Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அக்கா உங்கள் அளவுக்கு லண்டனிலும் வெளிநாடுகளிலும் இருந்து இயங்கும் ஒட்டுக்குழு ஆட்கள் எழுதுவதையும் சிங்கள ஹிந்திய ஊடகங்கள் எழுதும் ஊகங்களையும் நம்ப வேண்டிய அவசியமில்லை.

போராட்டம் நடந்தது எங்கள் மண்ணை மீட்க. எங்கள் உரிமைக்காக. அதற்கான தார்மீக ஆதரவை போராடும் சக்திகளுக்கு வழங்க வேண்டிய எமது கடமை. அதைச் செய்வதற்கும்.. எமக்கான போராட்டத்தை பல்வேறு சுயநலத் தேவைகளுக்காக காட்டிக்கொடுத்தவனுக்கும்.. சொந்த இனத்தை அழிச்சு அதன் மூலம் எஜமானர்களின் எலும்பைப் பொறுக்கிறவனுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது.. மற்றவன் எங்களை மக்களை மண்ணை ஏமாற்றிப் பிழைக்க. 

அம்பாறையில் 30,000 வாக்குகள்.. மற்றவர் மட்டக்களப்பில் 50,000 வாக்குகள்.. மொத்தம் 80,000 வாக்குகள் தான் தமிழ் மக்களின் வாக்குகளா..???! இதில் எத்தனை இலஞ்சம் கொடுத்து வாங்கினது..??!

போக.. இத்தனை வாக்குகள் எடுத்தவை மக்களுக்கு இதுவரை செய்தது என்ன..???! 

250 பேருக்கு வேலை வாய்ப்பு.. ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில்.. அதுவும்... ஆளுக்கு ஒரு இலச்சம் இலஞ்சம்.

30 மணல் அள்ளும் அனுமதிப்பத்திரங்கள்.. ஒரு பத்திரத்துக்கு இலஞ்சம்.. 10 இலச்சம். 

இதை தான் அந்த 80,000 வாக்குகளும் விரும்பினவையோ..???!

போக.. முஸ்லிம் அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வில் வளர்த்து வாங்கப்பட்ட ஆதரவை இப்போ.. முஸ்லிம் ஆதரவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.. மிஸ்டர் பிள்ளையான். மிக விரைவில்.. போட்ட வாக்குக்கான பலனை அனுபவிப்பினம்.. போட்ட தமிழர்கள்.

அதே தான் கொம்மான் விடயத்திலும். எம்மவர்கள் மீண்டும் மீண்டும் பட்டுத்தான் திருந்தனும் என்பது விதிப்பு என்றால் அதனை யாராலும் மாற்ற முடியாது.

இவர்களின் இந்த நிலைக்கு கூட்டமைப்பின் பலவீனமான முஸ்லிம் சிங்கள சரணாகதி.. அரசியல் முன்னெடுப்புகளும் ஒரு காரணம். 

மன்னிக்கவும் நெடுக்கர் நீங்கள் எப்படி போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை செலுத்தினீர்கள் என்று 2009யில் பார்த்தோமே! 
 
  • Replies 165
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 09:52, Justin said:

படுகொலை செய்யப் பட்டதமிழர்களுக்குத் தானே அஞ்சலி செலுத்தினார்? நல்ல விடயம் தானே நண்பர்களே? 

ஈழத்தில் பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு சில விடயங்களிலாவது ஒத்து வருகிறார்களே என்று திருப்தி கொள்ளாமல் ஏன் இந்த நொட்டை நொடிசல் வாதங்களோ தெரியவில்லை!

10 வருடங்கள் கழித்து  கருணா அஞ்சலி செலுத்துவதால் ஏன் இப்போ அஞ்சலி செலுத்துகிறார் என கேள்வி கேட்பது நியாயம் தானே. 30 ஆயிரம் வாக்குகளை கடந்த தேர்த்தலில் பெற்றதால் இன்னும் கொஞ்சம்  கூடுதலாக மக்களின் உணர்வோடு கலந்தால் மேலும் செல்வாக்கு பெறலாம் என நினைத்திருக்க கூடும். அம்பாறை அரசு வசம் ஆக வேண்டும் என்பதில் மகிந்த எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்பதை சொல்லவே  தேவை இல்லை. கருணாவின் அடுத்த நகர்வின் பின் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் மற்றோரு திரியில் நாங்களும் சொன்னோம். உங்களுக்கு திரி பிடிக்காவிட்டால் நகர்ந்துவிடுங்கள் என்று! யாராவது கேட்டீர்களா? இப்பமட்டும் குத்துதாக்கும் ??

கணக்க போட்டு குழப்ப வேண்டாம் ...நான் இங்கு ஒருத்தரையும் கருத்து எழுத வேணாம் என்று சொல்லவில்லை ...தாங்களே இந்த திரியில் வந்து கருத்து எழுதிக் கொண்டு தூக்கிப் பிடிக்குமளவிற்கு கருணா முக்கியத்தமானவர் இல்லை என்றும் எழுதினம்...அவையளுக்கு தான் என் பதில் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, கற்பகதரு said:

உங்க தலைவர் .... எங்கே?

10 வருட இடைவெளியை தாண்டி விட்டதே....? நீங்களும் உங்களைப்போன்றவர்களும்  இன்னும் அதே 10 வருத்திற்கு முன்னரையே மாதிரி நின்று கொண்டிருக்கின்றீர்களே? கலையுங்கள் ...ஆக வேண்டியதை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) என்ன சொல்ல வருகிறீர்கள் ? முரளீதரன் பிரிந்து தலைமைக்கு எதிராகவும் சிறீலங்கா இராணுவத்துடனும் சேர்ந்து நின்றதற்கு ஆதாரம் இல்லை. இருந்தால் காட்டுங்கள் என்றா கூறுகிறீர்கள் ? 😂அவர் உங்கள் உடன்பிறப்பு. விட்டுக்கொடுக்க முடியாது. புரிந்துகொள்கிறேன். ம்ம்ம்ம்..ம்

2) கெஞ்சல் இல்லையென்றால் மிரட்டல் என்கிறீர்களா ? 😂😂

3) முரளீதரனுடைய போராட்ட வாழ்க்கையை தீர்ப்பிட எனக்குத் தகுதி இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக இறுதிக் காலத்தில் அவர் செய்ததை சரியென்று நீங்கள் நியாயப்படுத்துவது ஏற்கக் கூடியதல்ல. ☹️

உங்களுக்கு நான் எழுதுவது உண்மையிலேயே விளங்கவில்லையா? ....அவர் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள மகிந்தாவோடு சேர்ந்தது உண்மை ...அதில் எந்த மாற்றுக் கருத்தும்ல்லை ...ஆனால் காட்டிக் கொடுத்து தான் 2009யில் புலிகள் தோத்தார்கள் என்று ஒரு காரணம் சொல்கிறீர்களே அதற்குத் தான் ஆதாரம் கேட்க்கிறேன்.
என்னுடைய கருத்தை ஏற்பதும், ஏற்காததும் உங்கட விருப்பம் 

2 hours ago, விசுகு said:

ரதிக்கு குதர்க்கமாக எழுதத் தெரியும் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு தலைகீழாக யோசிக்க வரும் என்று தெரியவில்லை. நன்றி ஹம்

அப்பிடி என்னத்தை எழுதி போட்டு எடிட் பண்ணீர்கள் ?...கேவலமாய் எதையாவது என்னை பற்றி எழுதினீர்களா 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

அதற்காக அந்த மண்ணில் பிறந்த ஒருவர் அம்மக்கள் அடிமைகளாக போகக்கூடாது என நினைப்பது பிழையா??

தங்களுக்கு என்ன தேவை என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும் ...நாளைக்கே அவர்கள் பிரிந்து போக விரும்பினால் , அவர்கள் போராடுவார்கள் இங்கேயிருந்து உசுப்பேத்த தேவையில்லை ...எப்படா சிங்களவன் ஏதாவது பிரச்சனை கொடுப்பான் அதை எப்படி பூதாகரமாக்குவது என்பது தான் இங்குள்ள சிலரின் தேவையும்,வேலையும்.

அங்குள்ள தமிழர்,சிங்களவர்களுடன் ஒன்றாக,ஒற்றுமையாய் இருக்க விரும்பினாலும் இங்குள்ளவர்கள் விட மாட்டாட்கள்  
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

அப்பிடி என்னத்தை எழுதி போட்டு எடிட் பண்ணீர்கள் ?...கேவலமாய் எதையாவது என்னை பற்றி எழுதினீர்களா 

கைத்தொலைபேசியில் எழுதும் போது ரதி என்று எழுதும் போது ரவி என்று வந்து விட்டது. இதற்கு இத்தனை????

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

தங்களுக்கு என்ன தேவை என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும் ...நாளைக்கே அவர்கள் பிரிந்து போக விரும்பினால் , அவர்கள் போராடுவார்கள் இங்கேயிருந்து உசுப்பேத்த தேவையில்லை ...எப்படா சிங்களவன் ஏதாவது பிரச்சனை கொடுப்பான் அதை எப்படி பூதாகரமாக்குவது என்பது தான் இங்குள்ள சிலரின் தேவையும்,வேலையும்.

அங்குள்ள தமிழர்,சிங்களவர்களுடன் ஒன்றாக,ஒற்றுமையாய் இருக்க விரும்பினாலும் இங்குள்ளவர்கள் விட மாட்டாட்கள்  
 
அங்குள்ளவர்களுக்கு என்ன தேவை என்பதை அம்மக்கள் அறிவார்கள் என்பது எமக்கும்  தெரியும். எப்படா சிங்களவன் பிரச்சனை கொடுப்பான் என்பதல்ல எப்பொழுதுமே சிங்களவர் (அரசு, அதன் ஏவல்கள்} தமிழர்களுக்கு பிரச்சனை கொடுத்த வண்ணமே உள்ளார்கள். இதில்  கூடுதலாக சாம்பிராணி காட்டி வெத்திலை வைத்து பூதாகாரமாக்க தேவை இல்லை.  நாங்கள் உசுப்பேத்தி அங்குள்ள மக்கள் உசுப்பேறி விடுவினமாக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

முந்தி அப்பிடி ஒரு காலம் இருந்தது இப்ப இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இப்படிப் பலர் போராடாமல் போயிருந்தால் போராட்டமே நடந்திருக்காது.

போராடி பிரிந்தவர்கள் எல்லாம் காட்டிக்கொடுத்துதான் பிரிந்தார்களா? அல்லது காட்டிக்கொடுத்தவர்களெல்லாம் போராடினார்களா?  காட்டிக்கொடுத்தவர்களுக்கெல்லாம் அரசில் பதவி, பட்டா கிடைத்ததா? ஒரு போராளி தன்னால் முடிந்தவரை போராடினால்  அவனை போராளி என்கிறோம்.  அந்தப்போராட்டத்தில் மடிந்தவனை மாவீரன் என்கிறோம். குப்பியை கடித்து போராட்டத்தை காட்டிக்கொடுக்காமல் தன்னை அழித்தவனை தியாகி என்கிறோம். போராட்டத்தை எதிரிக்கு காட்டிக்கொடுத்து சலுகை பெற்றவனை துரோகி என்கிறோம். இதில் வி. முரளிதரனை எப்படி அழைக்கலாம்? என்று  தயவு செய்து கொஞ்சம் விளக்குங்கள். போராடினேன், தளபதியாய் இருந்தேன் என்பதற்காக காட்டிக்கொடுக்கும் உரிமை உண்டா?

5 hours ago, ரதி said:

அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா?

யோவ், அக்கோய்! அவரிடம் இயக்கத்தின் அமைவிடம், புலிகள் கையாளும் போர்தந்திரம்,  போர்வழிமுறைகளை கேட்டு முறியடித்து அதற்காக சன்மானம் அளித்த எஜமானே வாக்குமூலம் அளித்து விட்டார்,பகிரங்கமாக சொல்லியும்விட்டார். உலக நாடுகளே   அழிக்கமுடியாது என்று சொன்ன புலிகளை நாம் அழிக்க உதவியது இந்த எட்டப்பன் தான் என்று இனி எந்த ஆதாரம் கேட்கிறீர்கள்? 

15 hours ago, கிருபன் said:

முஸ்லிம்களை விட அதிகம் காட்டிக்கொடுத்தவர்கள் உள்ளிருந்த தமிழர்தான். ஆனால் முஸ்லிம்களை மட்டும் காட்டிக்கொடுக்கும் இனம் என்று சொல்லிக்கொள்கின்றோம்.

தமிழர்கள் காட்டிக்கொடுக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. எடடபர்களும், காக்கை வன்னியர்களும் காலத்துக்கு காலம் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

இருந்தாலும் இன்னொரு சமூகம் தமிழை பேசி, தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களை அழிப்பார்களாக இருந்தால் எந்த மானமுள்ள தமிழனும் அதை ஏற்றுக்கொள்ள மாடடான்.

ஏன் எட்டப்பர்களும் காக்கை வன்னியர்களும் கூட ஏற்றுக்கொள்ள மாடடார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 07:07, பாலபத்ர ஓணாண்டி said:

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு..

அவருக்கு விழுந்தது விருப்பு வாக்கா? கள்ளவாக்கா? ஏமாற்று வாக்கா?  என்று விவாதம் செய்ய நான் வரவில்லை. ஒரு உண்மையை சொல்கிறேன். எல்லோரும் இடம் பெயர்ந்தபோது சிலர் பெயரவில்லை. ஆனால் வடக்கில் சிவில் நிர்வாகம் நடக்கிறது என்பதை உலகுக்கு காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது சிங்களத்துக்கு. பல சிவில்  உத்தியோகத்தர் இடம் பெயர்ந்துவிட்டனர். பதவிகள் வெற்றிடமாயிருந்தன. தராதரமில்லாத தங்கியிருந்தவர்களுக்கு நமது வடக்கின் வசந்தம் லட்ஷக்கணக்கில் காசை வாங்கிக்கொண்டு பணிக்கு அமர்த்தியதுமல்லாமல், தேர்தல் காலங்களில் தனக்கு வாக்குப்போட வேண்டும் என்றும் பணித்தது. அதை பார்த்த சில ஏழைகள்  பணத்தின் சூட்ச்சுமம் புரியாமல் ஏதோ சும்மா வேலைவாய்ப்பு அளிக்கிறார் என்று நம்பி, அவர் பின்னால் போவதும். கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் வாக்களிப்பதும் நடக்கிறது. இதை விட இளைஞரிடையே சமூக விரோத செயல்களை திட்டமிட்டு அரங்கேற்றுவதும், சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவதும் தொடர்கிறது. சிங்களவனின் திட்டத்தை கச்சிதமாய் நடத்தி, எம் சமூகத்தை மந்தைக்கூட்டங்களாய் ஆக்குவதற்கு இவருக்கு மரியாதை, சன்மானம் அரசு வழங்குகிறது. அதற்காக சிங்களவன் வடக்கிற்கு வரும்போது மக்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, ஏமாற்றி  அழைத்துவந்து படம் காட்டுவதும்  சிங்களவன் இந்த வசந்தத்தின் மேல் மரியாதை வைத்திருக்கிறது இவரால் எல்லாம் முடியும் என்று காட்ட சில சலுகைகளை எறிவதும், அந்தப்போலியை நம்பி பல லட்ஷம் வாக்குகளை சேகரிப்பதும் தற்போதைய நிலை. உண்மை தெரியும் போது கவுண்டமணி செந்தில் வாழைப்பழ நகைசுவை சொல்லிக்கொண்டே வசந்தம் நகரும். விழும் வாக்குகளின் தொகையின்  பின்னால் உள்ள இரகசியம் இதுதான். சிலதுகள் படிக்கத் தேவையில்லை பின்னால்த் திரிந்தால் தலைவர் காப்பாற்றுவார் என்று அலையுதுகள் எங்களின் கல்வி, தொழில், பொருளாதாரம் எல்லாம் கைவிடப்பண்ண நாசமாய்ப்போய் எம்சமுதாயத்தை சோம்பேறிகளாக்கி  எங்கள் குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பு கைகொடுக்க அவைகளை சிங்களவன் நசுக்கிடாமல் கவர்ந்து கொண்டு போகிறான். நாங்கள் இழக்கும் உரிமைகளை மறந்து பெறும் சலுகைகளை பெருமையாகப் பேசிப்பேசியே மாழுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

உங்களுக்கு நான் எழுதுவது உண்மையிலேயே விளங்கவில்லையா? ....அவர் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள மகிந்தாவோடு சேர்ந்தது உண்மை ...அதில் எந்த மாற்றுக் கருத்தும்ல்லை ...ஆனால் காட்டிக் கொடுத்து தான் 2009யில் புலிகள் தோத்தார்கள் என்று ஒரு காரணம் சொல்கிறீர்களே அதற்குத் தான் ஆதாரம் கேட்க்கிறேன்.
என்னுடைய கருத்தை ஏற்பதும், ஏற்காததும் உங்கட விருப்பம் 

1) முரளீதரன் காட்டிக் கொடுத்துத்தான் புலிகள் தோற்றதாக எங்குமே நான் குறிப்பிடவில்லை. 

2) முரளீதரன் தொடர்பாக சில  சொற்களை நான் பிரயோகிக்காததற்குக் காரணம் அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்பதும் அவரின் போராட்ட கால வாழ்க்கை மீதிருக்கும்  மரியாதையும்தான். 

போராட்த்தின் இறுதிக் காலத்தில் அவரினதும் அவரின் சகாக்களினதும் செயற்பாடுகள் என்னவென்று எல்லோருக்குமே தெரியும். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

இப்ப கனக்க வேண்டாம்.. மகிந்தவிடம் வாங்கிய சுதந்திரக் கட்சி உபதலைவர் பதவிக்கு என்னானது..??!  மகிந்தவிடம் கேட்ட அமைச்சர் பதவிக்கு என்னானது..??! மகிந்தவிடம் கேட்டக் கிழக்கு ஆளுநர் பதவிக்கு என்னானது..??!

இப்ப மகிந்த கொடுக்கவில்லை என்பதற்காக.. எதைக் கொண்டு போய் பிரியுறது..??! பிரிந்தால் புழைப்புக்கு என்னாகிறது.. ஓடி ஒளியவும் இடமில்லை.. அடைக்கலம் கொடுக்கவும் ஆக்களில்லை.

வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்த்தது கணக்கா எழுதிற கூட்டத்தில் கிருபன் அண்ணாவும் கடையிசில் தன்னை இணைந்துக் கொண்டு விட்டார் போலும். 

கருணா அம்மான் தலைவர் பிரபாகரனுக்கு தளபதியாக இருந்தார். அதனால் தென் தமிழீழத்தின் புலிகளின் கட்டமைப்புக்களை நிர்வகிக்க கோரிக்கை வைக்கமுடிந்தது. ஆனால் அவர் ராஜபக்‌ஷக்களிடம் அபயம் கோரிப் போனவர். அடைக்கலம் கேட்டவர் கிடைப்பதைத்தானே ஏற்றுக்கொள்ளவேண்டும்!

2004 இன் பின்னர் நடந்தவை எல்லாமே எல்லாம் யாழில் இருக்கு. அவற்றை வாசித்தாலே என்ன நடந்தது என்று தெரியும்தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

நானும் இப்போதைய கருணா அம்மானுக்கு சப்போர்ட் கிடையாது.  பிள்ளையான் தமிழர்களை பிளவுபடுத்துவதில் மூர்க்கத்துடன் செயற்படுபவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மக்களின் ஆதரவு இவர்களுக்கு முற்றிலும் இல்லை என்பதும் அண்மைய தேர்தலில் கிடைத்த வாக்குகள் எல்லாம் கள்ளவோட்டில் விழுந்தவை என்பதும் மக்களின் உணர்வுகளைப் புரியாதவர்களின் வெற்றுவார்த்தைகள்.

மக்களை தமிழ்த் தேசியம் பக்கம் தக்கவைக்க உருப்படியாக எதுவும் செய்யாததன் விளைவுகள் இவை என்பதை விளங்காதமட்டும் ஒரு மாற்றமும் வராது.

கருணா அம்மான் பொட்டும் பிறையுமாக மாறினாலும், முன்னைய கம்பீரம் எல்லாம் போய்விட்டது!

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

கேள்வி இவ்வளவுகாலமும் அஞ்சலி செலுத்தாத அம்மான் இம்முறைமட்டும் ஏன் அஞ்சலி செலுத்துகிறார் என்பதே

கருணா அம்மான் கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் பிரச்சினையோடுதானே அம்பாறைக்குப் போனவர். அதற்கு முன்னர் அவருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

வெடிச்சத்தம் கேட்டு ஷெல்லடி கேட்டு அரைக்காற்சட்டையுடன் வெளிநாட்டிற்கு பாய்ந்த  உங்களை விட

வெடிச்சத்தமோ ஷெல்லடியோ கேட்காமல் முழுக்காற்சட்டையுடன் வெளிநாடு பாய்ந்தவர்கள் தான் போராட்டத்தை புலத்திலிருந்து ஆதரித்தார்கள்.

ஆமாம். சண்டை, சாவு, பசி, பட்டினி, இடம்பெயர்தல் எல்லாவற்றையும் படம் மாதிரிப் பார்த்துக்கொண்டிருந்ததால், இப்பவும் நின்றுபோன படத்தைத் தொடரவேண்டும் என்று எவர் தமிழ்த்தேசியம், உரிமைப்போர் என்று அதிகம் கூவுகின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் பணத்தை அள்ளி இறைக்கின்றார்கள். அதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் இப்போதும் கறக்க முடிந்ததை கறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

. குப்பியை கடித்து போராட்டத்தை காட்டிக்கொடுக்காமல் தன்னை அழித்தவனை தியாகி என்கிறோம். போராட்டத்தை எதிரிக்கு காட்டிக்கொடுத்து சலுகை பெற்றவனை துரோகி என்கிறோம். இதில் வி. முரளிதரனை எப்படி அழைக்கலாம்? என்று  தயவு செய்து கொஞ்சம் விளக்குங்கள். போராடினேன், தளபதியாய் இருந்தேன் என்பதற்காக காட்டிக்கொடுக்கும் உரிமை உண்டா?

இந்தப் பட்டங்கள் கொடுக்கும் புலம்பெயர் பல்கலைக்கழகங்களால்தான் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட போராளிகளைப் பார்த்து  “ஏன் குப்பி கடித்துச் சாகவில்லை?” என்று கேட்கவும் முடிந்தது.

கருணா அம்மானை துரோகி என்று தலைவர் பிரபாகரன்கூடச் சொல்லவில்லை என்று ஒரு வீடியோவில் கருணா அம்மான் சொல்லியிருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானை துரோகி என்று தலைவர் பிரபாகரன்கூடச் சொல்லவில்லை என்று ஒரு வீடியோவில் கருணா அம்மான் சொல்லியிருந்தார். 

இந்த வி. முரளிதரன்தான்  தலைவர் ஒரு சர்வாதிகாரி என்று ராஜபக்ஷக்களுடன் சேர்ந்தவுடன் பேட்டி கொடுத்தார். தேர்தலின் போது  தான் காட்டிக்கொடுக்கவில்லை என்றார். போர்முடிவடைந்த போது தான் நாட்டில் இருக்கவில்லை என்றார். தலைவரின் உடலை  அடையாளம் காட்ட முள்ளிவாய்க்காலுக்கு வந்தேன் என்றார். ஆனால் அவருக்கு சிறப்பு பதவி கொடுத்த அவரின் எஜமான் அவரை காட்டிக்கொடுத்துவிட்டார். தளபதி இவ்வாறு பல  கூறுவார் கேளுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானை துரோகி என்று தலைவர் பிரபாகரன்கூடச் சொல்லவில்லை என்று ஒரு வீடியோவில் கருணா அம்மான் சொல்லியிருந்தார். 

பிரபாகரனின் ஞாபகமாக ஒரு துரும்பையும் விட்டுவைக்கக் கூடாது, பாலச்சந்திரனையும் போட்டுத் தள்ளுங்கள் என்று அம்மான் சொல்லியதாகச் செய்தியும் வெளிவந்ததே. இன்றுவரை அதனை அவர் மறுத்ததாகத் தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் இங்கு பதிந்துவிடுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுவைப்பிரியன் said:

நான் எப்ப முடியும் என்று சொன்னேன்.

"தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்"

அப்போ மேலேயுள்ள வரிகளின் அர்த்தம் என்னவோ?

16 hours ago, கற்பகதரு said:

உங்க தலைவர் .... எங்கே?

எங்கள் தலைவரைத்தான் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டீர்களே??

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

நான் உங்களை என்றும் சொன்னதில்லை உங்களை போன்றவர்கள் நிறை நலத்திட்டங்களை உருவாக்கி நகர்த்தி செல்கிறார்கள் ஆனால் சிலர் பணத்தினை அனுப்பினால் தாயகத்தின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என நினைக்கிறார்கள் அவர்கள் அனுப்பும் பணத்தினால் பாரிய பிரச்சினைகள் உருவாகிறது என சொல்லலாம் பல குற்றச்செயல்களுக்கு இந்த பணமும் ஓர் காரணமாக அமைகிறது அண்ண புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

அக்கா உங்கள் அளவுக்கு லண்டனிலும் வெளிநாடுகளிலும் இருந்து இயங்கும் ஒட்டுக்குழு ஆட்கள் எழுதுவதையும் சிங்கள ஹிந்திய ஊடகங்கள் எழுதும் ஊகங்களையும் நம்ப வேண்டிய அவசியமில்லை.

போராட்டம் நடந்தது எங்கள் மண்ணை மீட்க. எங்கள் உரிமைக்காக. அதற்கான தார்மீக ஆதரவை போராடும் சக்திகளுக்கு வழங்க வேண்டிய எமது கடமை. அதைச் செய்வதற்கும்.. எமக்கான போராட்டத்தை பல்வேறு சுயநலத் தேவைகளுக்காக காட்டிக்கொடுத்தவனுக்கும்.. சொந்த இனத்தை அழிச்சு அதன் மூலம் எஜமானர்களின் எலும்பைப் பொறுக்கிறவனுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது.. மற்றவன் எங்களை மக்களை மண்ணை ஏமாற்றிப் பிழைக்க. 

அம்பாறையில் 30,000 வாக்குகள்.. மற்றவர் மட்டக்களப்பில் 50,000 வாக்குகள்.. மொத்தம் 80,000 வாக்குகள் தான் தமிழ் மக்களின் வாக்குகளா..???! இதில் எத்தனை இலஞ்சம் கொடுத்து வாங்கினது..??!

போக.. இத்தனை வாக்குகள் எடுத்தவை மக்களுக்கு இதுவரை செய்தது என்ன..???! 

250 பேருக்கு வேலை வாய்ப்பு.. ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில்.. அதுவும்... ஆளுக்கு ஒரு இலச்சம் இலஞ்சம்.

30 மணல் அள்ளும் அனுமதிப்பத்திரங்கள்.. ஒரு பத்திரத்துக்கு இலஞ்சம்.. 10 இலச்சம். 

இதை தான் அந்த 80,000 வாக்குகளும் விரும்பினவையோ..???!

போக.. முஸ்லிம் அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வில் வளர்த்து வாங்கப்பட்ட ஆதரவை இப்போ.. முஸ்லிம் ஆதரவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.. மிஸ்டர் பிள்ளையான். மிக விரைவில்.. போட்ட வாக்குக்கான பலனை அனுபவிப்பினம்.. போட்ட தமிழர்கள்.

அதே தான் கொம்மான் விடயத்திலும். எம்மவர்கள் மீண்டும் மீண்டும் பட்டுத்தான் திருந்தனும் என்பது விதிப்பு என்றால் அதனை யாராலும் மாற்ற முடியாது.

இவர்களின் இந்த நிலைக்கு கூட்டமைப்பின் பலவீனமான முஸ்லிம் சிங்கள சரணாகதி.. அரசியல் முன்னெடுப்புகளும் ஒரு காரணம். 

அதிக லஞ்சம் கொடுத்தது தமிழரசுக்கட்சி உதாரணம் சாணாக்கியன் கட்சிக்குள் சேர நிதி வழங்கினார் பல கோடி , ஜனா வும் ஆதே வேலை ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தவர்கள் என்று சொன்னதும் சிரிப்பு வருகிறது சிறையில் உள்ள பிள்ளையானால் எப்படி பணம் கொடுக்க முடியும் ??

அது போக தமிழரசுகட்சி கிழக்கிலிருந்து ஒரு புல்லையும் தமிழ் மக்களுக்காக புடுங்குவதில்லை என தெரிந்து மக்கள் கர்ணாவுக்கும் அம்பாறையில் ஆதரவு வழங்கினார்கள் இதில் பல பேர் புலம் பெயர்ந்த மக்களும் அடங்கும் விபரம் அதிகம் இருக்கு நெடுக்கு . இங்கே கூட்டமைப்பு இருந்தாலும் தமிழர் அகதிகள்தான் கர்ணா பிள்ளையான் இருந்தாலும் அகதிகள்தான் இலங்கையில்  

சின்ன உதாரணம் சுமந்திரன் ஐயா கல்முனைக்கு வந்து செருப்பை விட்டு ஓடுனது நியாபகம் வருமென நினைக்கிறன் . வடக்கில் அங்கஜன் , டக்ளஸ் மாத்தயா எல்லாம் வெல்லும் வெல்லும் போது இவர்கள் வென்றால் மட்டும் கள்ளவாக்கா ஐயா அப்ப வடக்கில் உள்ள மக்களும் உங்க லிஸ்ட்டில் என்ன மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையானால்.. சிறையில் இருந்தபடி இலஞ்சம் வாங்க முடியாது என்ற உங்கள் வாதம் நகைப்புக்கிடமானது. அவரின் பினாமிகள் பலர் வெளியில் உள்ளனர். காசிருக்கும் இடத்தில் ஒட்டவா ஆக்களுக்குப் பஞ்சம். குறிப்பாக தமிழர்களில். 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக.. டக்கிளஸ்.. அங்கஜனை மக்கள் தெரிவு செய்தததாகத் தெரியவில்லை. டக்கிளஸுக்கு என்று ஒரு கூட்டம் வாக்களிக்க இருக்கிறது. அது இயக்கங்கள் இருந்த காலத்தில் இருந்தே அது இருக்குது. அங்கஜன் அபிவிருத்தி என்ற கோசத்தோடு வாக்குக் கேட்டதால்.. அவருக்கு ஒரு பகுதியினர் வாக்களித்தனர். அதற்கான விளைவை அவர்கள் சந்திக்கிறார்கள்.

அதேபோல்.. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக.. கொம்மான்.. பிள்ளையான்.. இனியபாரதி போன்ற பெருந்தலைவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்றா சொல்கிறீர்கள். பார்ப்போமே.. முன்னரும்.. இவர்களால் கிழக்கின் விடியல் சாத்தியப்படவில்லை.. எனியாவது நடக்குதான்னு..??!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக சொந்த இனத்தையே கருவறுத்தவனை தலைவனாக நியமிப்பது எப்படி அந்த இனத்தின் மீட்சிக்கு உதவும் என்பதை.. காலம் உங்களுக்கு மீண்டும் உணர்த்தி நிற்கும்.

வடக்குக் கிழக்கு என்ற பிரதேசவாதப் பிரிவினை யாருக்கும்.. வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. ஏனெனில் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வது பெரும்பான்மையில் தமிழ் பேசும் மக்களே. வடக்கும் கிழக்கும் எந்தப் பாகுபாடுமின்றி இப்போ சிங்களத்தால் கபளீகரம் செய்யப்படுகிறது. நாம் தான் பிரதேசமாக பிரிந்து நின்று இருந்ததையும் இழந்து நிற்கிறோம். அதைச் செய்தவர்களை மீண்டும்.. அரியணைக்கு ஏற்றி மகிழ்வது,, மகிழ்ச்சிக்குரிய விடயமே அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடு.. சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளோ.. அல்லது அதன் எலும்பு பொறுக்கி கொம்மான் பிள்ளையான் போன்றதுகளோ அல்ல. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

ஒற்றை வரியில் சொல்லவா 

வாக்களித்தது மக்கள் தானே பிரச்சினைகளை அவர்களே பார்த்துகொள்ளட்டுமே நெடுக்ஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.