Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.

இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார்.  

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில்,  அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும், அதற்கு விருப்பம் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அம்மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும் அமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு அமைவாகவும், தனக்கு தமிழில் சாட்சியமலிக்க வசதிகளைச் செய்துதருமாரு கோரினார்.

இறுதியில் அதற்கான ஏற்பாடுகளை சில மணி நேரங்கள் சாட்சிப் பதிவை ஒத்தி வைத்து ஜனாதிபதி ஆணைக் குழு ஏற்படுத்திக் கொடுத்தது.

 எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர்  மொழி பெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியம் அளித்தமை ஆணைக் குழுவின்  கவனத்தை ஈர்த்தது.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந் நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சாட்சியம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,  ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் ஆஜராகினர்.

இதன்போது ஆணைக் குழுவின் தலைமை நீதிபதி ஜனக் டீ சில்வா பின்வருமாறு அறிவித்தார்.

'  இதற்கு முன்னர், ரிஷாத் ப்தியுதீனின் சாட்சியத்தை ஸ்கைப் ஊடாக பதிவு செய்ய ஆணைக் குழு மறுத்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது அப்படி இல்லை.  ரிஷாத் பதியுதீனுடன் தொடர்புபட்ட ஒருவர், ஆணைக் குழுவில் பதிவு செய்யப்படும் சாட்சியங்களை, வெளியே ஊடகங்களுக்கு செவிமடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து பதிவு செய்தமையை மையப்படுத்தி,  ஆணைக் குழுவின் சாட்சிப் பதிவுகளின் போது  அதனை ஸ்கைப் ஊடாக தொடர்புபட்டு அவதானிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையையே நிராகரிக்கப்பட்டது.

  சாட்சியாளர்  ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டின் இரு பக்கத்திலும் உள்ள கூண்டுகளில் இருந்து இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்  அந்த சிறைக் கூண்டை சுத்தம் செய்யும் நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிறைச்சாலை அத்தியட்சர் எமக்கு அறிவித்துள்ளார்.

 எமது சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும்.  எனவே ரிஷாத் பதியுதீன் சாட்சியம் கண்டிப்பாக பெறப்பட வேண்டியது. எனவே  ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம் ' என அறிவித்தார்.

 இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பின்வருமாறு கோரிக்கை முன்வைத்தார்.

' சாட்சியாளர் ரிஷாத் பதியுதீனுக்கு தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்க ஒரு மொழி பெயர்ப்பாளர் அவசியம். அவர் இதனை ஆணைக் குழுவில் முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளார். சாட்சியம் அளிப்பதற்கான அறிவித்தல்  இன்று காலை ( நேற்று) 9.00 மணிக்கே அவரது கைகளுக்கு கிடைத்ததாக அவர் கூறினார். எனவே அவருக்கு  தமிழ் மொழியில் சாட்சியமளிக்க  வசதிகளைச் செய்து தருமாரு கோருகின்றேன். ' என்றார்.

 இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் நீதிபதி ஜனக் டி சில்வா,

 எமது ஆணைக் குழுவின் மொழி பெயர்ப்பாளர் சுகயீன விடுமுறையில் உள்ளார். ஜனாதிபதி செயலகத்திலிருந்து அவ்வப்போது நாம் அழைக்கும் மொழி பெயர்ப்பாளரும் விடுமுறையில் உள்ளார்.

எனவே மொழி பெயர்ப்பாளர் ஒருவரை உடனடியாக  ஏற்பாடுச் செய்வதில் சிக்கல் உள்ளது.  சாட்சியாளர், சிங்களம், ஆங்கிலத்தில் சாட்சியமளிக்கலாம். ஏதேனும் விளங்காத சொற்கள் தொடர்பில் மீள அவர் வினவினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஆணைக் குழு தயார்.' என அறிவித்தார்.

இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரனி ருஷ்தி ஹபீப், ' சிங்கள மொழியில் சாட்சியம் அளிப்பது தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. எனினும் சாட்சியாளர்  தமிழ் மொழியில் சாட்சியமளிப்பதையே விரும்புகின்றார். என தெரிவித்தார்.

இதனையடுத்து,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற  தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்கும் போதும்,  ஜனாதிபதி ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளிக்கும் போதும்   சிங்கள மொழியில் அவற்றை வழங்கியதை சுட்டிக்காட்டிய ஆணைக் குழு,  தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரலமாக அவர் சிங்களத்தில் கதைப்பதை அவதானித்ததாக சுட்டிக்காட்டி சிங்கள மொழியில் சாட்சியமளிக்குமாறும் அவசியம் ஏற்பட்டால் விளங்காத சொற்கள் தொடர்பில்  ஆங்கிலம் அல்லது தமிழில் சட்டத்தரணி ஊடாக உதவவும் என சுட்டிக்காட்டி, அதனை ரிஷாத் பதியுதீனுக்கு அவரது சட்டத்தரனி ஊடாக அறிவித்தது.

இந் நிலையில், மெகஸின் சிறைச்சாலையின் பிரதான  அலுவலக அறையில், சிறை அதிகாரிகளான எம்.யூ.எச். விஜேதிலக,  பி.பீ.விக்ரமதிலக ஆகிய சிறை அதிகாரிகள் அருகே இருக்க ஸ்கைப் ஊடாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார்.

முதலில் ஸ்கைப் ஊடாக சாட்சியம் பெறுதல், அந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் உறுதி செய்ய 2015 ஆம் ஆண்டின்  4 ஆம் இலக்க குற்றச் செயல் ஒன்றினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் 31(1)(2) ஆம் அத்தியாயங்களின் கீழ் விடயங்கள் உறுதி செய்யப்பட்டன.

 அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்சீவ  திஸாநாயக்கவின்  ஆரம்ப கேள்விகளுக்கு சிங்கள மொழியில் ரிஷாத் பதியுதீன் பதிலளித்ததுடன், அதனையடுத்து ஸ்கைப்பில்  ரிஷாத்திடம் சாட்சியங்களை தொடர ஆணைக் குழு தீர்மனித்தது. அந்த சாட்சியம் நம்பகரமானது என்ற முடிவுக்கு வந்த நிலையிலேயே சாட்சியங்களைப் பதிவு செய்ய தீர்மானித்தது.

 இதன்போது ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் தமிழில்  கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

'பாராளுமன்ற தெரிவுக் கூழுவில் சாட்சியமளிக்கும் போது எனக்கு அருகே சிங்களம் - தமிழ் தெரிந்த சட்டத்தரனி ஒருவரை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இங்கு அப்படியில்லை.  நான் சிங்களத்தில் கூறும் சில விடயங்கள் தெளிவில்லாமல் திரிவுபடலாம்.

 எனது தாய் மொழி தமிழ்.  அம்மொழியிலேயே கல்வி கற்றேன். தமிழ் மொழி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.  எனக்கு தமிழில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள்.

  எவ்வாறாயினும் அதனை மறுத்து சிங்களத்தில் சாட்சியமளிக்க  ஆணைக் குழு வற்புறுத்துமானால் அதன்படி செய்கின்றேன்.' என கூறினார்.

 இதனையடுத்து ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் முற்பகல், 11.45 மணியளவிலிருந்து பிற்பகல் 1.40 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மதிய போசன இடைவேளையின் பின்னர் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டு, அவரின் உதவியுடன் சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. 
 
https://www.virakesari.lk/article/94784

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

சிங்களவன் அடிக்கும்போதுதான் உன் தாய்மொழி தமிழென்பது புரிகிறதா உனக்கு? உனது பதவிக்காகவும், சலுகைக்காகவும் நீ பேசும் மொழிபேசிய இன்னொரு மக்கள் கூட்டத்தை எதிரியோடு சேர்ந்து கொன்றுகுவித்தாயே, அதற்குப்பிறகு அந்த மொழி பேச உனது நாக்கு இருந்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன? 

தமிழ் இனத்தில் பிறந்த சகோதரிகளை சிங்கள மிருகங்களோடூ சேர்ந்து நீயும் புணர்ந்தபின் உனது ஆண்குறியின் சதைத்துண்டை நீ வெட்டியெறிந்தால் என்ன, ஆண்குறியினையே வெட்டியெறிந்தால் என்ன, எல்லமே ஒன்றுதான். 

சென்றுவா, உனது துரோகங்கள் நாம் அறியாதவை அல்லவே !

ஆகா என்ன தாய்மொழி பற்று. இப்போது இவர் நல்லாக மாட்டுப்பட்டுவிடடார். தப்ப வழியே இல்லை. குண்டுதாரிகளின் திருமணத்தில் சாட்சியாக கையொப்பமிட்டிருக்கிறார். தொலைபேசியில் அடிக்கடி கதைத்திருக்கிறார். இவரது வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் வீடுகளுக்கு சென்று வந்திருக்கிறார். இராணுவத் தளபதியுடன் கதைத்து இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறார். இப்படியாக இந்த பயங்கரவாத சம்பவத்துடன் இவர் நிறையவே சம்பந்தப்பட்டிருக்கிறார்.

இப்போது தமிழர்களுக்கு எதிராக செய்த அநியாயங்களை மறைத்து , தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக தமிழ் தாய் மொழியை கையில் எடுத்திருக்கிறார்.

இந்த பயங்கரவாத தாக்குதல் மட்டுமல்ல, காடழிப்பு, அரச சொத்தை துஸ்பிரயோகம் செய்தது, அளவுக்கு அதிகமாக சேர்த்து என்று நிறையவே குற்றங்கள் செய்திருக்கிறார். காடழிப்புக்கு Rs 500 மில்லியன் கட்டும்படி வன இலாகா கேட்டிருக்கிறது. இது ஒன்றும் அவருக்கு பெரிய காரியம் இல்லை. அளவுக்கு அதிகமாக துள்ளினால் இதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில்...  மற்றைய கருத்தாளர்கள், ஏன் வரவில்லை....⁉️
அவர்களின், ரோச நரம்பை... வெட்டியதின் விளைவு இது.  ⁉️ 

இப்ப.. சந்தோசமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை

இந்தக் கவிதையை எழுதியவர் தன் நாவை அறுத்து எறிந்து விட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம்... கொழும்பான், போட்ட  பதிவிற்கு...
யாழ். களத்திலிருந்து  பலர், காரசாரமான... எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
இன்று.... ரஞ்சித்தை தவிர, எல்லோரும்...
அமைதியாக... இருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள்- ஜனாதிபதி ஆணைக்குழு ரிசாத்திடம் கேள்வி?அவரின் பதில் என்ன?

November 22, 2020

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என முன்னாள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

easter-attack-pco-6.jpg

துருக்கியில் தடைசெய்யப்பட்ட எவ்ஈடிஓ என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா என்ற கேள்விக்குடி பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை தனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளில் தான் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள ரிசாத் பதியுதீனின் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தான் அதனை அறிந்திருக்கவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வீட்டிற்கு தான் விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

risad-300x195.jpg

உங்கள் தம்பி எப்போதாவது கைதுசெய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைதுசெய்யப்பட்டார்,சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் என்பதை ஊடகங்கள் மூலம அறிந்தேன் என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாவினை ஏன் அவர் தொடர்புகொண்டார் என கேட்டதற்கு அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்துசெய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் மறைமுகமாக இன்சாவ் சகோதரர்களிற்கு ஆதரவளித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ரிசாத் பதியுதீன் நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன்,இன்சாவ் சகோதரர்களிற்கு நான் உதவவேயில்லை என தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள் என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் நான் அகதியாகிவிட்டதால் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை,என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா என்ற கேள்விக்கு ரிசாத்பதியுதீன் நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/91767

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 05:04, தமிழ் சிறி said:

முன்பெல்லாம்... கொழும்பான், போட்ட  பதிவிற்கு...
யாழ். களத்திலிருந்து  பலர், காரசாரமான... எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
இன்று.... ரஞ்சித்தை தவிர, எல்லோரும்...
அமைதியாக... இருக்கிறார்கள். 

சிறீ, இனியும் அவரது முஸ்லிம்கள் சார்ந்த பதிவுகளுக்கு கருத்தெழுதி எங்களை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்??

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 07:24, தமிழ் சிறி said:

இந்தத் தலைப்பில்...  மற்றைய கருத்தாளர்கள், ஏன் வரவில்லை....⁉️
அவர்களின், ரோச நரம்பை... வெட்டியதின் விளைவு இது.  ⁉️ 

இப்ப.. சந்தோசமா?

மன்னார் பக்கம் அவ்வளவு செஞ்சிருக்கான் மனுசன் அங்கிருந்து ஒரு கண்டனகுரலும் வரல காடளிப்பு , குடியேற்றம் ஆனால் ஒரு வீதி வளைவு மட்டும் வைக்க பொங்கு எழுவானுகள் நம்ம டிசைன் அப்படி .

றிசாட் பொறி வைத்து பிடிக்கப்பட்ட எலி நழுவுவதென்பது மத்திய கிழக்கு மன்னர்கள் யாராவது பொறியின் ஸ்பிறிங்கை கொஞ்சம்  தூக்க வேண்டும் அது நடந்தால் வழக்கு பொய்யாகும் கொழும்பான் குறிப்பிட்டது மீண்டும் மெய்யாகும் ஏனென்றால் இவங்கள் டொப்பி பிரட்டிகள் என்பது உலகறிந்த உண்மை அதனால் சீரியசா எடுக்காதீங்க

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 06:48, colomban said:

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை

தோழா,

முன் தோலில் ஏற்பட்ட அழற்சிக்காகா, குறி முழுவதையும் நீ வெட்டி கொண்டதன் மடமை இப்போதாவது உறைக்கிறதா?

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னார் பக்கம் அவ்வளவு செஞ்சிருக்கான் மனுசன் அங்கிருந்து ஒரு கண்டனகுரலும் வரல காடளிப்பு , குடியேற்றம் ஆனால் ஒரு வீதி வளைவு மட்டும் வைக்க பொங்கு எழுவானுகள் நம்ம டிசைன் அப்படி .

றிசாட் பொறி வைத்து பிடிக்கப்பட்ட எலி நழுவுவதென்பது மத்திய கிழக்கு மன்னர்கள் யாராவது பொறியின் ஸ்பிறிங்கை கொஞ்சம்  தூக்க வேண்டும் அது நடந்தால் வழக்கு பொய்யாகும் கொழும்பான் குறிப்பிட்டது மீண்டும் மெய்யாகும் ஏனென்றால் இவங்கள் டொப்பி பிரட்டிகள் என்பது உலகறிந்த உண்மை அதனால் சீரியசா எடுக்காதீங்க

மன்னர் பக்கம் அப்படி ஒன்றும் செய்யவில்லை. மன்னர் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படி காடழித்து, ரோட்டு போட்டு, மின்சாரம், நீர் வழங்கி குடியேற்ற முடிந்ததென்றால் கடந்த கால அரசு அவர்களில் தங்கி இருக்க வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் ஆட்சி செய்ய முடியாத நிலை. ராஜபக்சேக்கள் தொடக்கம், ரணில் வரை அவர்களை குஷி படுத்த வேண்டி இருந்தது.

மன்னர் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவரது ஒத்துழைப்பு தேவைப்பட்ட்து தங்களது சடட விரோத வியாபாரங்களை நடத்துவதட்கு. அங்குள்ள மதத்தலைமையும் ஒரு சில சுயநலலங்களுக்காக மக்கள் நலனை விட்டுக்கொடுத்து.

எனவே அவர் அங்கு ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது என்னவோ உண்மைதான். இப்போது குடும்பமே கூண்டோடு கைலாயம் போக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. முழு குடும்பமும் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி இருக்கிறது. பிழையான வழிகளில் பணம் சம்பாதித்திருக்கிறார். பிழையான வழிகளில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கிறார்.

இதை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை கர்தினால் மல்லாகம் ரஞ்சித் அவர்களும், சிங்கள அமைப்புக்களும் விடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 17:15, Robinson cruso said:

இப்போது தமிழர்களுக்கு எதிராக செய்த அநியாயங்களை மறைத்து , தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக தமிழ் தாய் மொழியை கையில் எடுத்திருக்கிறார்.

தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக” ?? ..... தமிழர்களின் அனுதாபத்தை பெற்று என்ன பயன்? ரிசாட் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏனைய யாழ். வாசிகளை போலவே சிங்கள அறிவு மட்டம். இந்த வழக்கில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதிப்பு கூட. வழக்கு நியாயமாக வெல்லக்கூடியதாக இருந்தால் பிறகு ராஜபக்ச குடும்பத்திடம் சரணடைந்து தப்பும் சாத்தியம் அதிகம். ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

9 hours ago, goshan_che said:

தோழா,

முன் தோலில் ஏற்பட்ட அழற்சிக்காகா, குறி முழுவதையும் நீ வெட்டி கொண்டதன் மடமை இப்போதாவது உறைக்கிறதா?

மடமையாக தெரியவில்லை. அகதியாக வெளியேற்றப்பட்டவர் இன்று கோடீஸ்வரர். அரசியல் தொடர்புகளும் உள்ளவர் - தப்பிவிடுவார். மடமை என்றும் போல தமிழர்களின் தனியுரிமை. 😇

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனையும் அவன் இனத்தையும் அழிக்க சிங்களம் தேவைப்பட்டது. இப்போ தன்னைக்காப்பாற்ற தமிழ் தேவைப்படுகிறது  இவருக்கு. காலங்கடந்த ஞானம்.

11 minutes ago, Robinson cruso said:

மன்னர் பக்கம் அப்படி ஒன்றும் செய்யவில்லை. மன்னர் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னார் பக்கம் அவ்வளவு செஞ்சிருக்கான் மனுசன் அங்கிருந்து ஒரு கண்டனகுரலும் வரல காடளிப்பு

3 minutes ago, கற்பகதரு said:

ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

மொழிபெயர்ப்பாளர் விடும் தவறுகளை சிங்களத்தில் இவரே திருத்தி சொல்கிறாராம். முன்பு நடந்த குண்டுவடிப்பு விசாரணை  விளக்கத்தில் சிங்களத்தில் பதில் அளித்துள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

தமிழனையும் அவன் இனத்தையும் அழிக்க சிங்களம் தேவைப்பட்டது. இப்போ தன்னைக்காப்பாற்ற தமிழ் தேவைப்படுகிறது  இவருக்கு. காலங்கடந்த ஞானம்.

மொழிபெயர்ப்பாளர் விடும் தவறுகளை சிங்களத்தில் இவரே திருத்தி சொல்கிறாராம். முன்பு நடந்த குண்டுவடிப்பு விசாரணை  விளக்கத்தில் சிங்களத்தில் பதில் அளித்துள்ளாராம்.

சில கருத்துகளை சொல்ல மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டாலும் தனக்கு தவறான மொழிபெயர்ப்பு என்று தெரிவதை திருத்துகிறார். 

8 minutes ago, கற்பகதரு said:

தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக” ?? ..... தமிழர்களின் அனுதாபத்தை பெற்று என்ன பயன்? ரிசாட் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏனைய யாழ். வாசிகளை போலவே சிங்கள அறிவு மட்டம். இந்த வழக்கில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதிப்பு கூட. வழக்கு நியாயமாக வெல்லக்கூடியதாக இருந்தால் பிறகு ராஜபக்ச குடும்பத்திடம் சரணடைந்து தப்பும் சாத்தியம் அதிகம். ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

இவர் யாழ்ப்பாணத்தில் பிறக்கவில்லை. இவரைப்பற்றி முன்னர் ஒரு இடத்தில எழுதி இருந்தேன். இவர் மன்னர் தாராபுரத்தில் பிறந்தவர். அவரது வீடும் அங்குதான் இருக்கிறது. கொழும்பில் மனம் முடித்துள்ளார். இருந்தாலும் , ஆங்கிலமும் சிங்களமும் நன்றாக பேசுவார். இவரது குடும்பமே பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கிறது. எனவே இவர் தப்புவதட்கு சந்தர்ப்பம் குறைவு. சிங்கள அமைப்புக்களும், கர்தினால் ரஞ்சித்தும் ஒரு முடிவு காணும் வரையும் விட மாடடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டினால் அமைக்கப்பட்டுள்ள ஊர்களுக்கு அரபியிலும் ஆங்கிலத்திலும் பெயர்.!

SudarSeithy-1368.jpg

கட்டார் உதவியில் ஜஸிம் சிட்டி என்ற பெயரில் ரிஷாட்டினால் மேற்படி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஊர்களுக்கு அரபியிலும் ஆங்கிலத்திலும் பெயரிட்டு இருந்தார்.

அதில் தமிழோ சிங்களமோ இடம்பெறவில்லை. ஆனால் இன்று சிறையில் இருந்து தான் பேசுவதற்குத் தாய்மொழியான தமிழை அனுமதிக்கக் கோருகின்றார்.

இதன் காரணம் ஒன்றே ஒன்றுதான், இப்போது இப்பிரச்சனையை மடைமாற்றி தனக்குப் பிரச்சனைகள் வரும்போது "தமிழ்"  என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் எளிய காரணமாகவே இதனைக் காணலாம்.

ஒரு பக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை வளர்ப்பதிலும் மறுபக்கம் தேசிய வனங்களையும் இயற்கையையும் அழிப்பதிலும் குறியாக இருந்த ரிஷாட் பதியுதீன் மீது இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது பெரும் பாராட்டுக்குரியது.

அதேபோல் ரிஷாட்மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தொடர்புகளையும் நிருபித்து அரசு தண்டனை வழங்கும் வரை காத்திருப்போம்…

முகநூல் பதிவிலிருந்து…

https://sudarseithy.com/43277/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

மடமையாக தெரியவில்லை. அகதியாக வெளியேற்றப்பட்டவர் இன்று கோடீஸ்வரர். அரசியல் தொடர்புகளும் உள்ளவர் - தப்பிவிடுவார். மடமை என்றும் போல தமிழர்களின் தனியுரிமை. 😇

வணக்கம் ஜூட் அண்ணா,

ரிசாத் தப்பிவிடுவார். ஆனால் இங்கே நான் உருவகித்தது ரிசாட்டை அல்ல, அவரின் இனக்குழுவை.

ஒரு இயக்கம் விட்ட மிகபெரும் தவறுக்கு, ஒரு இனத்தையே பலிகடா ஆக்கி, இந்த இயக்கத்தின் அழிவின் பின்னும், அதை வைத்து அரசியல் செய்யும், பேரினவாதத்தின் கோர பசிக்கு தமிழர் starters என்றால் முஸ்லீம்கள்தான் main meal என்பதை இன்றுவரை உணர மறுக்கும் ஒரு இனத்திற்கும் அதன் தலைவர்களுக்குமான உருவகம் அது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Robinson cruso said:

மன்னர் பக்கம் அப்படி ஒன்றும் செய்யவில்லை. மன்னர் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படி காடழித்து, ரோட்டு போட்டு, மின்சாரம், நீர் வழங்கி குடியேற்ற முடிந்ததென்றால் கடந்த கால அரசு அவர்களில் தங்கி இருக்க வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் ஆட்சி செய்ய முடியாத நிலை. ராஜபக்சேக்கள் தொடக்கம், ரணில் வரை அவர்களை குஷி படுத்த வேண்டி இருந்தது.

மன்னர் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவரது ஒத்துழைப்பு தேவைப்பட்ட்து தங்களது சடட விரோத வியாபாரங்களை நடத்துவதட்கு. அங்குள்ள மதத்தலைமையும் ஒரு சில சுயநலலங்களுக்காக மக்கள் நலனை விட்டுக்கொடுத்து.

எனவே அவர் அங்கு ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது என்னவோ உண்மைதான். இப்போது குடும்பமே கூண்டோடு கைலாயம் போக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. முழு குடும்பமும் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி இருக்கிறது. பிழையான வழிகளில் பணம் சம்பாதித்திருக்கிறார். பிழையான வழிகளில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கிறார்.

இதை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை கர்தினால் மல்லாகம் ரஞ்சித் அவர்களும், சிங்கள அமைப்புக்களும் விடப்போவதில்லை.

நான் குறிப்பிட்ட முஸ்லீம் மக்களுக்கு மட்டுமே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 03:36, கற்பகதரு said:

தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக” ?? ..... தமிழர்களின் அனுதாபத்தை பெற்று என்ன பயன்? ரிசாட் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏனைய யாழ். வாசிகளை போலவே சிங்கள அறிவு மட்டம். இந்த வழக்கில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதிப்பு கூட. வழக்கு நியாயமாக வெல்லக்கூடியதாக இருந்தால் பிறகு ராஜபக்ச குடும்பத்திடம் சரணடைந்து தப்பும் சாத்தியம் அதிகம். ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

மடமையாக தெரியவில்லை. அகதியாக வெளியேற்றப்பட்டவர் இன்று கோடீஸ்வரர். அரசியல் தொடர்புகளும் உள்ளவர் - தப்பிவிடுவார். மடமை என்றும் போல தமிழர்களின் தனியுரிமை. 😇

மீண்டும் அவர்களுக்கு கொடிபிடிக்கும் உங்கள் வேலையை ஆரம்பித்துவிடீர்கள். தொடருங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

மீண்டும் அவர்களுக்கு கொடிபிடிக்கும் உங்கள் வேலையை ஆரம்பித்துவிடீர்கள். தொடருங்கள்!!

தமிழே ஒழுங்காக புரியாதவர் “எப்படியும்” தமிழனாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது தெரிகிறது. “அவர்களில்” ஒருவராக இருக்குமோ?😃

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 07:38, கிருபன் said:

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில்,  அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும், அதற்கு விருப்பம் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அம்மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும அமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு அமைவாகவும், தனக்கு தமிழில் சாட்சியமலிக்க வசதிகளைச் செய்துதருமாரு கோரினார்.

மிகவும் முட்டாள்தனமான வேண்டுகோள். தமிழை அரச கரும மொழியாக ஏற்றுகொள்வதென்பது தமிழில் வாக்குமூலம் வழங்குவதை அனுமதிப்பதுடன் நின்றுவிடாது.  சாட்சியாளர் சொன்ன அந்த வாக்குமூலத்தை  சொன்னது பிசகாமல் தமிழில் பதிவு செய்வதும் இதில் அடங்கும்.

சாட்சி தமிழில் வாக்குமூலம் வழங்க அதை பெறும் நபர்அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளர் அதைக்கேட்டு  மொழிபெயர்ப்பு செய்து சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ வக்குமூலத்தை பதிவுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதாகாது. தமிழில் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலத்தின் மூலப்பிரதியை அதை வழங்கியவர் அல்லது அவரின் சட்டதரணி வாசித்து சரிபார்த்தபின்னரே அவரின் கையொப்பம் பெறப்படுதல் வேண்டும்.

"எனது தாய் மொழி தமிழ்.  அம்மொழியிலேயே கல்வி கற்றேன். தமிழ் மொழி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.  எனக்கு தமிழில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள்."

இவர் சொல்லாமல் விட்டது: "முதலில் முஸ்லிம் அப்புறம் தேவைப்படும்போது மட்டும் நான் தமிழன்".

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

தமிழே ஒழுங்காக புரியாதவர் “எப்படியும்” தமிழனாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது தெரிகிறது. “அவர்களில்” ஒருவராக இருக்குமோ?😃

"எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர்  மொழி பெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியம் அளித்தமை ஆணைக் குழுவின்  கவனத்தை ஈர்த்தது"

மேலேயுள்ள பதிவு தமிழில்தான் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் சொன்னதையே திருத்தி சொல்லுமளவுக்கு சிங்களத்தில் பாண்டித்தியம் உள்ளவர் சிங்களத்திலேயே பதிலளித்திருக்கலாம். ஆனாலும் அவரது கோரிக்கை நியாயமானது அது அவரின் உரிமையும் கூட. அதில் பிழையில்லை.

உங்களுக்கான எனது பதிவு உங்கள் இரண்டாவது கருத்துக்கானது. அதற்கான போதிய விளக்கத்தை கோஷான் மேலே கொடுத்துவிட்டார். உறைத்திருக்கும் என்று நினைக்கிறேன் இல்லாவிட்டால் இனியாவது கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இல்லாவிட்டால் இனியாவது கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடவும்.

இவர் சொல்கிறார் என்று உப்பு போட்டு சாப்பிடாதீர்கள். பெருமளவளவு மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. உங்களுக்கே அது தெரியாமலும் இருக்கலாம். தமிழர் சனத்தொகையை குறைப்பதில் இந்த “உப்பு போட்டு சாப்பிடவும்“ என்று சொல்பவர்களும் பெரும்பங்களிப்பு செய்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.