Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனின் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார். தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக்கொள்ளுங்கள்.

எனது கணவர் என்ன செய்வார் தெரியுமா என அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டலை கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே விடுத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/269566?ref=imp-news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 இருந்தாலும் தான் ஓர் ஆசிரியராக இருந்தும் இப்படி பேசுவதையே மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தற்போது இடமாற்றம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது  இவருக்கு 

ரகுநாதன் ஒரு திரியில் எழுதியிருந்தார் மிக்கல் கல்லூரியில் தன்னை ரக்கிங் பண்ணினதாகவும் , பாணியென்று சொன்னதாகவும் மிக்கல் கல்லூரி இதுதான் அங்கே உயர்தரம் படிப்பவர்கள் படிக்கும் பொடியனுகள் காட்டும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல  அது இங்குள்ளவர்களுக்கும் நடந்த சம்பவமே இது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 இருந்தாலும் தான் ஓர் ஆசிரியராக இருந்தும் இப்படி பேசுவதையே மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தற்போது இடமாற்றம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது  இவருக்கு 

ரகுநாதன் ஒரு திரியில் எழுதியிருந்தார் மிக்கல் கல்லூரியில் தன்னை ரக்கிங் பண்ணினதாகவும் , பாணியென்று சொன்னதாகவும் மிக்கல் கல்லூரி இதுதான் அங்கே உயர்தரம் படிப்பவர்கள் படிக்கும் பொடியனுகள் காட்டும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல  அது இங்குள்ளவர்களுக்கும் நடந்த சம்பவமே இது 

ஆனால் சும்முக்கு இணையதளத்தில் வால்பிடிக்கும் கூட்டம் மிரட்டல்விட்டவருக்கு ஆதரவாய் குழையடிக்கினம் .விடயம் பெரிது போல் உள்ளது. .

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 

ஆசிரியர் என்பவர்கள் பிள்ளைகளை நல்வழி படுத்துபவர்களாகத்தானே இருப்பார்கள்..இந்த ரீச்சர் என்ன இப்படி எல்லாம் பேசிறா..ஆசிரியத் தொழிலிற்கும்இப்படியானவர்களுக்கும் வெகு தூரம் என்று நினைக்கிறேன்..அறப்படிச்சதுகள்்😡

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 

உரையாடலை கேட்டால் இருதரப்பினரும் பாணிகள் மாதிரி இருக்குது. ஆசிரியையை  உடனடியாக பனி நீக்கம் செய்யவேண்டும், அவர் ஒரு ஆசிரியை மாதிரி இல்லாமல் பேட்டை ரவுடி மாதிரி நடந்துள்ளார்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் தொழிலுக்கே இழுக்கு. மாதா, பிதா அதற்கு அப்புறம் குரு, தெய்வத்தை விட பொறுமையானவராக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

உரையாடலை கேட்டால் இருதரப்பினரும் பாணிகள் மாதிரி இருக்குது. ஆசிரியையை  உடனடியாக பனி நீக்கம் செய்யவேண்டும், அவர் ஒரு ஆசிரியை மாதிரி இல்லாமல் பேட்டை ரவுடி மாதிரி நடந்துள்ளார்.

பாணிகள் மாதிரி இல்லை. இரு பகுதியினரும் பாணிகளே தான்.அவர்கள் மட்டக்களப்பு பேச்சு வழக்கில் பேசவில்லை.மட்டக்களப்பு தொனிகள் கூட இல்லை. எந்த பினாட்டு பாணியானாலும் அந்த ஆசிரியை கல்விச் சமுதாயத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டிய ஒருவர்.

 இனியும் சேட்டை விட்டால் உயிர் இல்லை என ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது..இது என்ன நாடு? எப்படியான நாடு?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பல ஆசான்கள் தங்கள் பொறுப்பை மறந்து ரவுடிகள் போல் மாணவரையும், அவர்தம் பெற்றோரையும் அடிமைகள் போலும் நடத்துகிறார்கள். தங்கள் சொந்த பழிவாங்கல்களை பிள்ளைகளில் காட்டுவது, ஒதுக்கி வைப்பது, நிஞாயம் கேட்டால் பழிவாங்குவதால் பெற்றோரும் கண்டுங்காணாமல் விடுவது. இதனால் மாணவர் மனமொடிந்து, கல்வியில் கவனம் இன்றி அதிலிருந்து விலகுவதற்காக வீட்டில் பொய் கூறி, வேறிடங்களுக்கு சென்று தப்பான வேலைகளில் ஈடுபட்டு தம் எதிர்காலத்தை வீணடிக்கிறார்கள். பொறுப்பற்ற, பொருத்தமான கல்வித்தகமையற்ற, அரசியல் செல்வாக்கு, பணம் என்பவற்றின் மூலம் இந்தப் பணிக்குள் நுழைந்து சேவை என்பதைவிட மாணவர்களை  மிரட்டல், ஒதுக்கலே நடைபெறுகிறது. இது ஒன்று வெளியில் தொழில் நுட்ப வசதியுள்ளவர்களால் வெளிவந்துள்ளது. ஏழை குடும்பங்கள் சகித்துக்கொண்டும், கல்வியில் இருந்து விலகிக்கொண்டும், சொல்ல முடியாமல் தவிப்பாரும் உண்டு. புனிதமான தொழில் இன்று சுயநலமாகி நம் சமுதாயத்தை கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு சிலரால் எல்லோருக்கும் வீணான பெயர். இவர்கள் இடம் மாற்றலால் தீராது, பணியில் இருந்து நீக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி. 

மிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ. 

இவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, ரஞ்சித் said:

மிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி. 

மிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ. 

இவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும். 

பேச்சு வழக்கு பாணிகளை மாற்றினாலும் சரளமாக வருவது கஸ்டம். அல்லது இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம். நான் இதை வேறு கோணத்தில் நாடகமாகத்தான் நினைத்திருந்தேன்.எனிலும் உண்மை பொய் தெரியாமல் நாங்களும் அதிகம் கதைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியைக்கு தண்டனை கொடுக்க தயங்கும் பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் ! உள் விவகாரம் அம்பலம்

spacer.png

மட்டக்களப்பு மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்’ என்று அந்த ஆசிரியை பிரசாந்தி மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.

மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’

 

இதன் ஒரு அங்கமாக பிரசாந்தி ஆசிரியரின் மிரட்டல் சம்மந்தமான பொலிஸ் முறைப்பாடுகளை எந்த காவல் நிலையங்களிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று கருணா மட்டக்களப்பு பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்க கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரைக்கும் காவல்துறை கைதுசெய்யவில்லை?” என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மறுபடியும் மாற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது.

கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது.

கல்விசார் அதிகாரிகள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு ஏதிராக எடுத்த உத்தியபூர்வமன நடவடிக்கையை
பெற்றோர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காதது ஏன்?
இது பாடசாலை உள்பிரச்சனை அல்ல ! இது கடத்தி காணாமல் போகச் செய்யும் முயற்சி .

தற்போது மட்டக்களப்பபு மாவட்ட மாணவர்கள் பெற்றோர்கள் என்று பொது பரப்பில் விமர்சிக்கப்படும் விடையம் என்று கல்வி அதிகாரிகளுக்கு புரியவில்லையா?

அல்லது சம்மந்தப்பட்ட பாடசாலையில் இதுவரைக்கும் மாணவர்களால் ஆர்ப்பாட்டமே நடத்தப்படவில்லையா! பல நாட்கள் பாடசாலை மூடப்படவில்லையா? பழைய ஆர்ப்பட்டங்கள் எதற்காக காரணங்களுக்கு நடைபெற்றது்.இது அதைவிட சிறு பிரச்சனையா? அந்த காரணங்களையும் ஞாபகப்படுத்த வேண்டுமா ? என பெற்றோர்கள் கேட்கின்றார்கள்.

05FB4A4F-ECF7-43FF-82A4-292296D888A8.jpe

 

 

https://www.meenagam.com/கொலைமிரட்டல்-விடுத்த-ஆசி/

 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு

மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு
அண்மையில் மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டுமென பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் ஆசிரியையின் குறித்த நடவடிக்கையை கண்டித்தும், அவரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த ஆசிரியரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அவரது கணவர் தமது வருத்ததினை தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் குறித்த ஆசிரியை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் பணியிருந்த நிலையில் தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

சம்மந்தப்பட்ட பாடசாலை தேசிய பாடசாலை என்பதுடன், தேசியபாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ்தான் செயற்பட்டது .ஆனால் இன்று மாகாண கல்வி திணைக்களம் குறித்த ஆசிரியரை மாற்றம் செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு புத்தியீவிகள் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ள அதேவேளை , இதுவே ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதோடு ஓர் மாணவரை கடத்துவேன் என எச்சரிப்பது எவ்வளவு ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் பின்புலத்தில் அரசாங்கத்தின் மூன்று பிரபலங்கள் ஆசிரியைக்கு ஆதரவாக நின்று செயல்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்

மேலும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் ஆசிரியையின் பணிமாற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு புத்திஜீவிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை, எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு…’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” – முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும்.

 

இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்.

ஆயர் இல்லத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள புனித மிக்கல் கல்லுாரியில் இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஆயரின் பதில் என்ன, தவக்காலம் என்பதால் மன்னித்து விட்டாரா.

வேறு எந்த பாடசாலையாவது இந்தச் சம்பவம் இடம் பெற்றிருந்தால் இன்றைய நிலை என்ன, அதிகாம் படைத்தவன் செய்யும் குற்றத்தை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா

குறித்த ஆசிரியையின் கணவர் மக்களிற்கு வைத்தியம் பார்ப்பதை விட அரசியல் வாதிகளின் கால் பிடிப்பது தான் அதிக நேரம் என்பது அனைவருக்கும் தெரியும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

சட்டநவடிக்கை எடுப்பதை மூடி மறைக்கும் வலயக் கல்வி அலுவலகம்

ஒருதொலைபேசியில் ஒருமாணவருடனும் அந்த மாணவரின் தாயாருடனும் ஒரு ஆசிரியை என தன்னை அறிமுகம் செய்து ஒரு ஒட்டுக்குழு தலைவரின் மனைவி போன்று இரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1) மட்டக்களப்பில் இருக்க முடியாது.

2)அவரை இல்லாமல் செய்வேன்

அதைவிட தராதரம், நாயே..

என்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுசெய்துள்ளார்.

உண்மையில் இப்படிகதைத்தவர் ஒரு ஆசிரியையாக இருந்தால் அவரை உடனே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர் மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற அனுமதிக்கவேண்டும், வலயக்கல்வி அலுவலகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனைச் செய்ததா

சட்டநடவடிக்கை மூலம் தொலைபேசி நிறுவன பரிசோதனை நேரம் எந்த இலக்கத்தில் இருந்து யார் யாருக்கு கதைத்தது என்பதைல்லாம் வெளிச்சத்திற்கு வரும் உண்மையை அறியலாம், சட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் உள்ளே தள்ளலாம் அதை ஏன் செயற்படுத்த வில்லை அத்துடன் இந் நடைமுறை இன்று வரை பின்பற்ற வில்லை.

சம்மந்தப்பட்டவர் ஆசிரியையாக இருப்பின் வேலையை இழக்கநேரிடும்.

எனவே சட்டநடவடிக்கையை தீவிரப்படுத்துவதே சிறப்பு, காரணம் இப்படியான ரவுடிகளின் அட்டகாசம் அகற்றப்படும்.

 

மட்டக்களப்பின் அரசியல்வாகிகளும் தலைமறைவு காரணம் குறித்த வைதியரின் மிக நெருக்கமானவர்களே மாவட்டத்தின் ஐந்து அரசியல் வாதிகளும்.

மக்களே உங்களிற்கு யார் உதவுவர் கடவுளைத் தவிர வேறு யாரும் அல்ல….

எதிர்ப்பினைக்கண்டு மனமாற்றம் அடைந்த வைத்தியர்

 

மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணை
ஒரே நாளில் வைத்தியரின் இரு வேறு பதிவுகள்
705FE17F-7E44-4C36-8708-ED4A1F994332-sca4168125F-AE6C-463C-9167-F7657F18DE86.jpe

 

 

https://www.meenagam.com/மட்டக்களப்பை-அதிரவைத்த-ஆ/

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பான் பட்டை கிளப்பான் என்ற மொன்மொழிக்கேற்ப சரியாகதான் இருக்கின்றது. சரியான பஜாரி பெண்போல கதைக்கின்றார். ஏ ல் பாடசாலை வாழ்வில் இளைஞர்கள் அடிபடுவது வழமை. பிறகு 5, 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இருந்து பியர் அடிப்பர்கள். 
இந்த ஆசிரியை எந்த பாடசாலையின் முன்னாள் மாணவி? சிசிலியா / வின்சென்ட் / மெதொடிச்ட்?

இந்த ஆசிரியை  வேம்படி மகளிர் கல்லூரி மாணவி - யாழ் பல்கலை பட்டதாரி

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

ஆனால் சும்முக்கு இணையதளத்தில் வால்பிடிக்கும் கூட்டம் மிரட்டல்விட்டவருக்கு ஆதரவாய் குழையடிக்கினம் .விடயம் பெரிது போல் உள்ளது. .

ஞாயம் அநியாயம் பற்றி யோசிக்க மாட்டார்கள் ஆனால் இணையத்தில் மட்டும் உருட்டுவார்கள் அவங்களுக்கு இணையத்தை உருட்டணும் அவ்வளவுதான் பழக்க தோஷம் கண்டுக்காதீங்க‌

 

16 hours ago, ரஞ்சித் said:

மிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி. 

மிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ. 

இவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும். 

இருக்கலாம் அவர் யாழ்ப்பாணத்தவராக இருக்கலாம் ஆனால் ரவுணில் இருப்பவர்கள் இப்படி பேசலாம் சுகுணன் வைத்தியரின் மனைவி கொழும்பை சேர்ந்தவர் என்று சொன்னார்கள் சில வேளை அவர் யாழ்ப்பாணமாக கூட இருக்கலாம் .

தற்போது மட்டக்களப்பில் ரவுணில் பேச்சு மொழி மாறீ இருக்கிறது ஆனால் படுவாங்கரையில் மாறல்ல கிராமம் கிராமம்தன் 

8 hours ago, colomban said:

மட்டக்களப்பான் பட்டை கிளப்பான் என்ற மொன்மொழிக்கேற்ப சரியாகதான் இருக்கின்றது. சரியான பஜாரி பெண்போல கதைக்கின்றார். ஏ ல் பாடசாலை வாழ்வில் இளைஞர்கள் அடிபடுவது வழமை. பிறகு 5, 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இருந்து பியர் அடிப்பர்கள். 
இந்த ஆசிரியை எந்த பாடசாலையின் முன்னாள் மாணவி? சிசிலியா / வின்சென்ட் / மெதொடிச்ட்?

இன்னொரு பழமொழி உண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கொலும்ஸ்🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னொரு பழமொழி உண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கொலும்ஸ்🤣

அது..............😍

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பைவிட்டே அகற்ற போறாவாம்.

உங்கள் பிள்ளை உங்களுக்கு வேணுமோ வேண்டாமோவாம்..

வெள்ளைவான் கோஷ்டி ரேஞ்சில மிரட்டல் விடுக்கிறா.

அவ்வளவு அதிகாரம் வல்லமை பொருந்திய ஆசிரியை அவர்கள் இதே மிரட்டலை அங்குள்ள ஒரு முஸ்லீம் மாணவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் விடுக்க முடியுமா?

மிரட்டல் விடுத்துவிட்டு இவர்கள் மட்டக்களப்பில் நிம்மதியா இருக்க முடியுமா?

ஆனால் ஒன்று கடந்த காலங்களில் இதுபோன்று மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்களை ஊரில் செல்வாக்குள்ளவர்கள்  பலம் மிக்கவர்கள் மிரட்டியது யாழ்ப்பாணத்திலும் நடந்திருக்கிறது, மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கபட்டத்தில்லை.

என்ன ஒரே ஒரு வித்தியாசம் அந்த காலத்தில் கை தொலைபேசிகளோ அல்லது குரல் பதிவு தொழில்நுட்பங்களோ இருக்கவில்லை.

ஆனால் நீதி இன்றுள்ளதுபோல் அன்றும் செத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது

 எந்தப் பாடசாலையும் இவரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மாணவர்கள் போராட வேண்டும்.  நாளைக்கு எந்த மாணவனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். மிரட்டல் இல்லாமல் நடவடிக்கையே நேரிடலாம்.  சீ.... ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் இப்படி தரங்கெட்ட ஆசிரியர்? பாடசாலையின் தரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே பாடசாலையும் இதை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடலாம் எனும் சந்தேகம் எனக்குள் உண்டு.

வேலைவாய்ப்பு வழங்குவோர் இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு தான் வழங்குகிறார்களோ? வளரும்  சமுதாயத்தை இளமையில் இருந்தே  ஒரேயடியாக ரவுடிகளாக மாற்றுவது சுலபமான வழி இது. வளரும் சமுதாயத்தை பாழ் குழியில் தள்ளும்  கோடரிக்காம்புகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பின்புலத்துடன் நியமிக்கப்படுபவர்களுக்கு எதிராகச் செயற்படும் அளவிற்கு சாதாரண பாடசாலை நிர்வாகங்கள் சக்திமிக்கவை அல்ல.

வைத்தியர் சுகுணனின் முகப்புத்தகம் பார்த்தேன். மட்டக்களப்பில் மிகப்பெரும் அரசியல் பலமுள்ளவர் என்பதும் கருணா பிள்ளையான் என்கிற  பலம் மிக்க  ஆயுததாரிகளினது ஆதரவும் அரசின் ஆதரவாளர்களான வியாழேந்திரன் போன்றோரின் ஆதரவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுதக்குழுவினருடனான நெருக்கமும், அரச காவல்த்துறையினரின் பெருத்த செல்வாக்குமுள்ளவர் என்பது தெரிகிறது.

மாட்டக்களப்பு நகர வீதியொன்றில் இவர் முன்னால் வர காவல்த்துறை அதிகாரிகள் இவரின் இடப்புறமும் வலப்புறமும் பின்னால் பவனிவரும் காட்சிகள் இவரது முகப்புத்தகத்தில் உள்ளன. அதுபோன்றே பிள்ளையான் கருணாவுடனான இவரது நெருக்கத்திற்கும் சான்றுகள் இருக்கின்றன. இவர் மருத்துவர் என்கிற பெயரில் வலம்வரும் ஆயுததாரிகளின் பின்புலத்தில் இயங்கும் தாதா. அவரது மனைவி தொலைபேசியில் தெரிவித்தது வெறும் எச்சரிக்கையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவம், கற்பித்தல் இரண்டுமே புனிதமான பணிகள். உயிரை காப்பதும், வாழ்வை வளம்படுத்தி, சமுதாயத்தை உருவாக்கி உயர்த்தும் பணிகள். என்றொரு நாள் இதற்குள் சுயநலம் புகுந்ததோ அன்றே அந்த சமுதாயத்திற்கு சாவு மணி அடித்தாயிற்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியை முன்னாள் ஆயுதக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர்? கொதித்தெழும் மாணவர்கள்!!

Report us Gokulan 2 days ago

இன்று சமூகவலைத்தளங்களில் அதிக வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற ஒரு விடயம், மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு விடுத்த கடத்தல் மிரட்டல்தான்.

'மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்' என்று என்று அந்த ஆசிரியை மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பில் சில மாணவர்கள், பெறோர்களை அனுகிய எமது செய்தியாளருக்கு அவர்கள் வழங்கிய கருத்துக்கள் இவை:

(பாதுகாப்பு கருதி கருத்து தெரிவித்தவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன)

கருத்து -1:

“மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’

கருத்து -2:

“பாடசாலைக்குப் போகவே பயமாக இருக்கிறது.. சுகுணன் ரீச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை நாங்கள் பாடசாலைக்கு போகமாட்டோம்..”

கருத்து -3:

“ஒலிப்பதிவு வெளியான அன்றைய தினம் குறிப்பிட்ட ஆசிரியையின் கணவரான வைத்தியர் அந்த ஒலிப்பதிவை பகிர்பவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது முகப்புத்தகத்தின் ஊடாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் மறு தினம் அந்த கண்டனத்தை அகற்றிவிட்டு மனவருத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்கள் யாருமே மிரட்டலுக்குள்ளான மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அவரை காவல்துறை கைதுசெய்யவில்லை?”

கருத்து -4:

“அந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆசிரியையின் கணவர் ஒரு முன்னாள் பிரதி அமைச்சரின் நன்பர். அதனால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தைப் பெருப்பிக்கின்றார்கள்..”

கருத்து -5:

“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”

கருத்து -6:

“ இந்த விடயத்தை மூடி மறைக்க நிறைய காரியங்கள் நடக்கின்றன. பணம், பதவி, அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு என்று நிறைய காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மாணவனுக்கு நியாயம் வேண்டி மக்கள்தான் போராடவேண்டும்…”

கருத்து -7:

“இதை இப்படியோ விட்டால் நாளைக்கு பாடசாலையில் ஆசிரியர்களின் பேச்சு மொழி இப்படியேயாகிவிடும்..’ உன்னை இல்லாமல் செய்துவிடுவேன்.. உன்னை கடத்துவேன்.. நாயே.. மண்டையில போடுவேன்…(பீப்..) “

கருத்து -8:

“ அவர் ஒரு ஆசியராக நடந்துகொள்வதானால் பாடசாலையில் மாணவணைக் கண்டித்திருக்கவேண்டும். ஒரு தயாராக நடந்துகொள்வதானால், அதிபரிடம் முறையிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கவேண்டும். தகப்பன் இல்லாத ஒரு மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி எடுத்து கடத்துவேன்.. காணாமல் போகச் செய்வேன்.. மட்டக்களப்பை விட்டு வெளியேற்றுவேன் என்று மிரட்டுவது ஒரு 'பேட்டை தாதா' செய்கின்ற செயல். அந்த ஆசிரியைக்கு நிச்சயம் தண்டணை வழங்கப்பட்டேயாகவேண்டும்”

கருத்து -9:

“இத்தனைக்கும் மாணவனை மட்டக்களப்பை விட்டு விரட்டுவேன் என்று எச்சரித்த ஆசிரியை மட்டக்களப்பைச் சேர்ந்தவரே அல்ல.. அவர் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. அவருக்கும் அவர் கணவனுக்கு மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் செல்வாக்கு இவ்வாறு பேசும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றது..”

கருத்து -10:

“ ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை: “எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு...’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” - முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும். இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்”

கருத்து -11:

“ஒரு மாணவன் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கின்றான். மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வதற்கான அச்சுறுத்தல் ஆதாரம் வெளிப்பட்டு இருக்கின்றது. பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாகவே மாணவன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றார். பாடசாலை நிர்வாகம் ஏன் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை? உயிரச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை?”

https://www.tamilwin.com/srilanka/01/269490?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக இவரது கணவரையும் விசாரணை செய்ய வேண்டும், குறித்த மாணவனுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், ஒட்டுக்குழுக்களின் கடத்தல், காணாமல் போகச் செய்தல் விடயங்களை ஐ. நாவரை கொண்டு செல்ல வேண்டும். என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், குப்பையில் போட்டாலும் குண்டுமணி மங்காது. ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கருத்து -5:

“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”

ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.

பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.