Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது!

Featured Replies

14 minutes ago, விசுகு said:

எல்லோரும் பொதுவாக தமிழர்கள்???

தாயகமக்களையும் புலம்பெயர் மக்களையும் பொதுப்படுத்த முடியாது.

தாயகக் கோட்பாடு, அதை நிராகரிப்பது, அதற்காக போராடுவது, விட்டுக்கொடுப்பது என்பது அனைத்தையும் முடிவு செய்ய வேண்டியவர்கள் தாயக மக்களே. அவர்களின் முடிவுக்கு ஆதரவாகவும் கட்டுபடவும் அந்த முடிவிற்கு வலு சேர்க்கவும் மட்டுமே புலம்பெயர் மக்களால் முடியும்.

16 minutes ago, யாயினி said:

வெளி நாட்டுக்கு அழைப்பது என்பது..எத்தனை வீதம் சாத்தியப்படும் என்று சொல்ல இயலுமா..

நான் பதிலில் குறிப்பிட்ட மாதிரி எல்லா 'இளவயது' மக்களை இங்கு கூட்டிவர சாத்தியம் ஒன்று இருப்பின் நான் அதைத்தான் தான் நான் செய்வேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைந்து கொண்டே செல்கின்றது (தகுதி அடிப்படையில் குடியேறும் சாத்தியங்களை தவிர)

  • Replies 101
  • Views 9.4k
  • Created
  • Last Reply
20 minutes ago, யாயினி said:

நானும் அந்த மக்கள் மேல் அக்கறை உள்ளவள் தொடர்பில் இருப்பவள் என்ற ரீதியில் கேட்கிறேன், சொல்கிறேன்.இங்கிருப்பவர்களும் எப்போ 60-65 வயது வரும் வங்கி கார்ட்டை மட்டும் கொண்டு போனால் அங்கு ஜாலியாக வாழலாம் என்று தான் இருக்கிறார்கள்.👋

அப்படி ஜாலிக்காக போகின்றவர்கள் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை, கவனமும் இல்லை. குடும்பமாக, பிள்ளைகளின் வாழ்வு வளம்பெறும் எனும் நம்பிக்கையில் அங்கு போக எத்தனை பேர் தயார் என்று கேட்டால் பூச்சியத்துக்கு அண்ணளவாகத்தான் எண்ணிக்கை அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

தாயகமக்களையும் புலம்பெயர் மக்களையும் பொதுப்படுத்த முடியாது.

தாயகக் கோட்பாடு, அதை நிராகரிப்பது, அதற்காக போராடுவது, விட்டுக்கொடுப்பது என்பது அனைத்தையும் முடிவு செய்ய வேண்டியவர்கள் தாயக மக்களே. அவர்களின் முடிவுக்கு ஆதரவாகவும் கட்டுபடவும் அந்த முடிவிற்கு வலு சேர்க்கவும் மட்டுமே புலம்பெயர் மக்களால் முடியும்.

நீங்கள் முதலில் குறிப்பிட்டது போல தாயகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் வெளியே எடுத்து விடுவதென்ற முடிவுக்கு நீங்களோ தாயக மக்களோ வருவதாக இருந்தால்...?

நான் கேட்ட கேள்வி அது சார்ந்து தான்.

உதாரணத்திற்கு

புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை சிங்களவருக்கோ இசுலாமியர்களுக்கோ விற்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம் தமிழருக்கு விற்பனை செய்யுங்கள் என்பது தானே?

அந்த தமிழரும் சிங்களவருக்கு விற்று விட்டு வெளியேற போகிறார் என்றால் இப்பொழுதே சிங்களவருக்கே விற்பனை செய்ய வேண்டியது தானே?

Edited by விசுகு

33 minutes ago, விசுகு said:

நீங்கள் முதலில் குறிப்பிட்டது போல தாயகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் வெளியே எடுத்து விடுவதென்ற முடிவுக்கு நீங்களோ தாயக மக்களோ வருவதாக இருந்தால்...?

நான் கேட்ட கேள்வி அது சார்ந்து தான்.

உதாரணத்திற்கு

புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை சிங்களவருக்கோ இசுலாமியர்களுக்கோ நிற்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம் தமிழருக்கு விற்பனை செய்யுங்கள் என்பது தானே?

அந்த தமிழரும் சிங்களவருக்கு விற்று விட்டு வெளியேற போகிறார் என்றால் இப்பொழுதே சிங்களவருக்கே விற்பனை செய்ய வேண்டியது தானே?

இந்தக் கேள்விகள் எல்லாம் எந்த அடிப்படையில் எழுகின்றது என்றால், அங்கிருப்பவர்கள் முக்கியமாக இளவயது ஆட்கள் வெளினாடுகளுக்கு இன்னும் இன்னும் வெளிக்கிட்டு வந்தால் அங்குள்ள காணிகளை நிலங்களை எவர் பாதுகாப்பது எனும் கேள்விகள் எழுவதால் தான்.

இந்தக் கேள்விகள் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு எழுகின்றதெனில் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அங்குள்ள இளவயதினரில் பெரும்பான்மையானோர் எந்த வழியிலேனும் வெளிநாடு வர வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கின்றனர். அதனால் தான் இந்த திரியின் செய்தியில் இடம்பெற்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு புலம்பெயர் மக்களிடம் அடிக்கடி எழுவதை வெளியிலும் யாழ் இணையத்திலும் அவதானித்துள்ளேன். இது எப்படி இருக்குதென்றால் 2009 இன் முன்னர் தாயக மீட்புக்கு ஆயிரக்கணக்கானோர் தேவைப்படும் நேரத்திலும் அதை கவனத்தில் எடுக்காமல் நான் உட்பட வெளி நாடுகளுக்கு வந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு அவர்கள் அங்கு போராடட்டும் என்று எப்படி நினைத்தோமோ அப்படியே 2009 இன் பின்னும் அங்குள்ள இளவயதினர் வெளிநாடு வராமல் அங்கிருந்து நிலங்களை, காணிகளை, மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்கு பதிலாக அங்கு மீண்டும் எம் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய் குடியேற நினைப்பதில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆபத்துகள் எமக்கு தெரியும் என்பதால்.

இன்னொரு வகையான கருத்தையும் அடிக்கடி காண்கின்றேன். அங்கு நல்ல காசும் நிலமும் இருந்தால் தொழிலோ விவசாயமோ செய்து பிரச்சனை இல்லாமல், வெளி நாடு வரமால் வாழலாம் எனும் சாரப்படும் கருத்து.. இது இன்னொரு விதத்தில் சிங்கள அரசை நல்ல அரசு, அது வசதியான தமிழர்களை ஊக்குவித்து வாழ விடும் என்று சேர்டிபிகேட் கொடுக்க கூடிய கருத்து. 

ஐயா தமிழனுக்கு நல்ல காசு இருந்தாலும் சிங்களம் விடாது, பிச்சைக்காரன் என்றாலும் சிங்கள அரசு விடாது. தொழில் செய்தாலும் விடாது, சும்மா இருந்தாலும் விடாது. இதுதான் யதார்த்தம். இந்த சூழ்நிலையை மாற்றக் கூடிய அரசியல் தலைமையும் அங்கில்லை, ஆதரவான வெளிச்சக்தியும் எங்கும் இல்லை. இந்த யதார்த்த சூழ்நிலையை விளங்கி அங்கிருந்து வெளி நாடு வர எவராவது விரும்பினால் அவருக்கு உதவுங்கள். நாம் எப்படி வந்தோமோ அவர்களும் வந்து தங்கள் வாழ்வை அங்கிருப்பதை விட நிம்மதியாக வாழட்டும்.

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இது மிகச் சரியான கருந்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

அதாவது தாயகத்தில் உள்ள அனேகமாக மக்கள் அங்குள்ள காணி பூமிகளை எழுதித் தாங்கள் ஒழுங்காக போட்டு, நோட்டாக அனுப்பி வையுங்கள் நாங்கள் சந்தோசமாக சொந்த நாட்டில் வாழ்கிறோம் என்று தான் சொல்கிறார்கள்..

சரியாகச் சொன்னீர்கள். அங்கே நல்ல ஒரு நிலக்கு வர வேண்டும் என்றே எனக்கு உறவு முறையானவர்களும் தெரிந்தவர்களும் அங்கேயே படித்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றுவந்தவர்களில் சிலர் பென்சன் எடுக்க இன்னும் எத்தனையோ வருடங்கள் இருக்க இப்பவே தங்கள் பென்சன் எடுத்த பின்பு இலங்கை தான் குடியேற போகிறோம் என்கிறார்கள்.பணம் கட்டி இலங்கை குடியுரிமை எடுத்தவர்களும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புலம்பெயர்ந்ததை எண்ணி பல இரவு தூக்கங்களை இழந்திருக்கின்றேன். எதற்கு இந்த  பகட்டு வாழ்க்கை/போலி வாழ்க்கை பூமியில் வாழ வேண்டும் என நினைத்திருக்கின்றேன். ஆனால் ஒரு சில தனிப்பட்ட விடயங்களால் பல்லை கடித்துக்கொண்டு வாழ வேண்டிய சந்தர்ப்பத்துக்கு தள்ளப்பட்டேன். இன்று விடியும் நாளை விடியும் நாட்டுக்கு/மண்ணுக்கு திரும்பலாம் என்ற நப்பாசை இன்றும் என்னிடம் நிறையவே இருக்கின்றது.  பிள்ளைகள் விடயத்தில் நான்/நாங்கள் தலையிட முடியாது. அவர்கள் இங்கே பிறந்தவர்கள்.இதை செய் என்று சொல்லும் அதிகாரமும் எமக்கு இல்லை. என்னையும் மனைவியையும் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். எனது இந்த நிமிட சிந்தனை வரைக்கும் ஊருக்கு சென்று வாழ்வதுதான் எனது நிலைப்பாடு. நான் பிறந்து வளர்ந்து இப்படி ஜேர்மனிக்கு வருவேன். இவ்வளவு காலம் இங்கிருப்பேன் என எள்ளளவும் நினைத்ததில்லை. இன்றும் ஏதோ கனவு போல் இருக்கின்றது.இது  எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான புலம்பெயர் மக்களுக்கு இருக்கும் நிலை.

இன்றைய இலங்கை நாட்டு அரசியலை வைத்து ஒரேயடியாக நாம் எந்த முடிவிற்கும் வந்து விட முடியாது. கால நிலை போல் அதுவும் வந்து போகும். உலக அரசியல் மாறிக்கொண்டு வருகின்றது. அதற்கேற்ப இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அரசியல் நிலமை மாற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். அமெரிக்காவில் இனவாதம் இருக்கின்றது. அதற்காக கறுப்பினத்தவர்கள் ஆபிரிக்காவிற்கு திரும்பி போக முடியுமா என்ன?

இலங்கையில் இப்போதிருக்கும் அரசியல் இனவாதிகள் அழிய புதியதொரு தலை முறையில் சமத்துவ அரசியல் உண்டாகும் என பலதரப்பட்ட கருத்துக்கள் உலாவுகின்றது. இனி வரும் காலங்களில் இனவாத அரசியல் எடுபடாது என்பதற்கு பல நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இலங்கையும் இனவாத அரசியலை நீண்ட காலத்திற்கு கொண்டு செல்ல முடியாது. இனவாதம் என்பது மூடத்தனமாகவே உருப்பெற்று விட்டது. இந்த வகையில் இனவாதம் உரிமை மறுப்பு என்பது இலங்கையிலும் அழிந்து போகும் காலம் தூரமில்லை.

நாட்டை விட்டு வெளியேறியது முதல் தவறு என உணர்கின்றேன். ஆனால் அன்று அவர்கள் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்றும் எனக்கு தெரியும். இருப்பினும் என் உழைப்பையே அர்ப்பணித்தேன். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது.
நான் என்னை போன்றவர்கள் அன்று வெளியேறியதற்கு ஒரு காரணமுண்டு. அனால் இன்று வெளியேறும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு மட்டுமே. மற்றது ஊரில் நில புலங்கள் இல்லாதவர்களின் முதல் தெரிவும் வெளிநாட்டு வாழ்க்கை தான். அதை அவர்களிடமும் குறை சொல்ல முடியாது தானே? பொருளாதார ரீதியாக புலம்பெயர்ந்தவர்களுக்கு தாயக/சொந்தமண் வலி இருக்காதென நான் நினைக்கின்றேன்.

  சிங்கள இனவாத அரசின் இறுக்கம் தமிழ் மக்கள் மீது அதிகரிக்கின்றது என்பது உண்மைதான்.ஆனால் சிங்கள மக்களும் எத்தனையோ பேர் புலம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களிலும் அகதிகளாக வந்தவர்கள் அதிகம். அவர்களுக்கு என்ன குறை என யாராவது சிந்தித்தார்களா?

புலம்பெயர்ந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் வெளிநாட்டு வாழ்க்கையும் உள்நாட்டு வாழ்க்கையும் எப்படிப்பட்டதென நன்கு தெரியும். ஏனெனில் இரு வாழ்க்கையையும் அனுபவித்த என்னைப்போன்றவர்கள் மட்டுமே. அதனால் தான் சொல்கிறோம்  பிறந்த மண் வாழ்க்கை சிறந்ததென. ஊரில் காசு /வீடு/வசதி இல்லா விட்டாலும் உயிர் வாழலாம். நாட்டின் உதவி தேவையில்லை. இயற்கையின் உதவி 50 வீதம் கிடைக்கும்.

இங்கு ஒரு நாள் மின்சாரம் இல்லா விட்டால் பட்டினிதான். ஒரு நாள் எரிவாயு இல்லா விட்டால் குளிரில் செத்தே போய் விடுவாய்.

விரக்தியால் வரும் கருத்துக்கள் எல்லா நேரங்களுக்கும் சரிவருவதில்லை.போராடினோம் சரிவரவில்லை.மாற்று வழியை தேடவேண்டும்.அடுத் தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என தலைவர் பிரபாகரன் சொன்னது வெளிநாடுகளுக்கு ஓடுங்கோ என்ற அர்த்தம் அல்ல. அடுத்த தலைமுறைக்கு ஏற்ற விதத்தில் போராட்டம் தொடர வேண்டும் என்பதே.

என்னிடம் பணம் இருந்தால் நான் என் சொந்த பந்தங்களை உடனடியாக ஜேர்மனிக்கு கூப்பிடுவேன் என்றால்....நான் தனிச் சிங்களத்திற்கு உதவுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்தக் கேள்விகள் எல்லாம் எந்த அடிப்படையில் எழுகின்றது என்றால், அங்கிருப்பவர்கள் முக்கியமாக இளவயது ஆட்கள் வெளினாடுகளுக்கு இன்னும் இன்னும் வெளிக்கிட்டு வந்தால் அங்குள்ள காணிகளை நிலங்களை எவர் பாதுகாப்பது எனும் கேள்விகள் எழுவதால் தான்.

இந்தக் கேள்விகள் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு எழுகின்றதெனில் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அங்குள்ள இளவயதினரில் பெரும்பான்மையானோர் எந்த வழியிலேனும் வெளிநாடு வர வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கின்றனர். அதனால் தான் இந்த திரியின் செய்தியில் இடம்பெற்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு புலம்பெயர் மக்களிடம் அடிக்கடி எழுவதை வெளியிலும் யாழ் இணையத்திலும் அவதானித்துள்ளேன். இது எப்படி இருக்குதென்றால் 2009 இன் முன்னர் தாயக மீட்புக்கு ஆயிரக்கணக்கானோர் தேவைப்படும் நேரத்திலும் அதை கவனத்தில் எடுக்காமல் நான் உட்பட வெளி நாடுகளுக்கு வந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு அவர்கள் அங்கு போராடட்டும் என்று எப்படி நினைத்தோமோ அப்படியே 2009 இன் பின்னும் அங்குள்ள இளவயதினர் வெளிநாடு வராமல் அங்கிருந்து நிலங்களை, காணிகளை, மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்கு பதிலாக அங்கு மீண்டும் எம் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய் குடியேற நினைப்பதில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆபத்துகள் எமக்கு தெரியும் என்பதால்.

இன்னொரு வகையான கருத்தையும் அடிக்கடி காண்கின்றேன். அங்கு நல்ல காசும் நிலமும் இருந்தால் தொழிலோ விவசாயமோ செய்து பிரச்சனை இல்லாமல், வெளி நாடு வரமால் வாழலாம் எனும் சாரப்படும் கருத்து.. இது இன்னொரு விதத்தில் சிங்கள அரசை நல்ல அரசு, அது வசதியான தமிழர்களை ஊக்குவித்து வாழ விடும் என்று சேர்டிபிகேட் கொடுக்க கூடிய கருத்து. 

ஐயா தமிழனுக்கு நல்ல காசு இருந்தாலும் சிங்களம் விடாது, பிச்சைக்காரன் என்றாலும் சிங்கள அரசு விடாது. தொழில் செய்தாலும் விடாது, சும்மா இருந்தாலும் விடாது. இதுதான் யதார்த்தம். இந்த சூழ்நிலையை மாற்றக் கூடிய அரசியல் தலைமையும் அங்கில்லை, ஆதரவான வெளிச்சக்தியும் எங்கும் இல்லை. இந்த யதார்த்த சூழ்நிலையை விளங்கி அங்கிருந்து வெளி நாடு வர எவராவது விரும்பினால் அவருக்கு உதவுங்கள். நாம் எப்படி வந்தோமோ அவர்களும் வந்து தங்கள் வாழ்வை அங்கிருப்பதை விட நிம்மதியாக வாழட்டும்.

தாயகத்தில் இருந்து வெளி வர விரும்பும் யாருக்காவது உதவுவோம் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவர் தன்னுடய வாழ்க்கை அல்லது தன்னிலும் தங்கி உள்ளவர்களையும் எப்படி கவனிப்பார் என்று என்ன உத்தர வாதம்..ஒருவரை ஐம்பது அறுபது ஆயிரம் கட்டி அல்லது ஏதோ ஒரு வகையில் புலம் பெயர் தேசத்திற்கு வர வழி காட்டுறோம் என்று வைத்துக் கொள்வோம்.வந்த பின் அவரால் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் யார் பொறுப்பு.... எல்லாரும் பொறுப்பு உணர்ச்சி உள்ளவர்களாக தான் இருப்பார்கள் என்று நம்புகிறீரகளா..நான் ஊரில் இருப்பவர்கள் யாரும் வெளி நாடு வரத் கூடாது என்று எப்போதும் நினைக்க மாட்டேன்.. ஆனால் இதன் பின்  சட்ட சிக்கலகள் உட்பட நிறைய இருக்கிறது என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது.நன்றி👋

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நிழலி,

அப்பாவித்தனமான, அதவேளை அபத்தமான கருத்து என்பேன்.

போர்த்துகேயன் வந்து பிடித்து ஆண்டான், அவன் பின்னால் ஒல்லாந்தன் வந்து ஆண்டான். 300 வருசம், அவர்கள் செய்யாத கொடுமைகளா, சிங்களவன் இந்த 73 வருசங்களில், செய்தது? 

அவர்கள் காலத்தில், இவர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்று, எமது முன்னோர்கள், சுதந்திரமாக இருந்த, தமிழகம் ஓடிபோகவில்லையே.

சிங்களவனுக்கும், அடி கொடுத்துத்தானே  இருந்தோம். 

உண்மையில், சிங்களவன் சகல ராசதானிகளையும் இழக்க, நாம் தானே, பிரிட்டிஷ் காரண வரும் வரை, தேசத்தில், வன்னி ராஜ்ஜியத்தையும், கண்டி ராஜ்ஜியத்தையும் தணித்து ஆண்டிருந்தோம்.

அண்மையில் கூட, 1987ல், சிங்களவன் பதுங்கி இருக்க, நாமே போராடி, இந்திய ராணுவத்தினை வெளியே அனுப்பினோம்.

ஆகவே, சிங்களவனனுக்கு பயந்து வர வேண்டும் என்று சொல்வதை அபத்தமாகவே நினைக்கிறேன்.

வேண்டுமானால், வந்து பார்த்து போங்கள் என்று சொல்லுங்கள். 

நீங்கள், IT  காரர் என்பதால் வாழ்வு பரவாயில்லை ரகம். அதை வைத்து எடை போடமுடியாதே.

ஒவொருவரும் செய்யும் வேலைகள்..... ஊரிலே செய்யமுடியாத வேலைகளா செய்கிறார்கள். எவ்வளவு கடினமான வாழ்வு. பலருக்கு, சமாதான காலமாயிருந்தாலும், இலங்கை போய் வருவது.... ஒரு நிறைவேறாத கனவு.

எனது உறவினர், ஸ்காட்லாந்து வந்து phd செய்து, இவர்கள் தந்து வேலை வேண்டாம் என்று, நாடு திரும்பி, கொழும்பில் வேலை. இப்போது ஊர் போய், யாழ்பாணத்தில் இரண்டு பள்ளிக்கூடங்களில் காலை, மாலை என்று அவர்களே பங்கு போட்டு, இரசாயணவியல், இரண்டு முழு சம்பளத்தில் படிப்பிக்கின்றார்.

வயல், காணி என்று நல்ல வாழ்வு என்கிறார்.

மக்கள், யுத்தத்தினூடு வாழ்ந்தவர்கள். இப்போது வாழ்வது பிரச்னைக்குரியது அல்லவே.

மேலும், போர்த்துகேயனுக்கும், ஒல்லாந்தனுக்கும், பிரிட்டிஷ்காரனுக்கும் வந்தது போலவே, சிங்களத்துக்கும் ஒரு முடிவு வரும், விரைவில். 

எதுவுமே நிரந்தரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2021 at 09:03, பிழம்பு said:

சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகில் கனடா செல்ல புத்தளம் – கற்பிட்டி, குரக்கன்ஹேன வீடு ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்றும், பயணிக்க பயன்படுத்திய லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்தது.

இவர்களில் தாயும் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

படகில் பயணம் செய்து இலங்கை கடல் எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் கைது செய்வது சட்டரீதியானது. மட்டக்களப்பில் லொரியில் ஏறி பயணம் செய்து புத்தளம் வந்து நின்றமை சம்மந்தமாக கடல் படையினருக்கு என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

படகில் பயணம் செய்து இலங்கை கடல் எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் கைது செய்வது சட்டரீதியானது. மட்டக்களப்பில் லொரியில் ஏறி பயணம் செய்து புத்தளம் வந்து நின்றமை சம்மந்தமாக கடல் படையினருக்கு என்ன வேலை?

என்ன நியாயத்தை கதைக்கிறீர்கள்? 🤦‍♂️

வங்கிக்கு முன்னால், முகமூடி, துப்பாக்கியுடன் நிக்கிறீர்கள். போலீஸ்க்காரன் பிடிச்சு கேட்டால், கொள்ளை நடந்தால் தானே, என்னை பிடிக்கமுடியும். அதுக்கு முன்னம், தொடேலாது எண்டு சொல்லி நியாயம் பிளக்கலாமே?

நோக்கம்: Intention : அதுதான் சட்டத்தின் பார்வை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

எனக்கு மட்டும் ஊரில் இருக்கும் எல்லா இளவயது ஆட்களையும் கனடாவுக்கு அழைத்து வரக்கூடிய வசதி இருக்குமாயின், அனைவரையும் அழைத்துவரவே விரும்புவேன். 

இலங்கையில் இனி தமிழர்களுக்கு சுயமரியாதையுடன், சமமான உரிமைகளுடன் வாழ வாய்ப்புகள் இல்லை. முஸ்லிம்கள் போன்று சிங்கள மக்களுடன் அருகருகே வாழ்ந்து கூடிக் குலாவி வாழ விரும்பினாலும் கூட சிங்கள அரசுகள் அதற்கும் விடப்போவதில்லை. நீர்கொழும்பு சிலாபம் போன்ற பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து இன அடையாளங்களை தொலைத்து வாழ்கின்றார்களோ அவ்வாறே வடக்கு கிழக்கு தமிழர்களை மாற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுடன் செயற்பாடுகளில் சிங்கள அரசு ஆழமாக வேரூன்றி உள்ளது.

கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற கனவையும் கலைந்து போகச் செய்யும் வண்ணம்தான் அண்மைய அரச பணிகளுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்களம் செய்த அடாத்து வேலைகள் காட்டுகின்றன. தமிழ் அரசியல்வாதிகளின் சிங்களத்தின் திட்டங்களை பற்றிய புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசியல்வாதிகளை விட மோசமாக இயங்குகின்றனர்.

மலையக தமிழர்கள் சிங்கள மக்களுடன் மெதுவாக இரண்டறக் கலக்கத் தொடங்கி விட்டனர். கொழும்பு வாழ் தமிழர்களின் பிள்ளைகள் சிங்கள / ஆங்கில மொழி கல்வி பயின்று ஒன்றில் சிங்கள மக்களுடனோ அல்லது வெளினாடு வந்தோ பிழைத்து விடுவர். புலம்பெயர் மக்களின் அடுத்த தலைமுறைக்கு தாயக மக்களின் அவலங்கள் பற்றிய உணர்வு ரீதியான தொடர்பும் அற்றுப் போக வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் தனித்து விடப்படுவர். 

பலகோடிகள் சொத்து இருந்தாலும் அத்தனையையும் ஆக்கிரமிக்கின்ற, இல்லாமல் செய்கின்ற அதிகாரபலம் சிங்கள அரசுகளுக்கு மேலும் மேலும் அவர்களின் அரசியலமைப்பும் அரச இயந்திரமும்  சிங்கள பெரும்பான்மையினரி வாக்குப்பலமும் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சனனாயக ரீதியில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள். 
 
மேலே உள்ள பதில், இந்த பதிவுக்கு தான். மாறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டுக்கு வந்த சிலோன் ஆம்பிளை பொம்பிளையள் எல்லாம் வெள்ளைக்காரர்களை கலியாணம் கட்டியிருந்தால் உங்கள் கருத்து எப்பிடியிருக்கும் எண்டு யோசிச்சு பார்த்தன்.விழுந்து உருண்டு பிரண்டு சிரிக்கோணும் போல கிடக்கு....😜

உங்கிருக்கும்  தமிழ் அரசியல்வாதிகள் தானே வீர தீரர்கள். உங்களுக்கெல்லாம் நல்ல வழிகளை காட்டுவார்கள் எல்லோ....ஐமீன் சிங்கப்பூர் ரேஞ்சிலை...😎

நீங்கள் சிரிக்கிறீர்கள் இல்லையோ நான் சிரிக்கன் வெள்ளையள் முழுவதும் நம்ம கலாச்சாரத்துக்கு வந்து எங்க தாய் , தந்தை நாடு ஈழம் என்று வந்து நின்றால் சிங்களவன் நிலை என்னவாயிருக்குமென .

சிங்கப்பூர் ஆகுதோ இல்லையோ சோமாலியா ஆகாமல் இருந்தால் சரி சிலோன்  

16 hours ago, குமாரசாமி said:

விவசாயம் எண்டால் உங்கை இருந்தும் செய்யலாம் எல்லோ? 😂

வெளிநாட்டில் விவசாயம்  செய்தால் தானே ஒரு விளம்பரம்  ஆகும் அதைவிட யூரோப்பில இருக்கிற என்று கொளரவமா சொல்லிக்கொள்ளலாம் .

இங்க குனிந்து மண்வெட்டி பிடிக்க மாட்டினும்  ஆனால் வெளிநாடு போனால் சொல்லுற வேலையெல்லாம் செய்யவேணும் பண வித்தியாசமும் இருக்குதானே பணம் தானே ஒருவனை நல்லவன் நாணயமானவன் என இங்க தீர்மானிக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

ஐயா தமிழனுக்கு நல்ல காசு இருந்தாலும் சிங்களம் விடாது, பிச்சைக்காரன் என்றாலும் சிங்கள அரசு விடாது. தொழில் செய்தாலும் விடாது, சும்மா இருந்தாலும் விடாது. இதுதான் யதார்த்தம். இந்த சூழ்நிலையை மாற்றக் கூடிய அரசியல் தலைமையும் அங்கில்லை, ஆதரவான வெளிச்சக்தியும் எங்கும் இல்லை. இந்த யதார்த்த சூழ்நிலையை விளங்கி அங்கிருந்து வெளி நாடு வர எவராவது விரும்பினால் அவருக்கு உதவுங்கள். நாம் எப்படி வந்தோமோ அவர்களும் வந்து தங்கள் வாழ்வை அங்கிருப்பதை விட நிம்மதியாக வாழட்டும்.

நான் கூட என் வீட்டுக்காணியை வித்து செல்லத்தான் நினைக்கிறன் என்றால் பாருங்கோவன் நிழலி காரணம் நான் மேற்கோள் காட்டி இருக்கும் உங்கள் கருத்து அது மட்டும் அல்லாமல் எனது ஊர் அம்பாறையில் உள்ள முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த ஊரான காரைதீவு  இங்கே பலர் ஊரை விட்டு சென்று வெளிநாட்டில் வாழ்கிரார்கள் ஆனால் அவர்களால் இங்குள்ள காணிகளுக்கு அதிக விலை அதாவது ஒரு அடி  நீளப்பாட்டில் ஒரு லட்சம் என்றால் பாருங்கோவன் பிரதான வீதிகளில் எல்லா வளவுகளையும் வாங்கி அடைத்து வைத்துக்கொண்டுள்ளார்கள் ஆனால் விற்கவும் மாட்டார்கள் தொழில் செய்யவும் மாட்டார்கள் தரிசாக கிடக்கிறது .

யாயினி சொன்னது போல கனடாவில் இருக்கும் ஒருவரின் வளவை கேட்டேன் அவர் கொடுக்க மறுத்துவிட்டார் காரணம் 60 வயதுக்கு பிறகு தான் வந்து இருக்க போவதாக சொன்னார் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது தமிழர் கூட்டம் . அ து மட்டும் அல்லாமல் இலங்கை கடன் வாங்கி அதை மக்கள் மீது சுமத்துகிறது இங்கே அவதியுறும் மக்களின் நிலை எப்படியும் இங்கே இருந்து எங்கேயாவது செல்ல வேண்டுமென்ப்தே எம்பிகளிடம் கேட்பதும் அதே வெளிநாட்டு கோட்டா  ஏதும் இருந்தால் அனுப்பிவிடுங்கள் என்று இப்பவும் இளையவர்கள் லைனில் நிற்கிரார்கள்

7 hours ago, யாயினி said:

தாயகத்தில் இருந்து வெளி வர விரும்பும் யாருக்காவது உதவுவோம் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவர் தன்னுடய வாழ்க்கை அல்லது தன்னிலும் தங்கி உள்ளவர்களையும் எப்படி கவனிப்பார் என்று என்ன உத்தர வாதம்..ஒருவரை ஐம்பது அறுபது ஆயிரம் கட்டி அல்லது ஏதோ ஒரு வகையில் புலம் பெயர் தேசத்திற்கு வர வழி காட்டுறோம் என்று வைத்துக் கொள்வோம்.வந்த பின் அவரால் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் யார் பொறுப்பு.... எல்லாரும் பொறுப்பு உணர்ச்சி உள்ளவர்களாக தான் இருப்பார்கள் என்று நம்புகிறீரகளா..நான் ஊரில் இருப்பவர்கள் யாரும் வெளி நாடு வரத் கூடாது என்று எப்போதும் நினைக்க மாட்டேன்.. ஆனால் இதன் பின்  சட்ட சிக்கலகள் உட்பட நிறைய இருக்கிறது என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது.நன்றி👋

எத்தனை ஆயிரம் பேர் சென்று விட்டார்கள் அவர்கள் எதிர்கொள்ளாத சட்ட சிக்கலையா நீங்கள் எதிர் கொள்ள போகிறீர்கள் ?? 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு போவதும் உள்நாட்டில் வாழ்வதும் அவரவர் சொந்தத் தெரிவும் விருப்பமும் ஆகும். உள்நாட்டில் கஸ்டப்பட்டு வெளிநாட்டில் வசதியாக வாழ்பவர்களும் உண்டு.. வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உள்நாட்டில் வசதியாக வாழ்பவரும் உண்டு. அது அவரவர் முயற்சிக்கும்.. சுழியன்/சுழிச்சி மூளைக்கும் ஏற்றார் போல அமையும். 

ஆனால்.. எதிர்காலத்தில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பெருந்தொகை பணத்தை செலவு செய்து வந்து.. சட்ட ரீதியாக தங்க உள்ள வாய்ப்பை பரிசீலித்து வருவது நல்லம். காரணம்.. எனி போரை.. புலிகளை சாட்டுச் சொல்லி அசைலம் அடிக்க வாய்ப்புக் குறைவு. அப்படி அடிச்சாலும்.. அந்த வழக்குகளை வெல்வது இலகு அல்ல.

எனவே.. சட்டவிரோத வழிமுறைகளை தெரிவு செய்யும் முன் பலவற்றையும் யோசிச்சு தெரிவு செய்யுங்கள்.

ஆனால் கனடாவுக்கு பொயின்ஸ் அடிப்படையில் நுழைவது பாதுகாப்பானது. மாணவர்களாக வருவது பாதுகாப்பானது. விடுமுறைக்கு வருவது பாதுகாப்பானது. நம்பிக்கைக்குரிய திருமணம் மூலம் வருவது பாதுகாப்பானது. இப்படியான சட்ட வழிமுறைகளை பின்பற்றி வரலாம். 

மக்களை சட்டவிரோத பாதையில் இருந்து சட்டப் பாதைக்கு நகர்த்துவது நல்லம். அவர்களின் எதிர்காலத்துக்கு.

இலங்கையில் சிங்கள பெளத்த ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைக்குப் பயந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு வெளியேற ஊக்குவிப்பது.. இலங்கை சிங்கள ஆட்சியாளர்களுக்கே சாதகமாக அமையும்.  தமிழர்களுக்கு நீண்ட கால நோக்கில் அவர்களை நாடற்றவர்களாக்கும். ஏனெனில்.. வெளிநாடுகளைப் பொறுத்தவரை தமிழர்கள் குடியேறிகள். இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்கள் பூர்வீகக் குடிகள். 

Edited by nedukkalapoovan
தட்டுப்பொறி தவறு சரிசெய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிழலியிடம் அந்த  கேள்வியை  வைத்ததே

இதைப்பற்றி பல  அபிப்பிராயங்கள்  எம்மிடையே  உண்டு

அதைப்பற்றி  பேசத்தான்...

ஒரு  தோல்வி

தாயகத்துக்கும் புலம்  பெயர்ந்த  மக்களுக்கிடையே  இருந்த இணைப்பை ஆரம்பத்தில் விரிசலாக்கியது

அதன்  அடுத்த  கட்டமாக 

தாயக  மக்களுடன் தாயக  மக்களும் புலம்  பெயர்ந்த  மக்களும்

புலம் பெயர்ந்த மக்கள்  புலம்  பெயர்ந்த  மக்களுக்கிடையேயும்  மக்கள் தாயக  மக்களுடனும் விரிசலை ஏற்படுத்துகிறது

இது  தான் இன்றைய  நிலமை

இந்த  திரியில்  பேசப்படும்  பொருளில்  அதை  எழுதுபவர்களுக்கே உடன்பாடில்லாதபோதும்

யதார்த்தம்

உணர்ச்சி

களம்

மனசாட்சி என  ஏதோ ஒரு  காரணத்தை  வைத்து எழுதினாலும்

அது  நிரந்தர  தீர்வல்ல என்பது  அனைவருக்கும்  தெரியும்

அது தாயக  மக்களாக  இருந்தாலும் புலம்  பெயர்ந்த  மக்களுக்களாக  இருந்தாலும்.....

கொஞ்சம்  கொஞ்சமாக எல்லோருமே நிரந்தர தீர்வை  விட்டு  தள்ளித்தான்  போய்க்கொண்டிருக்கின்றோம்

ஆனால்  இதற்கு காரணம்  எமது  விருப்பு  வெறுப்பல்ல

எமது  மண்ணை  ஆக்கிரமித்து  நிற்கும்  எதிரி  என்பதையறியாமல்???

நானும்  மாறித்தான்  வருகின்றேன்...

அதை எழுதினால்  கதையாகிவிடும்

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இந்தக் கேள்விகள் எல்லாம் எந்த அடிப்படையில் எழுகின்றது என்றால், அங்கிருப்பவர்கள் முக்கியமாக இளவயது ஆட்கள் வெளினாடுகளுக்கு இன்னும் இன்னும் வெளிக்கிட்டு வந்தால் அங்குள்ள காணிகளை நிலங்களை எவர் பாதுகாப்பது எனும் கேள்விகள் எழுவதால் தான்.

இந்தக் கேள்விகள் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு எழுகின்றதெனில் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அங்குள்ள இளவயதினரில் பெரும்பான்மையானோர் எந்த வழியிலேனும் வெளிநாடு வர வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கின்றனர். அதனால் தான் இந்த திரியின் செய்தியில் இடம்பெற்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு புலம்பெயர் மக்களிடம் அடிக்கடி எழுவதை வெளியிலும் யாழ் இணையத்திலும் அவதானித்துள்ளேன். இது எப்படி இருக்குதென்றால் 2009 இன் முன்னர் தாயக மீட்புக்கு ஆயிரக்கணக்கானோர் தேவைப்படும் நேரத்திலும் அதை கவனத்தில் எடுக்காமல் நான் உட்பட வெளி நாடுகளுக்கு வந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு அவர்கள் அங்கு போராடட்டும் என்று எப்படி நினைத்தோமோ அப்படியே 2009 இன் பின்னும் அங்குள்ள இளவயதினர் வெளிநாடு வராமல் அங்கிருந்து நிலங்களை, காணிகளை, மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்கு பதிலாக அங்கு மீண்டும் எம் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய் குடியேற நினைப்பதில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆபத்துகள் எமக்கு தெரியும் என்பதால்.

இன்னொரு வகையான கருத்தையும் அடிக்கடி காண்கின்றேன். அங்கு நல்ல காசும் நிலமும் இருந்தால் தொழிலோ விவசாயமோ செய்து பிரச்சனை இல்லாமல், வெளி நாடு வரமால் வாழலாம் எனும் சாரப்படும் கருத்து.. இது இன்னொரு விதத்தில் சிங்கள அரசை நல்ல அரசு, அது வசதியான தமிழர்களை ஊக்குவித்து வாழ விடும் என்று சேர்டிபிகேட் கொடுக்க கூடிய கருத்து. 

ஐயா தமிழனுக்கு நல்ல காசு இருந்தாலும் சிங்களம் விடாது, பிச்சைக்காரன் என்றாலும் சிங்கள அரசு விடாது. தொழில் செய்தாலும் விடாது, சும்மா இருந்தாலும் விடாது. இதுதான் யதார்த்தம். இந்த சூழ்நிலையை மாற்றக் கூடிய அரசியல் தலைமையும் அங்கில்லை, ஆதரவான வெளிச்சக்தியும் எங்கும் இல்லை. இந்த யதார்த்த சூழ்நிலையை விளங்கி அங்கிருந்து வெளி நாடு வர எவராவது விரும்பினால் அவருக்கு உதவுங்கள். நாம் எப்படி வந்தோமோ அவர்களும் வந்து தங்கள் வாழ்வை அங்கிருப்பதை விட நிம்மதியாக வாழட்டும்.

யதார்த்தத்தை நெற்றியில் அடித்தால் போல் உரக்க சொல்லியுள்ளீர்.
புலப்பெயர்ந்தோர் எவ்வளவு மாய்மால கதை சொன்னாலும், அவர்கள் திரும்பி நிதாந்தரமாக தாயகம் திரும்பபோவதில்லை. எம்மை பொருளாதார ரீதியில் வலுப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு சாத்தியமாகும், மிகுதி காலம் தான் பதில் சொல்லும்.அறிவற்ற, முட்டாள்தனமான பெரும் சமூக கூட்டத்தை உருவாக்குவதிலும் பார்க்க,  அறிவான, பொருளாதார ரீதியில் வலுவான சமூக கூட்டத்தை(உதாரணத்துக்கு மத்திய கிழக்கு) உருவாக்குவதே  எமது எதிர்கால விமுக்திக்கு வழி சமைக்கும் என்பதே எனது தாழ்மையான கருத்து.
 
Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில் விவசாயம்  செய்தால் தானே ஒரு விளம்பரம்  ஆகும் அதைவிட யூரோப்பில இருக்கிற என்று கொளரவமா சொல்லிக்கொள்ளலாம் .

இங்க குனிந்து மண்வெட்டி பிடிக்க மாட்டினும்  ஆனால் வெளிநாடு போனால் சொல்லுற வேலையெல்லாம் செய்யவேணும் பண வித்தியாசமும் இருக்குதானே பணம் தானே ஒருவனை நல்லவன் நாணயமானவன் என இங்க தீர்மானிக்கிறது 

வெளிநாட்டுக்கு போய் என்ன கக்கூசும் கோப்பையும் தானே கழுவுறியள்  எண்டு எங்களை நக்கலடிச்சுக்கொண்டே காணி வித்தாவது வெளிநாட்டுக்கு வரவேணும் எண்டு நினைக்கிறியள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான் புலம்பெயர்ந்ததை எண்ணி பல இரவு தூக்கங்களை இழந்திருக்கின்றேன். எதற்கு இந்த  பகட்டு வாழ்க்கை/போலி வாழ்க்கை பூமியில் வாழ வேண்டும் என நினைத்திருக்கின்றேன். ஆனால் ஒரு சில தனிப்பட்ட விடயங்களால் பல்லை கடித்துக்கொண்டு வாழ வேண்டிய சந்தர்ப்பத்துக்கு தள்ளப்பட்டேன். இன்று விடியும் நாளை விடியும் நாட்டுக்கு/மண்ணுக்கு திரும்பலாம் என்ற நப்பாசை இன்றும் என்னிடம் நிறையவே இருக்கின்றது.  பிள்ளைகள் விடயத்தில் நான்/நாங்கள் தலையிட முடியாது. அவர்கள் இங்கே பிறந்தவர்கள்.இதை செய் என்று சொல்லும் அதிகாரமும் எமக்கு இல்லை. என்னையும் மனைவியையும் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். எனது இந்த நிமிட சிந்தனை வரைக்கும் ஊருக்கு சென்று வாழ்வதுதான் எனது நிலைப்பாடு. நான் பிறந்து வளர்ந்து இப்படி ஜேர்மனிக்கு வருவேன். இவ்வளவு காலம் இங்கிருப்பேன் என எள்ளளவும் நினைத்ததில்லை. இன்றும் ஏதோ கனவு போல் இருக்கின்றது.இது  எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான புலம்பெயர் மக்களுக்கு இருக்கும் நிலை.

இன்றைய இலங்கை நாட்டு அரசியலை வைத்து ஒரேயடியாக நாம் எந்த முடிவிற்கும் வந்து விட முடியாது. கால நிலை போல் அதுவும் வந்து போகும். உலக அரசியல் மாறிக்கொண்டு வருகின்றது. அதற்கேற்ப இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அரசியல் நிலமை மாற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். அமெரிக்காவில் இனவாதம் இருக்கின்றது. அதற்காக கறுப்பினத்தவர்கள் ஆபிரிக்காவிற்கு திரும்பி போக முடியுமா என்ன?

இலங்கையில் இப்போதிருக்கும் அரசியல் இனவாதிகள் அழிய புதியதொரு தலை முறையில் சமத்துவ அரசியல் உண்டாகும் என பலதரப்பட்ட கருத்துக்கள் உலாவுகின்றது. இனி வரும் காலங்களில் இனவாத அரசியல் எடுபடாது என்பதற்கு பல நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இலங்கையும் இனவாத அரசியலை நீண்ட காலத்திற்கு கொண்டு செல்ல முடியாது. இனவாதம் என்பது மூடத்தனமாகவே உருப்பெற்று விட்டது. இந்த வகையில் இனவாதம் உரிமை மறுப்பு என்பது இலங்கையிலும் அழிந்து போகும் காலம் தூரமில்லை.

நாட்டை விட்டு வெளியேறியது முதல் தவறு என உணர்கின்றேன். ஆனால் அன்று அவர்கள் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்றும் எனக்கு தெரியும். இருப்பினும் என் உழைப்பையே அர்ப்பணித்தேன். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது.
நான் என்னை போன்றவர்கள் அன்று வெளியேறியதற்கு ஒரு காரணமுண்டு. அனால் இன்று வெளியேறும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு மட்டுமே. மற்றது ஊரில் நில புலங்கள் இல்லாதவர்களின் முதல் தெரிவும் வெளிநாட்டு வாழ்க்கை தான். அதை அவர்களிடமும் குறை சொல்ல முடியாது தானே? பொருளாதார ரீதியாக புலம்பெயர்ந்தவர்களுக்கு தாயக/சொந்தமண் வலி இருக்காதென நான் நினைக்கின்றேன்.

  சிங்கள இனவாத அரசின் இறுக்கம் தமிழ் மக்கள் மீது அதிகரிக்கின்றது என்பது உண்மைதான்.ஆனால் சிங்கள மக்களும் எத்தனையோ பேர் புலம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களிலும் அகதிகளாக வந்தவர்கள் அதிகம். அவர்களுக்கு என்ன குறை என யாராவது சிந்தித்தார்களா?

புலம்பெயர்ந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் வெளிநாட்டு வாழ்க்கையும் உள்நாட்டு வாழ்க்கையும் எப்படிப்பட்டதென நன்கு தெரியும். ஏனெனில் இரு வாழ்க்கையையும் அனுபவித்த என்னைப்போன்றவர்கள் மட்டுமே. அதனால் தான் சொல்கிறோம்  பிறந்த மண் வாழ்க்கை சிறந்ததென. ஊரில் காசு /வீடு/வசதி இல்லா விட்டாலும் உயிர் வாழலாம். நாட்டின் உதவி தேவையில்லை. இயற்கையின் உதவி 50 வீதம் கிடைக்கும்.

இங்கு ஒரு நாள் மின்சாரம் இல்லா விட்டால் பட்டினிதான். ஒரு நாள் எரிவாயு இல்லா விட்டால் குளிரில் செத்தே போய் விடுவாய்.

புலம்பெயர்ந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் வெளிநாட்டு வாழ்க்கையும் உள்நாட்டு வாழ்க்கையும் எப்படிப்பட்டதென நன்கு தெரியும். ஏனெனில் இரு வாழ்க்கையையும் அனுபவித்த என்னைப்போன்றவர்கள் மட்டுமே. அதனால் தான் சொல்கிறோம்  பிறந்த மண் வாழ்க்கை சிறந்ததென. ஊரில் காசு /வீடு/வசதி இல்லா விட்டாலும் உயிர் வாழலாம். நாட்டின் உதவி தேவையில்லை. இயற்கையின் உதவி 50 வீதம் கிடைக்கும்.

இங்கு ஒரு நாள் மின்சாரம் இல்லா விட்டால் பட்டினிதான். ஒரு நாள் எரிவாயு இல்லா விட்டால் குளிரில் செத்தே போய் விடுவாய்.

விரக்தியால் வரும் கருத்துக்கள் எல்லா நேரங்களுக்கும் சரிவருவதில்லை.போராடினோம் சரிவரவில்லை.மாற்று வழியை தேடவேண்டும்.அடுத் தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என தலைவர் பிரபாகரன் சொன்னது வெளிநாடுகளுக்கு ஓடுங்கோ என்ற அர்த்தம் அல்ல. அடுத்த தலைமுறைக்கு ஏற்ற விதத்தில் போராட்டம் தொடர வேண்டும் என்பதே.

என்னிடம் பணம் இருந்தால் நான் என் சொந்த பந்தங்களை உடனடியாக ஜேர்மனிக்கு கூப்பிடுவேன் என்றால்....நான் தனிச் சிங்களத்திற்கு உதவுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். 😎

அருமையான‌ ப‌திவு தாத்தா ?
சொர்க்க‌மான‌ என‌து த‌மிழீழ‌ நாட்டை விட்டு வெளிக்கிட்ட‌து பெரும் முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல் என்று இப்ப‌ தான் தெரியுது ?

சின்ன‌ வ‌ய‌து சிந்திக்கும் திற‌மை இல்லை பெரிய‌வ‌ர்க‌ளின் சொல்லை கேட்டு ந‌ட‌க்க‌னும் ? 

அவையின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ இந்த‌ நாட்டுக்கு வ‌ந்தேன் ?

நான் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சொல்லுவ‌து ஒன்று ம‌ட்டும் தான் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ராட்டி எப்ப‌வோ என் க‌ல்ல‌றையில் புல்லு முளைத்து இருக்கும்  ?

புலிக்கு பிற‌ந்த‌துக‌ள் பூனை ஆகாத‌ க‌தை மாதிரி என் வாழ்க்கையும் எப்ப‌வோ போர்க்க‌ள‌த்தில் முடிந்து இருக்கும் ?

த‌லைவ‌ரும் எம் அமைப்புக‌ளும் இருந்த‌ போது தான் தாத்தா அது நாடு மாதிரி இருந்த‌து ? 

இப்ப‌ நீங்க‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ ஊரும் ச‌ரி நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ ஊரும் ச‌ரி கொஞ்ச‌க் கால‌ம் த‌ன்னும் வாழ‌ மாட்டோம் , நாட்டு நில‌மை முற்றிலும் மாறு ப‌ட்டு போச்சு தாத்தா ?

த‌மிழீழ‌த்தில் இனி வாழுவில் ந‌ம்ம‌ட‌ சொந்த‌ ஊரை விட்டு குறைந்த‌து 10 கிலோ மீட்ட‌ர் த‌ள்ளி ம‌ற்ற‌ ஊர்க‌ளில் வீடு க‌ட்டி வாழுவ‌து ந‌ல்ல‌ம் தாத்தா ?

த‌மிழீழ‌த்தில் அழ‌கான‌ அமைதியான‌ ஊர்க‌ள் ப‌ல‌ உண்டு அப்ப‌டியான‌ ஊர்க‌ளில் வாழ‌ விரும்பினா பிடித்த‌ மாதிரி வீட்டை க‌ட்டி போட்டு வாழ‌லாம் தாத்தா ?

என்ற‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் எல்லாருக்கும் புல‌ம்பெய‌ர் நாட்டு வாழ்க்கை வெறுத்து போச்சு , இப்ப‌வே கோடி காசை கொட்டி வீடுக‌ளை க‌ட்ட‌ தொட‌ங்கிட்டின‌ம் 
இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் க‌ழித்து ஊரில் போய் வாழ‌ போகின‌மாம் உண்மையில் இது முற்றிலும் வ‌ர‌வேற்க‌ ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று ?

வாழும் வ‌ரை நிம்ம‌தியா வாழுவோம் தாத்தா க‌வ‌லை வேண்டாம் ?

எங்க‌ளின் முத‌ல் ச‌ந்திப்பு எங்க‌ளின் நாட்டில் கூட‌ இருக்க‌லாம் 🙏 ,

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டுக்கு போய் என்ன கக்கூசும் கோப்பையும் தானே கழுவுறியள்  எண்டு எங்களை நக்கலடிச்சுக்கொண்டே காணி வித்தாவது வெளிநாட்டுக்கு வரவேணும் எண்டு நினைக்கிறியள்? 😎

அதைத்தான், நிழலிக்கு சொல்ல வந்தேன்.

அவர் IT துறையில் இருந்து கொண்டு, மத்திய கிழக்கில் இருந்து, இலகுவாக, குடிபெயர்ந்து, அதுபோலவே அனைவரும் வெளிநாடு வந்து சுபமாக வாழலாம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது.

frontline வேலைகள் செய்வதால் தான், எமது சமுகத்தில், கொரோனா இழப்புகள் அதிகம் என்பதை புரிந்து இருக்கிறாரா அல்லது, டிவியில் பம்மாத்துக்கு கதைப்பார்களே, தென் ஆசிய, ஆப்பிரிக்க மக்கள், dna கோரோனோ தாக்கத்துக்கு கூடுதலாக உள்ளாகிறது என்று, அதனை நம்புகிறாரோ என்று தெரியவில்லை.

ஊரில, கக்கூசு கழுவுவது, ஆடு மாடு மேய்கிறது கவுரவம் இல்லை. இங்கே, அந்த வேலையாவது இருக்குமா நிலை. இதுக்குள் அங்கு இருந்து ஆட்களை கொண்டு வந்து இறக்க வேணுமாம்.

முடிந்தால், IT துறையில் பயில உதவுங்கள். அவர்களே, உங்களைப்போல, விசா எடுத்து வந்து நல்ல வேலை செய்வார்கள்.

14 hours ago, Nathamuni said:

நிழலி,

அப்பாவித்தனமான, அதவேளை அபத்தமான கருத்து என்பேன்.

போர்த்துகேயன் வந்து பிடித்து ஆண்டான், அவன் பின்னால் ஒல்லாந்தன் வந்து ஆண்டான். 300 வருசம், அவர்கள் செய்யாத கொடுமைகளா, சிங்களவன் இந்த 73 வருசங்களில், செய்தது? 

அவர்கள் காலத்தில், இவர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்று, எமது முன்னோர்கள், சுதந்திரமாக இருந்த, தமிழகம் ஓடிபோகவில்லையே.

சிங்களவனுக்கும், அடி கொடுத்துத்தானே  இருந்தோம். 

உண்மையில், சிங்களவன் சகல ராசதானிகளையும் இழக்க, நாம் தானே, பிரிட்டிஷ் காரண வரும் வரை, தேசத்தில், வன்னி ராஜ்ஜியத்தையும், கண்டி ராஜ்ஜியத்தையும் தணித்து ஆண்டிருந்தோம்.

அண்மையில் கூட, 1987ல், சிங்களவன் பதுங்கி இருக்க, நாமே போராடி, இந்திய ராணுவத்தினை வெளியே அனுப்பினோம்.

ஆகவே, சிங்களவனனுக்கு பயந்து வர வேண்டும் என்று சொல்வதை அபத்தமாகவே நினைக்கிறேன்.

வேண்டுமானால், வந்து பார்த்து போங்கள் என்று சொல்லுங்கள். 

நீங்கள், IT  காரர் என்பதால் வாழ்வு பரவாயில்லை ரகம். அதை வைத்து எடை போடமுடியாதே.

ஒவொருவரும் செய்யும் வேலைகள்..... ஊரிலே செய்யமுடியாத வேலைகளா செய்கிறார்கள். எவ்வளவு கடினமான வாழ்வு. பலருக்கு, சமாதான காலமாயிருந்தாலும், இலங்கை போய் வருவது.... ஒரு நிறைவேறாத கனவு.

எனது உறவினர், ஸ்காட்லாந்து வந்து phd செய்து, இவர்கள் தந்து வேலை வேண்டாம் என்று, நாடு திரும்பி, கொழும்பில் வேலை. இப்போது ஊர் போய், யாழ்பாணத்தில் இரண்டு பள்ளிக்கூடங்களில் காலை, மாலை என்று அவர்களே பங்கு போட்டு, இரசாயணவியல், இரண்டு முழு சம்பளத்தில் படிப்பிக்கின்றார்.

வயல், காணி என்று நல்ல வாழ்வு என்கிறார்.

மக்கள், யுத்தத்தினூடு வாழ்ந்தவர்கள். இப்போது வாழ்வது பிரச்னைக்குரியது அல்லவே.

மேலும், போர்த்துகேயனுக்கும், ஒல்லாந்தனுக்கும், பிரிட்டிஷ்காரனுக்கும் வந்தது போலவே, சிங்களத்துக்கும் ஒரு முடிவு வரும், விரைவில். 

எதுவுமே நிரந்தரம் இல்லை.

போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என்று வரிசையாக வந்து இலங்கையை ஆண்ட அந்நியர்கள் தம் மதங்களை பரப்புவதிலும் வளங்களை கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டார்களே ஒழிய தமிழ் மக்கள் மீது இனவழிப்பை செய்யவில்லை. அவர்கள் படை திரட்டி வந்து ஆக்கிரமிக்கவில்லை. மக்களை கொத்து கொத்தாக கொன்றுகுவிக்கவில்லை. பொதுவாக இவர்களால் இவர்களது மிசனறிகளால் தமிழ் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டது என்றே நான் அறிந்துள்ளேன். 

சங்கிலிய மன்னரால் நூற்றுக்கணக்கில் சக தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதைத் தவிர வேறு அந்நியர்கள் வந்து தமிழ் மக்களை கொன்றதாக அறியவில்லை எனவே தமிழ் மக்கள் தமிழகத்து ஓடுவதற்கு தேவை அன்று இருக்கவில்லை. அப்படி அந்நியர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்பை செய்தார்கள் என நீங்கள் அறிந்திருப்பின் நம்பிக்கையான மூலங்களை,வரலாற்று ஆதாரங்களை பகிர்வதன் மூலம் நானும் அறிந்து கொள்ளலாம்

ஆனால் சிங்களவர்கள் மட்டுமே இனவழிப்பை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள். கொத்து கொத்தாக கொன்றழித்த பின்னாலும், யுத்தம் அற்ற காலங்களிலும் அதை சகல வழிகளிலும் தொடர்கின்றார்கள். தமிழர்களின் இன அடையாளங்களை இல்லாமல் செய்து நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் தம் சுயத்தை இழந்து வாழ்கின்றார்களோ அப்படி செய்ய அனைத்து வழிகளிலும் - ஜனநாயக - வழிகளிலும் செய்கின்றார்கள். மகிந்த சகோதரர்கள் மட்டுமல்ல ரணில் / சஜித் காலத்திலும் வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை ஆக்கிரமிப்பு என்று இதனைத்தான் செய்தார்கள் /செய்வார்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எம் இனத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து. அவரின் பின் இன்னொரு விபத்து நடந்து ஒரு நல்ல தலைவன் வர எத்தனை காலம் எடுக்கும் என்று தெரியாது. தை பிறந்தால் வழி பிறக்கும், இரவு வந்தால் பகல் வரும், சூறாவளி வந்த பின் அமைதி வரும் என்ற சம்பிரதாயமான வார்த்தைப் பிரயோகங்கள் கூட தமிழ் மக்களுக்கு பொய்த்துப் போகும் காலம் ஒன்றில் வாழ்கின்றோம். நாளாந்தம் எந்தளவுக்கு அதிகாரங்களின் மூலம் தமிழ் மக்களை நெருக்க முடியுமோ அந்தளவுக்கு நெருக்கும் காலத்தில் வந்து நிற்கின்றோம். இந்த நெருக்குவாரங்களில் இருந்து தப்பி தம் சுய அடையாளங்களை இழக்க விரும்பாமல் எவராவது வெளினாடு வர விரும்பின் அவரை பார்த்து இகழாது, வெளினாட்டில் இருந்து கொண்டு இங்கு வராதே என்று புத்திமதி சொல்லாது அவரை மேலும் மேலும் உற்சாகமூட்டி இங்கு அழைக்கவே விரும்புவேன்.

நன்றி

9 minutes ago, Nathamuni said:

அதைத்தான், நிழலிக்கு சொல்ல வந்தேன்.

அவர் IT துறையில் இருந்து கொண்டு, மத்திய கிழக்கில் இருந்து, இலகுவாக, குடிபெயர்ந்து, அதுபோலவே அனைவரும் வெளிநாடு வந்து சுபமாக வாழலாம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது.

frontline வேலைகள் செய்வதால் தான், எமது சமுகத்தில், கொரோனா இழப்புகள் அதிகம் என்பதை புரிந்து இருக்கிறாரா அல்லது, டிவியில் பம்மாத்துக்கு கதைப்பார்களே, தென் ஆசிய, ஆப்பிரிக்க மக்கள், dna கோரோனோ தாக்கத்துக்கு கூடுதலாக உள்ளாகிறது என்று, அதனை நம்புகிறாரோ என்று தெரியவில்லை.

ஊரில, கக்கூசு கழுவுவது, ஆடு மாடு மேய்கிறது கவுரவம் இல்லை. இங்கே, அந்த வேலையாவது இருக்குமா நிலை. இதுக்குள் அங்கு இருந்து ஆட்களை கொண்டு வந்து இறக்க வேணுமாம்.

முடிந்தால், IT துறையில் பயில உதவுங்கள். அவர்களே, உங்களைப்போல, விசா எடுத்து வந்து நல்ல வேலை செய்வார்கள்.

IT துறையில் வேலை செய்யும் என்னை விட பல நூற்றுக்கணக்கான துறைகளில் வேலை செய்யும் எம்மவர்கள் எவ்வளவோ நல்ல நிலையில் இங்கும் பல நாடுகளிலும் உள்ளனர். சுய தொழில் முன்னேறி  மில்லியனர்களாக உள்ளனர். கையில் வெறும் காசுடன் வந்து கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். 100 பேர் எடுத்தால் 10 பேர் மாத்திரமே வாழ்வு இழந்து, அங்கும் போக முடியாமல் இங்கும் வாழ முடியாமல் குறை கூறிக் கொண்டு இருக்கின்றனர்.ன் அவர்கள் எங்கும் இப்படித்தான் வாழ்வார்கள், அது தாயகத்தில் வாழ்ந்தாலும் சரி, வெளினாடுகளில் வந்து வாழ்ந்தாலும் சரி. இவர்கள் பற்றி எனக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லை. வாழவந்த இடத்தில் இருக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு முன்னேறி, நிம்மதியாக வாழ்வமைத்து கொள்பவர்கள் பற்றியே என் அக்கறை.

தக்கண பிழைக்கும் இங்கு

Edited by நிழலி
ஒரு எழுத்து திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

வெளிநாட்டுக்கு போவதும் உள்நாட்டில் வாழ்வதும் அவரவர் சொந்தத் தெரிவும் விருப்பமும் ஆகும். உள்நாட்டில் கஸ்டப்பட்டு வெளிநாட்டில் வசதியாக வாழ்பவர்களும் உண்டு.. வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உள்நாட்டில் வசதியாக வாழ்பவரும் உண்டு. அது அவரவர் முயற்சிக்கும்.. சுழியன்/சுழிச்சி மூளைக்கும் ஏற்றார் போல அமையும். 

ஆனால்.. எதிர்காலத்தில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பெருந்தொகை பணத்தை செலவு செய்து வந்து.. சட்ட ரீதியாக தங்க உள்ள வாய்ப்பை பரிசீலித்து வருவது நல்லம். காரணம்.. எனி போரை.. புலிகளை சாட்டுச் சொல்லி அசைலம் அடிக்க வாய்ப்புக் குறைவு. அப்படி அடிச்சாலும்.. அந்த வழக்குகளை வெல்வது இலகு அல்ல.

எனவே.. சட்டவிரோத வழிமுறைகளை தெரிவு செய்யும் முன் பலவற்றையும் யோசிச்சு தெரிவு செய்யுங்கள்.

ஆனால் கனடாவுக்கு பொயின்ஸ் அடிப்படையில் நுழைவது பாதுகாப்பானது. மாணவர்களாக வருவது பாதுகாப்பானது. விடுமுறைக்கு வருவது பாதுகாப்பானது. நம்பிக்கைக்குரிய திருமணம் மூலம் வருவது பாதுகாப்பானது. இப்படியான சட்ட வழிமுறைகளை பின்பற்றி வரலாம். 

மக்களை சட்டவிரோத பாதையில் இருந்து சட்டப் பாதைக்கு நகர்த்துவது நல்லம். அவர்களின் எதிர்காலத்துக்கு.

இலங்கையில் சிங்கள பெளத்த ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைக்குப் பயந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு வெளியேற ஊக்குவிப்பது.. இலங்கை சிங்கள ஆட்சியாளர்களுக்கே சாதகமாக அமையும்.  தமிழர்களுக்கு நீண்ட கால நோக்கில் அவர்களை நாடற்றவர்களாக்கும். ஏனெனில்.. வெளிநாடுகளைப் பொறுத்தவரை தமிழர்கள் குடியேறிகள். இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்கள் பூர்வீகக் குடிகள். 

நீங்கள் குறிப்பிட்ட வழி முறைகளில் வருவது  நிறைய பிரச்சினைகளில் இருந்து வெளியே வர உதவியாக இருக்கும். இப்போ எல்லாம் இங்கு ஒரு ஆக்சிடென்ட் வெனிபிற் அலுவலகரை சந்திப்பதாக இருந்தால் கூட முன்னுக்கு பின் எதுவும் முரணாக சொல்லி விட்டு தப்பிச் செல்ல இயலாத நிலையில் தான் சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கிறது.எல்லாம் பொது வெளியில் சொல்ல இயலாது.இப்படி நாளுக்கு நாள் அனைத்து விடையங்களும் இறுக்கமான விதி முறைகள் கொண்டதாகவே வந்து கொண்டு இருக்கிறது.யாரது எதிர் காலம் எப்படி அமையுமோ தெரியாது.. உதாரணம் மட்டுமே பகிர முடியும்.

7 hours ago, nedukkalapoovan said:

நெற் ஸ்லோ ஆகிய தால் இரண்டு தரம் பதிஞ்சுட்டு.சொறி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

என்ன நியாயத்தை கதைக்கிறீர்கள்? 🤦‍♂️

வங்கிக்கு முன்னால், முகமூடி, துப்பாக்கியுடன் நிக்கிறீர்கள். போலீஸ்க்காரன் பிடிச்சு கேட்டால், கொள்ளை நடந்தால் தானே, என்னை பிடிக்கமுடியும். அதுக்கு முன்னம், தொடேலாது எண்டு சொல்லி நியாயம் பிளக்கலாமே?

நோக்கம்: Intention : அதுதான் சட்டத்தின் பார்வை.

15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

படகில் பயணம் செய்து இலங்கை கடல் எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் கைது செய்வது சட்டரீதியானது. மட்டக்களப்பில் லொரியில் ஏறி பயணம் செய்து புத்தளம் வந்து நின்றமை சம்மந்தமாக கடல் படையினருக்கு என்ன வேலை?

மட்டக்களப்பில் இருந்து புத்தளத்துக்கு யாராவது யாரையாவது கடத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதா?

இலங்கை கடல் பரப்புக்கு வெளியில் படகை சட்டவிரோதமாக இயக்குபவர்கள் அல்லது படகு போக்குவரத்தை ஒழுங்கு செய்பவர்கள் கைது செய்யப்பட்டதாக ஏதும் தகவல் உள்ளதா?

கடல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட படகு ஏதாவது கடல் படையால் கைப்பற்றபட்டுள்ளதா?

எனது நீதிமன்றத்துக்கு இப்படி ஒரு விடயம் வந்தால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரும் முன் நிபந்தனை இன்றி விடுதலை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் இவர்கள் எஜன்சிக்கு இவ்வளவு காசு கொடுத்து வருகின்றார்கள் என தெரியவில்லை. கனடாவில் மட்டும் இன்னும் 3‍ , 4 வருடம் 2அல்லது 3 மில்லியன் அளவு மக்களை உள்வாங்க இருக்கின்றார்கள். சாதரண ஒரு டெக்னீசியனாக (plumber / electrician) இருந்தாலே கொஞ்சம் ஆங்கில‌ அறிவை விருத்தி செய்து கொண்டு இலகுவாக குடிபெயரலாம். நாங்கள் இவற்றை படிக்க‌ மாட்டோம். தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள்வர்களும் முன்பில்லாதவாறு இப்பொழுது நாட்டை விட்டு ஓடுகின்றார்கள். 

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு/கேவலமான அரசில் கொள்கைகள். இப்படி நிறைய காரணங்கள்

வயது போனவர்களை இலங்கைக்கு போகவேண்டம் என கூற‌முடியாது. காரணம் நாம் 60 வயதை கடக்கும் போது, எம் மனதிற்கு தெரியும், நாம் இன்னும் சில காலமே வாழோம் என. மனமும் அதை எற்றுக் கொள்ளும் அப்பொழுது சிறுவயதில் வாழ்ந்த  அந்த காலத்திற்கே திரும்ப போகும் ஆசை/நினவுவரும் எஞ்சிய காலத்தை நாம் பிறந்து/வாழ்ந்த இடத்திலேயே கழிக்க விரும்புவோம். இது இயல்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நிழலி,

அப்பாவித்தனமான, அதவேளை அபத்தமான கருத்து என்பேன்.

போர்த்துகேயன் வந்து பிடித்து ஆண்டான், அவன் பின்னால் ஒல்லாந்தன் வந்து ஆண்டான். 300 வருசம், அவர்கள் செய்யாத கொடுமைகளா, சிங்களவன் இந்த 73 வருசங்களில், செய்தது? 

அவர்கள் காலத்தில், இவர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்று, எமது முன்னோர்கள், சுதந்திரமாக இருந்த, தமிழகம் ஓடிபோகவில்லையே.

சிங்களவனுக்கும், அடி கொடுத்துத்தானே  இருந்தோம். 

உண்மையில், சிங்களவன் சகல ராசதானிகளையும் இழக்க, நாம் தானே, பிரிட்டிஷ் காரண வரும் வரை, தேசத்தில், வன்னி ராஜ்ஜியத்தையும், கண்டி ராஜ்ஜியத்தையும் தணித்து ஆண்டிருந்தோம்.

அண்மையில் கூட, 1987ல், சிங்களவன் பதுங்கி இருக்க, நாமே போராடி, இந்திய ராணுவத்தினை வெளியே அனுப்பினோம்.

ஆகவே, சிங்களவனனுக்கு பயந்து வர வேண்டும் என்று சொல்வதை அபத்தமாகவே நினைக்கிறேன்.

வேண்டுமானால், வந்து பார்த்து போங்கள் என்று சொல்லுங்கள். 

நீங்கள், IT  காரர் என்பதால் வாழ்வு பரவாயில்லை ரகம். அதை வைத்து எடை போடமுடியாதே.

ஒவொருவரும் செய்யும் வேலைகள்..... ஊரிலே செய்யமுடியாத வேலைகளா செய்கிறார்கள். எவ்வளவு கடினமான வாழ்வு. பலருக்கு, சமாதான காலமாயிருந்தாலும், இலங்கை போய் வருவது.... ஒரு நிறைவேறாத கனவு.

எனது உறவினர், ஸ்காட்லாந்து வந்து phd செய்து, இவர்கள் தந்து வேலை வேண்டாம் என்று, நாடு திரும்பி, கொழும்பில் வேலை. இப்போது ஊர் போய், யாழ்பாணத்தில் இரண்டு பள்ளிக்கூடங்களில் காலை, மாலை என்று அவர்களே பங்கு போட்டு, இரசாயணவியல், இரண்டு முழு சம்பளத்தில் படிப்பிக்கின்றார்.

வயல், காணி என்று நல்ல வாழ்வு என்கிறார்.

மக்கள், யுத்தத்தினூடு வாழ்ந்தவர்கள். இப்போது வாழ்வது பிரச்னைக்குரியது அல்லவே.

மேலும், போர்த்துகேயனுக்கும், ஒல்லாந்தனுக்கும், பிரிட்டிஷ்காரனுக்கும் வந்தது போலவே, சிங்களத்துக்கும் ஒரு முடிவு வரும், விரைவில். 

எதுவுமே நிரந்தரம் இல்லை.

நாதமுனி, சட்டரீதியாக ஒருவர்தான் நாட்டை விட்டு குடிபெயர்வதை தவறு என்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.