Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

யுத்தத்தின் போது எதிரியுடன் போராடி வீர சாவடைவதையும், சொந்த இயக்கத்தால் போட்டு தள்ளப்படுவதைவதையும் ஓரே தட்டில் வைத்து பார்க்கும் உங்களை நினைக்க எனக்கு வியப்பேதுமில்லை 

தன் சொந்த நலனுக்காக இவர் எத்தனை பேரை போட்டுத் தள்ளியிருப்பார்? இவரின் துரோகத்தால் எத்தனை போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டு, சொல்லமுடியாத சித்திரவதைபட்டு, சுட்டபின்னும் காலால் உதைத்து உடலை நிலத்தில் தள்ளி, உயிரற்ற உடலைக்கூட நிர்வாணப்படுத்தி....... எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது எதிரியுடன் போராடினாலென்ன? குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்டாலென்ன?

  • Replies 165
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

தன் சொந்த நலனுக்காக இவர் எத்தனை பேரை போட்டுத் தள்ளியிருப்பார்? இவரின் துரோகத்தால் எத்தனை போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டு, சொல்லமுடியாத சித்திரவதைபட்டு, சுட்டபின்னும் காலால் உதைத்து உடலை நிலத்தில் தள்ளி, உயிரற்ற உடலைக்கூட நிர்வாணப்படுத்தி....... எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது எதிரியுடன் போராடினாலென்ன? குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்டாலென்ன?

எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது குற்றம் புரியாமலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டாலும்,  தவறான ஆளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டாலும், குண்டுவைக்கப்படும் இடத்தில் வாழ்ந்து மாண்டிருந்தாலும் கூட, எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. இப்படி எத்தனை உயிர் போனது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது குற்றம் புரியாமலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டாலும்,  தவறான ஆளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டாலும், குண்டுவைக்கப்படும் இடத்தில் வாழ்ந்து மாண்டிருந்தாலும் கூட, எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. இப்படி எத்தனை உயிர் போனது?

எல்லாமே உயிர் தானுங்கோ. நமது உடலில் ஏற்றப் படும் தடுப்பூசிகளிலிருந்து ஆகாயத்தில் பறப்பது வரை சோதனைக்காக பயன்படுத்தியது அனைத்தும் உயிர் தானுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, கற்பகதரு said:

எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது குற்றம் புரியாமலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டாலும்,  தவறான ஆளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டாலும், குண்டுவைக்கப்படும் இடத்தில் வாழ்ந்து மாண்டிருந்தாலும் கூட, எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. இப்படி எத்தனை உயிர் போனது?

எல்லாம் உயிர்தான்.

ஆனால் ஒரு உயிர் பலியாகும் போது ஏன்? எதற்கு? எப்படி? என்பதில் தான் அதன் மதிப்பும் மரியாதையும் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அண்ணா நாங்களோ எங்கள் குடும்பமோ சாகக் கூடாது ... அடுத்தவன் போராடினாலோ,இடையில் விட்டுட்டு ஓடி வந்தாலோ அல்லது  செத்தாலோ நல்ல சா ,கெட்ட சா என்று விமர்சிப்போம் 😟
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக  மற்றைவர்களையும் அவர்களுடன் எடை போட்டு சிந்திப்பது முற்றிலும் தவறு.

4 hours ago, கற்பகதரு said:

எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது குற்றம் புரியாமலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டாலும்,  தவறான ஆளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டாலும், குண்டுவைக்கப்படும் இடத்தில் வாழ்ந்து மாண்டிருந்தாலும் கூட, எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. இப்படி எத்தனை உயிர் போனது?

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. இனி அதைப்பற்றி பேசி பயனில்லை. இருந்தாலும் இனிமேலும் அப்படி நடக்காமல் இருக்க கடவுள்தான் காக்க வேண்டும். இதட்கு தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் எல்லோருமே பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் ஒன்று , ஆயுதம் தூக்கினவன் ஆயுததாலேயே மடிவான். எப்போதாவது ஒரு நாள் அது நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

அப்படியென்றால் ...

யேசுக் கிறீத்து ஆயுதம் ஏந்தித்தான் இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார் என்கிறீரா... 😂😂

விதண்டாவாதத்திற்கு அளவு வேண்டாமா..

🤥

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

அப்படியென்றால் ...

யேசுக் கிறீத்து ஆயுதம் ஏந்தித்தான் இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார் என்கிறீரா... 😂😂

விதண்டாவாதத்திற்கு அளவு வேண்டாமா..

🤥

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக  மற்றைவர்களையும் அவர்களுடன் எடை போட்டு சிந்திப்பது முற்றிலும் தவறு.

ஓம் அண்ணா நீங்கள் சொல்வது சரி. எல்லாருக்கும் பொருந்தும்...எல்லாரும் பிழை விடுவது தான். தாங்கள் பிழையே விடாத உத்தமர்கள் மாதிரி மற்றவர்களை சீண்டி கொண்டு இருப்பது எந்த விதத்தில் சரி ...எல்லோரும் அந்தந்த நேரத்தில் தங்களுக்கு சரி எனப்  படுவதை செய்வார்கள்...சாவுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த நாங்கள் அடுத்தவனை பார்த்து , நீ போராடாமல் இடையில் ஓடி வந்து விட்டாய்  😠துரோகி என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று சொல்லுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

பிழைகள் அனைத்தையும் சமப்படுத்தமுடியாது

சமப்படுத்தக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

பிழைகள் அனைத்தையும் சமப்படுத்தமுடியாது

சமப்படுத்தக்கூடாது

நீங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும் அண்ணா ...யாரை கொல்ல  வேண்டும் , யாரை துரோகியாக்க  வேண்டும் என்று தீர்மானிப்பது புலத்தில் இருக்கும் உங்களை போல ஆட்கள் அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும் அண்ணா ...யாரை கொல்ல  வேண்டும் , யாரை துரோகியாக்க  வேண்டும் என்று தீர்மானிப்பது புலத்தில் இருக்கும் உங்களை போல ஆட்கள் அல்லவா 

இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆயுதம் தூக்கினவன் ஆயுததாலேயே மடிவான்

அமெரிக்கா, ரஸ்யா,இஸ்ரேல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் நாடுகளை. ஆயுதத்தை  வாய் பேசுவதை விட அவர்களில் ஆயுதங்கள் பேசிய இடம் தான் அதிகம். ஆயுதங்களால் அழியவில்லையே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ரதி said:

ஓம் அண்ணா நீங்கள் சொல்வது சரி. எல்லாருக்கும் பொருந்தும்...எல்லாரும் பிழை விடுவது தான். தாங்கள் பிழையே விடாத உத்தமர்கள் மாதிரி மற்றவர்களை சீண்டி கொண்டு இருப்பது எந்த விதத்தில் சரி ...எல்லோரும் அந்தந்த நேரத்தில் தங்களுக்கு சரி எனப்  படுவதை செய்வார்கள்...சாவுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த நாங்கள் அடுத்தவனை பார்த்து , நீ போராடாமல் இடையில் ஓடி வந்து விட்டாய்  😠துரோகி என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று சொல்லுங்கள் 

எல்லோரும் பிழைவிடுவதுதான்.....
பிழையை உணர்ந்து திருந்துவது மனிதத்திற்கு அழகு.

கருத்துக்கள்/அபிப்பிராயங்கள்  சரி பிழை சொல்வது தனி மனித உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஓம் அண்ணா நீங்கள் சொல்வது சரி. எல்லாருக்கும் பொருந்தும்...எல்லாரும் பிழை விடுவது தான். தாங்கள் பிழையே விடாத உத்தமர்கள் மாதிரி மற்றவர்களை சீண்டி கொண்டு இருப்பது எந்த விதத்தில் சரி ...எல்லோரும் அந்தந்த நேரத்தில் தங்களுக்கு சரி எனப்  படுவதை செய்வார்கள்...சாவுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த நாங்கள் அடுத்தவனை பார்த்து , நீ போராடாமல் இடையில் ஓடி வந்து விட்டாய்  😠துரோகி என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று சொல்லுங்கள் 

ரதி அக்காச்சி,

நீங்கள் 4 வகை மனிதர்களை இதில் இட்டு குழப்புகிறீர்கள்.

1. 83 ஓபன் வீசாவில் லண்டனுக்கு, பேர்லின் சுவர் விழமுன்னம் ஐரோப்பாவுக்கு, இன்னும் பல நாடுகளுக்கு ஓடி வந்த “ முதலாவது துவக்கு சூட்டுக்கு நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள்”, பின்னர் சியாமாசெட்டி காலத்தில், புக்காரா காலத்தில், மல்டிபரல் காலத்தில், சூப்பர்சோனிக் காலத்தில் என்று ஏதோ ஒரு காலத்தில், உயிரை காக்க அல்லது படிக்க, அல்லது முடிக்க என ஓடி வந்தவர்கள்.

இவர்களோடு இதே காலப்பகுதியில் வட கிழக்கை விட்டு நீங்கி ஏனைய இலங்கையின் பகுதிகளில் வாழ்ந்தோரையும் சேர்க்கலாம்.

நம்மில் 2009 க்கு முன் வட கிழக்கை நீங்கிய அனைவரும் (நாம் எல்லாரும்) இந்த வகை.

2. போராட்டத்தில் பங்கெடுக்காமல் 2009 வரை வட கிழக்கில் வாழ்ந்தவர்கள்.

3. போராட்டத்தில் ஏதோ ஒரு காலத்தில் நேரடி பங்கெடுத்து (நிதியளிப்பதல்ல) பின் ஏதோ ஒரு காரணத்தால் விலகி, அப்படியே மெளனமானவர்கள். 

4. போராட்டத்தில் ஏதோ ஒரு காலத்தில் நேரடி பங்கெடுத்து (நிதியளிப்பதல்ல) பின் ஏதோ ஒரு காரணத்தால் விலகி, விலகியபின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முகமான ( என்ன காரணத்திகாகவேனும்) செயல்களில் ஈடுபட்டவர்கள்.

இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு அவரவர் மட்டத்தில் நியாயப்படுத்தல் இருக்கும், அதை விட்டு விடுவோம்.

ஆனால் இந்த 4 வகையினரில் தமிழர் நலனுக்கு பெரும் பின்னடைவு யாரால் வந்தது என்றால்- 4ம் வகையினரை ஏனையவருடன் ஒப்பிடவே முடியாது.

ஆகவேதான் இந்த 4 வேறு பட்ட கறிகளையும் ஒரே நேரத்தில், ஒரு சட்டியில் வறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி சொல்லும் படங்கள்..

Bild

Bild

21 hours ago, Kapithan said:

அப்படியென்றால் ...

யேசுக் கிறீத்து ஆயுதம் ஏந்தித்தான் இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார் என்கிறீரா... 😂😂

விதண்டாவாதத்திற்கு அளவு வேண்டாமா..

🤥

கப்பி, இயேசுகிறிஸ்து எப்போது இதுக்குள் வந்தார். இதெல்லாம் இயலாமையின் வெளிப்பாடான கருத்துக்கள். உங்கள் உள் மனதுக்கு இது தெரியும், ஆனால் விதண்டாவாதத்துக்கு எழுதுகிறீர்கள். உங்கள் சந்தோசமே எங்கள் சந்தோசம். உங்கள் பிரச்சினைகள்தீர வாழ்த்துக்கள்.😜

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ரதி அக்காச்சி,

நீங்கள் 4 வகை மனிதர்களை இதில் இட்டு குழப்புகிறீர்கள்.

1. 83 ஓபன் வீசாவில் லண்டனுக்கு, பேர்லின் சுவர் விழமுன்னம் ஐரோப்பாவுக்கு, இன்னும் பல நாடுகளுக்கு ஓடி வந்த “ முதலாவது துவக்கு சூட்டுக்கு நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள்”, பின்னர் சியாமாசெட்டி காலத்தில், புக்காரா காலத்தில், மல்டிபரல் காலத்தில், சூப்பர்சோனிக் காலத்தில் என்று ஏதோ ஒரு காலத்தில், உயிரை காக்க அல்லது படிக்க, அல்லது முடிக்க என ஓடி வந்தவர்கள்.

கோசன் இது தாரேன்று தெரிகிறது வாப்பா. :) 

ஐசே கோசன் நாங்கள் 1960 ‍, 1970 களில் படிக்க சுட்டி வந்தம் வா. எங்களை உட்டுடிங்கள்.. எந்த கொட‌கரீல சேர்ப்பிர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎11‎-‎2020 at 20:38, MEERA said:

இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...

நான் எழுதியதில் எதுவித பிழையும் இல்லை ...நான் மேலே குசா அண்ணருக்கு  எழுதிய கருத்தை  வடிவாய் வாசிக்கவும் ... போராட்டத்திற்கு நிதி பங்களிப்பு செய்து போட்டு அதுக்காய் அங்குள்ளவர்கள் கடைசி வரைக்கும் உயிரை கொடுத்து போராடணும் என்பது என்னை பொறுத்த வரை எந்த விதத்திலும் நியாயமில்லாத செயல் 
 
On ‎28‎-‎11‎-‎2020 at 22:14, goshan_che said:

ரதி அக்காச்சி,

நீங்கள் 4 வகை மனிதர்களை இதில் இட்டு குழப்புகிறீர்கள்.

1. 83 ஓபன் வீசாவில் லண்டனுக்கு, பேர்லின் சுவர் விழமுன்னம் ஐரோப்பாவுக்கு, இன்னும் பல நாடுகளுக்கு ஓடி வந்த “ முதலாவது துவக்கு சூட்டுக்கு நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள்”, பின்னர் சியாமாசெட்டி காலத்தில், புக்காரா காலத்தில், மல்டிபரல் காலத்தில், சூப்பர்சோனிக் காலத்தில் என்று ஏதோ ஒரு காலத்தில், உயிரை காக்க அல்லது படிக்க, அல்லது முடிக்க என ஓடி வந்தவர்கள்.

இவர்களோடு இதே காலப்பகுதியில் வட கிழக்கை விட்டு நீங்கி ஏனைய இலங்கையின் பகுதிகளில் வாழ்ந்தோரையும் சேர்க்கலாம்.

நம்மில் 2009 க்கு முன் வட கிழக்கை நீங்கிய அனைவரும் (நாம் எல்லாரும்) இந்த வகை.

2. போராட்டத்தில் பங்கெடுக்காமல் 2009 வரை வட கிழக்கில் வாழ்ந்தவர்கள்.

3. போராட்டத்தில் ஏதோ ஒரு காலத்தில் நேரடி பங்கெடுத்து (நிதியளிப்பதல்ல) பின் ஏதோ ஒரு காரணத்தால் விலகி, அப்படியே மெளனமானவர்கள். 

4. போராட்டத்தில் ஏதோ ஒரு காலத்தில் நேரடி பங்கெடுத்து (நிதியளிப்பதல்ல) பின் ஏதோ ஒரு காரணத்தால் விலகி, விலகியபின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முகமான ( என்ன காரணத்திகாகவேனும்) செயல்களில் ஈடுபட்டவர்கள்.

இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு அவரவர் மட்டத்தில் நியாயப்படுத்தல் இருக்கும், அதை விட்டு விடுவோம்.

ஆனால் இந்த 4 வகையினரில் தமிழர் நலனுக்கு பெரும் பின்னடைவு யாரால் வந்தது என்றால்- 4ம் வகையினரை ஏனையவருடன் ஒப்பிடவே முடியாது.

ஆகவேதான் இந்த 4 வேறு பட்ட கறிகளையும் ஒரே நேரத்தில், ஒரு சட்டியில் வறுக்க முடியாது.

கோசான்  நீங்கள் உந்த நாலாவது லிஸ்ட்டில் கருணாவை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிகிறது ...அவர் எதற்கு மகிந்தாவோடு சேர்ந்தார் என்பதற்கு நிறைய காரணங்கள் கொடுத்தாயிட்டுது ..லண்டனுக்கு வந்தவரை இங்கேயே இருக்க விட்டு இருந்தால் எங்கேயோ ஒரு மூலையில் தன்ட பாட்டில் இருந்திருப்பார் ...பிழை முழுக்க புலிகளது புலனாய்வு துறை மீது தான் ...கருணாவின் பிரிவு என்பது சடுதியில் நடந்தது ...அவர் மீது குற்றங்கள் இருந்தால் அவரை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி இருக்க கூடாது ...சுபாவை நம்பி அவரை விசாரனைக்கு கூப்பிட்டு இருக்க கூடாது...அத்தனை வருடங்கள் ஒன்றாய் இருந்த அவருக்கு தன்னை  போடப் போறார்கள் என்பது தெரியாமலா இருக்கும்?
ஒன்று அவர் பிரிவதற்கு முன் போட்டு இருக்க வேண்டும் அல்லது தப்பி லண்டனுக்கு வந்த பின் வாழ விட்டு இருக்க வேண்டும் ....ஒரு சின்ன பிரச்சனையை வடிவாய் கையாளத் தெரியாமற் தான் புலனாய்வு துறையும் ,தலைமையும் இருந்தார்கள் ...அவர்களால் தான் இது பெரிய பிரச்சனையாய் மாறியது ...தலமை நிலமையை  ஒழுங்காய் கையாண்டு இருந்தால் நீங்கள் சொன்ன மூன்றாவது லிஸ்ட்க்குள் தான் அவர் இருந்திருப்பார்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது எதுவும் அழகாய்த் தான் இருக்கும் ....உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் அசிங்கங்களும் தெரியும் ...எல்லா உண்மைகள் ஒரு நாள் வெளி வரும் ...பொறுத்திருந்து பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

நான் எழுதியதில் எதுவித பிழையும் இல்லை ...நான் மேலே குசா அண்ணருக்கு  எழுதிய கருத்தை  வடிவாய் வாசிக்கவும் ... போராட்டத்திற்கு நிதி பங்களிப்பு செய்து போட்டு அதுக்காய் அங்குள்ளவர்கள் கடைசி வரைக்கும் உயிரை கொடுத்து போராடணும் என்பது என்னை பொறுத்த வரை எந்த விதத்திலும் நியாயமில்லாத செயல் 

 💯  பிழையான கருத்து, விசுகு அண்ணரை மேற்கோள்காட்டி எழுதியமை.

ஏற்கனவே எழுதியது தான் கும்மானுக்கு பிரித்தானியாவில் நிரந்த வதிவிடம் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

 💯  பிழையான கருத்து, விசுகு அண்ணரை மேற்கோள்காட்டி எழுதியமை.

ஏற்கனவே எழுதியது தான் கும்மானுக்கு பிரித்தானியாவில் நிரந்த வதிவிடம் கிடைக்காது.

அவர் எனக்கு எழுதிய கருத்திற்கு நான் அவருக்கு பதில் கொடுத்திருக்கிறேன்.
விசா கொடுப்பதா ,இல்லையா என்பதை பிரித்தானிய அரசு தீர்மானிக்கட்டும் ...அவர் என்ன கருணா என்ட பேரிலா வந்தவர்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அவர் எனக்கு எழுதிய கருத்திற்கு நான் அவருக்கு பதில் கொடுத்திருக்கிறேன்.
விசா கொடுப்பதா ,இல்லையா என்பதை பிரித்தானிய அரசு தீர்மானிக்கட்டும் ...அவர் என்ன கருணா என்ட பேரிலா வந்தவர்?

அதுதான், நீங்கள் கொடுத்த பதில் தவறானது...

இராஜதந்திர கடவுச்சீட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை..😀

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

அதுதான், நீங்கள் கொடுத்த பதில் தவறானது...

இராஜதந்திர கடவுச்சீட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை..😀

என்னை பொறுத்த வரை நான் விசுகு அண்ணாவுக்கு கொடுத்த பதில் சரியானது ...மற்றவரை திருப்திப்படுத்த எடுத்த வேண்டிய தேவை எனக்கில்லை.

அவருக்கு இங்கே விசா கிடைக்குதோ ,இல்லையோ என்பதல்ல விசயம் ...ஒன்றும் வேணாம் என்று தான் விட்டுட்டு வந்தவர் ...அவரை அப்படியே விட்டு இருக்கலாம் என்பது தான் பொயிண்ட் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

என்னை பொறுத்த வரை நான் விசுகு அண்ணாவுக்கு கொடுத்த பதில் சரியானது ...மற்றவரை திருப்திப்படுத்த எடுத்த வேண்டிய தேவை எனக்கில்லை.

நிச்சயம் தவறு

2 minutes ago, ரதி said:

அவருக்கு இங்கே விசா கிடைக்குதோ ,இல்லையோ என்பதல்ல விசயம் ...ஒன்றும் வேணாம் என்று தான் விட்டுட்டு வந்தவர் ...அவரை அப்படியே விட்டு இருக்கலாம் என்பது தான் பொயிண்ட் 

போட்டுக் கொடுத்ததே கூட்டாளிகள் தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.