Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

 

சீமானை விடுங்கள். அவர் மூன்றாம் நபர். ஆனால் உங்கள் பெயரை ஒத்த பலர் கூட இருந்தே குழிபறிப்பவர்களாயிற்றே. அவர்களுடன் ஒப்பிடுகையில் சீமான் எவ்வளவோ மேல்.

உங்களுக்கான எனது கேள்வி; 

பிறரின் மீது சாணியடிப்பதில் அப்படி என்ன பேரானந்தம்.. 🤥

 
வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு என்று  கதை சொல்லுகின்றிர்கள். சீமானப் பற்றி திரியில் அவரைப் பற்றி கதைக்காமல், தனி மனித தாக்குதல் செய்கின்றிர்கள். Don't bark wrong tree.

Edited by zuma

  • Replies 179
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

மறந்தாவது பரவாயில்லை, சீமான் அவர்கள் அதனை விற்று அல்லவா  பிழைக்கின்றார்.
தற்பொழுது தலைவர் படத்தை எடுத்து விட்டார், போக போக தெரியும் அவரின் சுயரூபம்.

 

 

 

பின்னை இதையும் ஒருக்கால் கேழுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஆக ஒருத்தருக்கும் இப்பவும் தாயகத்தில் வாழும் மக்களின் தேவை பற்றி ஒருவருக்கும் அக்றை இல்லை.

பொறுக்களன் சீமான் ஐயா வெல்லட்டும் நேரா வந்து இங்கதான் இறங்குவாரு  பாஸ்போட்ட பார்த்ததுமே சிங்கள ராணுவம் மிரண்டுட்டானாம் என்றால் பாருங்கோவன் ஒரு பிரமிப்பா இருந்துச்சுச்சு 

Vadivelu Comedy Gif Free Download - Tamil Gif Image Free Download

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

இதை வேறு யாருக்கும் போய்ச் சொல்லுங்கள்.

சீமானுக்காக நீங்கள் ஓடோடி வந்து சொன்னவற்றில் இருந்து அறிந்து கொண்ட உண்மைகள் தான்.

6 hours ago, nunavilan said:

பின்னை இதையும் ஒருக்கால் கேழுங்கோ

இது நல்ல வீடியோ 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

எண்ட ராணி எலிசபெத்து, எண்ட பிரதமர் போரிஸ்...

அது நியாயம் ஏற்று கொள்கிறேன். உங்களுக்கு வம்சாவழி தொடர்பை தவிர இலங்கையுடன் எந்தவித தொடர்பில்லை என்பது ஏற்கெனவே தெரிந்ததே. ஆனால் எதற்கு தமிழ்நாடு எதிர்காலத்தில் அங்கே குடியேற போகும் திட்டமோ 🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

பின்னை இதையும் ஒருக்கால் கேழுங்கோ

 

சிறப்பான நேர்காணல், கமலஹாசன் என்பவர் தமிழ் நாட்டு மக்களின் சங்கு அறுக்க வந்த சங்கி என்பதில் மாற்று கருத்தில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, zuma said:

தற்போதைக்கு யாருமில்லை. நான் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்புவதில்லை.

அப்போ எப்படி அடுத்த சந்ததிக்கு அரசியல் ரீதியான போராட்டத்தை கொண்டுசெல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

 

12 hours ago, zuma said:

மறந்தாவது பரவாயில்லை, சீமான் அவர்கள் அதனை விற்று அல்லவா  பிழைக்கின்றார்.
தற்பொழுது தலைவர் படத்தை எடுத்து விட்டார், போக போக தெரியும் அவரின் சுயரூபம்.
 

ஏன்  உங்களிடம்  தலைவரின் படத்தை காட்டி காசுதருமாறு எப்போவாவது சீமான் கேட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

அப்போ எப்படி அடுத்த சந்ததிக்கு அரசியல் ரீதியான போராட்டத்தை கொண்டுசெல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

 

ஏன்  உங்களிடம்  தலைவரின் படத்தை காட்டி காசுதருமாறு எப்போவாவது சீமான் கேட்டாரா?

ந‌ண்பா இவர் போன்ற‌வ‌ர்க‌ள் த‌லைவ‌ர் ப‌ட‌த்தை போட்டாலும் விம‌ர்ச‌ன‌ம் செய்வின‌ம் போடாட்டியும் விம‌ர்ச‌ன‌ம் செய்வின‌ம் ?

யாரும் அறிந்த‌ ஒன்று இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்காவில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் முக‌ நூலிலும் ச‌ரி யூடுப்பிலும் போட‌க்   கூடாது ?

த‌லைவ‌ர் ப‌ட‌ம் இருந்தா ஒரு ஊட‌க‌மும் அண்ண‌ன் சீமானின் பேட்டியில் இருந்து க‌ட்சி பிர‌ச்சார‌ம் வ‌ரை காட்ட‌ மாட்டின‌ம் ?

வேட்பாள‌ர்க‌ள் அறிமுக‌ம் செய்யும் நிக‌ழ்வில் ம‌ற்ற‌ ப‌க்க‌ம் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இருந்த‌து ?

அண்ண‌ன் சீமான் தொட்டு க‌ட்சி பிள்ளைக‌ள் எல்லாம் த‌லைவ‌ரை ம‌ன‌சில் வைத்து வேக‌மாக‌ க‌ள‌ப் பணிக‌ள் செய்யின‌ம் ?

இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் சும்மா குரைக்க‌ தான் லாய்க்கு ?

இவ‌ர்க‌ள் எந்த‌ வேட‌மும் போட‌க் கூடிய‌வ‌ர்கள் இவ‌ரின் ஒவ்வொரு எழுத்தும் அண்ண‌ன் சீமானின் எச்சில வைச்சு தான் எழுதுகிறான் ம‌ற்ற‌ம் ப‌டி இவ‌ரிட‌ம் வ‌ர‌வேற்கும் ப‌திவுக‌ளை எதிர் பார்க்க‌ முடியாது நண்பா ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது நியாயம் ஏற்று கொள்கிறேன். உங்களுக்கு வம்சாவழி தொடர்பை தவிர இலங்கையுடன் எந்தவித தொடர்பில்லை என்பது ஏற்கெனவே தெரிந்ததே. ஆனால் எதற்கு தமிழ்நாடு எதிர்காலத்தில் அங்கே குடியேற போகும் திட்டமோ 🤔

தமிழ் நாட்டில் சிங்களவர்களா வாழ்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஏன்  உங்களிடம்  தலைவரின் படத்தை காட்டி காசுதருமாறு எப்போவாவது சீமான் கேட்டாரா?

 

கொடுக்காதவர்களே  அதிகம் கூவுகிறார்கள்

அது  புலிக்காக  இருந்தாலும் சரி

தாயக மக்களாக  இருந்தாலும் சரி

தமிழகமாக இருந்தாலும்  சரி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

 

கொடுக்காதவர்களே  அதிகம் கூவுகிறார்கள்

அது  புலிக்காக  இருந்தாலும் சரி

தாயக மக்களாக  இருந்தாலும் சரி

தமிழகமாக இருந்தாலும்  சரி

இந்த‌ கையால் குடுக்கிற‌து ம‌ற்ற‌ கைக்கு தெரிய‌க் கூடாது விசுகு ஜ‌யா இது த‌மிழ‌ர்க‌ளுடைய‌ மான்பு ?

அதிக‌ம் காசு குடுத்த‌ உற‌வுக‌ளே அல‌ட்டி கொள்வ‌து இல்லை ,

ஒன்டும் செய்யாம‌ பொது வெளிக‌ளில் வ‌ந்து தேவை இல்லா ஆணி புடுங்கிற‌வைய‌ க‌ண்டால் உண்மையில் கோவ‌ம் தான் வ‌ரும்

நேற்று ஒரு தொகுதியில் ம‌ட்டும் 10000ஆயிர‌ம் துண்ட‌றிக்கை ம‌க்க‌ளிட‌த்தில் குடுத்த‌வை ?

நான் என்னால் முடிஞ்ச‌தை செய்துட்டு தான் இருக்கிறேன் உங்க‌ளால் முடிஞ்ச‌தை நீங்க‌ள் வெளிப்ப‌டையாய் செய்யிறீங்க‌ள் , ஆனால் நீங்க‌ள் ஒரு போதும் அல‌ட்டி கொண்ட‌தும் கிடையாது குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணின‌தும் கிடையாது ?

க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு காசு கொடுக்கும் உற‌வுக‌ளுக்கு கூட‌ அதிக‌ம் வேர்த்து இருக்காது விசுகு ஜ‌யா ? ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது தேவை இல்லாம‌ க‌ல் எறிப‌வ‌ர்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

 

கொடுக்காதவர்களே  அதிகம் கூவுகிறார்கள்

அது  புலிக்காக  இருந்தாலும் சரி

தாயக மக்களாக  இருந்தாலும் சரி

தமிழகமாக இருந்தாலும்  சரி

சிலோனிலை இப்ப என்ன பிரச்சனை இருக்குது எண்டு கேக்கிற புலம்பெயர் சனங்களும் இருக்கினம். அதுவும் நான் இருக்கும் இடங்களில்.... அவர்களுக்கு சொல்லியும் விளங்கப்படுத்த முடியாது. விளங்கப்படுத்த வெளிக்கிட்டால் நாலைஞ்சு பிரசர் குளிசை எக்ஸ்ராவாய் விளுங்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

தமிழ் நாட்டில் சிங்களவர்களா வாழ்கிறார்கள்?

தமிழ்நாட்டில் சிங்களவர்கள் வாழ்வதாக நான் சொல்லவில்லையே 🤦‍♂️
தமிழ்நாட்டில் திராவிடர்கள் வாழ்கிறார்கள்
சீராரும் வதனமெனத் திகழ் பாரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல் திருநாடும்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆனால் எதற்கு தமிழ்நாடு

அங்கு தமிழர்கள் இருப்பதால் அவர் ஆதரவளிக்கிறார் என்பதே விளங்கவில்லை. இதற்குள் திராவிடராம். திராவிடரை பற்றி யார் கவலைப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2021 at 00:12, zuma said:

சீமான் அண்ணாச்சியே தலைவரின் படத்தை எடுத்து விட்டார், யாம் எல்லாம் எம்மாத்திரம். 🤣

அவர் ஒர் இந்தியன் ..இந்தியாச்சட்டத்துக்கு கட்டுப்படவேண்டும் .இந்தியாவில் வாழும்  எந்தத்தமிழனும்  இந்தியா மத்திய அரசை எதுவும் செய்து விடமுடியாது  சீமான் 234 தொகுதியில் வென்றாலும் இலங்கைத்தமிழருக்கு தமிழ்ஈழமே அல்லது மாநில சுயாட்ச்சியே கிடைக்கப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டில் சிங்களவர்கள் வாழ்வதாக நான் சொல்லவில்லையே 🤦‍♂️
தமிழ்நாட்டில் திராவிடர்கள் வாழ்கிறார்கள்
சீராரும் வதனமெனத் திகழ் பாரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல் திருநாடும்

தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டுமா வேண்டாமா.. அதைக் கூறுங்கள் முதலில்..🤥

  • கருத்துக்கள உறவுகள்

திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பாஜகவால் உருவாக்கப்பட்டவரா சீமான்?

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kapithan said:

தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டுமா வேண்டாமா.. அதைக் கூறுங்கள் முதலில்..🤥

இதுக்கெல்லாம் பதில் வராது கண்டியளோ.....😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதுக்கெல்லாம் பதில் வராது கண்டியளோ.....😁

இல்லயில்ல...... உவர் உதப் பாத்திருக்க மாட்டார். பாத்திருந்தாலும் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாது போல.. 

😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டுமா வேண்டாமா.. அதைக் கூறுங்கள் முதலில்

குமாரசாமி என்பவருக்கு யேர்மனி நாடும் உங்களுக்கு ஒரு மேற்குலக நாடும்  இருக்கே

அங்கே இருவரும் வசதியாக இருந்து கொண்டு தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டுமா வேண்டாமா என்று  பேசி கொள்ளலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

குமாரசாமி என்பவருக்கு யேர்மனி நாடும் உங்களுக்கு ஒரு மேற்குலக நாடும்  இருக்கே

அங்கே இருவரும் வசதியாக இருந்து கொண்டு தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டுமா வேண்டாமா என்று  பேசி கொள்ளலாம்.

 

 

நேர்மையாக, கேட்ட கேள்விக்கு, பதில் கூறுங்கள். 

நேர்மையாகப் பதில் சொல்வதற்குரிய துணிவு இல்லையென்றால் பதில் கூறாது விடுங்கள். பிரச்சனையில்லை.

ஆனால்

சளாப்பல் பதில் கூறுவீர்களானால் உங்கள்  நேர்மையில் சந்தேகம் ஏற்படும். 

எதற்கும் நன்றாக யோசியுங்கள்(பதில் கூறுவதற்கு முன்னர்)

""நெஞ்சிற் துணிவுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி"" என்று பாரதி பாடியது உங்களுக்கல்ல என்று நம்புகிறேன். 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 

-161416745400-1614168555-1615367604.jpg

நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் அண்மையில் திருமதி சசிகலா நடராஜன் அவர்களை சந்தித்து பேசினார்.  தந்தி தொலைக்காட்சியின் "கேள்விக்கு என்ன பதில்"  நிகழ்ச்சியில் 09.03.2021 அன்று சீமானின் நேர்காணல் நடந்தது. அப்போது சீமான் சசிகலாவை சந்தித்தது குறித்து நெறியாளர் கேள்விகளை எழுப்பினார்.  சீமான் பேசும் போது சசிகலாவை அம்மா என்றும், எடப்பாடி பழனிச்சாமியை ஐயா என்றும் உள்ளம் உருகி அன்புடன் குறிப்பிட்டார். 

 

யார் இந்த சசிகலா? சசிகலா வீடியோ கடை வைத்திருந்தவர். அவரது கணவர் நடராஜன் ஒரு அரச ஊழியராக இருந்தவர். ஆனால் இன்று அவர்களது சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு சொத்துக்களும் எப்படி வந்தன? தமிழ்நாட்டு மக்களின் பொது நிதியை ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொள்ளை அடித்ததினால்  சேர்த்தது. தமிழ்நாட்டின் ஆறு, மலை, காடு, கனிமங்கள் என்று இயற்கை வளங்களை அழித்து விற்றுச் சேர்த்த பணம், சாராயம் விற்று தமிழ் பெண்களின் வாழ்வை சிதைத்து சேர்த்த பணம்.

சசிகலாவின் அரசியல் என்ன? ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சித் தலைமை, முதல் அமைச்சர் என்னும் அதிகாரங்களின் நிழலில் கட்சிக்காரர்களையும், அரச ஊழியர்களையும் மிரட்டி கப்பம் கட்ட வைத்தது தான் சசிகலாவின் அரசியல். தனது மன்னார்குடி மாபியாக்களை வைத்து வன்முறை கொண்டு தாக்குவது தான் சசிகலா தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த பெரும் சேவை.  சசிகலா தமிழ்நாட்டு மக்களுக்காக செய்த பங்களிப்பு என்ன என்று ஏதாவது ஒரு விடயத்தை சீமானால் சொல்ல முடியுமா?

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி? தன்னை ஒரு சாதாரண விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் பழனிச்சாமி அரசியலுக்கு வந்த பின்பு, முதல் அமைச்சராக வந்த பின்பு பெரும் பணக்காரராக மாறியிருக்கிறார். பாசிச பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். தூத்துக்குடியில் நடந்த படுகொலைகள், சேலம் எட்டுவழிச்சாலை, நீட் தேர்வு, வேளாண்மை சட்டங்கள் என்று பாசிச பாரதிய ஜனதா கட்சி அரசினது எல்லா அநியாயங்களுக்கும் துணை நின்று தமிழ்நாட்டு மக்களினது வாழ்வை அழித்துக் கொண்டிருப்பவர்.

இந்த ஊழல் கொள்ளையர்களையும், தமிழ்நாட்டு மக்களினது வாழ்வை அழித்து கொண்டிருப்பவர்களையம் நா கூசாமல் அம்மா, ஐயா என்று அன்பொழுக அழைக்கும் சீமான் பேரறிஞர் அண்ணா அவர்களை பிச்சைக்கார பயல் என்று ஒரு கூட்டத்தில் வைத்து ஊளையிட்டார். ஒரு நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் வைத்து சீமான் அவர்கள்  அண்ணா அவர்களை இவ்வாறு பேசிய காணொளி இன்றும் இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராகவும்   சமூகநீதி வேண்டியும்  தனது வாழ்நாள் முழுவதும்  போராடிய அண்ணா அவர்களைத் தான் இந்த கொள்கை குன்றம் இவ்வாறு அவதூறு செய்தது. சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதிய பார்ப்பனருக்கு முன்பு கைகட்டி வாய் மூடி நின்ற "தமிழ் போராளி" சீமான் பார்ப்பனியத்தை தனது எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் கதிகலங்க வைத்த அண்ணாவை இப்படித்தான் அவதூறு செய்வார்.

புராணங்களும், இதிகாசங்களும், மன்னர்களின் கதைகளுமாக இருந்த தமிழ் திரைப்பட துறையில் "வேலைக்காரி" என்று  ஏழை மக்களின் வாழ்வை தனது கதை வசனத்தின் மூலம் அண்ணா காட்சிப்படுத்தினார். தமிழ் மக்களின் வாழ்வியலில் இல்லாத ஆரியக் கடவுள்களையும், பார்ப்பனியத்தையும் தூக்கிப் பிடிக்கிற  ராமாயணம்,போன்ற புராணங்களை தீயிட்டு கொழுத்த வேண்டும் என்றார் அண்ணா எனும் பகுத்தறிவாளர். அண்ணா தொடக்கி வைத்த தமிழும், ஆங்கிலமுமே தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை  என்பதை தான் மோடியின் அடிமையான எடப்பாடியால் கூட இன்று வரை மீள முடியாமல் இருக்கிறது. பெரும் நில உரிமையாளர்களிடம்  இருந்த நிலங்களை ஏழை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுப்பதற்காக  முப்பது ஏக்கராக இருந்த  நிலஉச்ச வரம்பு சட்டத்தை பதினைந்து ஏக்கராக மாற்றி தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார்.

இத்தகைய அண்ணாத்துரை அவர்களை சீமான் ஏன் எதிர்க்க வேண்டும்? ஏனென்றால் அண்ணா ஏழை மக்களுக்காக சிந்தித்தவர்,; திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். அண்ணா பார்ப்பனியத்தின் எதிரி. அண்ணா ஆரியத்தின் எதிரி. அதனால் தான் இன்று வரைக்கும் பார்ப்பனியர்களும், பார்பனியர்களினதும் , பணக்காரர்களினதும் கட்சியான பாசிச பாரதிய ஜனதா கட்சியினரதும் பரம்பரை எதிரியாக அண்ணா இருக்கிறார். சீமான் தான் பாரதிய ஜனதா கட்சியின் துணைக்கட்சி இல்லை என்கிறார். ஆனால் அவர்களை போலவே அண்ணாவை எதிர்க்கிறார்.  திராவிடக் கட்சிகளை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அடிமைகளான அ.தி.மு.க கட்சிக்குள்ளே முரண்பாடுகள் என்றதும் பதறி போகிறார். என்ன செய்வது மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்க முடியவில்லையே.

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த போது "இந்த அதிகாரிகள் நான் சொல்வதை கேட்கிறார்கள் இல்லை. இவர்களை வைத்துக் கொண்டு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை மக்களுக்கு செய்கிறேன்" என்று அவர் துயரம் பொங்க கூறினாராம்.  அதைக் கேட்ட சீமானுக்கும் அழுகை அழுகையாக வந்து விட்டதாம். ஊழல்கள், நீட் தேர்வு, வேளாண்சட்டங்கள், கனிம வளங்களை பலதேசிய நிறுவனங்களுக்கு விற்பது போன்றவற்றை செய்யும் போது தடை போடாமல் மக்கள் நல திட்டங்களுக்கு மட்டும் தடை போடும் இந்த அதிகாரிகளை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்ய முடியும் என்ற அண்ணன் சீமானின் கவலை நியாயம் தானே.

மிகப் பெரும்பான்மையான அதிகாரிகளாக  பார்ப்பனர்கள் இருந்த அன்றைய காலகட்டத்தில் தான் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தார். அவர்களை வைத்துக் கொண்டு தான் மக்கள் நல்த் திட்டங்களை நிறைவேற்றினார். சென்னை மாகாணம் என்று இருந்ததை மாற்றி "தமிழ்நாடு" என்று அழைக்க தீர்மானம் கொண்டு வந்தார். சமூகநீதி , இட ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் பார்ப்பன ஆதிக்கத்தை உடைத்து தமிழ் சமூகத்தை முன்னோக்கி கொண்டு வந்த அண்ணாவை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டாளியும், பார்ப்பன அடிமையும், ஊழல் கொள்ளையர்களின் நண்பனுமான சீமான் எதிர்ப்பதில் வியப்பு எதுவுமில்லை.

இந்த சீமானைத் தான் சில இலங்கை தமிழர்கள் ஈழத்துக்காக குரல் கொடுப்பவர் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டு மக்களுக்காக உழைத்தவர்களை எதிர்த்துக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் எதிரிகளை ஆதரிப்பவர் எப்படி ஈழ மக்களுக்கு உண்மையாக இருப்பார் என்பதை இவரின் ஈழ  ஆதரவாளர்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

-

 

விஜயகுமாரன் 
13/03/2021
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2021 at 23:53, zuma said:

மறந்தாவது பரவாயில்லை, சீமான் அவர்கள் அதனை விற்று அல்லவா  பிழைக்கின்றார்.
தற்பொழுது தலைவர் படத்தை எடுத்து விட்டார், போக போக தெரியும் அவரின் சுயரூபம்.

ZUMA இந்த கருத்துக்கு பதில் கருத்து வந்தபின்னும் தந்த பதிலுக்கு எதிர் கருத்தை வைப்பது அழகு அதைவிட்டு ஒரே கருத்தை திரும்ப திரும்ப வைப்பது நான் முன்பு சொன்ன சின்னப்பிள்ளைகள் விளையாட்டு அலாப்புதல் என்பார்கள் அதைத்தான் செய்கிறீர்கள் . கருத்துக்களுக்கு கருத்துக்களை  வைத்து பழகுங்க இங்கு யாரும் தனிப்பட்ட தாக்குதல் செய்கிறார்களா உங்கள் மேல் இல்லியே பிறகேன் ?

சீமானின் திரிகளில் அவரின் அரசியல் எதிரிகளால் எழுப்பப்படும் கருத்துக்களை இங்கு இணைக்க முடியுமென்றால் திமுகாவின் ஈழத்தமிழருக்கு எதிரான துரோகம் இங்கு தொடராக இணைக்க முடியுமா ?

அந்த புத்தகத்தின் முகப்பு அட்டையை கூட  இங்கு போட  விடவில்லை ஒரே வெட்டுத்தான் ஏன்  வெட்டினார்கள் என்று காரணம் கூட தரப்படவில்லை .

திமுக இம்முறை வரப்போவது 85 வீதம் உறுதி என்றாலும் அந்த கட்சி எமது மக்களுக்கு செய்த துரோகம் வரலாற்றில் காணாமல் போகுமா ? இல்லை அதை சொல்வது இங்கு குற்றமா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

திமுக இம்முறை வரப்போவது 85 வீதம் உறுதி என்றாலும் அந்த கட்சி எமது மக்களுக்கு செய்த துரோகம் வரலாற்றில் காணாமல் போகுமா ? இல்லை அதை சொல்வது இங்கு குற்றமா ?

திமுகவும், கலைஞரும் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக இறுதிப் போர் நிகழ்ந்த காலத்தில் உதவவில்லை. ஆனால் அது புலிகளுக்கு தெரியாமல் இருந்ததா?

இந்தியாதான் அப்போதைய மகிந்த அரசுக்கு பின்னால் நின்று புலிகளை அழிக்க உதவியது.  அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏனைய சர்வதேச நாடுகளும் முழு ஆதரவு கொடுத்தன. இவையெல்லாம் புலிகளுக்கு தெரிந்து இருந்தது. கலைஞர் என்ன செய்திருந்தாலும் தடுத்தும் இருக்கமுடியாது. அதனால் அவர் தனது பதவியைக் காப்பாற்ற ஒரு உண்ணாவிரத நாடகம் போட்டதோடு முடித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

நேர்மையாக, கேட்ட கேள்விக்கு, பதில் கூறுங்கள். 

தனது கேள்விக்கு நேர்மையான கேள்வி என்று தானே நற்சாட்சி பத்திரம் வழங்கல்  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.