Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

 இங்கு ஒரு புதிய வீடு வாங்கி குடியமர்ந்த பல அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பலரை எனக்கு தெரியும்.  

நான் இங்கே பலமுறை எழுதியது தான். உண்மையில் உங்களுக்கு எந்த தேசியவாதிகளையும் தெரியாது. கள்ளர் துரோகிகளை தெரியும் பழக்கம். அல்லது உங்களைவிட முன்னைறியவன் எல்லோரும் பணத்தை சுருட்டிய வர்கள் என்று வயித்தெரிச்சலில் இவ்வாறு எழுதுகிறீர்கள்.

உண்மையில் தேசியத்துடன் நின்றவர்கள் இன்றும் விசா இன்றி வேலையின்றி குடும்பம் இன்றி வீடு வாசல் இன்றி மாதா மாதம் காவல்துறையினரிடம் கையொப்பமிட்டு கொண்டு கண்ணீரோடு வாழும் பலரை எனக்கு தெரியும் 

ஆனால் அதை பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள். ஏனெனில் உங்கள் கோளாறு உங்கள் பார்வையில் இருக்கிறது 

  • Replies 275
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

தலை மன்னித்து கொள்ளுங்கள் !
உங்களுக்கு நான் எந்த இடத்திலும் உதவ போவதில்லை 
ஆனால் உங்கள் உதவி எனக்கு தேவை என்று எண்ணுகிறேன் 

அடுத்தவர்கள் சும்மா வந்து உத்தமருக்கு நடிக்கும்போது 
திரியில் நடப்பதை சுட்டி காட்ட வேண்டி வந்துவிடுகிறது 

இதெல்லாம் தேவை இல்லை என்று  நான் முழுமையாக நம்புகிறேன் 
நான் மறைமுகமாக உங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டுவது என்பது 
வெறும் அயோக்கியத்தனம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் 
நேரடியாக எழுதவேண்டும் இல்லை என்றால் விட வேண்டும் 
ஆனால் நாம் செய்வது சரியானது அல்ல ....

இவை உங்களை சீண்டுவதாக  எண்ணினால் 
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 

எனது வாதத்தை மெய்பிக்க நான் முனையவில்லை 
சிலர் உத்தமருக்கு நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்த திரியில் இருந்து ஒதுங்குகிறேன்! 

மருதர்,

இதென்ன மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம்.

உங்களிடம் பிடிக்காததை சொன்னேன் அல்லவா ?

உங்களிடம் பிடித்தது என்ன தெரியுமா?

நீங்கள் சரியென்று நினைபதற்க்காக நின்று வாதாடுவதைதான்.

நீங்கள் என்னை குறிப்பிடாமல் சொன்னாலும் அதை உரிமையாக எடுத்து கதைப்பேன். அப்படி ஒரு அண்ணனுடனான சம்பாசணை போலத்தான் இதை பார்கிறேன்.

இன்னுமொன்றயும் சொல்கிறேன்.

யாழில் இது வெள்ளாடுகளை வெள்ளாடுகளுடன் மோத விட்டு பார்க்கும் காலம். இந்த திரி நெடுகிலும் உங்களை சீண்ட கூடாது என்று ஒரு முடிவோடுதான் இருந்தேன்.

மேலே ஓணாண்டியார் சொன்னது போல, கோசான் உங்கள் வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி வீட்டு ஈசியாக போகும் விசயம் இது.

நான் முன்வைப்பதும் ஒரு circumstantial argument என்பதால், நானும் அதை புரிந்து கொள்வேன்.

இந்த திரியில் நானும் போதியளவு எழுதி விட்டதாகவே உணர்கிறேன்.

இன்னொரு திரியில் சந்திப்போம் 🙏🏾.

பிகு: எனக்கு ஒரு மன சுணக்கமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதுக்கு எல்லாம் சீமான் தயாராக இருந்தாலும் 
நீங்கள் விடவா போகிறீர்கள்?

நீங்கள் என்ன. பொய்யா  சொல்லப்போகிறீர்கள்.  ? ஆம். நான் தான் அவரை விடவில்லை.  இனிமேலும் முதல்வர் ஆக விடப்போவதில்லை. தொடர்த்தும் ஸ்டாலின்  தான் முதல்வர். சீமான் விரும்பினால். அடிகடி போய் செக்கை வேண்டி வரலாம்

சா...சா...செக்கை கொடுக்கலாம்.  எனது பலத்தை நான்  இதுவரை அறிந்து இருக்கவில்லை.  துல்லியாமாக  கண்டுபிடித்து  அறியத் தத்தமைக்கு நன்றி பல.     ஒரு பானை சோற்றுக்கு  ஒரு  சோறு பதம்.  என்பார்கள். சீமான். கொள்கை பற்றி  விவாதிக்க விரும்பவில்லை. காரணம்  தமிழ் நாடடு மக்களின் தீர்ப்புக்கு  தலை வணக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 15:15, தமிழ் சிறி said:

எப்பிடியும்… வாற வெள்ளிக்கிழமைக்குள்ளை தாண்ட வைச்சிடலாம். 🤣

சிறியர் நீங்கள் சாதிச்சுப் போட்டியல்.இன்று வியாழன்.😀

  • கருத்துக்கள உறவுகள்

 

51 minutes ago, சுவைப்பிரியன் said:

சிறியர் நீங்கள் சாதிச்சுப் போட்டியல்.இன்று வியாழன்.😀

Record Breaking GIFs - Get the best GIF on GIPHY

Record GIFs | Tenor

சுவைப்பிரியன்....  
ஆறு நாளில்.... 230 பதிவுகளும், 6600 பார்வையாளர்களும்,  
தமிழக செய்தியில் இடம் பெற்றதை, 

யாழ்.கள  வரலாற்றில்... பொன்  எழுத்துக்களால், பொறிக்கப் பட வேண்டும்.  :grin:  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

சாந்தி அக்கா, கொண்டு வந்து பேசிய விடயங்கள், பண்பே தெரியாத இருவர்: சுந்தரவள்ளி, பழனி. இவர்களது வீடியோக்களை இவர் பார்க்கிறாரோ என்னும் போது, அவரது நேசக்கரம் அமைப்பு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிந்தது, சுட்டிக்காட்டினேன். புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

இத்திரியில் எழுதுவதில்லை என போயிட்டு திரும்ப வந்ததில் யாரும் கோபிக்கமாட்டீர்கள் தானே? 

நாதமுனி மன்னிக்க, பண்பே தெரியாதவர் அண்ணனின் சொக்கத்தங்கம் பழனியின் வீடியோ நீங்கள் பார்ப்பதே இல்லை.  அப்படியென்றால் பழனி பண்பிலுலாத கருத்தாளர் என எப்படி உங்களுக்கு புரிந்திருக்கும்? 

அண்ணனை கேள்வி கேட்கும் சுந்தரவள்ளி பண்பற்ற பேராசிரியர் அவரையும் நீங்கள் பார்ப்பதில்லை. ஆனால் சுந்தரவள்ளி கருத்தை பார்க்கும் அளவு அவ பெரிய ஆள் இல்லை.  அதை எப்படி அறிந்தீர்கள்? 

உங்களுக்கு அல்லது வேறு பலருக்கும் ஒருவரை பிடிக்காதவிடத்து அல்லது நீங்கள் நேசிக்கும் அண்ணன் சீமான் போன்ற தங்கங்களை யாரும் எதுவும் பறையாமல் இருந்தால் அவர்கள் உங்கள் பார்வையில் புனிதர்கள். இந்த வரிசையில் நான் இல்லை. 

இதையிதைத்தான் நான் பார்க்கலாம் கேட்கலாம் என்று எந்த தடையும் எனக்கு நான் போடுவதில்லை. 

சாலினியையும். நான் பார்க்கிறேன்.  ஆனால் பலருக்கு சாலினி வேப்பெண்ணெய்.

கருத்துக்களால் மோதிக்கொள்வோம் தனிமனிதர்களாக பகையை தவிர்ப்பது தான் நன்று. 

சீமான் மீதான உங்கள் பக்தி உங்கள் உரிமை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 07:40, shanthy said:

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

மேலே நான் எழுதிய விடயம் குறித்த போராளிகள் எனது தோழிகள். 

அவர்கள் சீமானை வசைபாடவில்லை.  அவரது அரசியல் எங்களுக்கு விடிவுதரும் என நம்பி ஆதரித்து பணமும் சேகரித்து கொடுத்தார்கள். 

அவர்கள் நம்பிக்கைக்கு சீமான் செய்த உபகாரம் தான் அவர்கள் மீதான பழிசுமத்தல். ஆயினும் அவர்கள் சீமான் மூது சேறடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள்.  

இதை சிலர் சரியாக புரிந்து கொள்ளாமல் அண்ணன் மீது ஆதாரமற்ற குற்றம் என கேள்வி எழுப்பியுள்ளதால் எழுதியுள்ளேன். 

இத்தோடு விடைபெறுகிறேன். 

3 hours ago, தமிழ் சிறி said:

 

Record Breaking GIFs - Get the best GIF on GIPHY

Record GIFs | Tenor

சுவைப்பிரியன்....  
ஆறு நாளில்.... 230 பதிவுகளும், 6600 பார்வையாளர்களும்,  
தமிழக செய்தியில் இடம் பெற்றதை, 

யாழ்.கள  வரலாற்றில்... பொன்  எழுத்துக்களால், பொறிக்கப் பட வேண்டும்.  :grin:  🤣

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும்  தெரியுது

யாழ் கள  உறவுகள்  என்ன  தான் 

அடிபட்டாலும்  கடிபட்டாலும்

கட்டி  பிடித்து உருண்டாலும்

இறுதியில் 

மன்னிச்சிடப்பா

எதுக்கண்ணே  மன்னிப்பு?

எனக்கு  நீ வேண்டும்

உனக்கு நான்  வேண்டும்

எமக்கு எல்லோரும்  வேண்டும்

என்பதாகிவிடுகிறது

இந்த  நிலைக்கு  தான் நானும்  வந்து  கன காலமாகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, appan said:

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

 

1 hour ago, goshan_che said:

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

இந்த அரிய சாதனையை நிகழ்த்தியமைக்காக… 👍🏼👏👏👏

கோசானுடன்…. சேர்த்து இன்னும் நால்வர், பரிசு பெறுவதற்கு தகுதி உடையவர்களாக தெரிவு செய்யப் பட்டிருக்கின்றார்கள். அதில் ஒரு பெண் உறுப்பினரும் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 🤝😀 😂 🤣😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

@goshan_che தானே விருதைப் பெற வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை @தமிழ் சிறி விருதை அறிவிப்பாரென நம்புகிறேன்.

இக்கருத்து தமிழ் சிறி அவர்க ளுக்கு மட்டுமான கருத்து. 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

இப்படியே ஒவ்வொன்றாக தூக்கி வெளியில் விட்டால் கடைசியில் பையில ஒன்றுமில்லாது  போகலாமப்பா🤣🤣🤣

உண்மைதான் அண்ணை. அதனால்தான் வருடகணக்கில் அவதானித்து, பலதை பல கோணங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படியாயினும்,

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் (வாசகர்கள்).

பிகு

பாம்பு உள்ள பையை விட வெறும் பை மேலானது என்பதும் உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான் அண்ணை. அதனால்தான் வருடகணக்கில் அவதானித்து, பலதை பல கோணங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படியாயினும்,

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் (வாசகர்கள்).

பிகு

பாம்பு உள்ள பையை விட வெறும் பை மேலானது என்பதும் உண்மையே.

உண்மை தான்

(பச்சை  புள்ளி கைவசம்  இல்லையாகையால் )

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒன்று மட்டும்  தெரியுது

யாழ் கள  உறவுகள்  என்ன  தான் 

அடிபட்டாலும்  கடிபட்டாலும்

கட்டி  பிடித்து உருண்டாலும்

இறுதியில் 

மன்னிச்சிடப்பா

எதுக்கண்ணே  மன்னிப்பு?

எனக்கு  நீ வேண்டும்

உனக்கு நான்  வேண்டும்

எமக்கு எல்லோரும்  வேண்டும்

என்பதாகிவிடுகிறது

இந்த  நிலைக்கு  தான் நானும்  வந்து  கன காலமாகிவிட்டது

விசுகுயண்ணை  உங்கள் கணிப்பு  தவறு. ...நாங்கள் எங்கே  அடிபட்டோம்.  அல்லது கடிபட்டோம்...?.நாங்கள் அடிபடவுமில்லை....கடிபடவுமில்லை.   எங்களது  கருத்துக்களே. மோதிக்கொண்டன....ஒரு கருத்துக் களத்தில்  கருத்துகள் எவ்வளவுக்கு மோதமுடியுமோ  அவ்வளவுக்கு  மோத வேண்டும்  அப்போதான்  சிறத்த கருத்துக்களம்  உருவாகும். இங்கே  குறுப்புகளின் எண்ணிக்கை. இரண்டு  தான் இது போதாது. நாலு. அல்லது ஐந்தாக. இருப்பது  சிறப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2021 at 05:07, goshan_che said:

 

இனி எந்த கட்சியை நாம் தமிழர் விமர்சனம் செய்தாலும் கல் தலைவர் மீதும் போராட்டம் மீதும்தான் எறியப்படும். 

 

போராடிய இனத்திலுள்ள பலர் தூற்றும்போது தமிழகத்தில் கல்லெறிவது ஆச்சரியத்திற்குரியதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  உங்கள் கணிப்பு  தவறு. ...நாங்கள் எங்கே  அடிபட்டோம்.  அல்லது கடிபட்டோம்...?.நாங்கள் அடிபடவுமில்லை....கடிபடவுமில்லை.   எங்களது  கருத்துக்களே. மோதிக்கொண்டன....ஒரு கருத்துக் களத்தில்  கருத்துகள் எவ்வளவுக்கு மோதமுடியுமோ  அவ்வளவுக்கு  மோத வேண்டும்  அப்போதான்  சிறத்த கருத்துக்களம்  உருவாகும். இங்கே  குறுப்புகளின் எண்ணிக்கை. இரண்டு  தான் இது போதாது. நாலு. அல்லது ஐந்தாக. இருப்பது  சிறப்பு 

எதையுமே

அதன் தன்மையோடு பார்ப்பதே சரியாக வரும்

கண்ணை மூடிவிட்டால்

எதையும் பார்க்காவிட்டால்......???🤣

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்குக் கோபம் வந்தது  பெண்கள் -அது யாராக இருந்தாலும்- கருத்தெழுதும் உரிமைக்கு ஆதரவாக சில "உத்தமர்கள்" குரல் கொடுத்துப் பிரபலமாகி விட்டது தான் போல!

இதில் "உத்தமன்" பட்டத்திற்குத் தகுதியில்லையாயினும் குரல் கொடுத்தவன் நானும் தான் என்பதால் சொல்கிறேன்:

1. கருத்துக்களின் பல்லினத் தன்மையென்பது எழுதுவோர் பல்லினத் தன்மையாக இருக்கும் போது மட்டுமே சாத்தியம். இந்தப் பல்லினத் தன்மை கருத்துகளில் அனுமதிக்கப் படாமையால் தான் எல்லா முட்டைகளையும் ஒரே பெட்டியில் வைத்து ஒரே நாளில் அழித்து விட்டு இப்போது புதிய பெட்டிகள் தேடி அலைகிறார்கள் ஈழவர்கள்.

2. எனவே வித்தியாசமான கருத்துடையோராக இருக்கக் கூடிய அனைவரையும் - பெண்கள், இடைப்பாலினர், பட்டமுடையோர், பட்டமில்லாதோர், நக்கல்பாரிகள்- இப்படி எல்லாரையும் பேச அனுமதியுங்கள்!

3. இப்படிப் பட்ட பல்லினத் தன்மையை ஜீரணிக்க முடியா விட்டால், அல்லது அது உங்களுக்கு அச்சுறுத்தல் என்று தோன்றினால் தாராளமாக வடகொரியா  போன்ற ஏதாவதொரு நாட்டில் சென்று உங்களுக்கேயுரிய homogeneous சுதந்திரத்தை அனுபவியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2021 at 00:06, Nathamuni said:

அப்பிடியானால், நாம் பாம்பு தைலம் கதையினை நம்ப உங்கள் முன்னைய நிலைப்பாடுகள் பாதிக்குமோ? 

நீங்கள் சொன்னால், வேதம், நாம் சொன்னால் சென் தத்துவமோ?

உங்களுடன் விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் தான் வலிந்து பேச வந்தீர்கள். பெருமாள் போலவே, உங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 

இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன். விளக்கமில்லாதவர்களிடமும் மற்றவர்கள் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களிடம் இருந்தும் விலகியிருப்பதே உசிதம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன். விளக்கமில்லாதவர்களிடமும் மற்றவர்கள் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களிடம் இருந்தும் விலகியிருப்பதே உசிதம்.

வணக்கம் தமிழன்! நீங்கள் பாம்பெண்ணைக்குப் போட்டு விட்டுப் பின்னர் நீக்கிய பச்சைக்கு நன்றி! :grin:அரசியல் கருத்து ஒத்து வராததால், விஞ்ஞானத் தரவுகளும் ஒத்து வரா என்பது நல்ல கொள்கை தான்!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

வணக்கம் தமிழன்! நீங்கள் பாம்பெண்ணைக்குப் போட்டு விட்டுப் பின்னர் நீக்கிய பச்சைக்கு நன்றி! :grin:அரசியல் கருத்து ஒத்து வராததால், விஞ்ஞானத் தரவுகளும் ஒத்து வரா என்பது நல்ல கொள்கை தான்!

ஜஸ்டின், நான் ஆள் பார்த்து பச்சை குத்துவதில்லை. கருத்துக்களுக்கு மாத்திரமே. உங்களுக்கும் பலமுறை அரசியலிலாத திரிகளில் பச்சை குத்தியிருக்கிறேன். உங்களின் ஓர் மருத்துவ கட்டுரைக்கும் குத்திய ஞாபகம் இருக்கிறது. பச்சை குத்திவிட்டு அதை எடுக்கும் அளவுக்கு வன்மம் என்னிடமில்லை. நீங்கள் கூறுவதுபோல் பச்சை நீக்கப்பட்டிருந்தால் அது தவறுதலாகவே நீக்கப்பட்டிருக்கும். மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 11:21, goshan_che said:

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

@goshan_che பகலவன் தொடர்ந்து போராடப் போவதாக இந்த களத்தில் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

@goshan_che பகலவன் தொடர்ந்து போராடப் போவதாக இந்த களத்தில் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

அவர் போராடப்போவதாக சொன்னால் அதில் நான் என்ன நிலைப்பாடு எடுக்க முடியும்? அது அவரையும் அவர் சார்ந்தோரையும் சேர்ந்த விடயம். 

ஆனால் அவரிடம் நான் முன்பு யாழில் கருத்து பரிமாறியதன் அடிப்படையில் அவர், ஆயுத போராட்டத்தை சொல்லவில்லை என்றே நான் விளங்கி கொண்டேன்.

அவர் பதிவையும் உங்கள் எதிர்வினையையும் பார்த்து, நான் அதை ஒரு misunderstanding என்றே புரிந்து கொண்டேன்.

நான் போராட்டம் நடந்த போது, அந்த மண்ணில் இருந்தும், போராட போகாத ஆள். ஆகவே போனவர்கள் மீது, என்னைவிட, ஏனையோரை விட ஒரு படி கூடிய மரியாதை உண்டு.

தனிநாடு சாத்தியமற்ற கொள்கை என்பதை எனக்கு 16, 17 வயது ஆனா போதில் இருந்து நம்புகிறேன்.

இனிமேல் ஆயுத போராட்டம் கூடாது என்பதையும் அதே உறுதியோடு நம்புகிறேன்.

இவை இரெண்டையும் தவிர்த்து தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு வர போராடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.

பகலவன் அண்ணாவும் இதை ஒத்த ஒரு நிலைப்பாட்டில் இருப்பார் என்பது என் ஊகம்.

Edited by goshan_che

12 hours ago, goshan_che said:

தனிநாடு சாத்தியமற்ற கொள்கை என்பதை எனக்கு 16, 17 வயது ஆனா போதில் இருந்து நம்புகிறேன்.

ஆனால் துரதிஷ்சவசமாக அதே  16,17 பாலகர்களிடம் தான் தனி நாடு சாத்தியம் என்ற போலி பிம்பம் தமிழ்  பேச்சாற்றல் உள்ளவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு திணிக்கப்பட்டது. விளைவு……… அடுத்தடுத்த ஒட்டுமொத்த தலைமுறை இளைஞர்களின் கல்வி, சமூக வாழ்க்கை நாசமாக்கப்படதுடன்  தமிழ் தேசியம்????? தமிழரின் இருப்பு ?????? ஆனது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

ஆனால் துரதிஷ்சவசமாக அதே  16,17 பாலகர்களிடம் தான் தனி நாடு சாத்தியம் என்ற போலி பிம்பம் தமிழ்  பேச்சாற்றல் உள்ளவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு திணிக்கப்பட்டது. விளைவு……… அடுத்தடுத்த ஒட்டுமொத்த தலைமுறை இளைஞர்களின் கல்வி, சமூக வாழ்க்கை நாசமாக்கப்படதுடன்  தமிழ் தேசியம்????? தமிழரின் இருப்பு ?????? ஆனது. 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்களின் இருப்பும் அவர்களின் வளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தானே உண்மை.

Edited by ஏராளன்
content change.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.