Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டது; சட்டபூர்வ தூபிக்கு அமைச்சரவை பத்திரம்: டக்ளஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/167123/

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன பொதுத்தூபி.. சிங்கள இராணுவத்துக்கு நந்திக்கடலில்.. ஒரு தூபி இருக்குது. அதையும் இடியன்..*****

சிங்களப் பல்கலைக்கழகங்களில் இராணுவத் தளபதிகளுக்கு ஸ்தூபி.. ஜே வி பிக்கு தூபி.. ஆனால்.. தமிழர்களின் இழப்பை மட்டும்.. பொதுவில வைக்கப் போகுதாம் *** *****. 

**** ****. 

யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக வளாக எல்லைக்குள் தூபி அமைக்க எவனை அனுமதி கேக்கனும். யாழ் பல்கலைக்கழக வளாகம் என்பது நன்கொடையாக வழங்கப்பட்ட பூமி. தமிழரின் சொத்து. சிங்கள அரசின் சொத்தல்ல.. அனுமதி வாங்க. 

Edited by nedukkalapoovan
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக வளாக எல்லைக்குள் தூபி அமைக்க எவனை அனுமதி கேக்கனும்.

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

2 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக வளாகம் என்பது நன்கொடையாக வளங்கப்பட்ட பூமி. தமிழரின் சொத்து. சிங்கள அரசின் சொத்தல்ல.. அனுமதி வாங்க. 

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

சாயம் வெழுத்த கொதி இன்னும் ஆறவில்லை போலும்.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் ஐநா பரிந்துரையின் பின்னான பரிந்துரையின் பேரில் தான் இந்த தூபியை அமைக்க.. மைத்திரி - ரணில் அரசே இடமளித்தது.

மேலும்... என் வீட்டில் என் வளவுக்குள் நான் நினைத்ததை கட்டவும் வைக்கவும் கோத்தா மகிந்தவிடம் என்னத்துக்கு அனுமதி பெற வேண்டும்.

யு ஜி சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு..??!

யு ஜி சி என்பது உயர்கல்வி நிர்ணய உரித்துடைய ஒன்றே தவிர.. பல்கலைக்கழக நில புல உரிமையை கையாளும் ஒன்றல்ல. அது ஒரு நிர்வாக கட்டமைப்பே தவிர.. அரசியல் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. யு ஜி சிக்கு இதனை இடிக்கச் சொல்லி சொல்ல என்ன சட்ட உரித்திருக்கிறது.. அப்படி என்றால்.. ஜே வி பி உட்பட்ட அமைப்புக்களின் நினைவிடங்களை எப்படி சிங்களப் பல்கலைக்கழகங்களில் அமைத்துப் பராமரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது..????!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

சாயம் வெழுத்த கொதி இன்னும் ஆறவில்லை போலும்.. 😂😂

எங்களுக்கு - உங்களுக்கு, நாங்கள் —- என்ன பெயரில் எழுதினாலும், எல்லாம் ஒன்றன்றோ? 😄

16 minutes ago, nedukkalapoovan said:

யு ஜி சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு..??!

யு ஜி சி என்பது உயர்கல்வி நிர்ணய உரித்துடைய ஒன்றே தவிர.. பல்கலைக்கழக நில புல உரிமையை கையாளும் ஒன்றல்ல. அது ஒரு நிர்வாக கட்டமைப்பே தவிர.. அரசியல் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. யு ஜி சிக்கு இதனை இடிக்கச் சொல்லி சொல்ல என்ன சட்ட உரித்திருக்கிறது.. அப்படி என்றால்.. ஜே வி பி உட்பட்ட அமைப்புக்களின் நினைவிடங்களை எப்படி சிங்களப் பல்கலைக்கழகங்களில் அமைத்துப் பராமரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது..????!

யு ஜி சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதைத்தான் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். யாழ். பல்கலை உபவேந்தர் எடுத்த முடிவாம் இது. அவர் புத்திசாலி, நல்ல முடிவு எடுத்திருப்பதாகவே தெரிகிறது என்றே சொல்லியுள்ளார்கள். யு ஜி சி வேறு, யாழ். பல்கலைக்கழக பேரவை வேறு. யாழ். பல்கலைக்கழக பேரவையை இந்தியா அதனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் யு ஜி சி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

யு ஜி சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதைத்தான் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். யாழ். பல்கலை உபவேந்தர் எடுத்த முடிவாம் இது. அவர் புத்திசாலி, நல்ல முடிவு எடுத்திருப்பதாகவே தெரிகிறது என்றே சொல்லியுள்ளார்கள். இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

யு ஜி சி பேச்சாளர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் வடக்கு தெற்கு நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால்.. தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில் நீங்கள் யு ஜி சி தலையிடவில்லை என்று சொல்கிறீர்கள்..??!

மேலும் யு ஹி சி சிங்கள இராணுவத்தின் வேண்டுகோளை அடுத்து.. மனித உரிமை சட்டவாளராக இருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரை அந்தப் பணி செய்வதில் இருந்தும் தடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யு ஜி சி... தனது அதிகார வரம்புக்கு அப்பால்.. சொறீலங்கா இராணும் மற்றும் அரசின் தேவைகளுக்கு முடிவெடுக்கும் ஒரு பேரினவாதக் கட்டமைப்பாக செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

Guruparan-Kumaravadivel-RTI-.jpg?resize=897%2C1270&ssl=1

யு ஜி சி - சிங்கள இராணுவத் தொடர்பும்.. சிங்கள இராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்ய வரம்பு மீறிச் செயற்படுவதும் எப்போதோ அம்பலமான ஒன்றே. 

இது இப்போ..

Image may contain: one or more people, people standing and outdoor, text that says "2020.12.24 அன்று நினைவு தூபிகளை இராணுவத்தினருக்கு துணைவேந்தர் காட்டிக்கொடுத்த போது"

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள்-Remembrance

பிறப்புக்கும்
இறப்புக்குமான
மானுட உனது உரிமைகளை 
கொண்டாடுவதும் நினைவு 
கூர்வதும் போன்றே 
எனது பிறப்புக்கும் 
இறப்புக்குமான
நினைவுகளை 
நான் கொண்டாடுவதை 
நினைவு கூறுவதை 
மறுக்கும் அதை அழிக்கும் 
உரிமை உனக்கில்லை.
                         -பா.உதயன் 

All human beings are born free and equal in dignity and rights
 
நல்லது. சட்டவிரோதமாக தமிழர் பகுதிகளில் வைத்த அனைத்து பெளத்த சிலைகளையும், பெளத்த 'பன்சல' க்களையும் இதே விதத்தில் ஈபிடிபி உறுப்பினர்களும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் இடித்து நீதியை நிலை நாட்டுவார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

இந்த ஐயாவுக்கும் அதே மண்ணில் சொந்த இனத்தை சுட்டுப் பிழைக்கும் உந்தத் தாடியனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல்.. தாடிக்கு வாக்குப் போடும் ஈனத்தமிழனும் எம் மத்தியில் என்று எண்ணும் போது..??!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

மற்றைய  பல்கலைக்கழகங்களிலும். இதே நடைமுறை அமுலில். உண்டா?ஒரு. பனைமரத்தை வெட்ட கச்சேரியில். அனுமதி. பெற பல மாதங்கள் சென்றது.இந்ததூபியை உடைக்க அப்படி எந்த அனுமதியும் தேவையில்லையா? இலங்கை நீதிமன்றத்தில். அனுமதி பெறத்தேவையில்லயா?எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார்கள . இந்தச்செயலும் ஒர் சாட்சியாகயமையும் என்பது உறுதி.😜😜🤔

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நினைவாலயத்தை இடித்து அழிக்கலாம்.தமிழர்கள் நெஞ்சில் கட்டியிருக்கும் நினைவாலயத்தை எப்படி அழிக்கப்போகிறீர்கள்.நேற்றைய நிகழ்வுக்கும் தமிழர் நெஞ்சில் பதியப்பட்டருக்கும்.காலம் கனிந்து வரும் போது எல்லாக்கணக்குகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் சில மெத்த படித்த மேதைகள், அதிகாரவர்க்கம் கையால் காட்டுவதை தலையால் நின்று செய்வதில் படு சூரர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

யு ஜி சி பேச்சாளர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் வடக்கு தெற்கு நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால்.. தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில் நீங்கள் யு ஜி சி தலையிடவில்லை என்று சொல்கிறீர்கள்..??!

இப்படி யு ஜி சி “தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில்” என்ற செய்தியை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். உபவேந்தரே தீர்மானித்து செய்தார் என்றும், அவர் திறமையானவர், மேற் சொன்ன காரணத்துக்காக செய்திருக்கலாம் என்றுமே யு ஜி சி சொல்லியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

3 hours ago, கற்பகதரு said:

இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் யு ஜி சி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இதைப்பற்றி நெடுக்கர் ஒன்றும் எழுதவில்லையே? மீண்டும் மாணவர்களும் இளைஞர்களும் இந்திய தேவைக்காக சிறை செல்ல வேண்டும் என்றும் கொல்லப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவது தெரிகிறது. இந்த இந்திய தேவைக்காக செயற்படுவதை தொழிலாகவும் பலர் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

மற்றைய  பல்கலைக்கழகங்களிலும். இதே நடைமுறை அமுலில். உண்டா?ஒரு. பனைமரத்தை வெட்ட கச்சேரியில். அனுமதி. பெற பல மாதங்கள் சென்றது.இந்ததூபியை உடைக்க அப்படி எந்த அனுமதியும் தேவையில்லையா? இலங்கை நீதிமன்றத்தில். அனுமதி பெறத்தேவையில்லயா?எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார்கள . இந்தச்செயலும் ஒர் சாட்சியாகயமையும் என்பது உறுதி.😜😜🤔

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது அந்த அந்த பல்கலைக்கழகங்களின் பேரவையாகும். பேரவை அங்கத்தவர்கள் உள்ளூர் சமுக பிரதிநிதிகள். இவர்களே உபவேந்தருக்கு ஆணை இடுபவர்கள். வசந்தி அரசரட்ணத்தை உபவேந்தராக ஈ.பி.டி.பி. நியமித்த காலத்தில் இருந்தே யாழ். பல்கலைக்கழக பேரவை  ஈ.பி.டி.பி. யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை சிறிலங்கா அரசின் வேண்டுகோள்களை ஈ.பி.டி.பி. யாழ். பல்கலைக்கழக பேரவை ஊடாக உபவேந்தருக்கு ஆணையிட்டு  நிறைவேற்றி வந்தது.

ஜெய்சங்கர் வந்தார் - கேட்டார், குழப்பம் ஒன்று தேவை என்றார். அல்லது கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதென்றார். சூளைமேட்டு வழக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். கேட்டதை உடனேயே செய்து காட்டினால்தானே ஆற்றல் இருப்பதை இந்தியன் நம்புவான்? செய்து காட்டிவிட்டார்கள். மீண்டும் இளைஞர்கள் சிறை செல்வார்கள், காணாமல் போவார்கள், குண்டுகள் வெடிக்கும், இந்திய இராணுவமும் பரந்தன் இராஜனும் வருவார்கள். மக்கள் உலகமெல்லாம் ஊர்வலம் போவார்கள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

ஜெய்சங்கர் யார். யாருடன் என்னென்ன. .கதைத்தார் என்பதை எழுதவும் எனக்கும் இலங்கையில் நானகு வீடுகள் உண்டு அமச்சாரவைப்பத்திரத்தைப்பெற்று. உடைத்தாலும். என்று பயமாகவுள்ளது இரவில்  ஏன்உடைத்தார்கள்  ? உங்களுக்கு முதலே தெரியுமா உடைக்கப் பெகிறார்கள் என்று?  ஓரே நாடு பல சட்டங்கள்...ஓரே நாடு. பல சட்டங்கள.    ஓரேநாடு. பல. சட்டங்கள்....😜😜😜😜😜😜😜😜😜😜😜🤥🤥🤥🤥🤥🤥🤥❤️

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

இப்படி யு ஜி சி “தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில்” என்ற செய்தியை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். உபவேந்தரே தீர்மானித்து செய்தார் என்றும், அவர் திறமையானவர், மேற் சொன்ன காரணத்துக்காக செய்திருக்கலாம் என்றுமே யு ஜி சி சொல்லியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

இதைப்பற்றி நெடுக்கர் ஒன்றும் எழுதவில்லையே? மீண்டும் மாணவர்களும் இளைஞர்களும் இந்திய தேவைக்காக சிறை செல்ல வேண்டும் என்றும் கொல்லப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவது தெரிகிறது. இந்த இந்திய தேவைக்காக செயற்படுவதை தொழிலாகவும் பலர் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது

எண்டு கனபேர் சொல்லுறாங்கள் 

உமது சாயம் கரைந்து பல நாளாச்சு கற்பகதரு. 

உம்முடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 

🤮🤮

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kapithan said:

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது

எண்டு கனபேர் சொல்லுறாங்கள் 

உமது சாயம் கரைந்து பல நாளாச்சு கற்பகதரு. 

உம்முடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 

🤮🤮

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

இவர்களுக்கு கல்லெறியாமல் விட்டால் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

இவர்களுக்கு கல்லெறியாமல் விட்டால் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்.    

பழக்க தோசத்தில் காலைக் காலைத் தூக்கியே ஆவார்கள். மாற்ற முடியாது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவிட தகர்ப்பிற்கு காரணம் இதுவா?கலாநிதி குருபரன் விளக்கம்!

27668aaf-87.jpg
யாப்பாணம் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, யாழ் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் குவிந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்த அதிகாரி மிலேச்சத்தனமாக நடந்து கொள்வது கவலை தருவதாகவும் அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட ,முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சடலங்கள் தகனம்-முஸ்லீம் மக்களுக்கான திட்டமிட்ட சதியே!
ஆரியின் வெற்றிக்கு பேராதரவு-தானா சேர்ந்த கூட்டமாம்!
திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி!

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை.

அதன்பின்னர், வருகைதந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

பதற்ற நிலை தொடர்ந்தவண்ணமுள்ள தருணத்தில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.

08e7a9ff-7.jpg

முன்னைய உபவேந்தர் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம். தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன” என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்று தூபி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. மற்றைய தூபி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://samugammedia.com/is-this-the-reason-to-remember-mullivaikkal-dr-kuruparan-explanation/?fbclid=IwAR2EmSgv6IfizNHc724TuxtDaiySC8DIgbyfTXwAWiS0brrpUpHiCcNgAxw

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

உண்மையும் அதுதான் . 🤐

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பழக்க தோசத்தில் காலைக் காலைத் தூக்கியே ஆவார்கள். மாற்ற முடியாது. ☹️

அவர்களுக்கு தெரிந்ததைத்தானே  அவர்களால்  செய்ய முடியும்.  நாமும் அவர்களைப்போல் செய்ய முடியுமா? விலத்திப்போய்க்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் வீண் நேர விரயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.