Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது!

இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களுடன் உரையாடல் தொடர்பு இருந்ததாகவம் புலிகளை மீள உருவாக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.

இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டு சந்தேகமும் இவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.

https://newuthayan.com/புலிகளை-மீள-உருவாக்க-முய/

  • கருத்துக்கள உறவுகள்

ஆக தமிழர்களை இலங்கை அரசு நன்றாக கவனிக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி: யாழில் அதிரடியாக நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் இத்தகையதொரு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1210236

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக தமிழர்களை இலங்கை அரசு நன்றாக கவனிக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் 

அரசு முஸ்லிம்களை ,தமிழர்களை  நன்றாக கவனித்தால் தான் ,  சீனாகாரன் அரசை கவனிப்பதை சிங்கள மக்கள் கவனிக்காமல் விடுவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நாலு அப்பாவிகள் என்று தெரியவில்லை .

புலி உருவாக்குவது யூடியூபை  பார்த்து  கொத்துரொட்டி போட்டு பழகும் ரேன்சில் இருக்கிறதாய்  சொறிலங்கா அரசு நினைத்து கொண்டு இருக்குது போல் இருக்கு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

யார் அந்த நாலு அப்பாவிகள் என்று தெரியவில்லை .

புலி உருவாக்குவது யூடியூபை  பார்த்து  கொத்துரொட்டி போட்டு பழகும் ரென்சில் இருக்கிறதாய்  சொறிலங்கா அரசு நினைத்து கொண்டு இருக்குது போல் இருக்கு .

அரச ஆதரவாளர்களுடன் முரண்பட்ட அப்பாவிகாளாக இருக்கும்... அல்லது கஞ்சா கடத்தலில்  ஈடுபட்ட தமிழர்களாக இருக்கும்...அல்லது மாநகர காவல் படை😀

மிக மோசமாக சரிவடைந்து செல்லும் கோத்தாவின் பிம்பத்தையும் மகிந்த் சகோ களின் செயல்திறன் அற்ற ஆட்சியையும் சரிவில் இருந்து காப்பாற்ற இப்படியான கைதுகளும் செய்திகளும் தேவையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியென முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா (வயது-45) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே குறித்த குடும்பஸ்தர் கைதாகியுள்ளார்.

அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் குறித்த நால்வர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த நால்வருடன் தொடர்பினைப் பேணிய குற்றச்சாட்டிலேயே முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்று சந்தேகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1210381

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அரசு முஸ்லிம்களை ,தமிழர்களை  நன்றாக கவனித்தால் தான் ,  சீனாகாரன் அரசை கவனிப்பதை சிங்கள மக்கள் கவனிக்காமல் விடுவார்கள்....

சிங்கள மக்களின் கருத்துக்களை பார்த்தால் அதாவது நூற்றுக்கு ஐம்பது என்று சொல்லலாம் ஏப்றல் தாக்குதலின் பின்னர் நாடு  மகிந்த சகோதரர்களிடம் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் இல்லையென்றால் தற்போதுள்ள விலை வாசிக்கும் பணத் தட்டுப்பாடுக்கு ஆர்ப்பாட்டங்கள் பேராட்டங்கள் பேரணிகள் நடந்திருக்கும் இதை தடுக்கவோ என்னவோ சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா போனவாரம் வழங்கப்பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய கோத்தாபய அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மையான ஆதரவோடு ஆட்சி பீடம் ஏறிய போதிலும் தற்போது சிங்கள மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகிய நிலை காணப்படுகின்றது.

சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான  செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக முழுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். 

குறிப்பாக ஆட்சிக்கு வரும்போது இந்த  அரசாங்கம் நாட்டிற்கு நன்மை புரியும்  நீதியை நிலைநாட்டும் நேர்மையான அரசாக இருக்கும்  எனவும் சிங்கள மக்கள் விரும்பியே இந்த அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கி ஆட்சிபீடம் ஏற்றினார்கள்.

எனினும் தற்போதைய அரசாங்கமானது  இலங்கையின் முக்கிய ஸ்தானங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும்  செயற்பாட்டில் ஈடுபடுவதன் காரணமாக, சிங்கள மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் தமது எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டுவருகிறார்கள்.

வடகிழக்குப் பகுதியில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க எத்தனிக்கின்றார்கள் எனக் காரணங்காட்டி இளைஞர் யுவதிகளை  கைது செய்து சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்காக வடக்கில் பல்வேறுபட்ட கைது நடவடிக்கைகள் இந்த அரசினால் திட்டமிடப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

வட கிழக்கில் புலிகள் மீள உருவாகிறார்கள் ஆனால் கோத்தாபய அரசினால் மாத்திரமே இந்த விடுதலைப்புலிகள் உருவாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற செய்தியினை தென்னிலங்கை மக்களுக்கு தெரிவித்து தென்னிலங்கை மக்களை கோட்த்தாபய மீது நம்பிக்கையினை  ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது உள்ள எதிர்ப்பு உணர்ச்சியை இல்லாமல் செய்வதற்காகவே இந்த வலுக்கட்டாயமான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் இவ்வாறான ஒரு சம்பவம்தான் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் 4 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியானது தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்காக அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் ஒரு காரியம் என  நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் - சார்ள்ஸ் நிர்மலநாதன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

மிக மோசமாக சரிவடைந்து செல்லும் கோத்தாவின் பிம்பத்தையும் மகிந்த் சகோ களின் செயல்திறன் அற்ற ஆட்சியையும் சரிவில் இருந்து காப்பாற்ற இப்படியான கைதுகளும் செய்திகளும் தேவையாக இருக்கின்றது.

நீங்க கனடாவில் இருக்க வேண்டிய  ஆள் அல்ல ஊரில் அரசியல்வாதியாய்  இருந்து இருக்கனும் .

21 minutes ago, பிழம்பு said:

சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்கள மக்களின் கருத்துக்களை பார்த்தால் அதாவது நூற்றுக்கு ஐம்பது என்று சொல்லலாம் ஏப்றல் தாக்குதலின் பின்னர் நாடு  மகிந்த சகோதரர்களிடம் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் இல்லையென்றால் தற்போதுள்ள விலை வாசிக்கும் பணத் தட்டுப்பாடுக்கு ஆர்ப்பாட்டங்கள் பேராட்டங்கள் பேரணிகள் நடந்திருக்கும் இதை தடுக்கவோ என்னவோ சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா போனவாரம் வழங்கப்பட்டுள்ளது 

மே முதலாம் திகதி ஒர் பெரிய ஆர்ப்பாட்டம் ,போராட்டம் நடை பெறும் வாய்ப்பு இருக்கு போல தெரிகிறது...அதற்கிடையில் தமிழர்கள் மீது புலிகளை வைத்து கைதுகளும்,முஸ்லீம்கள் மீது பயங்கரவாதத்தை வைத்து கைதுகளும் நடை பெறும்....இனக்கலவரமும் நடை பெற வாய்ப்பிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் அடாவடிகளை தெரியாதவர்களும்,  பணத்திற்கும், பதவிக்கும், முறையற்ற அந்தஸ்துக்கும் ஆசைப்பட்டவர்களே, பவுத்த மகா  சங்கத்தினரால் அவரை பதவிக்கு கொண்டுவர முடிந்தது. நிலா காட்டி மக்களை ஏமாற்றி, தங்கள் பதவிகளையும், பெட்டிகளையும் நிரப்புபவர்கள். முஸ்லிம்கள் பொலிசாரை கொன்று, ஆயுதங்களை அபகரித்த போது, முன்னாள் போராளிகளை கைது செய்து, சிறையிலடைத்த போதே இவர்களின் திறமை புரிந்திருக்க வேண்டும். அத்தோடு சிங்கள மக்களுக்கு தெரியும் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கினால், தாம் காணாமற் போவோம் என்பதும். தன் பெயரை உச்சரித்த கரின் பெர்னாண்டோவை எச்சரித்த விதம் மக்களுக்கும் சேர்த்துதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

மே முதலாம் திகதி ஒர் பெரிய ஆர்ப்பாட்டம் ,போராட்டம் நடை பெறும் வாய்ப்பு இருக்கு போல தெரிகிறது...அதற்கிடையில் தமிழர்கள் மீது புலிகளை வைத்து கைதுகளும்,முஸ்லீம்கள் மீது பயங்கரவாதத்தை வைத்து கைதுகளும் நடை பெறும்....இனக்கலவரமும் நடை பெற வாய்ப்பிருக்கு

புத்தனின் கருத்து சரியாகவே தெரிகின்றது.

புத்த மகாசங்கத்தினரும்... முறுக்கிக் கொண்டுள்ள நிலையில்,

மே தினத்தை... சமாளிக்க, மீண்டும் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப் படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

மே முதலாம் திகதி ஒர் பெரிய ஆர்ப்பாட்டம் ,போராட்டம் நடை பெறும் வாய்ப்பு இருக்கு போல தெரிகிறது...அதற்கிடையில் தமிழர்கள் மீது புலிகளை வைத்து கைதுகளும்,முஸ்லீம்கள் மீது பயங்கரவாதத்தை வைத்து கைதுகளும் நடை பெறும்....இனக்கலவரமும் நடை பெற வாய்ப்பிருக்கு

மே தின ஊவலம் நடைபெறுவது வழமை ஆனால் ஆர்ப்பாட்டம் நடந்தால் அரசு அடக்கும் அடக்கியே தீரும் . ஆனால் கைதுகள் நடக்கலாம்  ஆனால் எதையும் எதிர்வு கூற முடியாது இலங்கையை பொறுத்த வரை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மே தின ஊவலம் நடைபெறுவது வழமை ஆனால் ஆர்ப்பாட்டம் நடந்தால் அரசு அடக்கும் அடக்கியே தீரும் . ஆனால் கைதுகள் நடக்கலாம்  ஆனால் எதையும் எதிர்வு கூற முடியாது இலங்கையை பொறுத்த வரை 

சிங்கள மக்களுக்கிடையே பெரிய பிளவுகள் ஏற்பட்டு விட்டதாமே?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, பவுத்த சாம்ராஜ்ஜிய  கனவில், தங்கள் சொந்தச் செலவில், தமக்குத் தாமே சூனியம் வைத்தார்கள் சிங்கள மக்கள்.  இப்போ அனுபவிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தமிழருக்கு  ஆதரவாயும் குரல் எழும்பும். மேர்வின் சில்வாவே கோத்தாவுக்கு எச்சரிக்கை விடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! நிலைமை எவ்வளவு மோசமாயிருக்கு  என்று. எல்லாம் காலம் செய்த கோலம். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

சிங்கள மக்களுக்கிடையே பெரிய பிளவுகள் ஏற்பட்டு விட்டதாமே?

வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் வெளிநாட்டு கடன் கள் இல்லாமல் போனால் இலங்கை திணறும் என்பது அரசுக்கும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

சிங்கள, பவுத்த சாம்ராஜ்ஜிய  கனவில், தங்கள் சொந்தச் செலவில், தமக்குத் தாமே சூனியம் வைத்தார்கள் சிங்கள மக்கள்.  இப்போ அனுபவிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தமிழருக்கு  ஆதரவாயும் குரல் எழும்பும். மேர்வின் சில்வாவே கோத்தாவுக்கு எச்சரிக்கை விடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! நிலைமை எவ்வளவு மோசமாயிருக்கு  என்று. எல்லாம் காலம் செய்த கோலம். 

EzS_JQVVIAMy5qO?format=jpg&name=900x900

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் வெளிநாட்டு கடன் கள் இல்லாமல் போனால் இலங்கை திணறும் என்பது அரசுக்கும் தெரியும் 

ஈழத்தமிழர்களுக்குரிய  பிரச்சனைகளை தீர்த்தாலே ஒரு சல்லிக்காசுகூட  வெளிநாடுகளிட்டை கடன்பட வேண்டி வராது.

கோபுரத்தின் அழகு கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாதாம். அது போலத்தான் ஈழமும். சொந்த மண்ணின் அருமை புலம்பெயர்ந்தவனுக்குத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களுக்குரிய  பிரச்சனைகளை தீர்த்தாலே ஒரு சல்லிக்காசுகூட  வெளிநாடுகளிட்டை கடன்பட வேண்டி வராது.

கோபுரத்தின் அழகு கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாதாம். அது போலத்தான் ஈழமும். சொந்த மண்ணின் அருமை புலம்பெயர்ந்தவனுக்குத்தான் தெரியும்.

எங்களை சமமாக நடத்தி. எங்களையும் எமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமை கொண்டவர்களாக வாழ விட்டிருந்தால், தமிழ் தேசமும் சிங்கள தேசமும் ஒருமித்தே வளர்ந்திருக்கும். எம்மை அடக்கியாள வேண்டும் என்கிற வெறியினால் உந்தப்பட்டு இன்று எம்மையும் அழித்து, தனது தேசத்தையும் சீனனின் கையில் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது பெளத்த சிங்களப் பேரினவாதம்.

ஆனால், தமிழனை அடக்கி, அடிமை கொள்ளலுடன் ஒப்பிடும்போது, சீனனின் இன்னொரு காலணித்துவ நாடாக இருப்பதில் சிங்களவர்களுக்குக் கவலையில்லை என்றே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலிகளை மீள உருவாக்குவது தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களும் சிங்கள இராணுவத் தலைமைகளுமே கைது செய்யப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ரஞ்சித் said:

ஆனால், தமிழனை அடக்கி, அடிமை கொள்ளலுடன் ஒப்பிடும்போது, சீனனின் இன்னொரு காலணித்துவ நாடாக இருப்பதில் சிங்களவர்களுக்குக் கவலையில்லை என்றே தெரிகிறது.

சிங்கள மக்கள் கவலைப்படும் தூரமும் அதிகமில்லை. இனவாத ஆட்சியாளர்களின் பாரதூரங்களை அவர்களும் அறியாமல் இல்லை. என்ன ஒன்று  சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை சிங்கள மக்கள் உணர தலைப்படவில்லை. இந்தியாவை போல் ஒரு சில இலவசங்கள் காட்டி மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களை ஏமாற்ற புலிப்பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்!

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்க புலிப் பூச்சாண்டி காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (19) ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

கோத்தாபய அரசாங்கம் பதவிக்கு வந்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகமுன்னரே மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதாவது பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, காடழித்தல், வேலையில்லா பிரச்சினை, தமிழர் இடங்களை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்துதல், முக்கிய இடங்களை பிற நாடுகளுக்கு விற்றல் போன்ற விடயங்கள் பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

அந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக வட வகுதியில் குறிப்பாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் உட்பட ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என வகைதொகையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த கைதுகள் தென்பகுதியில் உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காக இந்த அரசினால் முன்னெடுக்கப்படும் ஒரு நாடகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இங்கே கோத்தாபய அரசானது புலிகள் மீள உருவாவதை கட்டுப்படுத்துகின்றது என்றும், இங்கே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறது என்றும் சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே இந்த செயற்பாடுகளை மும்மரமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய உரிமை. அந்த எதிர்ப்புகுரிய காரணத்தை கண்டறிந்து சரி செய்ய முன்வர வேண்டும். அதை விடுத்து வடக்கில் ஒரு புலிப் பூச்சாண்டியை காட்டி தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்வதை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

அந்த கைதுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளிடம் வருகின்றன. இதன் காரணமாக மூன்று மாதத்திற்கு மேலாக தடுத்து வைத்து விசாரிப்பார்கள். இதன்மூலம் கைதானவரின் குடும்ப நிலைமை, வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்ளது இந்த அரசாங்கம். – என்றார்.
 
https://newuthayan.com/சிங்கள-மக்களை-ஏமாற்ற-புல/

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 14:54, putthan said:

கஞ்சா கடத்தலில்  ஈடுபட்ட தமிழர்களாக இருக்கும்...

கஞ்சா கடத்தலில்  ஈடுபட்டுபவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்கள அரசு அவர்களைக் கொஞ்சி மகிழும். ஏனெனில், இன்று தமிழீழத்தில் மாணவர்களைத் திசைதிருப்பி அவர்களைப் போதையில் வைத்து தமிழ் மக்கள் நிம்மதியைக் கெடுக்கக் சிங்கள அரசியல்வாதிகளுக்கு கஞ்சாவும் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.