Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

3 PCR.  அவர்களுடன் முழுவதும் நாட்களை செலவிட்டும் ,தொத்தவில்லை.

ஆனால் உடல் நோ, சுவை இழப்பு வந்து போனது.

உங்கள் குடும்பத்திற்கு வந்தது கவலை.
3 PCR ரெஸ்ட் எடுத்து நெக்கட்டிவ் வந்தும் உடல் நோ சுவை இழப்பு வந்தது ஆச்சரியம். சாதரண புளு வந்து இருக்குமோ

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் குடும்பத்திற்கு வந்தது கவலை.
3 PCR ரெஸ்ட் எடுத்து நெக்கட்டிவ் வந்தும் உடல் நோ சுவை இழப்பு வந்தது ஆச்சரியம். சாதரண புளு வந்து இருக்குமோ

சாதாரண புளுவாக இருக்க வாய்ப்பு குறைவு.

1. மகனுக்கு கொவிட் உறுதியாகும் முன்னமே நாம் வெளியில் போவது அரிது. குறிப்பாக நான் வீட்டில் இருந்து வேலை - அந்த மாதம் சந்திப்புகள் ஏதும் இல்லை.

2. சரியாக மனைவிக்கு பொசிடிவ் வந்த போதே எனக்கும் உடல் உபாதை தொடங்கியது. மகன் 2ம் நாள் ஓகே. ஆனால் எமக்கு ஒரு வாரம் எடுத்தது.

நான் நினைகிறேன் 3ம் டோஸ் எடுத்து 4 வாரம் என்பதால் எனது அண்டி பொடிகள் மிக உச்ச திறனுடன் தொற்றை எதிர்த்து போராடியுள்ளன என்று. அதுதான் உடல் உபாதைகள்.

ஊகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

என்மொபைலுக்கு குறுந்செய்தி வந்துள்ளது அந்த இடத்துக்கு நீண்ட வரிசை நிக்குது போவமா விடுவமா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

என்மொபைலுக்கு குறுந்செய்தி வந்துள்ளது அந்த இடத்துக்கு நீண்ட வரிசை நிக்குது போவமா விடுவமா ?

PCR ? Drive through இல்லையா? எண்டால் குளிருக்க நிக்காமல் காருக்குள் இருக்கலாம். 

Lateral flow எடுத்து பாத்தனிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

PCR ? Drive through இல்லையா? எண்டால் குளிருக்க நிக்காமல் காருக்குள் இருக்கலாம். 

Lateral flow எடுத்து பாத்தனிங்களா?

அது எப்ப பார்த்தாலும் நேர்மறையா காட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

அது எப்ப பார்த்தாலும் நேர்மறையா காட்டுது .

அப்படி எண்டால் முடிந்தால் drive through வில் புக் பண்ணுங்கோ. 

எவ்வளவு நேரம் வெயிட்டிங்?

கொவிட்டின் முக்கிய பிரச்சனையில் ஒன்று நியுமோனியா. குளிருக்க நிற்பது அதுக்கு கூடாது என நினைகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

PCR ? Drive through இல்லையா? எண்டால் குளிருக்க நிக்காமல் காருக்குள் இருக்கலாம். 

Lateral flow எடுத்து பாத்தனிங்களா?

நான் சொன்னது மூன்றாவது ஊசிக்கு நீண்ட  லைனில் நிக்கிறார்கள் போவம் என்று வீட்டில் வந்து  தொண்டைக்குள்ளும் மூக்கினுள்ளும் இடி இடி என்று இடித்து பார்த்தால்   இலவச டெஸ்ட் கிட்  மாறி மாறி காட்டுது Drive through புக் பண்ணியுள்ளேன் பின்னேரம் நாளை முடிவு தெரியும் என்கிறார்கள் முடிவு தெரிந் த  பின் மூன்றாவது ஊசியை போடலாம் என்று இருக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கொவிட்டின் முக்கிய பிரச்சனையில் ஒன்று நியுமோனியா. குளிருக்க நிற்பது அதுக்கு கூடாது என நினைகிறேன். 

உங்கள் ஊரில் உள்ள தெரிந்த ஒருவருடன் போனில் கதைத்த போது சொன்னார் கார் அழுக்காக இருந்ததால் தண்ணீர் அடித்து கழுவினாராம்,வெளியில் குளிராம். அடுத்த நாள் மோசமான காய்ச்சல் வந்து தான் செத்து போவேன் என்று கூட நினைத்தாராம்.

வைரஸ் குளிர் ஈரலிப்புக்கு விரைவாக பரவிவிடுகறது அப்படி தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூண்டாவது ஊசிக்கு காச்சல் வராட்டித்தான் யோசிக்கனும்.. காய்ச்சல் வர்ர படியால் உடம்பில் முதல் ரெண்டு ஊசியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கு உங்களுக்கு.. அப்பா அம்மாவும் மூண்டாவது ஊசிபோட்டவை.. அம்மா டயபிற்றிக் பேசண்ட்.. அவருக்கு பெரிதாக காய்ச்சல் வரவில்லை.. சாதாரண உடம்பு அசதியுடன் போய்விட்டது.. நோய் எதிர்ப்பு சக்தி சலரோகம் காரணமாக ரெண்டு ஊசிபோட்டும் கம்மியாகத்தான் இருக்கு எண்டு நினைக்கிறன்.. ஆனால் அப்பாவுக்கு எந்த நீண்டகால நோய்களும் இல்லை.. அவருக்கு மூண்டுநாள் காய்ச்சல் போட்டு உலைச்சு விட்டுது மூண்டாவது ஊசிக்கு.. சோ உங்களுக்கு கொரோனாவுக்கு எதிரா நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது மகிழ்ச்சியான விடமே..

உடம்பு அடிச்சு  முறிச்சுப் போட்டமாதிரி இருக்கு....கைகால் குளிர் சொல்லி வேலையில்லை....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நான் சொன்னது மூன்றாவது ஊசிக்கு நீண்ட  லைனில் நிக்கிறார்கள் போவம் என்று வீட்டில் வந்து  தொண்டைக்குள்ளும் மூக்கினுள்ளும் இடி இடி என்று இடித்து பார்த்தால்   இலவச டெஸ்ட் கிட்  மாறி மாறி காட்டுது Drive through புக் பண்ணியுள்ளேன் பின்னேரம் நாளை முடிவு தெரியும் என்கிறார்கள் முடிவு தெரிந் த  பின் மூன்றாவது ஊசியை போடலாம் என்று இருக்கிறேன் .

டெஸ்ட் கிட் ரெண்டு கோடு இடைக்கிடை தன்னும் காட்டுது என்றால் கவனமாக இருங்கள். ஆக்சி மீட்டர் (முன்னரும் கதைத்தோம்) இருக்குதானே ஒரு நாளில் இரெண்டு தரம் செக் பண்ணி பார்க்கலாம்.

டெஸ்ட் முடிவின் பின் ஊசி போடுவதே நல்லம் என நினைகிறேன். தொற்று வந்தால் 14 நாள் விட்டு ஊசி போட சொல்லிறது British Heart Foundation.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பொழுதுதான் மூன்றாவது ஊசி போட்டு விட்டு வந்திருக்கிறேன்.....முதல் இரண்டும் பைசர், இப்ப போட்டது மடோனா. (4வது மாளாவிகாவோ தெரியாது). உடம்பில் சிறு குளிரும் அசதியும் இருக்கு.....வேறொன்றுமில்லை......!  🤔

இப்பொழுது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மடோனாதான் போடுகிறார்கள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் ஊரில் உள்ள தெரிந்த ஒருவருடன் போனில் கதைத்த போது சொன்னார் கார் அழுக்காக இருந்ததால் தண்ணீர் அடித்து கழுவினாராம்,வெளியில் குளிராம். அடுத்த நாள் மோசமான காய்ச்சல் வந்து தான் செத்து போவேன் என்று கூட நினைத்தாராம்.

வைரஸ் குளிர் ஈரலிப்புக்கு விரைவாக பரவிவிடுகறது அப்படி தானே

நீங்கள் வட அமெரிக்க என நினக்கிறேன். கனடா காரரே வந்து குளிர் என பதைக்கும் நாடு இது 😌.

தீவு என்பதால் காற்றோடு உடலை ஊடுருவும் குளிர். 

வைரஸ் பற்றி தெரியவில்லை ஆனால் நியூமோனியா சளி, நுரையீரலில் பக்டீரியா தொற்றால் வரும் என நினைக்கிறேன். குளிர் இதை ஊக்குவிக்கும் என நினைக்கிறேன்.

முன்பு விலாசமாக விண்டரில் சோர்ட்ஸ் எல்லாம் போடுறான். ஒரு காய்ச்சலோடு எல்லாத்தையும் விட்டாச்சு. Thermal உள் உடுப்பு போட்டுத்தான் இப்ப வெளில போறது.

5 minutes ago, suvy said:

இப்பொழுது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மடோனாதான் போடுகிறார்கள்.....! 

பாவி மக்கள் எனக்கு அஸ்டிரா (மாஜரீன்), பைசர் (ஏதோ முஸ்லிம் பெடியன்ர பேர்) மட்டும்தான் போட்டார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

பாவி மக்கள் எனக்கு அஸ்டிரா (மாஜரீன்), பைசர் (ஏதோ முஸ்லிம் பெடியன்ர பேர்) மட்டும்தான் போட்டார்கள்🤣

Randyyyy (@randymandy) | Rechercher, Faire et partager des GIFs Gfycat

அடுத்து மாளவிகாதான் போடுறது.....!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, suvy said:

நானும் இப்பொழுதுதான் மூன்றாவது ஊசி போட்டு விட்டு வந்திருக்கிறேன்.....முதல் இரண்டும் பைசர், இப்ப போட்டது மடோனா. (4வது மாளாவிகாவோ தெரியாது). உடம்பில் சிறு குளிரும் அசதியும் இருக்கு.....வேறொன்றுமில்லை......!  🤔

இப்பொழுது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மடோனாதான் போடுகிறார்கள்.....! 

சேம் பிளட்....:)

10 Vadivelu one-liners that you would have definitely used in your life

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன் தினம்… மூன்றாவது தடுப்பூசிசை மனைவியும், மகளும் போட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு நேற்று… சாதுவான காய்ச்சல் குணமும், உடல் அசதியாக இருப்பதாக சொன்னார்கள். இது எத்தனை நாளைக்கு நீடிக்கும்.

மற்றையவர்கள்… மூன்றாவது ஊசி போட்ட போது, எந்த அறிகுறியும் காட்டவில்லை.

Edited by தமிழ் சிறி

கடந்த வியாழன் மூன்றாவது தடுப்பூசியை நானும் மனைவியும் எடுத்துக் கொண்டோம். ஊசி குத்திய இடத்தில் தடவினால் சிறு வலி இருந்ததை தவிர வேறு எந்த பக்க விளைவுகளோ அல்லது உடற் சோர்வோ ஏற்படவில்லை. 

மனைவிக்கு கையை தூக்கும் போது இலேசான வலியும், தலையிடியும், உடல் அலுப்பும் அடுத்த நாள் முழுதும் இருந்தது. அதன் பின் எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாற எட்டாம்திகதி மூண்டாவது தடுப்பூசி எடுக்குறன்.. இப்பவே பயத்துல லைட்டா நெஞ்சு நோகுரமாரி இருக்கு..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 2021-12-14 at 21:47, குமாரசாமி said:

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

நான்காவது ஊசி பற்றி Karl Lauterbach ஆலோசிக்க தொடங்கீட்டார் . 😊ஆக தயாராக இருங்கோ. 

48 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் வாற எட்டாம்திகதி மூண்டாவது தடுப்பூசி எடுக்குறன்.. இப்பவே பயத்துல லைட்டா நெஞ்சு நோகுரமாரி இருக்கு..😂😂

இன்னும் எட்டு நாள் இருக்கிறது

அதுவரை அமைதியாக இருங்கோ. அருண்டவன் கண்ணுக்கு ......😯

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 02:04, தமிழ் சிறி said:

நேற்று முன் தினம்… மூன்றாவது தடுப்பூசிசை மனைவியும், மகளும் போட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு நேற்று… சாதுவான காய்ச்சல் குணமும், உடல் அசதியாக இருப்பதாக சொன்னார்கள். இது எத்தனை நாளைக்கு நீடிக்கும்.

மற்றையவர்கள்… மூன்றாவது ஊசி போட்ட போது, எந்த அறிகுறியும் காட்டவில்லை.

23 hours ago, நிழலி said:

கடந்த வியாழன் மூன்றாவது தடுப்பூசியை நானும் மனைவியும் எடுத்துக் கொண்டோம். ஊசி குத்திய இடத்தில் தடவினால் சிறு வலி இருந்ததை தவிர வேறு எந்த பக்க விளைவுகளோ அல்லது உடற் சோர்வோ ஏற்படவில்லை. 

மனைவிக்கு கையை தூக்கும் போது இலேசான வலியும், தலையிடியும், உடல் அலுப்பும் அடுத்த நாள் முழுதும் இருந்தது. அதன் பின் எதுவும் இல்லை.

மூன்றாவது தடுப்பூசி ஏற்றிய பின்…. இருந்த காய்ச்சல் குணமும், உடல் அசதியும்…
எந்தவித வலி நிவாரணியும் எடுக்காமலே…  அடுத்த நாள் சாதாரண நிலைக்கு வந்து விட்டதாக கூறினார்கள்.

இந்தத் திரி மூலம்… கொரோனா ஊசி பற்றிய பக்க விளைவுகளை… உடனடியாக அறிந்து,
நிம்மதி பெருமூச்சு விடக் கூடியதாக உள்ளது.
இல்லாவிடில்…. எவ்வளவு மன உழைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதனை நினைக்கவே அச்சமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்தின் முன்னர் கணவர் வேலையால் வரும்போது தொண்டை  கட்டியபடி வந்தார். அடுத்தநாள் பார்த்தால் இரும ஆரம்பித்தது. கோவிட் தான் மீண்டும் வந்துவிட்டதோ என நானும் ஒவ்வொருநாளும் டெஸ்ட் செய்தபடி இருந்தேன். மூன்றாம் நாள் எனக்கு இரும ஆரம்பிக்க வைத்தியருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

இப்ப நிறையப்பேருக்கு இப்படித்தான் ஃப்ளூ வருகிறது என்றார். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பாருங்கள் நிற்காவிட்டால் மீண்டும் போன் செய்யுங்கள் என்றார். தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் இருமல். எழவே முடியாதபடி தலைவலியும். 6 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை பரசிற் ராமல் போட்டபடி இருந்தோம் நானும் கணவரும். அப்பப்ப ஒக்ஸிமீற்றரில் விரலை வைத்துப் பார்த்தும் கொண்டோம். PCR டெஸ்ட் தேவை இல்லை என்றுவிட்டார் வைத்தியர். ஒரு வாரத்தில் கணவருக்கு எல்லாம் நின்றாலும் எனக்கு வரட்டு இருமல் நிற்கவேயில்லை. மீண்டும் வைத்தியரைத் தொடர்புகொள்ள அன்ரிபயோரிக் தருகிறேன். ஒருவாரம் தொடர்ந்து எடு என்றார். அது எடுத்து முடியத்தான் இருமல் நின்றது. கோவிட் இந்த ஃப்ளூவிலும்  எவ்வளவோ மேல் என்பேன் நான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களிற்கு எல்லாம் போட முதல் எங்களில தான் போட்டுப் பயிற்சியே எடுக்கிறாங்கள். நாங்களே அசரேல்ல...

முதலாவது கடந்த ஜனவரியில்.. மூன்றாவது கடந்த ஒக்டோபரில்.. எனி நாலாவதும்... வரும்.. ஐந்தாவது வந்தாலும் ஆச்சரியமில்லை.

இதுபோக.. புளூ.. அதுஇதென்னு.. இன்னும் நிறைய அடிக்கிறாங்கள். நம்ம உடம்பும் தாங்கிக்கிட்டு தான் இருக்குது..! 🤣

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/12/2021 at 22:42, shanthy said:

நான்காவது ஊசி பற்றி Karl Lauterbach ஆலோசிக்க தொடங்கீட்டார் . 😊ஆக தயாராக இருங்கோ. 

நான் கேள்விப்பட்டதிலை Karl Lauterbach   ஒருஅனுபவமில்லாத வைத்தியராம்..... மெய்யே?

நீங்கள் விட்டுக்குடுக்க மாட்டியள் எண்டு எனக்கு நல்லாவே தெரியும். SPD  😁

இதுதான் சட்டம் எண்டால் நாலு என்ன ஐஞ்சாவதையும் குத்தி சிவனே எண்டு வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது தான் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நான் கேள்விப்பட்டதிலை Karl Lauterbach   ஒருஅனுபவமில்லாத வைத்தியராம்..... மெய்யே

போனகிழமை wdr செய்தியில் கேட்டேன். Karl Lauterbach நான்காவது ஊசியை ஆலோசிப்பதாக. 

ஆருக்கு தெரியும் karl Lauterbach அனிபவஸ்தரோ இல்லையா? 🤔

14 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விட்டுக்குடுக்க மாட்டியள் எண்டு எனக்கு நல்லாவே தெரியும். SPD  😁

நான் Grüne Partei தான் வாக்களிச்சேன். ஆனால் விருப்புவாக்கு SPD. 😂

ஓம் ஓம் விட்டுக்குடுக்கிறன். 😂 அஞ்சலா மெயாகல் இடத்தை நான் பிடிக்கலாமோண்டு யோசிக்கிறேன். 🤭🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, shanthy said:

நான் Grüne Partei தான் வாக்களிச்சேன். ஆனால் விருப்புவாக்கு SPD. 😂

Grüne Partei  ஒரு லீட்டர் பெற்றோலை இரண்டரை ஈரோவுக்கு கொண்டுவரப்போறானாம்....சந்தோசம் தானே 😁

2 hours ago, shanthy said:

ஓம் ஓம் விட்டுக்குடுக்கிறன். 😂 அஞ்சலா மெயாகல் இடத்தை நான் பிடிக்கலாமோண்டு யோசிக்கிறேன். 🤭🤣

Wir Schaffen Das Merkel GIF - Wir Schaffen Das Merkel We Can Do This -  Discover & Share GIFs

ஏன்....மனுசி இருக்கும் மட்டும் உங்களுக்கு என்ன குறை வைச்சது? நாட்டை கட்டுக்குலையாமல் வைச்சிருந்தது தானே 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஒரு நோஞ்சான் குஞ்சை இறக்கி விட்டுருக்கிறியள்....பாப்பம் என்ன கூத்து நடக்குது எண்டு....😂

Olaf Scholz Spd GIF - Olaf Scholz Scholz Spd - Discover & Share GIFs

2 hours ago, shanthy said:

ஓம் ஓம் விட்டுக்குடுக்கிறன். 😂 அஞ்சலா மெயாகல் இடத்தை நான் பிடிக்கலாமோண்டு யோசிக்கிறேன். 🤭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.