Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்

சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

நான் சிங்கள பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் 73வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ பௌத்த கோட்பாட்டுக்கு அமையவே நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன். மேலும் ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் சமவுரிமை எப்போதும் வழங்கப்படும்.

இதேவேளை ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சட்டத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

மேலும், தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளேன்.

அதேபோன்று மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அந்தவகையில் மீண்டும் இலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

இதேவேளை ஊழலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொவிட் வைரஸ் குறித்த தடுப்பூசி திட்டம் தொடரும்.

நாட்டின் பொருளாதார மையங்களை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றும்.

அதேவேளையில் இது தொடர்பான வதந்திகளை பரப்புபவர்களின் அடிப்படை நோக்கங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஈஸ்டர்-குண்டுத்-தாக்குத-3/

  • Replies 58
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நாலு கோயிலை இடித்து விகாரை கட்ட போவதை சிம்பாலிக்கா கதைக்குறார் ..

முன் கூட்டியே நீதிமன்று ஊடாக தடை உத்தரவு பெற வழிவகை இருந்தால் பெற்று கொள்வது நலம் ..😢

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிங்கள-பௌத்த தலைவன்

February 4, 2021

gotta.jpg

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வறுமையை முற்றாக ஒழித்து வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சவால் இன்னும் எமக்கு முன் உள்ளது.

எமது நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி தாய் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க இந்த நாட்டின் 69 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.

தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன. இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.

நான் முன்வைத்த “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளனர்.

எதர்கால சந்ததியினருக்காக நாம் வென்ற சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கும், எமது நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அரச தலைவர் என்ற முறையில் நான் உறுதியளித்திருக்கிறேன். அந்த உறுதிமொழியை நான் எப்போதும் பாதுகாப்பேன்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.

நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் கடந்த பாராளுமன்றத்தினால் இது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட உதவி ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டத்திற்கு முகங்கொடுக்காமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதே போன்று இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கவும் நாம் இடமளிக்க மாட்டோம்.

கொவிட் தொற்றுநோயால் முழு உலகமும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், எமது நாடும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடையாக இருந்து வருகிறது.

தற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட் வைரஸிற்கான தடுப்பூசிகளை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளன. இந்த தடுப்பூசிகளை விரைவாகப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். இந்த விடயம்  தொடர்பில் உலக சுகாதார அமைப்புடனும் அரசாங்கம் கலந்துரையாடியது. அதன்படி, ஒரு தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு எமது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டு அனைத்து நாடுகளும் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் வலுவான தேசிய உற்பத்தியாளர்களின் தேவையாகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுதேச விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எங்கள் கொள்கையானது சரியானதும் காலத்திற்கு ஏற்றதுமாகும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

இலவச உர விநியோகம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ரூ.50 வரை உயர்த்தியமை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குளங்களை புனரமைத்தல், வீட்டுத் தோட்டம் மற்றும் நகர்ப்புற விவசாய மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். நெல், சோளம், தானிய வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை முகாமைத்துவம் செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட முடியுமான மஞ்சள் போன்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

உள்ளூர் விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த விவசாயிகளை தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன், நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் ஒரு துறையாக விவசாயத்தை மேலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் முக்கியத்துவத்தை நாம் மறக்கவில்லை. சமீப காலங்களில், இந்தத் துறைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலமும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திக், பிரம்பு, களிமண் மற்றும் ஆபரணங்கள் போன்ற பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இராஜாங்க அமைச்சுக்கள் மூலம் ஏற்கனவே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த ஒற்றை இலக்க வட்டி விகித கடன் வசதிகளை வழங்குவதிலும், தேவையான ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

நிர்மாணத் துறையினருக்கு ஊக்கமளித்தல் செயலிழந்திருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான வெற்றிகரமான ஒரு மூலோபாயமாகும். அதன்படி, நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள 100,000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டம், பத்தாயிரம் பாலங்கள் அமைத்தல், நாடு முழுவதும் குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம், ‘ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு’ என்ற கருப்பொருளின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகளை நிர்மாணித்தல், நகர்ப்புற சேறிப்புரங்களில் வசிப்போர், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்காக ஒரு லட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், தோட்ட மக்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் நேரடியாக பங்களிக்கும்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை அகற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாட்டின் பொருளாதார மையப்பகுதியை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் குறித்து தவறான வியாக்கியானங்களை முன்வைப்போரின் அரசியல் உள்நோக்கங்களை பெரும்பான்மையான மக்கள் அறிவுபூர்வமாக ஆராய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் நாட்டின் மக்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களை பாதிக்கும் காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றவும் புதுப்பிக்கவும் நான் இப்போது ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளேன். பல காலமாக விவாதிக்கப்பட்டாலும் செயற்படுத்தப்படாதிருந்த இந்த செயன்முறையை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இந்த குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது நாட்டின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டு செயன்முறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக கருதப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு மனித வளங்கள் மிக முக்கியமானவை. அறிவு மற்றும் திறன்கள் நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்க கல்வித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு தனியான இராஜாங்க அமைச்சை நாங்கள் நிறுவியுள்ளோம்.  இந்த சீர்திருத்தங்களைச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவ உதவியைப் பெறும் நோக்கில் இரண்டு செயலணிகள் நிறுவப்பட்டன. இவர்களது பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 10,000 அல்லது 30% ஆக அதிகரித்துள்ளது. அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 லிருந்து 200,000 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவோம். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க தரமான முன்னேற்றம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நவீன உலகில் எமது பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை எமது நாட்டில் உருவாக்க வேண்டும்.

போட்டித்தன்மையுடன் வெற்றிபெற, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இதற்கு உதவும் வகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைகளுக்கு ஏற்ப, பொருளாதார அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும். தொழில்நுட்ப துறைகளுக்கு ஏற்கனவே பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் தொழில்நுட்பத்திற்காக ஒரு தனியான அமைச்சு நிறுவப்பட்டு அதை எனது பொறுப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அமைச்சின் மூலம், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவது, அத்துடன் அரச பொறிமுறை மற்றும் சந்தை செயன்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். தொழில்நுட்பத் துறையில் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊக்குவிப்புகள் மூலம் தொழில்நுட்பத் துறையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது.

இதுவரை நான் கூறியவை அனைத்தும் முழு உலகையும் முடக்கிவிட்டிருந்த கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட நிலையில், ஒரு வருட குறுகிய காலாத்திற்குள் செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது என்று இந்த நாட்டின் விவேகமான மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டுதோறும் சுமார் 4,500 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த சுற்றுலாத் துறை, இந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியது. இன்று, இந்த மக்கள் தமது வாழ்வாதார வழிகளை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த மக்களுக்கு நாம் விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டும். எனவே, சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, முறையான திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை படிப்படியாக மீள ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நான் எப்போதும் சூழலை நேசிப்பவன். நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, நகரங்களை அழகுபடுத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, நடைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் போன்ற அனைத்து திட்டங்களிலும் சூழலைப் பாதுகாத்து அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வருங்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க இன்றும் எனது அரசு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புற வனப் பூங்காக்களை அமைத்தல், பசுமை நகர திட்டமிடல், பசுமை திட்டங்கள், தேசிய மர நடுகை திட்டங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைத்தல், தரிசு நெல் வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், சேதன உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகிய இவை அனைத்தும் இந்த அரசாங்கம் பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை என்னவென்றால், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பொருளாதாரத்தின் உண்மையான பெறுபேறுகளை அடைய முடியாது என்பதாகும். வறுமையை ஒழித்தல், அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சுதேச வர்த்தகர்களை ஊக்குவித்தல் போன்ற அரசாங்கத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ள எங்களுக்கு ஒரு தூய்மையான, வினைத்திறன் வாய்ந்த அரச சேவை அத்தியவசியமானதாகும்.

எமது நாட்டின் அரச சேவை என்பது நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு வலுவான பொறிமுறையாகும். உலகின் பல நாடுகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இது. எனவே, இந்த வலுவான பொறிமுறையானது நாட்டின் தீர்மானம் எடுக்கும் செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இன்று ஒவ்வொரு மட்டத்திலும் முடிவெடுப்பதில் ஒரு பலவீனத்தைக் காண்கிறோம். மிகவும் எளிமையான நிறுவனம் சார்ந்த விடயங்கள் தொடர்பான முடிவுகளில் கூட, அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதில்லை, அவற்றை அமைச்சரவையிடம் முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் சுற்றறிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடிய எல்லைக்குள் கூட தீர்மானங்களை எடுக்க தயங்குகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினம்.

சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக உழைக்கும் அரச ஊழியர்களை மேலும் பாதுகாக்க தேவையான சட்ட சீர்திருத்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சேவைகளை வழங்குவதில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகளை தளர்த்தி அரச பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் செயற்திறமாக பங்கேற்கிறேன், ஏனெனில் கிராமப்புற அபிவிருத்தி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும். “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை கிராமிய மட்டத்தில் செயல்படுத்துவதில் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரசாங்க பொறிமுறைகள் மிக முக்கியமானவை. இந்த அபிவிருத்தி செயன்முறையில், ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் முதல் கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்கும் கிராம சேவகர்கள், சமுர்தி அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அலுவலர்கள் என ஒவ்வொரு அரச ஊழியருக்கும் தெளிவான பொறுப்பு உள்ளது. கொரோனா தொற்றுநோய் நிலைமைகளின் போது நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பிற சேவைகளை வழங்குவதற்கும் அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதில் அரச ஊழியர்களின் அதிகபட்ச பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தேசிய விவகாரங்களிலும் கிராமப்புற அபிவிருத்தியிலும் அரசியல் தலைமைக்கு பெரும் பொறுப்பு உள்ளது. எமது அரசாங்கத்தில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கும் ஒரு பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஊழல் மற்றும் வீண்விரயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைகள். அரச நிர்வாகத்தில் ஊழல் மற்றும் விரயங்களை ஒழிக்க நாம் முன்மாதிரியாக செயற்பட்டு வருகிறோம். ஊழல் மற்றும் வீண் விரயங்களில் குற்றவாளியான எவர் தொடர்பிலும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்க மாட்டோம். இருப்பினும், இன்று அரச துறையில் ஊழலைத் தடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ மக்கள் இவற்றுக்கு வழங்கும் மறைமுக ஆதரவாகும். எனவே, ஊழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோக வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எவரேனும் ஒருவர் ஊழலில் ஈடுபட்டு உங்களை அவ்வாறு செய்ய தூண்டினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதனை தெரியப்படுத்துங்கள். ஊழல் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க நாடு முழுவதும் ஒரு சமூக கருத்தை உருவாக்குவதில் என்னுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஊடகங்கள் வழங்கும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்ததாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி, என்னிடமிருந்து நாட்டிற்கான சேவையை எதிர்பார்த்தே அவ்வாறு செய்தார்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நேர்மையான நோக்கங்களுடன் என்னை ஆதரித்த மக்களின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற நான் எப்போதும் செயற்படுவேன். ஆனால் தனிப்பட்ட அல்லது வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன் என்னை ஆதரித்தவர்களை மகிழ்விப்பதற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை.

வரலாறு முழுவதும், வலுவான நாகரிகங்கள் கட்டியெழுப்பப்பட்டதும், நாடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் எதிர்காலத்தை சாதகமாகப் பார்த்து, இலக்குகளை நோக்கி பயணித்த மனிதர்களினாலேயாகும். இந்த நேரத்தில் எமது நாட்டின் வளர்ச்சிக்கும் இத்தகைய சிந்தனை தேவை.

மற்றவர்கள் செய்யும் அனைத்திலும் தவறுகளை மட்டுமே பார்க்கும், சமூகத்திற்காக எதுவும் செய்யாத அவநம்பிக்கையாளர்களிடமிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்காது.

இன்று எமக்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும், சமூகத்திற்கு பயனுள்ள, விமர்சனங்களை ஒதுக்கி வைத்து, பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நேர்மறையான குடிமக்களின் ஆசீர்வாதமும் ஆதரவுமே ஆகும்.

உற்பத்தி திறன்வாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகம் மற்றும் சுபீட்சமான தேசம் என்ற அடிப்படை நோக்கங்களை அடைய நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சரியான பங்களிப்பைச் செய்தால் அந்த நோக்கங்களை அடைய முடியும். எனவே ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன், உங்களுடையவும் என்னுடையவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன். #சிங்களபௌத்த #தலைவன் #கோட்டாபய_ராஜபக்ஸ #இனவாத #பயங்கரவாத

https://globaltamilnews.net/2021/156475/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது

4 hours ago, தமிழ் சிறி said:

நான் சிங்கள பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூடரின் ஆணவப்பேச்சு அவர்களுக்கே பொறியாக மாறிவிடுகிறது. இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே.

  • கருத்துக்கள உறவுகள்

‘நான், சிங்கள-பௌத்த தலைவன்’ (முழுமையான உரையும் இணைப்பு)

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வறுமையை முற்றாக ஒழித்து வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சவால் இன்னும் எமக்கு முன் உள்ளது.

எமது நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி தாய் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க இந்த நாட்டின் 69 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.

தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன. இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.

நான் முன்வைத்த "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளனர்.

எதர்கால சந்ததியினருக்காக நாம் வென்ற சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கும், எமது நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அரச தலைவர் என்ற முறையில் நான் உறுதியளித்திருக்கிறேன். அந்த உறுதிமொழியை நான் எப்போதும் பாதுகாப்பேன்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.

நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் கடந்த பாராளுமன்றத்தினால் இது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட உதவி ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டத்திற்கு முகங்கொடுக்காமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதே போன்று இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கவும் நாம் இடமளிக்க மாட்டோம்.

கோவிட் தொற்றுநோயால் முழு உலகமும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், எமது நாடும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடையாக இருந்து வருகிறது.

தற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட் வைரஸிற்கான தடுப்பூசிகளை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளன. இந்த தடுப்பூசிகளை விரைவாகப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். இந்த விடயம்  தொடர்பில் உலக சுகாதார அமைப்புடனும் அரசாங்கம் கலந்துரையாடியது. அதன்படி, ஒரு தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு எமது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டு அனைத்து நாடுகளும் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் வலுவான தேசிய உற்பத்தியாளர்களின் தேவையாகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுதேச விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எங்கள் கொள்கையானது சரியானதும் காலத்திற்கு ஏற்றதுமாகும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

இலவச உர விநியோகம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ரூ.50 வரை உயர்த்தியமை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குளங்களை புனரமைத்தல், வீட்டுத் தோட்டம் மற்றும் நகர்ப்புற விவசாய மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். நெல், சோளம், தானிய வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை முகாமைத்துவம் செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட முடியுமான மஞ்சள் போன்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

உள்ளூர் விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த விவசாயிகளை தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன், நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் ஒரு துறையாக விவசாயத்தை மேலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் முக்கியத்துவத்தை நாம் மறக்கவில்லை. சமீப காலங்களில், இந்தத் துறைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலமும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திக், பிரம்பு, களிமண் மற்றும் ஆபரணங்கள் போன்ற பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இராஜாங்க அமைச்சுக்கள் மூலம் ஏற்கனவே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த ஒற்றை இலக்க வட்டி விகித கடன் வசதிகளை வழங்குவதிலும், தேவையான ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

நிர்மாணத் துறையினருக்கு ஊக்கமளித்தல் செயலிழந்திருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான வெற்றிகரமான ஒரு மூலோபாயமாகும். அதன்படி, நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள 100,000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டம், பத்தாயிரம் பாலங்கள் அமைத்தல், நாடு முழுவதும் குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம், 'ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு' என்ற கருப்பொருளின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகளை நிர்மாணித்தல், நகர்ப்புற சேறிப்புரங்களில் வசிப்போர், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்காக ஒரு லட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், தோட்ட மக்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் நேரடியாக பங்களிக்கும்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை அகற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாட்டின் பொருளாதார மையப்பகுதியை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் குறித்து தவறான வியாக்கியானங்களை முன்வைப்போரின் அரசியல் உள்நோக்கங்களை பெரும்பான்மையான மக்கள் அறிவுபூர்வமாக ஆராய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் நாட்டின் மக்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களை பாதிக்கும் காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றவும் புதுப்பிக்கவும் நான் இப்போது ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளேன். பல காலமாக விவாதிக்கப்பட்டாலும் செயற்படுத்தப்படாதிருந்த இந்த செயன்முறையை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இந்த குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது நாட்டின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டு செயன்முறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக கருதப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு மனித வளங்கள் மிக முக்கியமானவை. அறிவு மற்றும் திறன்கள் நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்க கல்வித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு தனியான இராஜாங்க அமைச்சை நாங்கள் நிறுவியுள்ளோம்.  இந்த சீர்திருத்தங்களைச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவ உதவியைப் பெறும் நோக்கில் இரண்டு செயலணிகள் நிறுவப்பட்டன. இவர்களது பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 10,000 அல்லது 30% ஆக அதிகரித்துள்ளது. அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 லிருந்து 200,000 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவோம். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க தரமான முன்னேற்றம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நவீன உலகில் எமது பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை எமது நாட்டில் உருவாக்க வேண்டும்.

போட்டித்தன்மையுடன் வெற்றிபெற, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இதற்கு உதவும் வகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைகளுக்கு ஏற்ப, பொருளாதார அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும். தொழில்நுட்ப துறைகளுக்கு ஏற்கனவே பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் தொழில்நுட்பத்திற்காக ஒரு தனியான அமைச்சு நிறுவப்பட்டு அதை எனது பொறுப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அமைச்சின் மூலம், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவது, அத்துடன் அரச பொறிமுறை மற்றும் சந்தை செயன்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். தொழில்நுட்பத் துறையில் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊக்குவிப்புகள் மூலம் தொழில்நுட்பத் துறையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது.

இதுவரை நான் கூறியவை அனைத்தும் முழு உலகையும் முடக்கிவிட்டிருந்த கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட நிலையில், ஒரு வருட குறுகிய காலாத்திற்குள் செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது என்று இந்த நாட்டின் விவேகமான மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டுதோறும் சுமார் 4,500 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த சுற்றுலாத் துறை, இந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியது. இன்று, இந்த மக்கள் தமது வாழ்வாதார வழிகளை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த மக்களுக்கு நாம் விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டும். எனவே, சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, முறையான திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை படிப்படியாக மீள ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நான் எப்போதும் சூழலை நேசிப்பவன். நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, நகரங்களை அழகுபடுத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, நடைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் போன்ற அனைத்து திட்டங்களிலும் சூழலைப் பாதுகாத்து அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வருங்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க இன்றும் எனது அரசு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புற வனப் பூங்காக்களை அமைத்தல், பசுமை நகர திட்டமிடல், பசுமை திட்டங்கள், தேசிய மர நடுகை திட்டங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைத்தல், தரிசு நெல் வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், சேதன உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகிய இவை அனைத்தும் இந்த அரசாங்கம் பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை என்னவென்றால், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பொருளாதாரத்தின் உண்மையான பெறுபேறுகளை அடைய முடியாது என்பதாகும். வறுமையை ஒழித்தல், அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சுதேச வர்த்தகர்களை ஊக்குவித்தல் போன்ற அரசாங்கத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ள எங்களுக்கு ஒரு தூய்மையான, வினைத்திறன் வாய்ந்த அரச சேவை அத்தியவசியமானதாகும்.

எமது நாட்டின் அரச சேவை என்பது நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு வலுவான பொறிமுறையாகும். உலகின் பல நாடுகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இது. எனவே, இந்த வலுவான பொறிமுறையானது நாட்டின் தீர்மானம் எடுக்கும் செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இன்று ஒவ்வொரு மட்டத்திலும் முடிவெடுப்பதில் ஒரு பலவீனத்தைக் காண்கிறோம். மிகவும் எளிமையான நிறுவனம் சார்ந்த விடயங்கள் தொடர்பான முடிவுகளில் கூட, அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதில்லை, அவற்றை அமைச்சரவையிடம் முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் சுற்றறிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடிய எல்லைக்குள் கூட தீர்மானங்களை எடுக்க தயங்குகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினம்.

சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக உழைக்கும் அரச ஊழியர்களை மேலும் பாதுகாக்க தேவையான சட்ட சீர்திருத்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சேவைகளை வழங்குவதில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகளை தளர்த்தி அரச பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

"கிராமத்துடன் உரையாடல்" திட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் செயற்திறமாக பங்கேற்கிறேன், ஏனெனில் கிராமப்புற அபிவிருத்தி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும். "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை கிராமிய மட்டத்தில் செயல்படுத்துவதில் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரசாங்க பொறிமுறைகள் மிக முக்கியமானவை. இந்த அபிவிருத்தி செயன்முறையில், ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் முதல் கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்கும் கிராம சேவகர்கள், சமுர்தி அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அலுவலர்கள் என ஒவ்வொரு அரச ஊழியருக்கும் தெளிவான பொறுப்பு உள்ளது. கொரோனா தொற்றுநோய் நிலைமைகளின் போது நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பிற சேவைகளை வழங்குவதற்கும் அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதில் அரச ஊழியர்களின் அதிகபட்ச பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தேசிய விவகாரங்களிலும் கிராமப்புற அபிவிருத்தியிலும் அரசியல் தலைமைக்கு பெரும் பொறுப்பு உள்ளது. எமது அரசாங்கத்தில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கும் ஒரு பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஊழல் மற்றும் வீண்விரயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைகள். அரச நிர்வாகத்தில் ஊழல் மற்றும் விரயங்களை ஒழிக்க நாம் முன்மாதிரியாக செயற்பட்டு வருகிறோம். ஊழல் மற்றும் வீண் விரயங்களில் குற்றவாளியான எவர் தொடர்பிலும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்க மாட்டோம். இருப்பினும், இன்று அரச துறையில் ஊழலைத் தடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ மக்கள் இவற்றுக்கு வழங்கும் மறைமுக ஆதரவாகும். எனவே, ஊழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோக வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எவரேனும் ஒருவர் ஊழலில் ஈடுபட்டு உங்களை அவ்வாறு செய்ய தூண்டினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதனை தெரியப்படுத்துங்கள். ஊழல் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க நாடு முழுவதும் ஒரு சமூக கருத்தை உருவாக்குவதில் என்னுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஊடகங்கள் வழங்கும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்ததாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி, என்னிடமிருந்து நாட்டிற்கான சேவையை எதிர்பார்த்தே அவ்வாறு செய்தார்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நேர்மையான நோக்கங்களுடன் என்னை ஆதரித்த மக்களின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற நான் எப்போதும் செயற்படுவேன். ஆனால் தனிப்பட்ட அல்லது வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன் என்னை ஆதரித்தவர்களை மகிழ்விப்பதற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை.

வரலாறு முழுவதும், வலுவான நாகரிகங்கள் கட்டியெழுப்பப்பட்டதும், நாடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் எதிர்காலத்தை சாதகமாகப் பார்த்து, இலக்குகளை நோக்கி பயணித்த மனிதர்களினாலேயாகும். இந்த நேரத்தில் எமது நாட்டின் வளர்ச்சிக்கும் இத்தகைய சிந்தனை தேவை.

மற்றவர்கTamilmirror Online || ‘நான், சிங்கள-பௌத்த தலைவன்’ (முழுமையான உரையும் இணைப்பு)ள் செய்யும் அனைத்திலும் தவறுகளை மட்டுமே பார்க்கும், சமூகத்திற்காக எதுவும் செய்யாத அவநம்பிக்கையாளர்களிடமிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்காது.

இன்று எமக்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும், சமூகத்திற்கு பயனுள்ள, விமர்சனங்களை ஒதுக்கி வைத்து, பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நேர்மறையான குடிமக்களின் ஆசீர்வாதமும் ஆதரவுமே ஆகும்.

உற்பத்தி திறன்வாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகம் மற்றும் சுபீட்சமான தேசம் என்ற அடிப்படை நோக்கங்களை அடைய நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சரியான பங்களிப்பைச் செய்தால் அந்த நோக்கங்களை அடைய முடியும். எனவே ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன், உங்களுடையவும் என்னுடையவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன்.

Tamilmirror Online || ‘நான், சிங்கள-பௌத்த தலைவன்’ (முழுமையான உரையும் இணைப்பு)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை துணைக்கழைத்து தன்னை நியாயப்படுத்தும் ஜனாதிபதி!

BeFunky-collage%2B%25282%2529.jpg

இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி கோதாவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது. தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனயில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் என தெரிய வருகிறது.

நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை ராஜ்யத்தை கட்டை எழுப்ப முயல்கிறோம். ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தன கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார்.

உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியை பாராட்டுகிறேன். அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால், அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?

உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார், அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைதான் தெளிவாக கூறுகிறார்.

(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான். (02) நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை. (03) பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன். (04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு.
 
http://www.battinews.com/2021/02/blog-post_55.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, கிருபன் said:

(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான்.

(02) நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை.

(03) பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன்.

(04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு.

கோத்தபாய நிறுத்தி நிதானமாகத்தான் பேசுகின்றார்.தனது மக்களுக்கு விசுவாசமாக இருக்கின்றார். தவறேதும் இல்லை.
ஆனால்  எமது தமிழ் முரட்டு சிங்கங்களுக்குத்தான் எதுவுமே விளங்குவதில்லை.அவர்களின் மூளையில் புலி எதிர்ப்பு அழிக்க முடியாதவாறு தரவேற்றப்பட்டு விட்டது.😎

ஆதலால் சிங்கள இனவாதம் எது சொன்னாலும் முரட்டு சிங்கங்களுக்கு வேத வாக்காகவே தெரிகின்றது.:cool:

16 minutes ago, குமாரசாமி said:

ஶ்ரீலங்காவின் ஆட்சிபீடத்தில் மிக மோசமான இனவாதிகளான மகிந்த சகோதரர்கள்  வருவதே தமிழருக்கு நன்மை பயக்கும் என்று தீர்மானித்து மகிந்த சகோதர்களை ஆட்சிக்கு கொண்டுவர உதவியவர்கள்  யார்?  

அதன் பின்னர் கூட 2015 ல் மகிந்த  வருவது தான் நல்லது என்று தீவிர தேசிய ஆதரவாளரகள் என்று தம்மை கூறிக்கொள்வவோர் யாழ் களத்திலேயே பகிரங்கமாக கூறினார்களே?  

அவ்வாறு மகிந்த - கோட்டா வருவது நல்லது என்று மடமைத்தனமான அரசியல் கருத்துக்களை வைத்தவர்களை தான் நீங்கள் இந்த கேள்வியை கேட்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

ஶ்ரீலங்காவின் ஆட்சிபீடத்தில் மிக மோசமான இனவாதிகளான மகிந்த சகோதரர்கள்  வருவதே தமிழருக்கு நன்மை பயக்கும்

இந்த அதிதீவிர இனவாத முட்டாள்களிடம் இருந்தே தமிழருக்கு விடிவு  பிறக்கலாம், தமிழரை அழிக்கிறோம் எனும் மமதையில் முட்டாள்தனமாகவும், வெறித்தனமாகவும் விதிமுறைகளை  மீறி  ஆடி தாமாகவே களத்திலிருந்து விலத்தப்படுவார்கள். அதிலும் கோத்தா மிகச் சிறந்த தெரிவாக காலம் உணர்ந்திருக்கிறது விதைத்தவனே அறுவடைக்கு சொந்தக்காரன். அண்ணா பிரதமர், தம்பி ஜனாதிபதி. சரியாகவே காலம் கணித்திருக்கிறது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, tulpen said:

ஶ்ரீலங்காவின் ஆட்சிபீடத்தில் மிக மோசமான இனவாதிகளான மகிந்த சகோதரர்கள்  வருவதே தமிழருக்கு நன்மை பயக்கும் என்று தீர்மானித்து மகிந்த சகோதர்களை ஆட்சிக்கு கொண்டுவர உதவியவர்கள்  யார்?  

அதன் பின்னர் கூட 2015 ல் மகிந்த  வருவது தான் நல்லது என்று தீவிர தேசிய ஆதரவாளரகள் என்று தம்மை கூறிக்கொள்வவோர் யாழ் களத்திலேயே பகிரங்கமாக கூறினார்களே?  

அவ்வாறு மகிந்த - கோட்டா வருவது நல்லது என்று மடமைத்தனமான அரசியல் கருத்துக்களை வைத்தவர்களை தான் நீங்கள் இந்த கேள்வியை கேட்கவேண்டும். 

அதாவது அங்கே நான் எழுதியது கருத்து. கேள்வி அல்ல. 😎

மீண்டும் ஒரு முறை தயவு கூர்ந்து வாசிக்கவும்.உங்களது இந்த கருத்து மூலம் நான் எழுதியவற்றில் உங்களை ஏதோ ஒரு விடயம் தாக்கிவிட்டது.அது என்னவாக இருக்கும்??? 🤔  சரி நமக்கேன் தேவையில்லாத வேலை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கட்டும்.🥳

உங்கள் மூளைக்கு ஒரு விடயத்தை சொல்கின்றேன். உலகில் தேர்தல் வியூகங்கள் எப்போதும் எங்கும் பலிப்பதில்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ஶ்ரீலங்காவின் ஆட்சிபீடத்தில் மிக மோசமான இனவாதிகளான மகிந்த சகோதரர்கள்  வருவதே தமிழருக்கு நன்மை பயக்கும் என்று தீர்மானித்து மகிந்த சகோதர்களை ஆட்சிக்கு கொண்டுவர உதவியவர்கள்  யார்?  

அதன் பின்னர் கூட 2015 ல் மகிந்த  வருவது தான் நல்லது என்று தீவிர தேசிய ஆதரவாளரகள் என்று தம்மை கூறிக்கொள்வவோர் யாழ் களத்திலேயே பகிரங்கமாக கூறினார்களே?  

அவ்வாறு மகிந்த - கோட்டா வருவது நல்லது என்று மடமைத்தனமான அரசியல் கருத்துக்களை வைத்தவர்களை தான் நீங்கள் இந்த கேள்வியை கேட்கவேண்டும். 

இன்னும் எத்தனை வருடத்துக்கு இந்த கதையை காவி திரிவதாய்  உத்தேசம் ?

நீங்கள்  இந்த கதையை கதைத்து கொண்டு இருக்கும் நேரம் சொறிலங்கா உலக அரங்கில் படுமோசமான நிலையில் நிக்கும் அப்போதும் இப்படித்தான் உங்கள் வாய்ஸ் வருமா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஶ்ரீலங்காவின் ஆட்சிபீடத்தில் மிக மோசமான இனவாதிகளான மகிந்த சகோதரர்கள்  வருவதே தமிழருக்கு நன்மை பயக்கும் என்று தீர்மானித்து மகிந்த சகோதர்களை ஆட்சிக்கு கொண்டுவர உதவியவர்கள்  யார்?  

நினைப்பவை எல்லாம் நடப்பதுமில்லை,

நடந்தவை எல்லாம் நினைத்தவையல்ல,

இதுவரை நடந்தவை தீர்வுமில்லை,

நாளை வருவது தொடர்ச்சியுமல்ல,

ஒவ்வொன்றும் வேறு வேறு,

உண்மை எதுவென்று தேடு,

மாற்றம் ஒன்றே மாறாதது. 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த யுத்தத்தை ஆரம்பித்து இனக்கொலையினை நடத்தினான் என்பதற்காக ரணில் நல்லவராகிவிடுகிறாரா? 

அவரது கட்சியே தமிழருக்கெதிரான அரச அதிகாரத்துடனான ராணுவ அடக்குமுறையினை ஆரம்பித்தது. மகிந்த ஆட்சிக்கு வருமுதலே ஐக்கிய தேசியக் கட்சி அரசுகள் ஆட்சியில் இருந்திருக்கின்றன. ஜே ஆர், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜேதுங்க என்று பெளத்த சிங்கள இனவாத தலைவர்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்துதான் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கீழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.

ரணில் பேச்சுவார்த்தைக்கு வந்தது தமிழருக்கு உரிமைகளைத் தரவேண்டும் என்பதற்காகவல்ல. மாறாக யுத்தம் தேக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் பிந்தங்கிக்கொண்டிருந்தபோதே வேறு வழியில்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தார். வந்தாலும்கூட, சமாதானத்தில் அவருக்கு உண்மையான அக்கறையிருக்கவில்லையென்பது தெளிவு. புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்து, சர்வதேச வலைப்பின்னலை புலிகளைச் சுற்றிப் பின்னி, சர்வதேசத்தில் புலிகளுக்கெதிரான தடைகளை ஏற்படுத்தி, மேற்குலகுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்து புலிகளை ஈற்றில் முற்றாகப் பலவீனமாக்கி அகற்றிவிடுவதே அவரது திட்டமாக இருந்தது.

ஆகவே, புலிகள்மீது இறுதியான தாக்குதலை நடத்தி அழிக்கும் வேலையினைத்தவிர அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும், புறநிலைகளும் ரணிலினால் மிக நேர்த்தியாகவே ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆகவே மகிந்த செய்ததெல்லாம் ரணில் போட்ட கோட்டில் ரோட்டைப் போட்டதுதான்.  சிலவேளை மகிந்த ஆட்சிக்கு வரவில்லையென்றாலும்கூட, ரணிலே 2009 இல் மகிந்த செய்ததை 2010 இலோ அல்லது 2011 இலோ செய்துதான் இருப்பார். இதை யாராலும் மறுக்கமுடியுமா? அப்படியென்ன ரணில் யேசுநாதரின் மறு அவதாரமா? 

சரி, அதை விடுவோம். 2015 இல் 100 நாள் திட்டதோடு வந்த ரணில் தமிழர்களுக்கு செய்த உறுப்படியான நல்ல செயல் ஒன்றைச் சொல்லுங்கள். உடனேயே ரோட்டெல்லாம் திறந்துவிட்டார், ராணுவத்தை அகற்றினார் என்று சொல்லவேண்டாம். அரசியல்க் கைதிகள் விடுதலை , மனிதவுரிமைக் கவுன்சிலில்  தீர்மானங்களுக்கு உட்பட்டு செயல்ப்படுதல், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் என்று தமிழரின் உண்மையான பிரச்சினைகள் எவற்றிலாவது ரணில் என்ன தீர்வினை இதுவரைப் பெற்றுந்தந்தார்? 

ரணில் பதவியில் தொடர்ந்து இருப்பதென்பது மேற்குலகின், இந்தியாவின் நலன்களுக்கு முக்கியமானது. அதனால், ரணில் இருக்கும்வரை தமிழர் பிரச்சினைபற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.

இன்று சிங்களப் பேரினவாதிகளான கோத்தாவோ மகிந்தவோ ரணில்போன்று கனவான் வேஷம் போடத்தெரியாமல், தமது இனவாத மிருகத்தினை வெளிப்படையாக அவிட்டு விடுகிறார்கள். இன்றிருக்கும் இனவாதிகளை மேற்குலகிற்கோ இந்தியாவுக்கோ பிடிக்கவில்லை. அதனால் அதனை எப்படியாவது அகற்றிவிட எத்தனிக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் ஆயுதம்தான் தமிழர் மீதான போர்க்குற்ற விசாரணை. எமக்கு அது நண்மை பயக்குதோ இல்லையோ, அது அவர்களுக்கு மிக முக்கியமானது. 

ரணில் தொடர்ந்தும் இருந்திருந்தால், மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கையும் இருந்திருக்கும், மேலும் மேலும் கால அவகாசம் கேட்டிருக்கும், மேற்குலகும் அவர்களின் பேச்சிற்குத் தலையாட்டியிருக்கும், தமிழருக்கும் எதுவுமே எவரும் கொடுத்திருக்கப்போவதில்லை. 

இதைப் புரிந்துகொள்வதற்கு அதிமேதாவித்தனமோ புலியெதிர்ப்போ தேவையில்லை. சாதாரண புரிதல் இருந்தாலே போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

ரணில் தொடர்ந்தும் இருந்திருந்தால், மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கையும் இருந்திருக்கும், மேலும் மேலும் கால அவகாசம் கேட்டிருக்கும், மேற்குலகும் அவர்களின் பேச்சிற்குத் தலையாட்டியிருக்கும், தமிழருக்கும் எதுவுமே எவரும் கொடுத்திருக்கப்போவதில்லை. 

அவர்கள் கொடுக்கும் நஞ்சு வெளியே தெரியாமல் மெதுவாக கொல்லும். இவர்கள் உடனடியாக அறுக்கிறார்கள். ரணில் வந்திருந்தால் ராஜபக்க்ஷ கொம்பனி காப்பாற்றப்பட்டிருக்கும் ஐ. நாவில். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நல்ல கருத்து! 

ரணில் சதியெல்லாம் செய்தார் என்பது உண்மை! ஆனால், முள்ளிவாய்க்காலில் இரத்தம் சிந்தாமலே எல்லாம் முடிந்திருக்கும்.

ஒரே இறுதி முடிவு தான் மகிந்தவால் இனப்படுகொலையோடு முடிந்தது, ரணில் ஆட்சியில் அது நடந்திருக்காது!

இதைப் புரிந்து கொள்ளவும் மேதாவித்தனமோ, புலிகள் மீதான அபரிமித பக்தியோ அவசியமில்லை என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ரணில் சதியெல்லாம் செய்தார் என்பது உண்மை! ஆனால், முள்ளிவாய்க்காலில் இரத்தம் சிந்தாமலே எல்லாம் முடிந்திருக்கும்.

ஒரே இறுதி முடிவு தான் மகிந்தவால் இனப்படுகொலையோடு முடிந்தது, ரணில் ஆட்சியில் அது நடந்திருக்காது!

அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? 

ரணிலோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ தமிழர்களின் காவலர்கள் என்றும், இதுவரையில் ஒரு தமிழனையும் கொல்லவில்லையென்றும், இனிமேலும் கொல்லப்போவதில்லையென்றும் உங்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார்களா? விட்டால் நீங்களே ரணிலுக்கும் அவரது கட்சிக்கும் நற்சான்றுப்பத்திரம் அளிப்பீர்கள் போல இருக்கு.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிங்கள பெளத்தன், சுதந்திரக் கட்சியில் இருக்கும் சிங்கள பெளத்தனிடமிருந்து எவ்வாறு வேறுபட்டவன் என்று நினைக்கிறீர்கள்?

உங்களைமாதிரியே சந்திரிக்கா காலத்திலும் அவர் கொல்லமாட்டார், சமாதானத்தின் தேவதை என்று நம்பியிருந்தோம். அவரோ சமாதானத்திற்கான யுத்தம் நடத்தியே ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார். புதுக்குடியிருப்பு பாடசாலை, கிருஷாந்தி குமாரசுவாமி உட்பட.

தயவுசெய்து சிங்களவர்களுக்கு நற்சான்றுப் பத்திரம் கொடுக்க முயலாதீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நல்ல கருத்து! 

ரணில் சதியெல்லாம் செய்தார் என்பது உண்மை! ஆனால், முள்ளிவாய்க்காலில் இரத்தம் சிந்தாமலே எல்லாம் முடிந்திருக்கும்.

ஒரே இறுதி முடிவு தான் மகிந்தவால் இனப்படுகொலையோடு முடிந்தது, ரணில் ஆட்சியில் அது நடந்திருக்காது!

இதைப் புரிந்து கொள்ளவும் மேதாவித்தனமோ, புலிகள் மீதான அபரிமித பக்தியோ அவசியமில்லை என நினைக்கிறேன்!

அண்ணை இதிலிருக்கும் முரண்நகை என்னவென்றால் 
சிலர் நானுற்பட ரணில் இல்லை எந்த அணில் இருந்திருந்தாலும் யுத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்டிருக்கும் 
என்பதை 2008 இல் மஹிந்தவிற்கு பயந்து(!?) வடக்கிலிருந்து பின்னங்கால் பிடரியலடிப்பட ஐ.நா ஓடியபோதே புரிந்து கொண்டோம், உண்மையில் மஹிந்தவிற்கு பயந்துதான் ஐ.நா ஓடியிருந்தால் 
அதே ஐ.நாவை வைத்து மஹிந்தவை பத்தாண்டுகளாக விரட்டோ விரட்டு என்ற விரட்ட வெளிக்கிட்டவர்கள் 
என்ன தைரியத்தில் உந்த காரியத்தில் இறங்கினர் என்பதும் அதனை இன்றும் தங்களது Bread and butter product ஆக தூக்கிக்கொண்டு அலைகின்றனர் எனபதும் பில்லியன் டொலர் கேள்வி,

அப்படியில்லை proxy தேசிக்காய்ஸ் மஹிந்தவை ஐ.நாவை வைத்து தாராளமாகவே விரட்டியுள்ளனர் என்ற முடிவுக்கு வந்தால், ஐ.நா மஹிந்தவிற்கு பயந்து வடக்கை விட்டு ஓடவில்லை வேறு எதுவோ ஒன்று நம்பியார் வேலை பார்த்திருக்கிறது, அதற்க்கு இலங்கையில் அணில் இருந்தாலும் சரி ரணில் இருந்தாலும் சரி output சம அளவில் சம சேதாரத்துடன் தான் வந்திருக்கும் என்ன  மஹிந்த இருந்ததால் output கொஞ்சம் விரைவாக வந்திருக்கு    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கே குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுகிறார்கள். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்காமல்,அதை மற்றவன் தலையில் கட்டப்பக்கின்றார்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்காமல் நாம் எமது போரட் டத்தை  அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாது. ஆனால், தற்போதைய தாயக அரசியல் செயற்ப்பாடுகள் நம்பிக்கை  அளிப்பவையாக உள்ளது.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, zuma said:

சிலர் இங்கே குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுகிறார்கள். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்காமல்,அதை மற்றவன் தலையில் கட்டப்பக்கின்றார்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்காமல் நாம் எமது போரட் டத்தை  அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாது. ஆனால், தற்போதைய தாயக அரசியல் செயற்ப்பாடுகள் நம்பிக்கை  அளிப்பவையாக உள்ளது.

அவரவர் தங்களுக்கு பிடித்த இடங்களில் குதிரை ஓட்டுகிறார்கள் 
அதிலே  உங்களுக்கு என்ன வில்லங்கம்?

சட்டியிலதான் ஒடடனும் பட் டியிலதான் ஓட்டணும் என்று யாருக்காவது சம்பளம் கொடுக்கிறீர்களா?

8 hours ago, பெருமாள் said:

இன்னும் எத்தனை வருடத்துக்கு இந்த கதையை காவி திரிவதாய்  உத்தேசம் ?

நீங்கள்  இந்த கதையை கதைத்து கொண்டு இருக்கும் நேரம் சொறிலங்கா உலக அரங்கில் படுமோசமான நிலையில் நிக்கும் அப்போதும் இப்படித்தான் உங்கள் வாய்ஸ் வருமா ?

 மக்களின்/போராளிகளின் அர்பணிப்புக்களுக்கு பின்னால் தமது விசுவாசிகளின் தவறுகளை மறைக்கும் வேலையை சிலர் செய்யும் போது அதற்கு பக்கத்தில் எமது மனச்சாட்சிக்கு பட்ட உண்மைகளையும் எழுதுகிறோம். வாசிக்கும் வாசகர்கள் இரண்டையும் தானே வாசிக்கப் போகிறார்கள். அதற்காக நேங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள். வாசிக்கும் வாசகர்கள் எமது கருத்துக்களுக்கு மேலாக உண்மையை ஆராய்ந்து சுயமாகவே தீர்மானிப்பார்கள். ஆகவே கவலை வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நாங்கள் எழுதும் தமிழ் உங்களுக்கு புரியவில்லையா ?

தவறுகள் பிழைகள் அவை எல்லாம் கடந்த 11 வருடத்தில் பிரித்து மேய்ந்து முடிந்தாயிற்று பலமுறை . மக்களுக்காக என்று சப்பி ஆட்டம் ஆடினாலும் அவைகளை தெரிந்து கொள்வதால் ஊரில் ஒரு நேர சோத்துக்கு  அல்லல் படும் குடும்பங்களுக்கும் இரவுகளில் வானத்தை பார்க்கும் கூரைகளில் வசிப்பவர்களுக்கும் என்ன தீர்வு ?

அவர்களுக்கு இதுவரை அந்த மக்களுக்கு என்ன செய்வது என்று உங்களிடமிருந்து எதுவும் இல்லை . எங்களுக்கு தெரியும் ஏன் புலிகளின் விமரிசனம் என்று சகோதர படுகொலைகள் செய்தார்கள் என்று முன் இதே யாழில் மல்லுக்கட்டும் பலரின் முகநூலில் இந்த கொரனோ  கால கட்டத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள் ஒருத்தர் இப்படி எழுதுகிறார் "விடுதலை என்ற பெருங்கனவுடன் இந்தியாவிற்கு இயக்கத்திற்கு சென்றதும் பின்னர் அவர்களுக்கே பயந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடி ஒழிந்து வந்ததும் இனி நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு என்னை தள்ளிவிட்டிருந்தது."இன்னும் தூங்காத இரவுகளில் ஒப்புதல் வாக்குமூலம் தொடரும் என்று நினைக்கிறேன் .ஆனாலும் ஒரு சிறந்த எதிர்க்கருத்தாளர் பிடிவாதம் அவரின் பிறப்பு கவச குண்டலம் போல் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? 

ரணிலோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ தமிழர்களின் காவலர்கள் என்றும், இதுவரையில் ஒரு தமிழனையும் கொல்லவில்லையென்றும், இனிமேலும் கொல்லப்போவதில்லையென்றும் உங்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார்களா? விட்டால் நீங்களே ரணிலுக்கும் அவரது கட்சிக்கும் நற்சான்றுப்பத்திரம் அளிப்பீர்கள் போல இருக்கு.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிங்கள பெளத்தன், சுதந்திரக் கட்சியில் இருக்கும் சிங்கள பெளத்தனிடமிருந்து எவ்வாறு வேறுபட்டவன் என்று நினைக்கிறீர்கள்?

உங்களைமாதிரியே சந்திரிக்கா காலத்திலும் அவர் கொல்லமாட்டார், சமாதானத்தின் தேவதை என்று நம்பியிருந்தோம். அவரோ சமாதானத்திற்கான யுத்தம் நடத்தியே ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார். புதுக்குடியிருப்பு பாடசாலை, கிருஷாந்தி குமாரசுவாமி உட்பட.

தயவுசெய்து சிங்களவர்களுக்கு நற்சான்றுப் பத்திரம் கொடுக்க முயலாதீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

இதை நம்புவதற்குரிய தரவுகள் பொது வெளியிலேயே இருக்கின்றன! ஆனால் உங்கள் "இருவரும் கெட்டவன்களே, எவன் வந்தால் எனக்கென்ன?" என்ற cynicism அந்தத் தரவுகளைப் பார்க்க அனுமதிக்காது! அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ரணிலின் பின்னால் நின்றதே மகிந்த செய்தது போன்ற இரத்தக்களரியை ரணில் செய்யத் துணியார் என்ற தகவல்களின் அடிப்படையிலான நம்பிக்கை காரணமாகத் தான்!

ஆனால், நாம் "ஒரு தமிழனைக் கூட கொல்லாத, வதைக்காத சிங்களத் தலைவர் வந்தால் தான் வரவேற்போம், மிச்ச எல்லாரையும் தூக்கி அடிப்போம்!" என்று நின்றால் சிறிதுங்க ஜெயசூரியவைத் தவிர யாரையும் நாம் ஆதரிக்க/பதவிக்கு வர அனுமதிக்க முடியாது! 

ஆனால், சிறிதுங்க ஜெயசூரிய இலங்கையென்ற சிங்கள நாட்டில் ஒரு நகரசபை உறுப்பினராகக் கூட வர இயலாது எனும் போது எப்படி அவர் எமக்கு ஜனாதிபதியாகக் கிடைப்பார்? எனவே தான் the best among the  worst options என்ற நாம் எல்லோரும் தனிவாழ்விலும், தொழில் வாழ்விலும் அன்றாடம் பின்பற்றும் வழியில் ரணிலை நான் நல்ல தெரிவாகக் கருதுகிறேன்!

ஆனால், தமிழ் தரப்பிற்கு மக்களுக்கான தீர்வையும் நிம்மதியையும் விட ரோஷம், மானம், போலிப் பெருமை பழிவாங்கும் உணர்வு என்பன மேலோங்கியிருந்ததால் ரணிலுக்கு ஆப்பு வைத்தனர், அவர்களே சொந்த செலவில் தமக்குச் சூனியமும் வைத்து அப்பாவித் தமிழ் மக்களையும் பலி கொடுத்தனர்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பபாணத்தில் அங்கஜன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்

May be an image of motorcycle and road

May be an image of one or more people, people standing and road

நல்ல காலம் மட்டக்களப்பு பக்கம் நடக்கல நடந்திருந்தால் அடுத்த கட்டுரை வந்திருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.