Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு.?

Screenshot-2020-12-22-10-40-43-157-com-a

பொதுவாழ்வில் இருப்பவர்கள், எப்போதும் விமர்சனங்களை செவிமடுக்க வேண்டும். கீழிலிருந்து வரும் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் உள்ளீர்க்க வேண்டும். அவைகளிலிருந்து தமது கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி கொள்ளுதல் வேண்டும். மாபெரும் தலைவர்களும் பெரும் மாற்றங்களை உருவாக்கிய மனித ஆளுமைகளும் மக்களின் மனங்களிலிருந்தே சாதனைக்கும் மாற்றங்களுக்குமான தீரக்கதரிசனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே வாழ்வுக்கான கற்றலும் அடிப்படையுமாகும். இன்று நம் சூழலில் இச்சிந்தனை எப்படி இருக்கிறது?

இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் எதற்கான எழுச்சி? எதற்கான ஆதரவு என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். வடக்கு கிழக்கு தமிழர் தேசத்தில் மக்கள் வழங்கிய தேர்தல் முடிவுகள் ‘பெருத்த பாடமாக’ கொள்ள வேண்டும். ஆனால் இன்னமும் அப்படியான ‘படிப்பினைகளை’ தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளதாக தெரியவில்லை.

கடந்த காலத்தில் பல்வேறு ஆசிரியர் தலையங்களின் ஊடாக, தமிழர் அரசியலில் சீர்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து சுட்டிக் காட்டியுள்ளோம். பொறுப்பு மிக்க ஊடகம் என்ற வகையில் ஊடக அறத்தின்பாலும் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் உரிமைக்கான அறத்தின் வழியிலும் நின்று சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு சில தமிழ் பிரதிநிதிகள் வசைகளையும் அவதூறுகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.

நாம் மாத்திரமின்றி இலங்கையின் பல்வேறு தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் ஊடகங்களும் சுட்டிக்காட்டுகின்ற விடயங்களை செவிமடுக்காத நிலையில் தான்தோன்றித்தனமான தமிழ் அரசியல் மீண்டும் ஒரு அதளபாதாளத்தில் தமிழர்களை தள்ளிவிடுமோ என்ற அச்சம் மேலிடத் துவங்கியுள்ளது. இலங்கையில் ஆட்சி மாறிய பின்னரும், படிப்பனைகளுடன் கூடிய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் கூட சில அரசியல்வாதிகள் திருந்தவில்லை என்பது புலனாகிறது.

இலங்கை ஆட்சி மாற்றத்தின் பின்னர், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாத்தில் ஜெனீவாவில் இலங்கைப் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில், தமது அரசுமீதான, தம் படைகள் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடியை வழங்கவுள்ளதாக இலங்கை அரச தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதன் முதலில் ஐ.நா இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என குற்றம் சுமத்தியது.

அன்று முதல் பல ஆண்டுகளாக பல தடவைகள் ஐ.நாவில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை குறித்த மனித உரிமை ஆணையாளரின் விசேட உரையில், பாரிய படுகொலைகள் மற்றும் இனவன்புணர்வுக் கொலைகள் நடந்தமையை குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் போர் நடந்த சமயத்தில் இருந்து இன்றுவரை ஐ.நாவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை தொடர்ந்து மறுப்பை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ளுவதற்கான வழிமுறையை தேடுகின்ற முயற்சியை அரசு வெளிப்படுத்தியுள்ள நிலையில், திருவாளர் சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரையாக, திரு. க.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் கூட்டணியிடமும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் ஒரு ஆவணத்தை கையளித்துள்ளார்.

குறித்த ஆவணம் இலங்கை அரசுக்கு சார்பானது என்றும், தொடர்ந்தும் கால அவகாசத்தை வழங்கும் வகையில் இருப்பதாகவும் முன்னணியும் கூட்டணியும் குற்றம் சுமத்தி சுதந்திரனின் ஆவணத்தை நிராகரித்துள்ளனர். மிகவும் பலவீனமான ஆவணமாக காணப்படுவதாகவும் மீண்டும் காலக்கேடு அளிப்பதன் வாயிலாக ‘தமிழினம் இனி இல்லை’  என்ற நிலைக்கு தள்ளப்படும் என விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

கடந்த காலத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ‘ஐ.நா சர்வதேச மன்றத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து – தூக்குமேடையில் இருந்து உங்களை காப்பாற்றினோம்’ என ராஜபக்ச தரப்பினைரை நோக்கி, மைத்திரியும் ரணிலும் கூறி வந்தனர். கடந்த ஆட்சியில் நிபந்தனையற்ற ரீதியில் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவும் ஐ.நா மன்ற கால அவகாசமும் தமிழ் மக்கள் தரப்பால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் என்ற துரோகத்திற்கு சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ‘ஒருபோதும் மக்களின் உணர்வுக்கும் கருத்துக்கும் கோரிக்கைக்கும் செவிசாய்க்க மாட்டோம்’ என்கிற அதிகாரப் போக்கினால் ஏற்பட்டிருக்கும் இந்த துரோகத்தை, இராஜதந்திரம் என்று கூறி ‘தமிழ் மக்களை தொடர்ந்தும் இல்லாமல் செய்கின்ற’ முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபடக்கூடாது.

அத்தகைய துரோகங்கள் தொடர்ந்தால், வரும் காலத்தில் கூட்டமைப்பு இருந்தது என்பதற்கான எந்தவொரு அடையாளங்களும் இருக்காது. அதேநேரத்தில், தமிழ் மக்கள் எப்படியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்? யாருக்கு மக்கள் ஆணையையும் பலத்தையும் வழங்க வேண்டும் என்ற படிப்பினையும் உணர்த்தப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக விழிப்பு பெற்ற மக்களால்தான் தமது உரிமையையும் தமக்கான அமைதியையும் வெல்ல முடியுமென உணர்ந்து கொண்டால் இதுபோன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டிராது என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்

https://thamilkural.net/thesathinkural/editorial/105521/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தானாக செயற்படுகிறதா?! மேற்கின் விருப்புக்காக செயற்படுவதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கூட்டமைப்பு தானாக செயற்படுகிறதா?! மேற்கின் விருப்புக்காக செயற்படுவதாகவே தெரிகிறது.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

கூட்டமைப்பு தானாக செயற்படுகிறதா?! மேற்கின் விருப்புக்காக செயற்படுவதாகவே தெரிகிறது.

தானாக ஐ.நா.வில் கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு எதிராக என்ன செய்ய முடியும்? 2009ல் இலங்கை அரசு போரை முடித்ததற்கு தன்னை தானே பாராட்டும் தீர்மானத்தை ஐ.நா.வில் நிறைவேற்றிய போது மேற்குலக ஆதரவுடன் கூட கூட்டமைப்பால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதற்கெதிரான முயற்சிகளின் பக்கவிளைவாக கிடைக்கும் நன்மைகளே சாத்தியம். அதில் ஒன்றாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் இணைத்துக் கொண்டால் “நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாற்போல்” ஏதோ கிடைக்கும் சாத்தியம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

கஜேந்திரகுமார் எதோதான் ஐநா பாதுகாப்பு கவின்சில் உறுப்பினர் என்ற மாதிரி மக்களை ஏமாற்றுகிறார்.

இது அவரின் பாட்டாவின் வழி என நினைக்கிறேன். தந்தையுடன் எனக்கு நேரடி அனுபவமும் உண்டு.

இதற்கு சீ வியும் தாளம் போடுவதுதான் வேதனை.

ஐநாவில் என்ன செய்வது என்றாலும் ஒரு state party யின் அனுசரணை தேவை. Non state actors ஆள் பெரிதாக எதுவும் செய்ய முடியாது.

ஆகவே அமெரிக்காவின் நலத்துடன் எங்கள் நலனையும் இணைப்பதால் மட்டுமே எதையாவது முன்நகர்த்தலாம்.

மேற்குலகை மீறி திமிறியதால் நாம் அடைந்த பிரதிகூலங்களை கண்ட பின்பும், இப்படி நாண்டு கொண்டு நின்று சாவோம் என்பதற்கு பின்னால் ஒரே ஒரு காரணிதான் இருக்க முடியும்.

இருக்கும் ஒரு சீட்டையாவது தக்க வைக்கும் சுயநல அரசியல் (6 வோட் வித்தியாசத்தில் அடுத்த முறையும் 2ம் சீட் கிடைக்காது).

சுமந்திரனோ, கஜனோ, சீவியோ மேற்கிற்கு கட்டுபட்டு, அவர்கள் கொடுத்த சாவிக்கு நாட்டியம் ஆடித்தான் எதையாவது பெற வேண்டும்.

சுமந்திரன் தயாரித்த ஆவணம் சரியில்லை என விமர்சிப்பது சரி, அதற்கு பிரதியாக நீங்கள் ஒரு ஆவணத்தை தயாரித்து அதை எல்லாரும் சேர்ந்து அமெரிக்காவிடம் கொடுத்து, பெற வேண்டியதை பெற முயல வேண்டும்.

இதை விடுத்து, இப்படி வெளிபடையாக ஆளை ஆள் அமெரிக்காவின் கைப்பாவை என திட்டினால், அது எமக்குத்தான் ஆப்பாக முடியும்.

இந்தியாவும் வேண்டாம், அமெரிக்காவும் வேண்டாம், இலங்கையோடு அபிவிருத்தி அரசியலும் இல்லை, அப்போ இவர்கள் யாரோடு சேர்ந்து இந்த பெரும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க போகிறார்கள்? செவ்வாய் கிரக மனிதர்களுடனா?

அல்லது இதை செய்து முடிக்கும் திட்டமே இல்லை, ஆளுக்கு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை தக்க வைக்கும் நோக்கில் மட்டும் முன்னெடுக்கபடும் அரசியலா இது?

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ, சுமந்திரன் சம்பந்தரை இங்கே சிலர் நாள் 1 இல் இருந்தே திட்டியது போல திட்டாமல், கஜேந்திரகுமார், விக்கி என்னத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று பார்த்து விட்டு ஆரம்பிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உணர்சி அரசியல் என்பது சிங்களவர்களுக்கு மட்டும் இல்லை.எமது அரசியல் வாதிகளுக்கும் தான்.தாம் தேர்தலில் வெல்வதே அவர்களின் நோக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பொறுங்கோ, சுமந்திரன் சம்பந்தரை இங்கே சிலர் நாள் 1 இல் இருந்தே திட்டியது போல திட்டாமல், கஜேந்திரகுமார், விக்கி என்னத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று பார்த்து விட்டு ஆரம்பிக்கலாம்!

உங்கள் ஆசையையும் கெடுப்பானேன் 😀.

இதே போல் ஒரு அவகாசத்தை நம்மில் சிலர் சுமந்திரனுக்கு வழங்கினோம். ஆனால் ஆரம்பத்தில் அவர் செய்த சில விடயங்கள், சொன்னவை benefit of the doubt ஐ அவருக்கு கொடுக்க வைத்தது.

இவர்களோ தொடக்கமே பேய்காட்டல் போல படுகிறது. 

சரி பார்ப்போம்.

1 hour ago, சுவைப்பிரியன் said:

உணர்சி அரசியல் என்பது சிங்களவர்களுக்கு மட்டும் இல்லை.எமது அரசியல் வாதிகளுக்கும் தான்.தாம் தேர்தலில் வெல்வதே அவர்களின் நோக்கு.

இதைதான் நானும் ஊகிக்கிறேன். ஏஎனென்றால் பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து (சட்டம் பாயாது) உள்ளே காட்டிய வாண வேடிக்கைகள் எதையும் மாவீரர் வாரத்தில் வெளியே காணவில்லை. இருவரிடமும்.

அப்போ இலங்கை சட்டத்துக்கு கட்டுபட்டு, ஒரு civil disobedience ஐ காட்டி, மூன்று நாள் விளக்க மறியல் போக, கிரிமினல் ரெகோர்ட்டை எடுக்க தயங்கும் இவர்களா, intifada போல் தெருவில் எமது மக்களை இறக்கி அரசியல் செய்ய போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் வரவு செலவு திட்ட வாக்களிப்பை தவிர்த்தமைக்கு அரசை எப்போதும் எதிர்க்க தேவையில்லை என்ற நியாயமான விளக்கத்தை சீவி கொடுத்தார்.

சரி, அப்போ ஜெனிவாவில் கால அவகாசம் கொடுப்பதும் அப்படி ஒரு அணுகுமுறைதானே? 

ஒன்றை சமயோசிதம் என்றும் மற்றையதை துரோகம் என்றும் எப்படி எடுப்பது?

ஒன்றை சமயோசிதம், மற்றையதை சமயோசிதம் அற்றது என்றால் ஏற்கலாம்.

இது வேணும் என்றே ஆளையாள் பழி கூறும் பழைய அமிர்தலிங்கம் காலத்து “துரோகி” அரசியலின் இன்னொரு வடிவம் போலவே படுகிறது.

இந்த நீ துரோகி, நான் தியாகி அரசியலால் நாம் பட்டது போதாதா?

Edited by goshan_che

17 minutes ago, goshan_che said:

இதே போல் முதலமைச்சராக பதவியேற்ற போது மகிந்த முன்னால் பதவியேற்க வேண்டிய சட்ட கட்டாயம் இல்லாத நிலையிலும் தானாக விரும்பி மகிந்த முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்தார். அப்போது ந்ட்புறவை வளரப்பதன் மூலம் தமிழினத்திற்கு நன்மை செய்யவதற்கான முன்னேற்பாடு என்று நம்பினோம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

இதே போல் முதலமைச்சராக பதவியேற்ற போது மகிந்த முன்னால் பதவியேற்க வேண்டிய சட்ட கட்டாயம் இல்லாத நிலையிலும் தானாக விரும்பி மகிந்த முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்தார். அப்போது ந்ட்புறவை வளரப்பதன் மூலம் தமிழினத்திற்கு நன்மை செய்யவதற்கான முன்னேற்பாடு என்று நம்பினோம். 

நான் கூட உணர்சி வசப்பட்டு வாழ்துகளை அள்ளி வீசினேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

இதே போல் முதலமைச்சராக பதவியேற்ற போது மகிந்த முன்னால் பதவியேற்க வேண்டிய சட்ட கட்டாயம் இல்லாத நிலையிலும் தானாக விரும்பி மகிந்த முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்தார். அப்போது ந்ட்புறவை வளரப்பதன் மூலம் தமிழினத்திற்கு நன்மை செய்யவதற்கான முன்னேற்பாடு என்று நம்பினோம். 

7 minutes ago, goshan_che said:

நான் கூட உணர்சி வசப்பட்டு வாழ்துகளை அள்ளி வீசினேன் 🤣

சீ. வி. விக்னேஸ்வரன் அமெரிக்க எதிர்ப்பாளர் என்பதை நாங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். அவர் ரனிலை முழுமையா எதிர்த்ததற்கும் மகிந்த முன் சத்தியப்பிரமாணம் எடுத்ததற்கும் அவரது நீண்டகால கம்யூனிஸ்ட் வாசுதேவ குடும்ப நட்பு, பின்னால் உறவுக்கும் இந்த அமெரிக்க எதிர்ப்பு மார்க்சிய சார்பே காரணம். இன்று அமெரிக்கா இவருடன் பேசாமல் சுமந்திரனுடன் மட்டும் பேசுவதற்கு சுமந்திரனின் தெளிவான அமெரிக்க சார்பு, ஒரே நாட்டுக்குள் தீர்வு பற்றிய கொள்கையே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

வணக்கம் யூட் அண்ணா,

இதை நான் அறிந்தவற்றின் அடிப்படையில் என்னால் ஏற்க முடியாது. சீவி ஒரு போதும் மாக்சிய சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் அல்லர்.

அவருக்கும் மேற்கிற்கும், அமெரிக்காவிற்கும் இடையானா உறவு உறுதியானது. அமெரிக்க அதிகாரிகள் கூட முதலமைச்சர் காலத்தில் அவருடன் நட்புறவையே பேணினர்.

வாசுவின் சொல் கேட்டு நடப்பார் என்பதும் நம்பகூடியதல்ல. அடுத்து வாசு கூட பெயரளவில்தாம் மாக்சிஸ்ட். அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையான உறவும் உறுதியானதே.

நான் நினக்கிறேன் இது சுமந்திரனுடனான personality clash. இப்போ கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று வந்து நிற்கிறது.

தவிரவும் அரசியலை திட்டமிட்டு வழி நடத்தும் தலைமைதுவம் இவரிடம் குறைவாக இருக்கிறது அதை சுரேஸ் போன்றவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

தவிரவும் இன்றும் சீவி ஒரு போதும் மேற்கை எதிர்த்து கருத்து கூறவில்லை என்பதையும் காண்க.

கஜனின் போக்கு என்ன என்பதுதான் எனக்கு புரியவில்லை. முழுக்க முழுக்க மேற்குமயப்பட்ட பரம்பரை பணக்காரர்.

இவர் ஏன் இவ்வளவு மூர்கமாக அமெரிக்காவை எதிர்க்க வேண்டும்? அது எமது மக்களுக்கு பெரும் பாதகம் என தெரிந்தும் ?

ஆனால் ஒன்று, சுமந்திரன் கெட்டிகாரன் என்றால், இவர்களை காட்டி அமெரிக்காவுடன் தனது பேரம் பேசும் வலுவை அதிகரிக்க முயலவேண்டும் ( Suma - if you are reading please take note 🤣). 
 
சில சமயம் நான் நினைப்பதும் உண்டு, மேற்குடனான தமிழர் தரப்பின் வலுவை கூட்ட இவர்கள் பேசி வைத்து கொண்டு சண்டை பிடிக்கிறார்களோ? என்று........

ஒரு கிளாஸ் குளிர் தண்ணீரை தலையில் ஊற்றியதும் புத்தி தெளிந்து சந்தேகம் நீங்கி விடும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு கிளாஸ் குளிர் தண்ணீரை தலையில் ஊற்றியதும் புத்தி தெளிந்து சந்தேகம் நீங்கி விடும்"

🤣தண்ணீரை தலையில் ஊற்றாமல், விஸ்கியோடு கலந்து உள்ளேயே ஊற்றிக் கொண்டால் இந்தக் கனவு அடிக்கடி வராது!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இன்னும் எவ்வளவு காலத்துக்கு கால அவகாசம்  கொடுக்கும்??

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் தொண்டமான் இந்தயா  அமெரிக்கா. .......இவை போன்ற எந்தநாட்டின். உதவியுமின்றி  ஜே.ஆர். உடன் மட்டும். பேசி  இலங்கைதோட்டத்தொழிலாருக்கு  குடியுரிமை பெற்றுக்கொடுத்தார்.

இன,மத,பதவி,ஏழை,பணக்காரன்.....என்ற வேறுபாடுயற்றமுறையில் குற்றவழிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.  குறைந்தது 30%பிரச்சனை தீர்ந்துவிடும். 

இதையே செய்யமுடியாதவர்கள் எந்தயொரு அல்லது பல நாடுகளை ஆதரித்தலே,

எதிர்தலே மாற்றம் எதுவும் நடைபெறாது.

விக்கியார் செய்வதைச்செய்யட்டும்,கஜேந்திரகுமார் செய்வதைச்செய்யட்டும் சுமத்திரனும் செய்வதைச்செய்யட்டும் .தயவுசெய்து எதிர்க்கவும் வேண்டாம். ஆதரிக்கவும் வேண்டாம்.யார் சரியாகச்செய்கிறர் என்பதைப்பார்ப்போம்.😜😁🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

"ஒரு கிளாஸ் குளிர் தண்ணீரை தலையில் ஊற்றியதும் புத்தி தெளிந்து சந்தேகம் நீங்கி விடும்"

🤣தண்ணீரை தலையில் ஊற்றாமல், விஸ்கியோடு கலந்து உள்ளேயே ஊற்றிக் கொண்டால் இந்தக் கனவு அடிக்கடி வராது!

விஸ்க்கு தண்ணீர் கலப்பதா ,?அதிலும் பார்க்க தண்ணீரையே குடித்துவிடலாம்.😜👍👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

விஸ்க்கு தண்ணீர் கலப்பதா ,?அதிலும் பார்க்க தண்ணீரையே குடித்துவிடலாம்.😜👍👍

ஓ, கலப்பதில்லையோ? நான் விஸ்கி குடிப்பதில்லை. பக்கத்தில் இருந்து ரேஸ்ற் சாப்பிடுவது மட்டும் தான்! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நான் நினக்கிறேன் இது சுமந்திரனுடனான personality clash. இப்போ கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று வந்து நிற்கிறது.

இவர்களுக்கு இடையேயானது கனடா காசுப்பிரச்சினை. விக்கியரை அரசியலுக்கு கொண்டுவந்தவர் சுமந்திரன். மாகாணசபை தேர்தலில் விக்கியை வெல்ல வைக்க தனது முயற்சியால் கனடாவில் சேகரித்து கொண்டுவந்த பணத்தை செலவிட முன்னின்று ஒத்துழைத்தவர் சுமந்திரன். பின்னர் விக்கியர் அமெரிக்கா வந்தபோது அப்படியே கனடா போய் அங்கு சேகரிக்கப்பட்ட பணத்தை கொண்டுவருமாறு கேட்க விக்கியர் மறுத்துவிட்டார். அதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

2 hours ago, Kandiah57 said:

ஆறுமுகம் தொண்டமான் இந்தயா  அமெரிக்கா. .......இவை போன்ற எந்தநாட்டின். உதவியுமின்றி  ஜே.ஆர். உடன் மட்டும். பேசி  இலங்கைதோட்டத்தொழிலாருக்கு  குடியுரிமை பெற்றுக்கொடுத்தார்.

 சௌஜன்யமூர்த்தி  தொண்டமான் (ஆறுமுகத்தின் பாட்டா) பிரேமதாசவிடம் கதைத்தே இலங்கைதோட்டத்தொழிலாருக்கு  குடியுரிமை பெற்றுக்கொடுத்தார். அமைச்சரவை கூட்டத்தில் குடியுரிமை தோண்டமான் கேட்க, சிங்களவர் சண்டை பிடிக்க, இது அடிக்கடி தொடர, பிரேமதாசா ஒரு ஒதுக்குபுறமாக கூட்டிச்சென்று, இதை கேட்டு அங்கே ஏன் சண்டை பிடிக்கிறாய், நான் தருகிறேன் குடியுரிமை என்று எல்லாருடைய வாயையும் மூடவைத்து ஒருவருடனும் கலந்தாலொசிக்காமல் கொடுத்த குடியுரிமை. இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பின் விடுதலைப்புலிகளிடம் ஆட்சியை இப்படி தனது தனிப்பட்ட சக்தியால் கொடுக்கும் விருப்பம் பிரேமதாசாவிடம் இருந்தது. 3 இல் 2 பெரும்பான்மை இல்லாததால் அது நடக்கவில்லை. பிரேமதாசா கொல்லப்பட்டவுடன் கண்டியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடினார்கள். ஓமந்தையில் புலிகள் கவலையை காட்ட வெள்ளைக்கொடி ஏற்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா முடியல இவ்வளவுக்கும் பிறகு மீண்டும் முதலிருந்தா 
குணா கவியழகன் சொல்ஹெய்மின் பேட்டியை வைத்துக்கொண்டு  பகுதி பகுதியாக மேற்கின் முழு நிகழ்ச்சிநிரலை பட்டவர்த்தனமாக உடைத்துவிட்டார், மேற்கின் பிரச்சினை இலங்கை சீனாவை நோக்கி ஓடத்தொடங்கியிருப்பது  போல தமிழர்களின் இந்திய Proxy அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் ஆதரவு இழந்து மக்கள் மாற்று தெரிவுகளை நோக்கி போகத்தொடங்கியிருப்பது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியா மூக்கணாங்கயிற்றை மட்டும் வைத்துக்கொண்டிருக்க மாடு எப்போவோ அறுத்து கொண்டு போய்விடும் இந்த வெற்று மூக்கணாங்கயிறு இந்தியாவுக்கும் உதவாது மேற்கிற்கும் உதவாது, ராஜபக்ச மாபியாவிற்கு முன் நசுக்கல் ரணிலின் கூட்டமும் மேற்கு நசுக்கல் கூட்டமும் நசுக்கி நசுக்கி ஆளாளுக்கு மாறி மாறி சோப் போட்டுக்கொண்டு இருக்க ,ரணிலும் மெதுவாக சீனாவை கழட்டி விட்டுக்கொண்டிருக்க மேற்கிற்கு மாடும் தேவைப்படவில்லை மூக்கணாம் கயிறும் தேவைப்படவில்லை, ராஜபக்ச மாபியா அதிகாரத்திற்கு வந்ததும் சீனாவுக்கு மீண்டும் கதவு திறந்துவிடப்பட்டது, இப்போது மீண்டும் மேற்கிற்கு மாடும் மூக்கணாம்கயிறும் தேவை ,அதனால் தான் மீண்டும் proxy களை கூப்பிட்டு வைத்து நசுக்கல் வேலையே ஆரம்பிக்கின்றனர்,
இனிமேல் தேசிக்காய்கள்  காட்டில் மழை தான் வருஷத்திற்கு இரண்டு  தீபாவளி பொங்கல் ரிலீஸ் ஷ்யூர்   

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட்டத்தொடர் 46 இற்கு, தமிழ் கட்சிகள் ஒரு ஒன்றிணைந்த அணுகுமுறை கொண்டிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட வரைவு (draft) மற்றைய தமிழ் கட்சிகளிற்கு மேலதிக திருத்தங்களிற்காகவும் உள்ளீடுகளிற்காகவும் சுமந்திரனால் வழங்கப்பட்டு மிகுந்த விமர்சனதிற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே....

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட சிறப்பாக "ஓட்டு அரசியல்" செய்யும் அரசியல் விற்பன்னர்களான விக்கி ஐயாவும், கஜனும் "கால அவகாசம்" வழங்கும் செயல் இது என்று சொல்லிக்கொண்டு, அதிலுள்ள தொழிநுட்ப சிக்கல்களை (technical issues) பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை... சுமந்திரன் ஏமாற்றுப் பேர்வழி என்ற ஆகச்சிறந்த அரசியல் அறிவே சாமானியர்களுக்குத் தேவையானதும் போதுமானதும் என்று நினைப்பார்கள் போல்... என் போன்ற சாமானியர்கள் கேட்க மறந்த கேள்விகள்....

- இரண்டு வருடம் கால அவகாசம் பெற்றுச்செல்லும் இலங்கை அரசு, கால முடிவில் ஏதும் செய்யாது வரும் போது ஐ.நா.ம.உ.ஆ இனால் ஆகக்கூடியது என்ன செய்ய முடியும்?

- ஜ.நா.ம.உ.ஆ இற்கு இறைமையுள்ள நாட்டின் மீது தண்டனை வழங்க அதிகாரம் உண்டா?

- மேலும் இரண்டு வருடம் தவணை கொடுப்பதை தவிர வேறு வழி ஏதுமில்லை. கால அவகாச நீட்டிப்பு வழங்கப்படாது விட்டால் பிரேரணை முடிவிற்கு வந்துவிடும் என்று சுமந்திரன் கூறுவது உண்மையா?

- ஐ.நா.ம.உ.ஆ ICC or ICJ ற்கு இதனை பொறுப்புக்கொடுக்க முடியுமா? றோம் உடன்படிக்கையில் கைச்சாதிடாத இலங்கையை ICC எப்படி தண்டிக்க முடியும்?

- அண்மையில் றோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாத மியன்மாரை கைச்சாத்திட்ட பங்களாதேஷ் ஊடாக ICJ அணுகியதை (had reached) உதாரணமாக சுமந்திரன் காட்டுவது அர்த்தமற்றதா?

- ஜ.நா பாதுகாப்பு சபை ஊடாக கொண்டு செல்வதானால் ஏதாவது ஓரு நாட்டுடன் அது சம்பந்தமாக வேலை செய்கின்றீர்களா?

- ஜ.நா.பா.ச இல் உள்ள சீனாவிற்கு வீரோ சக்தி (veto power) உள்ளது உண்மையா?

- கடைசியாக, எப்போதும் ICC கதவைத்திறந்து வைத்துக் காத்திருப்பது போன்று "கதை" விடும் நீங்கள் ஒரு ஆகச்சிறந்த வரைபை வெளியிடாது ஒளித்து வைத்திருக்கும் மர்மம் தான் என்னவோ?

Edited by பராபரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இரெண்டு தீபாவளியா?

ஒன்றில் ஐயா எடுத்து தந்த தீர்வையே இன்னும் எம்மால் ஒழுங்கா சாப்பிட்டு முடிக்க முடியவில்லை. வருடத்துக்கு ரெண்டு தாங்காது🤣

1 hour ago, பராபரன் said:

அருமையான கருத்து பராபரன். நீங்கள் விடையை தெரிந்து கொண்டே rhetoric ஆக கேள்வி கேட்பதும் புரிகிறது.

இந்த மிக தேவையான கேள்விக்கான பதில்களை நீங்களே சொல்லி விளக்கத்தையும் தாருங்களேன்.

3 hours ago, கற்பகதரு said:

இவர்களுக்கு இடையேயானது கனடா காசுப்பிரச்சினை. விக்கியரை அரசியலுக்கு கொண்டுவந்தவர் சுமந்திரன். மாகாணசபை தேர்தலில் விக்கியை வெல்ல வைக்க தனது முயற்சியால் கனடாவில் சேகரித்து கொண்டுவந்த பணத்தை செலவிட முன்னின்று ஒத்துழைத்தவர் சுமந்திரன். பின்னர் விக்கியர் அமெரிக்கா வந்தபோது அப்படியே கனடா போய் அங்கு சேகரிக்கப்பட்ட பணத்தை கொண்டுவருமாறு கேட்க விக்கியர் மறுத்துவிட்டார். அதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

ஓ... இதை நான் கேள்வி படவில்லை. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இரெண்டு தீபாவளியா?

ரெண்டு தீபாவளி இல்லை அண்ணை 
ரெண்டு ரிலீஸ் தீபாவளிக்கு ஒன்று பொங்கலுக்கு ஒன்று 
வேணுமென்றால் நாம்  கோட் நேம் கொடுக்கலாம் அதாவது கடும் ரகசியமான விடயங்கள் ,பொருட்கள் தயாரிக்கும் போது மற்றைய நிறுவனங்களுக்கோ, பொதுமக்களுக்கோ அல்லது தங்கள் பிரிவை தவிர்த்து வேறு பிரிவுகளுக்கோ தெரியாமலிருக்க இப்படித்தான் பாவிப்பினம் 
நம்ம தலை தளபதி படங்களுக்கே A.K 57 , தளபதி 52 இப்படி பாவிப்பதுதானே  எனவே தேசிக்காய்களும் 
K.T 1,2,3....etc என்று வருடாவருடம் தங்கள் கலவையை அழைக்கலாம் 
K.T ஸ்டாண்ட் பார் கூத்தமைப்பு தேசிக்காய்ஸ் 

🤣 KT என்பது குஞ்சுமோனின் இனிஷல்தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பராபரன் said:

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட்டத்தொடர் 46 இற்கு, தமிழ் கட்சிகள் ஒரு ஒன்றிணைந்த அணுகுமுறை கொண்டிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட வரைவு (draft) மற்றைய தமிழ் கட்சிகளிற்கு மேலதிக திருத்தங்களிற்காகவும் உள்ளீடுகளிற்காகவும் சுமந்திரனால் வழங்கப்பட்டு மிகுந்த விமர்சனதிற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே....

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட சிறப்பாக "ஓட்டு அரசியல்" செய்யும் அரசியல் விற்பன்னர்களான விக்கி ஐயாவும், கஜனும் "கால அவகாசம்" வழங்கும் செயல் இது என்று சொல்லிக்கொண்டு, அதிலுள்ள தொழிநுட்ப சிக்கல்களை (technical issues) பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை... சுமந்திரன் ஏமாற்றுப் பேர்வழி என்ற ஆகச்சிறந்த அரசியல் அறிவே சாமானியர்களுக்குத் தேவையானதும் போதுமானதும் என்று நினைப்பார்கள் போல்... என் போன்ற சாமானியர்கள் கேட்க மறந்த கேள்விகள்....

- இரண்டு வருடம் கால அவகாசம் பெற்றுச்செல்லும் இலங்கை அரசு, கால முடிவில் ஏதும் செய்யாது வரும் போது ஐ.நா.ம.உ.ஆ இனால் ஆகக்கூடியது என்ன செய்ய முடியும்?

- ஜ.நா.ம.உ.ஆ இற்கு இறைமையுள்ள நாட்டின் மீது தண்டனை வழங்க அதிகாரம் உண்டா?

- மேலும் இரண்டு வருடம் தவணை கொடுப்பதை தவிர வேறு வழி ஏதுமில்லை. கால அவகாச நீட்டிப்பு வழங்கப்படாது விட்டால் பிரேரணை முடிவிற்கு வந்துவிடும் என்று சுமந்திரன் கூறுவது உண்மையா?

- ஐ.நா.ம.உ.ஆ ICC or ICJ ற்கு இதனை பொறுப்புக்கொடுக்க முடியுமா? றோம் உடன்படிக்கையில் கைச்சாதிடாத இலங்கையை ICC எப்படி தண்டிக்க முடியும்?

- அண்மையில் றோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாத மியன்மாரை கைச்சாத்திட்ட பங்களாதேஷ் ஊடாக ICJ அணுகியதை (had reached) உதாரணமாக சுமந்திரன் காட்டுவது அர்த்தமற்றதா?

- ஜ.நா பாதுகாப்பு சபை ஊடாக கொண்டு செல்வதானால் ஏதாவது ஓரு நாட்டுடன் அது சம்பந்தமாக வேலை செய்கின்றீர்களா?

- ஜ.நா.பா.ச இல் உள்ள சீனாவிற்கு வீரோ சக்தி (veto power) உள்ளது உண்மையா?

- கடைசியாக, எப்போதும் ICC கதவைத்திறந்து வைத்துக் காத்திருப்பது போன்று "கதை" விடும் நீங்கள் ஒரு ஆகச்சிறந்த வரைபை வெளியிடாது ஒளித்து வைத்திருக்கும் மர்மம் தான் என்னவோ?

இந்த ICC, ICJ, UNSC, வீற்றோ இதையெல்லாம் நீங்கள் பிரபலப்படுத்தி விட்டால் அடுத்த தேர்தலில் எப்படி கஜே, சி.வி குழுக்கள் மேலதிக ஆசனம் எடுப்பது? அவர்கள் கனவில் மண் போடாதீர்கள்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.