Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, Nathamuni said:

வைரமுத்தரை பத்தி கதைத்தால், கருணாநிதியை கொண்டு வந்து இழுப்பது ஏன் என்று புரியவில்லை. நானும் எஸ்கேப்....

பாலியல் குற்றங்கள் என்று பார்த்தால் கருணாநிதியும் உள்ளடங்குவார். ஸ்டாலினும் உள்ளடங்குவார். உதயநிதியும் உள்ளடங்குவார்.😁

எனவே அவர்களை அரசியலை மட்டும் கதைக்கச்சொல்லுங்கள். 🤣

  • Replies 180
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையா அல்லது பாடலா அல்லது வெறும் வெற்று வரிகளா என மதிப்பீடு செய்வது அவரவர் சுய விறுப்பு, வெறுப்பு. ஆனால் சாதாரண தமிழ் பேசும் மக்கள் காதுகளிற்கு வைரமுத்து பேசும் மொழி மிகவும் பரீட்சயமானது. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு மட்டங்களில் தமிழில் தமது புலமையை வெளிப்படுத்தினார்கள். வைரமுத்து அவர்கள் சினிமா என்கின்ற ஊடக சாதனத்தில் உலகெங்கும் ஒலித்தார். கண்டம் விட்டு கண்டம் நாங்கள் விமானத்தில் பயணம் செய்தது தொடக்கம்... மிக நீண்ட புகைவண்டி, பேருந்து, கார் ஓட்ட பயணங்களில் வைரமுத்து பேசும் மொழியை கேட்டு ரசித்தபடி காலத்தை கடந்தோம்.

எத்தனைவிதமான கற்பனைகள்... எத்தனைவிதமான விபரணங்கள்.. ஆண்களையும், பெண்களையும் காதலில் பித்துகொள்ள வைத்ததில் வைரமுத்துவின் வரிகளிற்கு அதிக பங்குண்டு. அவர் வரிகள் வீரியம் மிக்கவை. போதையை தரக்கூடியவை.

ஒரு கலைஞன், கவிஞன், ஒரு முழுநேர படைப்பாளி வாழும் வாழ்க்கை, உலகம் வேறுப்பட்டது. அவனது/அவளது ரசனைகள், பார்வைகள் வேறுபட்டன. நாம் தரிசிக்க முடியாத கோணத்தில் அவன்/அவள் தான் காணும் வண்ணமயமான வாழ்வின் கோலங்களை எங்களுக்கு எழுத்தில் வடிக்கின்றான்/றாள். அவன்/அவள் மனதளவில் ஒரு குழந்தையாகக்கூட கிடக்கலாம். 

ஒருவரின் பலவீனம் அறிந்து, ஏதாவது உட்காரணங்களுக்காக, கடைசிவரை வெளி உலகுக்கு தெரியமுடியாத உள் நோக்கங்களுக்காக யாரும், எவரையும் இந்த சோசல் மீடியா உலகில் போட்டு தாக்கலாம். யார் என்ன பித்தலாட்டம் உண்மையில் செய்கின்றார்கள் என்று சாதாரண பொதுசனம் அறிவது கடினம். 

வைமுத்து அவர்களுக்கு இப்போது அகவை 67. அவர் தனது ஆயுட்காலத்தில் இன்னும் எத்தனை படைப்புக்களை செய்வாரோ தெரியாது. சமூக அழுத்தங்கள் அவர் படைப்பாற்றலுக்கு குந்தகம் விளைவிக்கலாம். ஒரு சிலர் அவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய தேசிய விருதுகளை தொடர்ந்து தட்டிவிடலாம், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தலாம். ஆனால்..

ஒரு படைப்பாளி அவர் பெறுகின்ற விருதுகள் மூலம் நினைவுகூறப்படுவது இல்லை. ஒரு படைப்பாளியை அவரது படைப்புக்களே நிலைநிறுத்துகின்றன. அவர் உருவாக்கிய படைப்புக்களே அவருக்கு பெருமை சேர்க்கின்றன. இந்தவகையில் வைரமுத்து அவர்கள் தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்கும்வரை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் கேட்கும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பார். இதை எவராலும் தடுக்கமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த மூன்றையும் படிக்கவும் இல்லை. படிக்கவும் போவதில்லை! ஆனால் தமிழை நேசிக்கத்தான் செய்கின்றோம். உண்மையில் மகாபாராதத்தை நவீன காவியமாக மீண்டும் தந்த ஜெயமோகனின் வெண்முரசு (26 நாவல்கள்) படித்தால் தமிழின் செழுமை புரியும்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியர். அவரது திரைப்பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவர் நல்ல கவிஞர் இல்லை.

படிக்கவும்போவதில்லை...

எங்கோ இடிக்குதே...😜

1 hour ago, கிருபன் said:

சாரி.  நான் நாலாந்தர கொசிப்புக்களை படிப்பது குறைவு. படித்தாலும் நீதி சொல்லும் அளவிற்கு கனவான் இல்லை.😏

அப்படியா..🤥

1 hour ago, குமாரசாமி said:

தமிழ் வளர்த்த பல ஆங்கிலேயர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தமிழன் என்றா அழைக்கின்றீர்கள்?

ஐயா 

எப்படியையா இப்படி யோசிக்கிறீர்கள்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை விஜலட்சுமி பொழைப்பு நாறுது ஒருபக்கம் சிரிரெட்டி பொழைப்பு இன்னொரு பக்கம்.. நேர்தைக்கு சாந்தி என்றொரு நடிகை அதிமுக முன்னால் அமைச்சர் மீது குற்றம் வைக்குது தன்னை ஏமாற்றிவிட்டதாக.. என்னடான்னு பாத்தா அந்தாளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகுட்டி இருக்கு ஆனா இந்த அம்மாகூட பிஸ்னஸ் பண்ணினப்போ இந்தம்மாவை புடிச்சு போய்கேட்க இவவும் அவர்கூட வாழ்ந்தாவாம் இப்போ துரத்தி விட்டாரம் தான் ஏமாற்றப்பட்டேனாம் நிரபராதியாம்... ஒரு காலம் இருந்தது ஆனால் இன்று அது தலைகீழாக மாறுகிறது வளர்ச்சி அடைந்த நகரப்புறப்பெண்களிடமும் மேலைநாடுகளிலும் ஏழை அப்பாவி பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை இந்த நாகரீக பெண்கள் தங்கள் சுகபோக உல்லாசங்களுக்காக ஆண்களிடம் பழகிவிட்டு தனிப்பட்ட விடயங்களுக்கு கோபதாபங்களுக்கு அதை இந்த ஏழைப்பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை வளைத்து போடுகின்றனர்.. இதனால் பாதிக்கப்படுவது உண்மையாக பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகும் கிராமப்புற எழைப்பெண்கள்தான்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

கவிதையா அல்லது பாடலா அல்லது வெறும் வெற்று வரிகளா என மதிப்பீடு செய்வது அவரவர் சுய விறுப்பு, வெறுப்பு. ஆனால் சாதாரண தமிழ் பேசும் மக்கள் காதுகளிற்கு வைரமுத்து பேசும் மொழி மிகவும் பரீட்சயமானது. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு மட்டங்களில் தமிழில் தமது புலமையை வெளிப்படுத்தினார்கள். வைரமுத்து அவர்கள் சினிமா என்கின்ற ஊடக சாதனத்தில் உலகெங்கும் ஒலித்தார். கண்டம் விட்டு கண்டம் நாங்கள் விமானத்தில் பயணம் செய்தது தொடக்கம்... மிக நீண்ட புகைவண்டி, பேருந்து, கார் ஓட்ட பயணங்களில் வைரமுத்து பேசும் மொழியை கேட்டு ரசித்தபடி காலத்தை கடந்தோம்.

எத்தனைவிதமான கற்பனைகள்... எத்தனைவிதமான விபரணங்கள்.. ஆண்களையும், பெண்களையும் காதலில் பித்துகொள்ள வைத்ததில் வைரமுத்துவின் வரிகளிற்கு அதிக பங்குண்டு. அவர் வரிகள் வீரியம் மிக்கவை. போதையை தரக்கூடியவை.

ஒரு கலைஞன், கவிஞன், ஒரு முழுநேர படைப்பாளி வாழும் வாழ்க்கை, உலகம் வேறுப்பட்டது. அவனது/அவளது ரசனைகள், பார்வைகள் வேறுபட்டன. நாம் தரிசிக்க முடியாத கோணத்தில் அவன்/அவள் தான் காணும் வண்ணமயமான வாழ்வின் கோலங்களை எங்களுக்கு எழுத்தில் வடிக்கின்றான்/றாள். அவன்/அவள் மனதளவில் ஒரு குழந்தையாகக்கூட கிடக்கலாம். 

ஒருவரின் பலவீனம் அறிந்து, ஏதாவது உட்காரணங்களுக்காக, கடைசிவரை வெளி உலகுக்கு தெரியமுடியாத உள் நோக்கங்களுக்காக யாரும், எவரையும் இந்த சோசல் மீடியா உலகில் போட்டு தாக்கலாம். யார் என்ன பித்தலாட்டம் உண்மையில் செய்கின்றார்கள் என்று சாதாரண பொதுசனம் அறிவது கடினம். 

வைமுத்து அவர்களுக்கு இப்போது அகவை 67. அவர் தனது ஆயுட்காலத்தில் இன்னும் எத்தனை படைப்புக்களை செய்வாரோ தெரியாது. சமூக அழுத்தங்கள் அவர் படைப்பாற்றலுக்கு குந்தகம் விளைவிக்கலாம். ஒரு சிலர் அவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய தேசிய விருதுகளை தொடர்ந்து தட்டிவிடலாம், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தலாம். ஆனால்..

ஒரு படைப்பாளி அவர் பெறுகின்ற விருதுகள் மூலம் நினைவுகூறப்படுவது இல்லை. ஒரு படைப்பாளியை அவரது படைப்புக்களே நிலைநிறுத்துகின்றன. அவர் உருவாக்கிய படைப்புக்களே அவருக்கு பெருமை சேர்க்கின்றன. இந்தவகையில் வைரமுத்து அவர்கள் தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்கும்வரை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் கேட்கும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பார். இதை எவராலும் தடுக்கமுடியாது. 

உங்கள் எழுத்துக்கள் வரவர நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். (காப்பி பண்ணி ஒட்டவில்லை என்று நினைக்கிறேன்?

23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நடிகை விஜலட்சுமி பொழைப்பு நாறுது ஒருபக்கம் சிரிரெட்டி பொழைப்பு இன்னொரு பக்கம்.. நேர்தைக்கு சாந்தி என்றொரு நடிகை அதிமுக முன்னால் அமைச்சர் மீது குற்றம் வைக்குது தன்னை ஏமாற்றிவிட்டதாக.. என்னடான்னு பாத்தா அந்தாளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகுட்டி இருக்கு ஆனா இந்த அம்மாகூட பிஸ்னஸ் பண்ணினப்போ இந்தம்மாவை புடிச்சு போய்கேட்க இவவும் அவர்கூட வாழ்ந்தாவாம் இப்போ துரத்தி விட்டாரம் தான் ஏமாற்றப்பட்டேனாம் நிரபராதியாம்... ஒரு காலம் இருந்தது ஆனால் இன்று அது தலைகீழாக மாறுகிறது வளர்ச்சி அடைந்த நகரப்புறப்பெண்களிடமும் மேலைநாடுகளிலும் ஏழை அப்பாவி பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை இந்த நாகரீக பெண்கள் தங்கள் சுகபோக உல்லாசங்களுக்காக ஆண்களிடம் பழகிவிட்டு தனிப்பட்ட விடயங்களுக்கு கோபதாபங்களுக்கு அதை இந்த ஏழைப்பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை வளைத்து போடுகின்றனர்.. இதனால் பாதிக்கப்படுவது உண்மையாக பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகும் கிராமப்புற எழைப்பெண்கள்தான்

என் ராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா புகழ் நடிகை சுகன்யாவை வளைத்து போட்டார் அமைச்சர் கண்ணப்பன்.

கவுதமியை வைத்து இருந்தார் கமலஹாசன். அவர் மகள் வயதாகி வளர்ந்து வர, 'மகள்' பாதுகாப்புக்காக என்று கமலை விட்டு விலகினார்... (புரிகிறதா)

இந்த சினிமாவே நாறுத்தல் ரகம்..... 

****

கந்தையர் அம்பத்தியேழு எல்லாத்துக்கும் ஒரு குத்து (பச்சையினை சொல்கிறேன்) போடுறாரே... என்ன விசயம்... ஓ சனிக்கிழமை இரவு...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து - தமிழ்விற்று பணம்பார்க்கும் ஆண் விபச்சாரி !

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நாதமுனி,

எழுத்தாணியை டெஸ்க்டொப்பில் நிறுவி நேரடியாக தமிழில் எழுதுவதாலும், இப்போது நேரமும் உள்ளதாலும் சற்று விரிவாக எழுத முடிகின்றது. வழமையாக அவ்வப்போது கைத்தொலைபேசி மூலம் வருவதாலும், மற்றும் இங்கு விவாதங்களில் ஈடுபட ஆர்வம் இல்லாதபடியாலும் அதிகம் எழுதுவதில்லை. 

வைரமுத்து பற்றி அவர் எழுத்தாற்றல் சம்மந்தமாக எனக்கும் சுய மதிப்பீடுகள் உள்ளன. ஆயினும் எமது விறுப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் வைரமுத்துவின் எழுத்துக்கள் தமிழ்கூறும் நல் உலகம் மீது செலுத்திய பாதிப்புக்களை எவரும் குறைத்து  மதிப்பீடு செய்ய முடியாது. 

பச்சையாக சொல்வதானால் வைரமுத்து தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறப்பதே பலருக்கு வயித்து எரிச்சல். குறிப்பாக தங்களை இலக்கியவாதிகள் என இனம் காட்டிக்கொள்பவர்கள் பலருக்கு வைரமுத்து அவர்கள் என்றாலே அலர்ஜி.

வைரமுத்துவின் வரிகள் சில்லறைத்தனமானவை என்பதை நிறுவி சுய இன்பம் காண்பது பலருக்கு பொழுதுபோக்கு. சாதாரண மக்களுக்கு புரியமுடியாத பாசையில் இலக்கியம் எனச்சொல்லி எதையாவது கிறுக்குவது. பின்னர் மக்களின் போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனும் ஏமாற்றத்தில் படைப்பாளி மீது பொறாமை கொள்வது... தமிழ் இலக்கிய பரப்பில் இவை எல்லாம் புதியவை அல்ல.

அந்தக்காலத்தில் கவிஞர் கண்ணதாசன் மீது வெறுப்பை உமிழ்ந்த எத்தனையோ தமிழ் இலக்கியவாதிகள் உள்ளார்கள். 1980களில் வந்த தமிழ் இலக்கியப்பரப்பு உரையாடல்களை கூர்ந்து கவனித்தால் இவை எல்லாம்; வியாதி என்றும் சொல்லலாம் விரிந்து கிடப்பதை, புலப்படுவதை காணலாம்.

தமிழ் சினிமா ஊடகத்தின் மூலம் மக்களை கவர்ந்து தமிழ் மக்கள் மனங்களில் இலகுவாக இடம்பிடித்தது கண்ணதாசன், வாலி, வைரமுத்து செய்த தவறுகள் இல்லை. இவர்களை வைத்து தாம் என்ன லாபம் பண்ணலாம் என்று ஒரு கூட்டம் அலைகின்றது. 

வைரமுத்துவினால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுபவர் சம்மந்தப்பட்ட தரப்புடன் சட்டரீதியாகவோ அல்லது சமரசம் மூலமோ, பேச்சு வார்த்தை செய்து  ஒரு தவறுக்கு தண்டனை கொடுப்பது, இழப்பீடு பெறுவது ஒரு விசயம். ஒரு பிரச்சனை அத்துடன் முடிந்தது. அப்படி அல்லாமல் ஆயுள் முழுதும் ஒருவரை இலக்கு வைத்து முழுதாக தாக்கி அழிப்பது வேறு.

ஆயிரம் ஆயிரமாம் பாடல்கள் மூலம் தமிழ் மக்கள் மனங்களுக்கு மருந்து தடவிய ஒரு உளவியல் மருத்துவன் போன்ற ஆற்றல் மிக்க கலைஞனை யாரோ சில முகவரி இல்லாத, சுய விளம்பரம் தேடும் 'மீடூ-நானும்-நானும்' நபர்கள் தமது இஸ்டத்துக்கு சோசல் மீடியாவில் வறுத்து எடுப்பதால் எனது கருத்தையும் இந்த இடத்தில் பொதுவெளியில் பதிவு செய்கின்றேன்.

வைரமுத்து என்கின்ற தமிழ்நதி தடுப்புக்கள் வந்தாலும், திசை திருப்பல்கள் நடந்தாலும் தொடர்ந்து பிரவாகம் எடுத்து ஓடவேண்டும், வாடிப்போயுள்ள வரண்ட தமிழ்  உள்ளங்களை நனைக்க வேண்டும், குளிர்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

எத்தனை பெரியவர்கள் இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ளார்கள். காதும் காதும் வைத்தாற்போல் பிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து இந்த விடயத்துக்கு புற்றுநோய் போல் பரவவிடாமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரஞ்சித் said:

வைரமுத்து - தமிழ்விற்று பணம்பார்க்கும் ஆண் விபச்சாரி !

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதி, நாடகங்கள் இயக்கி, மேடையேற்றி பணம் சம்பாதித்தார். அவர் நாடகம் நடாத்திய குளோப் மன்று இன்றும் உள்ளது. அவரை ஆங்கிலம் வித்து பணம் பார்த்த ஆண் விபச்சாரி என்று சொல்லலாமா?The Globe: Tips, Info, And Visitor Guide For 2020 • Secret London

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் என்ரை விசையம் ஒருத்தருக்கும் தெரிந்திருக்க  வில்லை.😄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வைரமுத்துவின் வரிகள் சில்லறைத்தனமானவை என்பதை நிறுவி சுய இன்பம் காண்பது பலருக்கு பொழுதுபோக்கு. சாதாரண மக்களுக்கு புரியமுடியாத பாசையில் இலக்கியம் எனச்சொல்லி எதையாவது கிறுக்குவது. பின்னர் மக்களின் போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனும் ஏமாற்றத்தில் படைப்பாளி மீது பொறாமை கொள்வது... தமிழ் இலக்கிய பரப்பில் இவை எல்லாம் புதியவை அல்ல.

 வைரமுத்து நல்ல சினிமா பாடலாசிரியர். ஆனால் சிறந்த கவிஞரோ எழுத்தாளரோ அல்ல.

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின்முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.”

மிகுதியை அறிய..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

****

2018 ஜனவரியில் தொடர்ந்து மூன்று வாரங்கள் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் இங்கிலாந்தில், நீதிமன்றத்தால் தூக்கி வீசப்பட்டன.

சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்துமே, குறித்த பெண்களின் கதைகளின் உண்மைத்தன்மையினை பகுத்தறியாது வழக்கு தொடுத்தமைக்கும், போலீசாரையும், முடிக்குரிய வழக்கு தொடரகத்தினை கண்டித்தன. ஒரு வழக்கில், பெண் அனுப்பிய, ஆணை அன்று இரவு ஆணுறை  உடன் வருமாறு கூறிய sms தகவலை நீதிமன்றில் சொல்லாமல் மறைத்தமை தொடர்பில் விசாரணை அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதாவது அந்த பெண்ணே அவரை அழைத்து இருக்கிறார், பின்னர் பாலியல் வல்லுறவு என்று முறைப்பாடு ஒன்றினை (வேறு வாக்குவாதம் ஒன்று அடுத்த நாள் நடந்ததால்) கொடுத்து சிக்க வைக்க முயன்று இருக்கிறார்.

(இதுக்கு லிங்க் கேட்க்காதீங்கோ, தேட நேரமில்லை)😁

டாக்ஸி பணம் கொடுக்கும் பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிய, வெள்ளை பெண், பங்களாதேஷ் டாக்ஸி டிரைவர் தன்னை காரினுள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சொல்லி போலீசார் அந்த டிரைவரை கைது செய்தனர். நல்ல காலமாக, வாக்குவாதம் ஆரம்பித்த போதே, தெய்வாதீனமாக சாம்சுங் தொலைபேசியில் பதிவு செய்ததால் தப்பினார். பெண் 9 மாதம் சிறை சென்றார்.

இதனால் இப்போது, மிக கவனமாக இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆகவே இந்த பெண்கள் குறித்த பாலியல் விவகாரங்களை கவனமாக அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டுமே அன்றி சும்மா எழுந்தமானமாக முடிவு எடுக்க முடியாது.

யாருக்கு தெரியும், நமக்கும் அந்த நிலைமை வரலாம், ஆகவே, பெண்களுடன் தனியே பேசுவதாக இருந்தால், போனை ஓன் பண்ணி வைக்க வேண்டும்.😜

தவிர, நான் நேற்று ஒரு சின்மயி சுஜ வீடியோ பகிர்ந்தேன். சின்மயின் தனி மனி(சி)த   ஒழுக்கம் குறித்த சந்தேகங்கள் எனக்கு உண்டு. ஒரு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், அதுவும் சக பாடகி, சுசி மீது லாகவமாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தான் தப்பிக்க முனைவது, தான் சம்பந்தமான விடயம் எதையோ மறைப்பதாக  அப்பட்டமாக தெரிகிறது.

உண்மையில் சுசி மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை. பாலியல் தாக்குதலால் மன அழுத்தத்தில் இருந்தார். தான் தனுசினால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்று அவரே ட்வீட் செய்து இருந்தார். அந்த மன அழுத்தத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தப்பிக் கொண்டார்கள் அயோக்கியர்கள்.

உண்மையில் நான் தனுசின் எந்த படத்தினையும் பார்ப்பதில்லை. ஒழுக்கம் இன்மை முறைகேடு. பாலியல் பலாத்காரம் கிரிமினல் வேலை.

பாலியல் பலாத்காரம் செய்து, கணவருக்கு பெரும் பணம் கொடுத்து, பெண்ணை மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி, தப்பித்தது எப்படிப்பட்ட கிரிமினல் வேலை என்று யோசித்தால், இந்த சின்மயி குறித்த தகவல்களை வெளியிட்ட அதே பெண்ணை, அதே சின்மயி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி எப்படி, தான் தப்பிக்க முனைகிறார் என்று புரியும்.

***

சுஜியின் டிவீட்டர் கணக்கினை ஹேக் பண்ணியவர்களுக்கு, மார்பிங்க் செய்ய வேண்டிய தேவை என்ன என்று யாரும் கேட்கவில்லை. அந்த பெண் போலீசுக்கு போகாததன் காரணம், அவரின் முன்னைய ஒழுக்கமின்மையாக, அது படம் பிடிக்கபட்டிருக்கலாம் என்ற கவலையாக இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும்.

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.
 
இவை மட்டும் அல்ல, தண்ணீர் தேசமும் இந்த பூக்கள் விற்பனைக்கு இல்லையும் கூட வாசித்தாயிற்று.

வைரமுத்துவை வெறுப்பது

கருணாநிதியுடன் கூட நின்று அந்த அரசியலுக்கு முட்டு கொடுத்ததற்கு.

இன்றும் கருநாதியை தமிழின தலைவர் என்று ஏற்றுவற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

தமிழ் வளர்த்த பல ஆங்கிலேயர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தமிழன் என்றா அழைக்கின்றீர்கள்?

இல்லை. ஒரு பிழையை இன்னெரு பிழையால்  சரியென்று நிறுவமுடியாது.. இந்தக்கேள்வி  நல்லகேள்வி  இது தனிய விவாதிக்க வேண்டிய விடயம்..பொதுவாக ஒரு தமிழன். அனைத்து விடயங்களுக்கும் ஆங்கிலத்தைப்பயன்படுத்துவனாகில்  அவனால். ஆங்கிலம் வளர்கிறது  அவன் பெற்றேர் தமிழராயிருத்தாலும்  அவன் தமிழனில்லை ..அவனைத் தமிழனென்று சொல்லி  தமிழுக்கு என்ன பயன்? மாறாக வேலைக்குமட்டும் ஆங்கிலத்தைப்பயன்படுத்துவது ..எற்கக்கூடியது..தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்டிராதவார்கள் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும்(தங்கள்மொழியைப்பயன்படுத்தக்கூடியதாயிருத்தும்) தமிழைப் பயன்படுத்தினால் அவர்களால் தமிழ் வளர்கிறது அவர்களைத்தமிழரென்று அழைகக முடியும் /அழைக்க வேண்டும். உதாரணமாக. இலங்கையில்  நீர்கொழும்பு. சிலாபம்...போன்ற கரையோரப்பகுதிகளில் வாழ்த்ததமிழர்  சிங்களத்தைப்பயன்படத்தியமையால்.  இன்று சிங்களவராகிவிட்டார்கள்  அவர்களத் இன்று தமிழரேனக் கூறமுடியுமா?இல்லை அல்லவா? மேலும் அவர்களைச் சிங்கவன். சிங்களவர்களாக எற்று விட்டார்கள் இது சிங்களவனின் அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகும். தமிழன் என்பதன் வரைவிலக்கணமென்ன? பெற்றேர்கள் தமிழராயின்  பிளளைகள் தமிழைத் தவிர்த்து வேறு ஒரு மொழியை அனுதினமும் பயன்படுத்தினாலும்  அவர்கள் தமிழர்களா?அவர்களுக்கு தமிழ் தெரித்துயிருத்தும்  அதனைப்பயன்படுத்த விரும்புகிறார்களில்லை  ..ஒரு தமிழ் சிறுவன் தமிழ்பெரியவரைப்பார்த்துக் கேட்டான் நான் ஏன் தமிழ் படிக்கவேண்டும்?(புலம்பெயர்நாட்டில்) பெரியவர் சொன்னார் தொடர்படலுக்கு  மொழி அவசியமென்று

சிறுவன் சொன்னான்  அதை நான் ஆங்கிலத்தால் நன்றாகச் செய்கிறேன் இப்படி எங்கள் சந்ததி படிப்படியாக வேறு இனமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள்  தொடர்த்தும் சிறுபான்மையினாராக  வீழ்ச்சியடைகிறோம் இது எங்கள் விடுதலையை /போராட்டத்தைப் பாதிக்கின்றது. எனவே  எவன்/எவள்  தமிழை தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்களோ அவர்களைத் தமிழரென  எற்க்கவேண்டும்  அவர்களால் தமிழ் வளர்கிறது  இப்படிச் செய்யும்போது நாம் அரசியலில் ஒரு பகுதி வெற்றியடைகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

பாலியல் குற்றங்கள் என்று பார்த்தால் கருணாநிதியும் உள்ளடங்குவார். ஸ்டாலினும் உள்ளடங்குவார். உதயநிதியும் உள்ளடங்குவார்.😁

எனவே அவர்களை அரசியலை மட்டும் கதைக்கச்சொல்லுங்கள். 🤣

விஜயலச்சுமி அண்ணியாரையும் சேர்த்து கொள்ளுங்கள். மறதியில் விடுபட்டு விட்டது என நினைக்கிறேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கருநாணிதி செத்து 1 வருடத்தில் வைரமுத்து செய்த அஞ்சலி.

வைரமுத்து இன்றும் கருணாநிதியை தமிழை பாதுகாத்த தலைவர் என புகழ்கிறார்.

ஒரு இடத்தில்தானும் கருநாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை கண்டிக்கவில்லை.

அந்த நாடகத்தை கருணாநிதியின் எம்மீதான அக்கறை என்று வெள்ளை அடித்தவர்.

கருணாநிதியை அவரின் அரசியலுக்காக எதிர்பவர்கள் அனைவரும் வைரமுத்துவையும் எதிர்க்க வேண்டும்.

ஏனென்னில்

கருணாநிதி அரசியல் = வைரமுத்து அரசியல்.

13 minutes ago, Kandiah57 said:

இல்லை. ஒரு பிழையை இன்னெரு பிழையால்  சரியென்று நிறுவமுடியாது.. இந்தக்கேள்வி  நல்லகேள்வி  இது தனிய விவாதிக்க வேண்டிய விடயம்..பொதுவாக ஒரு தமிழன். அனைத்து விடயங்களுக்கும் ஆங்கிலத்தைப்பயன்படுத்துவனாகில்  அவனால். ஆங்கிலம் வளர்கிறது  அவன் பெற்றேர் தமிழராயிருத்தாலும்  அவன் தமிழனில்லை ..அவனைத் தமிழனென்று சொல்லி  தமிழுக்கு என்ன பயன்? மாறாக வேலைக்குமட்டும் ஆங்கிலத்தைப்பயன்படுத்துவது ..எற்கக்கூடியது..தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்டிராதவார்கள் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும்(தங்கள்மொழியைப்பயன்படுத்தக்கூடியதாயிருத்தும்) தமிழைப் பயன்படுத்தினால் அவர்களால் தமிழ் வளர்கிறது அவர்களைத்தமிழரென்று அழைகக முடியும் /அழைக்க வேண்டும். உதாரணமாக. இலங்கையில்  நீர்கொழும்பு. சிலாபம்...போன்ற கரையோரப்பகுதிகளில் வாழ்த்ததமிழர்  சிங்களத்தைப்பயன்படத்தியமையால்.  இன்று சிங்களவராகிவிட்டார்கள்  அவர்களத் இன்று தமிழரேனக் கூறமுடியுமா?இல்லை அல்லவா? மேலும் அவர்களைச் சிங்கவன். சிங்களவர்களாக எற்று விட்டார்கள் இது சிங்களவனின் அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகும். தமிழன் என்பதன் வரைவிலக்கணமென்ன? பெற்றேர்கள் தமிழராயின்  பிளளைகள் தமிழைத் தவிர்த்து வேறு ஒரு மொழியை அனுதினமும் பயன்படுத்தினாலும்  அவர்கள் தமிழர்களா?அவர்களுக்கு தமிழ் தெரித்துயிருத்தும்  அதனைப்பயன்படுத்த விரும்புகிறார்களில்லை  ..ஒரு தமிழ் சிறுவன் தமிழ்பெரியவரைப்பார்த்துக் கேட்டான் நான் ஏன் தமிழ் படிக்கவேண்டும்?(புலம்பெயர்நாட்டில்) பெரியவர் சொன்னார் தொடர்படலுக்கு  மொழி அவசியமென்று

சிறுவன் சொன்னான்  அதை நான் ஆங்கிலத்தால் நன்றாகச் செய்கிறேன் இப்படி எங்கள் சந்ததி படிப்படியாக வேறு இனமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள்  தொடர்த்தும் சிறுபான்மையினாராக  வீழ்ச்சியடைகிறோம் இது எங்கள் விடுதலையை /போராட்டத்தைப் பாதிக்கின்றது. எனவே  எவன்/எவள்  தமிழை தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்களோ அவர்களைத் தமிழரென  எற்க்கவேண்டும்  அவர்களால் தமிழ் வளர்கிறது  இப்படிச் செய்யும்போது நாம் அரசியலில் ஒரு பகுதி வெற்றியடைகிறோம்

இதை இந்த ஆண்டின் சிறந்த பதிவாக நான் கருதுகிறேன்👏🏾

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தொழில்நுட்பம் அவரவர் மொழிக்கு இன்னும் பத்து வருடங்களில் மரியாதை செலுத்தும் .அது மட்டும் புலம்பெயர் தேசங்களில் தமிழை இழுத்துப்பிடித்து வைத்தால் காணும் இப்பவே யூடுப் போன்றவற்றில் ஆங்கில வசனம்களை தமிழுக்கு மொழிமாற்றும் வசதி வந்துவிட்டது . நெட்பிளிக்ஸ் போன்றவற்றில் இந்திய மொழிகளில் ஹிந்தி போன்றவை வந்துள்ளது சிறிது காலத்தில் தமிழும் வந்துவிடும் தானாக சிந்தித்து தன்னை மெருகேற்றி கொள்ளும் புரோகிராம் மூலம் தமிழில் கதைப்பதை ஒரே நேரத்தில் பல மொழிகளுக்கு மொழிமாற்றும்  கருவி தற்போதே பரிசோதனையில் உள்ளது அரபியில் கதைப்பதை ஆங்கிலத்தில் இலகுவாக தங்குதடையின்றி மொழிபெயர்கிறது .

இன்னுமொன்று இந்த ai  தொழில் நுட்பம் வைரமுத்துவின் கவிதைகளை படித்துவிட்டு தமிழில் வைரமுத்து போலவே சிந்தித்து கவிதை எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

வீரமா முனிவர் இத்தாலியர் தமிழிற்கு பல சேவைகள் செய்துள்ளார்

யூதர்கள் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தங்களை யூத இனமாகவே முன்னிறுத்துவர்.

தங்களை புலம்பெயர்ந்தவர்கள் என்ற வட்டத்துக்குள் நிறுத்தியதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ரஞ்சித் said:

வைரமுத்து - தமிழ்விற்று பணம்பார்க்கும் ஆண் விபச்சாரி !

இதர எழுத்தாளர்கள்,கவிஞர்கள் எல்லாம் என்ன மாதிரி? 😁

ஏன் நமக்கு தமிழ் சொல்லித் தந்த ஆசிரியர்கள் கூட  தமிழை சம்பளத்திற்காகவே எமக்கு சொல்லித்தந்தார்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

விஜயலச்சுமி அண்ணியாரையும் சேர்த்து கொள்ளுங்கள். மறதியில் விடுபட்டு விட்டது என நினைக்கிறேன் 🤣

நான் எழுதியதை சரியாக விளங்கிக்கொண்டிருந்தால் விஜயலச்சுமியை இங்கே கூட்டி வந்திருக்க மாட்டீர்கள்.😜

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நான் எழுதியதை சரியாக விளங்கிக்கொண்டிருந்தால் விஜயலச்சுமியை இங்கே கூட்டி வந்திருக்க மாட்டீர்கள்.😜

முயன்று கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களை விளங்கி கொள்ளும் அளவுக்கு தேறி விடுவேன்🤪.

2 hours ago, பெருமாள் said:

தொழில்நுட்பம் அவரவர் மொழிக்கு இன்னும் பத்து வருடங்களில் மரியாதை செலுத்தும் .அது மட்டும் புலம்பெயர் தேசங்களில் தமிழை இழுத்துப்பிடித்து வைத்தால் காணும் இப்பவே யூடுப் போன்றவற்றில் ஆங்கில வசனம்களை தமிழுக்கு மொழிமாற்றும் வசதி வந்துவிட்டது . நெட்பிளிக்ஸ் போன்றவற்றில் இந்திய மொழிகளில் ஹிந்தி போன்றவை வந்துள்ளது சிறிது காலத்தில் தமிழும் வந்துவிடும் தானாக சிந்தித்து தன்னை மெருகேற்றி கொள்ளும் புரோகிராம் மூலம் தமிழில் கதைப்பதை ஒரே நேரத்தில் பல மொழிகளுக்கு மொழிமாற்றும்  கருவி தற்போதே பரிசோதனையில் உள்ளது அரபியில் கதைப்பதை ஆங்கிலத்தில் இலகுவாக தங்குதடையின்றி மொழிபெயர்கிறது .

இன்னுமொன்று இந்த ai  தொழில் நுட்பம் வைரமுத்துவின் கவிதைகளை படித்துவிட்டு தமிழில் வைரமுத்து போலவே சிந்தித்து கவிதை எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை .

யாழ் களத்தில் குறித்த ஒரு பெயரில் எழுதுவது AI என்று ஒரு பேச்சுள்ளது. உண்மை, பொய் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தொழில்நுட்பம் அவரவர் மொழிக்கு இன்னும் பத்து வருடங்களில் மரியாதை செலுத்தும் .அது மட்டும் புலம்பெயர் தேசங்களில் தமிழை இழுத்துப்பிடித்து வைத்தால் காணும் இப்பவே யூடுப் போன்றவற்றில் ஆங்கில வசனம்களை தமிழுக்கு மொழிமாற்றும் வசதி வந்துவிட்டது . நெட்பிளிக்ஸ் போன்றவற்றில் இந்திய மொழிகளில் ஹிந்தி போன்றவை வந்துள்ளது சிறிது காலத்தில் தமிழும் வந்துவிடும் தானாக சிந்தித்து தன்னை மெருகேற்றி கொள்ளும் புரோகிராம் மூலம் தமிழில் கதைப்பதை ஒரே நேரத்தில் பல மொழிகளுக்கு மொழிமாற்றும்  கருவி தற்போதே பரிசோதனையில் உள்ளது அரபியில் கதைப்பதை ஆங்கிலத்தில் இலகுவாக தங்குதடையின்றி மொழிபெயர்கிறது .

இன்னுமொன்று இந்த ai  தொழில் நுட்பம் வைரமுத்துவின் கவிதைகளை படித்துவிட்டு தமிழில் வைரமுத்து போலவே சிந்தித்து கவிதை எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை .

உங்கள் கருத்து  நான் ஏன் ?தமிழ் படிக்க வேண்டும் என்ற சிறுவனுக்கு வலுச்சேர்ப்பதாயுள்ளது  மொழிப்பெயர்ப்பு மெசின்களுண்டு. இலகுவாக மொழி பெயர்க்க முடியும் எனவே நீ தமிழைப்படியாதேயென்று  சொல்லாமலே சொல்வது போன்றது.  என்னுடையவாதம்  தமிழ்மொழியை தன்னுடைய தேவைகள் அனைத்துக்கும் பயன்படுத்துபவனை. தமிழனாக எற்றுக்கொள்ளுங்களென்பது அவனுடைய தாய்மொழி  என்னாவாகயிருத்தாலும் சரி. அதேநேரம் எமது பிள்ளைகள் 

(எமது வரும்காலச்சந்ததி)  தமிழைத்தவிர்த்து வேறுமொழிகளைப்பயன்படுத்தினால் அவர்கள் தமிழரில்லை என்பதாகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

முயன்று கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களை விளங்கி கொள்ளும் அளவுக்கு தேறி விடுவேன்🤪.

👍🏽  அது....😎

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.
 
வாசிக்காமல் கடந்து போய் விட்டீர்கள் போல! கருணாநிதிக்கு ஈழவர் மீதிருக்காத அக்கறை அந்த நாட்களில் க.நி யின் உள்வட்டத்தில் இருந்த கவிஞருக்கும் இருக்கவில்லை என்று கோசான் சொன்னதற்கே இந்தப் பதில்.

ஒரே மாதிரியான ஏய்ப்பு இருவர் செய்தாலும், ஒருவருக்கு "தமிழ் வளர்ச்சி" குறித்து தலை சாய்த்தல், மற்றவருக்கு தீவிரமான எதிர்ப்பு. 

(இப்ப என்ன பட்ஜ்? சின்மயி என்பதால் "பிராமண எதிர்ப்பு"😄 பட்ஜ்?)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

யூதர்கள் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தங்களை யூத இனமாகவே முன்னிறுத்துவர்.

தங்களை புலம்பெயர்ந்தவர்கள் என்ற வட்டத்துக்குள் நிறுத்தியதும் இல்லை.

யூதர்களைப்பற்றி நீங்கள் சொன்னாது முற்றிலும் உண்மை  ஆனால்  தமிழர் அப்படியில்லையே.  இன்றும்  வெளிநாடுகளில்  படிப்படியாக வேறு இனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

இல்லை. ஒரு பிழையை இன்னெரு பிழையால்  சரியென்று நிறுவமுடியாது.. இந்தக்கேள்வி  நல்லகேள்வி  இது தனிய விவாதிக்க வேண்டிய விடயம்..பொதுவாக ஒரு தமிழன். அனைத்து விடயங்களுக்கும் ஆங்கிலத்தைப்பயன்படுத்துவனாகில்  அவனால். ஆங்கிலம் வளர்கிறது  அவன் பெற்றேர் தமிழராயிருத்தாலும்  அவன் தமிழனில்லை ..அவனைத் தமிழனென்று சொல்லி  தமிழுக்கு என்ன பயன்? மாறாக வேலைக்குமட்டும் ஆங்கிலத்தைப்பயன்படுத்துவது ..எற்கக்கூடியது..தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்டிராதவார்கள் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும்(தங்கள்மொழியைப்பயன்படுத்தக்கூடியதாயிருத்தும்) தமிழைப் பயன்படுத்தினால் அவர்களால் தமிழ் வளர்கிறது அவர்களைத்தமிழரென்று அழைகக முடியும் /அழைக்க வேண்டும். உதாரணமாக. இலங்கையில்  நீர்கொழும்பு. சிலாபம்...போன்ற கரையோரப்பகுதிகளில் வாழ்த்ததமிழர்  சிங்களத்தைப்பயன்படத்தியமையால்.  இன்று சிங்களவராகிவிட்டார்கள்  அவர்களத் இன்று தமிழரேனக் கூறமுடியுமா?இல்லை அல்லவா? மேலும் அவர்களைச் சிங்கவன். சிங்களவர்களாக எற்று விட்டார்கள் இது சிங்களவனின் அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகும். தமிழன் என்பதன் வரைவிலக்கணமென்ன? பெற்றேர்கள் தமிழராயின்  பிளளைகள் தமிழைத் தவிர்த்து வேறு ஒரு மொழியை அனுதினமும் பயன்படுத்தினாலும்  அவர்கள் தமிழர்களா?அவர்களுக்கு தமிழ் தெரித்துயிருத்தும்  அதனைப்பயன்படுத்த விரும்புகிறார்களில்லை  ..ஒரு தமிழ் சிறுவன் தமிழ்பெரியவரைப்பார்த்துக் கேட்டான் நான் ஏன் தமிழ் படிக்கவேண்டும்?(புலம்பெயர்நாட்டில்) பெரியவர் சொன்னார் தொடர்படலுக்கு  மொழி அவசியமென்று

சிறுவன் சொன்னான்  அதை நான் ஆங்கிலத்தால் நன்றாகச் செய்கிறேன் இப்படி எங்கள் சந்ததி படிப்படியாக வேறு இனமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள்  தொடர்த்தும் சிறுபான்மையினாராக  வீழ்ச்சியடைகிறோம் இது எங்கள் விடுதலையை /போராட்டத்தைப் பாதிக்கின்றது. எனவே  எவன்/எவள்  தமிழை தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்களோ அவர்களைத் தமிழரென  எற்க்கவேண்டும்  அவர்களால் தமிழ் வளர்கிறது  இப்படிச் செய்யும்போது நாம் அரசியலில் ஒரு பகுதி வெற்றியடைகிறோம்

இந்தக் கருத்தைப் பலர் இங்கே மனதில் கொண்டிருந்தாலும், இவ்வளவு தெளிவாக யாராலும் எழுதியிருக்க முடியாது. 

ஆனால் இப்படியான விளக்கங்கள் இனத்தூய்மை வாதத்தைப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு விளங்காது. அவர்கள்  "தமிழன்" என்றால் ஏதோ டி.என்.ஏயில் தமிழ் ஜீன் இருக்கிறது என்பது மாதிரி விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். 23 & Me இல் டி.என்.ஏ பரிசோதித்து அவர்கள் நிலையை எடுத்துக் காட்டினாலும் நம்ப மாட்டார்கள்!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.