Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார்.   

அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன.   

குறித்த உரையைத் தொடர்ந்த கலந்துரையாடலில், பங்கேற்றிருந்த முதலாம் தலைமுறையினரும் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். இந்தக் கலந்துரையாடலில், இரண்டு முக்கியமான விடயங்களை அவதானிக்க முடிந்தது.   

முதலாவது, புலம்பெயர் சமூகத்தில் எங்களது மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே, இட்டு நிரப்ப முடியாத மிக நீண்ட இடைவெளி உள்ளது.  

இரண்டாவது, போர் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவோ, தங்கள் செயல்கள் குறித்த சுயவிமர்சனத்தை மேற்கொள்ளவோ, ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தயாராக இல்லை. இந்தப் பின்புலத்திலேயே, சில அடிப்படையான விடயங்களை இக்கட்டுரை பேச விழைகின்றது.   

காலங்கள் மாறிவிட்டன; ஆனால், துன்பகரமான உண்மை யாதெனில், 1980களிலும் 1990களிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பலருக்கு, இலங்கை வரலாறு, அவர்கள் புலம்பெயர்ந்த காலத்துடன் உறைந்துவிட்டது. அவர்கள், தாங்கள் புலம்பெயர்ந்த காலத்து, இலங்கைச் சூழலின் சட்டகத்துக்குள்ளேயே, இலங்கை இனமுரண்பாட்டை நோக்குகிறார்கள்; இன்றைய இலங்கையையும் நோக்குகிறார்கள். அவர்களது தீர்வுகளும் ஆலோசனைகளும் இதன்பாற்பட்டவை. காலாவதியாகிப் போன சிந்தனைகளை, கோர்வையாக இவர்கள் முன்வைக்கிறார்கள்.   

அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது போன்ற கருத்துகள், இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.   

இவை, காலாவதியாகிப் போன சிந்தனைகள் ஆகும். இவற்றை நாம், பரிதாபத்துடன் ஒதுக்கியபடி, அப்பால் நகரலாம். ஆனால், இந்தச் சிந்தனைகளின் தோற்றுவாய் யாதென்று நோக்கின், அது இலங்கையின் இனத்துவ வரலாற்றில் ஆழப் பதிந்துள்ளது.   

நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழ் என நான்கு தேசிய இனங்களும் பறங்கியர், மலாயர், வேடர் ஆகிய சிறுபான்மைச் சமூகங்களும் இருந்து வருகின்றன. அதன் மூலம், இந்நாடு பல்லினத் தேசியங்களின் நாடாகவே இருந்து வருகிறது. இந்த யதார்த்தத்தைப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் ஏற்க மறுத்தாலும், வரலாறு இந்த உண்மையைப் பதிவு செய்து நிற்கிறது.  

பிரித்தானிய கொலனித்துவம், பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்திய நிலையில், அத்தகைய கொலனித்துவத்தைப் பாதம் தாங்கி நின்றவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர்.   

இவர்கள், வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு அடிமைச் சேவை செய்து வந்ததைப் பெருமையாகவும் அந்தஸ்தாகவும் கருதிக் கொண்டதுடன், பெரும் சொத்துச் சுகங்களையும் பெற்றுக் கொண்டனர். அதேவேளை, தமது வர்க்க சாதிய நிலைகளுக்கு ஊடாக, தத்தமது சொந்த இன, மொழி, மத மக்களை அடக்கி, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தியும் வந்தனர்.   

மக்களைப் பிரித்து, ஒருவரோடு ஒருவர் இணைய விடாது வைத்திருந்ததன் மூலம், தமது சொத்து சுகங்களைப் பேணிப் பாதுகாத்தனர். இதுவே எங்கள் வரலாறு. இந்த வரலாற்றின் தொடர்ச்சியே, தமிழ் மக்களிடம் ஆழமாக விதைக்கப்பட்ட சாதிய, பிரதேச, மத வேறுபாடுகள். இதன் விளைபொருட்களே, இன்று வெளிப்படும் புலம்பெயர்ந்தோரின் சிந்தனைகள் ஆகும்.  

இலங்கையில் சிங்களப் பேரினவாதம், பழைய சிங்கள மன்னர்களது மரபு வழி பற்றி அழுத்தம் தெரிவித்துப் பேசுவதும், தமிழ்த் தேசியவாதம் யாழ்ப்பாண இராச்சியம், நாகர்களின் ஆட்சி, வன்னி இராச்சியம் முதலான மன்னர்கள் போன்றோரிலிருந்து, தமது தேசிய வரலாற்றைக் கட்டியெழுப்புவதும் நிலவுடைமைச் சிந்தனையுடன் உள்ள தொடர்பின் அடிப்படையிலானவை.   

இலங்கையின் தேசியவாதிகள், முதலாளித்துவத்தை நிறுவும் நோக்கில் தேசிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புகிற நோக்கில், தேசிய முதலாளித்துவமாக உருவாக்குவதில் தோல்வியடைந்தனர். ஏகாதிபத்தியத்தை அதன் நவகொலனிய வடிவில் எதிர்கொள்ள அவர்களுக்கு இயலவில்லை.   

எனவே, தங்களது தோல்வியும் ஏகாதிபத்தியத்துடன் செய்து வந்துள்ள சமரங்களும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதன் விளைவாக, மக்கள் நடுவே எழக் கூடிய எதிர்ப்புணர்வைத் திசை திருப்பப் பேரினவாதம் பயன்படுத்தப்பட்டது.   

அவ்வாறே, பேரினவாதத்தின் விளைவாக உருவான குறுந் தேசியவாதமும் தனது மேட்டுக்குடிகளின் நலன் கருதி, ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தவிர்ப்பதுடன் மக்களின் பிரச்சினைகளை முற்றிலும் தேசியவாதக் கண்ணோட்டத்திலேயே அடையாளம் காட்டின.  

மேற்கூறியவாறு, தேசிய இனப் பிரச்சினையில் இனப் பகைக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்துவது இரு தரப்புகளுக்கும் தேவைப்பட்டது. அதேபோலப் பண்பாடு, மதம், மொழித் தூய்மை, சாதியம் போன்ற பலவும், மக்கள் மத்தியில் உள்ள ஆதிக்கச் சிந்தனையின் ஒரு முக்கியமான பகுதியாகத் தொடருகின்ற நிலவுடைமைச் சிந்தனையின் மிச்சசொச்சங்கள் ஆகும். அவை சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசியங்களின் மீது, ஆதிக்கம் செலுத்துமாறு கவனித்துக் கொள்ளப்படுகிறது.  

இவ்வாறான போக்கு, தென்னாசியாவில் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாகும். தேசிய இனங்களின் வளர்ச்சியும் அவற்றின் தேசிய அடையாளமும் நிலவுடைமை அடையாளங்களை உதற இயலாமைக்கு, அவற்றின் தலைமைகளது வர்க்க நலன்கள் முக்கியமான காரணமாக அமைகின்றன. இன்றும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நம்பச் சொல்கிறவர்களின் நிலைப்பாடுகளின் தோற்றுவாய் இதுதான்.   

குறித்த கலந்துரையாடலில், தமிழ்ச் சமூகத்தின் உள்முரண்பாடுகள், எவ்வாறு விடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தன என்று சான்றுகளுடன் ஆய்வு மாணவி தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.   

குறிப்பாக, சாதிய ரீதியிலும் பிரதேச ரீதியிலும் அன்றுதொட்டு இன்றுவரை, தமிழ்ச் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், பேசப்பட வேண்டியன என்றும் அவை களையப்படாமல், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

இதற்கான எதிர்வினைகள், ‘வரலாற்றைப் படித்துவிட்டு வாருங்கள்’; ‘தமிழருக்கு நாடில்லை; ‘அதுதான் பிரச்சினை’; ‘அனைத்துக்கும் சிங்களஅரசு தான் காரணம்’ போன்ற திசைகளில் அமைந்தன. இந்த எதிர்வினைகள் காட்டிநிற்கின்ற செய்தி யாதெனில், தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற அகமுரண்பாடுகளைப் பற்றிப் பேசவோ, விமர்சிக்கவோ தயாராக இல்லை என்பதுதான். 

நாம் என்ன தவறிழைத்தோம் என்பதை விட்டுவிட்டு, பழியைப் புறத்தே போடுவதே வழக்கமாகி விட்டது.   

ஒரு முக்கியமான கேள்வியை ஒருவர் அக்கலந்துரையாடலில் கேட்டிருந்தார். “பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குசெய்தால், பலநூறு வெளிநாட்டவர்கள் கலந்து கொள்கிறார்களே? ஆனால், நாங்கள் செய்தால் ஏன் வருகிறார்கள் இல்லை’?   

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், பலஸ்தீனியர்கள் ஏனைய நீதிக்கான போராட்டங்களில் பங்குபெறுகிறார்கள்; ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறார்கள்; நீண்ட தொடர்ச்சியான ஊடாட்டங்களின் ஊடு, பல்வேறு களங்களில் தங்களுக்கான ஆதரவுத்தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். போராட்டங்களின் போது அவர்கள், பத்தாவின் பதாகைகளையோ ஹமாஸின் பதாதைகளையோ ஏந்தியிருப்பதில்லை. தங்கள் போராட்டத்தின் தேவையை, அந்தந்த நாட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்கள்.   

நாம் முதலில், எம்மை யாரோடு அடையாளப்படுத்துகிறோம் என்ற முடிவுக்கு வரவேண்டும். அக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிலர், தமிழரை இஸ்‌ரேலியருடன் ஒப்பிட்டனர். நாம் ஒடுக்குமுறையாளர்களோடு எம்மை அடையாளப்படுத்துகிறோமா அல்லது, ஒடுக்கப்படுவோரோடு எம்மை அடையாளப்படுத்துகிறோமா என்ற வினாக்கள், எமது நண்பர்கள் யார் என்ற வினாவுக்கான பதிலைத் தரவல்லது.   

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில், ஜனநாயக மறுப்பு முக்கிய பண்பாயுள்ளது என்பதையும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இரண்டாம் தலைமுறையினர் உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினர். இவை, எமது சமூகம் பற்றிய அடுத்த தலைமுறையினர் கொண்டிருக்கின்ற கருத்துகள் என்பதை, நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.   

புலம்பெயர் சமூகத்தால் எல்லாம் இயலும் என்றதொரு மாயை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாயை, இன்னும் சில காலத்துக்குத் தொடரும்; அதற்குத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள ‘குடுகுடுப்பைக்காரர்கள்’ வழிசெய்வார்கள்.   

‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’ வகையறாக்கள், புலம்பெயர் சமூகத்தில் நிறையவே உண்டு. அதனால் தான், தீர்வுகளை உள்ளே தேடாமல், வெளியில் தேடியபடி காலம் கடத்துகிறார்கள்.  

 ‘பாதிக்கப்பட்டோம்’ என்ற குரலோடு, ஒரு தசாப்தத்துக்கு மேல் கடந்தாயிற்று. இன்று சில தசாப்தங்களுக்கு இது பயன்படும். ஏனெனில், இது சிரங்குப் புண் மாதிரி, சொறியச் சொறியச் சுகமாய் இருக்கும். நாம் விரும்பினால், ‘சொறிந்தபடி வானமேறி வைகுண்டம் போகிற நினைப்பில்’ இருக்கலாம்.   

 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வானமேறி-வைகுண்டம்-போகும்-நினைப்பு/91-273940

  • Replies 254
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இனி மீநி செத்தாண்டா டோய்! (ஒருமையில் எழுதியுள்ளேன் பத்தியாளர் எனது சமவயது நண்பர் என்பதால்)....😂

  • கருத்துக்கள உறவுகள்
Quote

குறித்த கலந்துரையாடலில், தமிழ்ச் சமூகத்தின் உள்முரண்பாடுகள், எவ்வாறு விடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தன என்று சான்றுகளுடன் ஆய்வு மாணவி தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.   

குறிப்பாக, சாதிய ரீதியிலும் பிரதேச ரீதியிலும் அன்றுதொட்டு இன்றுவரை, தமிழ்ச் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், பேசப்பட வேண்டியன என்றும் அவை களையப்படாமல், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

இதற்கான எதிர்வினைகள், ‘வரலாற்றைப் படித்துவிட்டு வாருங்கள்’; ‘தமிழருக்கு நாடில்லை; ‘அதுதான் பிரச்சினை’; ‘அனைத்துக்கும் சிங்களஅரசு தான் காரணம்’ போன்ற திசைகளில் அமைந்தன. இந்த எதிர்வினைகள் காட்டிநிற்கின்ற செய்தி யாதெனில், தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற அகமுரண்பாடுகளைப் பற்றிப் பேசவோ, விமர்சிக்கவோ தயாராக இல்லை என்பதுதான். 

இதனை யாழ்கள உறவு  சுகன்/சண்டமாருதன் ஒன்றுக்கு நூறு தடவை எழுதியுள்ளார்.

Quote

ஒரு முக்கியமான கேள்வியை ஒருவர் அக்கலந்துரையாடலில் கேட்டிருந்தார். “பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குசெய்தால், பலநூறு வெளிநாட்டவர்கள் கலந்து கொள்கிறார்களே? ஆனால், நாங்கள் செய்தால் ஏன் வருகிறார்கள் இல்லை’?   

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், பலஸ்தீனியர்கள் ஏனைய நீதிக்கான போராட்டங்களில் பங்குபெறுகிறார்கள்; ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறார்கள்; நீண்ட தொடர்ச்சியான ஊடாட்டங்களின் ஊடு, பல்வேறு களங்களில் தங்களுக்கான ஆதரவுத்தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். போராட்டங்களின் போது அவர்கள், பத்தாவின் பதாகைகளையோ ஹமாஸின் பதாதைகளையோ ஏந்தியிருப்பதில்லை. தங்கள் போராட்டத்தின் தேவையை, அந்தந்த நாட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்கள்.   

காசடித்த கள்வர் முட்டுக்கட்டையாக உள்ளனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடித்த எழுத்துக்களில் நான் சில பகுதிகளை காட்டியுள்ளேன்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல😀

Quote

அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது போன்ற கருத்துகள், இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தடித்த எழுத்துக்களில் நான் சில பகுதிகளை காட்டியுள்ளேன்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல😀

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இனி மீநி செத்தாண்டா டோய்! (ஒருமையில் எழுதியுள்ளேன் பத்தியாளர் எனது சமவயது நண்பர் என்பதால்)....😂

இனி மீநி உப்புகண்டம்தான் டோய்! ( ஒருமையில் எழுதியுள்ளேன் பத்தியாளர் என் இளவல் என்பதால்🤣). 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

 விசுகு ஐயா, பந்தி பந்தியாக உள்ள கட்டுரைகளை உங்களைப் போன்றவர்கள் படிக்கத்தான் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன்😁

எந்தக் களவிதியை மீறி இருக்கின்றேன் என்று ஒருக்கால் களவிதிகளைப் படித்துச் சொல்லுங்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 விசுகு ஐயா, பந்தி பந்தியாக உள்ள கட்டுரைகளை உங்களைப் போன்றவர்கள் படிக்கத்தான் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன்😁

எந்தக் களவிதியை மீறி இருக்கின்றேன் என்று ஒருக்கால் களவிதிகளைப் படித்துச் சொல்லுங்கள்😁

குழந்தை பிள்ளைகளுக்கும் புரியும் நீங்கள் விதியை மீறி உங்களுக்கு பிடித்த கருத்தை கோடிட்டு காட்டி திணிப்பது 

ஆனால் உங்களை மாதிரி ஆட்கள் ஒரு போதும் அதை ஒத்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் தெரியாமல் செய்யும் மீறல் அல்ல அவை 

பகிர்வுக்கு நன்றி கிருபன். தொடர்ந்து இவ்வாறான கட்டுரைகளை பதியவும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

குழந்தை பிள்ளைகளுக்கும் புரியும் நீங்கள் விதியை மீறி உங்களுக்கு பிடித்த கருத்தை கோடிட்டு காட்டி திணிப்பது 

ஆனால் உங்களை மாதிரி ஆட்கள் ஒரு போதும் அதை ஒத்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் தெரியாமல் செய்யும் மீறல் அல்ல அவை 

விசுகர், மன்னிக்கவும், குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த கிருபன் மீறிய யாழ் கள விதி என்ன என்று ஒருக்கா எனக்கும் சொல்லுங்கள். செய்தியைத் தான் மாற்ற முடியாது, இருக்கிற செய்தியை கோடிடக் கூடாதென்று விதியில்லையே?

உண்மை என்னவெனில், உங்கள் சென்சிரிவான நரம்பை தடித்த எழுத்துக்கள் தொட்டு விட்டன என்பதே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

குழந்தை பிள்ளைகளுக்கும் புரியும் நீங்கள் விதியை மீறி உங்களுக்கு பிடித்த கருத்தை கோடிட்டு காட்டி திணிப்பது 

ஆனால் உங்களை மாதிரி ஆட்கள் ஒரு போதும் அதை ஒத்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் தெரியாமல் செய்யும் மீறல் அல்ல அவை 

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

28 minutes ago, Justin said:

உண்மை என்னவெனில், உங்கள் சென்சிரிவான நரம்பை தடித்த எழுத்துக்கள் தொட்டு விட்டன என்பதே!

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழ் என நான்கு தேசிய இனங்களும் பறங்கியர், மலாயர், வேடர் ஆகிய சிறுபான்மைச் சமூகங்களும் இருந்து வருகின்றன.

ஆய்வாளர் இலங்கையின் தேசிய இனங்களின்  வரலாற்றை ஆழமாக  ஆராயவில்லை எனத்தோன்றுகின்றது

10 hours ago, கிருபன் said:

அதேவேளை, தமது வர்க்க சாதிய நிலைகளுக்கு ஊடாக, தத்தமது சொந்த இன, மொழி, மத மக்களை அடக்கி, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தியும் வந்தனர்.   

மக்களைப் பிரித்து, ஒருவரோடு ஒருவர் இணைய விடாது வைத்திருந்ததன் மூலம், தமது சொத்து சுகங்களைப் பேணிப் பாதுகாத்தனர். இதுவே எங்கள் வரலாறு. இந்த வரலாற்றின் தொடர்ச்சியே, தமிழ் மக்களிடம் ஆழமாக விதைக்கப்பட்ட சாதிய, பிரதேச, மத வேறுபாடுகள். இதன் விளைபொருட்களே, இன்று வெளிப்படும் புலம்பெயர்ந்தோரின் சிந்தனைகள் ஆகும். 

என்னுடைய சிந்தனையில் உள்ள மிக மிக முக்கியமான ஒரு கருத்து இந்தக் கட்டுரையில் அடங்கியிருப்பதை கவனத்தில் கொள்கின்றேன்.
இலங்கையில் தமிழர்களிடையே சாதிய , பிரதேச அடக்குமுறைகளும் வன்முறைகளும் தொடர்ந்துவரும் நிலையில் தமிழர்களுக்கு விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதுதான் அது.

1 hour ago, விசுகு said:

குழந்தை பிள்ளைகளுக்கும் புரியும் நீங்கள் விதியை மீறி உங்களுக்கு பிடித்த கருத்தை கோடிட்டு காட்டி திணிப்பது 

ஆனால் உங்களை மாதிரி ஆட்கள் ஒரு போதும் அதை ஒத்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் தெரியாமல் செய்யும் மீறல் அல்ல அவை 

8 hours ago, விசுகு said:

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

விசுகு அண்ணை எதையோ மறைக்க வேண்டும் எனக் கூறுகின்றார் என நினைக்கின்றேன்
அப்படியானவற்றை மறைப்பதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

சும்மா உங்கள் பாட்டுக்கு அலம்பக்கூடாது. நான் இதுவரை யாழில் அப்படி எழுதிய ஒரு கருத்தையாவது காட்டமுடியுமா தங்களால்??

16 minutes ago, வாத்தியார் said:

ஆய்வாளர் இலங்கையின் தேசிய இனங்களின்  வரலாற்றை ஆழமாக  ஆராயவில்லை எனத்தோன்றுகின்றது

என்னுடைய சிந்தனையில் உள்ள மிக மிக முக்கியமான ஒரு கருத்து இந்தக் கட்டுரையில் அடங்கியிருப்பதை கவனத்தில் கொள்கின்றேன்.
இலங்கையில் தமிழர்களிடையே சாதிய , பிரதேச அடக்குமுறைகளும் வன்முறைகளும் தொடர்ந்துவரும் நிலையில் தமிழர்களுக்கு விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதுதான் அது.

விசுகு அண்ணை எதையோ மறைக்க வேண்டும் எனக் கூறுகின்றார் என நினைக்கின்றேன்
அப்படியானவற்றை மறைப்பதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்காது 

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அந்த பதிவை நான் படிக்கவே இல்லை.

ஒரு செய்தியை இணைப்பவர் அதில் தனக்கு பிடித்தமான அல்லது மற்றவர்கள் வாசிக்க வேண்டும் என்று கோடிட்டு காட்டுவது சரியன்று. 

அது வாசிப்பவரை திசை திருப்பும் 

இணைப்பவர் தனது கருத்தை பின்னர் எழுதலாமே தவிர இணைப்பில் அவ்வாறு செய்வது சரியா என்பதே எனது கேள்வி?

நிழலியும் இதற்கு பச்சை கொடி காட்டுவதால் இது யாழுக்கு நன்றன்று என்று மட்டும் சொல்லி நிறுத்துகிறேன். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது போன்ற கருத்துகள், இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.

இவை எல்லாம் எமது நம்பிக்கைகள்.
 
இவற்றைக் காலாவதியான சிந்தனைக்குள்   அடக்குவது முறையல்ல.
எமது விடுதலையை நாம் அடைவதற்கு நாம் என்றும் அந்த விடுதலைக்கான பாதைகளைத் தேடித் கொண்டிருப்பதில் தவறில்லை. செல்லும் பாதையில் அமெரிக்க, இஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய அரசியலை முன்னுதாரணம் காட்டுவதிலும் தப்பில்லை.
அவர்களின் உதவிகளை நாடுவதிலும் தப்பில்லை.
ஆனால் அவர்கள் வருவார்களா மாட்டார்களா
என்பது உலக அரசியல் எனும் நீரோட்டத்தின்
திசையைப்   பொறுத்து உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அந்த பதிவை நான் படிக்கவே இல்லை.

ஒரு செய்தியை இணைப்பவர் அதில் தனக்கு பிடித்தமான அல்லது மற்றவர்கள் வாசிக்க வேண்டும் என்று கோடிட்டு காட்டுவது சரியன்று. 

அது வாசிப்பவரை திசை திருப்பும் 

இணைப்பவர் தனது கருத்தை பின்னர் எழுதலாமே தவிர இணைப்பில் அவ்வாறு செய்வது சரியா என்பதே எனது கேள்வி?

கட்டாயம் ஒரு செய்தியை  இணைப்பவர் முதலில் அந்தச்செய்தியை நன்றாக வாசித்து
அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து தான் பின்னர் யாழில் இணைக்க வேண்டும்
அப்படி இணைக்கும்போது வாசகர்களின் நன்மை கருதி விசேடமான பந்திகளை கோடிட்டுக் காட்டுவதில் தவறில்லை என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன

அமெரினக்கா தீர்மானம் நிறைவேற்றிவிட்டது மேற்குலக நாடுகள் எம்முடன் எல்லாம் நல்லபடியாக முடியபோகிறது என்று கதைகள் தான் சமீப நாட்களாக எம்மவர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. அது தான் நெடுக்காலபோவானிடமும் இது பற்றி கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்;

இது. எற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இல்லை.  காரணம். பிரித்தானியாவின். ஆட்சியின் கீழ். பாலத்தீனம். இருத்தபோது. தான். கிட்லர். யூதர்களை. கொன்று குவித்தார். அந்தச்சமயத்தில்.  யூதர்கள். ஜேர்மனியை. விட்டு  ஓடவேண்டியிருந்தது.   அதை சில  யூதர்கள். பயன்படுத்தி. பெரிய. ...சிரிய...கப்பல்களை...ஒப்பத்தம் செய்து யூதர்களைச் சேர்த்து பாலத்தீனத்தில் கொண்டு  சேர்த்தார்கள்.  ஜேரமனியிலிருத்து. மட்டுமல்ல. உலகமெல்லாமிருந்து ...இப்படிக் கொண்டு போய். பாலத்தீனத்தில் சேர்த்தார்கள்.  இந்தச் செயல்பாடு யூதர்களின். எண்ணிக்கையை. பாலத்தீனத்தில். அதிகரிக்கச்செய்தது. ..இதனால். இஸ்ரேல் பாராளுமன்றம்.  நிறுவ முடிந்தது. இலங்கைத். தமிழ்பகுதிகளில். இப்படி. தமிழர்களை. ஒன்று. சேர்த்தீர்களா. ?இல்லையோ..இலங்கைத்தமிழர்கள்.  1977இல. ஒன்றுபட்டிருக்கீறார்கள் இனி. ஒருபோதும் அப்படி. ஒன்றுபடச்சாத்தியமில்லை.  ஒன்றுபடுவதான் மூலம். தீர்வும். சாத்தியமில்லை  ஆனால். உலகநாடுகளிலுள்ள தமிழர்கள். தமிழ்பகுதிகளில்.  அல்லது  இலங்கையில்.  ஒன்று சேர்த்து  குடியேறுவதன்  மூலம். தீர்வு. சாத்தியப்படலாம். இஸ்ரேல். உரிவாகக். கிட்லரும்  ஒரு. காரணி. 

  • கருத்துக்கள உறவுகள்

19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அமெரினக்கா தீர்மானம் நிறைவேற்றிவிட்டது மேற்குலக நாடுகள் எம்முடன் எல்லாம் நல்லபடியாக முடியபோகிறது என்று கதைகள் தான் சமீப நாட்களாக எம்மவர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. அது தான் நெடுக்காலபோவானிடமும் இது பற்றி கேட்டேன்.

80  களின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு  முற்றத்திலும்   கதைக்கப்பட்ட விடையம் ஒன்று.

 இந்திரா காந்தியும் இந்தியாவும் எங்களுக்கு விடுதலையையை வேண்டித்தருவார்கள்.  பங்களா தேஷ் எப்படி உருவாக்கப்பட்டதோ   அப்படியே தமிழ் ஈழமும் உருவாகும் என்பதே அந்த விடையம் ஆகும்.

ஆனால் வலிந்து ஏற்படுத்தப்பட்ட  அரசியல் மாற்றத்தினால் எல்லாம் மாறிவிட்டது

காலம் மாறும் களமும் மாறும் அதற்கேற்ப நாமும் மாறினால் எங்களுக்கான தீர்வு ஒருநாள் கிடைத்தே தீரும்
பொறுத்தார் பூமியாள்வார்     .  

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

கட்டாயம் ஒரு செய்தியை  இணைப்பவர் முதலில் அந்தச்செய்தியை நன்றாக வாசித்து
அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து தான் பின்னர் யாழில் இணைக்க வேண்டும்
அப்படி இணைக்கும்போது வாசகர்களின் நன்மை கருதி விசேடமான பந்திகளை கோடிட்டுக் காட்டுவதில் தவறில்லை என நினைக்கின்றேன்

நீங்கள் ஒரு வாத்தியார்

நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுக்கும் போது நீங்கள் கோடிட்டு அல்லது குறிக்கப்பட்ட இடங்களை கலர் செய்து கொடுப்பீர்களா?

அல்லது மாணவர்களே தமது புரிதல் தேவைக்கேற்ப அதனை செய்ய முயல ஊக்குவிப்பீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. கிருபனாகட்டும் அல்லது இணைப்புக்களை வழங்கும் இதர உறுப்பினர்களாகட்டும் மூலத்தில் உள்ளவற்றில் மாற்றம் செய்வது தவறு. இது ஒருவிதமான கருத்து திணிப்பே.

தாம் பார்த்தவற்றை இங்கு பகிர்வதற்கு இணைப்புக்களை வழங்குபவர்களின் சேவையை மெய்ச்ச வேண்டும் . அதேசமயம், இணைப்பு பற்றிய தமது கருத்தை மூலத்தை திரிவுபடுத்தாமல் பிரத்தியேகமாக வழங்குவது சிறப்பு. அல்லது இவை தவறான முன்னுதாரணமாக அமையும்.

தேவை என்றால் கட்டுரை ஆசிரியரே முக்கியமான விடயங்களை கோடிட்டு காட்டியோ அல்லது நிறவேறுபாடுகள் மூலமோ செய்யலாம். அதுவல்லாமல் அதை பிரதி செய்பவர்கள் உள்ளடக்கத்தின் வெளிப்படுத்தலில் மாற்றம் செய்யும்போது ஆசிரியர் அடிப்படையில் எதை அழுத்தி என்ன செய்தியை சொல்ல வருகின்றார் என்பதை கிரகிக்கும் வாசகர்கள் பார்க்கும் பார்வை நிச்சயம் மாற வாய்ப்பு உள்ளது.

கட்டுரை சம்மந்தமாக கூறக்கூடிய ஒரு கருத்து சாதிப்பிரச்சனைகள், இதர ஊர் பிரச்சனைகளை முதலில் தீர்த்தபின்பே பொது பிரச்சனைக்கு தீர்வை எட்டமுடியும் என்றால்.. அந்த தீர்வு ஒருபோதும் எமக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.

தனிநாடு கிடைப்பது கூட ஒருவேளை ஏதும் அதிசயம் மூலம் சாத்தியப்படலாம். ஆனால் நாம் சாதி, சமய வேறுபாடுகளை உடைத்து வெளியேறுவது எமது ஆயுளுக்குள் நடைபெறக்கூடிய விடயமாக எனக்கு தென்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இவை எல்லாம் எமது நம்பிக்கைகள்.
 
இவற்றைக் காலாவதியான சிந்தனைக்குள்   அடக்குவது முறையல்ல.
எமது விடுதலையை நாம் அடைவதற்கு நாம் என்றும் அந்த விடுதலைக்கான பாதைகளைத் தேடித் கொண்டிருப்பதில் தவறில்லை. செல்லும் பாதையில் அமெரிக்க, இஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய அரசியலை முன்னுதாரணம் காட்டுவதிலும் தப்பில்லை.
அவர்களின் உதவிகளை நாடுவதிலும் தப்பில்லை.
ஆனால் அவர்கள் வருவார்களா மாட்டார்களா
என்பது உலக அரசியல் எனும் நீரோட்டத்தின்
திசையைப்   பொறுத்து உள்ளது

அமெரிக்க, இஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய உதவிகளை நீண்டகாலமாக எதிர்பார்த்து ஏமாந்த எமது மக்கள், இதே அமெரிக்க, இஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய நாடுகளுக்கு என்ன உதவி செய்துவிட்டு இப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

1. அமெரிக்காவுக்கு இரெண்டாம் உலக யுத்தத்தில் அணுக்குண்டை செய்து கொடுத்துவிட்டு இசுரேலை யூதர்கள் கேட்டார்கள். எமது மக்கள் 2005ல் அமெரிக்க சார்பு இரணிலை ஜனாதிபதி தேர்தலில் மண்கவ்வ வைத்து சீன சார்பு இராஜபக்‌ஷவுக்கு மகுடம் சூட்டிவிட்டு அமெரிக்க உதவியை எதிர்பார்க்கிறார்கள், கிடைக்குமா? யூதர்கள் புத்திசாலிகள், நாம்?

2. இந்தியாவில் மிகுந்த செல்வாக்கு பெற்ற காந்தி குடும்பத்து இராஜிவின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட எமது மக்கள் இந்திய ஆதரவை எதிர்பார்ப்பது எந்தவகையில்  புத்திசாலித்தனமானது? இந்த வகையில் சிந்திப்பவர்களை யூதர்களோடு  ஒப்பிடுவது நகைப்புக்கிடமனதன்றோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

குழந்தை பிள்ளைகளுக்கும் புரியும் நீங்கள் விதியை மீறி உங்களுக்கு பிடித்த கருத்தை கோடிட்டு காட்டி திணிப்பது 

ஆனால் உங்களை மாதிரி ஆட்கள் ஒரு போதும் அதை ஒத்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் தெரியாமல் செய்யும் மீறல் அல்ல அவை 

செய்தியும் அவருடையது இல்லை
செய்தியை தயாரித்தவரும் இல்லை
செய்தியோடு சம்பந்தப்பட்டவரும் இல்லை..

 தனக்கு வேண்டியதை மட்டும் கொட்டை எழுத்தில் பிரபல்யப்படுத்தி...

சும்மா வெட்டி ஒட்டி விட்டு தனது தனிப்பட்ட கருத்தை திணிக்க இது என்ன சிரிப்போம் சிறப்போம் பகுதியா?

ஒரு சில வேளைகளில் இவரின் வெட்டி ஒட்டும் வேலைகளில் சில தவறுகளை சுட்டிக்காட்டும் போது  தான் அங்கு இருப்பதை அப்படியே இங்கு இணைப்பவன் என மார்தட்டியது இன்னும் நினைவில் இருக்கின்றது. ஆனால் இதுக்கு மட்டும் தடித்த தடிப்பு எழுத்து. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இது. எற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இல்லை.  காரணம்.

நீங்கள் சொன்ன வேறுபாடுகள் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுக்கும் போது நீங்கள் கோடிட்டு அல்லது குறிக்கப்பட்ட இடங்களை கலர் செய்து கொடுப்பீர்களா?

அல்லது மாணவர்களே தமது புரிதல் தேவைக்கேற்ப அதனை செய்ய முயல ஊக்குவிப்பீர்களா? 

இது கருத்துக்களம். கருத்தாடல் முக்கியம் என்பதால் புரிதல் வர முக்கியமானவற்றை highlights செய்யத்தானே வேண்டும். 

5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விசுகு கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. கிருபனாகட்டும் அல்லது இணைப்புக்களை வழங்கும் இதர உறுப்பினர்களாகட்டும் மூலத்தில் உள்ளவற்றில் மாற்றம் செய்வது தவறு. இது ஒருவிதமான கருத்து திணிப்பே.

மோகன் அண்ணா முந்தி ஒரு News Bot வைத்திருந்தவர். அது ஓடி ஓடி செய்தி ஒட்டும். அதுமாதிரி நான் இல்லை.  

நான் வாசிக்காமல் செய்திகளை, கட்டுரைகளை ஒட்டுவதில்லை. வாசித்தவற்றில் யாழில் ஒட்டலாம் என்று கருதுபவற்றை மட்டும்தான் ஒட்டுவது. அதனால் நான் ஒட்டுவதை எல்லாம் கருத்துத் திணிப்பாகவே கருதலாம்😀

எனவே, தடித்த எழுத்தில் காட்டப்பட்டவை கருத்தாளர் என்ற ரீதியில் எனக்கு முக்கியமான பகுதிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 தனக்கு வேண்டியதை மட்டும் கொட்டை எழுத்தில் பிரபல்யப்படுத்தி...

சும்மா வெட்டி ஒட்டி விட்டு தனது தனிப்பட்ட கருத்தை திணிக்க இது என்ன சிரிப்போம் சிறப்போம் பகுதியா?

ஒரு சில வேளைகளில் இவரின் வெட்டி ஒட்டும் வேலைகளில் சில தவறுகளை சுட்டிக்காட்டும் போது  தான் அங்கு இருப்பதை அப்படியே இங்கு இணைப்பவன் என மார்தட்டியது இன்னும் நினைவில் இருக்கின்றது. ஆனால் இதுக்கு மட்டும் தடித்த தடிப்பு எழுத்து. 😁

கொட்டை எழுத்தில் உள்ளவை 1980, 1990 களில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் சிந்தனைப்போக்கைப் பற்றியது. அது விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்றவர்களுக்கு கடுக்கும்தான். 😉

ஆனால் முக்கியமானது என்னவென்றால், ஆய்வு செய்தவர் புலம்பெயர் நாட்டில் பிறந்தவர். அவர் கண்டடைந்தவற்றை ஏற்கும் பக்குவம், காலத்தில் உறைந்தவர்களிடம் வராது. அதனால்தான் இப்படியாக உறைநிலையில் உள்ளவர்கள் தாயகத்துடனும் ஒட்டாமல், புலம்பெயர் நாடுகளிலும் ஒட்டாமல் ஒருவித trance மனநிலையில் உள்ளார்கள்! 

எவ்வளவு வேப்பிலை அடித்தாலும், தேசிக்காய் வெட்டி தலையில் தேய்த்தாலும் மாறாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.