Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டா வர சொல்லுங்க

Featured Replies

குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது.

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது

 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது.

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது

 

 

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த அண்ணனை  இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது ... 🙏🙏🙏😢😢😢😢🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் தேசியத்தலைவரை, பாட்டுடன் பொருத்திப்பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை! நல்ல பாடல்! சிறப்பு!
 
  • கருத்துக்கள உறவுகள்

இழந்தவை, படிக்கற்களாக இருந்தால்...இழப்புக்களின் பரிமாணம் பெரிதாகத் தெரிய மாட்டாது!

ஆனால் அவையே சறுக்கல் கல்களாக மாறும்போது....அதிகம் வலிக்கின்றது...!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் கோயிலப்பா கோயிலெல்லாம் சாமியப்பா 

ஒத்த பூடம் கூட இல்லையப்பா எங்க குடும்பத்தில ஒருத்தனப்பா......!

 

நெகிழ்சியான வரிகள்.நன்றி நிழலி .......!

  • கருத்துக்கள உறவுகள்

திமுகாவின் தேர்தல் பரப்புரையில் இந்த பாட்டை ஓடவிடுகிறார்கள் கருணாநிதியை நினைத்து .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலின் முதல் வரியை கேட்டதுமே நெஞ்சை ஒருகணம் உருக்கி விட்டது. மீதமிருக்கும் வரிகளை கேட்க கேட்க கண்கள் குளமாகி விட்டது.
 இது பற்றிய இணைப்பை நேற்று திண்ணையில் இணைத்திருந்தேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பாடலின் முதல் வரியை கேட்டதுமே நெஞ்சை ஒருகணம் உருக்கி விட்டது. மீதமிருக்கும் வரிகளை கேட்க கேட்க கண்கள் குளமாகி விட்டது.
 இது பற்றிய இணைப்பை நேற்று திண்ணையில் இணைத்திருந்தேன். 

 

ஒருகல்லில்  பல மாங்காய் அடிக்கினம் கருன்சட்டை கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட பகிடி மூலம் முருகனின் பாடல் கொப்பி .

திமுகாவால் பலமுறை ஏமாந்தோம் வரும் தேர்தலில் அவர்கள் வெல்லும் நிலைமை இருக்கும் என்றாலும் நான் திமுக எதிர்ப்பு ஆள் தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, பெருமாள் said:

திமுகாவின் தேர்தல் பரப்புரையில் இந்த பாட்டை ஓடவிடுகிறார்கள் கருணாநிதியை நினைத்து .

1 minute ago, பெருமாள் said:

இதை விட பகிடி மூலம் முருகனின் பாடல் கொப்பி .

சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எதையுமே நமதாக்கி காட்டி விட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை நினைத்து எழுதப்பட்ட வரிகள், அந்த அம்மாவின் குரல் மனதை சுட்டி இழுக்கின்றது, பறை இசை அருமை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உசிரை உலுக்கும் இசையும் பாடல்வரிகளும் பறைஇசையும் பாடும் அம்மாவின் குரல் பாடலுக்கு மேலும் உயிர் கொடுக்கிறது  பகிர்வுக்கு நன்றிகள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஒவ்வொரு காட்சியும் முகத்தில் அறைவது போன்று நகரும் திரைப்படமான பரியேறும் பெருமாள் படத்தை எழுதிய இயக்கிய மாரி செல்வராஜ் தான் இப்பாடலின் வரிகளையும் எழுதியிருக்கின்றார். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாக்களில் சாதியம் பற்றி வந்த படங்களில் முதன்மையானதும் சமரசம் இல்லாததுமான அற்புதமான திரைப்படம். இப்பாடலின் வரிகளையும் நன்றாக அதே நேரம் நல்ல தமிழில் எளிமையான வடிவில் எழுதியிருக்கின்றார்.

உடையார் குறிப்பிட்டது போன்று இப் பாடலில் வரும் பறை இசையும் இப்பாடல் மனசை உலுக்கியெடுக்க வைக்கும் காரணங்களில் ஒன்று.

இப்பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கும் போது,இவ் இசைக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத இசையை பின்னனியாக கொண்ட  பாலே (ballet) நடனம் பயிலும் என் மகளும் அவ் நடனத்துக்குரிய விதத்தில் இப்பாடலுக்கும் தன்னாலேயே நடனம் ஆட முயல்வதையும் அவதானித்தேன்.

 

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக் கிளை!
ஒத்த கிளி நின்னாக் கூட
கத்தும் பாரு அவன் பேர!

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!

ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடங்கூட இல்லையப்பா
எங்கக் குடும்பத்துல ஒருத்தனப்பா!

கவசத்தையும் கண்டதில்ல!
எந்தக் குண்டலமும் கூட இல்ல!
வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!
 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 15:13, நிழலி said:

வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

இப்ப மாத்திரம் மனித உரிமை பற்றி கதைக்க நிறைய பேரு அடிபடுகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 07:13, நிழலி said:

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

 

முக்கிய வரி ஒன்று தவறி விட்டது.

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சூரியனும் பெக்கவில்லை
சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

Edited by பிரபா
Spelling mistake.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

 

கண்டா வரச் சொல்லுங்க!
அவனை கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பார்வதி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

 

எனக்கு இப்பிடித்தான் விளங்கினது.

  • கருத்துக்கள உறவுகள்

"பார்த்தா" என்ற சொல்லே தமிழகத்து பேச்சு வழக்கு.

ஈழத்தில் தான், "கண்டா" பேச்சு வழக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.

இதேபோல தலைவரை எண்ணவைக்கும் இன்னொரு பாடல். 

 

  • கருத்துக்கள உறவுகள்
தற்போது - 
10,052,579 views
Premiered Feb 18, 2021
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 03:40, உடையார் said:
தற்போது - 
10,052,579 views
Premiered Feb 18, 2021
 
 
 

பெரும் சாதனை புரிந்த "கண்டா வரச்சொல்லுங்க' பாடல்.! இத்தனை மில்லியன் பார்வையாளர்களா.!?

இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் இருவரும் இந்த, :கண்டா வரச்சொல்லுங்க" பாடலை பாடியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய சூழலில், இந்த பாடல் பல்வேறு தரப்பினரும் விரும்பும் விதமாக இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் தங்களது தலைவர்கள், பிடித்த கிரிக்கெட் வீரர்கள், பிடித்த நடிகர்களுக்கு பொருத்தி பார்த்து ஆனந்தம் அடைகின்றனர். அந்த வகையில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மகேந்திர சிங் தோனி, நடிகர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எடிட் செய்து வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். 

கிரியேட்டிவிட்டியுடனும், வித்தியாசமான முயற்சியினாலும் இது ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.seithipunal.com/cinema/kanda-vara-sollunga-songs-upon-6m-views-on-youtube

11,013,958 views
  • தொடங்கியவர்
On 2/22/2021 at 21:28, Nathamuni said:

"பார்த்தா" என்ற சொல்லே தமிழகத்து பேச்சு வழக்கு.

ஈழத்தில் தான், "கண்டா" பேச்சு வழக்கு

'கண்டா வரச் சொல்லுங்கோ' என்ற வரிகள் தமிழக  கோவில்களில் பாடப்படும் தமிழ் பக்திப் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மறைமுகமாக எதோ சொல்ல வருகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

+

 

On 28/2/2021 at 21:01, நிழலி said:

'கண்டா வரச் சொல்லுங்கோ' என்ற வரிகள் தமிழக  கோவில்களில் பாடப்படும் தமிழ் பக்திப் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். 

 

கண்டா வரச்சொல்லுங்க மணிகண்டன என்ற பாடலைப் பாடியுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மிகச்சிறந்த நாட்டுப்புறப் பாடகர். நாட்டார் தெய்வங்கள் மீது பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.