார்.

அதிபர் ட்ரம்ப் தனது பிரசார மேடைகளில் “தூங்கும் ஜோ” (“Joe the Sleeping “) என்று பைடெனை அடிக்கடிக் கிண்டல் செய்து வந்தார். தனது முதுமை குறித்த ஏளனங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு இறுதியில் பதவியில் இருந்த அதிபரைத் தோற்கடித்து மிக அதிகப்படியான வாக்குகளுடன் வெள்ளைமாளிகைக்குள் நுழையும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்டார் பைடென்.

https://thinakkural.lk/article/87124

  • கருத்துக்கள உறவுகள்

“அமெரிக்கா ஒன்றுபட வேண்டிய நேரம் இது” – ஜோ பைடன்

1-42-696x463.jpg
 28 Views

ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ளதையடுத்து உரையாற்றுகையில், வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.

மேலும்  “இது அமெரிக்கா ஒன்றிணையும் நேரம்“ என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிவுப்பெற்றது, ஆனால் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்றன. வெற்றியைத் தீர்மானிக்கும் அதிமுக்கிய மாநிலங்களான (Battleground states) பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, நிவேடா, நார்த் கரோலினா போன்ற மாநிலங்களில் இழுபறி நீடித்ததால், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் பலத்த போட்டி நிலவியது.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற தேவைப்படும் 270 இடங்களை விட கூடுதலாக 9 இடங்களில் அவர் முன்னிலை பெற்றார்.

மேலும் பென்சில்வேனியாவில் சனிக்கிழமை மாலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், பைடனுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

அதே நேரம் ஜோ பைடனின் அரசில் முதல் கருப்பின பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்  தெரிவாகியுள்ளார்.

தனது தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றிய ஜோ பைடன், “இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர், நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்.

சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். நான் இந்த பதவிக்கு வந்ததற்கு காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்க, இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். எனது இந்த நோக்கத்திற்காக  எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம். எனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான்” என்றார்.

இதைத் தொடர்ந்து கமலா ஹாரீஸ், “நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை தேர்வு செய்தீர்கள். அதனால் நீங்கள் பைடனை தேர்வு செய்தீர்கள்” என்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் முறைப்படி பதவியேற்பார்.  தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது.

அதே நேரம் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் தரப்பு, பல மாகாணங்களில் வழக்கு தொடுத்துள்ளது. ஏற்கனவே அவற்றுள் சில வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/அமெரிக்கா-ஒன்றுபட-வேண்ட/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் தரப்பு, பல மாகாணங்களில் வழக்கு தொடுத்துள்ளது. ஏற்கனவே அவற்றுள் சில வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குக்கு... ஸ்ரீலங்காவிலிருந்து, 
பிரபல  தமிழ் சட்டத்தரணிகளை  கொண்டு வாதாட முடியாதா  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடன் வெற்றி : மௌனமாக இருக்கும் உலக தலைவர்கள் | Athavan News

ஜோ பிடன் வெற்றி : மௌனமாக இருக்கும் உலக தலைவர்கள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடனுக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கையில் மறுபுறம் பல உலக நாடுகளின் தலைவர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

அனைத்து சட்ட சவால்களும் தீர்க்கப்படும் வரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மறுத்துவிட்டார்.

அத்தோடு ஜோ பிடன் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருடனும் தனது நாடு நல்ல உறவைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையான ஏமாற்றம் குறைவாக இருந்தபோதிலும், ட்ரம்ப்பின் நிர்வாகத்துடன் அன்பான உறவைப் பேணி வந்த பல முக்கிய தலைவர்களும் பிடனின் வெற்றியைப் பற்றி பேசாமல் மௌனமாக இருந்தனர்.

குறிப்பாக பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் சவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் அடங்குவர்.

இதேவேளை ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனா ஜி ஜின்பிங் ஆகியோரின் வாழ்த்துக்கள் எதிர்பாக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/பிடன்-வெற்றி-மௌனமாக-இருக/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சீனா, ரஷ்யாவில் அதிக வெளிநாட்டவர்கள் விரும்பி வாழ்கின்றார்கள். வேலை மற்றும் இதர விடயங்கள் சம்பந்தமாக....

 இன்றைய சமுதாயம் எதிர்கால நலன் கருதி சீன மொழியே படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

  சவூதி,துபாய் போல் ஈரானில் இலங்கையர்கள் வேலை செய்த ஒருகாலம் உண்டு.
அது உங்களுக்கு தெரிந்தால்.............? ஆச்சரியம் 

ஆமாம் அண்ணே.....ஜெர்மன் வந்த நேரம் சீனக்கோ , ரஷ்யாவிக்கோ போய் இருந்தால் இப்ப 
அந்தமாதிரி இருந்திருக்கலாம்.

துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதல் பெண்மணி நானாகயிருக்கலாம் ஆனால் கடைசிப்பெண்மணி நானில்லை- கமலா ஹாரிஸ்

துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதல் பெண்மணி நானாகயிருக்கலாம் ஆனால் கடைசிப்பெண்மணி நானில்லை,என அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கான உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது

800-1-1-300x200.jpeg

காங்கிரஸ் உறுப்பினர் ஜோன் லூவிஸ் தனது மரணத்திற்கு முன்னர் ஜனநாயகம் என்பது ஒரு செயற்பாடு என தெரிவித்தார்.
இதன் மூலம் அவர் அமெரிக்காவின ஜனநாயகம் என்றுமே நிலைக்கும் என்பதற்கான உத்தரவாதமில்லை என தெரிவித்திருந்தார்.

800-3-300x200.jpeg 1000-4-300x199.jpeg
அதற்காக போராடுவதற்காகவும் அதனை பாதுகாப்பதற்காகவும் , நாங்கள் தயராகயிருக்கும் வரையே அமெரிக்காவில் ஜனநாயகம் வலுவானதாக காணப்படும்,அதனை சாதாரண விடயமாக நாங்கள் கருதாதவரை.
எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு போராடவேண்டும்.அதற்காக தியாகம் செய்யவேண்டும்,அதில் ஒரு மகிழ்ச்சியுள்ளது,அதில் முன்னேற்றமுள்ளது.
ஏன் என்றால் மக்களாகிய எங்களிடம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வலுவுள்ளது.

1000-5-300x200.jpeg
இம்முறை தேர்தலில் ,எங்கள் ஜனநாயகம் வாக்குசீட்டில் காணப்பட்டவேளை,அமெரிக்காவின் ஆன்மாவே கேள்விக்குறியாக காணப்பட்டவேளை உலகமே உன்னிப்பதாக உற்றுநோக்கிக்கொண்டிருந்தவேளை நீங்கள் அமெரிக்காவிற்கான புதிய நாளை உருவாக்கினீர்கள்
ஜனநாயக நடைமுறைக்குள் முன்னொரு ஒருபோதும் இ;ல்லாத பெருமளவான மக்களை கொண்டுவந்து – ஈர்த்து வெற்றியை சாத்தியமாக்கியமைக்காக எங்கள் பிரச்சார பணியாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

1000-6-300x200.jpeg
ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்படுவதை உறுதிசெய்வதற்காக களைப்பற்று பணியாற்றிய நாட்டின் தேர்தல் பணியாளர்களே-; எங்கள் ஜனநாயகத்தின் நேர்மையை காப்பாற்றியமைக்காக தேசம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.
இந்த அழகான தேசத்தின்- அமெரிக்காவின் மக்களுக்கு உங்கள் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது மிகவும் சவாலான காலம் என்பது எனக்கு தெரியும்,குறிப்பாக கடந்த பல மாதங்கள் அவ்வாறானதாக காணப்பட்டன.
துயரம் வேதனை வலி கவலைகள் போராட்டங்கள் —
ஆனால் நாங்கள் உங்களின் துணிச்சல் மீண்டெழுவதற்கான திறன் உங்கள்உணர்வின் தாராள மனப்பான்மை ஆகியவற்றை பார்த்தோம்.
கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் சமத்துவம் நீதி எங்கள் வாழ்க்கை எங்கள் பூலோகம் ஆகியவற்றிற்காக அணிவகுத்தீர்கள்

1000-6-1-300x200.jpeg 1000-7-300x200.jpeg
அதன் பின்னர் நீங்கள் வாக்களித்தீர்கள்- தெளிவான செய்தியை தெரிவித்தீர்கள்
நீங்கள் நம்பிக்கை ஐக்கியம் ஓழுக்கம் விஞ்ஞானம் உண்மை ஆகியவற்றை தெரிவுசெய்தீர்கள்
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடனை நீங்கள் தெரிவு செய்தீர்கள்
பைடன் காயங்களை ஆற்றுபவர், ஐக்கியப்படுத்துபவர்,நன்கு சோதிக்கப்பட்ட நிலையான மனிதர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் இழப்புகளை சந்தித்த அனுபவம் அவருக்கு வாழ்க்கையில் நோக்கமொன்றை வழங்கியுள்ளது அது ஒரு தேசமாக எங்கள் நோக்கங்களை மீளப்பெறுவதற்கு உதவக்கூடும்.
நான் இ;ங்கு பிரசன்னமாகியிருப்பதற்கு காரணமான எனது தாயார் சியாமளா கோபாலன் ஹரிசிற்கும் எனது நன்றிகள் – அவர் என்றும் எங்கள் இதயத்தில் நிலைத்திருப்பார்.
அவர் 19வயதில் இந்தியாவிலிருந்து வந்தவேளை இந்த தருணத்தை கற்பனை செய்தே பார்த்திருக்கமாட்டார்.
ஆனால் இது சாத்தியமாக கூடிய அமெரிக்கா குறித்து அவர் ஆழமான நம்பிககையை கொண்டிருந்தார்.
நான் அவரை பற்றியும் கறுப்பின பெண்கள் குறித்தும் அவர்களின் தலைமுறைகள் குறித்தும் சிந்தித்து பார்க்கின்றேன்.
இந்த மகத்தான தருணத்திற்காக வழிகாட்டிய ஆசிய இலத்தீன் அமெரிக்க வெள்ளையின பூர்வீக குடிகளை சேர்ந்த பெண்களை நான் நினைத்துப்;பார்க்கின்றேன்.
சமத்துவம்,சுதந்திரம்,அனைவருக்கும் நீதிக்காக போராடி தியாகம் செய்த கறுப்பினப்பெண்கள் உட்பட அனைவரையும் நான் நினைத்துப்பார்க்கின்றேன்.
கறுப்பினப்பெண்கள் அதிகளவிற்கு அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் கவனிக்கப்படாதவர்கள் ஆனால் எங்கள் ஜனநாயகத்தின் முதுகெலும்புகள்.
ஒரு நூற்றாண்டாக வாக்களிப்பதற்கான உரிமையை பெறுவதற்காக பாதுகாப்பதற்காக – 100 வருடங்களுக்கு முன்னர் 19வது திருத்தம் மூலமாக-55 வருடங்களுக்கு வாக்குரிமை சட்டம் மூலம் தற்போது 2020 இல் ஒரு புதிய தலைமுறை பெண்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ளதுடன் தங்கள் வாக்கு செவிமடுக்கப்படவேண்டும் என்ற அடிப்படை உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இன்று நான் அவர்களின் போராட்டத்தினை பிரதிபலிக்கின்றேன்,அவர்களின் உறுதிப்பாடு,அவர்களின் தொலைநோக்கின் வலிமை ஆகியவற்றை நான் பிரதிபலிக்கின்றேன்,நான் அவர்களின் தோள்களில் ஏறிநிற்கின்றேன்.
இது ஜோவின் குணாதிசயத்திற்காக சான்று-எங்கள் தேசத்தில் காணப்பட்ட மிகப்பெரும் தடையை தகர்த்து தனது துணை ஜனாதிபதியாக பெண்ணொருவரை தெரிவு செய்தமை அவரது துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது.
துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதல் பெண்மணி நானாகயிருக்கலாம் ஆனால் கடைசிப்பெண்மணி நானில்லை,
ஏனென்றால் இதனை பார்க்கும் ஒவ்வொரு யுவதியும் இது சாத்தியங்கள் உள்ள நாடு என்பதை உணர்கின்றாள்.
எங்கள் நாட்டின் குழந்தைகளுக்கு நீங்கள் ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரி எங்கள் நாடு தெளிவான செய்தியொன்றை தெரிவித்துள்ளது.

3138-1-300x180.jpg
இலட்சியத்துடன் கனவுகாணுங்கள்,உறுதியுடன் வழிநடத்துங்கள் ,மற்றவர்கள் உங்களை பற்றி கருதாதவிதத்தில் உங்களை நீங்கள் பாருங்கள்,ஏனென்றால் அவர்கள் இதற்கு முன் அதனை பார்த்ததில்லை
இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் பாராட்டுவோம்.
அமெரிக்க மக்களே
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது முக்கியமில்லை,ஜோ ஒபாமாவிற்கு எப்படி துணை ஜனாதிபதியாகயிருந்தாரோ அப்படியிருப்பதற்கு நான் முயல்வேன்-விசுவாசமாக நேர்மையாக தயாராக ஒவ்வொருநாளும் உங்கள் குடும்பத்தை பற்றி நினைத்துக்கொண்டு துயில் எழுந்து – ஏனென்றால் உண்மையான பணி தற்போதே ஆரம்பமாகின்றது.

https://thinakkural.lk/article/87172

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, zuma said:

ஆமாம் அண்ணே.....ஜெர்மன் வந்த நேரம் சீனக்கோ , ரஷ்யாவிக்கோ போய் இருந்தால் இப்ப 
அந்தமாதிரி இருந்திருக்கலாம்.

நான் இப்ப அந்தமாதிரி இல்லையெண்டு உங்களுக்கு ஆர் சொன்னது? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த வழக்குக்கு... ஸ்ரீலங்காவிலிருந்து, 
பிரபல  தமிழ் சட்டத்தரணிகளை  கொண்டு வாதாட முடியாதா  :grin:

ஓமோம் வருவினம்   வருவினம்.....வரேக்கை ட்ரம்புக்கு கொஞ்ச மிளகாய்த்தூளும் கொண்டுவந்து குடுக்கச்சொல்லுங்கோ.....ட்ரம்புக்கு இன்னும் வசதியாய் இருக்கும். ட்ரம்ப் மிளாய்த்தூள் தூவக்கூடிய ஆள்....😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எழுதப் பட்டிருக்கும் சில கருத்துக்களைப் பார்க்கையில் எங்கையிருந்து எங்கள் புலம் பெயர் தமிழர்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது! இவர்கள் போல பலர் சமூகவலைத்தளங்களை செய்தி ஊடகமாகப் பாவிப்பதால் தான் ட்ரம்ப், பொல்சனாரோ போன்ற தலைவர்கள் (இவை இப்ப சில ஆசிய நாடுகளிலும் இருக்கீனம்!😊) சமூக வலைத்தளங்களில் பொய் வீடியோக்களைக் கொக்கி போலப் போட்டு வாக்குகள் சேகரிப்பது நடக்கிறது!

இனப்படுகொலைக்குக் காரண கர்த்தாக்கள் பலர்: இந்தியா வேறெவரையும் கொலைகளைத் தடுக்க அனுமதிக்காமல் விட சிங்கள அரசு இந்தியாவையும் சீனாவையும் ஒரே நேரத்தில் கைக்குள் வைத்திருந்து செய்தது தான் முக்கிய நிகழ்வு. ஆனால், எங்கள் ஆட்களுக்கு ஒரே கோபம், 2009 இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது "புலிகள் வன்னி மக்களைக் கேடயங்களாகப் பாவிக்காமல் போக அனுமதிக்க வேண்டுமென்று" ஒபாமா கூறியது தான்!

புலிகளைத் தடை செய்ததும் ஒபாமாவின் நிர்வாகம் அல்ல. 1997 இல் இருந்தே புலிகள் அமெரிக்காவில் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கின்றனர் (இது முற்றான தடை அல்ல!). 2001 இல் 9/11 இற்குப் பிறகு விசேட பயங்கரவாதப் பட்டியலில் புஷ் நிர்வாகத்தால் ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து இணைக்கப் பட்டனர். அதன் பின்னர் தான் "நட்டை" இறுக்க ஆரம்பித்தனர். 

கற்பனைகளை எழுதும் போது கொஞ்சம் உப்பு மாதிரி உண்மைத் தகவல்களையும் (சுவைக்காகவாவது!) தூவி விடுங்கள் நண்பர்களே! 

அமெரிக்கத் தேர்தலும் பட்டினத்துப் பிள்ளையின் தத்துவமும்

  • நியூசிலாந்து சிற்சபேசன்

Sitsabesan.jpgமெரிக்க சனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3ல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் திட்டவட்டமான நிலை ஏற்படுவதில், வழமைக்கு மாறாகத் தாமதம் ஏற்பட்டிருந்தது. அமெரிக்காவின் அடுத்த சனதிபதியாக, ஜோ பைடன் தெரிவு செய்யப்படுவதற்கான திட்டவட்டமான சமிக்ஞைகள், நவம்பர் 7ல் வெளியாகின.

ஒரு வேட்பாளர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு 270 எலக்டோரல் கொலேஜ் (தெரிவாளர் குழு) வாக்குகளைப் பெறவேண்டும். ஜோ பைடனுக்கு 290 வாக்குகள் கிடைத்துள்ளதாகக் கணிக்கப்படுகின்றது.

தேர்தல் நடைபெற்றதிலிருந்து சுமார் நான்கு வாரங்களின் பின்னரே உத்தியோகபூர்வமான சனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்றது. காரணம்: தபால் வாக்கு எண்ணிக்கை பூர்த்தியாகவேண்டும். அத்துடன், மீள் வாக்கு எண்ணிக்கை செய்யவேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

joe-biden-09-1024x632.jpgஅமெரிக்க சனாதிபதித் தேர்தல் இரண்டு வழிகளில் சமாந்திரமாக நடைபெறுகின்றது. முதல்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெறுகின்றார் என்பது கவனிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இரண்டாவது நிலையில், எலக்டோரல் கொலேஜ் சனாதிபதியைத் தெரிவு செய்கின்றது. எலக்டோரல் கொலேஜின் அங்கத்துவம் சனத்தொகை அடிப்படையில் ஐம்பது மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. அதனிடம் 538 வாக்குகள் காணப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் (48), எலக்டோரல் கொலேஜ் தன்னிச்சையாக வாக்களிக்கும் மரபைக் கொண்டவை அல்ல. மாறாக, அந்தந்த மாநிலங்களில் அதிகவாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளருக்கே, அந்த மாநிலத்தின் எலக்டோரல் கொலேஜின் மொத்த வாக்குகளும் அளிக்கப்படுகின்றன. எலக்டோரல் கொலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுகின்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராகக் கணிக்கப்படுகின்றார். அந்தவகையிலேயே, வாக்கு எண்ணிக்கை முடிவடைகின்ற தருணங்களில், எலக்டோரல் கொலேஜ் வாக்கு மூலமாக வெற்றி பெறுவது யார் என்பது கணிக்கப்பட்டுவிடுகின்றது.

அமெரிக்க சனாதிபதித் தேர்தலை மாநில அரசுகளே நடாத்துகின்றன. அதனால் தேர்தல் மேலாண்மை முறைகள் மாறுபடுகின்றன. தேர்தல் தொடர்பான சட்டங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்க சனாதிபதித் தேர்தல், கவுண்டி என வரையறுக்கப்பட்ட பிரதேசங்கள் (மாவட்டமுறை போன்றது) வாரியாகவே நடைபெறுகின்றன. வாக்களிப்பு நேரங்களின் ஆரம்பமும் முடிவும் மாநிலங்கள்தோறும் வேறுபடுகின்றன. வாக்களிப்பு முறை, வாக்கு எண்ணப்படுகின்ற ஒழுங்கு என்பனவும் வித்தியாசப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்வதானால், சில மாநிலங்கள் வாக்களிப்பு தினத்திற்கு முன்னதாகவே தபால் வாக்குகளை எண்ண ஆரம்பிக்கின்றன. வேறு சில மாநிலங்கள், வாக்களிப்புத் தினத்தில் அளிக்கப்படுகின்ற வாக்குகளையே முதலில் எண்ணுகின்றன. அதன்பின்னரேயே, தபால் வாக்குகளை எண்ண ஆரம்பிக்கின்றன. சில மாநிலங்கள் வாக்களிப்புத் தினம் வரையில் கிடைத்த தபால் வாக்குகளையே எண்ணுகின்றன. வேறு சில மாநிலங்கள், வாக்களிப்புத் தினம் வரையில் அஞ்சலில் சேர்க்கப்பட்டு அஞ்சல்திகதி பொறிக்கப்பட்ட வாக்குகளையும் எண்ணுகின்றன. அத்தகைய வாக்குகள் வாக்குப்பதிவு தினத்திற்கு பின்னரே தேர்தல் அலுவலகத்தை வந்தடைகின்றன.

trump-09-1024x620.jpgஅனைத்து மாநிலங்களிலும், வாக்குப்பதிவு தினத்திலே அளிக்கப்படுகின்ற வாக்குகள் உடனேயே எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் அன்றைய தினத்தில் எண்ணி முடிக்கப்படுவதில்லை. ஆனால், வாக்களிப்புத் தினத்தில் கிடைக்கின்ற வாக்கு எண்ணிக்கை முடிவை, தபால்வாக்கு மாற்றியமைப்பவையாக இருப்பதில்லை. காரணம்: தபால் வாக்களிப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவானதாகும். பொதுவாக, வெற்றி பெறுகின்ற வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை, தபால் வாக்கு கணக்கெடுக்கப்படுவதற்கு முன்னரேயே திட்டவட்டமானதாக அமைந்துவிடுகின்றது. அதனாலேயே, வெற்றி பெறுகின்ற வேட்பாளர் யார் என்பது வாக்களிப்புத் தினத்திலேயே தெரிந்துவிடுகின்றது.

தற்போதைய தேர்தலிலே வெற்றிகரமான வேட்பாளரைக் கணிக்கமுடியாத சூழ்நிலை வாக்களிப்புத் தினத்திலே காணப்பட்டது. காரணம்: பென்சில்வேனிய, நெவாடா, ஜோர்ஜியா உள்ளிட்ட சில மாநிலங்களில், திட்டவட்டமான வெற்றியை உறுதிப்படுத்துகின்ற வாக்கு எண்ணிக்கை எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை. அதனால், தபால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னரேயே, வெற்றி பெறக்கூடிய வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை, திட்டவட்டமான முன்னணி நிலையைத் தொட்டது.

தற்போதைய சனாதிபதித் தேர்தலிலே தபால் வாக்கு அதிகரித்திருந்தது. கொரோனாத் தொற்று அச்சம் காரணமாகவே, அதிகமான வாக்காளர்கள் தபால் வாக்களிப்பைத் தெரிவு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அதுவே, திட்டவட்டமான தேர்தல் முடிவு அமைவதை தாமதப்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

சனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாக ஆரம்பித்ததிலிருந்தே, கள்ளவோட்டு பதிவாகியுள்ளதான குற்றச்சாட்டுக்களை டொனல்ட் டிரம்ப் முன்வைக்கின்றார். அக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன. மறுவளத்தில், கள்ளவோட்டு என்னும் குற்றச்சாட்டில் எத்தகைய அடிப்படைகளும் கிடையாது என்பதை, வெவ்வேறு மாநிலங்களின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

அமெரிக்காவில் கள்ளவோட்டு என்னும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதே கவனத்தைச் சுண்டியிழுக்கின்றது. அதனைச் சாதாரணமான ஒருவர் சொல்லவில்லை. எழுபது மில்லியன் அமெரிக்கர்களின் வாக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட ஒருவர் சொல்லியிருக்கின்றார். கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரு பத்தினி ஆவேசம்கொண்டாள். அமெரிக்கா என்ன செய்யப் போகின்றது என்னும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

IMG-20-1024x598.jpgஉலகின் நாலாமூலைக்கும் ஓடியோடி சனநாயகம் குறித்து வகுப்பெடுக்கின்ற அசகாய தேசத்துக்கா இந்தநிலை ஏற்பட்டிருக்கின்றது என்னும் ஆச்சரியத்தை எளிதில் கடந்து போகமுடியவில்லை.

பிறத்தியாரை ஒருநாளும் நெளிக்கக்கூடாது மோனை. அது திருப்பி எங்களுக்கே வந்துசேரும் என்று என்னுடைய தாய்வழிப் பேத்தியார் சொல்லுவார். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமானதும் எதிரானதுமான விளைவு உண்டு என்பதை ஐசக் நியூட்டன் கண்டறிந்தார். தன்வினை தன்னைச் சுடும் என்று பட்டினத்தார் சொன்னார். ஒப்பாரும்மிக்காருமற்ற சனநாயகத் தேசத்துக்கு, அவர்களுடைய பேத்தியார் புத்திசொல்லவில்லையோ என்னவோ. ஆனால், பட்டினத்துப் பிள்ளையின் தத்துவம் உள்ளது. புரிந்துகொள்வதோ அல்லது புரிந்துகொள்ள மறுப்பதோ அவர்களுடைய தெரிவுதானே.

https://thinakkural.lk/article/87323

 

காணொளியின் சாராம்சம் : அமரிக்க தேர்தலும் ஆசிய நாடுகளின் நிலையும். 

 

 

 

 

 

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனுக்கும், கமலா ஹரிஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

 
Kamala-Harris-and-Joe-Biden-696x365.jpg
 31 Views

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் ஜனாதிபதியாகவும், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சி என்ற வகையில் இந்த வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மிக முக்கியமான வெற்றியை பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கமலா ஹரிஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டையும், வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கின்றது எனவும் அந்த ருவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/ஜோ-பைடனுக்கும்-கமலா-ஹரிஸ/

உலக தலைவர்கள் பலர் பைடனிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்- ரஸ்யாவும் சீனாவும் அமைதி- டிரம்பின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றது ஈரான்

ஜோ பைடனின் வெற்றிக்கு பல உலக தலைவர்கள் உடனடியாக பாராட்டுகளை தெரிவித்துள்ள அதேவேளை ரஸ்யாவும் சீனாவும் இதுவரை பைடனை வாழ்த்துவதை தவிர்த்துள்ளன.
மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியே முதன்முதலாக பைடனை வாழ்த்தியவர்.
அமெரிக்க ஊடகங்கள் பைடனின் வெற்றியை அறிவித்து 24 நிமிடங்களுக்குள் அவர் தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
எனினும் இதற்கு மாறாக 2016 இல் டிரம்ப் பெற்றவெற்றியுடன் தொடர்புள்ளவர் என கருதப்படும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பைடனை வாழ்த்துவதை தாமதமாக்கிவருகின்றார்.

trump-putin.jpg
சீனா ஜனாதிபதி ஜின்பிங்கும்; பைடனை வாழ்த்துவதை தவிர்த்துக்கொண்டுள்ளார்.

china-pres.jpg
டிரம்பின் தடைகளால் பாதிக்கப்பட்ட நாளொன்றிற்கு 500 கொரோனா வைரஸ் மரணங்களை எதிர்கொள்ளும் ஈரான் டிரம்ப் வெளியேற்றப்பட்டதை கொண்டாடியதுடன் அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்யவேண்டும் இழப்பீடு வழங்;கவேண்டும் என்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதிஹசான் ருகானி டிரம்பிற்கும் புதிய ஜனாதிபதிக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
டிரம்பின் பாதிப்பை ஏற்படுத்தும் கொள்கையை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் அதனை எதிர்த்துள்ளனர் அடுத்த நிர்வாகம் இந்த வாய்ப்பை தனது கடந்தகால தவறுகளை சரிசெய்வதற்கு பயன்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொற்களை விட செயலே முக்கியம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க தேர்தல்கள் தாராளவாதத்தின் அழுக்குப்படிந்த முகத்திற்கு ஒரு உதாரணம் என தெரிவித்துள்ளது ஈரானின் ஆன்மீக தலைவர் அயத்தொல்லா அலி கமேனி தேர்தல் அமெரிக்க ஆட்சியின் தார்மீக அரசியல் வீழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

iran-newspaper-300x200.jpg
துருக்கியிலும் பைடனின் வெற்றியை தொடர்ந்து பதட்டம் தென்பட்டுள்ளது. பைடன் சிரிய குர்திஸ் இனத்தவர்களிற்கு ஆதரவளிக்க கூடாது மத்திய கிழக்கில் துருக்கியின்; நோக்கங்களிற்கு தடையாக விளங்கக்கூடாது என ஜனாதிபதி எயிப் எர்டகோனிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் தோல்வி பழைய நண்பர்கள் மத்தியிலான உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தாது,தொடர்பாடல்கள் தொடர்ந்தும் அதேபோன்று காணப்படும்,ஆனால் நிச்சயமாக இடைமாற்றுக்காலம் காணப்படும் என துருக்கியின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
துருக்கி பைடனின் வெளிவிவகார கொள்கையை உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பைடனும் துருக்கியும் துருக்கி குர்திஸ் அமைப்பான வைபிஜேயிற்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து மோதிக்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போரில் இந்த அமைப்பே முக்கிய பங்களிப்பை வழங்கியது.
எனினும் துருக்கி அந்த அமைப்பை பிகேகே துருக்கி தீவிரவாத அமைப்பின் ஒரு பகுதியாகவே வைபிஜேயினை கருதுகின்றது.
டிரம்பின் ஆபத்தான இராஜதந்திர முயற்சிகள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைவதற்கு காரணமாக அமைந்தன.
சவுதி அரேபிய அரண்மணையிலிருந்தும் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.
அந்த நாடு தன்னை பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் ஆயுதங்களையே நம்பியுள்ளது.
ஜனநாயக கட்சி யுத்தங்களை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரவிரும்பகின்றது.
குறிப்பாக யேமன் யுத்தத்தில் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்பது ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

biden-2-300x174.jpg

டிரம்பின் நெருங்கிய நண்பரான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் உடனடியாக பைடனிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என குறிப்பிடாமல் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அழுத்தங்கள் தொடரும், என்ற உத்தரவாதத்தை இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

https://thinakkural.lk/article/87460

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்

 
Editorial-1-150x150-1.jpg
 65 Views

ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக்  கிடைத்த  வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே முதற்தடவையாக வெள்ளை மாளிகையில் துணை அரசத் தலைவராகப் பதவிப்பொறுப்பேற்கும் பெண் – தெற்காசிய வழிவந்த முதல் பெண் –  ஆபிரிக்க ஆசிய அமெரிக்கப் பெண் – குடிவரவானவரின் மகளாக உள்ள பெண் – வெள்ளை நிறமல்லாத பெண் என்னும் பல வரலாற்றுச் சாதனைகள் படைத்த நிலையில் தெரிவாகியுள்ளார். அவரின் இந்த அனுபவங்களுடனான அரசியல் பயணம் என்பது பெண்ணுரிமை – தெற்காசிய அமைதி – ஆசிய ஆபிரிக்க அமெரிக்க மக்கள் உரையாடல் – குடிவரவுப் பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வுகள் என்பதை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பு. இந்த வியக்கத்தகு மாற்றத்தை ஏற்படுத்திய அவருக்குஇ அவரின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற உரிமையுடன் ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

அதேவேளையில், இந்த உரிமை தரும் தமிழர்கள் குறித்த அவரின் கடமைகளையும் அவர் நிறைவேற்ற வேண்டுமெனவும் வேண்டுகிறது.

“நான் சிவப்பு, நீல நிற மாநிலங்களாக அல்ல, ஒன்றுபட்ட ஐக்கிய அமெரிக்க மாநிலங்களாகவே அமெரிக்காவைப் பார்க்கிறேன்” என்னும் ஜோ பைடன் அவர்களின் வெற்றியுரை, அமெரிக்கா தனது மாநிலங்களை ஒன்றுபடுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கே, எதிர்வரும் காலங்களில் முன்னுரிமை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அமெரிக்க ஒருமைப்பாடு என்பதன் பின்னணியிலேயே அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை தொடரும் என்பது எதிர்பார்க்கப்படுகிற ஒன்றாக அமைகிறது.

இந்நேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு அவர்களது தேசியத்தை முன்னெடுக்க வேண்டுமென்னும் அவர்களின் அரசியல் ஆன்மாவை 18ஆம் நூற்றாண்டிலே அமெரிக்கர்களே  வடக்கில் முதலில் மானிப்பாயில் டாக்டர் கிரீன் அவர்களின் குழுவினரால் தமிழால் மருத்துவக்கல்வியைக் கற்பித்துத், தமிழ்மொழி மூலமாக மருத்துவர்களை உருவாக்கியும், அறிவியல் நூல்களைத் தமிழில் மொழியெர்த்து வெளியிட்டும் ஊடகங்களைத் தமிழில் தொடங்கியும் தோற்றுவித்தனர். என்பதை மீள்நினைவுகூர விரும்புகின்றோம்.

அக்காலத்து காலனித்துவ, பிரித்தானிய அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அமெரிக்கர்கள் ஈழத்தமிழர்களுக்கான வைத்திய மற்றும் கல்விச் சேவைகளைத் தொடங்கி, அவர்களது அரசியல் ஆன்மா கட்டமைக்கப்பட உதவினர். அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் நவீன கல்வி வளர்ச்சிக்கு அமெரிக்கர்கள் ஆற்றி வரும் பணிகள் பல.  இந்த அமெரிக்க ஈழத்தமிழர் இடையான தொன்மையும் தொடர்ச்சியுமான நேரடி உறவாடலை ஜோன் பைடன் அவர்கள் அரசியலிலும் தொடங்க வேண்டும். இது அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இந்துமா கடல் அமைதிஇ பாதுகாப்பு – பசுபிக்கடல் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்த இலங்கைத் தீவில் இந்துமா கடலின் பெரும்பகுதியைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஈழத்தமிழர்களும் தங்களாலான பங்களிப்பை வழங்க வழி செய்யும்.

அதே வேளை, “சனநாயகம் ஒரு நிலையல்ல – செயல். அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்க நாங்கள் அதிகம் பணி செய்ய வேண்டியுள்ளது” என்பதைத் துணை அரசத் தலைவர் கமலா ஹாரிஸ் அவர்கள் தனது உரையில் தெரிவித்துள்ளார்.  இந்தப் புதிய அணுகுமுறையில் அமெரிக்காவின் அரசியல் ஆன்மாவை வடிவமைத்த அமெரிக்கத் தலைவர்கள் வலியுறுத்திய மக்களின் பிறப்புரிமையாம் தன்னாட்சி உரிமையும் சிறுதேசியங்களின் பாதுகாப்பும்,  உலக மக்கள் அனைவருக்கும் கிட்டச் செய்ய வேண்டும் என்னும் உறுதிமொழியையும்  இணைத்துக் கொண்டாலே, அமெரிக்க ஆன்மாவை மீட்டெடுத்தல் என்பது முழுமையாகும்.

கமலா ஹாரிஸ் அவர்களின் தெரிவால் இதுவரை இராணுவ, பொருளாதார நல்லுறவாக அமைந்த இந்தோ அமெரிக்க உறவு இனி அரசியல் நல்லுறவாகவும் தொடரும். இந்த புதிய சூழலில் ஈழத்தமிழர்கள் குறித்த கொள்கை வகுப்பை ஈழத்தமிழர்களையும் இணைத்து வகுத்தாலே இந்தியாவும், அமெரிக்காவும் எதிர்பார்க்கும் இந்துமா கடல் அமைதி என்பது விரைவுபடும் என்பது எதார்த்தம்.

இந்நேரத்தில் இந்தியா எதிர்பார்ப்பது போல, ஈழத்தமிழர்களின் உரிமைகளை இக்காலத்துக்கு ஏற்ப முன்னெடுக்கக் கூடிய ஆற்றலாளர்களைக் கொண்ட குரல் தரவல்ல ஒரு கட்டமைப்பை ஈழத்தமிழர்கள் உருவாக்கினாலே, அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல் என்னும் இராஜதந்திர முயற்சிகள் முன்னேற உதவும்.

https://www.ilakku.org/அமெரிக்காவின்-புதிய-ஆட்ச/

  • கருத்துக்கள உறவுகள்

மெலானியா டிரம்ப்: 'அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதில் அவர் குடும்பத்தில் விரிசல்'

Trump and Melania

பட மூலாதாரம், REUTERS

ஜனநாயக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடனிடம் தனது தேர்தல் தோல்வியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொள்வது தொடர்பாக அவரது நெருங்கிய வட்டத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. 

டிரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் மற்றும் டொனால்டு டிரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியுமான மெலானியா டிரம்ப் ஆகியோர் தமது தேர்தல் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது. 

ஆனால் டிரம்பின் மகன்கள் டொனால்டு ஜூனியர் டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் அதிபரின் ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சியினர் ஆகியோரிடம் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு பொதுவெளியில் வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்துள்ள தேர்தல் வாக்குப்பதிவில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அவர் தரப்பில் இதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. 

இவரது பிரசாரக் குழுவினர் சில மாகாணங்களில் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றங்களில் இது தொடர்பாக முறையீடு செய்யும் முயற்சிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவான்கா டிரம்ப் கணவர் ஜேரட் குஷ்னர் டொனால்டு டிரம்பின் அரசியல் ஆலோசகராகவும் உள்ளார்.

பட மூலாதாரம், EPA

 
படக்குறிப்பு, 

இவான்கா டிரம்ப் கணவர் ஜேரட் குஷ்னர் டொனால்டு டிரம்பின் அரசியல் ஆலோசகராகவும் உள்ளார்.

டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அவரது குடியரசு கட்சியிலிருந்து குறைவான ஆதரவே கிடைத்துள்ளது.

தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்பு சட்ட ரீதியான பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமென்று குடியரசுக் கட்சியில் ஒரு தரப்பு டிரம்ப் அணியை வலியுறுத்துகிறது.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் டிரம்ப் அணியினர் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று மூத்த குடியரசு கட்சி தலைவர்கள் அவரது அணியினரிடம் வலியுறுத்தியுள்ளதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் தங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

சட்ட ரீதியான சிக்கல்கள் வருமா?

trump vs biden

ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றாலும் பைடன் வெற்றி பெற்றுள்ள மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 

தாமதமாகக் கிடைத்த பல தபால் வாக்குகளை செல்லாத வாக்குகள் என்று அறிவிக்க வேண்டும் என்று டிரம்ப் தரப்பு கோரிக்கை வைக்கும் முயற்சி ஒருவேளை உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம்.

ஆனால், அந்த வழக்கில் முடிவு தேர்தல் முடிவை மாற்றுவதற்கான வாய்ப்பில்லை என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சில மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூட உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம். எனினும், தேர்தல் முடிவுகளில் இதனால் பெருமளவில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

மெலானியா டிரம்ப்: 'அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதில் அவர் குடும்பத்தில் விரிசல்'

கிழவன்(ரம்ப்) ஒருத்தர்ரை சொல்லும் கேக்குதில்லையாம்......அறளை பேந்திட்டுது....
60 வருட அத்தியாயம் முடியுது. சனீஸ்வரா......🙏🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.