Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒருத்தரை கண்டால் வரச்சொல்லுங்கோ.😄

கூப்பிட்டமாரி கிடந்தது ? அல்லாட்டில் பிரமையோ🤣.

  • Replies 254
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

நிச்சயமாக: இது வரை பேச விரும்பாத விடயங்களை அமுக்கி விடும் தந்திரங்களின் "புதுப்பிக்கப் பட்ட" பட்டியல், வாசகர்களின் பார்வைக்கு:

1. தடவல்: "நீங்கள் ரெம்ப நல்லவர், ஏன் இதுக்க நின்று மரியாதையைக் கெடுக்கிறீர்கள்?"

2. மிரட்டல்: "இனியும் பேசினால்  சேறடிப்பேன்/நாறடிப்பென்!" (இதை அடிக்கடி செய்யும் உறுப்பினர் இங்கே விதி பற்றி சிலாகித்திருக்கிறார்!)

3. "ட்ரபிக் கான்ஸ்ரபில்" நடை முறை: "அங்க பார் முக்கியமான திரி ஒடுது, இங்க என்ன தேவையில்லா அலட்டல்?"

4. "கொடையாளர் சின்ட்ரோம்" நடை முறை : " நீ காசு குடுத்தியா?"

5. "ஐயகோ விதி மீறல்!": (புதிய நடை முறை, ஆனால் இது சிலருக்கு மட்டும் தான் பாவிக்கப் படும், எழுத்தில் இருக்கிற விதிகளை மீறினாலும், சிலருக்கு பொன்னாடை போர்த்தப் படும்!🤣)

வேறெதாவது அணுகுமுறையை தவற விட்டிருந்தால் அறியத் தரவும்!

மிக முக்கியமானதை விட்டு விட்டீர்கள். கன்சல்டண்ட் அப்ரோச் - தம்பி உம்மட்ட நிறைய திறமை இருக்கு, இஞ்ச நிண்டு மினெகெடாமல் - வாரும் ஒரு உன்கூழாய் காணொளி காட்டுறன், அதை பாரும் - படியும் - காசை பவுண்சில லொறி, லொறியா அள்ளும்.  

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போவார்: 
நான் தனித்திறன்வாய்ந்தவன், உலக அரசியல் தெரிந்தவன், உன்னை போல சமாந்திரமாக  அல்லாமல் வித்தியாசமாத் தான் யோசிப்பேன்.  நீயும் அப்படி இருந்தால் நல்லது...இல்லாட்டால் உன் மீது கௌரவமான விதத்தில் சேறு தெளிப்போம்  உதாரணம் "புலம் பெயர் புன்னாக்கு " "தமிழ் தேசிய கற்பனாவாதி", "மாயை  மனநிலை", "மாவீரர் கொத்துரொட்டி", "புலிகள் காசடித்தோர்" 

இந்த திரிக்கு நம்மளால ஆனா இரு சின்ன பங்களிப்பு அவ்வளவே. 😃 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆனால்  எனது கேள்வி  அதுவன்று???

இது

இதுவா? 

ஃபோனில் ஒட்டும்போது தடித்த எழுத்தில் காட்ட நேரம் எடுக்கும். ஆனால் ஒட்டிய பின்னர் மேற்கோள் காட்ட சில செக்கன்கள் போதும். காலம் பெறுமதி அல்லவா! அதுதான்😄

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

நன்றி நிழலி 

நீங்கள் மேற்கோள் காட்டிய பதிவில் கூட அவ்வாறான சேர்க்கை என்னை திசைமாற்றி அதை அவர் நினைத்தது போல் அவ்வாறே உள்வாங்க செய்திருக்கிறது 

இதைத்தான் நான் இவ்வளவு நேரமும் எழுதினேன். நன்றி தங்கள் நேரத்துக்கு.

கிருபனின் கட்டுரை இணைப்புகள் குறித்து எனக்கு கேள்விகள் இல்லை. பொதுவாக நான் அவற்றை வாசிப்பவன்.  👍

 கீழேஉள்ளது ஒரு கற்பனை செய்தி. உதாரணத்துக்கு மட்டுமே!!!

புதுமாத்தளன் ராணுவ நகர்வின் போது  3,500 வீடுகள் முற்றாக தரை மட்டமாக இடித்துடைக்கப்பட்டது. இது வரை 126 பொதுமக்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 
2 பாடசாலைகள், 3 வணக்கஸ்தலங்கள், அரசு வைத்தியசாலை முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டது. புலிகளின் ஆயுதகிடங்கு கைப்பற்றப்பட்டது. அதில் ஒரு சில ரசாயன குண்டுகளும் காணப்பட்டது. நடந்த சண்டையில் 26 இராணுவத்தினர்  கொல்லப்பட்டனர்

இப்படியான ஒரு கட்டுரை / செய்தியில் நான் எனது சிந்திப்பில் முக்கியம் என கருதும் ஒரு விடயத்தை 
கோடிட்டு, நிறம் சேர்த்து பதியும் போது, அதனோடு வரும் இதர முக்கியமான தகவல்களை தெரிந்தோ தெரியாமலோ அதிலிருந்து திசை திருப்ப வாய்ப்பிருக்கிறதா? 
ஒருவர் தனது கருத்தை மட்டும் வலுவூட்டம்  செய்ய முடிகிறதல்லவா?
இந்த உதாரணத்தில் மக்கள் இழப்புகள், உடமை சேதங்கள் கடந்து போராளிகள் இரசாயன குண்டு வைத்திருந்தார்கள் என்ற இன்னும் ஒரு செய்தி அழுத்தி சொல்லப்படுகிறதா?

இது குற்றச்சாட்டாக இல்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Sasi_varnam said:

ஆமாம், இதற்கான உங்கள் பதில் உங்களுக்குத் தெரியாது என்பதை நம்புகிறேன்!😎

அமேசன் தளத்தில் பொருட்கள் வாங்கப் போய் மேயும் போது, அமேசன் முன்னுக்குக் கொண்டு வந்து விடும் பொருட்களை கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடுவீர்களா? இதற்கான பதில் என்னவோ , அதே பதில் தான் உங்கள் அப்பாவித் தனமான சந்தேகத்திற்கும்!

இந்த கட்டுரையில் தமிழர்கள் சிந்தக்க வேண்டிய பல காத்திரமான விடயங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமான விடயங்களையே அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அது பற்றி பேசாமல் மீண்டும் மீண்டும் அதில் உள்ள சிந்திக்க வேண்டிய விடயங்களை மடைமாற்றுவதற்காக படாது பாடு படுகிறார்கள்.

 தமது எதிர்தரப்பின் செய்திகளை/ கருத்துக்களை  முற்றாக தடை செய்து முடிந்தால் அவர்களை முற்றாக அழிக்கும் அரசியலை தொடர்ந்து பார்தது பார்தது  அது தான் உண்மையான அரசியல் என்று நம்பி வாழ்ந்தவர்களுக்கு  ஒரு கட்டுரையில்  எமது சமூகம் தொடர்பாக முக்கியம் என்று தான் நினைத்ததை ஒரு சக கருத்தாளர் கோடிட்டு காட்டியதை கூட பொறுக்க முடியவில்லை. இதைப் பார்ககும்  போது நல்ல காலம் தனி நாடு கிடைக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. 

( தமது எதிர்கருத்தாளர்களை  முற்றாக அழித்தது யார் என்று அப்பாவிகள் போல் கேட்க வேண்டாம். அத்தனை ஆயுத இயக்கங்களும் அதை தான் தமது சக இயக்கங்களுக்கு மட்டுமல்ல சாமான்ய மக்களுக்கும்  செய்தது. இது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.) 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 13:03, கிருபன் said:

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில், ஜனநாயக மறுப்பு முக்கிய பண்பாயுள்ளது என்பதையும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இரண்டாம் தலைமுறையினர் உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினர். இவை, எமது சமூகம் பற்றிய அடுத்த தலைமுறையினர் கொண்டிருக்கி

இது  சரி என்பதை.  இங்கு. வைக்கப்பட்ட  கருத்துக்கள். உறுதி. செய்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அமேசன்

ஜஸ்டின் அமேசன் தளத்தில் பொருட்கள் வாங்குவதும், அங்கே அவர்கள் கர்ச்சிகரமாக திரித்து விளம்பரப்படுத்துவதற்கும் ஒரு செய்தி, கட்டுரை குறித்து முன்னோட்டம் பகிர்வதற்கு பாரிய வித்தியாசம் உள்ளது இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

ஜஸ்டின் அமேசன் தளத்தில் பொருட்கள் வாங்குவதும், அங்கே அவர்கள் கர்ச்சிகரமாக திரித்து விளம்பரப்படுத்துவதற்கும் ஒரு செய்தி, கட்டுரை குறித்து முன்னோட்டம் பகிர்வதற்கு பாரிய வித்தியாசம் உள்ளது இல்லையா

அது தான் சொல்லியாச்சே 

எங்கள் கருத்தை திணிக்கிறோம் 

இவ்வாறு கருத்து திணிப்பை குதிரைகள் ஆகிய உங்கள் முன் வைத்து குடிக்க வைக்கின்றோம்.

(குதிரைகளுக்கு கடிவாளம் கட்டி விட்டால் மிகுதி விடயங்களை பார்க்க முடியுமா என்ன??)

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

ஜஸ்டின் அமேசன் தளத்தில் பொருட்கள் வாங்குவதும், அங்கே அவர்கள் கர்ச்சிகரமாக திரித்து விளம்பரப்படுத்துவதற்கும் ஒரு செய்தி, கட்டுரை குறித்து முன்னோட்டம் பகிர்வதற்கு பாரிய வித்தியாசம் உள்ளது இல்லையா?

இரண்டையும் நீங்கள் எதிர் கொள்ளும் முறையில் வித்தியாசம் இருக்கிறதா என்பதல்லவா கேள்வியாக இருக்க வேண்டும்?

ஒருவர் (அமேசன்) கண் முன்னே தெரியக் கூடியவாறு முன்னிறுத்தும் பொருளை கேள்விகளின்றி வாங்குவீர்களா? இல்லையெனத் தான் நான் நினைக்கிறேன்! இது என் காசுக்கு ஏற்புடையதா என்று "தனிப்பட்ட" பொருளாதார வாழ்வின் மீதான அக்கறை காரணமாக எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்த்தே வாங்குவீர்கள்! ஆனால், சமூகத்திற்குரிய ஒரு விடயத்தில் (மேல் கட்டுரையில்) எங்கே உங்கள் முழுவதையும் பார்க்கும் அக்கறை?

இதைத் தான் துல்லியமாக ருல்பென் வேறொரு இடத்தில் தமிழர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்குமிடையேயான இடைவெளியாகச் சுட்டிக் காட்டியிருந்தார், கண்டீர்களோ தெரியாது.

விதி மீறலே இல்லாத ஒரு விடயத்தை ,இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கும்  தீவிரம், பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக விதி மீறல்கள் நடந்த போது விசுகர் உட்பட உங்களுக்கு ஏன் ஏற்படவில்லையென்பதும் என் அப்பாவித் தனமான கேள்வி தான்!😂

  • கருத்துக்கள உறவுகள்

விதி மீறல் என்ற கருத்தை நான் இந்த திரியில் வைக்கவில்லை. தவிர கட்டுரையை முழுவதுமாக வாசித்த பின்னர் தான் நான் எனது கருத்தை எழுதுறேன்.
ஒரு கட்டுரையை நான் பதியும் போது அதில் சிலவற்றை  அடிக்கோடிட்டு காட்டினால் ஏதாவது  ஒரு வகையில் என்னுடைய நோக்கில் உங்களையும் கூர்ந்து பார்க்கச் சொல்கிறேன் என்று தான் பொருள் படுகிறது. "The purpose of highlighting is to draw attention to important information in a tex"

இது விதி மீறல், விதி மீறல் இல்லை என்ற சர்ச்சைக்குள் நான் இறங்க வில்லை. உண்மையில் விதி மீறலும் இல்லை. 
தவிர எல்லா கருத்துக்கள உரையாடல்களையும் அவதானித்து அதில் யார் யாருக்கு சப்பை கட்டுகிறார்கள், பச்சை குத்துகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள் என்று விலாவாரியாக நான் பார்ப்பதில்லை. 
கண்ணில் பட்டால், மனசு சொன்னால் கருத்து அவ்வளவே.
 
சரி....  நீங்கள் கூறியது போல இனிமேல் இங்கே பதியப்படும் கருத்துக்களை அமேசான் கவர்ச்சியூட்டல் விளம்பர பாணியை எதிர்கொள்வது மாதிரியே  ந(நு)கர்ந்து போகிறேன் . 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு அப்ரோச்சையும் சேர்க்கவேண்டும்.

நான் ரொம்ப நல்லவன் அப்ரோச்

நான் நல்லவன் தெரியுமா? நான் தனிமனித தாக்குதலே செய்யமாட்டன் (பழசை மறத்திடோணும்). என்னை போல நீ ஏன் இருக்க கூடாது? இப்படி கேட்டு கருத்தாளர்களை ஓவ் பண்ணும் உத்தி.

இப்படியானவர்கள் தமக்கு வேண்டபட்டவர்களின் தமிழர் விரோத படத்தை (என்று கருதப்பட்டதை) பேச்சு சுதந்திரம் என்று ஆதரித்து பக்கம் பக்கமாக எழுதுவார்கள். மேமிலி மானை தாம் பார்த்து விட்டு - மற்றையவனை புறக்கணிக்குமாறு வகுப்பெடுபார்கள்.

ஆனால் இவை எல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்டவை. ஏனென்றால் 

#நான் ரொம்ப நல்லவன்

Edited by goshan_che
➕ (என்று கருதப்பட்டதை)

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

விதி மீறல் என்ற கருத்தை நான் இந்த திரியில் வைக்கவில்லை. தவிர கட்டுரையை முழுவதுமாக வாசித்த பின்னர் தான் நான் எனது கருத்தை எழுதுறேன்.
ஒரு கட்டுரையை நான் பதியும் போது அதில் சிலவற்றை  அடிக்கோடிட்டு காட்டினால் ஏதாவது  ஒரு வகையில் என்னுடைய நோக்கில் உங்களையும் கூர்ந்து பார்க்கச் சொல்கிறேன் என்று தான் பொருள் படுகிறது. "The purpose of highlighting is to draw attention to important information in a tex"

இது விதி மீறல், விதி மீறல் இல்லை என்ற சர்ச்சைக்குள் நான் இறங்க வில்லை. உண்மையில் விதி மீறலும் இல்லை. 
தவிர எல்லா கருத்துக்கள உரையாடல்களையும் அவதானித்து அதில் யார் யாருக்கு சப்பை கட்டுகிறார்கள், பச்சை குத்துகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள் என்று விலாவாரியாக நான் பார்ப்பதில்லை. 
கண்ணில் பட்டால், மனசு சொன்னால் கருத்து அவ்வளவே.
 
சரி....  நீங்கள் கூறியது போல இனிமேல் இங்கே பதியப்படும் கருத்துக்களை அமேசான் கவர்ச்சியூட்டல் விளம்பர பாணியை எதிர்கொள்வது மாதிரியே  ந(நு)கர்ந்து போகிறேன் . 

இப்போ அமேசான் போன்று நாம் உங்களை பேக்காட்டுவோம். நீங்கள் தான் அதற்கு மடங்காமல் இருக்கணும் என்று வந்து நிற்கிறது 

இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். மக்களை பேய்க்காட்டாதீர்கள். அவர்கள் தாமாக தேவையானவற்றை பார்த்து எடுக்கட்டும் என்று.

இப்ப இதில் யார் வியாபாரி? யார் பொதுசனவாதி?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

அது தான் சொல்லியாச்சே 

எங்கள் கருத்தை திணிக்கிறோம் 

இவ்வாறு கருத்து திணிப்பை குதிரைகள் ஆகிய உங்கள் முன் வைத்து குடிக்க வைக்கின்றோம்.

(குதிரைகளுக்கு கடிவாளம் கட்டி விட்டால் மிகுதி விடயங்களை பார்க்க முடியுமா என்ன??)

விசுகு அண்ணை. இந்தப்பதிவை இங்கு  இணைத்தவர். கிருபன். இது அவர். எழுதிய பதிவு இல்லை. தனக்கு. விரும்பிய கருத்தை. கோடுயிட்டுயுள்ளார்  இது. விதி மீறலில்லையென  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...ஞாலசீர்த்தி மீநிலங்கோ. தான். இந்தக் கலத்துரையடலில்  பங்குபற்றி  இதை. எழுதியுள்ளார் இது. அங்கு பங்குபற்றியவர்களுடைய கருத்து  ...முக்கியமாக. நோர்வே மாணவியின்.  ஆய்வு. இதில் பெரும்பாலனவை  சரியான. கருத்து  என நான் கருதுகிறேன்.  தமிழர்களைப் பற்றி இந்தக்கட்டுரையில் மிகச்சரியாகவே  எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள்  அவர்கள். எப்படிப்பட்ட கொள்கை கொண்டாலும்கூட  தீர்வுக்கு  தடையாகயிருக்கவில்லை. இருக்கவுமாட்டார்கள். உதாரணத்துக்கு. இலங்கையரசு.தமிழருக்கு  தீர்வாக  தமிழ்ஈழத்தை  வைக்குமாயின்  எந்தத்தமிழன்  எதிர்ப்பான்  ..சுட்டிக்காட்டுங்கள்..பாரப்போம்  யாழ்களமே ஒனறாகிவிடும்..இதில்  அதிக பதிவுகள் உங்களுடையது. ஆனால்  எந்தப்பதிவும் இந்தக்கட்டுரை பற்றி கருத்துக் கூறவில்லை  தீர்வுக்கான. தடைகள்  என்ன? அவற்றை எப்படி நீக்கலாம் ? இந்த மாணவி. மருத்துவம்...பொறியியல்.  ..கம்ப்பூட்டர்...இப்படிப் பல துறைகள் இருக்க இதை ஏன் படித்தார்?. இவரது  செயல் பாரட்டுக்குரியது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு செய்தியை சாதாரணமாக  இணைப்பதற்கும்  இந்த செய்தி இன்னார்க்கு என விளிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 13:03, கிருபன் said:

மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர்  

இவர்கள், வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு அடிமைச் சேவை செய்து வந்ததைப் பெருமையாகவும் அந்தஸ்தாகவும் கருதிக் கொண்டதுடன், பெரும் சொத்துச் சுகங்களையும் பெற்றுக் கொண்டனர். அதேவேளை, தமது வர்க்க சாதிய நிலைகளுக்கு ஊடாக, தத்தமது சொந்த இன, மொழி, மத மக்களை அடக்கி, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தியும் வந்தனர்.   

மக்களைப் பிரித்து, ஒருவரோடு ஒருவர் இணைய விடாது வைத்திருந்ததன் மூலம், தமது சொத்து சுகங்களைப் பேணிப் பாதுகாத்தனர். இதுவே எங்கள் வரலாறு. இந்த வரலாற்றின் தொடர்ச்சியே, தமிழ் மக்களிடம் ஆழமாக விதைக்கப்பட்ட சாதிய, பிரதேச, மத வேறுபாடுகள். இதன் விளைபொருட்களே, இன்று வெளிப்படும் புலம்பெயர்ந்தோரின் சிந்தனைகள் ஆகும்.  

இதைவிட வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

விசுகு அண்ணை. இந்தப்பதிவை இங்கு  இணைத்தவர். கிருபன். இது அவர். எழுதிய பதிவு இல்லை. தனக்கு. விரும்பிய கருத்தை. கோடுயிட்டுயுள்ளார்  இது. விதி மீறலில்லையென  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...ஞாலசீர்த்தி மீநிலங்கோ. தான். இந்தக் கலத்துரையடலில்  பங்குபற்றி  இதை. எழுதியுள்ளார் இது. அங்கு பங்குபற்றியவர்களுடைய கருத்து  ...முக்கியமாக. நோர்வே மாணவியின்.  ஆய்வு. இதில் பெரும்பாலனவை  சரியான. கருத்து  என நான் கருதுகிறேன்.  தமிழர்களைப் பற்றி இந்தக்கட்டுரையில் மிகச்சரியாகவே  எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள்  அவர்கள். எப்படிப்பட்ட கொள்கை கொண்டாலும்கூட  தீர்வுக்கு  தடையாகயிருக்கவில்லை. இருக்கவுமாட்டார்கள். உதாரணத்துக்கு. இலங்கையரசு.தமிழருக்கு  தீர்வாக  தமிழ்ஈழத்தை  வைக்குமாயின்  எந்தத்தமிழன்  எதிர்ப்பான்  ..சுட்டிக்காட்டுங்கள்..பாரப்போம்  யாழ்களமே ஒனறாகிவிடும்..இதில்  அதிக பதிவுகள் உங்களுடையது. ஆனால்  எந்தப்பதிவும் இந்தக்கட்டுரை பற்றி கருத்துக் கூறவில்லை  தீர்வுக்கான. தடைகள்  என்ன? அவற்றை எப்படி நீக்கலாம் ? இந்த மாணவி. மருத்துவம்...பொறியியல்.  ..கம்ப்பூட்டர்...இப்படிப் பல துறைகள் இருக்க இதை ஏன் படித்தார்?. இவரது  செயல் பாரட்டுக்குரியது. 

Quote

தடித்த எழுத்துக்களில் நான் சில பகுதிகளை காட்டியுள்ளேன்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல😀

இது யாருக்காக எழுதப்பட்டது?

கட்டுரையின் சாரம்சம் வேறு ஒருவர் எழுதியது. அது அவர் கருத்து சுதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Sasi_varnam said:

விதி மீறல் என்ற கருத்தை நான் இந்த திரியில் வைக்கவில்லை. தவிர கட்டுரையை முழுவதுமாக வாசித்த பின்னர் தான் நான் எனது கருத்தை எழுதுறேன்.
ஒரு கட்டுரையை நான் பதியும் போது அதில் சிலவற்றை  அடிக்கோடிட்டு காட்டினால் ஏதாவது  ஒரு வகையில் என்னுடைய நோக்கில் உங்களையும் கூர்ந்து பார்க்கச் சொல்கிறேன் என்று தான் பொருள் படுகிறது. "The purpose of highlighting is to draw attention to important information in a tex"

இது விதி மீறல், விதி மீறல் இல்லை என்ற சர்ச்சைக்குள் நான் இறங்க வில்லை. உண்மையில் விதி மீறலும் இல்லை. 
தவிர எல்லா கருத்துக்கள உரையாடல்களையும் அவதானித்து அதில் யார் யாருக்கு சப்பை கட்டுகிறார்கள், பச்சை குத்துகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள் என்று விலாவாரியாக நான் பார்ப்பதில்லை. 
கண்ணில் பட்டால், மனசு சொன்னால் கருத்து அவ்வளவே.
 
சரி....  நீங்கள் கூறியது போல இனிமேல் இங்கே பதியப்படும் கருத்துக்களை அமேசான் கவர்ச்சியூட்டல் விளம்பர பாணியை எதிர்கொள்வது மாதிரியே  ந(நு)கர்ந்து போகிறேன் . 

கவனத்தை ஈர்ப்பது கருத்தாளரின் அல்லது செய்தி இணைப்பவரின் உரிமை! சணல் நூலைத் தொடரும் பூனை போல கவனத்தின் பின்னால் செல்வதும் , "அட, உள்ளே வேறென்ன இருக்கு?" என்று முழுவதும் பார்ப்பதும், விடுவதும் வாசிப்பவரின் உரிமை!

விடயம் இவ்வளவு சிம்பிளாக இருக்கும் போது, இவ்வளவு ரௌத்திரத்துடன் விசுகர் நிற்பது, கட்டுரையில் (தடித்த எழுத்து மட்டுமல்ல!) இருக்கும் விடயமே ஒழிய கட்டுரை இணைத்தவரின் தவறல்ல!

இதை நீங்களும் காண்கிறீர்கள், ஆனால் காணவில்லை! (இது "இலத்திரன் இங்கேயும் இருக்கிறது, அங்கேயும் இருக்கிறது" என்ற துகள் பௌதீகத்தின் விளைவு தானொழிய வேறில்லை!😎)

20 minutes ago, விசுகு said:

இப்போ அமேசான் போன்று நாம் உங்களை பேக்காட்டுவோம். நீங்கள் தான் அதற்கு மடங்காமல் இருக்கணும் என்று வந்து நிற்கிறது 

இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். மக்களை பேய்க்காட்டாதீர்கள். அவர்கள் தாமாக தேவையானவற்றை பார்த்து எடுக்கட்டும் என்று.

இப்ப இதில் யார் வியாபாரி? யார் பொதுசனவாதி?

விசுகர், எவ்வளவு காலமாக யாழில் உறுப்பினராக இருக்கிறீர்கள்? இன்னும் சக உறுப்பினர்களுக்கிருக்கும் உரிமைகள் என்ன வாசிப்பவருக்கு இருக்கும் கடமைகள் என்ன என்று தெரியாமலா இருக்கிறீர்கள்?

கட்டுரையில் இருப்பதை விவாதிக்காமல் ஐதாக்கி திசை திருப்பும் முயற்சியில் ஏற்கனவே எழுதிய கருத்துகளை வாசிக்காதவர் மாதிரி நடிப்பது ஏனென்று தெரியவில்லை!

விதி மீறலும் இல்லை, சதியும் இல்லை, உங்களுக்கு சுட்டு விட்டதென்பதைத் தவிர உங்கள் நடவடிக்கைக்கு வேறெந்த விளக்கமும் தற்போதைக்கு இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
என்பவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார், அதை அவருடைய மொழியியல் திறமையில் தன்னால் கிரகிக்கக்கூடியவற்றை மட்டும்  பதிவு செய்தார்.  அவருடைய கட்டுரை தலையங்கத்தில் தெரிகிறது அவரது அமேசான் விளம்பர கவர்ச்சி. " வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு"
‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’ வகையறாக்கள், இது எல்லாம் அவருடைய சீண்டல் ஹைலைட். 
இதை எல்லாம் நாம் கொண்டுகொள்ள வேணாம், அவர் பதிந்த எங்கள் ஓட்டைகளை மட்டும் அலசி அடைப்போம். 👍

நிகழ்ச்சியின் கதாநாயகி நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவி, அவரின் இளமானிப்பட்ட ஆய்வு?
சரி அவரின் ஆய்வு அறிக்கை முழுவதுமாக என்ன சொல்கிறது? எவற்றையெல்லாம், யாரை எல்லாம் சார்ந்து அவரின் ஆய்வு நடந்தது?  யாருக்கு கவலை!! ஜஸ்ட் லைக் தட்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Sasi_varnam said:

ஒரு கட்டுரையை நான் பதியும் போது அதில் சிலவற்றை  அடிக்கோடிட்டு காட்டினால் ஏதாவது  ஒரு வகையில் என்னுடைய நோக்கில் உங்களையும் கூர்ந்து பார்க்கச் சொல்கிறேன் என்று தான் பொருள் படுகிறது.

ஆமாம். அதனால்தான் தடித்த எழுத்தில் காட்டினேன். ஏற்கனவே இந்தத் திரியில் தடித்த எழுத்தில் காட்டியதன் காரணத்தையும் சொல்லியிருந்தேன்.

விசுகு ஐயாவும் கு.சா. ஐயாவும் யாழ் களம் ஒரு கருத்தாடல் களம் என்பதை சரியாக அறியவில்லை. செய்தித்தளம் போல செய்திகளை மட்டும் வாசித்துவிட்டுப் போகும் இடம் என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு.  கருத்தாடலை உருவாக்க எனது பார்வையில் முக்கியமானவற்றை முழிப்பாகக் காட்டினேன். அதை தர்க்கரீதியாக சரியா, பிழையா என்று விவாதிக்காமல், ருல்பென் சொல்லியது போல, மடை மாற்றுவது நிகர்நிலைக் கலந்துரையாடலில் பங்குபற்றிய புலம்பெயர் தமிழர் சிலரின் மனநிலையை இவர்களும் கொண்டுள்ளார்கள் என்றுதான் காட்டுகின்றது. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

21 minutes ago, குமாரசாமி said:

இது யாருக்காக எழுதப்பட்டது?

கட்டுரையின் சாரம்சம் வேறு ஒருவர் எழுதியது. அது அவர் கருத்து சுதந்திரம்.

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

அவருடைய கட்டுரை தலையங்கத்தில் தெரிகிறது அவரது அமேசான் விளம்பர கவர்ச்சி. " வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு"
‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’ வகையறாக்கள், இது எல்லாம் அவருடைய சீண்டல் ஹைலைட். 
இதை எல்லாம் நாம் கொண்டுகொள்ள வேணாம்

 அவருடையதலையங்கம்
உள்ளடக்கத்தை அடக்கி நிற்கின்றது
தலையங்கம்     வேறாகவும் உள்ளடக்கம் வேறாகவும் வரும் பல செய்திகளை யாம் பெற்றிருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
என்பவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார், அதை அவருடைய மொழியியல் திறமையில் தன்னால் கிரகிக்கக்கூடியவற்றை மட்டும்  பதிவு செய்தார்.  அவருடைய கட்டுரை தலையங்கத்தில் தெரிகிறது அவரது அமேசான் விளம்பர கவர்ச்சி. " வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு"
‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’ வகையறாக்கள், இது எல்லாம் அவருடைய சீண்டல் ஹைலைட். 
இதை எல்லாம் நாம் கொண்டுகொள்ள வேணாம், அவர் பதிந்த எங்கள் ஓட்டைகளை மட்டும் அலசி அடைப்போம். 👍

நிகழ்ச்சியின் கதாநாயகி நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவி, அவரின் இளமானிப்பட்ட ஆய்வு?
சரி அவரின் ஆய்வு அறிக்கை முழுவதுமாக என்ன சொல்கிறது? எவற்றையெல்லாம், யாரை எல்லாம் சார்ந்து அவரின் ஆய்வு நடந்தது?  யாருக்கு கவலை!! ஜஸ்ட் லைக் தட்.  

அப்படித் தான்: ரூட்டை மாத்துங்க! 🤣

செய்தி இணைத்தவரைத் திட்டியது ஒட்டவில்லை, இனி எழுதியவரைத் திட்ட முயற்சி செய்யலாம் (எனக்குத் தெரிந்த இளவல் தான், இந்தத் தகவல் எவ்வளவு மீநிலங்கோவுக்கு உதவுமோ தெரியாது!😎)

பிளான் "சி": இப்பவே தெரியுது, ஆய்வு மாணவியைத் திட்டல்!😅

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, கிருபன் said:

விசுகு ஐயாவும் கு.சா. ஐயாவும் யாழ் களம் ஒரு கருத்தாடல் களம் என்பதை சரியாக அறியவில்லை. செய்தித்தளம் போல செய்திகளை மட்டும் வாசித்துவிட்டுப் போகும் இடம் என்று நினைக்கின்றார்கள்

நானும் விசுகரும் இதுவரை காலமும் கருத்துக்கள் எழுதாமல்/கருத்தாடல் செய்யாமல் சும்மா வாசித்து விட்டு போகின்றவர்கள். இருக்கட்டும்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல.

நானும் விசுகரும் இதுவரை காலமும் கருத்துக்கள் எழுதாமல்/கருத்தாடல் செய்யாமல் சும்மா வாசித்து விட்டு போகின்றவர்கள். இருக்கட்டும்.

யாரவர்கள்? அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  

தெளிவாக தெரியும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.